செவ்விழியன் (தீபாஸ்)
அத்தியாயம் 08 & 09.1
விழியனும், கதிரும் உயரமான அழகிய வேலைப்பாடுடன் இருந்த பெரிய கேட்டின் முன் நின்றனர். இரண்டு கார்கள் உள்ளே ஒரே சமயம் நுழையும் படி இருந்த அந்த பிரமான்த்யமான
வாயிலின் இரட்டை கதவுகள் கருப்பில் தங்க நிற எனாமல் வேலைப்பாடுடன் கம்பீரமாக நின்றது.
அந்த கேட்டில் இருந்த
வாட்ச்மேனிடம், “பூபதிராஜா அய்யா எங்களை இந்த நேரம் பார்க்க வர சொன்னாங்க.” எனச்சொல்லி, தன்னை காளிதாசின் பேரன் என விழியன் சொன்னதும் அங்கிருந்தே தொலைபேசியில்
விவரம் கேட்டு உள்ளே செல்ல கேட்டை திறந்து விட்டான் வாட்ச்மேன்.
இருவரும் வந்த இருசக்கர வாகனத்தை கேட்டின் அருகிலேயே நிறுத்திவிட்டு கார்
ஓடுதளத்தில் நடந்தனர்.
அந்த பாதையின் இருமருங்கிலும் சரியான இடைவெளி விட்டு நட்டிருந்த அசோகமரம், தரையில் பச்சை கம்பளமாய் விரிந்திருந்த
புல்வெளி என்று பிரமாண்டமாக சீராக இருந்தாலும் ஆர்ப்பாட்டமில்லாத கம்பீரத்தோடு இருந்தது
அந்த மாளிகையின் சூழல்.
அதன் வலது பக்கம் இருந்த வெற்றிடத்தில் கட்டப்பட்டிருந்த டென்னிஸ் போர்டில்
ஒரு அழகிய பெண்ணும் ஓர் அரும்பு மீசை முளைக்கும் வயதில் இருக்கும் பையனும் டென்னிஸ்
விளையாடிக்கொண்டிருந்தனர்.
“பார்டா விழியா, நாம எல்லாம் விளையாட கிரவுண்ட தேடி போகணும், இவங்கயெல்லாம் வீட்டுக்குள்ளேயே கிரவுண்ட் கட்டி விளையாடுறாங்க.
ஆனாலும் நேத்து மழைக்கு முளைச்ச காளான் அந்த எம்.எல்.ஏ வோட பங்களாவில் இருந்த ஆர்ப்பாட்டம் இந்த பில்டிங்கில்
இல்ல. ஆனால், அதை விட இது கம்பீரமான பிள்டிங்டா.
ஊருக்குள்ள இருக்குற வீடுக்குள்ள தோப்பே இருக்கு. ஆனா வெளியில இருந்து பாக்குற யாரு கண்ணுக்கும் தெரியாதது
போல. சுத்தி கோட்டை சுவரே ஒரு வீடு உயரத்துக்கு எழுப்பியிருக்காங்கடா
அந்த காலத்து ஜமீன் பங்களா இப்படித்தான் இருக்கும் போல!” என்று சொன்னான்.
அப்பொழுது அவர்களின் முன்பு இறகு பந்து வந்து விழுந்தது. அதை எடுக்க நடையா? ஓட்டமா? என அறுதியிட்டு சொல்ல முடியாதபடி இளமங்கை போன்ற தோற்றத்தில் இருந்த பேரிளம்பெண் கிரஹா அங்கு வந்து சேர்ந்தாள்.
இவர்கள் இருவரையும் பார்த்து, “யார் நீங்க..? அண்ணனை பார்க்கவா வந்திருக்கீங்க? ஏன் மாஸ்க் போடாம வந்தீங்க?” என கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.
“மாஸ்க் இதோ இருக்கே!” என இருவரும் தங்களின் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த
மாஸ்க்கை எடுத்து மாட்டிக்கொண்டு, “பூபதி ராஜா அய்யாவை பார்க்க
வந்தோம்.” என சொன்னார்கள்.
“அதோ அங்க ரிசப்சன்ல சேர் போட்டிருக்கு அங்க உட்காருங்க. அண்ணன் இப்போ வந்துடுவார்.” எனச்சொல்லி கீழே இருந்த பந்தினை
அவள் எடுத்துக்கொண்டு திரும்புகையில்,
“அம்மா... எனக்கு ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிக்க
அரைமணி நேரம் தான் இருக்கு. நான் பிரஷ் ஆகிட்டு உட்காரணும். இன்னைக்கு போதும்.” என அவளிடம் டென்னிஸ் விளையாடிய
பையன் சொல்வது காதில் விழுந்தது.
அதை கேட்டபடி அவர்கள்
இருவரும் ரிசப்ஷன் என அவள் கைகாட்டிய இடத்தை நோக்கி முன்னேறினார்கள்.
அப்பொழுது கதிர், “டேய் அந்த
லேடியை அந்தப் பையன் அம்மான்னு சொல்றான்டா! அம்புட்டு பெரிய பிள்ளை இருக்குறது போலவா இருக்காங்க. என்ன ஒரு அழகு, வயசே தெரியலைடா?” என்று தணிந்த குரலில் விழியனிடம் சொன்னான்.
“கதிர் அடி வாங்க போற. எங்க வந்துட்டு சைட் அடிச்சுகிட்டு
இருக்குற?” எனக்கடிந்தான்.
“அதான் அவங்க அண்ணனையா பார்க்க வந்திருக்கீங்க என்று
கேட்கும் போது உனக்கு புரியலையா அவங்க பூபதிராஜாவோட தங்கச்சின்னு, அப்போ பெரியவங்களாத்தான் இருப்பாங்கன்னு நீ ஏன் கெஸ் பண்ணலை.
உன் வால்தனத்தை கொஞ்சம் சுருட்டி வை. இது ஒன்னும் நாம படிச்ச காலேஜ் கேம்பஸ் இல்ல. அதுவும் இல்லாம அவங்க மாஸ்க் போடாததுக்கு நம்மை விரட்டுனதை பார்த்தேல்ல. ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆளுங்களா இருக்காங்க. முதுகு பத்திரம்டா!” என நக்கல் அடித்தான் விழியன்.
அவ்வாறு பேசிக்கொண்டே அவர்கள் வந்தடைந்ததும் உள்ளிருந்து பூபதிராஜாவும், “வாங்க தம்பி...” என்று இருவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டே வந்தார்.
அவரை கண்டதும் அமராமல் நின்று கை குவித்து வணக்கம் செலுத்தினர்.
“உட்காருங்கப்பா... உங்க ரெண்டு பேர்ல யார் காளிதாஸ் அய்யாவோட பேரன்?” எனக் கேட்டார்.
அவர் அமரச்சொல்லி அவரும் ஓர் இருக்கையில் அமர்ந்ததும் இவர்களும் இருக்கையில்
அமர்ந்தபடி விழியன் அவரிடம், “நான் தான்
சார். என் பேரு செவ்விழியன், எல்லோரும் விழியன்னு கூப்பிடுவாங்க. இது என் பிரண்ட் கதிர்.” எனச் சொன்னான்.
“சொல்லுங்க விழியன், எதுக்கு என்னைய பார்த்தே ஆகணும்னு
பிடிவாதம் பிடிச்சீங்க? அரசியலில் எல்லாம் எனக்கு
இன்ட்ரஸ்ட் இல்லையே. ஆனா காளிதாஸ் அய்யா சொன்னதுக்காக உங்க கூட பேச சம்மதிச்சேன்.” என்றார்.
“என்ன சார் இப்படி சொல்றீங்க? உங்களை போல நல்லவங்க எல்லாம் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்க போய்தான்
அராஜகம் பண்றவங்கலாம் அரசியலில் இருக்காங்க.” என விழியன் சொன்னான்.
அவன் அவ்வாறு சொன்னதும், “இப்படி அரசியல்ல இருக்குற
ஓட்டு மொத்த பேரையும் மோசமானவங்கன்னு நீங்க சொல்றது தப்பு தம்பி. அரசியல்வாதி ஒன்னும் வானத்தில் இருந்தோ இல்ல பாதாளத்தில் இருந்தோ நம்மகிட்ட
வந்தவங்க இல்லை. அவங்களும் நம்மைப்போல மக்களில் ஒருவராக இருந்து தான்
அரசியலுக்கு வந்திருக்காங்க.
கவர்மெண்டை தனி மனுஷன் அவனோட தேவைகளுக்கு வளைக்க அரசியல்வாதிகளை பயன்படுத்துறாங்க. அரசியல்வாதியை வளைஞ்சு கொடுக்க கருப்பு பணம் கொடுத்து அவனை பேராசைக்காரனா
மாத்திட்டாங்க. அதனால மக்கள் பக்கமும் தப்பு இருக்கு. இரண்டு முனைகளும் சரியா இருக்கணும்.” எனச் சொன்னார்.
அவர் அவ்வாறு சொன்னதும், “அய்யா தலைவர்களுக்குன்னு சில
பொறுப்புகள் இருக்குதுதானே? சாதாரண மக்களை விட தலைவர்களாக
உருவெடுத்து அரசியலில் ஈடுபடுறவங்க பக்குவமா இருக்கணும் தானே.
அந்த பக்குவம் இருந்தாத்தானே அவன் தலைவன். சாதாரண மக்கள் கிட்ட அறியாமை தானே இருக்கும். தலைவர்களோட பொறுப்பு அந்த அறியாமையை தெளிய வைப்பதுதானே.
ஆனா பாருங்க நம்ம தொகுதி எம்.எல்.ஏ வீட்டுக்கு அவரோட கடையை லீசுக்கு எடுக்கும் விஷயமா
பேசப் போனோம். அப்போ அவர் அவங்க கட்சிக்காரங்க கூட வரும் எலக்சன்ல
என்ன என்ன செய்து ஜெயிக்கணும்ன்னு பேசியதைக் கேட்டேன்.
அவங்க பேசியது எதுவுமே நியாயமானதாக இல்லை. அவர் சொல்றாரு, ‘காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட
நாய்களுக்கு ரோசம் ஒரு கேடா?’ என, செலவழிச்ச காசை வட்டியோட அவர் திரும்பி எடுத்தாத்தானே அடுத்த தேர்தலுக்கு
செலவழிக்க முடியுமாம். அதனால அவருக்கு எதிராக இருக்குறவங்களை பணத்தையும் குண்டர்களையும்
வைத்து அடக்கி எலக்சன்ல ஜெயிக்கணுமுன்னு முடிவெடுத்துருக்காங்க.
அப்படி நடந்தா அது போல நாட்டுக்கு கேடு வேற எதுவும்
இல்லை. அதுதான் உங்க கிட்ட பேசி அவருக்கு பதில் உங்களை போல
நல்லவங்களை நிறுத்தி ஜெயிக்க வைக்கணும்னு தான் நான் பேச வந்துருக்கேன்.” என்றான்.
அப்பொழுது கிரஹா கையில் காபி டிரேயில் மூன்று டீ கோப்பைகளை
கொண்டுவந்து அவர்களிடம் கொடுத்தாள்.
அவள் வரும்போதே விழியனின் வார்த்தைகளை உள்வாங்கிய படிதான் அங்கு வந்தாள்.
அவளும் விழியனின் கேள்விக்கு தனது அண்ணனின் பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்
அங்கே நின்றாள்.
டீ கோப்பைகள் மூவரும் கையில் வாங்கினாலும் அதை பருகும் ஆர்வத்தை விட, விவாதத்தின் சுவையையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எதிர்கொள்ள ஆயத்தமானார்கள்.
பூபதிராஜன் விழியனைப் பார்த்து, “தம்பி உதவி செய்யும் நல்ல மனசு இருக்கிறவங்க எல்லோரும் தலைவர்களாகவோ, அரசியல் பதவிக்கு ஏற்றவர்களாகவோ ஆக முடியாது. சமூக சேவையில் உள்ளவங்க எல்லாரும் அரசியல் தலைவர்களாக முடியாது. இப்படி வேணா சொல்லலாம், அரசியல் தலைவர்களுக்கு தேவையான
முக்கிய தகுதியில் ஒன்று மக்களுக்கு சேவை செய்யணும் என்ற குணம் இருக்கணும்னு சொல்லலாம்.” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும், “அது தாங்க நானும் சொல்றேன், அந்த நல்ல குணம் இருக்குற உங்களை தேர்தலில் நிற்கணும்னு சொல்றேன். இப்போ இருக்குறவன் எல்லாம் பணபலமும் அடியாள் பலமும் மட்டும் வச்சிருக்குறான்
நல்ல மனசோ மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களோ, அத்திட்டத்தை வகுக்கும் அறிவோ இல்லாதவனா இருக்குறாங்க.” என்றான் விழியன்.
அவனின் வாதத்தை கண்டு உதட்டில் சிரிப்போடு நிதானமாக, “விழியா, நீ சொல்றது போல அறிவில்லாதவனால பதவியில தொடர்ந்து சோபிக்க
முடியாது. அதேபோல வெறும் நல்லவனாக இருந்தா மட்டும் தலைவன் ஆகிட
முடியாது.
ஐரோம் சானு சர்மிளா மணிப்பூரின்
இரும்பு மங்கை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் இந்திய அரசாங்கம் திரும்பப் பெறவேண்டுமுன்னு
பதினாறு வருஷமா உண்ணாவிரதம் இருந்தவங்க. சமூக ஆர்வலரான அவங்க தேர்தலில்
நின்னப்போ வெறும் 90 ஓட்டுகள் மட்டுமே வாங்கி தோத்துப் போனாங்க.
அவங்களை ஏன் சொல்லணும் என்னையே எடுத்துக்கோ, நான் சரியா உன் வயதிருக்கும், அதாவது என்னோட டிகிரி முடிச்ச மறு வருஷம் இதே போலத்தான் அரசியலில் இருந்தா
மக்களுக்கு நல்லது செய்யலாம்னு நினைச்சு தேர்தலில் நின்னேன். இப்போ உதவி கேட்டு எம்புட்டு மக்கள் என்கிட்ட வரிசையில் வந்து நிக்கிறாங்க. ஆனா, இப்படி என் அப்பாகிட்ட உதவின்னு அப்போ கேட்டு வந்தவங்க
கூட எனக்கு ஓட்டு போடலை.
எனக்கு டெபாசிட் போகலை. ஆனா, நான் ஜெயிக்கவும் இல்ல. பயங்கர ஓட்டு வித்தியாசத்தில்
தோத்தேன். அரசியலில் தலைவராகணும்னா ஒரு கூட்டத்தை திரட்ட சக்தி
வேணும் அது புத்தியால வரணும்.
அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும். அப்படின்னு ஏத்துக்குற ஒரு கூட்டத்தை அவனுக்குன்னு சம்பாதிச்சிருக்கிறவனா
அரசியல்வாதி இருக்கணும். தன் எதிரில் உள்ளவனை பேச்சு, செயல்களால் கட்டிப்போடும் தன்மை இருக்கணும்.
முக்கியமா நாட்டோட, உலகத்தோட முந்தைய வரலாறு தெரிஞ்சிருக்கணும். அப்போதான் சவால்களை சமாளிக்கவும் திட்டங்களை வகுக்கும் யுக்தி அவனுக்கு
கைவரும்.
தன்னைச் சுற்றி இருக்கிறவங்களை படிக்கத் தெரிஞ்சவங்களா, மனித மனம் வாசிக்கும் உளவியல் தெரிஞ்சிருக்கணும். நினைவாற்றல் உள்ளவனாக தன்னைச் சுற்றி அறிவார்ந்த கூட்டத்தை குழுவாக வைத்திருக்கணும்.
அவர்களிடம் கலந்து பேசி சுய விருப்பு, வெறுப்பு இல்லாத பழிவாங்கும் மனநிலையும் இல்லாது தான் திரட்டியுள்ள கூட்டத்துக்கும்
மக்களின் நல்வாழ்விற்கு எது சரியோ அதை அறிவார்ந்த தனது குழுவில் உள்ளோர்களுடன் கலந்து
பேசி முடிவெடுத்து அதை செயல்படுத்தும் தன்மை உள்ளவனாக இருக்கணும்.
அரசியல்வாதி தன்னைச் சுற்றியுள்ள மக்களின் மொழி, சமயம், இனப்பிரிவுகள் எல்லாவற்றையும் அவர்களின் உணர்வுகளையும்
அதனை மதித்து நடக்கும் தன்மையும், எல்லாரையும் சமமாக மனித வாழ்வியலுக்கு
குந்தகம் வராத வகையில் கையாளும் தன்மை உள்ளவனாக இருக்கணும்.” என்றார்.
அவரின் சொற்பொழிவை கேட்ட கிரஹா “அண்ணே, நான் ஒன்னு சொல்லட்டா?” அவர்களின் வாதத்துக்குள் தன் வார்த்தைகளை வைக்க அனுமதி கேட்டாள்.
கிரஹா பேசவுமே அவளை ஏறிட்டுப் பார்த்த பூபதிராஜா, “நீ பேசுனா இந்த அண்ணனை வில்லங்கத்தில் இழுத்து விட்டுடுவ கிரஹா. ஆனா, நாரதர் போல நீ செய்ற, சொல்ற வார்த்தை நல்லதைத்தான் கொடுக்கும். ஒன்னு என்ன ஒன்பது கூட சொல்லு. ஆனா இந்த அண்ணன் மேலயும் அதில் கொஞ்சம் பரிவு இருக்கட்டும்.” எனச் சொன்னார்.
அவளும் அவளின் அண்ணனின் பக்கத்தில் இருந்த ஒரு இருக்கையில்
அமர்ந்து கொண்டு, “நீ சொன்ன எல்லா குணமும் அரசியல்வாதிக்கு அவசியம்தான். ஆனால் இதை விட முக்கியம் தனி மனித ஒழுக்கம். அது என் அண்ணனான உங்ககிட்ட இருக்கு. ஆனா நம் தொகுதி எம்.எல்.ஏ கிட்ட அது கிடையாது. தனிமனித ஒழுக்கம் இல்லாதவன்
அற்பமான ஆசைக்கு தனது அதிகாரத்தை திறந்து விடுவான். அது நாட்டுக்கு பெரும் கேடு தானே. மேலும் அவனே தவறான உதாரணமாகவும் ஆயிடுறான்.
நீ மேலே சொன்ன எல்லா குணமும் இல்லைன்னாலும் தனிமனித ஒழுக்கமும் மக்களுக்கு
சேவை செய்யணும்ற எண்ணமும் உன் கிட்ட ரொம்ப இருக்கு. அதுபோதும் தலைவராக. என் அண்ணனுக்கு தெரியாத உலக
வரலாறே இல்ல. உன்னோட ஆளுமையை பத்தி எனக்கு தெரியும்.
என்னை தவிர யாராலும் உன் முன்னே உன் வார்த்தைக்கு மறு
வார்த்தை பேச முடியாது, இதுதானே ஆளுமை. நீ உனக்குன்னு தலையாட்டுற ஒரு கூட்டம் வேணும் என நினைக்கலை. அவங்களை சேர்க்க நீ இதுவரை எந்த முயற்சியும் பண்ணலை. இதோ இவங்க ரெண்டு பேரும் அதுக்கு உதவுறேன்னு சொல்றாங்க.
நீ ஏன் அண்ணே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க கூடாது?” எனக் கேட்டாள் கிரஹா.
***
அத்தியாயம் 09.1
கிரஹாவிடம் பூபதிராஜா கூறினார். “கிரஹா, இப்போ எனக்கு இருக்குற வேலைகள்ல அரசியல்னு இறங்கினா
நிறைய நேரம் அதுக்கு செலவழிக்கணும்.
நான் முன்னாடி அரசியலில் இறங்கிய அப்பவே அதில் உறுதியா
இருந்திருக்கணும். அப்போ எனக்கு கிடைத்த முதல் தோல்வியே என்னைய சோர்வடைய
வச்சு அரசியலில் இருந்து தூரமா போக வச்சிடுச்சு.
இப்ப எனக்கு இருக்குற நிதானம், பொறுமை அப்போ இல்லை. நிதானமும் பொறுமையும் இப்போ
இருந்தாலும் தொழில் என்னோட நேரத்தை முழுசா எடுத்துக்கிடுது.
நான் ஒரு பொறுப்பான ஆளை எனக்கு அடுத்து என் தொழில்களை
எடுத்துட்டு போக ஏற்பாடு செய்யணும். அந்த இடத்துக்கு உன் மகன், அது தான் என் மருமகன் திலீபன் ஐந்து வருஷத்தில் தயாராகிடுவான்.
அதுக்கு அடுத்து இரண்டு வருஷம் சென்று என் மகன் விக்ரமை தயார்படுத்தணும். இரண்டு பேருக்கும் பொறுப்ப பிரிச்சு கொடுத்துட்டுத்தான் நான் மத்தது எதுலையும்
என் நேரத்தை செலவழிக்க முடியும்.” என்றார்.
விழியனைப் பார்த்து, “ஏன் தம்பி, நீங்களே சுயேட்சையா நில்லுங்களேன்? நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறேன். அதுவும் உங்க செயல்பாடு எனக்கு சரியா இருக்குதுன்னு தோனுனா கண்டிப்பா
உங்க பக்கம் தான் என் ஆதரவை தருவேன்.” என்றார்.
“என்னங்கய்யா இப்படி சொல்றீங்க? எங்களை நம்பி யார் வருவா? சமூகத்தில் உங்களை போல ஒரு
அடையாளம் உள்ளவங்களை தேர்தலில் நிறுத்தினாத்தான் மக்களை கவனிக்க வைக்க முடியும். நாங்க எப்படி?” எனக் கூறினான் விழியன்.
அவன் அவ்வாறு சொல்லவும் கிரஹா விழியனிடம், “உங்களால் ஏன் முடியாது? அண்ணன் சொல்றது போல அவரோட
வேலை நேரம் எனக்கு தெரியும். ஆயிரகணக்கான வேலையாட்கள் அண்ணன்
நிர்வகிக்கிற மூன்று மில்லில் இருக்குறாங்க. அவங்களோட வாழ்வாதாரம் எல்லாம் அண்ணன் தொழிலை கவனிக்காம அரசியலில் இறங்கினா
கேள்வி ஆகிடும்.
ஆனா, நீங்க இப்போதான் படிச்சு முடிச்சு
வெளிய வந்திருக்கிற சின்ன வயது ஆட்கள் போல தெரியிறீங்க. நீங்க ஆரம்பிக்கிற கட்சிக்கு நான் பக்க பலமா இருப்பேன். ஏன்னா நிறைய விஷயங்கள் இங்க சரியில்ல.
எங்க டிரஸ்டில் உதவி கேட்டு வருறவங்க, எங்க தொழிலாளர்களின் பிரச்சனைக்கு சில நேரம் பஞ்சாயத்து போலீஸ்ன்னு போகும்போது
கவனிச்சிருக்கேன். அரசியல்வாதிகளின் சப்போர்ட் இருந்தா மட்டுமே போலீஸ்
ஸ்டேசன்ல கட்ட பஞ்சாயத்து போல பிரச்சனைகளை அரசியல்வாதிகளின் ஆளுமையில் நல்லபடி முடிக்க
முடியுது.
ஆனா, அதுக்காக அப்பாவி மக்கள் அரசியல்வாதிக்கும்
காசு அழுறாங்க. போலீசுக்கும் காசு லஞ்சமா கொடுக்குறாங்க. இதை மாத்தணும்ன்னு நினைக்கிறவங்க கையில் பதவி இருக்கணும். அந்த எம்.எல்.ஏ அகத்தியன் போல பதவியில இருக்குறவங்களை சரியானவங்களா மாத்த முடியாது. ஆனா, உங்கள போல நல்லது நடக்கணும்னு அக்கறை உள்ளவங்களை அந்த
இடத்தில அமர்த்த முடியும்.
நம் குடும்பச் சூழலில் நான் சமூக சேவைன்னு இறங்கி வெளியில
போறதே பெரிய இஸ்யூஸ் ஆகுது. இதுல நான் எப்படி நேரடியா
அரசியலில் இறங்க முடியும்? இப்போதைக்கு என்னால முடியாது.
ஆனா, உங்களுக்கு பின்னாடி இருந்து
என்னால செயல்பட முடியும். என் அண்ணன் உங்க ரெண்டு பேர்கிட்டயும்
இந்த அளவு இறங்கி பேசுவதிலேயே உங்களின் மீதான அவரின் நல்ல எண்ணம் எனக்கு புரிஞ்சது.
அண்ணே, நீங்க எலக்சன்ல நிக்கிறீங்களா அல்லது இவங்க பின்னாடி நான் உன் இடத்தில்
நின்னு அரசியல் பண்ணட்டுமா?” என்றாள் கிரஹா.
அவள் அவ்வாறு சொன்னதும், ‘காலையில் சாப்பிடும் போது தனது மனைவி, கிரஹா சேவை செய்ய ஆண்களுடன் வெளியில் போவதையே கண்ணு, காது, மூக்கு வச்சு பேசுறா. இப்போ அரசியல் அது இதுன்னு போனா நிச்சயம் குடும்பத்துக்குள் விவாதம் வரும்.’ என மனதினுள் நினைத்தார்.
மேலும், சிறு வயதில் இருந்தே அவளின்
குணம் இது. யாருக்கு பிரச்சனை என்றாலும் முன்னாடி போய் நிற்பாள். ஆனால், அவளையே வாழ்க்கை வஞ்சித்து விட்டது. கடந்த ஏழு எட்டு வருடங்களாகத்தான் முன்பு இருந்த கிரஹாவாக மாறி வருகிறாள்.
‘அவளுக்கு பிடிச்சதை செய்ய விடுங்க, பின்னாடி சப்போர்ட்டா இருங்க, அப்போதான் அவங்க நார்மலா ஹெல்தியா ஆவாங்க’ என்று டாக்டர் தேவன் சொன்னது போல செய்ததால்தான் இப்போதைக்கு அவள் அவளாக
மாறி இருக்கிறாள்.
இனி பிரச்சனை இல்லை, கிரஹாவோட மனதும், உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது
என்று டாக்டர் தேவன் சொன்னாலும் அவளுடைய செயல்களை முடக்கவோ! தடை செய்யவோ! பூபதி ராஜாவுக்கு பயம்.
அவ்வாறு செய்து ஸ்ட்ரெஸ் ஆகி முன்பு போல மயக்கம், மூளையில் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனை வந்தால் அவள் உயிருக்கே ஆபத்தாகிடும்
என்று கவலை அவருக்கு உண்டானது.
அவர், அவளுக்கு பதில் சொல்ல அதுவும்
வெளியாட்களின் முன் பேச தயங்கி அவளின் முகம் பார்த்தார்.
அவரின் தயக்கம் உடைக்க ஏற்கனவே இது போன்ற அரசியல் பிரவேசம்
குறித்து எண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன் என்பதை தனது அண்ணனுக்கு புரிய வைக்க அவரிடம்
பேசினாள் கிரஹா.
“அண்ணே நம்ம மில்லில் லேபராக இருக்கிற ஒரு இருபது வயசு
பொண்ணை ஏற்கனவே கல்யாணம் முடிச்சு சூப்ரவைசர் வேலை பார்த்த ரஞ்சித் ஏமாற்றியதுக்காக
அவனை வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்தோமே உங்களுக்கு நினைவிருக்குதா? அவனை வேலையை விட்டு தூக்குன பிறகு அவளால்தான் வேலை போச்சுன்ற கடுப்பில்
அந்த பொண்ணுகிட்ட வம்பிழுத்திருக்கான்.
அவளிடம் நான்தான், இப்போ உங்க மில்லில் வேலை செய்யலையில்ல, உங்க கிரஹா மேடம் இப்போ என்னை கேள்வி கேட்க முடியாதுன்னு பேசியிருக்கிறான்.
அந்த பிரச்சனை போலீஸ் வரை போயிருக்கு. அந்த ரஞ்சித் எம்.எல்.ஏ அகத்தியனோட சொந்தக்காரனாம். அதனால எம்.எல்.ஏவுக்கு தெரிஞ்சவன்றதால, அந்த பொண்ணை பிராத்தல் ரேஞ்சுக்கு
போலீஸ் பேசி நடத்தியிருக்காங்க.
என்கிட்ட அதுக்கு பிறகு விஷயம் வந்தது. அப்போதான் பதவியில் இருக்கிறவங்களோட பவரையும் அதை எப்படி துஷ்பிரயோகம்
செய்றாங்கன்னும் தெரிஞ்சு கொதிச்சு போயிட்டேன்.
நம்ம வக்கீல் கோபாலு கைடன்சிலும், நம்ம டிரஸ்ட் பவரும் வச்சு அந்த பொண்ணை பிரச்சனையில் இருந்து கஷ்டப்பட்டு
வெளியில கொண்டு வந்தேன்.
அப்போவே அந்த அகத்தியன் போல ஆட்கள் அடுத்த தடவை எலக்சன்ல
ஜெயிச்சு பதவிக்கு வரக்கூடாது ன்னு நினச்சேன். இதோ என்னை போலவே இவங்களும் நினைக்கிறாங்க.
அண்ணே, நான் பொதுக் காரியத்தில் ஈடுபடுறதுல
உனக்கு ஒன்னும் அப்ஜெக்சன் இல்லையே, நான் தேர்தலில் நேரடியா இறங்கப்
போறது இல்ல. இவங்க பின்னாடி சப்போர்ட்டா என்னோட நட்பு வட்டத்தை
வச்சு அந்த அகத்தியனை தோற்கடிக்க முயற்சிப்பேன் அவ்வளவுதான்.” என்றாள்.
“கிரஹா முதலில் அவங்க தேர்தலில் நிக்கவா வேண்டாமான்னு
முடிவெடுக்கட்டும் அதுக்கு பிறகு நாம ஆதரவு கொடுப்பதை பத்தி பேசுவோம். ” எனச்சொல்லி அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
***
----தொடரும்---

No comments:
Post a Comment