மெல்ல திறந்தது மனது [ஆதன்-னின்]
பாகம்- 2
அத்தியாயம் - 31[2]
தன் புகுந்த வீட்டில் மருகமகளாக முதன்முதலில் நுழைந்தாள் நாச்சியா. நுழைந்தவளை ஒருநொடி தாமதிக்காமல் தன் அறைக்கு இழுத்துச் சென்றாள் உமா…. உமாவின் அறைதான் ரேகாவின் அறையும்!
"எப்படி அண்ணி இருக்கு என் ரூம்" என்று உமா கேட்க,
"கோயம்பேடு மார்க்கெட் மாதிரியே இருக்கு உமா" என்று நாச்சியா சொல்ல, இருவரும் சிரிக்க, அறைக்குள் நுழைந்தாள் ரேகா…
ரேகாவை எப்படி எதிர்கொள்வது என்ன பேசுவது என்று நாச்சியாவுக்கு எதுவும் புரியவில்லை. ரேகாவே பேசினாள் ஆனால் நாச்சியாவிடம் அல்ல உமாவிடம்!
"உமா என் ரூமுக்கு உன்னைத்தவிர யார் வரதா இருந்தாலும் என் பர்மிசன் இல்லாம வரக்கூடாது….. நான் முக்கியமா எதையாவது எழுதுவேன், சொசைட்டியில பெரிய ஸ்டேடஸ்ட்ல இருக்கவங்க கால் பண்ணுவாங்க பேசிக்கிட்டு இருப்பேன் நடுவுல யாரவது வந்தா எனக்குத் தொந்தரவா இருக்கும் புரியுதா உமா" என்ற ரேகா தன் வீட்டில் தன் ஆளுமை என்ன என்பதை நாச்சாயாவிடம் காட்ட முற்பட்டாள்…..
"உமா உங்கண்ணனுக்கு ரூம் இருக்குதான?" என்று நாச்சியா கேட்க.
"ஓ இருக்கே அண்ணனுக்கு ரூம் இல்லாம எப்படி அண்ணி?! என்று குறும்பாய் சிரித்தாள் உமா!
"ஓகே இனிமே அதான் என் ரூமும். எதுவா இருந்தாலும் என் ரூமுக்கு நீ வந்திடு உமா" என்ற நாச்சியா வெடுக்கென்று சொல்லிவிட்டு உமாவோடு ஹாலுக்கு வந்தாள்!
சந்திரசேகர் ஹால் சோபாவில் அமர்ந்திருக்க. உமா நாச்சியாவை அடுக்களைக்குக் கூட்டிச் சென்றாள்!
"வாம்மா இதான் நம்ம சமையலறை " என்று மீனாட்சி அன்பாக வரவேற்க…..
"கிச்சன ரொம்பச் சுத்தமா வைச்சிருக்கிங்க அத்தை, என் கிச்சனெல்லாம் கண்டபடி பொருட்கள் கிடக்கும்" என்று நாச்சியா சொல்ல.
"நீ கடையையும் பார்த்துக்கிட்டு வீட்டையும் பார்த்த அதனால கிச்சன் அப்படி இருந்திருக்கும். இங்க எனக்குக் கிச்சன்ல மட்டும்தான் வேலையே" என்ற மீனாட்சியின் குரலில் வருத்தம் எதுவும் தெரியவில்லை….
இந்தப் பேச்சுக்கிடையே கிச்சனுக்கு வந்த தேவா,
"அம்மா விக்கி போன் பண்ணினான் அப்படியே கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்மா" என்று கிளம்ப,
"டேய் உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிட்டு போடா" என்று மீனாட்சி சொன்னாலும் தன் பிள்ளை தன் பிள்ளையாவே இருப்பதில் கொஞ்சம் கர்வப்பட்டுத்தான் இருந்தாள்!
……………..
நாலு நாளா சந்துருவுக்கும் ரேகாவுக்கும் பேச்சுவார்த்தை குறைந்திருந்தது!
நாச்சியா ரேகாவின் ஈகோவைக் கிளறி விட்டு போக, சந்துருவின் ஞாபகம் வந்தவள் அவனுக்குப் போன் பண்ணினாள்….. கடைசி ரிங்கில் போனை அட்டன்ட் பண்ணினான் சந்துரு!
"ஹலோ மேடம் ரொம்பப் பிஸி போல"
"என்ன புதுசா மேடம் எல்லாம் சந்து"என்று இயல்பாக அவள் பேச.
"நீங்க தேவா மேரேஜ்க்கு போவிங்கனு நான் எதிர்பார்க்கல ரேகா"னு மனம் சலித்தவன் போலக் கேட்டான் சந்துரு….
"ஹஹ அவங்கதான் எந்தக் கொள்கையும் கோட்பாடும் தெரியாத முட்டாள்னா நாமளும் அப்படி இருக்கக் கூடாது சந்துரு" என்று ரேகா சொல்ல,
"என்ன சொல்ல வரீங்க ரேகா?"
"மேரேஜிக்கு போனேன் ஆனா ரிசப்சனுக்குப் போகல, எப்பவும் என் சுயமரியாதையை விட்டுத்தர மாட்டேன் சந்துரு" என்ற ரேகாவை….
அட அப்பாவியேனு மனதிற்குள் நினைத்தப்படியே, செம்மங்க, ஆஹா ஓஹோனு அள்ளிவிட்டவன்,
"ஸாரிங்க நான்தான் தப்பா நினைச்சிட்டேன் நீங்க உங்கள மதிக்காதவங்களோட சமாதானமா போயிட்டிங்களோனு நினைச்சிட்டேன். ஸாரிங்க" என்று திரும்ப,திரும்ப நயமாய்ப் பேசி அவளுள் விதைக்கப்பட்ட வெறுப்பிற்கு நீா் பாய்ச்சினான்…..
" நீங்க எதுக்கு ஸாரி சொல்லிக்கிட்டு விடுங்க சந்து"
"அப்புறம் வீட்ல எல்லாம் எப்படிப் போகுது" என்று அடுத்து காயை நகர்த்தினான் சந்திரு!
"வீடா அதை ஏன் கேட்கறிங்க? அவள வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாங்க இன்னைக்கு" என்று ரேகா சொல்ல முதலில் அதிர்ச்சியானவன் பின்பு யோசித்து நிம்மதியானான்.
நாச்சியா ரேகா வீட்ல இருந்தாதான் ரேகாவின் ஈகோவை தூண்டி, அவளைத் தன் குடும்பத்தை வெறுக்க வைத்து வெளிய கொண்டுவர முடியும்னு நினைக்கறப்ப உண்டான நிம்மதிதான் அது…..
"நாளைக்குப் பார்க்ல மீட் பண்ணலாமா ரேகா?!" என்று சந்துரு கேட்க,
"நிச்சயமா சந்துரு நாளைக்கு ஈவ்னிங் வரேன், மெசேஜ்ல சொல்றேன்" என்றவள் பை சொல்லி போனை கட் பண்ணிவிட்டு திரும்பி பார்க்க உமா ஏதோ புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்தாள்…..
"எப்படி ரூமுக்குள்ள வந்த?" னு ரேகா கோபமாய்க் கேட்க,
"ஏன்க்கா இப்பதான் வந்தேன் என்ன?" என்று உமா திருப்பிக் கேட்க. ஒன்னுமில்லை என்று சொன்ன ரேகா ஹாலுக்குப் போய்விட்டாள்….. ஆனால் உமாவின் மனதில் சந்துரு என்ற பெயர் ஆழமாகப் பதிந்திருந்தது.
உமா தேவையில்லாமல் யார் விசயத்திலயும் தலையிட மாட்டாள். ஆனால் ஒரு விசயம் தப்பா போறதா மனதிற்குத் தோன்றினால் உண்மையைத் தெரிஞ்சிக்கற வரை ஓயமாட்டாள். சரி இப்போதைக்கு இந்த விசயம் தன் மனசுக்குள்ளயே இருக்கட்டும் என்று முடிவுச் செய்தவள் புத்தகத்தோடு அறையை விட்டு வெளியேறினாள்!
வெளியே போயிருந்த தேவா வீட்டுக்கு திரும்ப, நாச்சாயா மீனாட்சி, உமாக்கிட்ட சகஜமா பேசி சிரிச்சிக்கிட்டு இருந்ததைப் பார்த்த பொழுது அவனுக்குச் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருந்தது,... அவர்களோடு பேச்சில் தேவாவும் கலந்து கொண்டான் …
"கோதை மாமா போன் பண்ணினார் ஒரு வாரம் நீ கடைக்கு வர வேணாமாம்" என்று தேவா சொல்லிவிட்டு …..
"சரிங்க ஆனா ஒருவாரம் சாப்பாட்டுக்கு என்ன செய்வாராம்"னு நாச்சியா திருப்பித் தேவாவைக் கேட்க, மீனாட்சியும், உமாவும் அமைதியாய் இவர்கள் பேச்சை வேடிக்கை பார்த்தார்கள்!
"அட நான் இதை யோசிக்கவே இல்ல கோதை ஸாரி" என்று தேவா சொல்ல,
"பரவாயில்லங்க! நீங்க அப்பாவுக்குப் போன் பண்ணி சமைக்க மட்டும் ஒருவாரம் வருவேன். அப்பறம் வழக்கம் போலக் கடைக்கு வந்திருவேன்னு சொல்லிருங்க" என்று கட்டளை போல் நாச்சியா பேசுவதை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் மீனாட்சி!...
அத்தியாயம் 32 [2]
மீனாட்சி நாச்சியாவை எந்த வேலையையும் செய்ய விடாமல் தானே சமைத்து எல்லாருக்கும் பரிமாறினாள். மீனாட்சிக்கு இந்த சிலமணி நேரங்களிலேயே வீட்டில் எப்பொழுதும் அடுக்களையை யாருக்கும் விட்டுத் தரக்கூடாதென்ற எண்ணம் அவளை அறியாமலே உருவாகி இருந்தது.
மீனாட்சியின் இத்தனை வருட தாம்பத்திய ஆட்சியில் அவளின் தலைமை செயலகமாக இருந்தது சமையலைறைதானே! அந்த உரிமையை விட்டுத்தர அவளால் நாச்சியா வந்த முதல் நாளிலேயே விட முடியவில்லை!
…………
மெத்தையில் கவிழ்ந்து படுத்திருந்தவளின் இடையின் மேல் தலை வைத்து படுத்திருந்தவனின் விரல்கள் அவளது காது மடலை வருட,
உடல் கூச்சத்தில் நெளிந்தவள் திரும்பி படுக்க,
"கோதை" என்றான் தேவா!
"சொல்லு தேவா!" என்ற கோதையின் குரலும் தேவாவின் குரலின் கிறக்கத்திற்கு ஈடாய்க் கிறங்கயொலித்தது!!
"இந்த வீட்டில் என் அறையில் நீயும் நானும் வாழனுங்கறது என்னோட பெரிய ஆசை கோதை"
"அதான் வந்தாச்சே அப்புறம் என்னவாம்?"
"ம் அப்புறம் என்றவனின் விரல்கள் உரிமையில் அவளது தேகத்தில் ஊர்ந்து தடையாய் இருந்தவைகளை விடுவிக்க, இளம் ஜோடிகள் உச்சபட்ச கிறக்கத்தில் இதழ்களை எங்குப் பதிக்கிறோம் என்ற கவலை இல்லாமல் முத்தங்களை வாரி இறைத்துக்கொண்டு, அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறினாா்கள் கட்டில் யுத்தத்தில் இருவரும் வீழ்ந்து வெற்றி பெற்ற முரணான தேகம் ஆளும் விளையாட்டை முடித்து இரவினை போர்த்தி அவர்கள் உறங்க, நேரம் சாியாக 12 யைத் தாண்டி காட்டியது!
…………
பொழுது விடிய அடித்துப் பிடித்து 6.45 க்கு எழுந்த நாச்சியாவுக்கு உடலெல்லாம் மெல்லிய வலி, வலிக்கு காரணமானவனின் கன்னத்தில் மெல்லியதாய் ஒரு முத்தத்தை லவ்யூடா திருட்டு பையலே என்று முனுமுனுத்தவாரே தந்துவிட்டுகுளியளறைக்குள் நுழைந்து முகம் கழுவியவள் சமையறைக்கு வந்தாள்!
"வா நாச்சியா காபி பிளாஸ்க்ல இருக்கு ஊத்திக்கோ" என்று மீனாட்சி சொல்ல காபியை ஊற்றிக் குடித்துவிட்டு "அத்தை" ... என்றாள்!..
"சொல்லமா" என்று மீனாட்சி கேட்க.
"நான் கடைக்குப் போய் அப்பாவுக்கும், வாசுவுக்கும் சமைச்சி வைச்சிட்டு வந்துடறேன்" என்று நாச்சியா சொல்ல மீனாட்சி சரிம்மா என்றாள்….. நாச்சியா கிளம்பும் பொழுதே வரும்போது மறக்காமல் ஸ்கூட்டியை எடுத்துக்கிட்டு வந்திடனும்னு யோசத்தப்படியே தெருவில் இறங்கி கடைக்கு நடந்தாள்……
ரோட்டில் வந்துக்கொண்டிருந்த நாச்சியாவை பார்த்ததுமே சண்முகத்தின் முகத்தில் அளவில்லாத சந்தோசம்…
"வாம்மா புதுவீடு, புது மனுசங்க எல்லாம் எப்படி இருக்குமா" என்று சண்முகம் ஆவலாய் கேட்க.
"அவங்கவங்க மாதிரியே இருக்காங்கப்பா" என்று நாச்சியா சொன்னதின் அர்த்தம் சண்முகத்திற்குப் புரிந்தது, சந்திரசேகரும், ரேகாவும் மாறவில்லை என்று ….
"டீ குடிச்சிங்களாப்பா?!"
"இன்னும் இல்லமா"
"சரி இருங்க டீ போட்டு எடுத்துட்டு வரேன்" என்று சொன்னவள் வீட்டிற்குள் நுழைந்தாள்…..
டீ தயாராக ரிலாக்ஸா போய்க் குடிச்சிட்டு வாங்கப்பா என்று நாச்சியா சொல்ல, முதலில் பாத்ரூமிற்கு ஓடினார் சண்முகம் . நாம இல்லாததால் பாத்ரூம் போய்ட்டு வரக்கூட அப்பாவுக்கு நேரமில்லனு நினைக்கறப்ப நாச்சியாவுக்குச் சங்கடமாய் இருந்தது!
சண்முகம் காலைக்கடன்களை முடித்து டீயை குடித்துவிட்டு வர, நாச்சியா கடையை விட்டு சமைக்க வீட்டிற்குள் போனாள்….
ஒரு மணி நேரத்தில் குழம்பு, பொறியல், இரசத்தை வைக்க, வாசுவும் கடைக்கு வந்து சேர்ந்தான்.
"அக்கா எப்ப வந்திங்க, நீங்க கடையிலதான இருக்கப் போறிங்க இனிமே"னு படபடனு அவளைப் பார்த்த சந்தோசத்தில் வாசு கேட்க,
"இல்ல வாசு நான் அடுத்த வாரம்தான் கடைக்கு வருவேன். நீ அக்காவுக்காக ஒன்னு செய்வியா?" என்று நாச்சியா கேட்க,
"செய்றேன்கா சொல்லுங்க"
"அக்காவால முன்ன மாதிரி முழுசா கடையைப் பார்த்துக்க முடியாது. இனிமே நீ காலையில 9 மணியில இருந்து நைட் 9 மணி வரைக்கும் கடையில இருக்க முடியுமா? அப்பாக்கிட்ட சொல்லி சம்பளத்த சேர்த்தித் தரச்சொல்றேன்" என்று நாச்சியா சொல்ல,
"சரிக்கா இனிமே அப்படியே வரேன்" என்றான்…
"சரிங்கப்பா, வாசு கிளம்பறேன். சாப்பாடு மதியத்துக்கும் ரெண்டு பேருக்கும் இருக்கு. ஆள் மாத்தி ஆள் சாப்பிடுங்க, வியாபாரம் இருக்குனு சாப்பிடாம வேலை செய்யாதிங்க" என்று சொல்லி நாச்சியா ஸ்கூட்டிய எடுத்துக்கொண்டு கிளம்பும் போது மணி காலை 9.30!
வீட்டிற்கு நாச்சியா திரும்பி வந்தப்ப சந்திரசேகரும், உமாவும் கிளம்பி இருக்க, தேவாவும், ரேகாவும் தூங்கிக்கொண்டு இருக்க, ஹால் சோபாவில் சாய்ந்து மீனாட்சி உட்கார்ந்திருந்தாள்…..,
"அத்தை" என்று நாச்சியா குரல்கொடுக்கத் திரும்பிய மீனாட்சி வாம்மா என்றாள் சிரித்தப்படியே……
"அவர் எழலையா அத்தை"
"இல்லம்மா தூங்கிட்டுத்தான் இருப்பான் போல, போய்பாரு" என்று மீனாட்சி சொல்ல….
நேரா கிச்சனுக்குப் போனவள் இரண்டு டம்ளர்களில் காபியை ஊற்றிக்கொண்டு ரேகா அறைக்குள் நுழைய, மீனாட்சி மிரட்சியோடு பார்த்தாள்….
பெட்டில் குறுக்காய் விழுந்து தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருந்தவளை நாச்சியா எழுப்ப,
"மீனு சும்மா இரு தூக்கம் வருது தொந்தரவு பண்ணாத" என்று மீனாட்சினு நினைத்துத் தூக்கத்தில் உளறிய ரேகா முழித்துப் பார்த்த பொழுது, நாச்சியா காபி டம்ளரோடு நின்றிருந்தாள்!
"உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை" என்று வெடுக்கென்று ரேகா கேட்க,
"நீங்க வேணுங்கறதாலதான் இந்த வேலையைச் செய்றேன்"னு காபி டம்ளரை டேபிளில் வைத்துவிட்டு நாச்சியா திரும்புகையில்,
" இனிமே நான் தூங்கறப்ப என்னை எழுப்பாத, அதேமாதிரி என் பர்மிசன் இல்லாம என் ரூமுக்குள்ளயும் வராத. இதை அடிக்கடி சொல்ல முடியாது" என்று முகத்தில் அடித்த மாதிரி ரேகா பேச, நாச்சியா எதுவும் சொல்லாமல் அந்த அறையை விட்டு வெளியேறி தேவா அறைக்குள் நுழைந்தாள். அவனும் ரேகா கோலத்திலயே பெட்டில் படுத்துக்கிடக்க,
"டே சோம்பேறி டாக்கே எழுந்திரு" என நாச்சியா அவன் முதுகில் ஓங்கி ஒன்னு வைக்க, திடுக்கென்று கோபமாய் முழித்தவன், நாச்சியா முகத்தைப் பார்த்ததுமே சந்தோசமானான்…..
"தேவா நீ முகம் கழுவிக்கிட்டு வா. உங்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்" என்ற நாச்சியாவின் முகம் வாடி இருப்பதைப் பார்த்த தேவாவிற்கு ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது!
அத்தியாயம் 33 [2]
படுக்கையை விட்டு எழுந்தவன், காதலாக அவள் தலையில் கை வைத்துவிட்டு, முகம் கழுவி வந்து காபியைக் குடித்தான். அதுவரை பொறுமையாகக் காத்திருந்தாள் நாச்சியா!
"ம் சொல்லு கோதை, ரேகாக்கூட ஏதாவது பிரச்சினையா" என்று தேவா கேட்க,
"அவங்கள நான் ஒரு பிரச்சினையாவே எடுத்துக்கறதில்ல தேவா" என்றாள் நாச்சியா!
"பின்ன" என்றான் குழப்பத்தோட கேட்டான் தேவா!
"நான் இன்னைக்கு அப்பாவுக்குச் சமைச்சு வைக்க ஏழு மணிக்கு மேல போனேன். அதுவரை அப்பா கடையில வியாபாரத்த பார்த்துக்கிட்டு டீ கூடக் குடிக்கல" என்று நாச்சியா நிறுத்த…..
" சொல்லு கோதை ஏன் நிறுத்திட்ட?" என்று தேவா ஆதரவாய் அவள் தோள் தொட்டு கேட்க நாச்சியா மெல்ல உடைந்து சத்தமில்லாமல் அவன் மேல் சாய்ந்து அழுது விட்டாள்,..... தேவாவுக்கு அவளை எப்படிச் சமாதானம் படுத்தறதுனு புரியாமல் பொறுமையாக இருந்தான்….
மெல்ல ஆசுவாசப்பட்டவள் பேச ஆரம்பித்தாள் நாச்சியா….
"நான் போற வரை டீ கூட இல்லாதது பிரச்சினை இல்லை தேவா. ஆனா அவர் பாத்ரூம் போகக்கூட நேரமில்லாம இருந்ததைப் பார்த்ததும் ரொம்பச் சங்கட்டமாயிருச்சி" என்ற நாச்சியா கண்களைத் துடைத்தாள்…..
"என்ன செய்யலாம் நாச்சியா?! என்று தேவா கேட்க.
"நான் கொஞ்சம் அவசரப்பட்டுக் கல்யாண முடிவை எடுத்திட்டனோனு தோணுது தேவா" என்று நாச்சியா சொல்ல பல உணர்வுகளுக்கு ஆளான தேவா மெளனமாகவே இருந்தான்!
"எங்கப்பாவுக்குக் கடையும் நானும்தான் உயிர். அந்தக் கடையை மினி சூப்பர் மார்க்கெட்டா மாத்தனும்னு அவருக்கு ஆசை. ஆனால் நான் பக்கத்துல இருக்காம அது அவரால முடியாது அதுக்காகச் சொன்னேன்.
நான் உன்னோட சந்தோசமாத்தான் இருக்கேன் நீ எதுவும் நினைச்சுக்காத" என்று நாச்சியா தேவாவின் தலையைக் கோதி விட்டப்படியே சொல்ல தேவா மனசுக்குள் சமாதானமாகி இருந்தான்….
"என்ன செய்யலாம் கோதை" என்று கேள்விகள் எதுவும் இல்லாததால் மறுபடியும் அதையே கேட்டான் தேவா!
"நான் நாளையில இருந்து காலையில ஆறு மணிக்கு கடைக்குப் போயிட்டு பத்து மணிக்கு வந்து, மறுபடியும் 1 மணிக்குப் போய்ச் சாயங்காலம் ஆறு மணிக்கு வந்திடறேன் என்ன சொல்ற"னு தேவாவிடம் நாச்சியா கேட்க,
"எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை கோதை, நீ உன் வசதிப்படி போயிட்டு வா" என்று அன்பாகவே சொன்ன தேவா "ஆனா ஒன்னு" அப்படினு இழுக்க,
"என்ன தேவா தயங்காம சொல்லு" என்றாள் நாச்சியா……
"இந்த வீட்ல யார் என்ன சொன்னாலும் அதை எப்பவுமே நீ கண்டுக்கக் கூடாது" என்று தேவா சொல்ல, சிரிச்சப்படியே சரிடா தேவா பையா கண்டுக்கல என்றாள் நாச்சியா!
தேவா அறையவிட்டு வெளியே நாச்சியா வர ஹால் சோபாவில் அமர்ந்தப்படி நியூஸ் சேனலை ரேகா மாற்றிக்கொண்டிருக்க, மீனாட்சியும் சோபாவில் அமர்ந்திருக்க, நாச்சியா மீனாட்சி பக்கம் வந்து உட்கார்ந்தாள்….
"அத்தை மதிய சமையலுக்கு ஏதாவது ரெடி பண்ணித்தரட்டுமா?" னு நாச்சியா கேட்க,
"இல்லமா மதியத்துக்குச் சாதம் வைச்சா போதும்" என்ற மீனாட்சி நாச்சியா முகம் வாடி இருப்பதைக் கண்டுக்காமல் இல்லை….
"அத்தை" என்றாள் மெதுவா நாச்சியா!
"சொல்லுமா"
"சாயங்காலம் ஆறு மணிக்கு கடைக்குப் போய் அப்பாவுக்குச் சமைச்சி வைச்சிட்டு வந்திடறேன்" என்று நாச்சியா கேட்க,
"சரிமா போய்ட்டு வா"னு சொன்ன மீனாட்சிக்கு எதையும் கேட்டு செய்யற நாச்சியாவின் பழக்கம் பிடித்திருந்தது!
அத்தை இன்னொரு விசயமும் சொல்லனும்னு சொன்ன நாச்சியா தேவாக்கிட்ட சொன்னதை அப்படியே மீனாட்சிக்கிட்ட சொல்ல,
"சரிமா தாரளமா போய்ட்டு வா தேவாவுக்குச் சரினா எனக்கு என்ன பிரச்சினை இருந்திட போகுது. உமா இல்லாதப்ப வாசிங்மெசின்ல துணி போடறப்ப மட்டும் நீ உதவி பண்ணினா போதும்" என்று மீனாட்சி சொல்ல,
"சரிங்க அத்தை" என்ற நாச்சியா மனதிற்குள் நிம்மதியாக உணர்ந்த நொடி நாச்சியா என்ற ரேகாவின் குரல் நாச்சியாவுக்கு ஆச்சரியமாகவும், மீனாட்சிக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது!
"சொல்லுங்க" என்று நாச்சியா மரியாதையோட கேட்க,
"நீ சொன்ன மாதிரி உங்கப்பா வீட்டுக்கு போயிட்டு வர, இங்க எதுக்கு வரனும்? அங்கையே இருந்திருக்கலாமே"னு ரேகா நக்கலாய் கேட்க,
சுர்ரென்று கோவம் ஏறிய நாச்சியா "உங்கள கவனிச்சிக்கத்தான்" என்றதில் கவனிசிக்கித்தான் என்பதை அழுத்திச் சொல்ல ரேகாவுக்கு நல்ல பதிலடியாய் இருந்தது!
"கொஞ்சம் கொஞ்சமா தேவாவ வீட்டோட மாப்பிள்ளையா கடையில போட்டு வெட்டியா மாத்தறதுதானே உங்கப்பாவோட. உன்னோட பிளான்"னு ரேகா நாச்சியாவின் அப்பாவை இழுக்க, கொஞ்சம் பொறுமை இழந்த நாச்சியா,
"எங்க கடை மாதிரி இடங்கள்ல உழைச்சி சாப்பிடலாங்க ஆனா நாலு சுவத்துக்குள்ள இருந்துக்கிட்டு அடுத்தவங்க கால்ல நிக்கறதுதான் தப்பு"னு படார்னு நாச்சியா பேசிடவும் மீனாட்சி பதட்டமாக, தேவாவும் ஹாலுக்கு வந்திருந்தான்…..
"அப்ப என்னைத் தண்டச்சோறுனு சொல்றியா? உன் புருசன் மட்டும் என்ன கலெக்டரா?" னு ஆட ஆரம்பித்தாள் ரேகா……
"என் புருசன் இந்த நொடி ஓகே சொன்னாலும் அவருக்கு மாசம் முப்பதாயிரம் சம்பளம் இருக்கு. நான் சம்பாதிக்கற எல்லாமே என்னோடது எல்லாமே அவருக்குத்தான். இப்ப சொல்லுங்க யார் தண்டமா இருக்கறது"னு திருப்பி நாச்சியா சீற…..
தேவாவும் மீனாட்சியும் சமாதானப்படுத்த முயல முடியவில்லை…….
"எங்கப்பா சம்பாதிக்கறாரு நான் சாப்டறன் உனக்கென்ன பிரச்சினை"னு சப்பை காரணத்தை ரேகா சொல்ல,
"மாமோவோடது எல்லாமே உங்களுக்கில்லை, ஆனா என்னோடது எல்லாமே என் புருசனுக்குத்தான். இப்ப வித்தியாசம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் " என்று சொன்ன நாச்சியா அறைக்குள் போய்விட்டாள்……
ஆச்சா போச்சாவென்று ரேகா அரற்றிக்கொண்டிருக்க மீனாட்சியும் அறைக்குள் போக, தேவாவும் அறைக்குள் போக.
மொபைலை எடுத்தவள் சந்துருவுக்குப் போன் பண்ணி இந்த வாரத்துக்குள்ள தனக்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்யும்படி சொல்லி போனை கட் பண்ணினாள்…
கிளி கூண்டை விட்டு வெளியே வருது வரட்டும் இதைத்தானே எதிர்பார்த்தோம் என்று மனதுக்குள் கணக்கு போட்டான் சந்துரு!
அத்தியாயம் 34 [2]
அறைக்குள் வந்த தேவா…..
"உன்னைத்தான் யாராவது எதாவது பேசினா கண்டுக்க வேணாம்னுதான சொன்னேன். இங்க சரினு சொல்லிட்டு அங்க சண்டைக்குத் தயாரா நிக்கிற"னு நாச்சியாவை கேட்க,
"உங்கக்கா மாதிரியான ஆளுங்களாம் பேசற வார்த்தைகளுக்கு எல்லாம் யாரா இருந்தாலும் கோவப்படாம இருக்க முடியாது தேவா"
"புரியுது கோதை ஆனா நாம இங்கிருக்க வரை எதையும் கண்டுக்காத, கடைசியா எனக்குக் கோவம் வந்தா அவக்கிட்ட சண்டையில போய்தான் முடியும் நீயாவது புாிஞ்சிக்க" னு கெஞ்சும் தொணியில் சொல்லவும் நாச்சியா அமைதியானாள்…
அந்தப் பக்கம் மீனாட்சிக்கோ வீட்டிற்கு வந்த புது மருமகளிடம் பெற்ற மகள் அவமானப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை ஆனால் தவறு ரேகாவின் மேல் உள்ள ஆதங்கத்தில் அமைதியாகப் படுத்துவிட்டாள்….
நடந்த மூக்குடைப்பை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அருள் என்கிற ஐடியிடம் முகநூலில் பெண்ணியம் பற்றிய காரசாரமான விவாதத்தில் இருந்தாள்....
விவாதத்தில் கடைசியாக அருள் இவ்வாறு எழுதி இருந்தான்!
"இங்க பெண் விடுதலைங்கறது, பெண்ணின் கல்வி, பெண் தன் சொந்தக்கால்ல நிக்கறதுலதான் ஆரம்பிக்குது….. இத்தோடு நின்றுவிடுவதில்லை பெண்ணின் விடுதலை. அடிமையாக்கப்பட்ட இன்னொரு பெண்ணைத் தன் எழுத்தின், பேச்சின், செயலின் மூலம் விடுதலையாக்க வேண்டும்.
நீங்கள் எதைப் பெண்ணிய விடுதலையா அதற்கான கருவியா நினைக்கறிங்க?!
கட்டுப்பாடற்ற உடலுறவையா, பொதுத்தளத்தில் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதையா?!
குடிப்பதையா, புகைப்பிடிப்பதையா?
இதுவல்ல பெண் சுதந்திரம்! இது ஆணின் சுதந்திரமும் கிடையாது! தப்பை யார் செய்தாலும் தப்பே!
தனக்கான உரிமைகள் என்னவென்று அறியாமல் எங்கோ ஒரு மூலையில் கிராமத்தில் கிடக்கறாளே ஒரு பெண், அவளுக்குத் தன் உரிமை என்னவென்றும், அதற்காக ஏன் போராட வேண்டும், எப்படிப் போராட வேண்டும் என்று கற்பிப்பதோடு, பெண் தன் சொந்தக்காலில் நிற்க வேண்டிய அவசியத்தை உணர்த்தனும்…..
அப்படிச் செயலில் இல்லாமல் இங்குக் கட்டுரைகளாக எழுதித் தள்ளுவதாலோ இல்லை என் போன்றோரிடம் விவாதம் என்கிற பெயரில் கோபமாக வார்த்தைகளைக் கொட்டுவதாலோ எந்தப் பயனும் இல்லை!
சுருக்கமாகச் சொன்னால் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது!
இதையெல்லாம் தாண்டி உங்களோடு எனக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உங்களை என் தோழியாகவே பார்க்கிறேன். நீங்களும் அப்படியே பார்ப்பிர்கள் என்று நம்புகிறேன்"
அருளின் இந்த நீண்ட விளக்கத்தைப் படித்த ரேகாவிற்கு அவன் மேல் கோபம் ஏற்படவில்லை. ஆனால் அவனுக்குத் திருப்பிப் பதிலும் சொல்லவில்லை…. அவன் அவளை விவாதத்தில் அணுகிய விதம் அவளுக்குப் பிடித்திருந்தது!
…………….
மாலை முடியும் வேளையில் காலேஜிலிருந்து உமாவும், ஆபிசிலிருந்து சந்திரசேகரும் வீடு வந்து சேர்ந்திருந்தார்கள்….. ரேகா சந்துருவை பார்க்க பார்க்கிற்குக் கிளம்பி போயிருந்தாள்!
கை, கால். முகத்தைக் கழுவி பிரஷ்சான உமா தனக்கும் சந்திரசேகருக்கும் காபி எடுத்து வந்து கொடுத்துவிட்டு, நேராக நாச்சியாவின் அறைக்குள் நுழைந்தாள்!
"அண்ணி என்ன பிஸியா? எங்க தேவாவை காணலை" என்று உமா கேட்க,
"பிஸிலாம் இல்லை உமா. அப்பாவுக்கு நைட்டுக்கு டிபன் செய்யப் போகனும். உங்கண்ணன் விக்கிக்கூட வெளியே போயிருக்காங்க" என்று நாச்சியா சொல்ல,
"எனக்கும் இன்னைக்குப் பெருசா வேலை இல்லை அண்ணி, நாம ரெண்டு பேருமே கடைக்குப் போயிட்டு அப்பாவுக்குச் சமைச்சி வைச்சிட்டு வருவோம்" என்று உமா சொல்ல.
"வேணாம் உமா இங்க நீ அம்மாவுக்கு நைட் சமையலுக்கு உதவி பண்ணு, அப்பா ஏதாவது சொல்ல போறாரு" என்றாள் நாச்சியா!
"யூ டோன்ட் வொர்ரி அண்ணி, அம்மாக்கிட்ட நான் பேசிக்கிறேன்" னு சொன்ன உமா நேரா மீனாட்சிக்கிட்ட போய் விசயத்த சொல்லிட்டு தயாராகி வந்தாள்…… நாச்சியாவும் உமாவும் கிளம்பி போறத பார்த்த சந்தரசேகர் மீனாட்சியைப் பார்க்க….
"அவங்கப்பாவுக்குச் சமைச்சி வைச்சிட்டு வர போறாங்க, சீக்கீரமா வந்துருவாங்க" என்றாள் மீனாட்சி!
"அதெல்லாம் சரி வேலை கிடைக்கற வரைதான் இந்த வீட்ல இடம்னு சொல்லிட்டியா இல்லையா மீனா" என்று சந்திரசேகர் கேட்க,
"இன்னும் ஒருவாரம் ஆகட்டுங்க, இப்பத்தான வந்தாங்க"னு மீனாட்சி கெஞ்சலாய் இழுத்தாள்….
"இங்க பாரு மீனாட்சி எதையும் தள்ளி போடறதால எதுவும் மாறிட போறதில்லை. வீட்டுக்கு வந்த பொண்ணு முன்னால அவன்கிட்ட எதுவும் பேச வேணாமேனு இருக்கேன். நைட் படுக்கறப்ப அவன என் ரூமுக்கு வரச்சொல்லு"என்ற சந்திரசேகர் டிவியில் மூழ்க. மீனாட்சி இரவு சமையலுக்கான வேலைகளை ஆரம்பித்தாள்!
கடைக்குள் நுழைந்த நாச்சியா உமாவ கூட்டிக்கிட்டு வேகமா வீட்டுக்குள் நுழைந்தவள் அரைமணி நேரத்தில் இட்லி சுட்டு, சட்னி தயார் பண்ணி வைச்சிட்டு உடனே கிளம்பத் தயாரானாள்……
"என்ன அண்ணி இவ்வளவு வேகம்?! என்று உமா கேட்க,
"அங்க அம்மா ஆறு பேருக்குத் தனியா சமைக்கனும், நீயும் என்கூட வந்துட்ட அவங்க பாவமில்லையா வா வா சீக்கிரம் போவோம்" என்று சண்முகம், வாசுக்கிட்டு நாளைக்குக் கடையைத் திறக்க ஆறு மணிக்கு வந்துடுவேனு சொல்லிட்டு ஸ்கூட்டியை ஸ்டார் பண்ணிய ஐந்தாவது நிமிடத்தில் அங்க வீட்டில் இருந்தாள் நாச்சியா. நாச்சியாவின் வேகத்தைப் பார்க்க மீனாட்சிக்கே ஆச்சரியமா இருந்தது. ஏன்னா வேலையில் மீனாட்சி அவ்வளவு சுறுசுறுப்பு!
………..
பார்க்கில் சந்துருவோடு பேசிக்கொண்டிருந்த ரேகாவிற்கு வேலைக்கு ஏதாவது போகனும் என்கிற எண்ணமும், அருள் சொல்லிய வார்த்தைகள் மட்டுமே நினைவில் இருந்தது…..
காபிஷாப் கூப்பிட்ட சந்துருக்கிட்ட வேண்டாம்னு மறுத்துட்டு, வேலைக்கு மட்டும் கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணித்தாங்கனு சொல்லிட்டு வீட்டிற்குக் கிளம்பினாள். இவள் சந்துருவோடு பேசிக்கொண்டிருப்பதைப் பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் நாச்சியா வழக்கமா போகும் ஹோட்டல் கடைக்காரரின் மனைவி!...
----தொடரும்----

No comments:
Post a Comment