உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால் (தீபாஸ்)
அத்தியாயம் 10
“இங்கபாரு துர்க்கா இதுல வருத்தப்பட என்ன இருக்கு... என்னதான் குடிச்சு இருந்தாலும் இந்நேரம் என் இடத்தில் வேற ஒருத்தன் இருந்திருந்தா அத்தனை போதையிலும் நீ அவனை அவாய்ட் தான் பண்ணி இருப்ப....
நாம ரெண்டுபோரும் லவ்வர்ஸ் அதனால நமக்குள்ள இதெல்லாம் சகஜம்தான். கல்யாணம்றது இந்த உலகத்துக்காகத்தான்.
தாலி கட்டினாலும் கட்டாட்டாலும் நீ தான் என்னுடைய வொய்ப் அதனால எனக்கு இது தப்பாத் தெரியலை” என்றான்.
அவன் அவ்வாறு பேசவும் தன்னை கைவிட்டுவிட மாட்டான். என் மேல் உள்ள காதலில் நான் அவளுக்கானவள் என்ற உரிமையில் மொத்தமா எடுத்துக்கிட்டான்.
ஆனா இனிமே இதை கல்யாணம் ஆகும்வரை தொடர விடக் கூடாது. அதேபோல இனி கல்யாணத்தை தள்ளிப் போடவும் கூடாது. வீட்டில் சம்மதம் வாங்கித்தான் பிறகு எல்லாம் என்ற ஸ்டேஜை கடந்துட்டோம்’ என்று முடிவெடுத்தவள்.
“விக்கி உங்களால எவ்வளவு சீக்கிரம் நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணா முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க..” என்றாள்.
அவள் சொன்னதும் மனதுக்குள் குதூகலம் அடைந்தான். இருந்தாலும் “எனக்கு உடனே கல்யாணம் செய்ய ஆசைதான் ஆனால் நீதான் எங்க வீட்டுலயும் உங்க வீட்டுலயும் சம்மதம் வாங்கினாத்தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்றியே...” என்றான்.
“இனிமேல் சம்மதம் வாங்கி புதுசாவா நாம வாழ்கையை தொடங்கப் போறோம்...? சம்மதிக்கிறதுக்குள்ளயே நீங்க என்கிட்ட மனைவியாய் உரிமை எடுத்துகிட்டீக்களே...” என்றாள்.
அவள் அவ்வாறு சொன்னதும் உல்லாசமாய் சிரிப்பை உதிர்த்தவன் குறும்புடன் அவளை பின்னால் இருந்து அணைத்துக்கொண்டு, “வாடி என் பொண்டாட்டி இப்போ இருந்தே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பிக்கிறேன். ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு துர்க்கா” என்றான்.
“கண்டிஷன..? என்ன பண்ணனும்...?” என்று யோசனையுடன் கேட்டவளிடம்
“இன்னும் ஒரு மாசத்தில் நமக்கு கல்யாணம் அதுக்கு வேண்டிய ஏற்பாட்டை எல்லாம் பண்ண எனக்கு டைம் வேணும். அதுக்கு நாம ரெண்டுபேரும் இப்போ இருந்து ஒரே வீட்டில் தங்கணும். இனி நீ தனியா ஹாஸ்டலிலும் நான் இந்த வீட்டிலும் இருக்க எனக்கு இஷ்ட்டம் இல்ல... நாம ரெண்டுபேரும் சேர்ந்தே நம்ம மேரேஜுக்கு எல்லாம் ஏற்பாடு செய்யலாம். ஓகே வா..?” என்றான்.
அவன் ஒரு கண்டிஷன் என்று சொன்னதுமே மனதுக்குள் காரணமே இல்லாமல் ஒரு படபடப்பு அவளுக்கு உண்டானது. அவன் கூடவே தங்கி இருவரும் சேர்ந்து கல்யாண ஏற்பாட்டை செய்வோம் எனச் சொன்னதும் ஆசுவாசம் அடைந்தாள்.
கல்யாணத்துக்கு முன்னாடி கூட தங்கமாட்டேன் இதுதப்பு என்று எதுவும் பேசி வாக்குவாதம் வந்து கல்யாணத்துக்கு முன்பு மனஸ்தாபம் வந்து பிரிஞ்சிட்ட...? முன்னாடி போல என்றால் போடானு போயிடலாம். ஆனா இப்படி எல்லாம் நடந்ததுக்குப் பிறகு அப்படி விலகிப் போகுறது ஈசி கிடையாது’ என்று நினைத்தவள்.
“ம்...ஓகே” என்று அரைகுறை மனதுடன் தலையை ஆட்டினாள்.
அழகு மலர் கல்லூரி வளாகத்துள் காலேஜ் பஸ்ஸில் வந்து இறங்கினாள். முன்னடியில் இருக்கும் ஆபீஸ் அறையின் முன் வரிசையாக நான்கு விலை உயர்ந்த கார்கள் நின்றுகொண்டிருந்தது.
கல்லூரி வளாகமே கொஞ்சம்பரபரப்பாக இருந்தது. உடன் பஸ்ஸில் இருந்து இறங்கிய தேன்மொழியிடம் “யார் டி வந்திருக்காங்க...? அபீஸ் ரூமே ஒரே பரபரப்பா இருக்குது..?” என்றாள்.
“ஏய் அந்தக் காரைப் பார்த்தாலே தெரியலையா? நம்ம காலேஜ் சேர்மேன் வந்திருக்காரு” என்றாள்
“அவர் தான் அப்போ அப்ப வருவாரே.. ஆனா அதை தவிர இன்னும் மூணு கார் நிக்குது பாரு. யாரோ வி.ஐ.பி வந்துருக்காங்க போல"
அப்பொழுது ஆபீஸ் உள்ளிருந்து பரபரப்பாக வந்த அவர்களின் ராஜி மிஸ் “அழகு மலர், தேன்மொழி ரெண்டு பெரும் கிலாஸ் ரூமில் பேக்கை வச்சிட்டு கூட இன்னும் ரெண்டு ஸ்டூடென்சை கூட்டிட்டு வாங்க, நம்ம லாபில மீட்டிங் அரேஜ் பண்ணணும்” என்றதும்.
“ஓகே மிஸ், யாரு மிஸ் வந்துருக்காங்க..?”
“நம்ம காலேஜ் சேர்மன் மகன் பூபதி ராஜா வந்துருக்கார். அவர் தான் இனி காலேஜ் இன்சார்ஜ் எடுத்துக்கப் போறாருன்னு பேச்சு அடிபடுது. அதை இன்பார்ம் பண்ணத்தான் இந்த மீட்டிங் ஏற்பாடு நடக்குதுன்னு நினைக்கிறேன்” என்று லோ... வாய்சில் அவர்களிடம் சொன்னாள்.
“ஓ... ஓகே மிஸ் இதோ வந்துருறோம்...” என்ற அழகி தேன்மொழியை இழுத்துக்கொண்டு நகர முற்பட்டாள். அவளோ ஆர்வமுடன் “அவர் லண்டன்ல இருக்கிறதா தானே சொன்னாங்க மிஸ்” என்றதும்.
“யேய் அதிகப் பிரசங்கி, ராஜிமிஸ் நம்மகிட்ட பிரண்ட்லியா இருக்காங்கன்றதுக்காக ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்காத” என்று அதட்டினாள்.
“ஆமா... அழகி இவளுக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சு...” என்றார்.
“ஐயோ... மிஸ் ஒரு ஆர்வத்தில் கேட்டுட்டேன்” என்று அசட்டு சிரிப்புடன் சொன்னாள் தேன்மொழி.
“இங்க பாருங்க பிள்ளைகளா ஏற்கனவே ஹ.ஓ.டி நளாயினி, உங்களுக்கு நான் ரொம்ப இடம்கொடுக்கிறதா சொல்லிகிட்டு இருக்காங்க. நீங்க நல்லா படிக்கிற பிள்ளைங்க அதனால சமாளிக்க முடியுது. இருந்தாலும் தேவையில்லாம மேலிடத்து விஷயம் பத்தி நாம பேசுறோம்னு மாட்டி விட்டுட்டா நீங்களாவது ஸ்டூட்டேன்ஸ்னு விட்டுருவாங்க. என் பாடுதான் திண்டாட்டம்” என்றாள்.
“ஸாரி மிஸ், இவள் அப்படித்தான். ஆனா நீங்க எங்களுக்கு லெச்சரர் மட்டும் இல்லாம, ஃப்ரெண்ட்ஸ் பீல் கொடுக்கிறதால இந்த லூசு கொஞ்சம் ஓவரா போயிட்டா... ஆனா உங்களுக்கு பிரச்சனை உண்டாகுறது போல நாங்க வெளியில் எந்த பேச்சும் வச்சுக்க மாட்டோம். எங்க ராஜி மிஸ்க்கு தலைகுனிவு வருறமாதிரி நடக்க மாட்டோம். பிராமிஸ் மிஸ்” என்றாள் அழகி.
“சரி.. சரி.. பேசிக்கிட்டே நிக்காம வேகமா போய் ரெண்டுபேரை கூட கூட்டிட்டு வாங்க” என்று அதிகபடியாக அவர்களுடன் பேசுவதை யாரும் கவனித்துவிடுவார்களோ என்ற படபடப்பில் இருவரையும் அவசரப்படுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
வகுப்பறையை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருக்கும் போது தேன்மொழியோ ஆர்வத்தை அடக்க முடியாமல்,
“ஏய் நம்ம காலேஜ் சேர்மேன் மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. பார்க்க ரொம்ப ஸ்மார்ட்டா அழகா இருப்பாருன்னு கேள்விப்பட்டிருக்கேன். அவர் பொறுப்பு ஏடுத்தா அடிக்கடி காலேஜ் வருவாருல்ல... நல்லா சைட் அடிக்கலாம்ல” என்றாள்.
“ஏய், சி அடங்குடீ, அவரே பாரின்ல இருந்து வருறாரு ஒரே இங்கிலீஷ்ல பேசி கடுப்பாக்கப் போறார் பாரு” என்றாள் அழகி.
“ம்... ஆமாடி. நம்ம கிளாசில் இருக்கிற மேகலாவைத்தான் அப்போ முன்னாடி நிறுத்துவாங்க. அவள் ஏற்கனவே அலப்பறை புடிச்சவ, நம்ம புது யங் சேர்மேன் கிட்டக்க நின்னு பார்த்து பேசி சைட் அடிக்க அவளுக்குத்தான் லக்கு இருக்குது...” என்றாள்
“வேணும்னா நீயும் இங்கிலீஸ்ல ஸ்பீச் கொடுத்து அவரை கிட்ட நின்னு சைட் அடி. எதுக்குத் தேவையில்லாம அவள் மேல பொறாமைப் படுற...? இங்கிலீஸ் புலூயண்டா பேசுறதுக்கு அவளுக்கு திறமை இருக்கு அதனால அவளை வருற கெஸ்ட்கிட்ட பேச முன்னாடி நிற்க சொல்றாங்க” என்றாள்.
“இங்கபாரு டி. நாம எல்லாரும் கவர்மென்ட் ஸ்கூல் தமிழ் மீடியத்துல படிச்சவங்க. நம்மளுக்கு செகேன்ட் லாங்க்வேஜ்ல ஒரு சப்ஜெக்ட் மட்டும்தான் இங்கிலீஸ். அதை மட்டும் மொட்ட மனப்பாடம் பண்ணி பரிச்சை பேப்பரில் கக்கி வச்சு ஏதோ பன்னெண்டு வரை தத்தி தத்தி பாஸ் பண்ணிட்டேன்.
நம்ம வேளை, பி.காம் செமஸ்டர் எல்லாம் தமிழில் எழுத ஆப்ஷன் இருந்ததால பாஸ் ஆகிட்டேன். இப்போத்தான் கொஞ்சம் இங்கிலீஸ் புரிஞ்சு வாசிச்சு படிக்க பழகி இருக்கேன், என்னைய மட்டும் மேகலா வீட்டுல படிக்க வச்சது போல ஊட்டி காண்வென்டில் படிக்க வச்சிருந்தா அவளைவிட நான் இங்கிலீஸ்ல பேசி பிச்சு உதறி இருப்பேன்’ என்றாள்.
சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து கிராமங்கக்ளில் இருந்தும் வரும் பெண்களே அந்த கல்லூரியில் பெரும்பாலும் படித்து வந்தனர்.
பள்ளிகூட்டத்துக்கும் இந்த கல்லூரிக்கும் உள்ள வேறுபாடு. தினமும் சீருடை அணியவேண்டாம் என்பதே ஆகும். இங்கு சேலை, சுடிதார் என்று விதவிதமாக போடலாம்.
ஆனாலும் காலக் கொடுமையாக காலேஜ் யூனிபார்ம் என்று ஒன்றும் உண்டு. கல்லூரியில் சிறப்பு தினங்களில் அதை உடுத்தி வர வேண்டும் என்ற கட்டளையும் அங்குண்டு.
பள்ளிக்கும் கல்லூரிக்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லாத சூழலில் தான் அவள் படித்துக்கொண்டிருந்தாள்.
பொதுவாக அந்த கல்லூரியில் நன்கு படித்த அவுட் கோயிங் சீனியர் மாணவர்களே குறைந்த சம்பளத்தில் வேலையில் சேர்ந்துவிடும் வழக்கம் இருந்தது.
சுற்றிலும் உள்ள கிராமங்களில் தமிழ்வழி பள்ளியில் படித்த மாணவிகளே அந்த கல்லூரியில் பயில்வதால் பொதுவாக அங்கே வேலைபார்க்கும் விரிவுரையாளர்களுக்கு கூட ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.
பாடம் நடத்த தேவையான, சப்ஜெக்ட்டை ஆங்கில வழியில் விரிவாக சொல்ல தெரிந்திருந்தால் போதும், மேலும் அங்கே பாடம் எடுக்க வேலையில் சேர்ந்துவிட தகுந்த மதிப்பெண் பெற்றிருந்தால் ஆசிரியராக பணியாற்ற சந்தர்ப்பம் கிட்டும்.
ஆங்கில பாடத்தை புரிந்து அதை தமிழ்வழி பாடத்தில் பயின்று அக்கல்லூரியில் பயில வந்திருக்கும் பெரும்பான்மையான தமிழ் வழி கல்வி பயின்ற மாணவிகளுக்கு புரியும் விதத்தில் சப்ஜெக்டுகளை விளக்கிச் சொல்ல தெரிந்து இருக்கும் வகையில் ஆங்கில புலமை இருந்தால் போதும் என்ற நிலை உள்ள கல்லூரி அது.
அழகிக்கும் படித்துவிட்டு அந்த கல்லூரியிலேயே விரிவுரையாளராக பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வமுடன் படித்து வந்தாள்.
யூ.ஜி முடித்துவிட்டு அங்கேயே ஆசிரியராக வேண்டும் என்ற லச்சியத்துடன் இருப்பவள்.
ஆனால் வந்திருக்கும் புது சேர்மேன் மகன் பூபதிராஜா படித்தது மில்லினியர்கள் படிக்கும் பிரபலமான பள்ளியில். கல்லூரி படிப்பை லண்டனில் முடித்தவன். அங்கேயே தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தவன்.
அவன் வாழ்கையில் ஏற்பட்ட ஒரு பெரும் சறுக்களின் காரணமாக தொய்ந்து போனவனை மீட்டெடுக்க பெற்றவர்கள் மகனை தங்களின் கூட்டுக்குள் உள்ளூரில் கொண்டுவந்து கட்டிபோட நினைத்தனர்.
ஊருக்குள் இருக்கும் தங்களின் கல்லூரி நிர்வாகத்தையும் நகைகடை மற்றும் பாரம்பரிய தொழிற்கூடங்களையும் அவனின் பொறுப்பில் கொடுத்து இங்கே கட்டிபோட நினைத்து முதல் அடியை அவனின் அம்மா தாட்சாயினி மகனை அழுது புரண்டு இங்கே அழைத்து வந்திருந்தாள்.
x
.jpeg)
No comments:
Post a Comment