மெல்ல திறந்தது மனது (ஆதன்-னின்)
அத்தியாயம் 17
குரூப் எக்ஸாமுக்கு கிளம்பித் தயாராகி இருந்த தேவாவிற்கு
நாச்சியாவிடமிருந்து வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்து விழுந்தது!
"எக்ஸாமை பற்றிக் கவலைப்படாத, நமக்கான ஒரு வாழ்க்கை ஏற்கனவே முடிவுசெய்யப் பட்டிருக்கும். நாம் சேர்ந்து வாழ்வது தீர்மானிக்கப்பட்ட ஒன்று.
வாழ்க்கைக்காக எக்ஸாம் எழுதற பிரஷர்ல போகாத, வர ரிசல்ட்ட பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் மனநிலையை அப்படியே உன் மனநிலையா மாத்திக்கோ. லவ்யூ கண்ணா!"
"தாங்கஸ் லவ்யூ டூ" என்று ரிப்ளை அனுப்பியவனுக்கு,
இதுவரை எக்ஸாம், லவ். ப்யூச்சர், அப்பானு பல குழப்பங்கள்ல இருந்த தேவாவுக்கு மனதில் ஒரு தெளிவு ஏற்பட்டிருந்தது. இந்த எக்ஸாம் மட்டுமே நம்ம எதிா்காலம் இல்லை. அதைத்தாண்டி ஒரு வாழ்க்கை இருக்குனு உணர உணர உற்சாகமானான்…..
மீனாட்சி சின்னதா வீட்ல ஒரு பூஜை செய்து விபூதியை இட்டு விட்டாள்….
உமா ஆல் த பெஸ்ட் சொல்லி கூடவே ரிசல்ட்ட பத்தி கவலைப்பட வேண்டாம்னு அட்வைஸ் பண்ணிட்டு…..
எக்ஸாம் ஒரு பெரிய மேட்டரே இல்லைங்கற மாதிரி கிச்சன்ல மீனாட்சிக்குச் சின்னச் சின்ன ஹெல் பண்ண ஆரம்பித்திருந்தாள்….
ஹால் சோபாவில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு மொபைலில் எதையோ தீவிரமா எழுதிக்கொண்டிருந்த ரேகா தேவாவை கண்டுக்கொள்ளவே இல்லை…..
இந்த எக்ஸாம்தான் உன் ப்யூச்சர் என்று சந்திரசேகர் சொன்னதைத் தேவா காதில் வாங்கவே இல்லை.
விக்கி வரவும் எல்லாருக்கும் பை சொன்ன தேவா ரேகாவிடமும் பை சொல்ல ரேகா நிமிர்ந்தே பார்க்கல.
விக்கி ஹாரன் அடிக்க வெளியில் வந்த தேவா ஏதோ பிடிச்ச படம் ஒன்ன பாக்க போற பீலிங்ல கிளம்பினான்.
…………
நாச்சியா வீட்டின் மேல்தளத்தில் வீடு கட்டுவதற்கான வேலைகள் நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்கப்பட்டது….
"அம்மா நாச்சியா" என்று சண்முகம் கூப்பிட….
" இந்தக் கடையை நான் இருக்கப்ப பெருசு பண்றத விட. உன் காலத்தில் இன்னும் பெருசா மாத்தனும்மா, தொழில்ல நிறையப் போட்டி உருவாகியிருச்சி அதுக்கேத்த மாதிரி கடையை மாத்திக்கிட்டே இரு, உன் காலத்துல நம்ம கடை மினி சூப்பர் மார்க்கெட்டா மாறனும்மா" என்ற சண்முகம் கண்ணில் ஏனோ கண்ணீர்!
இந்தக் கடை என்பது வெறும் கடையல்ல சண்முகம் என்ற தனிமனிதனின் பல ஆண்டுகளை, சின்னச் சின்னச் சந்தோசங்களை எல்லாம் பறித்துக்கொண்டு பதிலுக்குப் பணமாய்த் தந்த ஒரு பணப்பெட்டி.
அதையும் தாண்டி அவர் வாழ்ந்ததிற்கான ஒரு கெளரவ அடையாளம். இந்தக் கடை என்பதுதான் அவருக்கு வீடு, வீடு என்பது அவருக்கு வெறும் நாலு சுவர்!
சண்முகம் இப்படிச் சொல்லவும் கொஞ்சம் தடுமாறிய நாச்சியா சுதாரித்துக்கொண்டு உறுதியாகச் சொன்னாள்.
"அப்பா கவலையே படாதிங்க உங்க காலத்திலயே நீங்க ஆசைப்பட்ட மாதிரி இதை மினி சூப்பர் மார்க்கெட்டா மாத்தி காட்டறன். நீங்க தைரியமா இருங்க. இன்னும் நாலுபேருக்கு நாம வேலை தருவோம்"
"நீ செய்வனு எனக்கு நம்பிக்கை இருக்குமா ஆனா தொழிலுக்குனு இல்ல வாழ்க்கைக்கும் கோவம் உதவாதுமா. இனி நீ உன் கோவத்த கட்டுப்படுத்து அறிவால மட்டுமே எந்த முடிவும் எடுக்கனும்"என்ற சண்முகம் கடையில் வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தார்.
இப்ப கட்டிக்கிட்டு இருக்கறது ஒரே அறை, டாய்லெட் மட்டுமே.
ஒரே அறையைத் தடுத்து சின்னதா ஒரு கிச்சன் அவ்வளவுதான். ஏன்னா இந்த மேல் தளத்தையும் கடையா மாத்தற ஐடியா நாச்சியாக்கிட்ட இருந்தது!
மேல வீட்டு வேலையும், கீழ இருக்க வீட்டை இடித்து அதைக் கடையா மாத்தற வரை, மார்க்கெட் போறது, சமைக்கறது, கட்டுமான வேலைகளைக் கவனிக்கறது மட்டுமே நாச்சியாவின் வேலை.
கடையைச் சண்முகமும், வாசுவும் பார்த்துக்கறதா முடிவாச்சி. இந்த வேலைகள் முடியும் வரை காலை ஏழு மணிக்கே கடைக்கு வந்திடறதா வாசு சொல்லி இருந்தான்.
கடை வேலையிலயும் இப்ப வாசு தேறி இருந்தான். கணக்கு பாடத்துல 35 மார்க்கூட வாங்காத வாசு இப்ப கால்குலேட்டர் இல்லாமயே மனசுக்குள்ளயே ஆயிரம் ரூவா பில்லா இருந்தாலும் அசால்ட்டா போடறான். வாசு கிடைத்தது இவர்களுக்கு அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லனும்,
…………..
எக்ஸாம் சென்டரில் கொஸ்டீன் சீட் தந்ததும் அதை மேலோட்டமாகப் பார்த்த தேவாவுக்குத் தன் ரிசல்ட் உறுதியா தெரிந்தது பெயில்தானு.
எந்தக் கவலையும் படாம எழுதி முடித்தான். நட்புல விக்கி மாதிரி ஒருத்தன பாக்கவே முடியாது. எல்லா விசயத்திலயும் தேவா மாதிரிதான் படிப்புலயும்தான்…..
எக்ஸாம் முடிந்து வெளிய வந்த தேவா,
"நான் பெயில்டா விக்கி"
"நானும் பெயில்டா தேவா"னு விக்கிச் சொல்ல ஜாலியா ரெண்டு பேரும் ஹோட்டல்ல மட்டன் பிரியாணி சாப்டுட்டு பொறுமையா வீட்டுக்கு வந்தாங்க….
மீனாட்சி தேவா விக்கியை பார்த்ததும் காபி தர,
ரேகாக்கிட்ட இருந்து மொபைல்ல குனிஞ்ச தலை நிமிராம குரல் வந்தது.
"இப்ப மட்டும் காபிய தன்னால ஊத்தி தருவிங்களே மீனாட்சி மேடம்" என்று….
யாரும் எதுவுமே பேசல…..
"பரீட்சை எப்படிப்பா இருந்துச்சி"னு மீனாட்சி கேட்க,
"கவலையேபடாதிங்கமா உறுதியா நாங்க ரெண்டு பேருமே பெயில்" என்று விக்கி சொல்ல என்ன சொல்றதுனு புரியாம "சரி விடுப்பா" அடுத்த முறை பார்த்துக்கலாம்னு மீனாட்சி சொல்லிட்டு துணி மடிக்கற வேலையைச் செய்தாள்…..
"ரிசல்ட் இதான் வரும்னு நல்லா தெரிஞ்சதாலதான் நான் ஆல் த பெஸ்ட் வொர்ஸ்ட்னு எதையும் சொல்லலை"னு மறுபடியும் ரேகாக்கிட்ட இருந்து குரல் வந்தது….
"எக்ஸாம் ரிசல் பேடா இருந்தாலும் என் வாழ்க்கைக்கான ரிசல்ட் நல்லாயிருக்கு. என் வருங்காலப் பொண்டாட்டி நாச்சியா மாசம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கறா, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வொர்க் பண்ணா இது டபுளாகும்.
இன்னைக்கு அப்பா வந்ததும் தாரளமா நான் நாச்சியாவ கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொன்னனு நீ சொல்லிக்கலாம். எந்தப் பயமும் இல்லை. நான் தெளிவா தைரியமா இருக்கன்"னு தேவா சொன்னதும் விக்கிக்கு மிகப்பெரிய சந்தோசம்..
"காங்கிராட்ஸ் நண்பா" என விக்கி குதூகலிக்க, அப்பாக்கிட்ட போட்டுக்குடுக்கச் சான்ஸ் கிடைச்சதுக்காகச் சந்தோசப்படறதா இல்லை இவன் லைப் செட்டில் ஆகப்போறானேனு வயிறெறியறதானு புரியாமல்
குழம்பினாள் ரேகா!.....
அத்தியாயம் 18
எது எப்படியோ இன்னைக்கு அப்பா வந்ததும் இந்த விசயத்த முதல்ல போட்டுக்கொடுப்போம் மீதிய அப்புறம் பார்த்துக்கலாம் என்று முடிவுக்கு வந்தாள் ரேகா…..
ரேகா பக்கத்துல சோபாவுல உட்கார்ந்த விக்கி.
" நீ பண்ணிக்கிட்டு இருக்கறது தப்பு ரேகா. நாங்க எதையும் கண்ணால பார்க்கல, ஆனா நம்ம குடும்பத்துக்குப் பெரிய கெட்ட பேர் உன்னால வரும். நீ கெட்டவனு நான் சொல்லலை ஆனா உன்னை யாரோ அப்படி ட்யூன் பண்றாங்க" என்ற விக்கிக்கு சரால் என்று பதில் சொன்னாள் ரேகா…
" எங்க குடும்ப விசயத்துல தலையிட நீ யாரு? உன் பழக்க வழக்கத்தைலாம் வாசலுக்கு வெளிய வைச்சுக்க வீட்டுக்குள்ள வேணாம். அடுத்து என் பர்சனல்ல தலையிடற உரிமையோ அதிகாரமோ உனக்கில்ல யாருக்குமே கிடையாது"னு செருப்பால அடிச்ச மாதிரி ரேகா பேசவும்…..
"ஸாரி ரேகா" என்ற விக்கியின் குரல் உடைந்திருந்தது….
கோபமாய் எழுந்த தேவாவை மீனாட்சி தடுத்தாள்….
"விடுறா தேவா அவளுக்கு மேதாவிங்கற நினைப்பு"னு மீனாட்சி தேவாவை தடுத்து விட்டு அமர வைத்தாள்!
"சரிடா தேவா நான் கிளம்பறன்"னு விக்கி கிளம்ப இருடா நானும் வரேனு தேவாவும் கிளம்பினான். இதைப் பார்த்த ரேகா முகத்தில் உருவான சிரிப்பு உண்மையில் அவளை அருவருப்பாய்க் காட்டியது!
வழக்கமான அதே சிமெண்ட்ல் உட்கார்ந்து வீட்டில் நடந்ததை மறந்து தேவாவும் விக்கியும் பேசிக்கொண்டிருக்கையில் நாச்சியா கால் அடித்தாள்.
"இருடா விக்கி நாச்சியா கூப்பிடுது பேசிட்டு வரேன்"னு சொன்ன தேவாவை என்ஜாய்டா என்று விக்கி சொல்ல சிரிச்சப்படியே போனை அட்டன்ட் பண்ணினான்!
"ஹலோ"
"ஹலோ புருஸ்லீ எக்ஸாம் எப்படி இருந்தது?!
" ம் செம சூப்பர் உறுதியா ரெண்டு பேரும் பெயில்தான்" என்ற தேவா பேச்சில் வருத்தமே இல்லை. இதைத்தான் நாச்சியாவும் எதிர்பார்த்தாள்!
"ரொம்பச் சந்தோசம் அப்படியே கடை வரைக்கும் வாங்க புருஸ்லீ"
"எதுக்காம்?"
"எல்லாம் காரணமாத்தான் வா"
"விக்கி இருக்கான்!" என்றான் தேவா!
"பரவாயில்லை ரெண்டு பேருமே வாங்க"என்ற நாச்சியா போனை வைத்தாள்!
"விக்கி வா கோதை வீடு வரைக்கும் போயிட்டு வரலாம்" என்ற தேவாவை விக்கி குழப்பமா பார்த்தான்.
"யாருடா கோதை எனக்குத் தெரியாம?!
"நாச்சியாதான்டா சரி சரி வண்டிய எடு"னு தேவா சொல்ல,
"ம் ம் செல்ல பேர்லாம் வைச்சி லவ்வறிங்க ரெண்டே நாள்ல இது மிஸ்டர் சந்திரசேகருக்குத் தெரியறப்பதான் உனக்கு ஆப்பு இருக்குடி"னு விக்கி சொல்ல.
"அத ஏன்டா ஞாபகப்படுத்தற வண்டிய எடுறா" என்று தேவா சொல்ல நாச்சியா கடையை நோக்கி வண்டியை ஓட விட்டான் விக்கி!
தேவா வரதப் பார்த்ததும் நாச்சியா முகத்தில் பரவசம் உண்டாகி இளங்காலை சூரியனாய் முகம் பிரகாசித்தது….
"ஹாய் விக்கி தேவா வாங்க வீட்டுக்குள்ள போவம்"னு நாச்சியா சொல்ல. கடையைத் தாண்டி வீட்டிற்குள் போனர்கள்….
இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல் அமர்ந்திருந்த சண்முகம் "வாங்க வாங்க உட்காருங்க"என்று வரவேற்று, குடிக்க ஏதாவது நாச்சியாவைக் கொண்டு வரச்சொன்னார்!
மோர் கொண்டுவந்து குடுத்த நாச்சியா பேச்சை ஆரம்பித்தாள்!
"அப்பா உங்கக்கிட்ட இதுவரை மறைச்சி எதையும் செய்ததில்லை"னு நாச்சியா சொல்ல….
"தெரியுமேம்மா இப்ப அதுக்கென்ன" என்ற படியே தேவாவை பார்த்தார்!
"அப்பா தேவாவும் நானும் விரும்பறோம். கல்யாணம் பண்ணிக்க நினைக்கறோம். இத உடனே உங்கக்கிட்ட சொல்றதுதான் சரினு தோணுச்சி அதான்பா தேவாவையும் வர வைச்சே சொல்லிட்டேன்"னு நாச்சியா நறுக்குனு சொல்ல திடீரென்று அறையில் மெளனம் சூழ்ந்தது. தேவா சங்கட்டத்தில் நெளிய ஆரம்பித்தான்…..
"தம்பி என்ன வேலைக்குப் போறிங்க"னு சண்முகம் கேட்க,
"வேலைக்கு எதுவும் போகலை, வேலைக்காகப் பரீட்சை எழுதி இருக்காரு, ஆனா பரீட்சையிலும் பெயில்தான் ஆவாரு"னு நாச்சாயாவே சண்முகத்துக்குப் பதில் சொன்னாள்.
"தம்பி உங்க வீட்ல இதுக்குக் கல்யாணத்துக்குச் சம்மதிப்பாங்களா?"னு சண்முகம் மறு கேள்வி கேட்க,
" நிச்சயமா அவங்கப்பா சம்மதிக்க மாட்டார், அவங்கக்கா எப்படியாவது எங்களைப் பிரிக்கத்தான் பார்ப்பாங்க. அவரோட அம்மா தங்கச்சி பிரச்சினை இல்ல"னு இதுக்கும் நாச்சியாவே பதில் சொன்னாள்….
"அம்மா தம்பி பேசட்டுமே!" னு சண்முகம் சொல்ல,
"அப்பா அவர் இப்ப பதில் சொல்ற நிலைமையில இல்ல. பதில் சொல்லவும் அவருக்குக் கூச்சமா இருக்கும். ஏன்னா அவர் சைடுல எல்லாமே நெகடிவ்வா இருக்கு அதனாலதான் அவரைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு நானே பதில் சொல்றேன்"னு நாச்சியா சொல்ல சரினு தலையாட்டினார் சண்முகம்….
"ஏம்மா சூழ்நிலை இப்படி இருக்கப்ப எப்படிமா கல்யாணத்த பண்றதா நினைச்சிருக்கிங்க"
"அப்பா உங்க முடிவு என்னனு முதல்ல சொல்லுங்க"
"என் முடிவு சம்மதம்தான்மா நீ தப்பா முடிவு எடுக்கமாட்டனு நம்பிக்கை இருக்கு….. ஆனா அவங்க வீட்டுலனு………. இழுத்தார் சண்முகம்!
"அப்பா நாளைக்குக் காலையில முறைக்காக அவங்க வீட்டுக்கு போய் இந்த விசயத்த பக்குவமா பேசுங்க. சரினா சரி கல்யணத்த பெருசா நடத்துவோம். முடியாதுனா சிம்பிளா கோயில்ல தாலியக்கட்டி, ஹோட்டல்ல டிபன் சாப்டுட்டு அப்படியே ரிஜிஸ்தர் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துருவோம்"னு கூலாகச் சொன்னாள் நாச்சியா!
பொம்மை மாதிரி உட்கார்ந்திருந்த தேவாவை நாச்சியா பார்க்க இருவருக்குமே தானாகச் சிரிப்பு வந்துவிட்டது!
இந்தச் சந்தோஷம் நிலைக்க வேண்டுமே!!!....
அத்தியாயம் 19
மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டிற்கு வந்த தேவாவை சந்திரசேகர் "வாப்பா பெரிய மனுசரே"னு வரவேற்க மொபைலை கையில் வைத்து சுழற்றியபடியே ரேகா சோபாவில் எதுவுமே தெரியாதது போல் உட்கார்ந்திருந்தாள்!
"சொல்லுங்கப்பா"
"ரேகா சொல்றதுலாம் உண்மையா?"
கொஞ்ச நேரம் நீடித்த மெளனத்தைச் சந்திரசேகரே கலைத்தார்!
"உண்மையா இல்லையா?"
இதுக்கு மேலயும் பேசாம இருக்க முடியாதுங்கற நிலைமைக்கு வந்துட்டோம் என்று தெரிந்தும் பதில் சொல்ல முடியாமல் தேவா நிற்க,
"டே அப்பா கேட்கறாரு இல்ல சொல்லுடா, என்னமோ இரும்ப முழுங்கின மாதிரி முழிக்கற"னு சொன்ன மீனாட்சி கண்களாலேயே சொல்லிடுடானு கெஞ்ச தேவா புரிந்துக்கொண்டான்.
ஒருவழியாகத் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட தேவா ஒற்றை வார்த்தையில் "ஆமாம்பா" என்றான்!
"ஒன்னும் தப்பில்லை" என்று சந்திரசேகர் சற்று நிறுத்தவும்!!,
வீட்டிலிருந்த எல்லாருமே ஒரே மாதிரி அதிர்ச்சியாக, ரேகா மட்டும் நம்ம பிளான் இப்படி மொக்கை ஆயிடுச்சேனு மனச்சோா்வடைந்தாள்!!, சிறிது இடைவெளிக்குப் பின் சந்திரசேகர் விட்ட இடத்திலிருந்து பேச்சை தொடங்கினார்…..
"இந்த வயசுல இதெல்லாம் வரதுதான் ஆனா நீ உன் முடிவ மாத்திக்க"னு சந்திரசேகர் நிறுத்த,
மறுபடியும் எல்லாரும் அதிர்ச்சியாக ரேகா வெளிப்படையாகவே குஷியானாள்!
தேவா சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுத் தீர்க்கமாகத் தன்பேச்சை ஆரம்பித்தான்!!
"நான் கோதையை விரும்பறேன் அவளத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்"னு தேவா சொல்ல….
"அப்ப சோத்துக்கு என்ன பண்ணுவ? அந்தப் பொண்ணு சம்பாத்தியத்துல உட்கார்ந்து திம்பியா?" னு அவன் தன்மானத்தை தூண்டிவிட்டாா் சந்திரசேகர்… இதை கேட்க ரேகா களுக்னு சிரித்தாள். மீனாட்சி மற்றும் உமாவால் தேவாவின் இந்த நிலைமையைப் பார்க்க முடியாமல் கிச்சனுக்குள் ஒதுங்கினார்கள்…..
ஏன் மசாலா கம்பெனி, சோப்பு. சீப்புனு ஆயிரம் மார்க்கெட்டிங் பண்ண இருக்கு எங்கையாவது மாசம் பத்தாயிரத்துக்கு வேலைக்குப் போவேன்"னு தேவா கோபமா சொல்ல, அவனோட கோபம் சந்திரசேகருக்கு ஆச்சாியமாக இருந்தது. ஏன்னா அவர்கிட்ட அவன் பேச்சை மீறியே பேசினதே இல்லை!
"இங்க நீ சம்பாதிக்கப் போற பத்தாயிரமோ அந்தப் பொண்ணு சம்பாதிக்கறதோ பிரச்சினை இல்ல, சாதினு ஒன்னு பொிய தடையா இருக்கு அத என்னால தாண்ட முடியாது. நம்ம வீட்ல கல்யாணம் ஆகாத ரெண்டு பொண்ணுங்க இருக்கு.. நீ இப்படிப் போனா நான் மாப்பிள்ளைக்கு எங்க போவன்
பொண்ணுக்கேட்டு யாா்வருவா"னு கொஞ்சம் சாதியையும். பொண்ணுங்க வாழ்க்கையை முன்னிறுத்தி பேச்சில் சாமா்த்தியமாய்க் காய் நகர்த்தினார் சந்திரசேகர்!
"பொண்ணுங்க பொண்ணா இருந்தா அதாவது மனுசியா இருந்தா மாப்பிள்ளை தானா தேடி வரும்பா.., உமாவுக்குப் பிரச்சினை இல்லை"னு தேவா நிறுத்த, ரேகா சந்திரசேகர் இருக்கத் தைரியத்துல தாம்தூம்னு குதிக்க ஆரம்பித்தாள்… சந்திரசேகர் கத்தவே அடங்கிச் சோபாவில் உட்கார்ந்தாள்.
"கடைசியா உன் முடிவ சொல்லு" என்று சந்திரசேகர் கேட்க,
" அந்தப் பொண்ணதான் கட்ட போறேன்பா இதுல எதுவுமே மாற்றமில்லை"னு தேவா சொல்ல,
"அப்ப நீ இந்த வீட்ல இருந்தா எம் பொண்ணுங்களுக்கு நான் நல்லது பண்ண முடியாது"னு சந்திரசேகர் சொல்ல கிச்சனிலிருந்து பதறிபடி மீனாட்சியும், உமாவும் ஹாலுக்கு வந்தார்கள்…..
"அப்ப நான் என்ன செய்யனும்?! என்று தேவா கேட்க,
"அந்தப் பொண்ண விடனும். இல்ல வீட்டை விட்டு வெளியில போகனும்" என்று சந்திரசேகர் சொல்ல மீனாட்சி. உமா கண்கள்ல தண்ணி எட்டி பார்க்க ஆரம்பிச்சது. ரேகாவோ ஒருபக்கம் குதுகலமாக இருந்தாலும் இவன் கல்யாணம் பண்ணி சந்தோசமா இருந்துருவானோனு மனதிற்குள் குமுறினாள். ஏன்னா தேவைக்கு அதிகமாவே நாச்சியா சம்பாதிக்கறாளே!
சந்திரசேகருக்குப் பதில் சொல்லாமல் போனை எடுத்த தேவா விக்கிக்கு போன் அடித்தான்!
"ஹலோ"
"டே விக்கி என்னைப் பெத்தவருக்குப் பையனை விடச் சாதிதான் முக்கியமாம், ஸோ என்னை வீட்ட விட்டு வெளிய போகச் சொல்லிட்டாரு, வண்டிய எடுத்துட்டு வா இன்னைக்கு நைட் உங்க வீட்லதான் தங்கனும்"னு விக்கிக்கிட்ட சொன்னதன் மூலமா தன் முடிவை சந்திரசேகருக்குச் சொன்னான்!
ரூமுக்குள் தேவா நுழைய பின்னாடியே மீனாட்சியும், உமாவும் நுழைய, தேவா வீட்டை விட்டு வெளிய போறத பார்க்க ஆவலோட ஹால் சோபாவுல உட்கார்ந்திருந்தாள் ரேகா….
மீனாட்சியும் உமாவும் அழ, அவர்களைத் தேற்றிய தேவா பேசினான்…..
"அம்மா நான் கோதையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இதே வீட்டுக்கு வந்து காட்டறன். அதுவும் அப்பாவே வந்து என்னைய கூப்பிட வைக்கறன். நீங்க கவாலைப்படாதிங்க. அப்பாவோட மைனஸ் பாய்ன்டை வைச்சி என் சொந்த அக்கா என்னைப் பரம விரோதி மாதிரி அடிச்சிருக்கா
அதே அவரோட மைனஸ் பாயின்டை வைச்சி இந்த வீட்டுக்குள்ள நானும் நாச்சியாவும் வருவோம். ஹே உமா நீதான் அம்மாவ பார்த்துக்கனும் நீயே அழுதா எப்படி? அண்ணனுக்குத் தேவையான டிரஸ் எல்லாம் எடுத்து வை"னு தேவா சொல்ல மீனாட்சிக்கும், உமாவுக்கும் நம்பிக்கை பிறந்தது!
விக்கி வந்து வீட்டு வாசல்ல ஹாரன் அடிக்கச் சிரித்தப்படியே தேவா எல்லாருக்கும் டாட்டா காட்டிட்டு ரேகா காதருகே வந்து "அந்தச் சந்துரு மேலயும் உன் மேலயும் டவுட்டா இருக்கு. வெய்ட் பண்ணு"னு சொல்லிட்டு விக்கிக் கூடக் கிளம்பினான்.
விக்கி வீட்ல விக்கியோட அப்பா அம்மா வரவேற்க விக்கி ரூமுக்குள் போய்ப் பேக்கை வைச்ச தேவா நாச்சாயாவுக்கு வீட்டில் நடந்தவைகளைப் போனில் சொன்னான்
" நாளைக்கு உங்க அப்பா எங்க வீட்டுக்கு போக வேணாம் போறதால யூஸ் இல்ல கோதை"
"தேவா இது ஒரு சம்பரதாயம் எங்கப்பா போகட்டும். போய் அவமானப்பட்டு வந்தாலும் சரி"னு நாச்சியா சொல்ல மேற்கொண்டு தேவா எதுவும் பேசாமல் மொட்டை மாடிக்கு வந்து கூப்டறதா சொல்லிட்டுப் போனை வைக்கப் போகத் தடுத்த நாச்சியா சிரிச்சப்படியே சொன்னாள்…..
"இன்னும் ரெண்டு நாள் கழிச்சி முகூர்த்தம் இருக்கு ஞாபகம் வைச்சுக்கோ"னு போனை வைத்தாள் நாச்சியா!
இனி நடக்கப் போற யுத்தம் நாச்சியாவா (Vs) ரேகாவா? தேவாவா (Vs) சந்துருவா? இல்லை இடையில் இன்னும் வேறு பிரச்சினைகளா?!.
அத்தியாயம் 20
காலை மார்க்கெட் போயிட்டு வந்த சண்முகம் தேவா வீட்டிற்குக் கிளம்பத் தயாரானார்!
"அப்பா" என்றாள் நாச்சியா!
"சொல்லு நாச்சியா!" என்றார் சண்முகம்!
"நீங்க அங்க பேச போறப்ப அவமானப்படற மாதிரியோ, கோவப்படற மாதிரியோ ஏதாவது நடந்தா நீங்க திருப்பிக் கோவப்பட்டு எதுவும் சொல்லிடாதிங்க.
ஏன்னா நாம சொல்ற அந்த ஒரு வார்த்தைதான் பெருசா பேசப்படும். அதை ஊதி பெருசாக்கறதுக்குனே அந்த வீட்ல ரேகானு தேவாவோட அக்கா இருக்கா, அவளா பேசினாலும் நீங்க பேசிடாதிங்கப்பா"
"சரிம்மா நான் பக்குவமா பேசிக்கறேன்"
"ஸாரிப்பா"
"எதுக்குமா அப்பாக்கிட்ட போய்"
"இல்லப்பா அவமானமே பட்டாலும் அமைதியா வாங்கனு சொல்றனே அதுக்குத்தான்பா"
"நீ காரணம் இல்லாம எதுவும் சொல்லமாட்டம்மா, என் பொண்ணு வாழ்க்கைக்காக இதைக்கூடச் செய்ய மாட்டனாமா??!!"
"நான் சொல்றது உங்களுக்காகவும், நீங்க உயிரா நினைக்கற கடைக்காகவும்தான்பா. லோக்கல்ல எனக்குப் பிடிச்ச மாதிரி நல்ல பையனா, உங்களையும், கடையையும் பார்த்துக்க அனுமதிக்கிற பையன் தேவாவ விட்டா வேற யாருமில்லப்பா அதான்"
"நீ எப்பவும் போலக் கடை வேலையையும், கட்டிட வேலையையும் கவனி, நான் எது நடந்தாலும் நிதானமா பேசிட்டு வரேன்" என்றவர் கிளம்பினார்…
கடையில் மாட்டப்பட்டிருந்த தன் அம்மா போட்டோவின் முன் நின்ற நாச்சியாவின் கண்களில் தானாகக் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. அக்கா என்ற வாசுவின் குரல் கேட்க, மறைவாய் கண்ணீரைத் துடைத்தவள். அவன் கடைக்குள் வர வழியை விட்டாள்….
தேவா வீட்டு வாசற்படியில் நின்ற சண்முகம் தயக்கத்தோடு காலிங்பெல்லை அழுத்தினார்!
கதவைத்திறந்த உமா ஆச்சரியத்தோடு வாங்கப்பா உள்ள வாங்க என்று அழைத்துபோய்ச் சோபாவில் அமர வைத்து, மீனாட்சியிடம் விபரத்தை சொல்ல. மீனாட்சி வாங்கனு வரவேற்றுத் தண்ணீர் கொடுத்தாள். உள்ளே போய் ரூமிற்குள் இருந்த சந்திரசேகரை அழைத்து வந்தாள் உமா!
சந்திரசேகரை பார்த்ததும் எழுந்து நின்ற சண்முகம் வணக்கம் சொல்ல, பதிலுக்கு வணக்கம் சொன்ன சந்திரசேகர் சண்முகத்தை உட்காரச் சொன்னார்!
"ம் சொல்லுங்க மளிகைக்கடைக்காரரே என்ன விசயமா வந்திருக்கிங்க?" என்ற சந்திரசேகரின் பேச்சில் அசட்டை அதிகமாவே இருந்தது!
"நம்ம பொண்ணு தம்பி கல்யாணம் சம்பந்தமா பேச வந்தங்க ஐயா" என்றார் பணிவாகவே சண்முகம்!
"ம் சரி சொல்லுங்க"
"எனக்கு ஒரே பொண்ணுங்க அம்மா கிடையாது. சொந்த வீடு இருக்கு, வீட்டைச்சுத்தி ரெண்டு வீடுக்கட்ட இடமும் இருக்கு. பேங்க்ல இருவது இலட்ச ரூவா பணமும், ஒரு ஐம்பது சவரன் நகையும் இருக்கு"
"ம்"
"பொண்ணு தம்பியவிடப் படிப்புல கம்மிதாங்க ஆனா வீட்டை பொறுப்பா பார்த்துக்குங்க. என் மனைவி தவறினதும் வீட்டோட சோ்த்து கடைனு மொத்தத்தையும் பொண்ணுதாங்க பொறுப்பா பார்த்துக்குது. சம்பாத்தியம் பண்ணத் தெரிஞ்ச பொண்ணுங்க"
"அதான் நானும் கேட்கறன் இப்படி ஒரு பொண்ணுக்கு பத்துப் பைசா கூடச் சம்பாதிக்காத என் பையனை ஏன் கட்டி வைக்கனும்னு நிக்கறிங்க?"
"பொண்ணுக்குப் புடிச்சிருக்கு, பையன் நல்ல பையன் அதான்"
"அதாவது வீட்டோட மாப்பிள்ளையா தண்டமாய்க் கிடக்கட்டும் வருமானத்தை நாங்க பார்த்துக்கிறோம். எம் பொண்ணுக்கு அடிமையா இருக்கனும்னு சொல்ல வரிங்க அதனா"
"ஐய்யய்யோ அப்படிலாம் இல்லைங்க…. தம்பி தொழிலுக்கு ஏதாவது சொல்லுங்க பண்ணிடலாம். சேலம் சொந்த ஊருல நிலமும் இருக்குங்க"னு சண்முகம் முடிந்த அளவு தன்மையா பேசினார்…
"ம்"
" நீங்க என்ன எதிர்பார்க்கறிங்கனு சொன்னிங்கனா சக்திக்கு மீறியாவது செஞ்சிடறேன். எப்படியாவது ரெண்டு வீட்டு சம்மதத்தோட கல்யாணம் நடந்தா போதுங்க"
"நான் எதிர்ப்பார்க்கறத உங்களால செய்ய முடியாது"
"சொன்னாதாங்க முடியுமா?? முடியாதானு ?? தெரியும் சொல்லுங்க"
"உங்களால சாதி மாற முடியுமா"னு சந்திரசேகர் கேட்க பதிலில்லாமல் சண்முகம் உட்கார்ந்து இருக்க, இடையில் டீயைக் கொண்டுவந்து நீட்டி சூழ்நிலையைச் சகஜமாக்க முயன்றாள் மீனாட்சி. விருப்பமே இல்லாமல் அந்த டீயைக் குடிக்க ஆரம்பித்தார் சண்முகம்!
அப்பதான் எழுந்து வந்த ரேகாவுக்குச் சண்முகம் ஹால் சோபாவில் அமர்ந்து டீ குடிப்பது அதிர்ச்சியைத் தந்தது ஒருவேளை சமாதானம் ஆகிட்டாங்களோனு….
பரபரப்பாய் முகம் கூடக் கழுவாமல் நடக்கறத பாக்க சோபாவில் வந்து பொத்தென்று உட்கார்ந்தாள் ரேகா. சந்திரசேகர் முறைத்தும் கூட அதைக் கண்டுக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்த ரேகா அரைகுறை பெண்ணியம் பேசறதும் போய் டிவி சீரியல் வில்லி மாதிரி நடந்துக்கொள்ள ஆரம்பித்திருந்தாள் சந்துருவின் ஆட்டுவித்தலால்!
"ஐயா நீங்க சொன்னதை என்னால செய்ய முடியாது. பையனும் பொண்ணும் விரும்பறாங்க. பையன் நல்ல பையன் படிச்சவன் நாளைக்கு வெளிய வேலைக்குப் போனாலும் பத்தாயிரம் சம்பாதிக்கத் துப்பு இருக்கப் பையன்.
ஒரு அப்பனா இவங்க காதலை ஏற்றுக் கல்யாணம் செய்து வைக்கறது என் கடமை அதனால இந்தக் கல்யாணத்தை நான் நடத்திதான் வைக்கனும் வர முகூர்த்தம் ஏதாவது ஒன்னுல"னு சண்முகம் சொல்ல இதற்காகவே காத்திருந்த ரேகா பாய ஆரம்பித்தாள்….
"பார்த்தா வயசான ஆள் மாதிரி இருக்கச் சொந்த புள்ளைக்கே மாமா வேலை பாக்க போறியா வெட்கமாயில்ல"னு அவ பேசியதும் எல்லாரும் அதிர்ச்சி ஆனார்கள். ஆனா சண்முகம் நிதானமாய் இருந்தார்.
"என் பொண்ணு புத்திசாலிமா…. வரப்பவே உன் கூடப் பேசவே கூடாதுனு சொல்லித்தான் அனுப்பினா... நீ பேசின வார்த்தைக்கு ரொம்ப நன்றி. நான் கிளம்பறேன் எல்லாத்துக்கும் சொல்லிக்கறேனு எழுந்து நடந்த சண்முகம் நின்றார்….
"எனக்குக் குடுத்த டீ நீங்க போட்டதுங்களாமா?" மீனாட்சியைச் சண்முகம் கேட்க….
மீனாட்சி ஆமாம் என்று தலையாட்ட,
"அந்தப் பால் என் கடையில வாங்கினதுமா" என்றவர் அந்த வீட்டை விட்டு வேகமாய் வெளியேறினார் சண்முகம்!....\
----தொடரும்----

ரொம்ப நல்லா இருக்கு நல்ல ஒரு ரைட்டரா மாறிட்டு வரைங்க இதை அப்படி பத்திரிக்கைகளுக்கும் அனுப்புங்க மெய்னா ராணி முத்து
ReplyDeleteகண்மணிக்கு அனுப்புங்க