anti - piracy

Post Page Advertisement [Top]

மெல்ல திறந்தது மனது (ஆதன்-னின்)
                                                                         
                                                                   

அத்தியாயம் 29 

முதலிரவுக்குக் குறிக்கப்பட்ட நேரத்திற்கு, கடிகாரத்தில் மணி காட்டும் முள், முள்ளாய் புது ஜோடிகளை வருத்தியப்படி நத்தையாய் நகர்ந்தது!

தேவாவும், நச்சியாவும் யாருடன் பேசிக்கொண்டிருந்தாலும், அவர்கள் இவர்களிடம் பேசினாலும் நினைவென்னவோ நடந்தேற போகும் நிகழ்வின் மீதே படர்ந்திருந்தது!

மணி இரவு ஒன்பதை தொட்டிருக்க முதலிரவு அறைக்குள் மாப்பிள்ளை தேவா போக, அடுத்தக் கால் மணி நேரத்தில் உறவுக்காரப் பெண்களின் கேலி பேச்சோடு நாச்சியா அறைக்குள் நுழைந்தாள்…..

அதுவரை இயல்பாய் இருந்த தேவாவுக்கு அறைக்குள் நாச்சியா வந்து தாழிட்டதும் படபடப்புப் பற்றிக்கொண்டது.

"தேவா" என்ற நாச்சியாவின் குரலின் சுதி தேவா அவளிடம் என்றுமே கேட்காத விதத்தில் இருந்தது…..

"என்ன என்றான்" தொண்டை வறண்ட குரலில் தேவா….

"கொஞ்சம் கண்ண மூடிக்கிறியா" என்று நாச்சியா கேட்க, புதியவர்களின் கைகளுக்கு மாறிய குழந்தையாய் தேவா முழிக்க, நாச்சியாவுக்குச் சிரிப்பு வந்து விட்டது!

"ஹே மேன் நகை புடவைலாம் கழட்டிட்டு நைட்டிக்கு மாறனும் அதான் பட் எனக்கொன்னும் பிரச்சினை இல்லை நீ கண்ணை அகலமா கூடத் திறந்து வைச்சுக்கோ" என்ற நாச்சியா நகைகளைக் கழட்டி வைக்க ஆரம்பித்தவள் நைட்டிக்கும் மாற, அவள் தந்த தைரியம், உரிமை அன்யோன்யத்தைத் தேவாவுக்கு வரவழித்திருந்தது…..

"ம் எல்லாம் முடிஞ்சது" என்றவள் சாதரணமாய் அவனை உரசியப்படி படுக்கையில் அமர, இப்பொழுது அவனின் படபடப்புப் போய்ப் பரவசம் உடலில் உருவாக ஆரம்பித்திருந்தது…..

"நம்ம எதிர்காலம்" அப்படினு தேவா பேச ஆரம்பிக்க,

"அது இந்த ரூம் போலப் பிரகாசமாத்தான் இருக்கு" என்றவள் சிரித்தப்படியே விளைக்கை அணைக்கப் புதிதாய் தேவா அவள் மடியில் பிறந்திருந்தான்…. அவனின் அருகாமையால் அவள் மலர்ந்திருந்தாள்…… காமதேவன் தன் வாசத்தால் அறையை நிறைத்திருக்க, வார்த்தைகள் அற்றுத் தங்கள் வசத்தை இருவரும் இழந்திருந்தார்கள்……

அவன் விரல்கள் அவளின் உடலை அளக்க, அவளது விரல்கள் வேலையற்று முதலில் மெத்தையில் ஊர்ந்து பிறகு அவன் உடலோட ஊர்ந்து ஊர்வலம் போக ஆரம்பித்தது!

இதழ்களென்ன இளக்காரமானதா? அவைகள் கலந்து உறவாட, ஏன், எதற்காக என்ற காரணமின்றி இரு உடல்களும் புரள, உணர்ச்சியின் உச்சத்தில் உடல்கள் இரண்டும் ஒன்றாக உயிர்களும் ஒன்றாக, முதல் நாளிலேயே தன் பாடத்தில் தேர்ச்சி பெற்றுவிட்ட மாணவர்களை வாழ்த்திவிட்டு காமத்தேவன் விடைபெற, இரு உயிர்களும் வியர்த்தாலும் விலகாமல் இறுக்கிக் கிடக்கக் காதல் இருவரின் மனதை நிறைக்க ஆரம்பித்ததிருந்தது…….

"ஏன்டா டேய்" என்று நாச்சியா காதல் மொழியில் திட்ட,

"என்னவாம் கோதைக்கு?! என்ற தேவாவின் குரல் ஒலித்த விதம், அவனுக்குள் அவள் ஊறி இருந்த விதத்தையும், அவன் இயல்பாகி நாச்சியாவிடம் அன்யோன்யமாக ஆகிவிட்டான் என்பதை உணர்த்தியது!

"காலையில் நீதான்டா தாலிக்கொடிய கழுத்துல மாட்டின?"

"ஆமா நானேதான்"

"இப்ப எங்கடா கழட்டி வீசின?" என்று நாச்சியா கேட்கவும்தான் ஞாபகம் வந்தவன் தாலிக்கொடியைத் தேட விளைக்கை போட,

"அடச்சீ " என்றவள் கட்டில் மூலையில் கிடந்த நைட்டியால் அரைகுறையாய் உடலை மறைக்க,

"இந்த ரூமை போல இப்ப நீயும் பிரகாசமாத்தான் இருக்கக் கோதை" என்றவனின் கைகள் தாலிக்கொடியை தேடி எடுத்து அவளது கழுத்தில் மாட்டிவிட்டு, அவள் தலை உச்சியில் ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு, அவளது மடியில் அப்படியே படுத்தான்…..

"டே லைட்ட ஆஃ பண்ணிடுடா" என்று நாச்சியா சிணுங்க,

"மறுபடியுமா" என்று கேலியாய் அப்பாவியாய் தேவா கேட்க, நாச்சியாவே எட்டி விளக்கை அணைக்க, தேவா இறுக்கி நாச்சியாவை அணைக்க ஆரம்பித்தான்……

கலந்து, களித்து, களைத்து இப்படியாகத் தொடர்ந்து விடியலுக்கு முன் அந்த ஜோடிகள் மனம் கிறங்க உறங்கியது!!!

அடுத்தநாள் பொழுது விடிய,

எழ எத்தனித்த நாச்சியாவை தேவா இறுக்கி பிடித்து மீண்டும் தூக்கத்திற்குத் தயாராக, நாச்சியா இருடா வரேன் என்று குளியலறைக்குள் நுழைந்தாள்…அறையில் கடிகாரம் இல்லாததால் நாச்சியாவுக்கு மணி தெரியாததால் பாத்ரூமிலிருந்து வெளிவந்தவள் தேவா மொபைலில் மணி பார்க்க 11.10 மணி காட்ட தூக்கி வாரிப்போட்டது அவளுக்கு!

கீழ போனால் சொந்தக்கார பிசாசுங்க கேலிப் பண்ணியே காலி பண்ணியிருங்களேனு மனசுக்குள்ளயே யோசிச்சவள். தேவாவையும் சேர்த்து இதில் சிக்க வைக்கறதே சரி என்று முடிவு பண்ணி எழுப்பினாள்.

"டே தேவா எழுந்திரு அப்பா கூப்டறாரு எதுக்குனு தெரியல, நாளைக்கு ரிசப்சன் சம்பந்தமா இருக்கும்"னு நாச்சியா சொல்ல,

"ஏன் கோதை காலையிலயே"னு செல்லமாய்ச் சலிச்சிக்கிட்டவன் பாத்ரூம் போய் ப்ரஷ் ஆயிட்டு கீழ இறங்கத் தயாரானான். கீழ போய்ச் சொந்தக்காரங்க முன்னால் நிற்கிற வரை மணி என்னனு நாச்சியா தேவாக்கிட்ட சொல்லவே இல்ல…….

"என்ன மாப்ள காலையில காபி குடிக்க அத்தனை முறை கதவைத் தட்டியும் திறக்கல? சரி சரி அலுப்பா இருந்திருக்கும் இந்தாங்க காபி"னு ஒருத்தி காபிய நீட்டி ஆரம்பிக்கக் கேலி களைக்கட்டத் தொடங்கியது! தேவாவின் தயவால் நாச்சியா தப்பித்திருந்தாள்!

அந்த நாள் விருந்து, கேலி, என ஜாலியாக நகர. அன்றைய இரவு புது ஜோடிகளுக்கும் இப்படியே நகர அடுத்தநாள் ரிசப்சனும் வந்தது…

பத்திரிக்கை கிடைத்த அத்தனை பேருமே வந்திருந்தார்கள் என்றுதான் சொல்லனும். நல்ல கூட்டம். சிறியதும் பெரியதுமாய்ப் பரிசு பொருட்கள் நிறைய ஆரம்பித்தது. சண்முகத்தின் மனதை போலவே!

மீனாட்சியும், சண்முகமும் வந்தவர்களை வரவேற்க, உமா, விக்கி மேடையில் மணமக்களோடு இருக்க, விருந்தை சமையல் டீமில் இருப்பவர்கள் கவனிக்க ரிசப்சன் நல்லபடியாய் முடியும் நேரத்தை நெருங்கும் வரையிலும் ரேகா வரவே இல்லை!

கல்யாணத்திற்கு வந்தவள் ஏன் ரிசப்சனுக்கு வரவில்லை என்ற கேள்வி நிறையபேர் மனதில் ஓடியது!

இடையில் ஏன் வேதாளம் மீண்டும் முறுங்கை மரம் ஏறியது என்பதை வேதாளமே சொல்லும் போதுதான் தெரியும்!

இதற்கு நடுவே விக்கி அப்பா முருகேசனுக்கு அடுத்த நாள் காலையில் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலையைக் கொடுத்திருந்தான் தேவா!..

அத்தியாயம் 30 

ரிசப்சன் முடிந்த மறுநாள் விக்கியின் அப்பா முருகேசன் தேவாவின் அப்பா சந்திரசேகரின் முன்னால் அமா்ந்திருந்தாா்!

"அப்புறம் தொழிலெல்லாம் எப்படிப் போகுதுங்க"னு முருகேகசனை சந்திரசேகர் கேட்க,

"தொழிலெல்லாம் பிரச்சினை இல்லாம போகுதுங்க, ஒரு விசயமா உங்கக்கிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்" என்று நேரடியாக விசயத்திற்கு வந்தார்.

மீனாட்சியைக் காபி கொண்டுவரச் சொன்ன சந்திரசேகர் தொடர்ந்தார்…

"ம் பேசலாம் சொல்லுங்க முருகேசன்"

"நம்ம ரெண்டு பசங்களால நம்ம குடும்பங்களுக்குள்ள நல்ல நெருக்கம் இருக்கு. அந்த உரிமையில பேசலாம்னு நினைக்கிறேன்"

"தாராளமா நீங்க பேசலாம் சொல்லுங்க"

" தேவா ஒரு வேலைக்குப் போற வரைக்கும் உங்க கூட இங்க வீட்ல இருக்கறதுதான் உங்களுக்கு மரியாதை. இல்லனா அது வேற மாதிரி போய்டும்"னு முருகேசன் சொல்ல, மீனாட்சி காபி கொண்டுவந்து கொடுத்திட்டு, பேச்சுவார்த்தைய கவனிக்க ஆர்வமாக நின்றாள். பேசறது பெத்த பையன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாச்சே!

" இதுல என் கெளரவத்துக்கும் மரியாதையாதைக்கும் என்ன குறைச்சல் வரும்னு சொல்றிங்க முருகேசன்"

"காசு, பணம், கவர்மெண்ட் வேலைனு எல்லா இருந்தும். சொந்த பையனை பக்கத்து வீதியில வீட்டோட மாப்பிள்ளையா விட்டுட்டாரு தாசில்தாருனு கெட்ட பேர் வரும்"னு முருகேசன் நிறுத்த, சந்திரசேகர் யோசிக்க ஆரம்பிக்க. ரேகா வந்தாள்….

"அங்கிள் அவன் அப்பாவ மதிக்காம பண்ணினதை மன்னிக்கச் சொல்றிங்களா" என்ற ரேகாவை எரித்து விடுவதைப் போல் பார்த்தாள் மீனாட்சி…

"ஏம்மா தேவா எங்க அப்பாவ மதிக்காம நடந்துக்கிட்டான். சாதி விசயத்துல மட்டும் தேவா ஒத்துக்கல, இதை வெளிய சொன்னா அப்பாவுக்குத்தான் சிக்கல். நீதான் நாலும் பேசற பொண்ணாச்சேமா சாதியை ஆதரிக்கறியா நீ" என்று கொஞ்சம் கடுமையாவே ஆனால் வலிக்காத மாதிரி பேசினார் முருகேசன். இந்தக் கல்யாணத்துல ரேகா நடந்துக்கிட்ட விதம், அவள் எண்ணம் பற்றி விக்கி ஏற்கனவே முருகேசனிடம் சொல்லி இருந்தான்!

"நான் சாதியை ஆதரிக்கல அங்கிள் ஆனா அந்தப் பொண்ணோட கேரக்டர் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது. அவ சம்பாதிக்கிற திமிர் பிடிச்சவ அங்கிள்"

"சரிமா நீ சொல்றது மாதிரியே அந்தப் பொண்ணு இருக்கட்டும். தேவா ஒரு வேலைக்குப் போற வரை இங்க வீட்ல இருக்கறதுல உனக்கென்னமா பிரச்சினை? இது அப்பா கெளரவம் சம்பந்தப்பட்ட விசயம்மா, இதுல நீ அமைதியா இருக்கறதே அப்பாவுக்கு நல்லது"னு நறுக்குனு ரேகாவுக்குச் செக் வைத்தார் முருகேசன்!

"என்னதான் பண்ணனும் நான்" என்று சந்திரசேகர் சலிப்பாய் கேட்க…..

"தேவா நாச்சியாவை நீங்க வீட்டுக்கு கூப்பிட்டனும்" என்றார் முருகேசன்….

"நான் கூப்டதா மீனாட்சியைக் கூப்பிடச் சொல்றன்" என்று சந்திர சேகர் சொல்ல.

"அது முறையா இருக்காதுங்க. பொண்ணோட அப்பா கல்யாணம், ரிசப்சன்னு அவர் கெளரவத்துக்குச் செஞ்சிட்டாரு, நீங்க குடும்பத்தோட போய்ப் பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சிட்டு வரதுதான் உங்களுக்குக் கெளரவம்"னு பாயிண்ட்ட வைச்சாரு முருகேசன்!

மீண்டும் யோசிக்க ஆரம்பித்த சந்திரசேகர் " சரி நான் குடும்பத்தோட போய் அழைச்சிக்கிட்டு வரன். ஆனா அவனுக்கு வேலை கிடைக்கற வரைதான் வைச்சிருபேன்"னு சொல்ல முருகேசனுக்கும், மீனாட்சிக்கும் அப்பாடானு இருந்தது!

"இதைத்தான் நானும் சொல்றேன். நான் வந்த வேலை நல்லபடியா முடிஞ்சது"னு முருகேசன் கிளம்ப, ஆபிஸ் முடிந்து ஆறு மணிக்கு மேல வரதா தேவாக்கிட்ட சொல்லிடச் சொன்ன சண்முகம் ஆபிசிற்குக் கிளம்பத் தயாரானார்!

சந்தோசத்துல இருந்து மீனாட்சி உமாவ தேவாவுக்குப் போன் போட்டுத்தரச் சொல்ல. உமா தந்தாள்…..

"ஹலோ சொல்லு உமா"

"நான் அம்மா பேசறன்டா தேவா" என்ற மீனாட்சியின் குரலிருந்த சந்தோசம் தேவாவுக்குப் போன் வழியாகவே தெரிந்தது!

"என்னம்மா ரொம்பச் சந்தோசமா இருக்கிங்க போல"னு தேவா கேட்க,

"ஆமாடா தேவா உங்களை அப்பா நம்ம வீட்ல இருக்கச் சம்மதிச்சிட்டாரு, அதுமட்டுமில்ல அவரே உங்கள அழைக்க நேர்லயும் வராறாம்!"னு மீனாட்சி சந்தோசத்தில் வார்த்தைகளைச் சடசடவென்று உதிர்த்தாள்!

" சரிம்மா" என்றான் ஒரே வார்த்தையில் தேவா!

"என்னடா ரொம்பச் சலிப்பா சொல்ற வர இஷ்டம் இல்லையா?"

"அம்மா இந்த ஐடியாவையும். அப்பாக்கிட்ட எப்படிப் பேசனும்னு முருகேன் மாமாகிட்ட சொல்லி அனுப்பினதே நான். உன் புருசனோட வீக் பாயிண்ட் என்னனு எனக்குத் தெரியாதாமா?" என்றான் சிரித்தப்படியே தேவா..,.

"என்னமோடா தேவா அமுக்கா இருந்துக்கிட்டே கல்யாணம் வரை எல்லாத்தையும் முடிச்சிட்ட, சரி இந்த விசயத்தை உன் பொண்டாட்டி. மாமனார்கிட்ட சொல்லிடு" என்று மீனாட்சி சொல்ல. சரிம்மா என்று போனை கட் செய்தான் தேவா……

காபி கொண்டுவந்த நாச்சியாவை பின்னால் இருந்து இறுக்கமா கட்டிப்பிடிச்ச தேவா சக்சஸ் என்று அவள் காதில் சொல்ல.

"அடிவிழும் எல்லாம் இராத்திரிக்குத்தான்" என்றாள் நாச்சியா!

"ஹே கோதை இன்னைக்கு நைட் எங்க வீட்ல என் ரூம்லாதான் எல்லாமே"னு தேவா அவள் காதுமடலை உதட்டால் மெலிதாய் கவ்வ சிலிர்த்த நாச்சியா,

"என்ன தேவா சொல்ற? என்றாள் கொஞ்சம் வருத்தத்தோடவே. அப்பாவையும் கடையையும் தற்காலிகமா பிரிவதைக்கூட அவளால் ஏற்க முடியல…..

"ஆமா நம்மள முறைப்படி அழைச்சிக்கிட்டு போக அப்பாவே ஈவ்னிங்கா வரார். இதை மாமாக்கிட்ட சொல்லிடு" என்றான் சந்தோசமாகத் தேவா!

மாலை நெருங்கி சூரியன் தலை சாய்ந்த வேளையில் சந்திரசேகர் தன் குடும்பத்தோடு முறைப்படி மரியாதைக்காகப் பொண்ணு மாப்பிள்ளையை அழைக்க வந்தார்…..

வந்தவர்களை வரவேற்று உபசரித்து வழியனுப்பி வைக்கும் நேரம் நெருங்கவும். நாச்சியா கண்ணிலும் கண்ணீர், சண்முகத்தின் கண்ணிலும் கண்ணீர்….

பிரிவு படலம் முடிந்து தேவா வீட்டார் பொண்ணு மாப்பிள்ளையோடு வீதியில் நடக்க,

"அழாத நாச்சியா நைட்லதான் நீ எங்க வீட்ல இருப்ப பகல்ல அப்பாவ, கடையைப் பார்த்துக்கோ எப்பவும் போல"னு தேவா சொல்ல, நாச்சியா கொஞ்சம் நிம்மதியானாள்….

ஆனால் சந்திரசேகருக்கும், ரேகாவுக்கும் தேவாவின் வார்த்தைகள் சுள்ளெனக் கோபத்தைத் தூண்டியது!

இனி புகுந்த வீட்டில் நாச்சியா சந்திக்கும் சவால்கள் என்ன? அவள் எப்படிச் சமாளிக்கிறாள் இல்லை சறுக்குகிறாள் என்பதை அடுத்தப் பாகத்தில் பார்ப்போம்!....

                                                                 ---தொடரும்---

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib