பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா....!(தீபாஸ்-ன்)
அத்தியாயம்-03
நிலவரசின்
முகம் ஏனோ என்றைக்கும் இருப்பதை விட இறுக்கமாக இருந்தது. அவன் இலகுவான மனநிலையில்
இருக்கையில் கூட அவனின் முன் பேச பயப்படும் அவனின் அரணாக சுற்றியிருக்கும்
பவுன்சர்ஸ் மற்றவர்களுக்கு தொழில்முறை பாதுகாவலராக இருக்கும் அப்பவுன்சர்கள்
அவனுக்கு மட்டும் விசுவாசமான வேலையாட்களாய் அவன் கண்ணசைவில் கட்டுண்டு நடக்கும்
பாசக்காரர்களாய் இருப்பவர்கள் ஏனோ இன்று அவனின் இந்த இறுக்கத்துக்கு காரணம்
புரியாமல் தவித்தனர்.
கீதவானியின்
கல்யாண பத்திரிகை பார்த்ததில் இருந்து நிலவரசனின் மனம் கனத்து போயிருந்தது.
தனக்கும் அவளுக்கும் எந்த விதத்திலும் பொருத்தமில்லை. மானின் மருண்ட பார்வையும்
முயலைப்போன்ற மென்மையான தன்மையும் கொண்ட அவளுக்கு வேட்டையாடும் குணம் கொண்ட
என்னுடன் எப்படி பிணைக்க முடியும் விட்டுவிடு என்று அவனுக்கு அவனே சமாதானம் கூறிக்கொண்டான்.
இத்தனைநாள்
அவளின் மேல் தனக்கிருந்த ஆர்வத்தின் அளவு, அவள் அப்பன் அவளின் கல்யாணப்பத்திரிக்கை
கொடுக்கும் போதுதான் எனக்கிருப்பது வெறும் ஆர்வம் அல்ல காதல் என்று எனக்கு தெரியவரவேண்டும்! எனக்கு
அவள் மீது காதல் இருப்பதை உணர்ந்த மறுகணமே
அவள் எனக்கில்லை என்ற உண்மை என்னை இந்தளவு சோர்ந்துபோக வைப்பது ஏன்? நான் என்ன
அவ்வளவு பலவீனமானவனா? இத்தனை நாள் என்னை நான் இரும்பு மனிதன் என்று
நினைத்திருந்தது இன்று தகர்ந்துபோக ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்று
முடிவெடுத்தவன். காதல் என்பது பலவீனம் இனி அக்காதல் என்னும் பலவீனம் என்
வாழ்கையில் எனக்கு தேவையில்லை என்று முடிவெடுத்தான்.
அவனின்
முடிவு இன்றே ஆட்டம் காணப்போவதை அவன் அறியவில்லை. வேண்டும் என்று எண்ணும்போது வேண்டியது
கிட்டாமல் போவதும், கிட்டாது என்று ஒதுங்கிபோக நினைக்கையில் வழிய கையில்
கிடைப்பதும் இறைவனின் திருவிளையாடல் அல்லவோ?
கீதவாணிக்கு
படபடப்பாக இருந்தது. அவளது தங்கை தேவிஸ்ரீ, என்னக்கா இப்படி வேர்க்குது உனக்கு, வா...
வந்து பேனுக்கு அடியில் சேர் போட்டு உட்கார். நான் உனக்கு போட்டுவிட்ட
மேக்கப்பெல்லாம் கலைகிறது பார். இன்னும் பத்து நாளில் கல்யாணம் செய்யபோகிற
மாப்பிள்ளை கூடத்தானே வெளியில் போகபோற என்னமோ சிங்கம் புலி கூட போகப்போறதைப் போல
எதுக்கு இப்படி பயப்படுற? என்று கூறியபடி அவளை பேனுக்கடியில் சேரில் உட்காரவைத்து
அவள் நெற்றியில் உதட்டுக்கு மேல் உருவாகியிருந்த வியர்வை துளிகளை கர்சீப்பால்
ஒத்தி எடுத்தாள்.
அப்பொழுது
மதிய சாப்பாடிற்கு வீட்டிற்கு வந்த வெங்கி, தனது மகள்களிடம் அம்மாவை மூன்று
பேருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கச்சொல்லு தேவி என்றவர் கீதாவின் தலையை தடவி போய்
சாப்பிட உட்காரும்மா அப்பா கைகால் அலம்பிட்டு வருகிறேன் என்று சொல்லிகொண்டிருக்கும்
போது அவர் வந்த அரவம் உணர்ந்து அடுப்படியில் இருந்து வந்த விசாலி என்னங்க… நீங்க
எப்போ வருவீங்கனு காத்திருந்தேன். மாப்பிள்ளை வீட்டில் இருந்து சம்மந்தி போன் செய்திருந்தாங்க என்றாள்.
எதுக்கு
போன் செய்தார்கள் அதுதான் பத்திரிக்கையெல்லாம் நேத்து போய் வாங்கிட்டு
வந்தாச்சுல்ல என்றார்.
அதுக்கு
இல்லைங்க என்றவர் தான் கூறபோகும் விஷயம் கேட்டு அவர் கோபப்படக்கூடாதே என்று
ஆண்டவனிடம் மனுப்போட்டுகொண்டே கூறினார். சம்மந்தி சொன்னாங்க.... மாப்பிள்ளை அவர்
கல்யாணத்துக்கு நண்பர்களுக்கு பார்ட்டி வைக்கிறாராம் அதுக்கு அவர் கூட கீதாவை
அனுப்பி வைக்கச் சொல்லி போன் போட்டாங்க இப்போ அவளை கூப்பிட்டு போக இங்க மாப்பிள்ளை
வந்துகிட்டு இருக்கிறாராம் என்று சொல்லி முடித்தார்.
இன்னும்
கல்யாணத்துக்கு பத்துநாள் வைத்துகொண்டு மாப்பிள்ளைப் பையனோடு வெளியில் அனுப்புவது
சரியில்லை விசாலி. நம்மவர்கள் பார்வையில் ஜோடியாக மாபிள்ளைகூட கல்யாணத்திற்கு
முன்பு வெளியில் சுற்றுவதை கண்டால் ஒருமாதிரி பேசுவார்கள். அதனால் சம்மந்தியிடம் போன்
செய்து மாபிள்ளையை வர வேண்டாமென்று சொல்லிவிடலாம் என்றார்.
அவர்
அவ்வாறு கூறவும் மேலும் தயக்கத்தோடு என்னங்க சம்மந்தியம்மா என்கிட்டே போன்செய்து அனுபுறீங்கலானு கேக்கல!
இன்னும் அரைமணிநேரத்தில கீதாவை கிளப்பி ரெடியா இருக்கச்சொல்லுங்க என் மகன் அவன்
பிரண்டுக்கு கல்யாணத்துக்கு கொடுக்கிற பார்டிக்கு அவளை கூப்பிட்டு போக வருகிறான்
என்று சொன்னாங்க. நான் எப்படி சம்மந்தி கல்யானத்துக்குமுன்ன அனுப்பனு யோசிச்சதும்
அவங்க எந்த காலத்துல இருக்கீங்க நீங்க, அனுப்பாட்டி என் மகனுக்கு அவன் நண்பர்களின்
முன் பெரிய அவமானமாக போய்விட்டதா? பீல்பன்னி கோபமாகிடுவான். அவனின் கோபத்திற்கு வழிசெய்திடாதீங்கனு
சொல்லிட்டு போனை வச்சுட்டார் என்று கூறினாள் விசாலி.
அவர்
கூறிமுடிக்கும் வேலையில் வாசலில் ஒரு கார்வந்து நின்றது அப்பொழுது வீட்டில் இருந்த
மொபைலும் ஒலிஎழுப்பியது. கார்வந்ததுமே அது மாப்பிள்ளை ஜெனார்த்தனின் கார்தான்
என்று தெரிந்ததும் வெங்கி தான் கழட்டிய அலமார் கைபிடியில் தொங்கவிட்டுருந்த சட்டையை
மாட்டிகொண்டு வாசலுக்கு சென்று மாபிள்ளையை வீட்டிற்குள் வரச்சொல்ல ஆயத்தமாக
விசாலியும் கீதாவிடம் மாப்பிள்ளை வந்துட்டார் போல கீதா மாபிள்ளகிட்ட நேரத்தோட
வீட்டில் உன்னை கொண்டுவந்து விடச்சொல்லி அவருக்கு முன்னாடியே சொல்லிடு என்று
சொல்லிக்கொண்டே தெரியாத நம்பரில் வந்த அழைப்பை எடுத்து யோசனையுடன் பச்சைநிற பட்டனை
அழுத்தி காதிற்கு விசாலி கொடுத்தால்.
போனில்
ஆண்டி நான் வாசலுக்கு வந்துட்டேன் கீதாவை வரச்சொல்லுங்க என்று ஜனார்த்தனன்
கூறினான். உடனே ரெடியா இருக்கிறாள் உள்ளவந்துட்டு போங்க தம்பி என்று மரியாதையாக
கூறினார் விசாலி.
இல்ல
ஆண்டி நேரம் ஆகிடுச்சு பார்டி ஆறுமணிக்கு இப்போவே மணி இரண்டாகிடுச்சு. அவள்
பார்டிக்கு போட ட்ரெஸ் எடுத்துட்டு பியூடிபார்லர் போய் அவள் ரெடியாகிட்டு போக
நேரமாகிடும் வரும்போது வேணா உள்ள வர முயற்சி செய்கிறேன் அவளை அனுப்புங்க என்று
கூறித் தொடர்பை துண்டித்துவிட்டான்.
தனது
மனைவி போனில் பேசுவதை வைத்தே பேசியது மாப்பிள்ளை ஜனார்த்தன் என்றும் அவன் உள்ளே வர
விரும்பவில்லை கீதாவை காருக்கு அனுப்பிவைக்கச் சொல்லி வீட்டு வாசலில் நின்றுகொண்டு
தான் போன் செய்திருக்கிறான் என்பதை அவளின் உரையாடலின் மூலம் கிரகித்த வெங்கியின் முகம்
இறுகியது.
விசாலிக்கு
வருங்கால மாபிள்ளையின் தங்கள் குடும்பத்துக்குள் ஒட்டாத தன்மை இப்பொழுது புரிந்து
மனம் கனக்கத்தான் செய்தது. இருந்தாலும் பணக்கார வீட்டு பிள்ளை எளிமையான நம் வீட்டு
சூழல் அவருக்கு ஒருமாதிரிதான் இருக்கும் கல்யாணம் முடிந்தபின் கீதாவின் அன்பு அவரை
மாற்றிவிடும் என தம்னக்குதானே மனதினுள் சமாதானம் செய்தவள் வெங்கியிடம் நேரம்
ஆகிடுச்சாம் பார்ட்டி முடிந்து வரும்போது உள்ள வருகிறேன்னு சொல்கிறார்ங்க என்றவள்
மகளிடம் மாப்பிள்ளை காரில் காத்திருக்கிறார் பார்! வேகமாபோ... என்று கீதாவை பார்த்து
கூறினாள்.
சரிமா
போயிட்டுவந்துடுறேன் என்று பொதுவாக அனைவரிடமும் கூறி எழுந்து வாசலுக்கு தனது சிறு
பர்சை மட்டும் எடுத்துகொண்டு முன்னேறிய கீதாவின் மனதிற்குள் முதல் முதலில் தன
வருங்கால கணவருடன் வெளியில் செல்வதற்கு ஆர்வம் மட்டும் இல்லாமல், இத்தனைநாள்
காட்டுப்பாடாக வளர்ந்ததினால் அதை உடைத்து கல்யாணத்திற்கு முன்னே அவனுடன் செல்வதால்
அப்பா கூறுவதைப்போல் மற்றவர்கள் ஏதாவது தன்னை தவறாக பேசிவிடுவார்களோ...! என்ற
தயக்கம் இனம்புரியாத பயம் முதலியவை கலந்த கலவையான மனநிலையில் வாசல் படியில் இறங்கி
காரை அவள் அடைவதற்குள் டிரைவர் இருக்கையில் உட்கார்ந்திருந்த ஜெனார்த்தனன் எட்டி தனக்கருகில்
அவள் ஏறுவதற்காக கதவை திறந்து விட்டான்.
episode-02 தொடரும். episode-04

No comments:
Post a Comment