anti - piracy

Post Page Advertisement [Top]

                         மெளனத்தை மொழிபெயர்த்த மாயோள் (தீபாஸ்)

                                                     

                                 

WhatsApp%20Image%202022-04-13%20at%2010.07.53%20PM

அத்தியாயம் ௦3

அந்திகையிடம் “ இந்த ப்ராஜெக்ட் சைனாகும் வரை கொட்டேசனில் கோட் பண்ணிய அமவுண்ட் வெளியில் லீக் ஆகக்கூடாது அதனால் இங்கேயே வைத்து ரெடி பண்ணுங்க” எனச் சொன்னான் தடாகன்.

அவன் கொடுத்த தகவல்கள் கொண்டு கொட்டேசன் ரெடி செய்யும் போது அவள் கண்டுகொண்டது ‘ப்ராஜெக்டின் மூலம் கம்பெனி ஈட்டும் லாபத்தின் சதவீதம் மிகச் மிகச்சொர்ப்பமாக இருந்ததால்’ திடுக்கிட்டாள்.

கட்டுமானத்தின் அடக்க விலையோ என்பது கோடி..!! ஆனால் அதற்கான லாபம் ஒரு கோடி கூட தேறாது என்பதை கண்டவள் ‘இங்க என்ன பிரீ சர்வீஸா பண்றோம்?’ என தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்

சொர்ப்ப லாப விகிதம் வைத்து கொட்டேசன் ரெடி செய்யச்சொல்கிறான் இந்த வளர்ந்தவன். இதென்ன இவன் கம்பெனியா? லாபம் கிடைத்தால் முதலாளிக்குத்தானே போகும்ன்னு நெனச்சிருப்பானோ..!

இவன் கம்பெனியா இருந்தா இப்படி செய்வானா? இந்த பூனைக்கு யார் மணியை கட்ட? என்ற மனத்தின் அங்கலாய்ப்புடனே கொட்டேசன் ரெடி செய்துகொண்டிருக்கும் போது அங்கு இந்திரசித் வந்து சேர்ந்தான்.

உள்ளே நுழைந்ததும் தடாகனை பார்க்காது அவன் கண்கள் தடாகனின் எதிரில் அமர்ந்து கொட்டேசன் ரெடி செய்துகொண்டிருக்கும் அந்திகையை கண்டு விரிந்தது.

“ஹேய் அந்தி..! என்ன இங்க உட்கார்ந்துகிட்டு இருக்க?. என்ன, உன்னையும் வேலைவாங்கி கசக்கி பிழியிரானா தடாகன்?” எனக் கேட்டுகொண்டே தடாகனின் அருகில் சென்று அங்கிருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தான்.

“ம்...” என்று தன்னை அறியாமல் சொல்லிய மறுநொடி தன்னை வேட்டையாடும் சிங்கம் போல உற்று கவனிக்கும் தடாகனின் பார்வையில் மறுநிமிடமே “‘ம்கூம்...”’ என்று மாற்றிச் சொல்லி முடித்தாள்.

அவளின் திண்டாட்டத்தை கண்டு “ஹேய் அதுதான் நான் இருக்கேன்ல, பிறகு ஏன் நீ பயப்படணும்?” அவன் நான் வச்ச ஆளுதான். ஆமா நான் உள்ள வந்ததுகூட கவனிக்காம அப்படி என்ன முக்கியமான வேலையை பார்க்கிற?  கவனமா எதை எழுதிக்கிட்டிருந்த?” என்றான்.

“அதுவா அத்தான்..” என்று வேணுமென்றே அலுவலகத்தில் எப்பொழுதும் “பாஸ்” என்றே அழைப்பவள் அன்று மாற்றி அத்தான் போட்டு அவனுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள்.

“அதாவது எஸ்.என்.ஜியின் பிரமாண்டமான ஒப்பந்தம்  இன்னைக்கு சைன் ஆகப்போகுதில்ல அதற்கான கொட்டேசன் ரெடிபண்ணிக்கிட்டு இருக்கேன்.

இதில் ஹய்லைட் என்னன்னா...!! நாம அவங்களுக்கு மிகச் சொற்ப லாபத்தில் அதாவது பிரீயா சர்வீஸ் செய்து தருரோம். இத்துநூண்டு லாபத்தை மட்டும் கோட் பண்ணி இந்த கொட்டேசன் ரெடி செய்துகிட்டு இருக்கேன்.

இதில கிடைக்கும் லாபத்தில் இந்த புராஜெக்ட்ல வேலை பார்க்கப்போகும் நம் ஸ்டாப்ஸ் எல்லோருக்கும் ஒரு காபியும் பப்சும் வாங்கி கொடுத்துட்டா கூட கணிசமான தொகை குறைஞ்சு போயிடும். அதனால வெறும் டீ மட்டும்தான் வாங்கித்தர முடியும்” என்றாள்.

பேருக்கு பெரிய ப்ராஜெக்ட் பண்ணுறோம்னு சொல்லிக்கலாம் ஆனா கம்பெனிக்கு பைசா லாபம் இல்லாத ப்ரொஜெக்ட் இது” எனச் சலிப்புடன் ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்தாள்

அவள் அவ்வாறு சொன்னதும் தடாகன் “மிஸ் அந்திகை நான் சொல்வதை மட்டும் செய்ங்க. அனாவசியமா உங்க கற்பனை குதிரையை பறக்க விடாதீங்க” என சத்தமாக சொல்லிவிட்டு  “இரிடேட்டிங் இடியட்” என்று குறைந்த குரலில் யாரையோ சொல்வது போல அந்திகையை திட்டினான்.

“சார் இந்த தேவையில்லாமல் திட்டி பயங்காட்டும் வேலையெல்லாம் நீங்க சொல்வதற்கெல்லாம் கேள்வி கேட்காம தலையாட்டுறவங்களோடு நிப்பாட்டிக்கோங்க.

என்னைய படிக்க வைத்து ஆளாக்கிய குடும்பத்தின் கம்பெனி இது. மத்தவங்க போல கூலிக்கு மாரடிக்கிற ஆளு நானில்லை.

இந்த கம்பெனியோட வளர்ச்சியையும் அதில் பயன்பெறப்போகும் என் அத்தானின் குடும்பத்தின் மீதும் அக்கறை உள்ளவ நான்” என்று மேற்கொண்டு பேசப்போனவளை தடுத்த இந்திரசித்.

“அந்தி நீ பிரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்கிற அந்த பேப்பரைய் என்கிட்ட குடு” என்று கைநீட்டினான்.

அந்திகையை அலட்சியம் செய்த தடாகனால் இந்திரசித்திடம் அவ்வாறு இருக்க முடியாமல் “அவங்க சொல்றதை கேட்டுகிட்டு...” எனச் சொல்லிக்கொண்டு போனவனின் பேச்சை  பைலை வாங்கிக்கொண்டே மேலும் தொடரவிடாமல் தடுக்கும் விதமாக குரல் எழுப்பிய இந்திரன்..

“ஸ்டாபிட் தடாகன். நீ இங்க எப்படியோ அப்படித்தான் அந்திகையும் அவள் சொல்வதை அலட்சியபடுத்த என்னால் முடியாது. அதற்காக போன தடவை போல நீ எல்லாத்தையும் போட்டுவிட்டு வெளியேற முடியாது.

இந்த ப்ராஜெக்ட் முடியும் கடைசி நிமிடம்வரை கூட இருந்து முடிச்சுக்கொடுக்கிறது உன்னோட வேலை அப்படின்ற வார்த்தையை அக்ரீமென்டில் மென்சன் பண்றேன்..

ஏன்னா ஐடியாஸ் முழுக்க முழுக்க உன்னோடது. கோட் செய்யும் அமவுண்ட் மட்டுமே என்னோட இஷ்டம்”

எனச்சொல்லி அந்த கோப்பில் கணிசமான லாபத்தை கம்பெனிக்கு அவர்கள் தரும் விகிதாச்சாரத்தில் மென்சன் பண்ணி திருத்திக் கொடுத்தான் இந்திரன்.

அவன் செய்வதை பார்த்து இகழ்ச்சியான ஒரு சிரிப்பை உதிர்த்தான் தடாகன் “நீ கோட் பண்ணிய இந்த ரேட்டுக்கு எஸ்.எம்.ஜி நிறுவனம் சம்மதித்து கையெழுத்துப் போட்டாத்தானே இந்த பிராஜெக்ட் ஸ்டார்ட் பண்ண முடியும்...!! அது நடந்தா பிறகு பார்க்கலாம் .

மீட்டிங் ஸ்டார்ட்டாகும் போது நான் ஸ்பாட்டில் இருப்பேன். உன் அபிமானி அழகுராணி அந்திகையை வச்சு மீட்டிங் அரேஜ் பண்ணலாம்”

எனச்சொல்லி கனல் கக்கும் விழியை அந்திகையின்மேல் செலுத்திவிட்டு வெளியேறிவிட்டான் தடாகன்.

 

 

 

சித்திரவளவன் குடும்பத் தொழிலை வாமனவளவன் (இந்திரசித்தின் தாத்தா) பொறுப்பேற்றபோது சிமெண்ட் ஆலை, கல்குவாரி, செங்கல் சூலை என்று கட்டிடத்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்து விற்பதை தங்களின் தொழிலாக கொண்டிருந்த பெரும் வாணிபக்  குடும்பமாக தொன்றுதொட்டு வந்தது.  

மூத்தவர் வாமனன் பொறுப்பில் எல்லா தொழில்களும் எடுத்தபின் பில்டிங் கட்டுமானத்திற்கான  மூலப்பொருட்கள் எல்லாம் உள்ளதே நாமே கட்டுமான நிறுவனம் தொடங்குவோம் என்ற சொல்லி  கட்டிடத்துறையிலேயும் கால்பதிக்க அச்சாரம் போட்டார்.

அதன் பின் அவர்களின் தொழில் இமாலய வளர்ச்சியடைந்தது.  அவர்களின் தொழிலாளர்களுக்கு தொழில் நகரம் அமைத்துக்கொடுக்க தேவையான இடத்தை வாமனன் வளைத்துப் பிடிக்க நினைத்தார்.

அப்பொழுது அவருக்கு வயது ஐம்பதை கடந்திருந்தது. தொழிலில் கைகொடுக்க அவரது மகன் தயாவளவனை இணைத்து நெளிவு சுளிவுகளை கற்றுகொடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

தொழில் நிமித்தமாக அவரின் குடும்பத்திற்கு ஆரம்பக்கட்ட காலத்தில் உதவிய நண்பரின் வீட்டுப்  பெண்ணை தனது மகனின் வாழ்கை பயணித்தில் இணைத்தார். ஆனால் தயாவோ அப்பெண்ணை ஒதுக்கி அவரின் அம்மா விமலாராணியின் துணைகொண்டு காதலி சுபாவை தனது வாழ்க்கை பயணத்தின் துணைவியாக இணைத்துக்கொண்டார்.

மகனின் இச்செயலால் அதிருப்தி கொண்டாலும் பெண்டாட்டி பிள்ளை பிளாக்மெயில் மற்றும் குடும்பத்தின் தொடர் போராட்டமான சூழல்  ஆகியவை அவரின் அமைதியை குலைப்பதை தவிர்க்க தனது விருப்பமின்மையை ஓரமாக தள்ளி வைத்துவிட்டு அமைதியாகிவிட்டார்.

இன்றளவும் மருமகள் சுபாவுடன் இணக்கமாக பேசமாட்டார். இருந்தும் தனது பேரனின் அம்மா என்ற அளவிற்குண்டான மரியாதையை குடும்ப நன்மைக்காக சுபாவுக்கு வழங்குவதில் குறையேதும் வைக்க மாட்டார்.

தொழிலில் மகனைத் தொடர்ந்து  பேரனும் பொறுப்புக்கு வந்ததும் அவர்களிடம் தொழிலை ஒட்டு மொத்தமாக ஒப்படைத்தாலும் கடந்த ஓராண்டுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட இதய ரத்தகுழாய் அடைப்பில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேரும்வரை அவரது கண்காணிப்பையும் ஆலோசனைகளையும் வழங்கிக்கொண்டுதான் இருந்தார்.

தெய்வாதீனமாக மீண்டுவந்தாலும் அதன்  பிறகு மற்றவர்களுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். கிட்டத்தட்ட சாமியாராகவே காவி வேஷ்டி வீட்டிற்குள்ளேயே தனிமையில் இறைவழிபாடு பூஜை புனஷ்காரம் எனத் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டார்.

அவரின் மெளனத்தால் இந்த மாற்றத்திற்கான விளக்கங்களை அறியமுடியாமலே போய்விட்டது. அவரது மனைவியாகிய விமலாராணி ஆரம்பத்தில் அவரை இயல்புக்கு கொண்டுவர அத்தனை மெனக்கிட்டார்.

ஆனால் எதுவுமே அவரின் மெளனத்தையோ அவரின் போக்கையோ மாற்ற முடியாமல் போனதால் வேறு வழியின்றி அவரின் போக்கிலேயே விட்டுவிட்டனர்.

அவரின் நடவடிக்கைகள் குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகள் மற்றும் நிம்மதியை இத்தனை நாள் பாதித்ததில்லை ஆனால் இன்றோ  அவர்களின் குடும்ப வக்கீல் தயாவிடம் கைபேசியில் ‘பெரியவர் வாமனன் சொத்துப் பத்திரங்களுக்கு உயில் தயாரிக்கச் சொல்லி சொன்ன விஷயமும் அதன் சாராம்சத்தையும் அவரிடம் பகிர்ந்தார்’ அதை கேட்டு அதிர்ந்துபோய்விட்டார் தயாவளவன்,

அப்பா வாமனனின் மெளனத்தை உடைத்து வக்கீல் தன்னிடம் பகிர்ந்த விஷயத்தை பற்றி கேள்வி கேட்டேயாகவேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டிற்குள் புயல்போல் நுழைந்தார்.

தயா ஆக்ரோசமாக “அம்மா... அம்மா...” என்ற படி நுழைவதைக்கண்டு

“தயா என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கோபமா சத்தம் போடுற?” என்றபடி அவரின் முன் வந்து நின்ற விமலாராணியிடம்.

“அப்பாவுக்கு என்னம்மா ஆச்சு? சொத்துல சரி பாதியை அநாதை ஆசிரமத்துக்கு எழுதிக்கொடுகிறதா உயில் ரெடி பண்ணச்சொல்லி வக்கீல்கிட்ட பேசியிருக்கார்.

பலகோடி மதிப்புள்ள சொத்தை பிள்ளையில்லாதன் மாதிரி ஊருக்கு தாரை வார்த்துகொடுக்குறதுக்கா நான் என்னோட இத்தனை வருஷ் உழைப்பை கம்பெனிக்காக அவர் கூட சேர்ந்து இத்தனை பாடு பட்டு செய்து சொத்துகளை வாங்கி குமிச்சேன்.

நான் ஒரே பிள்ளைன்றதால அவர் பேரில் சொத்து வாங்கினால் என்ன என் பேரில் சொத்து வாங்கினால் என்ன எல்லாம் ஒன்று தானேன்னு அமைதியா இருந்தேன்.

இவரை கேக்க ஆள் இல்லைன்ற நெனப்பாம்மா. நான் அவருக்கு உண்மையிலேயே புள்ளைதானா இல்லையான்னு நாக்கை புடுங்குறது போல நாலு கேள்வி கேட்டேயாகணும். என்று தக்கடா புக்கடாவென ஆத்திரத்தில் வார்த்தைகளை சிதறவிட்டார்.

மகன் சொன்ன சேதிகேட்ட விமலாராணிக்கு மனம் கொதித்தது. முன்பு போல தன்னுடனும் குடும்பத்துடனும் இணக்கமாக அவர் இருந்திருந்தால் இது போல கிறுக்குத்தனம் செய்திருக்க மாட்டார்.

குடும்ப வாழ்கையில் பொண்டாட்டி புள்ளைன்னு ஜம்முன்னு இருந்தவர் எப்படித்தான் திடீர்னு எல்லாத்தையும் தூர தள்ளி வச்சிட்டு புத்தர் போல காவி வேஷ்டி கட்டிக்கிட்டு சாமியாராக  மாறினாரோ! அதுக்கு அவசியம் என்ன வந்தது?

டேய் தயா அவர் கிறுக்கு புடிச்சு அலையிறாரு. நான் அவர்கிட்ட பேசுறேன். கொஞ்சம் பொறுமையாயிரு” என்றார்.

குட்டி போட்ட புலி போல உலாத்தியவர்  ஐந்து நிமிடத்திலேயே தனது அம்மா விமலாராணியிடம் “இப்போவாவது நான் அவர் கூட பேசலாமாம்மா..?”  என்று கோபத்துடன் கேட்டார்.

“தயா கோவப்படாதடா. நான் அவர்ட்ட விசாரிக்கிறேன். இந்த மனுஷருக்கு புத்தி மழுங்கி போயிடுச்சான்னு கேக்குறேன். உடம்பு முடியாமப்போய் நல்லபடி மீண்டு வந்துட்டாரேன்னு சந்தோசப்பட கூட முடியாம படுக்கையில் விழுந்து எந்திருச்ச மனுஷனுக்கு சாமிக்கிறுக்கு புடிச்சு போயிடுச்சு. என்னைய கூட யாரோவா ஒதுக்கி வச்சிட்டு சாமியே கதின்னு யார் கூடையும் பேசாம மெளன சாமியாராகிட்டார்.

அவர் திடீர் சாமியார் கோலத்த மாத்தச்சொல்லி பேசி  தடுக்க பார்த்தேன். நான் தடுத்தா காவிய கட்டிக்கிட்டு வீட்டை விட்டு வெளியேறபோவதா என்னைய பார்த்து  கையெடுத்துக் கும்பிட்டு, எல்லாம் முடிஞ்சு போச்சு நான் வாரேன்னு வெளிய கிளம்பிட்டார்

இவர் காவி வேஷ்டியோட சாமியாரா ரோட்டில் சுத்தினா நமக்குத்தான் கேவலம் அதனால காலில் விழுந்து கதறி அழுகாத குறையா இனி எதுவும் கேக்கமாட்டேன் நீங்க வீட்டிலேயே உங்க விருப்பம் போல என் கண்முன்னாடி இருந்தா மட்டும் போதும்னு கெஞ்சி நிப்பாட்டி வச்சிருக்கேன்.

அப்படியே இவரை விட்டாச்சுல்ல, அதோட நிற்க வேண்டியதுதானே! பாதி சொத்த அநாதை இல்லத்துக்கு தாரை வார்த்து கொடுக்க நினைக்க பிள்ளை  இல்லாத சொத்தா இது?

தங்க விக்கிரகம் போல மகனையும் பேரனையும் வச்சிகிட்டு இப்படி உயில் ரெடி பண்ண சொல்ல எப்படித்தான் இந்த மனுசருக்கு மனசு வந்ததோ?

ஆத்துல போட்டாலும் அளந்துதான் போடணும்னு முன்னாடி அடிக்கடி சொல்ற இவரே இப்போ இப்படி செய்திருக்காரே...!

இப்போ பூஜை அறையில தியானத்துல இருக்கார், இன்னும்  அரைமணி நேரத்தில் வெளிய வருவார்.

அப்போ நானே அவர்ட்ட நியாயம் கேக்குறேன். அம்மா சொல்றேன்ல கொஞ்சம் பொறு தயா” என்றார்.

அவரின் வார்த்தையை மீற முடியாமல் அறையின் குறுக்கு மறுக்காக கொதிக்கும் உள்ளத்துடன் நடந்துகொண்டிருக்கையில் வாமனன் பூஜையை முடித்துக்கொண்டு அறையில் இருந்து வெளிவந்தார்.

அவரை நோக்கி அப்பா.. என்ற கூவலுடன் அடியெடுத்து வைக்கப்போன மகன் தயாவளவனை நெருங்கி “தயா இருப்பா நானே அவர்ட்ட கேக்குறேன்” என்று சொன்னார் விமலா.

அமைதி தாங்கிய முகத்துடன் வெளிவந்தவர் கண்கள் அங்கு நடை பயிற்சி செய்வதுபோல நடந்துகொண்டிருக்கும் மகனையும் தன்னிடம் கேள்வி கேட்க காத்திருக்கும் மனைவியையும் ஒற்றை பார்வையிலேயே கண்டுகொண்டு நெற்றியில் யோசனைக் கோடுகள் விழ அவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க நின்றார்.

“சாமிகள் நியாயம் தவறலாமா..??

தங்கவிக்கிரகம் போல உங்க மகனும் பேரனும் இருக்கையில பிள்ளையில்லாதவன் போல பாதி சொத்தை ஊருக்கு தாரை வார்த்துக்கொடுக்கிறது நியாயமா...??

முதலில் வக்கீலை கூப்பிட்டு நீங்க எழுதச்சொன்ன உயிலை கேன்சல் பண்ணச் சொல்லுங்க

இல்லைன்னா உங்க விருப்பபடித்தான் நீங்க செய்வீங்கன்னு சொன்னா இந்த வீட்டைவிட்டு நானும் என் புள்ளையும் குடும்பத்தோடு இப்போவே வெளியேறுரோம்.

எதுக்கெடுத்தாலும் உங்களுக்குத்தான் வீட்டைவிட்டு வெளிய போறோம்னு மிரட்ட முடியுமோ?

எனக்கும் மிரட்டத்தெரியும். கல்யாணம் முடிச்சு உங்களோடு நான் வாழ்ந்த வாழ்க்கையில என்னை பொறுத்தவரை நான் ஒரு நல்ல மனைவியா அம்மாவா என்னோட கடமையை சரியாத்தான் செய்திகிட்டு வந்திருக்கேன்.

அப்படிப்பட்ட என்னையே தள்ளிவச்சு ஒரு வீட்டுக்குள்ளேயே நீங்க தனி சாப்பாடு தனி குடியிருப்புன்னு காவி கட்டிக்கிட்டு அதற்கான விளக்கத்தை சொல்லாம இருக்கிறதிலேயே நான் பாதி செத்துப் போயிட்டேன்.

என் புள்ளையோட அம்மான்ற ஒட்டுதலில் தான் மீதி உசுரு என்கிட்டே ஓட்டிகிட்டு இருக்கு.

அந்த புள்ளைக்கும் நீங்க துரோகம் செய்துதான் ஆவீங்கன்னா நான் இப்போவே என் உசுரை மாய்ச்சுக்கிடுவேன். சும்மா நான் மிரட்டுறதா நினைக்காதீங்க. என் பிள்ளைக்காக நான் எந்த லெவலுக்கும் போவென்ற விஷயம் உங்களுக்கு நல்லாவே தெரியும்..!!” என்று சொல்லி உணர்வுகளால் மிரட்டல் விடுத்தார் விமலாராணி.

விமலாராணி பேச்சிலும் அவர் தொனியிலும் அவரை பற்றி முற்றிலும் உணர்ந்த வாமனன் மனதிற்குள் ‘அன்றைக்கும், புள்ளைக்காகன்னு நீ இதே போல மிரட்டி எடுத்த தவறான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காம இருந்ததுக்கான கர்மாவின் பலனை தடுக்க நான் முயற்சி எடுக்கலாம்னு நினைச்சேன் ஆனா இன்னைக்கும் அதை செய்ய விடாம குறுக்க நிக்கிற..!!’ என்று மனதினுள் சொல்லிக்கொண்டவர்.

பொத்தாம் பொதுவாக “விதியை யார் மாற்ற முடியும்?” என்று மொழிந்துவிட்டு  தனது கைபேசியில் வக்கீலிடம் தான் ரெடி பண்ணச் சொன்ன உயிலை மாற்றி எழுதணும் இப்போதைக்கு அதை நீங்க ரெடி செய்ய வேண்டாம் வக்கீல் சார்” என்றார்.

வருடங்கள் சென்று இன்று தான் அவரின் குரலை மறுபடி கேட்டனர் விமலாவும், தியாவும் ஆனால் “விதியை யார் மாற்ற முடியும்?” எனச்சொன்ன அவரின் வார்த்தைகள் அவர்களை உணர்ச்சி வசப்பட வைத்தது.

தயா தகப்பனை பார்த்து ”அப்பா... இப்போ எதுக்கு விதியை பத்தி பேசினீங்க?” என்றான்.

மகனின் வார்த்தைக்கு பதில் சொல்லாத வாமனனை “அதான் தயா கேக்குறான்ல சொல்லுங்க, எதுக்கு அப்படிச் சொன்னீங்க?” என்றார்.

ஆனால் இருவருக்கும் பதில் சொல்லாது மறுபடி தனது அறைக்குள் போய் கதவடைத்துவிட்டார்..

 

அந்திகை நினைத்ததுபோல நிர்வாகத்துக்கு கணிசமான லாப அடக்கத்துடன் இந்திரன் கோட் செய்த எஸ்.எம்.ஜி மருத்துவமனை கட்டுவதற்கான காண்ட்ராக்ட் ஒப்பந்தம் கடைசி நேரத்தில் கை நழுவிப்போனது.

தடாகனும் ஒப்பந்தந்தத்தில் கையெழுத்தாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அமர்ந்திருந்தான் தான். அவன் சொன்னது போலவே ஒவ்வொரு துறையும் மேற்கொள்ளும் பணியில் தங்களுக்கான நிலைபாட்டை துல்லியமாக விளக்கங்கங்கள் கொடுத்து பேசி முடியும்வரை கூட்டம் நல்லவிதமாகத்தான் போய்கொண்டு இருந்தது.

எல்லாம் தங்களுக்கு திருப்தியாக இருப்பதாகச் சொல்லி  ஒப்பந்தத்தில் கையெழுத்திட எஸ்,.எம்.ஜி நிறுவனத்தின் சீப் ஒப்பந்த டாக்குமெண்டில் கையெழுத்திடும் முன்  கோட் செய்திருந்த தொகையை கண்டு தடாகனை பார்த்து

“என்ன இது தடாகன்? நான் உங்ககிட்ட எங்களோட இந்த ப்ராஜெக்டுக்கு நாங்கள் ஸ்பென் பண்ண ஒதுக்கிய மேக்சிமம் பட்ஜெட் பற்றி சொல்லி அதற்கு நீங்க சரின்னு சொன்னதால் தானே உங்க கூட அக்ரீமென்ட் சைன் பண்ண முன்வந்தோம்.

ஆனா இப்போ நீங்க கோட் பண்ணியிருக்கிற அமவுண்டு அதைவிட டென் பெர்சன்டேஜ் அதிகமா இருக்கு. சாரி இதை நான் உங்க கிட்ட எதிர்பார்க்கலை” என்றார்.

அவரிடம் “சார் ப்ராஜெக்ட் எக்சிகியூட் பண்ணினது நான்தான். ஆனாலும் நான் இந்த கம்பெனி ஓனர் இல்லை அமவுண்ட் கோட் பண்ணியது இந்த கம்பெனியின் ஓனர் மிஸ்டர் இந்திரசித்தான். நீங்க அவரிடமே இதற்கான பதிலை கேட்டு வாங்கிக்கோங்க" என்று அவனை கை காட்டினான்.

அதன்பின்பும் தடாகன் நினைத்திருந்தால் எப்படியாவது பேசி ஒப்பந்தத்தொகையில் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து நல்லபடி முடித்திருக்கலாம்.

ஆனால் இந்த வளர்ந்துகெட்டவனோ இவளின் அத்தானாகிய இந்திரசித் விவாதிக்கும்போது வேடிக்கை மட்டுமே பார்த்தான். அதனால இந்த பிராஜெக்ட் கையெழுத்தாகாமல் கைநழுவி போயிடுச்சு.

அத்தான் சொதப்புனதுக்கு முக்கிய காரணமாக என்னுடைய தூண்டுதல் இருந்துருச்சே,,! இனி இந்திரசித்தின் அப்பாவும் இவளின் அத்தையின் கணவனுமாகிய தியாவளவன் இந்திரசித்துடன் தன்னையும் நிற்க வைத்து வார்த்தையால் விளாசி அடிப்பாரே, என்ன பண்ண?

என்ற யோசனையுடன் இன்று ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்த அலுவலக வேலை சொதப்பியதால் ஒரு வகை அழுத்தத்துக்கு ஆளான முக்கிய அலுவலர்களில் ஒருத்தியான அவளும் சோர்வுடன் வீட்டிற்கு செல்ல லிப்டில் தரைதளம் அடையும் பொத்தானை அழுத்தினாள்.

அவள் உள்நுழைந்து கதவு மூடும் கடைசி நொடி எங்கிருந்தோ விரைவாக வந்த தடாகனும் லிப்டினுள் நுழைந்தான்.

இருவருமே அந்த நேரிடையான தனித்த சந்திப்பை எதிர்பார்க்கவில்லை. தாடாகன் அந்திகையை பார்த்து ஒரு இளக்காரமான சிரிப்பை உதிர்த்து அவளை தலையில் இருந்து பாதம் வரை அழுத்தமாக பார்வை பார்த்தபடி.

“நல்லா உடம்மை கிச்சின்னு வளர்த்து வச்சிருக்க. வழக்கமா செய்றது போல இதை வச்சே இந்திரனை மயக்கப் பார்க்கலாம்ல. அதை விட்டு இப்படி அவனுக்கும் அவன் கம்பெனிக்கும் நல்லது செய்ய நினைச்சு மூக்கு உடைபடுவது எல்லாம் தேவையா உனக்கு? “ என்றான்.

அவனின் பார்வையிலேயே உடம்பு கூச கோபத்தில் நுனி மூக்கு சிவக்க கண்கள் அனலை கக்க ஒற்றை விரலை அவனது முகத்தின் முன் தூக்கி காட்டி “மிஸ்டர் மரியாதையா பேசுங்க” என்று கர்ஜித்தாள்.

அவள் அவனின் முகத்துக்கு நேராக விரலை நீட்டி பேசிய மறுநொடி அவளின் அவ்விரலை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் தடாகன். எதிர்பார்க்காத அவனின் செயலில் அசால்ட்டாக நின்றுகொண்டிருந்தவள் நிலை குலைந்து  அவனின் மீது மோதினாள்.

மற்ற பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளும் தடாகன் ஏனோ அவளிடம் அவ்வாறாக நடக்கவில்லை. மாறாக மேலே மோதியவளின் மென்மையை ஒரு செகண்டு இறுக அணைத்து ஸ்பரிசித்து மறுநொடி  அவளை தள்ளிவிட்டவன்

“கண்களாலே அவளை மேய்ந்துகொண்டே. என்னைய எதிர்க்க நினைச்சா இப்படித்தான் ஆகும். உன் அத்தானோட தொழில் சாம்ராஜ்யம் முழுசா என் கையில்.

நான் என்ன செய்ய நினைக்கிறேனோ அதுதான் அவனோட ஒவ்வொரு தொழிலிலும் நடக்கும் நடக்க வைப்பேன். என் கிட்டயிருந்து அவனையும் அவன் தொழில் சாம்ராஜ்யத்தையும் காப்பாத்தணும்னா அப்போ... அப்போ... நீ எனக்கு...." 

என்று வார்த்தைகளை முடிக்காமல் அவன் இழுத்த இழுவையில் அவனின் எண்ணத்தை வெளியிட்ட பாங்கு அவளின் உடலை கூச வைத்தது.

அவனின் இச்செயலில் ஆத்திரமடைந்து உடலெல்லாம் நடுங்க கெட்ட கெட்ட வார்த்தையில் அவனை திட்டி கையில் வைத்திருக்கும் ஹேன்ட்பேக்கால் அவனின் மண்டையை உடைக்க அவள் ஆயத்தமான நொடி லிப்ட் தரை தளம் தொட்டு கதவை திறந்து நின்றது.

மறுநிமிடம் வேகமான நீண்ட எட்டுகளுடன் தடாகன் வெளியேறினான். ஓங்கிய ஹேன்ட் பேக்குடனே அவனின் எட்டுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஒன்றிரண்டு ஸ்டெப் வைத்தவள் அங்கு இருந்த ஒரு சிலர் அவளை விநோதமாக பார்ப்பதை கண்டு தனது கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டாள். 

ஹேன்ட் பேக்கை அவளின் தோளில் மாட்டிக்கொண்டு தனது கையில் எட்டாத தூரத்தில் அசால்டாக எதுவுமே செய்யாதது போல எதிர்ப்படுவோரின் வணக்கங்களுக்கு தலையசைத்தபடி வாசலை நெருங்கியவனைக் கண்டவள் அவளின் வெளிபடுத்தாத ஆத்திரத்தை எட்டுகளில் காட்டி வேகமாக  வாசலை நோக்கிச் சென்றாள்.

                                                    ----தொடரும்----

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib