மெல்ல திறந்தது மனது (ஆதன்-னின்)
அத்தியாயம் 21
தேவா காலையிலேயே உமாவுக்குப் போன் பண்ணினான்!
"ஹலோ அண்ணா"
"உமாம்மா அங்க என்ன நடந்தது நாம நினைச்ச மாதிரிதான?! என்று தேவா கேட்க,
"வழக்கம்போல அப்பா மரியாதையாதான் பேசிக்கிட்டு இருந்தாருணா சாதி விசயத்தில மட்டும் இந்தக் கல்யாணத்தை ஏத்துக்கவே முடியாதுனு சொல்லிட்டாருணா. ஆனா ….." என்று இழுத்தாள் உமா…..
"சொல்லும்மா ஏன் இழுக்கற?!
"நல்லபடியா போய்க்கிட்டு இருந்த பேச்சுவார்த்தையை ரேகா குண்டம்மா நடுவுல பேசி கெடுத்துட்டாணா, ஆனா நாச்சியா அக்காவோட அப்பா கோபப்படாமா நிதானமா பேசிட்டு கிளம்பிட்டாருணா" என்றாள் உமா!
"அவ என்ன பேசினா சொல்லு உமா"
"இல்லனா பெருசா ஒன்னுமில்ல, கல்யாணம் நடக்கறத தடுக்கறதுக்குத்தான் பேசினா"என்று சமாளித்தாள் உமா!
"சரி அம்மாவை விசாரித்ததா சொல்லு" நான் கட் பண்றேன் என்று போனை வைத்தான் தேவா!
……….
புல்லட் வரும் சத்தம் கேட்கவும் ஆர்வமானாள் நாச்சியா ….
கடைக்கு ஓரமாய் வண்டியை நிறுத்தி விட்டு கடைக்குள் வந்தார் சண்முகம்!
"என்னப்பா ஆச்சு" என்ற நாச்சாயாவிடம்,
"எதுவும் ஆகலைமா" என்றார் சலிப்பாகச் சண்முகம்!
"யாராவது தப்பா பேசிட்டாங்களாப்பா??
"ரொம்பத் தப்பா பேசிட்டாங்கமா, இது மட்டும் உன் பிரச்சினையா இல்லாம இருந்திருந்தா அந்த வார்த்தைக்கு அரைப் பக்கம் மூஞ்சி காணாம போயிருக்கும்"னு தன் அகலமான உள்ளங்கையைப் பார்த்தார்!
"யாருப்பா பேசினது"
"வேற யாரு நீ ஒரு பொண்ணுக்கிட்ட பேசக்கூடாதுனு சொன்னியே அந்தப் பொண்ணுதாம்மா"
"என்னப்பா சொன்னா அவ?"
"விடும்மா வேணாம்"
"பரவாயில்லப்பா சொல்லுங்க எதிர்காலத்துல திருப்பி நான்தான் பதில் சொல்லனும்"
"ம் நான் பெத்த பொண்ணுக்கு மாமா வேலை பாக்கறனு சொல்லுதுமா அந்தப் பொண்ணு" என்ற சண்முகத்தின் குரல் உடைந்திருந்தது!
ஆத்திரத்தில் பற்களை நறநறவென்று கடித்த நாச்சியா உடனே தேவாவுக்குப் போன் அடித்தாள். அவளின் இயல்பான கோபம் மேல்நோக்கியே எரியும் தீயாய்த் தாண்டவமாடியது.
"ஹலோ கோதை நானே கால் பண்ணலாம்னு இருந்தேன்" எனத் தேவா சொல்லவும்…..
"அதெல்லாம் இருக்கட்டும் உடனே புறப்பட்டுக் கடைக்கு வாங்க" என்றாள் நாச்சியா…..
"எதுக்குமா தேவையில்லாம விட்று அந்தப் புள்ளை புத்தி அவ்வளவுதான்" என்ற சண்முகத்திடம்.
"எதை எதை விடனும்னு ஒரு லிமிட் இருக்குப்பா" நீங்க அமைதியா இருங்க என்றவள் தேவா வருகைக்காக உள்ளுக்குள் வெடிக்கும் கோபத்தோடு காத்திருந்தாள்!
விக்கியிடம் நாச்சாயா கூப்பிட்டதைச் சொல்லிட்டு வண்டியை எடுத்தவன் நாச்சியா வீட்டுக்கு புறப்பட்டான்!
தேவா வந்து சேர்ந்ததும்
படப் படன்னு நடந்ததைச் சொல்லி நியாயம் கேட்க ஆரம்பித்தாள் .. தேவா கல்யாணத்துக்கு முன்னயே குடும்பஸ்தான் ஆளாகும் பிரச்சினைகளுக்கு ஆளானான்….
ஆனால் நாச்சியா சொன்னதைக்கேட்ட தேவாவுக்குக் கோபம் மண்டைக்கு ஏறியது…..
நேரடியா சந்திரசேகர் மொபைலுக்கே கால் அடித்தான்…
மூனு முறைத்தாண்டி நாலாவது முறையில் போனை அட்டன்ட் பண்ணியவர் கல்யாணம் பற்றிக் கெஞ்சி பேசுவானு நினைத்தார்!
" ஹலோ சொல்லுடா என்ன வேணும் உனக்கு, அதான் உன்னை வேணாம்னு வெளிய அனுப்பிட்டனே ஏன் ஓயாம போன் அடிக்கற" என்ற சந்திரசேகரிடம்…..
"என்னைச் சேர்த்துக்கங்கன்னு கெஞ்ச போன் பண்ணல, நம்ம வீடுதேடி வந்த ஒரு பெரிய மனுசர்கிட்ட பேசற வார்த்தையா உங்க பொண்ணு பேசியிருக்கா??. வீட்டுக்குப் போய்ப் பேசிக்கறன்"னு தேவா சொல்லவும்…..
சற்று நேரம் குற்ற உணர்ச்சியில் அமைதியா இருந்த சந்திரசேகர்,
" அதுக்காக அவளை நான் கண்டிச்சிட்டேன் நீ என் வீட்டுக்கு போற வேலைலாம் வைச்சுக்காத"
"நியாயமான ஒரு கல்யாணத்தை எதிர்க்கற அடி முட்டாள் நீங்கனு உண்மையை நாச்சியா சொல்லி இருந்தா உங்களால அதை ஏத்துக்க முடியுமா"னு போன்ல பேசற தைரியத்துல தேவா கேட்க அதிர்ச்சியானார் சந்திரசேகர்….
" என்னடா வாய் ரொம்ப நீளுது?!
"வீட்டை விட்டு அனுப்பியாச்சு, வீட்டுக்கு வந்தவங்களையும் அவமானப்படுத்தியாச்சி, என் வீடுனு பிரிச்சும் பேசியாச்சி…. ஆனா நான் மட்டும் பேசக்கூடாது…. நான் என்ன அடிமையா?!"னு இதுநாள் வரை அடக்கி வைத்திருந்ததை ஆத்திரத்தில் பொங்கி விட்டான் தேவா….
எந்தப் பதிலும் சொல்ல முடியாமல், ஒருபக்கம் தேவா எதிர்த்து பேசினது இல்லாம தன்னை அடிமுட்டாள்னு சொல்லாம சொன்னதெல்லாம் போட்டு அழுத்த கைப்பேசியைத் துண்டித்தாா் சந்திரசேகர்!
…………..
விக்கியின் அப்பா முருகேசன் , அம்மா கல்யாணி. விக்கிதான்
வீட்டுக்கு ஒரே பையன் அதனால ஒவர் செல்லம்!
முருகேசன் பெயிண்ட்&ஹார்டுவேர் கடை சொந்தமா வைச்சிருக்காரு….
தேவா இங்க எத்தனை நாள் தங்கினாலும் எதுவும் கேட்கக்கூடாதுனு விக்கி ஏற்கனவே சொல்லி இருந்தான். விக்கி சொல்லாம இருந்தாலும் முருகேசனும் கல்யாணியும் தேவாக்கிட்ட எதுவும் கேட்க மாட்டாங்க…..
ஏன்னா சின்ன வயசுல இருந்தே தேவா இந்த வீட்ல ஒரு ஆளாவே வளர்ந்தவன்!
…………..
தம்பி வர 15 நாள்ல நாலு முகூர்த்தம் இருக்கு என்ன பண்ணலாம் சொன்னிங்கனா பண்ணிலாம்னு சண்முகம் கேட்க. தேவா இரண்டாவது முகூர்த்தத்துல கல்யாணத்த வைச்சுக்கலாம்னு சொல்ல கல்யாண தேதி முடிவானது!
இனி கல்யாண வேலைகள் ஆரம்பம்!...
அத்தியாயம் 22
தேவா நாச்சியா கல்யாணத்திற்கு இன்னும் சரியாக எட்டு நாள் இருந்தது. அதற்கடுத்த இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமையில் பெரிய அளவில் வரவேற்பு நடத்த திட்டமிடப்பட்டது……
"தம்பி எங்க சைடுல முக்கியமான ஒரு இருபது பேர் உங்க சைடுல ஒரு இருபது பேர் சிம்பிளா கோயில்ல தாலியக்கட்டி ஹோட்டல்ல டிபன சாப்ட்டுட்டு கல்யாணத்த முடிச்சிருவோம். வரவேற்பை பெரிய அளவில் நடத்திக்குவோம்" என்றார் சண்முகம்!
"உங்க விருப்பப்படி செய்யுங்க" என்று தேவா சொல்ல விறுவிறு என்று வேலையில் இறங்கினார் சண்முகம்…..
அன்று இரவே கொஞ்சம் பெரிய அளவிலான திருமண மண்படத்தை ரிசப்சனுக்காகப் புக் செய்துவிட்டார் சண்முகம்…
அடுத்த நாள் காலையில் பத்திரிக்கை அடிப்பதற்கு வெட்டிங் கார்டு லேண்ட் என்ற பெரிய கடைக்குத் தேவா நாச்சியாவை அனுப்பி வைத்தார் சண்முகம்…..
கடைக்குள் நுழைந்தவர்களுக்கு விதவிதமான மாடல்களில் பத்திரிக்கைகள் காட்டப்பட்டது…
"தேவா நீயே ஏதாவது ஒன்ன செலக்ட் பண்ணு" என்றாள் நாச்சியா…..
"எனக்கு டிரஸ்ஸே உமாதான் செலக்ட் பண்ணுவா உன் விருப்பப்படி செலக்ட் பண்ணு" என்று தேவா சொல்ல…..
இதய வடிவவிலான இரு தாள்கள் கொண்ட டிசைன் ஒன்றை தேர்வுச்செய்த நாச்சியா……
"இது ஓகேவா தேவா" என்று நாச்சியா கேட்க. டபுள் ஓகே என்றாள்…
…………
விக்கியின் வீட்டிற்கு நாச்சியாவை தேவா கூட்டி வர விக்கியின் அம்மா லன்ஞ்சுக்கு ஒரு பெரிய விருந்தையே தயார் செய்ந்திருந்தாள்..,.,..
"இவங்க அம்மா கல்யாணி. இவங்க அப்பா முருகேசன்" என்ற தேவா இது விக்கி என்று தேவா அறிமுகப்படுத்த இவர எனக்குத் தெரியாதா என்று என்று இடுப்பில் கிள்ளி வைத்தாள் ரகசியமாய்…..
கல்யாணி எல்லாரையும் அமர வைத்து பரிமாற ஆரம்பித்தாள்….. எடுத்ததும் அசைவம் வேண்டாமென்று முதலில் பழம் சர்க்கரை வைத்து, அடுத்து சிக்கன் மட்டன் மீன் முட்டை என்று இலையை நிரப்பினாள்….. நாச்சியா அவர்களோடு இயல்பாய் பழக ஆரம்பித்துவிட்டாள்…..
"ஒரு ஆறேழு வருசமா நானே சமைச்சி நானே சாப்பிட்டுச் சலிச்சி போச்சுங்கமா, இன்னைக்கு விருந்த ஒரு வழி பண்றதுதான்"னு சொன்னவள் ஒவ்வொன்றாய் ருசி பார்க்க ஆரம்பித்தாள்…..
எல்லாரும் முதல் இரவுண்டுக்கே தடுமாற நாச்சியா இரண்டாவது இரவுண்டில் இருந்தாள்…. வீட்டில் யாராவது டீயோ சாப்பாடோ போட்டே பல நாட்கள் ஆகியிருந்த குறை இன்று அவளுக்குத் தீர்ந்திருந்தது…..
"கல்யாணி அம்மா…. முருகேசன் அப்பாவும் விக்கியும் குடுத்து வைச்சவங்க உங்க கை பக்குவம் சான்ஸே இல்லமா" என்ற நாச்சியாவை கல்யாணி, முருகேசனுக்கு ரொம்பப் பிடித்துப் போனது. தேவாவும் அப்பா அம்மா என்றுதான் கூப்பிடுவான்….. நாச்சியா முதல் நாள் சந்திப்புலயே அவர்களை ஈர்த்திருந்தாள்……
"பத்திரிக்கை எப்பமா கைக்கு வரும்?" என்று கல்யாணி கேட்க.
"அர்ஜென்ட் ஆர்டரா குடுத்துருக்கோங்கமா நாளைக்கு மதியம் பத்திரிக்கை கைக்குக் கிடைச்சிரும் அதுக்கு அடுத்து கலையாணத்துக்கு அஞ்சு நாள் இருக்கு, வெளியூர்ல இருக்கவங்களுக்கு அப்பாவும். லோக்கல்ல இருக்கவங்களுக்கு நானும் தேவாவும் தரதா பிளான். கடையை வாசுதான் பார்த்தாகனும்" என்றாள் நாச்சியா…
" அம்மா எப்படியும் என் சைடுலனு இருக்கறது நீங்க மட்டும்தான் எங்க அம்மா அப்பா இடத்துல இருந்து இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கனும்" என்று தேவா சொல்ல…….
" நீ மட்டும் யாருப்பா என் பையன் மாதிரிதான கடைக்கு நாலுநாள் லீவு விட்றேன் கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்தறோம்"என்று முருகேசன் சொல்ல விக்கிக்கு பெரிய சந்தோசம்… தன்னோட நட்புக்கு அப்பா அம்மா கெளரவம் பண்ணிட்டாங்கனு…..
இந்த வேளையில் சண்முகத்திடம் இருந்து நாச்சியாவுக்குக் கால் வந்தது!
"ஹலோ சொல்லுங்கப்பா"
"என்னமா பண்றிங்க?! இவ்வளவு நேரமாச்சு இன்னும் காணலையேனு கூப்பிட்டன்மா" என்று சண்முகம் சொல்ல……
"இங்க விக்கி வீட்டுக்கு வந்தோம்பா, கல்யாணி அம்மா பெரிய விருந்தே வைச்சி அசத்திட்டாங்கப்பா. அங்க இங்க நகர முடியலப்பா கொஞ்ச நேரம் கழிச்சி வரேன் பா" என்று கெஞ்சலா கொஞ்சலா நாச்சியா சொல்ல சரிம்மா என்ற சண்முகத்துக்குச் சந்தோசமா இருந்தது!
மொட்டை மாடிக்கு நாச்சியாவும் தேவாவும் வர சைலன்ட்டாக விக்கி கழன்டுக்கொண்டான்….
"தேவா ரொம்ப நாள் கழிச்சி ரொம்பச் சந்தோசமா இருக்கேன் தெரியுமா. விக்கியோட அம்மா அப்பா. ஒருநாள் முழுக்க உன்கூட இருக்கறது இப்படி நிறைய"
"நானும்தான் கோதை ஆனா அம்மா உமா என் சந்தோசத்துல இல்லாம இருக்கறதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு. எங்க அப்பா ஒரு பழைய ரோபோ, எங்கக்கா சமீபமா ஒரு சைக்கோ இவங்கள பத்தி எனக்குக் கவலை இல்லை"என்ற தேவா முகம் வாடி இருந்தது!
நாச்சாயாவுக்கு அப்பதான் உறைச்சது. நாம எந்தப் பிரச்சினையும் இல்லாம சந்தோசமா இருக்கோம் ஆனா தேவா வீட்டை பிரிந்து இருக்கானு!
"ஸாரி தேவா" என்ற நாச்சியா, அவனுக்கு நேரா நின்னு ரெண்டு கைகளையும் அவன் தோள்
மேல போட்டு எட்டி நின்னு அவன் நெத்தியில் ஒரு முத்தமிட முயற்சிக்கத் தேவா குறும்பா குனிய இதழும் இதழும் பொருத்திக்கொண்டது.
இருவருக்குமே இந்த அனுபவம் புதிது என்பதால் உடலில் பல வாட்ஸ் மின்சாரம் பாய்ந்து உடல் விறைக்க, நரம்புகள் புடைத்தது. இடம் பொருள் ஏவல் உணர்ந்த நாச்சியா சற்று விலக, வாட்டர் டேங்க் மறைப்பிருந்த காரணத்தால் தைரியமாய் அவளை இழுத்த தேவா மீண்டும் இதழோடு இதழ் பொருத்த எல்லாம் மறந்தவளாய் அவனைக் கட்டிக்கொண்டவள் அப்படியே நின்றாள்....
----தொடரும்----

No comments:
Post a Comment