anti - piracy

Post Page Advertisement [Top]

                             மெளனத்தை மொழிபெயர்த்த மாயோள் (தீபாஸ்)

                                                     

                                 

WhatsApp%20Image%202022-04-13%20at%2010.07.53%20PM

அத்தியாயம் 05

தடாகனின் அந்த சிறியதான ரம்யமான பீச் ஹவுஸில் கடல் பார்த்து இருந்த அந்த மாடிப் பால்கனியில் போட்டிருந்த கலைநயமான மூங்கில் கூடை சேர்களில் அவனும் எஸ்.எம்.ஜி மருத்துவமனையின் பெரும்பான்மை பங்குகளின் உரிமையாளரும் முன்னால் மந்திரியின் மகனும் தொழிலதிபருமான விஷாகனும் அமர்ந்திருந்தனர்.

இருவருக்கும் இடையில் இருந்த கண்ணாடியாலான டீபாயில் ஒரு தட்டில் வறுத்த முந்திரியும், காபி குடித்துவிட்டு வைத்திருந்த குவளைகளும் இருந்தது.

“தடாகன் அப்போ எங்க ப்ராஜெக்டை சி.வி.ஐகுரூப்பின் ஸ்கை டவர் பில்டர்ஸ்கிட்டையே   குடுக்கணும்னு சொல்றீங்க. நீங்க கேட்கிறதால உங்களுக்காக உங்கமேல இருக்கிற நம்பிக்கையால நான் ஓகே சொல்றேன்.

ஆனா எனக்கு ரொம்பநாளா உங்ககிட்ட கேக்கணும் நினைக்கிற ஒரு கேள்வி இருக்கு. நீங்க எனக்கும் என் பிரன்ஸ் சர்க்கிளுக்கும் கொடுக்கிற பிஸ்னஸ் ஐடியாசுக்கும் ஏற்படுத்திக்கொடுக்கிற பிஸ்னஸ் டையப்புக்கும்  கடந்த போர் பைவ் இயர்சா வாங்கிற கமிசன் உங்க பைனான்ஸ் லெவலை எங்கோயோ நிப்பாட்டியிருக்கும்.

அப்படியிருக்க நீங்க சி.வி.ஐ குரூப்சின் மொத்த பிஷ்னசையும்   உங்க பொறுப்பிலெடுத்து லீட்பண்ணிகிட்டு, தனி ஒருத்தருக்கு மட்டும் சப்போர்ட்டா சேவை செய்து உங்க திறமையை வேஸ்ட் பண்றீங்க.

நீங்களே புதுசா பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணலாமே? அப்படி இல்லைன்னா நாம பார்ட்னர்ஷா பண்ணலாம். என்னதான் இருந்தாலும் முதலாளியா நிக்கிறதுல ஒரு கெத்து இருக்குதுல்ல.

ஆனா இதெல்லாம் செய்ய முடிஞ்சும் நீங்க அமைதியா சி.வி.ஐ யோட நிக்கிறதுக்கு எதுவோ காரண காரியம் இருக்குமோன்னு....” என்று கேட்க நினைப்பதை பூடகமாக பேசி அவனிடம் உண்மையை அறிந்துகொள்ள கொக்கிப்போட்டார்.

“விஷாகன், நான் எதுவும் இல்லாம வளர்ந்தவன். எனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்க திட்டம் போட்டு காய்நகர்த்த ஆரம்பிச்சு சரியா அதற்கான புத்தி, உடல் வலிமையையோடு முன்னேறிகிட்டு இருக்கேன்.

என்னுடைய ஆசான் முன்னால் கம்யூனிஸ்ட் தலைவரும் மலைவாழ்மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் எண்ணத்தில் டிரஸ்ட் ஆரம்பிச்சு. ஆதரவற்றோர் காப்பகம் ஈ.ஐ.டி ஹெல்ப் செண்டர்னு  அதை விரிவுபடுத்தி பெரிய அளவில் சேவை பண்ற  உலகத்தின் பார்வையில் தன்னோட திறமைகளை மறைத்து ஒரு டிரஸ்டின் அறங்காவலரா அமைதியான ஆத்மாவா இருக்கிற சேரநாதன்.

உங்க அப்பா என்னை உங்க வீட்டில ஒரு ஆளா சேர்த்துக்கிட்டதுக்கு காரணம் என்னோட திறமை மட்டுமில்ல நான் சேரநாதனோட கைடன்சில் இருக்கிற முக்கியமானவன்ற காரணமாகவும் தான்.

நான் சில காரியங்கள் செய்வதுக்கு சின்னவயசிலிருந்தே என்னைய ஸ்பெசலான ஒருத்தனா உருவாக்க டிரைன் பண்ணியிருக்கார் என் மாமா சேரநாதன்.

எனக்கு அவர் சொந்த தாய்மாமான்ற விஷயம் தெரிஞ்ச ஒன்னு ரெண்டு ஆட்களில் உங்க அப்பாவும் ஒருத்தர். நான் சி.வி.ஐ நிர்வாகத்தை ஏன் கையில் எடுத்திருக்கேன்ற விஷயம் உங்க அப்பாவால ஓரளவு கெஸ் பண்ணியிருக்க முடியும்.

ஆனால் அந்த ரகசியத்தை இப்போ வெளியில் சொல்றதா இல்லை அதற்கான நாள் வரும்போது கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்குவீங்க “ உங்க அப்பா கண்டிப்பா நான் சொல்லாம அந்த ரகசியத்தை உங்ககிட்ட சொல்லமாட்டார். எனச்சொல்லி முடித்தான்..

இட்ஸ் ஓகே தடாகன் அப்பா என்கிட்ட நீங்க வயசு கம்மியானவர்னு அசால்ட்டா நினைச்சு உங்களை உதாசீனப்படுத்திடக்கூடாது உங்களோட ,மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியதென சொன்னதை பழகியதுக்கு பிறகு எவ்வளவு சரியானதென புரிஞ்சுக்கிட்டேன்.

எங்களுக்கு உங்களை போன்றவரின் பிரன்ஷிப் அவசியம்.  உங்களை என்  குளோஸ் பிரண்டா நினைச்சு மனசில் உள்ளதை கேட்டுட்டேன். இப்போ சொல்ல முடியாத சிட்டிவேசன்ல இருந்தா சொல்ல வேண்டாம். தெரியும்போது எனக்குத் தெரியட்டும். அப்போ நான் கிளம்புறேன். நீங்க சொன்னதை நல்லபடி முடிச்சிடலாம் எனச் சொல்லி கிளம்புவதற்கு இருக்கையை விட்டு எழுந்தார்.

விஷாகன் எழுந்ததும் கூடவே அவனும் எழுந்து கைகுலுக்கி ஜென்டிலாக ஒரு அணைப்பு கொடுத்து இருவருக்குமான நட்பை உறுதிப்படுத்தும் வகையில் பாசிடிவ் வார்ம் கொடுத்து வாசல்வரை அவருடன் சென்று வழியனுப்பி வைத்தான்.

அப்பொழுது அவனுக்கு மொபைல் அழைப்பு வந்தது அந்த ரிங் டோனிலேயே அழைப்பது இந்திரசித் எனக் கண்டுகொண்டவன் அழைப்பை ஏற்று

“ம்...சொல்லு இந்திரன்” என்றதும்.

“எங்க இருக்க தடாகன்?” என்றவனிடம்.

“என் பீச் ஹவுசில் இருக்கேன்” என்றான்.

“நான் மகாபலிபுரத்தில இருக்கிற வழக்கமா நான் வரும் ரெசார்டில் ஜாலியா இருக்கேன். உன் வீட்டுக்கு பக்கம்தானே இங்க வாயேன்' என்றான்.

ம்..கூம் நான் அங்க வந்தா உன்னோட என்ஜாய்மென்ட் டிஸ்ட்டப்பாகும். இதுக்குத்தான் கால் பண்ணினியா?

“இல்லை தடாகன் எனக்கு ஒரு சின்ன கிலாரிபிகேசன் உன்கிட்ட கேக்கணும். அந்திகை எனக்கு கொஞ்சம் முன்னாடி போன் பண்ணினாள்”

என்று இந்திரன் சொன்னதுமே, இவன் மனதிற்குள்

“இவ அடங்கவே மாட்டாளா? என்கிட்ட மோதுனதுக்கு இப்போதானே தலையில் நல்லா கொட்டு பட்டா! இவளுக்கு என்ன பெரிய ஹீரோன்னு நினைப்போ?

அவளும் அவ குடும்பமும் எப்படிப்பட்டதுன்னு எனக்குத் தெரியாதா..!? கொஞ்சம் வீக்கா ஒருத்தன் இருந்தா விடுவாளா?

இவன் வேற அவ கீ கொடுத்தா ஆடுற பொம்மை போல என்கிட்ட கேள்வி கேட்க வந்துட்டான்.’

என்று அந்திகையின் பேர் கேட்டதும் மனதுள் அத்தனை கவுண்டன் கொடுத்தவன் வெளியில் அதை சொல்லாமல்

“ம்... என்ன சொன்னா உன் அழகுராணி அந்திகை? அத்தான் அத்தாண்டு உன்னை கவிழ்க்க பார்க்குறா அவ” என்றான்.

“தடாகன்...!! நீ பொதுவாக லேடீஸ் கிட்ட ரொம்ப சாப்ட்டாதானே நடந்துக்குவ! ஆனா அந்திகைய கண்டா மட்டும் ஏன் உனக்கு பிடிக்கலை? அவ மத்த பொண்ணுங்க போல கிடையாது. ரொம்ப நல்ல பொண்ணு.

அவள் என்கிட்ட சொன்னதிலேயும் ஒருவேளீட் பாய்ன்ட் இருக்கு. நாம பேசும் போது அப்பா சொன்னார் மீட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு ஒருமணி நேரம் முன்னாடிதான் கொட்டேசன் அமெளண்ட் பத்தி அவர்கிட்ட நீ டீடைல்ஸ் சப்மிட் பண்ணியிருந்தன்னு.

அதாவது ஆபீஸ்ல வச்சு நான் நீ கோட் பண்ணியிருந்த கொட்டேசன் அமெளண்டை மாத்தியதும் கோபத்தில் வெளியபோனதுக்கு பிறகு தான் அப்பாவுக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்க.

மேலோட்டமா அந்த ரிபோர்ட்டை பார்த்ததும் பார்க்குற யாருமே அந்திகை பீல் பண்ணியது போலதான் பண்ணுவாங்க.

நீ அதை பத்தி அப்பவே என்கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணியிருந்தா இது போல இஸ்யூஸ் வந்துருக்காதுல்ல” என்றான்.

அவன் அவ்வாறு சொன்னதும். “ஹேய் இந்திரன் நல்லா யோசித்துப்பார் . நீ அவ சொன்னதும் அதையே வேதவாக்கா எடுத்துகிட்டு அவளும் நானும் உனக்கு ஒண்ணுதான்னு சொல்லிட்ட  நான் சொல்றதை கேக்குற நிலையில் நீ அப்போயில்லை.

உன்னை சொல்லியும் தப்பில்லை. அவள் அத்தான் பொத்தான்னு கொஞ்சி கொஞ்சி பேசி உன்னைய அவ கண்ட்ரோலுக்கு எடுத்துகிட்டா” என்றதும்.

“ஸ்டாபிட் தடாகன் அவளை பத்தி இப்படி பேசாத. அவளை பொறந்ததில் இருந்து எனக்கு தெரியும். நீ எப்படி பொண்ணுங்க விஷயத்தில் லிமிட் தாண்டமாட்டியோ. அதே போலத்தான் தேவை இல்லாம அவ எந்த ஆண்கள் கூடயும் பேசவோ வழியவோ மாட்டா.” என்றதும்.

“ரைட்டு விடு இந்திரன், நீ கேட்டதுக்கு நான் பதில் சொல்லிட்டேன்” என்றதும்.

“தடாகன் அதைவிடு, அந்த காண்ட்ராக்ட் மறுபடி நமக்கு கிடைக்க ஏதாவது செய்யணுமா? என்றதும்.

“நாளைக்கு காலையில் எக்ஸ் மினிஸ்டர் வீட்டில் அவரோட பேத்தியோட பர்த்டே பார்ட்டி இருக்கு.  நாம அவங்க கம்பெனியோடு அக்ரீமென்ட் போட்டு வொர்க் பண்ணபோரோம்ற எண்ணத்தில் நம்மகூட குட் ரிலேசன்ஷிப் மெயின்டைன் பண்றதுக்காக கம்பெனியில் இன்விடேசன் கொடுத்தார்,.

அதுக்கு நம்ம கம்பெனி சார்பா நான் போறேன் எனக்கு அசிஸ்ட் பண்ண உன் அழகுராணியை, சாரி... சாரி.. அந்திகையை அனுப்பி வை. உனக்கே தெரியும் ஜோடி இல்லாம பெரியவீட்டு பங்சனுக்கு போக முடியாது.

தெரியாத பேயை கூட்டிக்கிட்டு போறதுக்கு பதில் தெரிஞ்ச பேயே மேலானது அதனால் அந்திகையை என் கூட அனுப்பு” என்றான்.

“டேய்.... பாவம்டா அவ, நான் பேசி அவளை உன்கூட அனுப்பி வைக்கிறேன். ஆனா நீ அவள் கிட்ட கொஞ்சம் தன்மையா நடந்துக்கோ தடாகன். சரி நான் மொபைலை வைக்கிறேன். ரொம்ப நேரமா பார்ட்டி வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கு” என்று சத்தமாக சிரித்தபடி மொபைல் இணைப்பை துண்டித்தான் இந்திரன்.

 

மொபைலை வைத்த தடாகனோ. அந்த அந்திகைக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுறானே இந்த இந்திரன்.

நான் இப்படித்தான்னு வெளிப்படையா இருக்கிற பொண்ணுங்களை கூட நம்பலாம். இந்த அந்திகையை போல அழகை பொத்தி பாதுகாக்குரேன்னு சொல்லிக்கிட்டு கள்ளமா ஆண்களை வலைக்குள்ள இழுக்கிற பொண்ணுங்கதான் ரொம்ப ரிஸ்க். அவங்க கிட்டதான் ஜாக்கிரதையா இருக்கணும்..

என்கூட நாளைக்கு வருவால்ல அவளோட மறுபக்கத்தை வெளிய கொண்டுவந்துடுறேன். அவள் இந்திரன் குடும்பத்துமேலயும் அவன் தொழில் மேலயும் கண்ணும் கருத்துமா இருக்கான்னா அதற்கு காரணம் இந்திரன்கிட்ட எப்படியாவது நல்ல வேஷம் கட்டி அவனை வளைச்சுப்போட்டு குடும்பத்துக்குள் நுழைஞ்சி அந்த சொத்தையெல்லாம் சொந்தமாக்கி அனுபவிக்கணும்ற எண்ணத்தால தான் இருக்கும். அவ வீட்டுப் பழக்கம் அதுதானே. என்று அவனுக்குள் அவனே சொல்லிக்கொண்டான்.

மறுநாள் காலை அந்திகா கிளம்ப மனமே இல்லாது கிளம்பிக்கொண்டிருந்தாள். நேற்று இரவு பதினோரு மணிக்கு மேல் இந்திரனிடமிருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்றவளிடம் நாளைக்கு காலையில் அவள் தடாகனுடன் அவனுக்கு கம்பெனியனாக எஸ்.எம்.ஜி மருத்துவமனையின் சி.ஈ.ஓவும் முன்னாள் அமைச்சர் தங்கராஜ் மகனுமாகிய விஷாகனின் வீட்டில் நடக்கும் பிறந்தநாள் பார்ட்டிக்கு போகவேண்டும் என்றும்

அங்கு தடாகன் கைநழுவி போன அந்த ப்ராஜெக்ட்டை திரும்பப் பெற அவர்களுடன் சந்தர்பம் அமைத்துக்கொண்டு பேசி சரிகட்டப்போகிறான் நீயும் பக்கத்திலிருந்து உதவி செய்’ என்றும் சொல்லிவிட்டு மொபைலை வைத்துவிட்டான்.

அவன் சற்று தெளிவில்லாமலேயே விஷயத்தை சொன்னான். அவனின் பேச்சிலேயே அவன் குடித்திருக்கிறான் என அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது. எனவே அவளால் அப்பொழுது அவனிடம் அதற்கு மறுப்பு  தெரிவித்தாலோ மேற்கொண்டு பேச்சை வளர்த்தலோ சரிப்படாது என்று விட்டுவிட்டாள்.

எனவே மனதில் தடாகனுடன் தான் பார்டிக்கு செல்லவேண்டுமா? அதுவும் லிப்டில் தன்னிடம் அப்படி நடந்துகொண்டவனுடன் மறுபடியும் தனியாக செல்லவேண்டுமா? முடியாது... என்னால் அவன் கூட போக முடியாது..!!

விடிந்ததும் இந்திரன் அத்தான்கிட்ட பேசி தன்னால் அவனோடு போக முடியாதென சொல்லிடணும் என்று எண்ணியபடியே தூங்கியவளுக்கு தூக்கம்கூட சரியாக  வரவில்லை.

காலை ஆறுமணிக்கு எழும்போதே தலை வலியுடன்தான் எழுந்தாள். எழுந்ததுமே முதலில் அவளின் நினைவில் வந்தது இந்திரனுக்கு போன் செய்து வேறு யாரையாவது தடாகனுடன் அனுப்புங்க அவன் கூட என்னால் தனியாக பார்ட்டிக்கெல்லாம் போகமுடியாதென சொல்லணும் என்று நினைத்து மொபைல் எடுத்து இந்திரனுக்கு அழைப்பு விடுத்தாள்.

அவனோ நைட் முழுவதும் குடியும் பெண்களுடன் கும்மாளமும் என்று இருந்துவிட்டு சாமத்துக்கு பிறகே தூங்கியதால் இரண்டு மூன்று தடவை மொபைல் அடித்து ஓய்ந்து நான்காம் முறை அடிக்கும்போது வேண்டா வெறுப்பாக அழைப்பை ஏற்று “ஹலோ சொல்லு அந்தி” என தூங்கி வழிந்த குரலோடு பேசினான்,.

“அத்தான்.... என்று தயத்தொடு மேல தொடர முடியாது நிறுத்தவும்.

“சொல்லு அந்தி, என்ன விஷயம்?” என்று தூக்கத்தை விரட்டி கொஞ்சம் தெளிந்த குரலில் பேசியபடி எழுந்து அமர்ந்தான் இந்திரன்.

“நைட் நீங்க என்னை தடாகன் கூட பார்ட்டிக்கு போகணும்னு சொன்னீங்க. அப்பவே என்னால அவர் கூட தனியா போக முடியாதுன்னு சொல்ல நினைச்சேன்.

ஆனா நீங்க அதை கேட்கும் நிலையில் இல்லைன்னு தெரிஞ்சது அதுதான் இப்போ போன் பண்ணினேன். எனக்கு ஒரு ஆண் கூட தனியா  பார்ட்டிக்கு போய் பழக்கமில்லை அத்தான். அதனால நம்ம ஸ்டாப்ஸ்ல எனக்குப் பதில் வேற யாரையாவது அனுப்பட்டான்னு உங்ககிட்ட கேட்கத்தான் போன் பண்ணினேன்” என்றாள்.

“நோ... நோ... அந்தி, அது எஸ்.எம்.ஜி நிறுவனத்தோட பாமிலி பார்ட்டிதான். டீசன்டான மக்கள் மட்டும்தான் அங்க வருவாங்க..

அதோட தடாகன் கூட நீ தாராளமா போகலாம் அவன் லேடீஸ் விஷயத்தில் ரொம்ப கண்ணியமா நடந்துக்குவான்றதுக்கு நான் கேரண்டி.

அதோட அது வெறும் பர்த்டே பார்ட்டி மட்டுமில்ல, நாம அங்க போறதுக்கு காரணம் நம்மளால கை நழுவி போன அந்த ப்ராஜெக்ட்டை எப்படியாவது இந்த பார்டியில் நல்லபடி அவங்ககிட்ட பேசி திரும்ப நமக்கே கிடைக்கும்படி செய்திடணும்,.

நீ தடாகன் கூடப்போய் இதை எப்படியாவது அவன் பின்னாடி நம்ம கம்பெனிக்காக நின்னு பேசி முடிச்சிடு.

நீ சொல்லி நான் கேட்டேன்ற காரணத்தாலத்தான் இந்த பெரிய ஆபர் நம்ம கைவிட்டு போச்சுன்ற கோபம் அப்பாவுக்கு நம்ம மேலயிருக்கு இப்போ தடாகன் கூட சேர்ந்து பேசி மறுபடி சைன் ஆச்சுன்னா அவருக்கு மறுபடி உன்மேல ஒரு நல்ல அபிப்ராயம் வரும்.

நீ கிளம்பி அவன் கூட போற இது என் ஆர்டரென சொல்லிவிட்டான்.

அந்திகையால் அதற்கு மேல் மறுத்துப்பேசமுடியாமல் சம்மதம் தெரிவித்துவிட்டாள்.

மனதினுள் தடாகனின் மற்றொரு முகம் யாருக்கும் தெரிய மாடேங்குது. இவனைப்போய் நல்லவன் வல்லவன்னு எல்லோரும் சொல்றாங்க.

ஒரு நாள் இவனோட முகத்திரை கிழியாமலா போகும்? அன்னைக்கு அவனுக்கு இருக்கு கச்சேரி.

ஐயோ இவன் கூட தனியா போறதால என்னோட பாதுகாப்புக்காக  ஹேன்ட் பேக்கில் பெப்பர் ஸ்பிரே, சின்னதா கத்தி எல்லாம் எடுத்துக்கிட்டுத்தான் போகணும்.

கடவுளே என் அத்தை குடும்பத்துக்கும் அவங்களோட பிஸ்னஸ் பிராப்பர்ட்டிக்கும்  இந்த வளர்ந்து கெட்டவனால எந்த ஆபத்தும் வரக்கூடாது. இவனோட ஒவ்வொரு மூவையும் கவனமாக நோட் பண்ணிகிட்டே இருக்கணும் என்று நினைத்தபடி பார்ட்டிக்கு போக ரெடியாக ஆயத்தமானாள்.

                         ---தொடரும்---

2 comments:

  1. அருமையான கதை நகர்வு

    ReplyDelete
  2. தடாகணுக்கு ஏற்ற ஜோடி தன் அந்தி சூப்பர்

    ReplyDelete

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib