மெல்ல திறந்தது மனது (ஆதன்-னின்)
அத்தியாயம் 05
நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்தப்படியே மொபைலில் அவள் நம்பரை க்யூட் என்று சேவ் செய்தபடியே வீட்டிற்குள் நுழைந்தான் தேவா…..
"எங்கடா போய்ட்டு வர"? என்றாள் ரேகா…..
"ஏன் சொல்லியே ஆகனுமா?" என்றான் தேவா…..
"இதைத்தான் ஆணாதிக்கம்னு சொல்றது இதே நான் இப்படி வெளிய போய்ட்டு வந்திருந்தா கேட்காம விட்ருவிங்களா நீங்களாம்"? என்று வீட்லயே பெண்ணியப் புரட்சியை ஆரம்பித்தாள் ரேகா. நடக்கற எதையுமே கண்டுக்காம உமா புத்தகத்தில் மூழ்கி இருந்தாள்…..
"அம்மா மீனம்மா இந்தப் பைத்தியத்துக்கிட்ட இருந்து காப்பாத்துமா"
"யார்டா பைத்தியம்"
"யாரு நீதான். நாலு சுவத்துக்குள்ள பூனை மாதிரி சுத்திக்கிட்டு, fbல பெமினிசியம் பேசறனு புலி மாதிரி ஸீன் போட்டுக்கிட்டு இருக்க. இங்க பாரு உன்னை நிறையப் பேரு அரைவேக்காடாத்தான் பார்க்கறாங்க"
"யாரோ என்னமோ சொல்லி இருக்காங்க யார்டா சொன்னது"னு சண்டைக்கு ரேகா தயாராக, சந்திரசேகர் ஆபிஸ் முடிந்து வீட்டுக்குள் நுழைந்தார்……
தேவாக்கிட்ட வந்து மெதுவான குரலில் ரேகா கேட்டாள்…..
"யார்டா சொன்னது?"
"நம்ம லோக்கல்ல இருக்கப் பலபேரு யாரைனு ஸ்பெசலா சொல்றது"னு இன்னும் வெறியேத்தி விட்டான் தேவா……
"டே வந்ததும் வராதுதுமா அவக்கிட்ட என்ன?! போய்ப் பிளாஸ்க்ல காபி இருக்கு ஊத்திக்கோ"னு மீனாட்சி நகர,
"ஏன் மீனம்மா அப்பாவுக்கு எல்லா வேலையும் செய்ற ஆனா எங்களுக்கு மட்டும் எதைக் கேட்டாலும் நீங்களே எடுத்துக்கோங்கனு சொல்ற"னு மீனாட்சியைத் தேவா கேட்க.,....
" அது அக்ரிமென்ட் டா…. அவர் வேலைக்குப் போவாரு, நான் வீட்ட பார்த்துக்கனும்னு….. நான் படிச்ச பத்தாவதுக்கு வேலைனு எதுவும் கிடைக்கல அதான். அவங்கவங்க வேலையை அவங்கவங்க செஞ்சு பழகுங்க….
ஒரு மனுசியால எல்லாருக்கும் சமைச்சி, ஒருத்தரக் கவனிக்கறதே பெரிய விசயம். அதுவும் உங்கப்பா மாதிரி வறட்டுவாதிங்கள சமாளிக்கறது பெரிய கஷ்டம் டா"னு சொன்ன மீனாட்சி புருசனுக்குக் காபி எடுத்துட்டு வந்து கொடுக்கச் சந்திரசேகர் சோபாவில் சாய்ந்தார்.
தேவா எதுவும் பேசாமல் உமா பக்கத்துல போய் உட்கார்ந்தான்…..
"ஹே உமா எப்பவும் புத்தகத்துலயே இருக்கியே போரடிக்கலையா" என்றான் தேவா…
"அடிக்குதுதான்ணா ஆனா நான் இந்த லெவல்ல படிச்சாதான் நான் நினைக்கற வரை அப்பா படிக்க வைப்பாரு. இல்லணா உங்கள விட்ட மாதிரியே என்னையும் விட்டுட்டு வேலைத்தேட சொல்லுவாரு" என்ற உமா மறுபடியும் புத்தகத்தில் மூழ்க ஆரம்பிக்க……
" ஹே உமா நாச்சியாவும் நீயும் ப்ரன்ட்ஸ்ஸா?!
"ஆமா ஏன்ணா"
"இல்ல இன்னைக்கு என்னை வேளச்சேரிக்கு டிராப் & பிக்கப் பண்ணுச்சி, அந்த டிராவல்ல நம்பர் குடுத்துச்சி அதான் கேட்டேன்"
"ரொம்ப ப்ராக்டிலான ஆளுணா அதுமட்டுமில்லை செம போல்ட் செம டைப்ணா"
" ம் ம் ஆமா சரி நான் உன்கிட்ட கேட்டனு நாச்சியாக்கிட்ட கேட்காத ஓகேவா" னு சொன்ன தேவா ரூமுக்குள் நுழைந்து நாச்சியா வாட்ஸ்அப் நம்பருக்கு ஒரு ஹாய் போடலாமா வேணாமானு யோசிச்கிட்டு மொபைலை பார்த்தப்படியே இருக்க…..
நாச்சியா வாட்ஸ்அப்புக்கு ஒரு மெசேஜை தட்டினாள் உமா…..
"ஹாய் அக்கா, இன்னைக்கு அண்ணன வேளச்சேரிக்கு டிராப் & பிக்கப்பாமே. உங்கள பத்தி பேசினதச் சொல்ல வேணாம்னு ஸார் சொன்னாரு"னு அனுப்பிட்டு மொபைலை உமா வைத்தாள்…
தேவாவுக்கு நாச்சியாவ ஜோடி சேர்த்திவிட இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காதுனு கூலா மெசேஜை தட்டிவிட்டுட்டா….. அண்ணன்களின் காதலுக்குத் தங்கைகள்தானே தேவ தூதர்கள்.
கொஞ்சம் நேரம் கழித்து நாச்சியாக்கிட்ட இருந்து மெசேஜ் வந்தது…
"அப்படியா உமாம்மா"
"ஆமாக்கா"
"எந்த மெசேஜியும் அந்தப் பக்கம் இருந்து வரலையே உமாம்மா"
"ஜென்மத்துக்கும் வராது, சண்டைனா கூடத் தைரியமா போய்டும். அண்ணன் கராத்தேவுல பிளாக் பெல்ட்டுக்கா. ஆனா பொண்ணுங்கக்கிட்ட பேசனும்னா கை கால் உதறும்"
" ஹஹஹஹ"
"நீங்களே ஒரு மெசேஜ் போடலனா ஜென்மத்துக்கும் அங்க இருந்து மெசேஜ் வராதுக்கா"
" ரொம்பக் கஷ்டம் பேபி"
என்ற மெசேஜோடு அவர்கள் சாட்டிங் முடிந்தது!
……………
"டே வாசு இன்னைக்கு ஏன் போகாமயே இருக்க?"
" நீ வெளியில போய்ட்டக்கா, அப்பா தனியா கடைய எப்படிப் பார்ப்பாரு அதான் இருந்துட்டேன்"
" செல்லம்டா சரி நைட் இங்கையே சாப்டுட்டு போ" என்று நாச்சியா சொல்ல…..
"இன்னைக்கு ஹோட்டல்ல வாங்கிடுமா உனக்கும் டயர்டா இருக்கும்" என்று சண்முகம் சொல்ல,
நைட் 8 மணி அளவில் புல்லட்டை எடுத்தாள் நாச்சியா ஹோட்டலுக்குப் போக….
"அம்மா புல்லட் எதுக்கு ஸ்கூட்டியில போயேன்"
"அப்பா எனக்கு ஸ்கூட்டி சைக்கிள் மாதிரி பீல் ஆகுதுப்பா. புல்லட்தான் வண்டி மாதிரியே தோணுது" என்றவள் புல்லட்டை நகர்த்தினாள்…..
டீ கடை சிமெண்ட் பெஞ்சில் விக்கிக்கூடத் தேவா பேசிக்கிட்டு இருக்கப் புல்லட்டை வேகமா கொண்டுவந்து ப்ரேக் அடித்து நாச்சியா நிறுத்த ஒரு நொடி ரெண்டுபேரும் அதிர்ச்சியாகி இயல்பு நிலைக்குத் திரும்ப நாச்சியா சிரிச்சப்படியே பேச ஆரம்பித்தாள்…
"ஹாய் விக்கி"
"ஹாய் நாச்சி"
"அப்புறம் தேவா ஸார் நீங்க கராத்தேவுல பிளாக் பெல்ட்டாம் சொல்லவே இல்ல" என்றாள் நாச்சியா….,
" யார் சொன்னாங்க" என்றான் குழப்பத்தோட விக்கி….
"என் பேபிமா உமா சொன்னாள். என்னை விசாரிச்சிங்களாமே"னு அசால்ட்டா நாச்சியா சொல்ல விக்கி தேவாவை பார்க்க தேவா எச்சில் விழுங்க ஆரம்பித்தான்….
"உன் பாக்கெட்ல இருக்க மொபைலை எடுத்து வாட்ஸ்அப் பாரு என் மெசேஜ் இருக்கும். எனக்கு டைமாகுது பை பாய்ஸ்" என்றவள் புல்லட்டை ஸ்டைலாக ஓட்டி போனாள்…..
"என்னடா நடக்குது எனக்குத் தெரியாமனு விக்கி கேட்க….
நடந்ததை எல்லாம் தே6வா விக்கியிடம் சொல்லிக்கொண்டிருக்க உமா வாட்ஸ்அப்பில் நாச்சியாவுக்கு ப்ரி ஆயிட்டு கால் பண்ணுங்கனு மெசேஜை அனுப்பி வைத்தாள்.
உமா எல்லாவற்றிலும் ஒருபடி மேல! தேவா மேல வைச்சிருக்கப் பாசத்திலும்!.....
அத்தியாயம் 06
ஹோட்டல் முன்னால் பந்தாவாய் புல்லட்ட நிறுத்திட்டு…..
"மாஸ்டர் அண்ணாச்சி 15 இட்லி, 3 ஆம்லேட், ரெண்டு மட்டன் ப்ரை" என்று ரஜினி ஸ்டைலில் வேகமா சொன்ன நாச்சியா காலியாய் இருந்த டேபிளில் உட்கார,
எதிர் டேபிள்ள இருந்த சிவா சந்துருக்கிட்ட கிசுகிசுத்தான்…
"செம பீசுடா மச்சான் ஆனா தெருவுல, fbலனு நானும் பல பிட்ட போடறன் வொர்க் அவுட்டே ஆக மாட்டேங்குது. போஸ்ட் மட்டும்தான் மச்சான் போடறா ஆனா ரிப்ளே பண்றதே இல்ல"னு சலிச்சிக்கிட்டான்……
"இவ ஐடி நேம் குடுறா மச்சான்" என்ற சந்துரு அவளுக்கு ரிக் அனுப்பிட்டு பாலோயிங்கல ஸீ பர்ஸ்ட் வைச்சான்……
"சந்துரு இவள மட்டும் மடக்கி வழிக்கு கொண்டுவந்துட்டா மாசம் இருபதாயிரம் சும்மா கறக்கலாம்டா, நீதான் பெண்ணியம் பித்தளைனு நல்லா உருட்டிவியே ட்ரை பண்ணேன்" என்றான் சிவா……
" இங்க டீ கடை சிமெண்ட் பென்ஞ்ல அனாதையா ரெண்டு பேரு உட்கார்ந்து இருப்பானுங்களே" என்றான் சந்துரு…..
"ஆமா தேவா, விக்கி" என்றான் சிவா
"ம் அந்தத் தேவாவோட அக்கா ரேகா பெமினிசியம்னு பேஸ்புக்ல சுத்திக்கிட்டு இருக்கா, அவளுக்குத்தான் ரூட் போட்ருடிருக்கன்,
எல்லாப் போஸ்ட்டுக்கும் சப்போர்ட் பண்ணி வாட்ஸ்அப் நம்பர் வாங்கற வரைக்கும் போயிருக்கேன். இப்பதான் பேச்சுவார்த்தை நார்மலா என்ன புடிக்கும் புடிக்காதுனு ஆரம்பிச்சிருக்கு"என்றான் சந்துரு…,.
"அமெளன்ட் தேறுமா மச்சான்?!"
"அமெளண்ட் தேறுமானு தெரியல மச்சான் ஆனா அவ தேறுவா செம பீசுதான் அவளும்"
" அப்ப எனக்கு மச்சான்" என்றான் சிவா
"நீயில்லாமயா மச்சான் வழக்கம் போலத்தான்"னு மீசைய தடவியபடி சர்வரை குருமா கொண்டு வரச்சொல்ற சாக்குல வேகமா கூப்பிட்டான் நாச்சியா திரும்பி பார்க்கன்னே…. ஆனால் நாச்சியாவோ மாஸ்டர் மணிக்கிட்ட பிஸியா பேசிக்கிட்டு இருந்தாள். மாஸ்டரும், ஓனரும் மணியேதான். மதியத்துல மணிக்கு ரெஸ்ட் தர மணி பொண்டாட்டி சுந்தரி கல்லாவில் உட்காருவாள்!
………………..
"ரேகாவ கூப்டு உமா" என்றார் சந்திரசேகர்…
"இருங்கப்பா கூப்டறன்" என்ற உமா ரேகா ரூமூக்குள் போய்….
"அக்கா உன்னை அப்பா கூப்பிடறாங்க"
"எதுக்காம்"
"உன் பர்த்டே வருதுல அதுக்காக இருக்கும்"
"அப்ப வரேனு சொல்லு"னு சொன்னவ எழுந்து பொறுமையா போனாள்…..
"என்னப்பா"
"என் ப்ரன்ட் ஒருத்தன் இங்க லோக்கல்ல ஜெராக்ஸ், கம்யூட்டர் சென்டர் ஒன்னு ஓபன் பண்றான்" என்றார் சந்திரசேகர்….
"ஓகேப்பா என் விஸ்ஸச சொல்லிருங்க"னு ரேகா சொல்ல கடுப்பான சந்திரசேகர்…..
"முதல் பிள்ளையா பொறந்து பாசமா வளர்த்தினாதால பொறுமையா இருக்கேன். சொல்றத ஒழுங்கா கேட்டுக்கோ." என்றார் சந்திரசேகர்!
"சரி எதோ உங்க அதிகாரத்தைக் காட்ட நினைக்கறிங்க காட்டுங்க" என்றாள் ரேகா…
"இங்க பாரு ரேகா ஒன்னு வேலைக்குப் போ இல்லனா கல்யாணத்த பண்ணு" என்றார் சந்திரசேகர்….
" எனக்கு ரெண்ட பத்தியும் இப்ப ஐடியா எதுவுமில்லப்பா ஒரு சிக்ஸ் மன் தொந்தரவு பண்ணாதிங்க என்றவள் விடுவிடுனு ரூமுக்குள் போய்க் கதவைச் சாத்திக்கொண்டாள்……
உமாவை கூப்பிட்ட சந்திரசேகர்….
"உமா மணி ஒம்பதாகுது எனக்கு ஒரு மூனு தோசை மட்டும் கொண்டு வாம்மா"என்றார்…..
………….
"என்னடா தேவா டிராப், பிக்கப் போன்நம்பர் எக்சேன்ஞ் வரை நடந்திருக்கு சொல்லவே இல்லை" என்றான் விக்கி…
"இதுல சொல்ல என்னடா இருக்கு அந்தப் பொண்ணு போல்டா இருக்கு. ஸ்பெசலா இருந்தாதான் சொல்லியிருப்பனே" என்றான் தேவா…..
"உன் மொபைலை எடுத்து அவளுக்கு ஒரு ஹாய் அனுப்புடா முதல்ல டியூப்லைட்டு" என்ற விக்கி மொபைலை பிடிங்கி ஹாய் என்று அனுப்பு ஒருடிக் விழுந்தது!
"அவ ஆன்லைன்ல இல்ல தேவா"
"ரொம்பச் சந்தோசம் வா டைமாச்சு வீட்டுக்குக் கிளம்பலாம்"எனத் தேவா எழ விக்கி வண்டியை எடுத்தான். தேவாவுக்கு வண்டி இல்லே. வேலைக்குப் போய் நீயாதான் வாங்கிக்கனும்னு ஸ்ட்ரிட்டா சொல்லியிருந்தார் தேவா அப்பா……
வீட்டுக்குப் போனதும் உமா தலையில ரெண்டு கொட்டு வைக்கனும்னு போனான் தேவா..
தேவா வீட்டுக்குள் நுழைந்ததும் சந்திரசேகர் கூப்பிட்டார்……
என்னடா எங்க போயிட்டுவர நீ நடந்துகறத பாத்தா எக்ஸாமுக்கு தயாராகற மாதிரியே தெரியலையே" என்றார்…..
"இல்லப்பா படிச்சிட்டுதான் இருக்கேன்!" என்றான் தேவா….
"சரி சரி என்னமோ பாஸ் பண்ற வழிய பாரு!" என்ற சந்திரசேகர் உமாவை கூப்பிட்டு சாப்பிட்ட தட்டை தந்துவிட்டு அப்படியே சோபாவில் சாய்ந்தார்.
"ஹே உமா எதுக்குடி நாச்சியாக்கிட்ட போட்டுக்குடுத்த" என்று தேவா அவ தலைல குட்டு வைக்கப் போக உமாவின் சிரிப்புக் குட்டை தடுத்தது.
"சொல்லு எதுக்குப் போட்டுக்குடுத்த?!
"நான் சொல்லலைனா நீயா ஒரு ஹாய் அனுப்ப நாலு வருசம் ஆகிடும்ணா அதான் அனுப்பினேன்"! என்று கிண்டலா சொல்ல உமாவால நல்லதுதான் நடந்திருக்குனு உமாவிடம் வந்து "தாங்க்ஸ்" என்றான்.
"நீ இதுக்குச் சந்தோசப்படுவனு நல்லா தெரியும்ணா என்ஜாய் பட் குரூப் எக்ஸாம்ல பாஸ் பண்ற வழியைப் பாரு"னு கிச்சனுக்குள் நுழைந்தாள் உமா….
ரேகா வாட்ஸ்அப்பில் பெண்விடுதலையும் சாத்தியம்னு சந்திருக்கிட்ட பேச ஆரம்பிச்சிருந்தாள்!
இவள எப்படி வீட்ட விட்டு வெளிய கொண்டு வருவதுனு யோசனையோடவே ஒவ்வொரு மெசேஜையும் பார்த்து பார்த்து அனுப்பினான்!
ரேகாவுக்கு ஏழரை ஆரம்பித்த நேரம் இந்த இரவுதான்!
தவறி போய்ச் சிக்குவாளா இல்லை தப்பிப்பாளா?!!!!!!
அத்தியாயம் 07
வழக்கம் போல அதிகாலை நான்கு மணிக்குச் சண்முகத்தை எழுப்பி மார்கெட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, காலை வேலைகளை முடித்தவள் மொபைலை எடுத்து தேவாவுக்கு ஹாய் குட்மார்னிங் என வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜை தட்டி விட்டுட்டு டீ குடிக்க ஆரம்பித்தாள்…. ஏழு மணிக்கு எழற தேவா இந்த மெசேஜே இப்ப எப்படிப் பார்க்க போறான்?!
சண்முகம் மார்கெட்டுக்கு போய் வந்துட்டு கடையில வழக்கமான வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சார்…..
உமா பால் வாங்க கடைக்கு வரவும்……
"ஹே பேபி உங்கண்ணன் இன்னும் எழுலலையா?!" என்றாள் நாச்சியா!
"ஏன் கடையில ஏதாவது எங்கண்ணனுக்கு வேலை இருக்கா" என்றாள் கிண்டலாய் உமா!
" வேலை கடையில இல்ல வீட்டுலதான் இருக்கு" என்று குறும்பாய் கண்ணடித்தாள் நாச்சியா!
" ஓஹோ அப்ப நான் போய் எழுப்பி விடவா?!"
" வேண்டாம் வேண்டாம் மனுசன் ஏற்கனவே மெர்சலாயி இருக்காரு விட்டு பிடிப்போம்"
" சரி நான் வீட்டுக்கு போய் இப்ப கால் பண்றன் கொஞ்சம் பேசனும்" என்ற உமாவை கேள்விக்குறியோடு பார்த்த நாச்சியா சரி பண்ணு என்றாள்!
"சரி போய்ப் பண்றன் இல்ல நைட் பண்ணட்டுமா"
"நைட்டே பண்ணேன்" என்று நாச்சியா சொல்ல சரிக்கா என்ற உமா பாலோடு வீட்டுக்கு கிளம்பினாள்…..
தேவா படிப்புல சுமார்னு உமாவுக்கு நல்லாவே தெரியும். அப்பாவும் தேவா ப்யூச்சருக்கு பெருசா ஒன்னும் பண்ண மாட்டார். எல்லாத்துக்கும் மேல தேவாவை பார்த்துக்கற ஒரு பொண்ணுதான் வேணும். அதுக்கு நாச்சியாதான் சரியான ஆள்னு உமா நினைத்தாள்.
வீட்டுக்கு உமா கடைக்குட்டிதான் ஆனால் அறிவில், பாசத்தில் அம்மா மீனாட்சி போல…… அதுமட்டுமல்ல தேவா மேல தனிப் பாசம் அவளுக்கு….
ஏரியா பசங்க தன்னை டீஸ் பண்ணப்பதான் தேவாவோட வீரத்தையும் பாசத்தையும் பார்த்தாள். ஒரே ஆள் நாலு பேர சர்வ சாதரணமா சில நிமிடங்கள்ல அடிச்சி சாய்ச்சிட்டு கூலா உமாவ வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தான். கராத்தே பிளாக் பெல்ட்னா சும்மாவா!
அப்பா போன்ற ஒரு பாதுகாப்பு உணர்வை அன்னைக்கு அண்ணனிடம் பார்த்தாள். அந்த எண்ணம்தான் இன்று அவளைத் தேவாவின் எதிர்காலம் பற்றி எல்லாம் யோசிக்க வைக்கிறது!
ஏழு மணிக்கு மேல எழுந்தவனுக்கு நாச்சியாவின் குட்மார்னிங் மெசேஜை பார்த்ததும் இதயத்தில் சில்லென்ற ஒரு உணர்வு ஓட ஆரம்பித்தது…..
இப்ப கொஞ்சம் தைரியமாகவும் இருந்தது…. இவனும் திருப்பி யா குட்மார்னிங் ஹேவ் ஏ நைஸ் டேனு ரிப்ளை பண்ணான்…..
ஆனா நாச்சியாவின் அடுத்த ரிப்ளை அவன் இதயத்தில் ஆணி அடிச்ச மாதிரி இருந்தது..
"என்ன பிரன்ட் பண்றிங்க"னு மெசேஜ் இருந்தது. இந்தப் பிரன்ட்டுங்கற வார்த்தைதான் அவன் இதயத்தில் ஆணிக்கு காரணம்…..
திருப்பி ரிப்ளை ஏதும் பண்ணாம உமாகிட்ட வந்தான்….
" என்ன உமாம்மா நாச்சியா ப்ரன்ட்னு சொல்லுது"
"வாவ் பரவாயில்லையே உனக்கு ஒரு கேர்ள் ப்ரன்ட் இருக்கறது எவ்வளவு பெரிய விசயம்!" என்றாள் உமா…..
" விளையாடத உமாம்மா"
" பின்ன மாமானா கூப்டுவாங்க. முதல்ல நல்ல ப்ரன்டா பழகுணா" என்று உமா சொல்ல,
"என்ன அண்ணனும் தங்கச்சியும் இரகசியம் பேசிக்கறிங்க?"னு மீனாட்சி கேட்க. அண்ணனுக்குக் காபி வேணாமாம் டீ வேணுமாம்னு சொல்லி சமாளித்தாள் உமா!
.,...........,
"அந்த ரேகா மேட்டர் எப்படிப் போகுது மச்சான்" என்றான் சிவா!
" அவள வீட்ட விட்டு வெளியில இழுத்துட்டு வரனும். நைட் அதுக்கான பிட்டத்தான் வாட்ஸ்அப்ல போட்டு வைச்சன்" என்றான் சந்துரு……
" காசு தேறலனாலும் பரவாயில்லை மச்சான் சும்மாவாவது வைச்சி ஓட்டுவோம். போலீஸ்கிட்ட போற இரகம் இல்லையே இவ?! என்று சந்தேகத்தோட சிவா கேட்க…..
"ஏன்டா திடிர்னு சந்தேகம்"
"இல்ல பெமினிசியம் பேசற ஆள்னு சொன்னியே அதான்"
"ஹஹஹ இவ பேஸ்புக் புழுடா, நாலு சுவத்துக்குள்ள மொபைல்ல சுத்தற பூனை, பெண்ணியம்னா என்னனு இவளுக்குச் சொல்லிக்குடுக்கவே பத்து ஆள் வேணும்"னு சொல்லி சந்துரு சிரிக்கச் சிவாவும் சிரித்தான்……
"அந்த மளிகைக்கடை நாச்சியாவதான் மச்சான் கரெக்ட்டா கட்டம் கட்டனும்" என்ற சிவாவை
"பொறு பொறு அவளுக்கேத்த ஒரு வேசத்தையும் ரெடி பண்ணுவோம். அவ கடையில நாம வாங்கற மாதிரி பொருள்கூட எதுவுமில்லடா புதுசா ரூட்ட புடிக்கனும். நான் கோலபாக்கத்துல கரெக்ட் பண்ணது ஒன்னு அமெளன்ட் தரனு சொல்லி இருக்கு பார்த்துட்டு வரன்" என்று வண்டியைக் கிளப்பினான் சந்துரு!
…………
"எங்கடி உமா கிளம்பிட்ட" என்றாள் ரேகா……
"காபி போட பால் வாங்க போறன் ஏன்கா?"
"சரி இரு நானும் வரேன்"னு சொன்னவளை ஆச்சரியமா பார்த்த உமா சரி வானு சொல்ல கடைக்குக் கிளம்பினாள் ரேகா…..
சந்துரு என்ற சாத்தான் ஓதிய வேதம் கொஞ்சம் வேலைச் செய்ய ஆரம்பித்திருந்தது ரேகாவிடம்!
"ஹாய் உமாம்மா இவங்க யாரு?!
"இவங்க என் அக்கா பேரு ரேகா" என்றாள் உமா….
"ஹாய் ரேகா" என்றாள் நாச்சியா!
"ஹாய் உங்க பேரு என்ன?"
" என் பேரு கோதை நாச்சியார்"னு சொல்ல ஆச்சரிரமா பார்த்தாள் அவளின் பேரையும் அவளின் அழகையும்…….
சண்முகம் வந்து பக்கத்துல இருக்கப் பருப்பு மண்டியில இருந்து பருப்பு எடுத்துட்டு வரச்சொல்ல,
நாச்சியா புல்லட்டை எடுத்தாள். இதைப் பார்த்ததும் இன்னும் ஆச்சரியமானாள் வழக்கம் போலப் பொறாமையும் ஆனாள்….
"ரேகா. உமா வேலையிருக்கு இன்னொருநாள் பேசலாம்" என்று புல்லட்ட விரட்டிய நாச்சியா தலை மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்தாள். இப்ப ரேகாவிற்கு வெளி உலகத்திற்கு வா என்று சந்துரு சொன்னது வேதமாய்த் தோணியது!
அத்தியாயம் 08
நைட் 9 மணிக்கு மேல நாச்சியாவுக்குப் போன் அடித்தாள் உமா.
"ஹலோ"
"அக்கா உமா பேசறேன்"
"தெரியுது பேபிமா சொல்லு"
" நேரா விசயத்துக்கு வரவாக்கா"
"இல்ல வேணாம் நம்ம ஏழு வீதியையும் சுத்திட்டு வா…., எப்படியும் பேச வந்ததைப் பேசத்தான போற ஸோ சொல்லு"
" நீங்க என் அண்ணனை லவ் பண்றிங்களா?" னு பட்டுனு கேட்டாள் உமா!
" ஆமா இதென்னடி திடீர் சந்தேகம். உனக்குத் தானாவே புரியும் அப்படினுதான நினைச்சேன்" என்றாள் நாச்சியா….
" புரிஞ்சதுக்கா ஆனாலும் கன்பார்ம் பண்ணிக்கக் கேட்டேன். தேவாண்ணன் ரொம்ப மூடி டைப். ப்ரன்ட்டுனு கூட விக்கி மட்டும்தான் ஸோ…,.. !"
"என்ன ஸோ?"
"நீயா ப்ரபோஸ் பண்ணாதான் உண்டுக்கா"
"கொஞ்சம் பொறு உமா…. கீழ வீட்டை இடிச்சி அதையும் சேர்த்திக் கடைய பெருசா பண்ண பிளான் இருக்கு. கடைக்கு மேல வீட்டைக் கட்டிக்கலாம்னு இருக்கேன்.
இப்ப பொருளை வெளிய இருந்து வாங்கறாங்க. நான் சொல்ற மாதிரி கட்டிட்டா கடைக்கு உள்ள வந்து பொருள் வாங்கலாம். சாமான்களையும் நிறைய வாங்கி வைக்கலாம்.
அதனால இந்த வேலை நேரத்துல லவ்வையும் மெய்ன்டைய்ன் பண்ண முடியாது! அதான் இந்த வேலைங்க முடியட்டும் நானே உன் மூலமாவே பர்ஸ்ட் ப்ரபோஸ் பண்றன். ஆனா இது எதையும் தேவாக்கிட்ட சொல்லிடாத" என்று பெரிய விளக்கமா சொல்லி முடித்தாள் நாச்சியா!
"சரிக்கா நிச்சயம் சொல்லமாட்டேன்" என்றாள் உமா!
" கொஞ்ச நாளைக்கு இந்த ஃபீலிங்க உங்கண்ணன் அனுபவிக்கட்டுமே?!
" அனுபவிக்கட்டும் அனுபவிக்கட்டும் ஆனா அங்க ஒரு சின்னச் சந்தேகம் கேட்கனும்"
"கேளு பேபிமா!"
" இந்த லவ் எப்ப இருந்து?!
"நான் 10 வது படிக்கறப்ப இருந்து….. இப்பதான் அந்தப் பீலிங் லவ்வுனு உறுதியாச்சு"
" பார்ரா எங்கண்ணன் லக்கிதான்"
"ஏன்டி?"
"உங்கள மாதிரி தைரியமான அழகான பொண்ணு கிடைக்கறதுக்குத்தான்கா" என்றாள் உமா……
"சரி சரி கடை சாத்தற நேரம் ஆய்டுச்சு. சன்டேவுல நம்ம வீதி பார்க்ல பொறுமையா நேரா பேசுவோம்" என்ற நாச்சியா போனை கட் பண்ணினாள்!
…………
இதே நேரத்தில் இதுவரை வாட்ஸ்அப் பில் சாட்டிங்கில் மட்டும் சந்துருவோட பேசிக்கிட்டு இருந்த ரேகா இன்று நம்பரை வாங்கிப் பேசிக்கொண்டிருந்தாள்!
"நீங்க சொன்னது உண்மை சந்துரு. நான் வெளிய வரனும்"
" இப்பவாவது உங்களுக்குப் புரிஞ்சதே வர சன்டே மகாபலிபுரம் போயிட்டு வரலாம் வரிங்களா?!
" ஐயோ அவ்வளவு தூரம்லாம் கஷ்டம் சந்துரு!"
"ஏங்க ரேகா?"
" எனக்குப் பேஸ்புக் ப்ரன்ட்ஸ்தான் இருக்காங்க ஸோ வீட்ல எந்தச் சாக்கும் சொல்லிட்டு வர முடியாது!
"அப்படினா வாக்கிங் போறனு நம்ம பார்க்குக்கு வாங்களேன். போட்டோவுல பார்த்த அழகை நேர்ல பார்க்கறன்"
" ம் ரொம்பலாம் எதிர்பார்க்காதிங்க. நான் சுமார்தான்"
" அதை நீங்க சொல்லக்கூடாது பார்த்துட்டு நான் ல்ல சொல்லனும்"
" பார்த்தா நீங்களே சொல்லுவிங்க"
"என்ன அழகினுதான"னு புகழ்ச்சி கொக்கியை போட அவளுக்குள் இருந்த பெண்மை வெளிப்படத் தொடங்கியது……
"நீங்களும் ஹைய்ட்டா அழகாத்தான் இருக்கிங்க"
" ஓ உங்க ஊர்ல ஹைய்ட்டா இருந்தா அழகா? உங்க ரேன்ஞ்சுக்கு வராது"னு என்றவள் உமா ரூமுக்குள் படுக்க வரவும் போனை கட் பண்ணிவிட்டு வாட்ஸ்அப் மெசேஜில் நாளைக்கு ஈவ்னிங் 5 மணிக்கு பார்க்குக்கு வாக்கிங் வரதா அனுப்பி வைத்தாள்.
.,....,...,,,,,,
சந்திரசேகரும் சாப்பிட்டுப் படுத்துவிடத் தேவா சாப்பிடுறதுக்காகக் காத்திருந்தாள் மீனாட்சி ..,..
"தேவா சாப்பாடு போடவாப்பா"
"ம் சரிம்மா போடு" என்று ஒப்புக்குக் கையில் வைத்திருந்த புக்கை வைத்து விட்டு சாப்பிட அமர்ந்தான்…..
மீனாட்சி சாப்பாடு எடுத்து வைக்கச் சாப்பிட ஆரம்பித்த தேவா கிளறி கிளறி கொத்திக்கிட்டு இருந்தான்…. சாப்பாடே இறங்கல. கஷ்டப்பட்டுச் சாப்டுட்டு ரூமுக்குள் நுழைந்தான்…..
மொபைலை எடுத்து நாச்சியாவுக்குக் குட்நைட் என்று மெசேஜை தட்டி விட்டுட்டு வாட்ஸ்அப்பையே பார்த்துக் கொண்டிருந்தான்….
ஆனால் வாட்ஸ்அப்பில் ரிப்ளை வராமல் நாச்சியா கால்லில் வந்தாள். எதுவும் புரியாம கடைசி ரிங்க்கில் போனை அட்டன்ட் பண்ணி ஹலோ என்றான்……
"ஹாய் தேவா சாப்டாச்சா?! என்றாள் நாச்சியா!
" ம் நீங்க?"
"ஸ்ஸப்பா எதுக்கு இந்த ங்லாம் பேரச்சொல்லி கூப்பிடு தேவா"
" சரி நான் கோதைனு கூப்டறன்"
"ரொம்ப நல்லது எல்லாரும் நாச்சி, நாச்சியானு கூப்பிட்டு கூப்பிட்டு கோதைனு எனக்கொரு பேர் இருக்கறதே மறந்து போச்சு"
" என்ன சாப்பிட்ட?" என்றான் தேவா!
"அப்பாடா ஒருவழியா நீயா பேசிட்ட அதுவும் ங் போடாம, மழை வராம இருந்தா சரிதான். நீ விக்கி கூட எப்படிப் பழகுவ?! என்றாள் நாச்சியா!
" ரொம்ப ப்ரி யா" என்றான் தேவா
" என்கிட்டயும் அப்படிப் பழக ட்ரை பண்ணு தேவா, நாம நல்ல ப்ரன்ஸ்ஸா இருப்போம்"
"ம் ஆனா உடனே என்னால முடியாது"
"சரி போகப் போகச் சரி ஆய்டும்தான?!
"ஆய்டும் ஆனா…… " என்று இழுத்தான் தேவா…..
"என்னப்பா இழுக்கற தைரியமா சொல்லு"
"இல்ல என்னால உன்ன மாதிரி டக் டக்னு தோணறத பேச முடியாது"
"தெரியும் அது பிரச்சினை இல்லை. உன் மனசு சுத்தமா இருக்கு ஸோ உன் பார்வையும் சுத்தமா இருக்கு அதனாலதான் ப்ரன்டா இருப்போம்னு சொல்றன், நம்பர் தரன், நானா கால் பண்றேன் புரியுதா"
"ம் புரியுது!"
"ம் ஓகேப்பா குட்நைட் காலையில 5 மணிக்கு மெசேஜ் பண்றன்"னு அழுத்தி சொல்லிவிட்டுப் போனை கட் பண்ணினாள் நாச்சியா!
தேவா அனிச்சையா மொபைலில் அலாரத்தைக் காலை 5 மணிக்கு வைத்தான்!....
---- தொடரும் ----

No comments:
Post a Comment