அமுதை கொள்ளைக்கொள்ளும் தேன்சிட்டு(08)
தீபாஸ்-ன்
அத்தியாயம் 08
மயில்வாகனம் மிதுலாவிடம் “நீ மொபைல் யூஸ் பண்ண வேண்டாம்ன்னு தானே நான் தரலை உனக்கு. யார் போன் இது? யார்கிட்ட
இருந்து கால் வருது..? அதை என் கிட்டக்கொடு” என்று கேட்டபடி அவளின் அறைக்குள் முன்னேறினார்.
அவர் உள்ளே வர வர பின்னால் எட்டு வைத்து பின்நோக்கி சென்றுக்கொண்டே மொபைல்
வைத்திருந்த கையையும் தனக்கு பின்னால் வைத்து நகர்ந்தவள் .”இது.....இது வந்துப்பா
யாஷியோது . அவளுக்குத் தான்... போன்... அவ... அவ... வீட்டில இருந்து.!” என்றவள். “யாஷி
இந்தா உன் மொபைல்” என்று அவளிடம் நீட்டினாள். தன்னிடம் இருக்கும் மொபைலைப் பறித்து
அதில் வந்துகொண்டிருக்கும் விமலின் அழைப்பைத் தனது அப்பா அட்டன் பண்ணிட கூடாது
என்ற பதட்டத்தில்.
ஆனால் அதை யாஷி எட்டி வாங்குவதற்குள் நீண்ட எட்டு வைத்து நீட்டிய அவள்
கையில் இருந்த மொபைலை மயில்வாகனம் பறித்துவிட்டார். அவர் பறிக்கவும் விமலிடம்
இருந்து வந்த அழைப்பு கட் ஆகவும் நேரம் சரியாக இருந்தது..
அப்பாடா என்று மிதுலா நிம்மதி மூச்சு எடுத்த மறுநொடி திரும்பவும் போனில்
அழைப்பு விமலிடம் இருந்து வந்தது.
அழைப்பை ஏற்றுக் காதிற்கு கொடுத்த மயில் வாகனத்திடம் விமல் பேசினான் “யாஷிகா நான் அட்டன் பண்றதுக்குள்ள கட் ஆகிடுச்சு.
மிதுலா வீட்டில் தானே இருக்கீங்க” என்றுக் கேட்டான்.
அவன் கேட்டதும் மயில்வாகனம் கோபமானக் குரலில் “என் மக மிதுலா கூட போன்லையோ
நேர்லையோ பேசணும்னு நினைக்கிறது இதுவே
கடைசியா இருக்கனும், அவளுக்கு நான் வேற இடத்தில் சம்மந்தம் பேசி
முடிச்சிட்டேன். இதுக்கும் மேல அவக்கூடப் பேச நினைச்சு ஏதாவது பண்ணுன விளைவுகள் உனக்கு மோசமா இருக்கும்“ என்று
சொல்லிவிட்டு மொபைல் இணைப்பைத் துண்டித்தார்.
அதிர்ச்சியுடன் அவரை பார்த்துகொண்டிருந்த மிதுலாவின் கன்னத்தில் பட்டென்று
ஓர் அறை கொடுத்தார்.. மிதுலாவுக்கு கிடைத்த அடி, தனக்கு கிடைக்க வேண்டியது என்பதனை
தன்னை உக்கிரமாகப் பார்த்த மயில் வாகனத்தின் முறைப்பிலேயே உணர்ந்து கொண்டாள்
யாஷிகா.
அவர் கையில் இருந்த தனது மொபைலை கூட வாங்காமல் தனது பேக்குடன் அந்த ரூம்
விட்டு வெளியேற போன யாஷிகாவிடம் அவளது மொபைலை நீட்டினார்.
பயத்துடன் அதை கையில் வாங்கிய யாஷிகாவிடம். “இனி இங்க நீ வரக்கூடாது” எனக்
கூறினார்.
தனக்காக வந்த தனது நண்பி அவமானப்பட்டு போவதா..? என்ற ஆற்றாமையில்.
“அப்பா.....!” என்று தனது தந்தையை ஆட்சேபிக்கும் விதத்தில் குரல் கொடுத்தவள்.
“யாஷி ஸாரிடீ” என்று கூறினாள்.
அவளின் வார்த்தையில் யாஷிகாவின் மனதில் சற்றென்று ஒட்டிக்கொண்டிருந்த
படபடப்புடன் கூடிய இறுக்கம் தளர. “நான் ok” என்னும் விதமாக அவளை பார்த்து சிரித்தவள்,
கிளம்புறேன் என்னும் விதமாக தலை அசைத்து மயில்வாகனத்திடம் கைப்பற்றிய தனது
மொபைளுடன் வெளியேறினாள்.
அவள் போன மறுநொடி “காதல் கீதல்ன்னு ஓடிப்போய் என்னய ஊருக்குள்ள
அவமானபடுத்துன...! பெத்த மகன்னு கூட பார்க்காம கொன்னே போட்டுடுவேன்..!” என்று
மிதுலாவை பார்த்து கர்ஜித்தார்.
அவரின் மேல் பயம் இருந்தாலும் அதையும் மீறி வரவழைத்துக் கொண்ட தைரியத்தில்
“நான் விரும்புற விமலையே எனக்கு கல்யாணம் செய்துவச்சா எதுக்குப்பா ஓடிப்போகப்போறேன்”
என்று கூறிய மறுநொடி
ஆத்திரத்துடன் அவளை அடிக்க கை ஓங்கியவர் அவள் அரண்ட விழிகளுடன் பின்
வாங்குவதை கண்டு கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திகொண்டு “வேணாம் மிதுலா, என்னய மிருகமாக்காதே,
அவன் ஜாதி வேற..! நாம வேற, காதல் கத்தரிகாய் எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஆகாது,
நீ நினைக்கிறது நடக்காது. ஒழுங்கு மரியாதையா நான் சொல்றப் பையனை கல்யாணம் செய்ய
உன்னைத் தயார் படுத்திக்கோ” என்று கூறியபடி அவள் ரூமில் இருந்து வெளியேற போனவர்,
ரூமின் வாசலில் நின்று எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சுதாவை
பார்த்ததும் திரும்பி மிதுலாவை பார்த்து “இனி இவள்கிட்ட கேக்காம நீ எதுவும்
செய்யகூடாது” என்று கூறியவர்.
சுதாவிடம் ”வா...வந்து சாப்பாடு எடுத்து வை கடைக்குப் போகணும் நேரம் ஆச்சு”
என்று கூறி அவளுடன் அந்த இடத்தைவிட்டு அகன்றார்.
மிதுலாவிற்கு அவர் அறைந்த கன்னத்தை விட மனம் ரணமானது. தன்னுடைய காதல் வீடு
வரை தெரிஞ்சிருச்சு. இனி அப்பாவை கன்வீனியன்ஸ் பண்ணி விமலோட தனக்கு கல்யாணம்
நடக்குமா என்பது கேள்விக்குறியே?
விமல்கூடத் தான் என் வாழ்க்கைன்னு நான் முடிவு செய்துட்டேன். இத்தனைக்
காலம் அவனோடு பேசிப் பழகிய பின்னால வேறு
ஒருத்தர் கூட வாழ்வதை என்னால நினைச்சுக்
கூடப் பார்க்க முடியாது. விமல் நான் அவனுக்குக் கிடைக்க மாட்டேன்னு தெரிஞ்சா
உடைஞ்சு போயிடுவான்.
என்னோட சம்மதம் இல்லாம அப்பாவால வேறு ஒருத்தருக்கு கட்டாயபடுத்தி தாலிக்கட்ட
கழுத்தை கொடுக்க வைக்க முடியாது.
கல்யாணமேடை வரை வேறு ஒருத்தரை ஏமாற்றி கூட்டிட்டு போய் கடைசி நேரத்தில தப்பா
முடிவெடுக்கக் கூடாது. மாபிள்ளைன்னு என்னை பார்க்க யார் வந்தாலும் எனக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லைன்னும். விமலை தவிர
வேற யார் கூடவும் நான் மணவறையில் ஏறமாட்டேன்னு சபையில் சொல்லிடுவேன்னு அப்பா
கல்யானப்பேச்சை எடுக்கும்போதே சொல்லிடனும்..
ராஜித்தகிட்ட இப்போ மனசு விட்டு பேசணும் போல இருக்கு. ஆனால் அப்பா மொபைலைப்
பிடிங்கி வச்சுக்கிட்டார் இந்த கிழவி நான் மொட்டை மாடிக்கு போயி ராஜித்தைக்கூட பேசக்
கூடாதுன்றதுல கண்ணும் கருத்துமா இருக்கு ஆனாலும் என்னை மீறி எனக்கு எதுவும்
செய்துவிட முடியாது’ என்ற உறுதியுடன் இருந்தால் மிதுலா.
இவ்வாறாக இங்கு இருக்க மினிஸ்டர் வினோதனின் விசாரணையில் கனிஹாவை அவளின்
உடலுக்காக அவளின் ஸ்கூட்டியை பாதையில் ஆணிச் சட்டத்தை போட்டுப் பஞ்சர் செய்து, ஆளில்லா இடத்தில் தவிக்க விட்டு
தாங்கள் கொண்டுவந்திருந்த டெம்போவில் அவளை ஸ்கூட்டியுடன் கடத்தி கொண்டு போய்
அவர்களின் இச்சைக்கு இசையாத கனிஹாவை வன்புணர்வு செய்து கொன்ற காமுகர்களை அடையாளம்
கண்டுகொண்டார்.
அவர்களை டிராக் செய்து அரஸ்ட் செய்யும் படியும் உடனே கோர்டில் ஆஜர்
படுத்துவதற்கு உண்டான பார்முலாக்களையும் முன்பே ஏற்பாடு செய்து வைத்துகொள்ள
கமலேஷ்க்கு இன்பார்ம் செய்து அதன் பின் செய்ய வேண்டியதையும் சொல்லி வைத்தார்
மினிஸ்டர் வினோதன்.
அதன் படி அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அந்த நான்கு பேரும் அரஸ்ட்
செய்யப்பட்டனர் கமலேஷால்.
இதை கேள்விப்பட்ட அமுதனுள் ஓர் நெருடல். கோர்டில் அவர்களை ப்ரோசீட் செய்யபோவதைக் கேள்விப்பட்ட
அமுதனுக்கு மனதினுள் பல எண்ணங்களின் ஓட்டம்.
நார்த்
போலீஸ் ஸ்டேசனில் தானே இறந்த அந்த கனிஹாவின் கம்ப்ளைன்ட் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு.
இதில் எங்க இருந்து சவுத் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் கமலேஷ் ஆக்சன்ல வந்தான்..!. என்று யோசிக்கும் போது தெலங்கானாவின் கால்நடை பெண் மருத்துவா் கொலை, போலீஸ் என்கவுண்டர் முதலியன
நினைவுக்கு வர. கனிஹா கேசுடன் அந்த கேசை சம்பந்த்தப்படுத்திப் பார்த்தவனுக்குப்
புரிதல் உண்டானது.
எனவே சம்பவம் நடக்கப்போகும் இடத்துக்கு தானும்
மப்டியில் சென்று தான் நினைத்தது போல நடக்கும் சூழல் உள்ளதா எனப்பார்க்க
நினைத்தார். அவ்வாறு நடந்தால் பதில் வினையாக செய்யவேண்டியதை நினைத்துகொண்டே தனக்கு
அரசாங்கம் கொடுத்திருந்த ஜீப்பில் வீட்டைநோக்கி சென்றான் அமுதன்.
எப்பொழுதும் போல வீட்டுக் காம்பவுண்டுக்குள் ஜீப்பில்
வந்த இறங்கிப் படி ஏறும் போதே தனது
அம்மாவின் நடமாட்டமில்லாமல் இருப்பதைக் கண்டு யோசனையுடன் அவரது அறைகுச்சென்றான்.
மிதுலாவுடன் அன்று மொட்டை மாடியில் நடந்த
வாக்குவாதத்துக்குப் பின் அவள் தனது வீட்டுக்கு வரவே இல்லை, தனது அம்மாவுடன்
மொபைலில் கூடப் பேசவும் இல்லை. அந்த வருத்ததை தேவை இல்லாமல் தோளில் தூக்கிக்
கொண்டு, இந்த அம்மா ஸ்ட்ரெஸ்க்கு போய் ஹெல்த்இஸ்யூசை இழுத்துக் கொண்டாங்களோ என யோசனையுடனே ராஜேஸ்வரியின் அறையை நோக்கி எட்டு
வைத்தான்,.
அறைக்குள் நுழைந்த அமுதன் கண்ட காட்சியில் கலவரம்
ஆனான் தரையில் உணர்வில்லா நிலையில் விழுந்து கிடந்தார் ராஜேஸ்வரி அவரின் நெற்றிப்
பொட்டில் வேறு இரத்தம் கசிந்துகொண்டிருந்தது.
“ம்..மா...ம்..ஆ...”என்று தாயின் நிலைக்கண்டு கன்றாகச் சத்தமெழுப்பியப்பியபடி அவரைத் தன் கைகளில்
அள்ளியவன், பெட்டில் படுக்கவிட்டு வேகமாக அருகில் இருந்த டீபாயில் இருந்த தண்ணீரை
எடுத்து அவரின் முகத்தில் தெளித்தான்.
அதுவரை அவனது இதயம் பந்தயக் குதிரையின்
துடிப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அவர் மயங்கித்தான் விழுந்துகிடக்கிறார் என்ற விஷயம்
அவனுக்குப் புரிந்தது என்றாலும் அவனுக்கென்று இந்த உலகத்தில் இருக்கும் ஒரே ஒரு
ஜீவன். அவருக்கு ஏதாவது விபரீதம் என்று அவனால் நினைத்துகூட பார்க்க முடியாது.
கை நடுக்கத்துடன் வாய் ஓயாமல் “ம்...மா
ம்...ஆ....” என்று அவரை கூப்பிட்டுக் கொண்டே தண்ணீரை எடுத்து அவரது முகத்தில்
தெளிக்கும் போது அமுதனின் கண்களிலும் கண்ணீர் உற்பத்தியாகி அவரின் அன்னையின் மீது
உருண்டு விழுந்தது. அவனுக்கும் அழுகை வரும் என்று அவனின் விழி நீர் உணர்த்தியப்
பொழுது அது.
அவனின் சூடான கண்ணீர் ஸ்பரிசத்தில் உணர்வு
பெற்று கண்விழித்த ராஜேஸ்வரி மெல்லிய குரலில் “அம்மாவுக்கு ஒன்னுமில்லப்பா உன்னைய
ஒத்தையில் தவிக்கவிட்டுட்டு போகமாட்டேன்” என்று கூறினார்.
அவரின் வார்த்தைகள் கேட்டும் அவனின் இறுக்கம்
குறையவில்லை எழுந்துகொள்ள முயன்ற ராஜேஸ்வரியை “ம்...மா படுங்க, ஸ்ட்ரெயின்
பண்ணிக்காதீங்க” இதோ ஹாஸ்பிடலுக்கு போக கார் கொண்டுவரச் சொல்றேன்” என்றான்.
“எதுக்குப்பா?”என்று மெல்லிய குரலில்
பேசியவரின் வார்த்தை அவனின் முகம் காண்பித்த ஒருநொடி கோபத்தில் அடுத்த வார்த்தை
பேசாமல் கண்மூடி படுத்தார்.
அவர் கண் மூடவும் திரும்ப கலவரம் ஆனவன் “அம்மா...
மா.. என்னப் பண்ணுது” என்று பதறினான்.
அவனின் பதட்டம் உணர்ந்து மூடிய கண்ணை திறவாமலே
“ஒன்னுமில்லப்பா சும்மாதான் கண் மூடிப் படுத்திருக்கேன், என்னன்னு தெரியல கொஞ்சம்
மூச்சு வாங்குது” என்றார்.
அவர் அவ்வாறு கூறியதும் “ம்..மாஆ ரிலாக்ஸ்,
ரிலாக்ஸ். சரியாகிடும் சரியாகிடும்” என்று ஆறுதலாய் அவருக்காகவா தனக்காகாவோ சொல்லியவன் இதுவரை தனது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தாத
அரசாங்க ஜீப் டிரைவருக்கு போன் செய்தான்.
“முருகன் ஜீப்பை வாசலில் ரெடியா எடுத்து வைங்க
அம்மாவ ஹாஸ்பிடல் உடனேக் கூப்பிட்டுபோகனும்” என்றான்.
அவன் அவ்வாறுச் சொன்னதும் அவருக்கும் பதட்டம்
தொற்றிக்கொண்டது அவனுடன் சிலவருடங்கலாய் சாரதியாய் இணைந்திருப்பவர் அல்லவா அவனின்
தன்மை தெரிந்தவர். எமர்ஜென்சி என உணர்ந்துகொண்டார்.
கட்டிலில் கண் மூடிபடுத்திருந்த ராஜேஸ்வரியை
திரும்ப கைகளில் ஏந்தினார் அமுதன்.
தான் தூக்கப்படுவது உணர்ந்து கண் திறந்தவர் “இறக்கிவிட்டுப்
பிடிச்சுக்கோப்பா.., நடந்துடுவேன்” என்றார்.
“ம்..மா நீங்க ஸ்ட்ரெயின் பண்ணவேண்டாம்.
என்னாலத் தூக்கமுடியும்” எனக்கூறி கையில் ஏந்தியபடி வாசலுக்கு வந்தார்.
அவர் கைகளில் ஏந்தி வருவதை கண்டு டிரைவர்
முருகன் வேகமாக இறங்கி ஜீப்பில் ஏற்ற உதவி செய்ய கதவினை விரியத்திறந்துவைத்து “அம்மாவுக்கு
என்ன ஆச்சு சார்?” எனப் பதட்டமுடன் கேட்டார்.
“ஜீப்ல இருந்து இறங்கி வீட்டுக்குள்ளப் போறேன்..!
அம்மா மயங்கி விழுந்து கிடக்குறாங்க முருகன். நான் பார்த்து பதறித் தண்ணித்
தெளிச்சேன் கொஞ்சம் கான்சியஸ் வந்துருக்கு” என்றதும்.
“அச்சோ சார் எவ்வளவு நேரம் கிடந்தாங்களோ.! நல்லவேளை
கான்சியஸ் வந்துருக்கு, வண்டில ஏத்துங்க
சார் ஹாஸ்பிடல் போனாச் சரியாகிடும்” என
அவர் ஆறுதலாக கூறியபடி ஜீப்பின் பின்பக்கக் கதவைத்திறந்துவிட தனது அன்னையுடன் ஏறி அமுதன்
அமர்ந்ததும் டிரைவர் முருகன் டிரைவர்
சீட்டில் ஏறி ஸ்டார்ட் செய்தார்..
அவ்வேளையில் கமலேஷ் கோர்ட் கஸ்டடியில் இருந்து
அந்த நான்கு மிருகங்களையும் தன் லாபத்துக்காக கொன்று கொழிக்க எதுவோ சாகசம் பண்ணுவதுபோல
அக்யூஸ்டிடம் “நீங்க சாவடிச்ச கனிஹாவை என்னடா செஞ்சு கடத்துநீங்க..? அந்த ஸ்பாட்டுக்குத்தான்
போறோம் அங்க டெமோ காமிங்க” என்றுச் சொல்லியபடி கூட்டிச்சென்றவன், மினிஸ்டர் விவேகனின்
ஆட்கள் சிலரையும் அந்த இடத்தக்கு வரவைத்து இக்கைதிகளுக்கு சிக்னல் குடுத்து தப்பிக்குமாறு
தூண்டிவிடச் சொன்னான்.
அவர்கள் நினைத்தது போல விஷயங்கள் அரங்கேறத்
துவங்கியது. இதோ மூன்று வெறிநாய்களை சுயநலக் குள்ளநரிக்கூட்டம் ஒன்று வேட்டையாடத்துவங்கி
கொன்று குவித்து எக்காளமிட்டது.
துப்பாக்கிச் சத்தத்தின் எதிரொலி அன்று இரவே
மக்களிடம் உண்டாக ஆரம்பித்தது. நரிகள் நினைத்ததுப்போலவே சூரசம்ஹாரம் செய்தது போன்ற
பெருமை கமலேசுக்கு வரும்படி மண்ணின் மைந்தர்களிடம் மீடியா செய்திகள் என்ற பெயரில்
விதைக்க முயற்சி ஆரம்பமானது.
அங்கு ஹாஸ்பிடலில் ராஜேஸ்வரியை செக் செய்த
டாக்டர் அமுதனைத்தான் குற்றம் சொல்லிகொண்டிருந்தார்.
“அமுதன், கஞ்சியை உங்கப் போலீஸ் உடுப்புக்கு
மட்டும் போடுங்க. உங்களுக்கு போட்டதுபோல ஆண்ட்டி கிட்டயும் வெறப்பா நிக்காதீங்க”
என்றார் வகுளா.
அவள் தன்னை மரியாதையாக “வாங்கப், போங்க,,”
என்று பேசுவதை என்றும் போல இன்றும் அமுதானால் சகிக்க முடியலை. ஆனால் அவளை அவ்வாறு
அழைக்க நிற்பந்தப்படுத்தியதே தான் தானே என்று மனதினுள் நினைத்தவன்
“நான் என்ன செஞ்சேன் டாக்...டர், அவங்களுக்குத்தேவையான
எல்லா வசதியும் வீட்டிடல அரேஞ் பண்ணியிருக்கேன்” அவங்களை எந்த வேலையும்
செய்யக்கூடாதுன்னு எல்லாத்துக்கும் ஆள் போட்டிருக்கேன் “ என்று சொல்லி
முடிப்பதற்குள்.
“ஆமா...ஆமா...இதெல்லாம் செஞ்சா மட்டும் போதுமா..?
அவங்க மனசப்புரிஞ்சு அவங்க ஆசைப்படுறதை செஞ்சீங்களா? உங்களுக்கு எங்க மனசப்பத்தித்
தெரியப்போகுது. அடுத்தவங்க பீலிங்ஸ் புரிஞ்சுக்கிற ஆளா நீங்க.
வீட்டில வேலைகாரங்க எத்தனைபேர் இருந்தாலும்
அவங்க துணை ஆகிட முடியுமா..? அவங்க மயங்கி விழுந்த ஒரு ஐந்து நிமிசத்துல நீங்க
வீட்டுக்குப் போனதால இப்போ ரிஸ்க் பெருசாகல. வீட்டில மருமக பேரப்புள்ளைங்கன்னு
இருக்கனும்ற அவங்க ஆசையை நிறைவேத்தப்பாருங்க” என்றார்.
“என்ன வகுளா நீயேப் புரிஞ்சுக்காமப் பேசுற”
என்று கூறியவனை குனிந்து ப்ரிஸ்கிரிப்சனில் எழுதிகொண்டிருன்தவள் தனது கண்களைச்
சரேல் என்று மேல்நோக்கி உயர்த்தி அமுதனைப்
பார்த்தாள்.
அவளின் பார்வையிலேயே தான் ஒருமையில் அவளைக்
கூறிவிட்டோம் என்பதை புரிந்து மறுநொடி “சாரி டாக்டர், இனி இந்த தப்பு நடக்காது”
என்று கூறினான்.
அவன் அவ்வாறுச் சொன்னதும் ஓர் நீண்ட மூச்சை எடுத்து
தன்னை இலகுவாக்கிகொண்டவள் “ம்.... ஏதோ சொல்ல வந்து நிப்பாட்டியாச்சு சொல்லு....ங்க
அமுதன்” எனக் கூறினாள்.
“வகுளா இப்போ உங்களுக்கு கல்யாணமாகி ஒரு
குடும்பம் இருக்கு நம்மளோட நட்பு எந்த வகையிலும் அதைப் பாதிக்கக் கூடாதுன்னு நான்
நினைக்கிறேன்” என்றுக் கூறிக்கொண்டுப் போனவனை.
“ஸ்டாப்பிட் மிஸ்டர் அமுதன், இப்போ என்கிட்ட
வந்துருக்கிற பேசன்டோட அட்டண்டர் நீங்க. அதை மட்டும் பேசுவோம்” என்றுக் கடு கடுவென
முகத்தை வைத்தபடி சொன்னவள்.
“ஆண்ட்டிக்கு டிரிப் போட்டுருக்கு..
அவங்களுக்கு எப்பவும் வருறது போல இந்த தடவை வந்திருக்கும் மயக்கமும் சரியா
போயிடும்னு நீங்க நெனைக்காதீங்க. அவங்க ஹார்ட் ரொம்ப வீக்காகிடுச்சு. மருந்து
மாத்திரையால எல்லாம் டிரீட் பண்ற ஸ்டேஜை கடந்துட்டாங்க. முடிஞ்சவரை அவங்க கூட
இருந்து சந்தோசமா பார்த்துக்கோங்க. அவங்களை ஒரு நாள் இங்க ஹாஸ்பிடலில் தங்கச்
சொன்னேன். ஆனா அவங்க வீட்டுக்குப் போறேன் என் வீட்டுக்குப் போனாலே எனக்கு
சரியாகிடும் ஹாஸ்பிடல் அட்மாய்ஸ்பியர் என்ன ரொம்ப சிக் ஆக்கிடும்னு சொல்றதால வீட்டுக்கு
அனுப்புறேன்னு சொல்லிட்டேன். சலைன் பாட்டில் இன்னும் பத்து நிமிசத்தில்
காலியாகிடும். இந்தாங்க பிரிஸ்கிரிப்சன் .
இதுல இருக்கிற மாத்திரைய கொடுங்க முடிஞ்ச அளவு அவங்க ஹெல்த்துக்கு சப்போர்ட்
கொடுக்க பாப்போம்” என்று அவனிடம் நீ போகலாம் என்னும் விதமாக அந்த ரிசிப்டை
நீட்டினார் மருத்துவர் வகுளா.
தொடரும்

No comments:
Post a Comment