உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னில்
(தீபாஸ்)
அத்தியாயம் 09
துர்கா மற்றும் விக்னேஷ் தனது நண்பர்களுடன் விருந்தும் மருந்தும் உண்ட ஜோரில் உலகமே தங்களின் காலடியில் என்ற மிதப்பில் இளமைக்கே உண்டான தேடல்களுடன் அமர்ந்திருந்த போது ராக் அன்ட் ராக் ஈவினிங் டி.ஜே குழுவின் இசை அரங்கேற ஆரம்பித்தது.
அதற்காகவே காத்திருந்த வெஸ்டர்ன் இசை விரும்பிகள் ஆர்பாட்டத்துடன் மேடையில் இசைத்துகொண்டிருந்த குழுவின் இசையில் ஐக்கியமாகிவிட எழுந்து சென்று உயர்ந்திருந்த அந்த மேடையை சூழ்ந்து நின்றுகொண்டனர்.
அப்பொழுது விக்னேஷூடன் எழுந்து சென்ற துர்க்காவுக்கு உள்ளே சென்ற போதையால் கால் தரையில் பவாத நிலை. பேலன்ஸ் செய்து நடப்பதற்கு அவளின் மொத்த உடலையும் அவனின் மேல் கவிழ்த்தி அனைத்தபடி நடந்தாள்.
விக்னேஸூம் மது அருந்தி இருந்தாலும்... ஸ்டெடியாகவே இருந்தான். மது போதையை விட அருகில் இருந்த மங்கையின் போதை அவனை நிலை தடுமாற வைத்தது.
கிடார், டிரம்ஸ் மற்றும் அனைத்து மேல்தட்டு வாசிப்பு வாத்தியங்களிள் இருந்து புறப்பட்ட காதை அதிரவைக்கும் இசையுடன் கூடிய ராக் பாடல் இளமைப் பட்டாளங்களின் நரம்புகளை சுண்டி இழுத்து ஆர்பரிக்க வைத்தது.
தள்ளாடிக்கொண்டு இருந்த துர்க்காவை காரணம் காட்டி அங்கிருந்து அவளோடு வெளியேறினான்.
இந்த நிலையில் அவளால் ஹாஸ்டளுக்கு செல்ல முடியாது என்பதை காரணமாக வைத்து அவனின் அப்பார்ட்மேண்டுக்கே அவளை அழைத்துச் சென்றான்.
புளு ஜீன்ஸ் வொயிட் லாங் காட்டன் குர்த்தா அணிந்து லூஸ் கேர் காற்றில் பறக்க பைக்கில் அவனைக் கட்டிக்கொண்டு பின்னால் அமர்ந்து பயணித்தவளையும் மோகம் தொற்றிக்கொண்டது.
சிறுக சிறுக அனைத்துத் தொட்டு போதையில் இருந்தவளை தன் வசப்படுத்தியதால் தனது முதுகில் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவளின் தேகச் சூடு அவனை மதிமயக்கி தப்பு மேல் தப்பு செய்கிறோம் என்ற குற்றவுணர்வை இல்லாது செய்திருந்தது.
அப்பார்ட்மெண்டில் சிங்கிள் பெட்ரூம் உள்ள அவனின் அறைக் கதவை தட்டியதும் ஊரில் இருந்து இங்கு வேலை தேட ரெண்டுநாள் முன்பு வந்திருந்த மாதவன் கதவைத் திறந்தான்.
நண்பனுடன் அழகான பெண் ஒருத்தி சரியாக நிற்க கூட முடியாமல் போதையுடன் அவள் தோளில் தொற்றிக் கொண்டு இருந்ததைக் கண்டவன் அதிர்ச்சியில் வாய்பிளந்து பார்த்தபடி உள்ளேவர வழிவிட்டு நின்றான்.
உள்ளே துர்க்காவுடன் நுழைந்தவன் நேராக படுக்கை அறைக்குள் சென்று அவளை படுக்கையில் விட்டுவிட்டவனின் கைகளை பற்றியவளை.
“கதவை லாக் பண்ணிட்டு வந்துருவேன் பேபி..” எனச் சொல்லி படுக்கையறைக் கதவை சாத்திவிட்டு வெளியில் வந்தான்.
ஹாலில் இன்னும் அதிர்ச்சி விலகாமல் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்த மாதவனை நோக்கி வந்தவனிடம்.
“டேய் விக்கி யாருடா அந்த பிகரு...? ரூமுக்கே கூட்டிட்டுப் போயிட்ட...? இது முதல் தடவை போல தெரியலையே...!? பேச்சுலர் லைபை என்ஜாய் பண்றடா மாப்ள..!” என்று அதிர்ச்ச்சி மற்றும் வயித்தெரிச்சலில் கேள்வி கேட்டவனிடம்.
“ஸ்... மெதுவா பேசுடா.. அவள் காதுல விழுந்துடப் போகுது. நானே கஷ்டப்பட்டு கரைக்ட் பண்ணி முதல் முதலில் ரூமுக்கே தள்ளிட்டு வந்துருக்கேன்.
அவளும் நானும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணினாலும் இன்னைக்குத்தாண்டா கிஸ் பண்ணவே விட்டுருக்கா...
“என்னடா சொல்ற...? உன் லவ்வரா...? அடப்பாவி ஊருல இருக்க உன்..” என்று மேற்கொண்டுப் பேசப்போனவனின் வாயை வேகமாக வந்து கையாள் இருக்க மூடி “டேய் கத்திப் பேசித் தொலைசிக்காதடா ராஸ்கல்... அவள் காதில் விழுந்துடப் போகுது...?” என்றான்.
“ஆமா... ஆமா.. அவள் காதில் விழுந்தாலும் இப்போ ஒன்னும் மண்டையில் ஏறாது... மட்டையாகித்தானே கிடக்குறா உன் லவ்வரு...” என்றான்.
“இங்க பாரு மாதவா... நான் இவள் கூடத்தான் வாழப் போறேன். நீ பாட்டுக்கு கண்டதையும் உளறி காரியத்தை கெடுத்துறாத.
அவள் நீ நினைக்கிறது போல குடிகாரி எல்லாம் கிடையாது. இன்னைக்கு தான் மொதல் முதலில் அவளை ஏமாத்தி குடிக்க வச்சிருக்கேன்.
அவள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததும் எனக்காக வீட்டுல சண்டை போட்டு கிளம்பி பெங்களூருக்கு என்கிட்டயே வந்துட்டா.
பார்த்தேல்ல என்ன அழகா இருக்கானு. நான் வேலை பார்க்குற ஆபீசில் தான் அவளும் வேலை பார்க்குறா...
எங்க ரெண்டுபக்கம் உள்ள வீட்டுல சம்மதம் வாங்கி அதுக்குப் பிறகுதான் கல்யாணம் மத்தது எல்லாம்னு அடமெண்டா இருக்கா.
அதனாலத்தான் எனக்கு வேற வழி தெரியாம இன்னைக்கு அவளை நிதானம் இழக்க வச்சு என் கூட தங்க வைக்க தள்ளிட்டு வந்துட்டேன்.
இந்தா ரெண்டாயிரம் ரூபா இன்னைக்கு வெளியில் எங்கயாவது ரூம் எடுத்து தங்கிக்கோ. எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சிட்டா அதுக்குப் பிறகு அவளே உடனே கல்யாணம் பண்ண சம்மதிச்சுடுவா...” என்றான்.
“டேய் விக்கி வேணாம்டா.. இது தப்புடா... பெண் பாவம் பொல்லாததுடா..” என்று அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனா விஷயத்தை மனதில் வைத்துச் சொல்ல...
“நீ வாயை மூடு... இந்தா உன் சேர்ட் போட்டுட்டு கிளம்பு... எனக்கு ஏது நல்லதுன்னு நான்தான் முடிவு பண்ணனும்” எனச்சொல்லி அவனை தள்ளிக்கொண்டே போய் கதவு வெளியில் விட்டவன் தனது பைக் சாவியையையும் அவன் கையில் திணித்துவிட்டு கதவை அடைத்துக் கொண்டான்.
***
இரவு தனது அறையில் படுத்திருந்த அழகி தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தாள். நாச்சியாரும் கதிரேசனும் சாப்பிட்டு சாவகாசமாய் நடுக்கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது நாச்சியார் “என்னங்க இப்படி கம்முனு இருந்தா எப்படிங்க....? படிப்பு முடியறவரை அழகி இங்க தான் இருப்பாள்னு ஊருக்குள்ள கேட்டவகளுக்கு பதில் சொல்லி சமாளிச்சிட்டேன்.
இப்போ என்னென்னா மேற்கொண்டு படிக்கணும்னு அடம்பிடிச்சாள்னு நீங்களும் இன்னும் படிக்க சேர்த்து விட்டுட்டீங்க.
கல்யாணமான பொண்ணை புருஷன் காரன்கூட அனுப்பாம வீட்டில் வச்சிருக்கிறதால ஊருக்குள்ள கண்டமானிக்கு கதை பேசுறாங்க.
ஒத்தை பொண்ணை பெத்துட்டு புருஷன் பிள்ளைன்னு அவள் வாழ ஏற்பாடு பண்ணாம இப்படி இருந்தா எப்படிங்க..?” என்று புலம்பினாள்.
கதவைத் திறந்து வைத்து தூக்கம் வராமல் கட்டிலில் படுத்து இருந்தவளுக்கு அம்மாவின் புலம்பல் காதில் விழுந்து... அதனால் அவள் மனதை பாரம் அழுத்தியது. கல்யாண நாளில் இருந்து இரவில் பெற்றோரிடம் மறைத்து வடிக்கும் அவளின் கண்களின் கண்ணீர் இன்றும் தலையணையை நனைத்தது.
புலம்பிய மனைவியிடம் கதிரேசன் “அதுதான் ஊருக்குள்ள படிப்பு முடியிற வரை அவள் இங்கதான்னு சொல்லிட்டீயே...! அதுதான் மேற்கொண்டு அழகி படிக்க அதே காலேசில் சேர்த்து விட்டாச்சே... கேக்குறவஹளுக்கு அப்படியே சொல்லி வை” என்றார்.
“ஊர்ல கேக்கறது இருக்கட்டும் நான் கேக்குறேன் பதிலைச் சொல்லுங்க.
உங்க தங்கச்சி தானே வழிய பொண்ணு கேட்டுவந்தா...? அதனாலத்தானே நம்ம அழகியை அவள் மகனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்தோம்...
தாலிகட்டியதோட கடமை முடிஞ்சுருச்சுனு அவன் பாட்டுக்கு பெங்களூருலயே போய் உட்கார்ந்துக்கிடுறாரு.
உங்க தங்கச்சி இந்த ஒரு வருஷமா மறுவீட்டுப் பலகாரம்,. தலைதீபாவளி சீர், பொங்கல் சீர்னு அத்தனையும் உனக்கையா கேட்டு வாங்க மட்டும் மகன்கூட வந்து நிக்கிறாள்...
அப்படி வரும்போது ரெண்டுநாளு கூட தங்காம மகனை கிளப்பி கூடயே கூட்டிட்டுப் போயிடுறாள்.
மாப்பிள்ளை ஏன் பொண்டாட்டிகூட வந்த இடத்தில கூட தனியா ரெண்டுவார்த்தை பேசுறதோ பழகுறதோ இல்லைன்னு கேட்டா மட்டும் என் மகள்தான் புருஷனை கண்டுக்காம இருக்கிறானு பழியைத் திருப்பி விட்டுருறா...
எனக்கு என்னமோ சரியாப் படலை. என் பொண்ணு புதுசா கல்யாணமான சுவடே இல்லாம இருக்கா...
போன்ல கூட ரெண்டுபேரும் பேசிக்கிறது போல தெரியலை. எனக்கு என்னமோ தப்பாத் தெரியுது பெங்களூர்ல மாப்பிள்ளை வேலை பார்க்குற இடத்தில் போய் விசாரிச்சுப் பாருங்க..” என்றார்.
அம்மாவின் வார்த்தைகளை கேட்டவள் மனதினுள் ‘உங்க மாப்பிள்ளைக்கு என்னைப் பிடிக்கலையாம்... என் மூலமா வருற சொத்து மேலத்தான் அவருக்கு கண்ணு’ என்று சொல்லிக்கொண்ட
அழகி அன்று முதலிரவு அறையில் டாக்குமெண்டில் அவன் கையெழுத்து போட சொன்னதுக்கு முடியாதுன்னு சொன்னதுக்காக பேசிய பேச்சு அழகியின் மனதை ரணமாய் அறுத்துக்கொண்டிருந்தது.
“நீங்க பிஸ்னெஸ் ஆரம்பிக்கணும்னா அதுக்கு உங்க சொத்தை யூஸ் பண்ணனும்... அதைவிட்டுட்டு எங்கப்பா எனக்கு கொடுத்துருக்க நிலத்தை எப்படி நீங்க கேக்கலாம்...?” அப்படின்னு சொன்னதுக்கு
“என்னடி திமிரா...? இங்க பார் உன் கைக்கும் என்கைக்கும் உள்ள கலர் வித்தியாசத்தை. உன்னை எல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி பொண்டாட்டினு கூட்டிக்கிட்டுப் போய் நிறுத்தினா என்னைய கேவலமா பார்ப்பாங்க.
உன்னால நாளு வரி தொடர்ந்து இங்கிலிஷ்ல பேச முடியுமா..? அல்லது மாடர்னா டிரஸ் பண்ணத்தான் முடியுமா...?
மஞ்சளை அப்பிக்கிட்டு, இம்புட்டு நீளமா முடியை பின்னிப் போட்டுட்டு, சேலையை சுத்திகிட்டு பட்டிக்காடா இருக்கிற உன் கிட்ட இருக்கிற ஒரே தகுதி சொத்து மட்டும் தான்.
அதையும் எனக்கு தரமாட்டேனா அப்புறம் எதுக்கு நீ எனக்கு..?
இந்த டாக்குமெண்டில் எப்போ நீ கையெழுத்து போடுறயோ அப்போதான் நீ எனக்குப் பொண்ணாட்டி.” என்ற அவனின் வார்த்தைகள் அவளை பலமாக தாக்கியது.
ஆளுக்கு ஒரு பக்கமாய் முகத்தை திருப்பிக்கொண்டு படுத்துவிட்டார்கள்.
மறுநாளே புதுத் தம்பதியினர் குலதெய்வக் கோவிலில் மாலை காணிக்கை செலுத்திக்கொண்டு வந்ததும் வேலையை சாக்குச்சொல்லி கிளம்பிச் சென்றுவிட்டான்.
அதுக்குப் பிறகும் இது வரையும் போனில் கூட அவன் அவளுடன் பேசியதில்லை.
----தொடரும்---

No comments:
Post a Comment