மெல்ல திறந்தது மனது [ஆதன்-னின்]
பாகம் 2
அத்தியாயம் 35
இரவு உணவு முடிந்து சந்திரசேகர் தன் அறைக்குப் போகும் பொழுது மீனாட்சியிடம் ஏதோ கிசுகிசுத்துவிட்டுப் போனார்!!
மீனாட்சி தேவாவிடம் மெல்ல ஆரம்பித்தாள்!
" தேவா அப்பா உன்கிட்ட தனியா எதோ பேசனுமாம். அவர் ரூமுக்கு உன்னை வரச் சொன்னார். போய் என்ன ஏதுனு கேட்டுட்டு வந்துடுப்பா" என்று மீனாட்சி சொல்ல தேவாவுக்கு இது ஆச்சரியமாகவே இருந்தது….
சந்திரசேகரின் அறைக்குள் தேவா நுழைய சந்திரசேகர் அவனைப் பெட்டில் உட்காருமாறு சைகை செய்ய, தேவா உட்கார்ந்தான்!
" நான் ஒரு காரணத்துக்காகவும், ஒரு கண்டிசனோடும்தான் உங்களை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தேன். இதை உங்கிட்ட யாரும் சொல்லலைனு நினைக்கிறேன்" என்ற சந்திரசேகர் தேவாவை பார்த்தார்!
"யாரும் எதுவும் சொல்லலை நீங்களே சொல்லுங்கப்பா" என்ற தேவாவிற்கு விக்கியின் அப்பா முருகேசன் மூலம் எல்லாமே தெரிந்தே இருந்தது. இருந்தும் தெரியாததைப் போல் காட்டிக்கொண்டான்!
"நீ வேலை வெட்டி வருமானம் இல்லாமல் மாமனார் வீட்டில் இருந்து சாப்பிட்டா அது என் கெளரவத்துக்கு அசிங்கம்" என்று சந்திரசேகர் சொல்ல தேவா ம் கொட்டினான்!
"நீ ஒரு வேலைக்குப் போனா நீ எங்க இருக்கிறதிலயும் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனா இங்க உன் அக்கா, தங்கை ரெண்டு பொண்ணுங்களும் கல்யாணமாகி போற வரை இந்த வீட்ல இடம் கிடையாது. நான் மாப்பிள்ளை தேடறப்ப சொந்தபந்தங்கள் ஆயிரம் கேள்வி கேட்கும். நீ இங்க இருந்தனா அது சரிப்பட்டு வராது" என்று சந்திரசேகர் சொல்ல இதற்கும் ம் கொட்டினான் தேவா!
"நான் ஒரு அப்பாவா சொல்லலை ஒரு அனுபவசாலியா சொல்றேன். முடிஞ்சா காது குடுத்து கேளு" என்று சந்திரசேகர் சொல்ல,
"ம் சொல்லுங்கப்பா கேட்கிறேன்" என்றான் தேவா!
"ஆரம்பத்துல வாழ்க்கையில எல்லாமே இனிக்கத்தான் செய்யும். அந்த ருசிக்கு அடிமையானா பின்னாடி கசப்பை மட்டுமே அனுபவிக்க வேண்டி வரும்.
நீ உன் மாமனார் கடையில கூட வேலை செய்யலாம். ஆனா நாளாக நாளாக அது பல கசப்புகளைத்தான் தரும். நீ மருமகன் என்பது போய், ஒரு வேலைக்காரனாத்தான் இருப்ப. உன் பொண்டாட்டிதான் முதலாளியா இருப்பாள்.
நீ பொறந்ததுக்கு ஒரு அர்த்தமே இல்லாமல் அடுத்தவங்க சொல்றதுக்கு நீ தலையாட்டுற, வேலை செய்ற ஒரு ஆளாத்தான் இருப்ப….. எவ்வளவு குறைஞ்ச சம்பளமா இருந்தாலும் உனக்குனு ஒரு வேலையைப் பார்! அதான் உனக்குக் கெளரவம். உன்னைப் பெத்தவங்களான எங்களுக்குக் கெளரவம்" என்று தேவாவின் ஈகோவை தூண்டி விட்டுட்டுப் படுக்கையில் சந்திரசேகர் படுக்க, தேவா தன் அறைக்குள் நுழைந்தான்…..
நாச்சியா என்ன ஏதுவென்று விசாரிக்க. வெளிய ஒரு வேலைக்குப் போகும் வரைதான் இங்க வீட்ல இடம்னு சந்திரசேகர் சொன்னதை மட்டும் சொன்ன தேவா, சந்திரசேகர் சொன்ன மத்த விசயங்களைப் பேசலை... சந்திரசேகர் சொன்ன விசயங்களில் உண்மை இல்லாமல் இல்லை என்று நினைக்க ஆரம்பித்தான் தேவா…..
நாச்சியாவின் கெட்ட நேரம் அவன் இரண்டாம் முறை அவளை அணைக்க, காலையில் கடைக்கு ஆறு மணிக்கே போகனும் பேசாம தூங்குங்க என்றது தேவாவுக்குள் பல உணர்வுகளைத் தூண்டி விட்டது….. முதலில் வெளியில் ஒரு வேலையைத் தேடனும் என்ற முடிவுக்கு வந்தான் தேவா! அந்த இரவு தேவா என்ற ஆண்பிள்ளையின் ஆழ்மன ஆணாதிக்க உணர்வைத் தூண்டிவிட்டு உறக்கம் கெடுத்த இரவாகவே அமைந்தது!
…………..
அருள் ரேகாவை விவாதத்தில் அணுகியவிதம். அவன் வெளிப்படுத்திய கருத்துக்கள் அவளுக்குப் பிடித்திருந்ததால், அன்றைய இரவு அவனோடு பேஸ்புக் உள்பெட்டியில் நிறைய விசயங்களைப் பேச ஆரம்பித்தாள்!
தன் குடும்பம் தனக்கு ஒரு சுமை என்று ரேகா பேச,
அருளோ ஆயிரம் இருந்தாலும் தங்கள் குடும்பம்தான் கடைசியில் காப்பாற்றும். எப்பொழுதும் உங்க குடும்ப விசயத்தில் மூன்றாவது நபரை தலையிட விடாதிங்க என்றான்.
இப்படி அவனோடு பேச பேச அவளுக்கு மாறான கருத்தையே அவன் சொன்னாலும் அது தப்பாகத் தோன்றவில்லை ரேகாவுக்கு!
கடைசியாக அவனிடம் பேசி முடித்திருந்த போது அலைப்பேசி எண்கள் பரிமாறப்பட்டு இருந்தது….. சென்னை வந்தால் வீட்டிற்கு வருகிறேன் என்று அவன் சொன்னது ரேகாவிற்குப் பிடித்திருந்து. ஏன்னென்றால் வெளியில் வா, அங்க போகலாம், இங்க போகலாம் என்றில்லாமல் வீட்டிலயே சந்தித்துப் பேசலாம். வீட்டு ஆட்களை அறிமுகம் செய்து வைங்கனு அவன் சொன்னதுதான் காரணம்!
அன்றைய இரவு கொஞ்சம் கொஞ்சமாக அருளையும், சந்துருவையும் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்திருந்தாள் ரேகா…..
சந்துரு தான் சொல்வதற்கு எல்லாம் சரி என்பவன். வீட்டில் இருப்பவா்களைக் குறைச் சொன்னால் அவனும் சேர்ந்து ரேகாவிற்கு ஆதரவாய் அவர்களைக் குறைச்சொல்வான். அவன் பேச்சு பெரும்பாலும் காமெடியா இருந்தாலும் அவள் அழகைப் பற்றியே இருக்கும்! எந்தச் சீரியசான விசயங்களையும் அறிவுப்பூர்வமாக அவனோடு கலந்து பேச முடியாது!
ஆனால் இந்த அத்தனை விசயங்களிலும் அருள் நேர்மாறாக இருந்தான். போட்டோ கொடு, நம்பர் தா என்று அவன் எதுவும் கேட்காமல், பேசவந்த விசயத்தை மட்டுமே அவள் கருத்துக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்துப் பேசிக் கொண்டிருந்தான். அருளின் தெளிவு, மனிதநேயம், முற்போக்கு, தொலைநோக்கு இதெல்லாமே ரேகாவிற்குப் பிடித்திருந்தது.
இப்படி ஒருவன் தன் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தால், மன உளைச்சலான இம்மாதிரியான நேரங்களில் எப்படி ஒரு மருந்தாய் இருக்குமென யோசிக்க ஆரம்பித்தாள்!
அங்கே தேவாவின் ஆண் என்ற எண்ணம் தூண்டப்பட்டு அவன் கொஞ்சம் கொஞ்சமாக ஈகோவின் பிடியில் சிக்க ஆரம்பித்திருந்தான் சூழலால்!
இங்கே முதல்முறையாக அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்டு அதிலிருக்கும் நியாயத் தர்மங்களை
அலசி ஆராய்ந்து ஏற்றுக்கொண்டிருந்தாள் ரேகா!
இந்த உலக வாழ்வும், மனிதர்களும், அவர்களின் மனதும்தான் எத்தனை விந்தையானது!!!...
அத்தியாயம் 36
அடுத்த நாள் பொழுது விடியும் வேளை 5.30 க்கு அலாரம் வைத்துப் படுத்த நாச்சியா அலாரம் அடிக்க எழுந்து. குளியலறைக்குப் போய் உடல்கழுவி வந்து கடைக்குக் கிளம்பத் தயார் ஆனாள். மீண்டும் வழக்கம்போல் காலையில் எழுந்து கடை வேலைகளை ஆரம்பிக்கப் போவது அவளுக்கு மனதிற்கும் உடலிற்கும் ஒரு புத்துணர்வாய் இருந்தது!
அடுக்களைக்குச் சென்று கொஞ்சமாய்க் காபி போட்டவள் தனக்கும் மீனாட்சிக்கும் எடுத்துக்கொண்டு, ஹாலில் படுத்திருந்த மீனாட்சியை மெல்ல எழுப்பினாள்!
மீனாட்சியும் வழக்கமாய் எழும் நேரம்தான். எழுந்த மீனாட்சி சிரித்தப்படியே போய் முகம் கழுவி வந்து, நாச்சியா குடுத்த காபியை குடித்தப்படியே…..
"எத்தனை மணிக்கு போகனும் நாச்சியா"? என்றாள்.
"அவ்வளவுதான் அத்தை காபி குடிச்சதும் கிளம்பறதுதான்" என்றவள் மீனாட்சியிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள். மீனாட்சி மெதுவாய் காலை வேலைகளை ஆரம்பிக்க உமாவும் எழுந்திருந்தாள்……
விடியல் கீற்றுக்கு மெதுவாய் கண்விழித்த தேவாவிற்கு அருகில் கோதை இல்லாதது ஏதோ வெறுமையாக இருப்பதைப் போல் இருந்தது!
வழக்கமாகக் கடை சாவியை வைக்கும் இரகசிய இடத்திலிருந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சாவியை எடுத்த நாச்சியா கடையைத் திறந்துவிட்டு, கடைவாசலை கூட்ட ஆரம்பிக்கப் பால் வந்து இறங்கியது!
மெதுவாய் பால் வியாபாரம் ஆரம்பிக்க வழக்கம்போல் கடை வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிய நாச்சியாவிற்கு என்னவோ நினைவெல்லாம் தேவாவின் மேலேயே இருந்தது. அவனும் சேர்ந்து இந்தக் கடையில் உழைத்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று யோசித்தவள் ஆட்கள் வர வர கனவை கைவிட்டவள் வேலையில் கவனமானாள்.
மார்க்கெட்டிலிருந்து வந்த சண்முகம் மகளை மறுபடியும் காலையில் கடையில் பார்க்க புதுத் தைரியம் அவருக்கு வந்தது போல இருந்தது!
"அப்பா டீ இருக்கு குடிச்சிட்டு மத்த வேலைகளை முடிச்சிட்டு வாங்க" என்று நாச்சியா சொல்ல,
சிரித்தப்படியே சரிமா என்றவர் வீட்டிற்குள் நுழைந்து அரைமணி நேரம் கழித்துப் பொறுமையாகக் கடைக்கு வந்தார்!
சண்முகம் கடைக்கு வரவும் சமையல் வேலைகளைப் பார்க்க சமையலைறைக்குள் நுழைந்தவள் கட கடவென்று வேலைகளைச் செய்ய ஆரம்பிக்க, மணி இன்னும் ஒன்பது கூட ஆகி இருக்கவில்லை!
கடைக்குள் வந்த நாச்சியா அப்பா சமையல் ரெடி என்று சொல்ல,
"சரிம்மா நீ கிளம்பு வாசு வந்திடுவான் நான் பார்த்துக்கிறேன்" எனச் சொல்ல,
"அப்பா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடற வரை இங்கதான் இருப்பேன் பத்து மணிக்கு வரதா சொல்லிட்டு வந்திருக்கேன்" என்றாள் நாச்சியா…
வாசுவும் வந்து சேர, இருவரையும் சாப்பிட விட்டவள் கடையில் இருக்க, அவர்கள் சாப்பிட்டு முடித்து வர,
"மதியம் வரதாதான் இருந்தேன். ஆனா சாயங்காலமாய்ச் சமைக்கத்தான் வருவேன் ரெண்டுபேரும் கடையைப் பார்த்துக்கோங்க, வாசு வியாரம் மதியம் டல்லாதான் இருக்கும் அப்ப அப்பாவ கொஞ்சம் தூங்க விடு சரியா" என்றவள் விருட்டென்று ஸ்கூட்டியில் அவள் வீட்டிற்குப் பறந்தாள்!
வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது தேவா வீட்டில் இல்லை,
ரேகாவோ காலையிலயே குளித்து முடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். மீனாட்சி சமையலைறையில் பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்திருந்தாள்……
சமையலறைக்குள் நுழைந்த நாச்சியா…..
"நகருங்க அத்தை" எனச் சொல்லிவிட்டு பரபரவென்று பாத்திரங்களைக் கழுவி அடுக்கி வைக்க,
"சாப்பிட்டியாமா?!" என்றாள் நாச்சியா!
"இல்லைங்க அத்தை இதுக்கு மேலதான் சாப்டனும் ..அவர் எங்க அத்தை??"என்று கேட்டாள்
"ஏதோ வேலை விசயமா விக்கிக்கூடப் பார்க்க போறாதா கலையிலயே குளிச்சி சாப்டுட்டுச் சீக்கிரமா கிளம்பிட்டான்மா" என்று மீனாட்சி சொல்ல, ஒரு போன் பண்ணி தன்கிட்ட சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது நாச்சியாவுக்கு!
சோர்வாய் வந்து ரேகாவுக்குத் தள்ளி சோபாவில் சாய்ந்தாள் நாச்சியா!
ரேகா எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்த தட்டை சமையலறையில் போட்டுவிட்டுக் கை அலம்பிவிட்டு நேராகத் தன் அறைக்குள் போய்விட்டாள்.
"நாச்சியா போய் முகம் அலம்பிட்டு வா சாப்டலாம்" என மீனாட்சி சொல்ல,
எழுந்து குளியலறைக்குச் சென்று முகம் அலம்பி உடைமாற்றி நைட்டியில் கொண்டையோடு வந்தவளை பார்த்த மீனாட்சிக்குச் சிரிப்புதான் வந்தது!
"உன்னால வேலை எதுவும் செய்யாம இருக்க முடியாதா நாச்சியா" என்ற மீனாட்சி சாப்பாட்டைக் கொண்டு வந்து ஹால் தரையில் வைத்தாள்…..
"சும்மா இருந்தா எனக்குப் பைத்தியம் பிடிக்கற மாதிரி ஆயிடும் அத்தை" என்றவள் மீனாட்சியின் சமையலை புகழ்ந்தப்படியே சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் சாப்பிடுவதைப் பார்த்த மீனாட்சிக்கு சந்தோசமாகவும் வியப்பாவும் இருந்தது. ஏன்னா எந்தளவுக்கு உழைக்கிறாளோ அந்தளவுக்கு வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல் சாப்பிடக் கூடியவள் நாச்சியா!...
……………
பிரைவேட் பேங்க் ஒன்றில் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் வேலைக்கான வேகன்ஸி இருப்பதாய்க் கேள்விப்பட்ட விக்கியும் தேவாவும் அதைப்பற்றி விசாரிக்கப் போயிருந்தார்கள்….
இன்டர்வியூ நாளைக்கு எனத் தெரியவர அப்படியே ரெஸ்யூம் ரெடி பண்ணிட்டு திரும்பி ஐயப்பன்தாங்கல் வந்து வழக்கமான சிமெண்ட் பெஞ்சில் உட்கார,
தேவா கேட்டான் " ஏன்டா உனக்குத்தான் உங்கப்பா கடை இருக்கே அப்புறம் எதுக்கு இந்த வேலைடா விக்கி"
"கரெக்ட்தான்டா தேவா அப்பா கடையைப் பார்த்துக்கற வரை வெளிய அலைஞ்சி திரிஞ்சாதான் காசோட அருமையும், அனுபவமும் கிடைக்கும். அதனால வெளிய வேலைக்குப் போ அப்படினு அப்பா சொல்லிட்டாரு அதான் இந்த வேலைக்கு அப்ளை பண்றேன்" என்றான் விக்கி….
"எங்கப்பாவும் இந்த மாதிரி ஒரு சுயத்தொழில் வைச்சிருந்தா நானும் இந்த வேலை, சம்பளம்னு அலையாம அப்பாவோட வேலையைவே பார்த்திருப்பன்டா ப்ச் என் நேரம் படிப்பும் சரியா வரல, ப்யூச்சர நினைச்சாலே பயமா இருக்கு" என்று தேவா விரக்தியா பேச…..
"உனக்கென்னடா அதான் மாமனார் கடை இருக்கு, நாச்சியா இருக்கு"னு எதார்த்தமா விக்கி சொல்ல….
தேவாவின் முகம் சட்டென மாற ஆரம்பித்தது!..
அத்தியாயம் 37
விக்கி எதார்த்தமாய்ச் சொல்லி இருந்தாலும் அதில் தவறேதும் இல்லை என்றாலும், தேவாவுக்குள் முளைவிட்டிருந்த ஈகோவால் அதை ஏற்க முடியவில்லை!
"சரிடா விக்கி நான் கிளம்பறேன் நீ என்ன பண்ற"னு குரலில் சுரத்தே இல்லாமல் கேட்டான் தேவா!
"ம் எல்லாம் கல்யாணமான நேரம்டா, நானே கிளம்பறனு சொன்னாலும் விடாதவன் இன்னைக்கு அவசரப்படறியே"னு சிரித்தான் விக்கி. அதை இரசிக்கும் நிலையில் தேவா இல்லை!
"சரி விக்கி நான் கிளம்பறேன்" என்ற தேவா விக்கியின் பதிலுக்குக் காத்திருக்காமல் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்!
விக்கிக்கு குழப்பமாய் இருக்க அவனை அப்படியே போக விட்டு விட்டான்!
வீட்டிற்குள் தேவா நுழைய, ஹால் தரையில் படுத்தப்படி மீனாட்சியும், நாச்சியாவும் குடும்பக் கதைகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள்….
தேவாவை பார்த்ததும் எழுந்த நாச்சியா காபி வேணுமா எனக்கேட்க,
"இல்ல நாச்சியா நீ படு" என்றவன் சோபாவில் சாய்ந்தான்!
அவனைப் பார்த்த நாச்சியாவிற்கு அவன் ஏதோ குழப்பத்தில் இருப்பது தெளிவாய்ப் புரிந்தது!
தரையிலிருந்து எழுந்தவள் அவன் தோளை போகிற போக்கில் தொட்டு அறைக்கு வா என்று குறிப்பால் உணர்த்திவிட்டு அறைக்குள் சென்றாள்!
சற்று நேரம் கழித்து அறைக்குள் நுழைந்த தேவா லுங்கிக்கு மாறி, படுக்கையில் உட்கார்ந்திருந்த நாச்சியாவின் மடியில் தலை வைத்துப் படுத்தான்!
"ஏன் தேவா ஒரு மாதிரியா இருக்க?" என்று நாச்சியா கேட்க மெளனமாகவே தேவா இருக்க. மீண்டும் கேட்டாள் நாச்சியா!
"நான் உடனே ஒரு வேலைக்குப் போய் ஆகனும் நாச்சியா"
"ம் ஆமா போய்த்தான் ஆகனும். அதுக்காக மனசைக் குழப்பிக்கிட்டா எப்படித் தேவா?! நீ குழப்பமா இருக்கனு தெரியுது. என்ன குழப்பம்னு சொல்லு தேவா"
" குழப்பம் எல்லாம் இல்லை கோதை ஆனா நான் என் படிப்புக்கு ஒரு வேலைக்குப் போகனும்"
"சரி போங்க"
"அந்த வேலை கிடைக்கலனா இங்க நாட்களை ஓட்டறது கஷ்டமா இருக்கும். அப்பா ஏதாவது பேசி எப்படியும் மனச காயப்படுத்திடுவார்"
"சரி நான் ஒன்னு சொல்லவா தேவா?"
"ம் சொல்லு"
"நான் வரதட்சணையினு எதையும் பெருசா கொண்டுவரல, ஆனா என் வீட்ல இருக்க எல்லாமே எனக்குத்தான். நான் அதையெல்லாம் தரேன் சொந்தமா ஏதாவது பிசினஸ் பண்றியா?"
" எனக்கு எந்த வேலையும் தெரியாது கோதை நான் எந்தப் பிசினஸ ஆரம்பிக்க. வேலைக்குப் போறதுதான் சரி. நாளைக்கு ஒரு பிரைவேட் பேங்க்கில் இன்டர்வியூ இருக்கு அட்டன்ட் பண்ணனும்"
"சரி போயிட்டு வா! ஆனா அந்த வேலை கிடைக்கலனா நீ இந்த மாதிரி வருத்தப்படக் கூடாது சரியா" எனக் கோதை அவன் தலையைக் கோதியப்படி கேட்க சரி என்றான் தேவா!
"தேவா உனக்கு ஒரு பைக் வாங்கனும் எந்தப் பைக் வேணும்னு சொல்லு" என்று நாச்சியா கேட்க, அதை ஏற்க தேவாவின் ஈகோ தடுக்க ஆரம்பித்தது.
"இல்ல கோதை அதெல்லாம் வேணாம்"
"ஏன் என் பணம் உன் பணம்னு பிரிச்சி பாக்கறியா தேவா? உன்கிட்ட நேத்து நைட்டுல இருந்தே நிறைய மாற்றம் தேவா. எப்பவும் என்னையும் எனக்காக இருக்கறதையும் உன்னுடையது இல்லைனு பிரிச்சி பார்த்திடாத அதை என்னால் தாங்க முடியாது" என்று நாச்சியா தீவிரமுகபாவத்துடன் பேச,
தன் ஈகோ அவளுக்குப் புரிந்துவிட்டிருந்தது
அவனுக்குள் இயலாமையைத் தோற்றுவித்திருந்தது.
அவளது உண்மையான அக்கறை, பாசத்திற்கு முன் தன்னோட ஈகோ அர்த்தமில்லாத விசயம் எனத் தேவா உணர அவனுக்கே அவனை நினைத்து வெட்கமாய் இருந்தது…..
"இங்க பாரு தேவா எதுவுமே செட்டாகல அப்படினா, உனக்கு என்கிட்ட ஈகோ இருக்கு அப்படினா, அந்தக் கடையை உன்கிட்ட கொடுத்துட்டு நான் வீட்டோட இருந்திடறேன். நீ முதலாளியா கடையைக் கவனி" என நாச்சியா சொல்ல,
"நான் முதல்ல என் படிப்புக்கான வேலைக்குப் போறன் கோதை, பைக் வேணா வாங்கிக்கறேன். ஆனா கடை எல்லாம் வேணாம்"
"சரி நீ வேலைக்கு ட்ரை பண்ணு தேவா ஆனா நான் கடையைப்பற்றிச் சொல்றது உனக்கு ஒருநாள் புரியும். நான் அடுத்த மாசத்துல கடையைக் கீழ பெருசாக்கற வேலையை ஆரம்பிச்சிருவேன்" என்று கோதை சொல்ல அமைதியாய் புரண்டு படுத்தான் தேவா….
அவன் எடுத்திருக்கும் முடிவு சரியா தப்பானு அவனுக்கே புரியவில்லை. ஆனா நாச்சியாவின் கடையை அவன் பார்த்துக்கொள்வதைப் பற்றி யோசிக்கவே அவனுக்கு ஏதோ ஒரு மாதிரியாகவே இருந்தது!
………..
உள்ளூர் கவுன்சிலர் மகன் லோக்கல்ல ஒன் கிராம் கோல்டு ஜூவல்லரி வைச்சிருக்கான். பேரு ரமேஷ். அப்பன் சேர்த்த காசுல ஊர் சுத்தறது. பொண்ணுங்கள பேசி மயக்கி வலையில் வீழ்த்தி, அந்த ஆதாரங்களை வைச்சி பணம் பறிக்கறது, படுக்கைக்கு அழைக்கறதுனு இதை ஒரு தொழிலாவே செஞ்சிக்கிட்டு இருக்க ஆள்…..
ரமேஷ், சந்துரு, சிவா இவங்களாம் ஒரே செட்.
இப்ப ரமேஷ்கிட்ட ரேகாவை பத்தி பேசி அவள் போட்டோவை மொபைலில் காட்டினான் சந்துரு…..
"மடியுமா சந்துரு?" என்று ரமேஷ் கேட்க,
"நாம மடிக்காத பிகருங்களா ரமேஷ். நீ வேலைக்குச் சேர்த்துக்கோ நான் முதல்ல அவளை அனுபவிச்சி ஆதாரத்த வீடியோ எடுத்திடறன். அப்புறம் நீ தேவைப்படறப்பலாம் அனுபவிக்கலாம்" எனச் சந்துரு சிரிக்க….
"சரி அவக்கிட்ட வேலை கன்பார்ம்னு சொல்லிடு" என்ற ரமேஷ் கடையிலிருந்து கிளம்பினான்!
அத்தியாயம் 38
அடுத்தநாள் காலை வழக்கம்போல் எழுந்து நாச்சியா கடைக்குச் சென்றுவிட, அலாரம் வைத்து எழுந்த தேவா இன்டர்வியூக்குத் தயாரானான்!
தயாராகிக்கொண்டிருந்த தேவாவை பார்த்த சந்திரசேகர்,
மீனாட்சியிடம் கேட்க,
"ஏதோ பேங்க் வேலை சம்பந்தமா இன்டர்வியூவாம் அதுக்குத்தான் கிளம்பிக்கிட்டு இருக்கான்" என்று மீனாட்சி சொல்ல…..
"எப்படியோ வேலை கிடைச்சி இங்கிருந்து போனாங்கனா போதும்" என்று சந்திரசேகர் சொல்ல, மீனாட்சியின் முகம் வாடியது!
தேவாவுக்கு இட்லியைக் கொண்டுவந்து கொடுத்தவள் பார்த்து பண்ணிட்டு வாப்பா என்று இருநூறு ரூபாவை அவன் சட்டை பாக்கெட்டில் வைத்தாள் மீனாட்சி!
விக்கிக்காகக் காத்திருந்த தேவா விக்கி வரவும் கிளம்பினான்!
………..
கடையில் சண்முகமும், வாசுவும் வியாபாரத்தைக் கவனிக்க, வீட்டிற்குள் சமையலில் மனம் ஒட்டாமல் ஏனோ,தானோவென்று சமைத்துக்கொண்டே மொபைலை அடிக்கடி எடுத்து பார்த்தப்படியே இருந்தாள் நாச்சியா ஆனால் தேவாவிடமிருந்து அழைப்போ மெசேஜோ எதுவும் வரவில்லை!..
சமைத்து முடித்துவிட்டு கடைக்குள் வந்தவள் தேவாவுக்குப் பைக் வாங்குவதைப் பற்றிச் சண்முகத்திடம் பேச…..
"இன்னைக்கே வாங்கிடலாம்மா மாப்பிள்ளைக்கும் நாம எதுவும் செய்யலையே"னு சண்முகம் சொல்ல, வீட்டிற்குள் சென்றவள்
மனம் சோா்வுற்றவளாய் படுக்கையில் விழுந்தாள்…..
பொறுத்து பொறுத்து பார்த்த நாச்சியா தானே தேவாவுக்குப் போன் அடித்தாள்!
"ஹலோ சொல்லு கோதை" என்று தேவா பேச.
"ஏன் கிளம்பறப்ப ஸாருக்கு
ஒரு கால் பண்ணி சொல்ல
என்னவாம்" னு கொஞ்சம் கோபத்தோடு,ஆற்றாமையுடன் கேட்டாள் கோதை.
" ஸாரிம்மா இந்த வேலை, இன்டர்வியூ டென்சன்ல மறந்துட்டேன்" என்றான் கெஞ்சும் குரலில்….
"கல்யாணமான ஒரே வாரத்துல மறக்கற அளவு வந்தாச்சு சூப்பர் அது பரவாயில்லை ஆனா இன்டர்வியூ முடிச்சதும் மறக்காம போன் பண்ணு தேவா"என்றவள் அவன் பதிலுக்குக் காத்திராமல் கைப்பேசியை வெடுக்கெனத் துண்டித்தாள் நாச்சியா!
……………….
ரமேஷிடம் பேசிவிட்டு சந்துரு ரேகாவிற்குப் போன் அடிக்கப் போன் வெய்ட்டிங்கில் போனது!
மீண்டும் சந்துரு போன் அடிக்க ரேகா இந்தமுறை விருப்பமில்லாமல்தான் அட்டன்ட் பண்ணினாள்… அருளிடம் பல விசயங்களை அறிவுப்பூர்வமாகப் பேசிக்கொண்டிருந்ததால் சந்துருவின் போன்கால் தொந்தரவாய்த் தெரிந்தது ரேகாவிற்கு!
"ஹலோ சொல்லுங்க சந்துரு" என்று ரேகா பேச,
"என்ன ரேகா பிஸியா வெய்ட்டிங் போகுது!" என்று சந்துரு கேட்க,
அருளை பற்றி ரேகா சிலாகித்துப் பேச, சந்துரு எச்சரிக்கை ஆனான்!
"ரேகா உனக்கு வேலை ரெடி" என்று நேரடியா விசயத்திற்கு வந்தான்!
"சூப்பர் என்ன வேலை எந்த இடத்தில் சந்துரு?"
"ம் நம்ம லோக்கல் கவுன்சிலர் மகனோட ஒன் கிராம் கோல்டு ஜூவல்லரியில மாசம் பத்தாயிரம் சம்பளம்" என்று இவனாவே அள்ளிவிட்டான்….
"ஓகே நான் ஒரு ரெண்டு நாள் கழிச்சிதான் வர முடியும் பரவாயில்லையா?" என்று ரேகா கேட்க,
"ஏன் ஏதாவது முக்கியமான வேலையா? என்றான் சந்துரு!
"இல்லை அருள் சென்னையில் ஒரு வேலையாய் வரதா சொன்னார். அப்படியே எங்க வீட்டுக்கும் வரதா சொல்லி இருக்கார் நாளை மறுநாள் ஸோ நான் மன்டே ஜாய்ன் பண்ணிக்கவா"னு ரேகா கேட்க, மனதிற்குள் கடுப்பான சந்துரு அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரி என்றான்…
" அருள்கிட்ட வேற ஒரு கால் வருது பேசிட்டு வரேனு சொல்லி இருக்கன் ஸோ அவர்கிட்ட பேசிட்டு வந்திடறேன்"னு ரேகா அவன் இணைப்பைத் துண்டிக்க,
என் கிட்ட எப்படியும் நீ வசமா சிக்குவ டீ அப்பப் பேசிக்கறேன் என்று மனதிற்குள் குயுக்தியுடன் நினைத்தப்படியே, ரமேஷுக்கு போன் அடித்துத் திங்களன்று ரேகா வருவதாகச் சொன்னதைச் சொல்லிட்டு, நாச்சியா வழக்கமா போகும் ஹோட்டல் கடைக்கு வண்டியை விட்டான்!
……………
ஒருவழியாக நோ்முகத்தோ்வு முடிந்து தேவாவும், விக்கியும் வெளியே வந்தார்கள். விக்கி வண்டியை எடுக்க,
"இருடா விக்கி கிளம்பறப்ப போன் பண்ணாததுக்கே கோதை கோவிச்சிக்கிட்டா, ஒரு கால் பண்ணிட்டு வந்திடறேன்" என்றவன் கோதைக்குப் போன் அடித்தான்.
கடைக்கு வந்த கோதை அங்கையே தங்கிவிட்டாள்…,.. தேவாவிடமிருந்து போன் வரவே உற்சாகமாகப் போனை எடுத்துக் காதுக்குக்கொடுத்தாள்…..
"ஹலோ புருசா போன காரியம் என்னாச்சு?!"
"ஏறக்குறைய சக்சஸ்தான் 12 ஆயிரம் சம்பளம் இப்போதைக்கு எதிர்பார்க்கலாம். ஹவுசிங் லோன் செக்சன்… ஆனா" என்று இழுத்தான் தேவா…..
"என்ன இழுவை மேன் சொல்லு"
"வேலைக்கு டூவீலர் முக்கியம் கோதை" என்று அசடு வழிந்தான் தேவா!
"அதான் காலையிலயே சொன்னேன். புறப்பட்டு உடனே கடைக்கு வா " என்று சொல்லி போனை கட் பண்ணினாள் கோதை!
"என்னடா கோதை என்ன சொல்லுது?! என்று விக்கி கேட்க,
"பைக் வாங்கறது சம்பந்தமா பேசுச்சுடா….. நீ நேரா கோதை கடைக்கு வண்டிய விடு" என்று தேவா சொல்ல விக்கி வண்டியைக் கிளப்பினான்!
………..,..,
நாச்சியாவின் கடைக்கு வந்த விக்கியையும் தேவாவையும் வண்டியிலிருந்து இறங்கவிடாது
அவா்களை எதிா்நோக்கித் தயாராக
இருந்த நாச்சியா தனது ஸ்கூட்டிய ஸ்டார்ட் பண்ணினாள்….,
"ஏம்மா வந்ததும் வாராததுமா மாப்பிள்ளைய விரட்டிக்கிட்டு போற"னு சண்முகம் கேட்க,
"ஒரு வேலையை முடிச்சிட்டு விட்டுட்டனா நிம்மதியா இருக்கும்பா. நீங்க கடையைப் பாருங்க"னு அவர்களைக் கூட்டிக்கொண்டு கிளம்பினாள் நாச்சியா….. சண்முகத்திற்கு முன்பை விட இப்பொழுது தோள்பட்டை, கை வலி அதிகமா இருந்தது!
"எங்க போறம் கோதை?!"
"ஏன் சொன்னாதான் வருவிங்களோ! உனக்குப் பைக் வாங்க பஜாஜ் ஷோரூம் போறோம்"
"ம்" என்றவன் அதற்கு மேல் பேசவில்லை!
விக்கிதான் மனதிற்க்குள்ளயே சிரித்தப்படி வந்தான்…
"விக்கி பல்சர் ஓகேதான" என்று நாச்சியா கேட்க, பஜாஜ் ஷோரூம் வந்திருந்தது!
----தொடரும்---

No comments:
Post a Comment