Post Page Advertisement [Top]

வெண்பனிப் பூவே

(தீபாஸ்)

WhatsApp%20Image%202023-01-25%20at%2023.38.33

அத்தியாயம் - 36

  போர்ட் கிளப் பங்களாவில் கல்யாணிப் பாட்டியின் முன்பு இருந்த இருக்கையில் யுகாந்தனின் அம்மம்மா லோகநாயகியும் அம்மப்பா திருமாவளவனும் அமர்ந்திருந்தனர். மேலும் யுகாந்தனின் அப்பா விக்ரமராஜ் மற்றும் சித்தப்பா வருண்ராஜ் சித்தி திவ்யா ஆகியோரும் இருந்தனர்.

 

      கல்யாணி அமர்ந்திருந்த இருக்கையின் பின்னால் வனித்தா, இந்தர் மற்றும் அனன்யா மூவரும் தொங்கிப் போன முகத்துடன் நின்றிருந்தனர். அவர்கள் இங்கு நிற்பதற்கு காரணம் பிரின்ஸ் விக்டரின் ஆட்கள். அவர்கள்  இவர்களை தேடி பிடித்துக்கொண்டு போயிடாமல் இருக்க உயிருக்கு பயந்து கல்யாணியிடம் அடைக்கலம் ஆகியிருந்தனர்

 

     தனது மருமகளும் யுகாந்தனின் அம்மாவுமாகிய பவித்ரா இறப்புக்கு பின் போர்ட்  கிளப்  பங்கலாவுக்கு ஒரு தடவை மட்டுமே வந்திருந்த திருமாவளவன் தனது பேரன் மொபைலில் கேட்டுக்கொண்டதால் அவனின் திருமணத்தை நடத்தி வைக்கும் பொருட்டு ஆங்கு வந்து கல்யாணியின் முன் அமர்ந்திருந்தார்.

 

   விக்ரமராஜ் அந்த வீட்டு ராஜமாதாவும் தனது அம்மாவுமாகிய கல்யாணியிடம்  “ என்னம்மா பண்ணி வச்சிருக்கா அனன்யா? அவள்ட்ட கேட்டா உங்களை சப்போர்ட்டுக்கு இழுக்குறா,  எனக்கு அசிங்கமா இருக்குதும்மா, ஒரு பொண்ணை ஆள் வச்சு கடத்தி இருக்கா, இதெல்லாம் வெளியில் தெரிஞ்சா நம்ம குடும்பத்து மானம் சாந்தி சிரிச்சிடும்” என்றார்.

 

   கல்யாணியால் பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து இருப்பதை கண்ட யுகாந்தனின் அம்மம்மா லோகநாயகி மனதினுள் ‘சிங்கம் போல கம்பீரமா இருந்த இந்த அம்மா பேத்தின்னு வந்ததும் அவளுக்காக இந்த அளவு இறங்கி இருக்க வேணாம். இப்படி தலை கவிழ்ந்தும் இருக்கிற சூழலுக்கு வந்திருக்க வேணாம் ‘ என்று நினைத்தவர் மருமகன் விக்ரமராஜிடம்.

 

     “தம்பி விடுங்க தம்பி, அதுதான் எதுவும் தப்பா ஆகலை இல்ல, பேத்திய பேரனுக்கு கல்யாணம் பண்ணி இந்த வீட்டு மருமகளா கொண்டு வரணும்ற ஆசையில மகளோட வீட்டு ஆளுங்களோட ஆட்டத்துக்கு  தூபம் போட்டுட்டாங்க.  அது இது வரை வந்து நின்னுடுச்சு. யானைக்கும் அடிச் சறுக்கும் “ என்றார்.

 

      அதற்கு திருமாவளவன் தனது மனைவியிடம், “என்ன லோகு இப்படி சாதாரணமா விடுங்கன்னு சொல்லிட்ட? நம்ம யுகாவுக்கு வெண்ணிலாவைத்தான் பிடிச்சிருக்குன்னு இவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சும் அவளை கடத்தி கொண்டு போக நினைச்சிருக்காங்க!

  

     அவளுக்கு ஏதாவது விபரீதமாகி இருந்தா என் பேரனோட மனநிலை எப்படி பாதிச்சு இருக்கும்னு யோசிச்சு பார்த்திருக்கணும், பார்த்தேல்ல நிலாவை காணோம்னு தெரிஞ்சதும் யுகாந்தன் எப்படி துடிதுடிச்சுப் போயிட்டான், அவனை அப்படி ஒரு பதட்டமா இது வரை எப்பவாச்சும் பார்த்தோமா?

 

      இவங்களுக்கு என்ன இன்னொரு மகனும் பேத்தி கொள்ளுப்பிள்ளைங்கனு இருக்காங்க, ஆனா நமக்கும் மாப்பிள்ளைக்கும் அவன் ஒருத்தன் தான்.  அவன் மனசுக்கு பிடிச்சது போல குடும்பமா வாழ்ந்து தழைச்சு பிள்ளை குட்டின்னு ஆனாத்தான் வம்சமே தழைக்கும்” என்றார்.

 

      கல்யாணி தனது தவறுகளுக்கான உறுத்தல்களை குழிதோண்டி புதைத்துவிட்டு யுகாந்தனை அவர்களின் வாரிசு என்று பேசவும் அதில் டிரிக்கராகி, யுகாந்தன் தனது பேரன் என்று உரிமை போர்க்கொடி தூக்க வந்துவிட்டார்.

 

      எனவே “என்ன சொன்னீங்க உங்க வாரிசா? அவன் இந்த வீட்டு தலைச்சம் பிள்ளை, என் பேரனுக்கு நானு ஆசைப்பட்ட படி கல்யாணம் செய்துவைக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நான் தூக்கி வளர்த்தவன் அவன் “ என்றார்.

 

      “அம்மா, நீங்க வளர்த்தீங்க வளர்த்தீங்கன்னே சொல்றீங்களே நீங்க சொல்றதுக்கு எல்லாம் ஆமாம்சாமி போடணும்றதுக்காகவா வளர்த்தீங்க? பாட்டின்ற உரிமையை விட்டுக் குடுக்க கூடாதுன்ற எண்ணத்தில் யாரையும் அவன் கிட்ட விடாம அடைகாத்தீங்க, ஆனா இப்போ அவன் வளர்ந்து சுத்தி உள்ள எல்லாத்தையும் அவன் பொறுப்பில் எடுத்துக்கும் அளவு வந்துட்டான். இம்புட்டுப் பெரிய பிஸ்னஸ் சாம்ராஜ்யத்தையே கட்டி காப்பாத்துரவன போய் அவனுக்கு இஷ்டமில்லாத கல்யாணத்தை கட்டாயப்படுத்தி அரட்டி பிளாக்மெயில் பண்ணி செய்ய வைக்க எப்படி முடியும்?

 

    யார் சம்மதிச்சாலும் சம்மதிக்காம போனாலும் அவன் ஆசைப் படி வெண்ணிலா கூட கல்யாணம் நடக்கத்தான் போகுது. அப்போ அந்த இடத்தில நான் அப்பான்ற இடத்தில் கெத்தா போய் நிக்க முடியாம நம்மளையே சதேகத்தோட பார்த்து ஒதுக்கி அவங்க வைக்கிற மாதிரி சூழலில் என்னைய நிக்க வச்சிட்டீங்க

 

      இதோடு லண்டன்ல இருக்கிற அரசகுடும்பத்துல இருந்து என்கிட்ட சம்பந்தம் பேச பிரின்ஸ் விக்டர் வரணும் ஆனா நீங்க செஞ்சிருக்க வேலைக்கு இப்போ உங்க மகள் பேமிலியை பத்தி என்கிட்ட வார்ன் பண்னி பேச வச்சிட்டீங்க.

     அவங்களை அவர்கிட்ட ஒப்படைக்கச் சொல்லி மிரட்டி  என் கிட்ட அவரை பேச வைக்கிற சூழலில் நிப்பாட்டிட்டீங்க, இப்போ சொல்லுங்க அவர்கிட்ட நான் என்ன பதில் சொல்ல? இவங்களை ஒப்படைக்கிறதா சொல்லட்டுமா? “ என ஆதங்கப் பட்டார்.

 

      அதற்கு கல்யாணியோ, “எனக்கு என்ன அந்த வெண்ணிலா பெரிய ராஜ குடும்பத்தோட வாரிசுன்னு தெரியுமா? நான் பாட்டுக்கு வேலைக்காரி மகள்ன்னு இளப்பமா நினைச்சு பண்ணிட்டேன் “ என்றார்.

 

      அவரின் வார்த்தையை கேட்டதும் விளைந்த அதிர்ப்த்தியுடன், “சம்மந்தி உங்ககிட்ட இந்த வார்த்தையை நான் எதிர்பார்க்கலை யாரையும் குறைச்சு எடை போட கூடாது, கீழ இருக்கிறவங்க முன்னுக்கு வருறதும் மேல இருக்கிறவங்க கீழபோறதும் மாறி மாறி நடக்குறது தான், நாம இதை எல்லாம் பாக்காம மனுஷங்களை மனுஷத்  தன்மையோடு அணுகனும் “ என்றார்.  

 

    இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டிருக்க அங்கு நின்றுகொண்டிருந்த யுகாந்தனின் சித்தி திவ்யாவுக்கு மனதில் அப்போ யுகாந்தனோட கல்யாணம் எப்போ? இன்னும் பத்து நாளில் நடக்கப் போற சஹானா கல்யாணத்துக்கு பின்னாடியா? முன்னாடியா?” என்ற கேள்வி உண்டானது.

 

    எனவே ‘பெரியத்தான் அப்போ நம்ம யுகாந்தனோட கல்யாணம் எப்ப? நம்ம  சஹானாவோட கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?” என்று கேட்டார்.

 

      உடனே யுகாந்தனின் சித்தப்பா வருன்ராஜ் “இப்போ இந்த கேள்வி ரொம்ப முக்கியமா? வனித்தா இப்படி குடும்பத்தோடு சிக்கல் செய்யப் போய் அவளே மாட்டிகிட்டா அதுக்கு  என்ன பண்ணனு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கோம். நம்ம யுகா கல்யாணத்தில இதனால நம்மளையே ஒதுக்கி வச்சுட்டா என்ன பண்ண அப்படன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கோம் நீ என்னடான்னா நம்ம சஹானா கல்யாணத்துக்கு முன்னாடியா பின்னாடியான்னு கேக்குற” என்றார்.

 

      அவர் அவ்வாரு சொன்னதும் இது எல்லாம் ஒரு பிரச்சனையா இளவரசி வெண்ணிலா நம்ம பக்கம் நிக்கிறப்போ இது எல்லாம் சுசுப்பி மேட்டர், யுகாவை அந்த பொண்ணு விரும்பி கல்யாணம் செய்யறாள்னா அவள் நம்ம யுகாவுக்காக அவங்க அப்பாக்கிட்ட இந்த பிரச்னையை விட்டுடுங்கன்னு சொல்லுவாள், ஆனா அதுக்கு உங்க அம்மா அவள் கிட்ட போனில் நல்லபடி பேசி தாஜா பண்ணி அவங்க மகளையும் வனித்தா வீட்டுல இருக்கிறவங்களையும் இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சு விட்டுட  சொல்லுன்னு கேக்கணும் “ என்றார்.

 

      

 

      ங்கு இவ்வாறாக பேச்சுக்கள் போய்க்கொண்டு இருக்கையில் அங்கு விக்டர் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார். இத்தனை காலம் அவர் எதற்காக காத்திருந்தாரோ அது நடத்து விட்டது

 

       வெண்ணிலா தன்னை தந்தையென ஏற்றுக்கொண்டதும் தனது குடும்பத்தாரிடம் மறைத்து ஒளித்துவைத்திருந்த ஒன்றை பகிரங்கப் படுத்தியதும் அவர் மனம் இலகுத் தன்மையை அடைந்திருந்தது.

 

      மேலும் மகளுக்கு இத்தனை காலம் செய்யாதுவிட்ட கடமை காட்டாத அக்கறை பாசம் அனைத்தையும் கொட்டி கவிழ்த்துவிட ஆசை பிறந்தது.

 

       “மை டியர் ஏஞ்சல், உனக்கு என்ன வேணும் ? எதுவேணும்னாலும் கேளு அது உலகத்தில எந்த மூலையில் கிடைக்கிறதா இருந்தாலும் உன் கையில கொண்டு வந்து சேத்திடுறேன். நான் இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேன். என்னோட ஏஞ்சல் என்னோடு இருக்கிறாள், என்னை டாடின்னு சொல்றாள்.

      ஓ...மை குளோரியா நீ அந்த தேவலோகத்தில் இருந்து நம்ம டாட்டரை பிளஸ்பண்ணு. உனக்கு பண்ணிக்கொடுத்த பிராமிஷ்ஷை நான் நிறைவேத்திட்டேன்” என்று குழந்தை போல குதூகளித்தார்.

 

      என் கூட வா பேபி, உன் மாம் காட்டுறேன். உன் கண்ணுல நான் அவளை பார்க்கிறேன்  என்று சொல்லிவிட்டு அவளின் ஷோல்டரில் உரிமையாய் கை போட்டு நடந்து கூடிக்கொண்டு போனார்.

 

    மேலும் மற்றொரு கையில் மொபைலில் யுகாந்தனை காவலுக்கு வைத்திருந்தவனிடம் அவனை தக்க மரியாதையுடன் தன்னிடம் அழைத்து வர வேண்டும் என்று டெக்ஸ்ட் செய்தான்.

 

      அந்த ரூமிற்குள் நுழையும் போதே மை டியர் குளோரியா இதோ நம் டாட்டரை கூட்டிட்டு வந்துட்டேன் என்று அந்த அறையின் நடு  நாயகமாக வீற்றிருந்த குளோரியாவின் மெழுகுச் சிலை முன் அவளை நிறுத்தினார்.

 

      அந்த அறை முழுவதும் குளோரியாவின் புகைபடம் வித விதமான போஸ்களில் சுவர்களை அலங்கரித்து இருந்தது.

 

      வாசலில் யுகாந்தனை அழைத்து வந்ததற்கான அரவம் உணர்ந்து “ஒன் செக்கன்ட்  மை டியர் சைல்ட்” என்றவன் வாசலுக்கு போய் யுகாந்தனை கையோட அழைத்து வந்து நிலாவின் அருகில் நிற்கவைத்து இருவரின் ஜோடிப் பொருத்தத்தை சற்று தள்ளி நின்று பார்த்து ரசித்தவர். இருவரையும் சேர்ந்து தனது மொபைலில் படம் பிடித்தக் கொண்டார் .

 

      யுகாந்தனுக்கு வேறு எதுவுமே கண்ணுக்கு தெரியவில்லை . அவனுக்கு அவளின் நிலா மட்டுமே தெரிந்தாள். வெண்ணிலாவோ சொல்லமுடியாத ஒரு மன நிலையில் இருந்தாள் அந்த ரூம் முழுவதும்  நிறைந்து இருக்கும் குளோரியல் அவளின் அம்மாவா! என்ற ஆச்சரியம் . இப்படி பதுமை போல இருப்பவர் கைகளில் வளர்ந்து இருக்க வேண்டியவளா தான்? எனக்கு ஏன் அந்த பாக்கியம் இல்லாது போனது என்ற இயலாமையும் அவளுள் நிறைந்தது.

 

      யுகாந்தன் உள்ளே வந்ததும் “பேபி ஆர் யூ ஓகே” என்று அவளிடம் ஆர்வமாக சென்று கை பிடித்து பேசியதும் அவனிடம் அதற்கு பதில் கூறாமல் “என்னங்க, இது என்னோட அம்மாங்க, நானு யாருமே இல்லாதவள் இல்லை, இதோ என் அப்பா, என் அம்மா என்னோட பாதுகாப்புக்காக இதுவரை எனை விட்டு வலகி நின்ன என்னோட பேரன்ஸ் இவங்க எனக்கு இது போதும் இது போதும்ங்க “ எனச்சொல்லி கண்ணீருடன் அவனிடம் பேசினாள்.

 

    அவள் கூறிய தமிழ் வார்த்தைகளின் அர்த்தத்தை  ஓரளவு ஒரு யூகத்தின்  அடிப்படையில் புரிந்துகொண்ட விக்டர் கண்களும் கலக்கியது.

 

       அன்றிலிருந்து நான்கு நாள் சென்று யுகாந்தன் மற்றும் வெண்ணிலாவின் திருமணம் இந்திய முறைப்படியும் ஆங்கிலேய முறைபடியும் இந்து கிறிஸ்டியன் இரண்டு சடங்குகளின் படியும் நடந்து கொண்டிருந்தது. மிகவும் சிம்பிளாக நடப்பதாக சொன்னாலும் எல்லாம் பிரமாண்டமாகவே நிகழ்ந்துகொண்டு இருந்தது. ஆயுதம் ஏந்திய பாதுகாவர்கள் புடை சூழ யுகாந்தனின் குடும்பத்தில் வனித்தா குடும்பம் தவிர்த்து மற்றவர்கள் கல்யாண வீட்டிற்கே உள்ள ஆரவாரத்துடன் இருந்தனர். கங்கா வீட்டில் கணேஷன் குடும்பம் தவிர்த்து மற்றவர்கள் தங்களுக்கு வாங்கித்தந்த அந்த விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களுட ஒரு ஓரமாக நின்று வியந்து பார்த்துக்கொண்டிருந்தனர். அதே போல இவற்றை எல்லாம் தலமை ஏற்று  விக்டர் அனைத்து நிகழ்வுகளையும் ஆட்களை கொண்டு சிறப்பாக நடத்திக்கொண்டு தனது மகளின் மகிழ்ச்சியில் அவரும் இணைந்து நின்றார்.

 

                          முற்றும்

 

நாளை சிறப்பு பகுதியுடன் கதை நிறைவு பெறுகிறது மக்களே.

 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib