anti - piracy

Post Page Advertisement [Top]

                                                                           

  ------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்-04

 

  

   தீரன் நேற்று அமைச்சர் ரங்கராஜனை ஏர்போர்டில் சந்தித்து வெளி வருகையில், அரசியல் விளம்பர மோகத்தில் அவர் வரவழைத்த பிரஸ் ரிப்போர்டர்களை வாசலில் சந்தித்திக்க நேர்ந்த தீரன், தேவையற்ற பிரஸ் தொல்லையால் எரிச்சலுற்றான்.

 

இருந்தபோதிலும் அமைச்சரைப் பகைத்து கொள்வது தான் ஏற்று வந்த பணிக்கு ஏற்புடையதில்லை என்பதனை உணர்ந்தவன் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்

 

மிஸ்டர் ரங்கராஜன், ஸ்டில், ஐ அம் நாட் ரெடி டூ ஆன்சர் பிரஸ். பஸ்ட் ஆப் ஆல், லெட் மீ டாக் அபௌட் தெ ப்ராஜெக்ட் டீடைல்ஸ். அதை கேட்டபின் நீங்க என்ன முடிவு எடுக்குறீங்கள் என தெரிஞ்சதுக்குப் பிறகு பிரஸ் மீட் பண்ணலாமே

 

என்று கூறியதும் தீரனின் பாதுகாவலர்கள் இருவரும் நாசூக்காக தீரனின் இருபுறமும் நின்றபடி ரங்கராஜனை விலக்கினர்.

 

வரவழைத்த பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் முன் கெத்தை விட்டுக் கொடுக்காமல் மெயின்டெயின் செய்வதற்காக ரங்கராஜன் தீரனிடம்

 

ஓகே மிஸ்டர் தீரமிகுந்தன், வென் வி டால்க்”. என்று கூறிய மறு நிமிடம். தீரனும் புன்னகையோடு ஓகே,பை மிஸ்டர் ரங்கராஜன், ஐ வில் கால் யூ அட் மொபைல் டுடே நைட். வீ வில் மீட் சூன்என்றவன் தனது பாதுகாவலர்களுடன் காருக்கு விரைந்தான்.

 

ரங்கராஜன் வரவழைத்த பத்திரிகை நிருபர்களில் த டைம்ஸ் ஆப் இன்டியாநிருபர் ஒருவர், தனி விமானத்தில் அமெரிக்காவில் இருந்து வரும் அந்த தொழில்துறை பிரமுகர், யார் என்பதை ரங்கராஜனின் தரப்பில் தெளிவாக குறிப்பிடாததால் அதை தெரிந்து கொள்ளவென்று வந்தவன் தீரமிகுந்தனை பார்த்ததும் ஆச்சரியமடைந்தான்.

 

தான் உலகளவில் பிரசித்திப் பெற்ற தொழிலதிபரான பிராங்கின் பேக்போன் மேன் ஆனா தீரமிகுந்தனை அவன் பார்ப்பதைச் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

 

அமெரிக்காவின் பிஸ்னஸ் மேகசீனில் கூட தீரமிகுந்தனின் பெயர் மட்டுமே பிரசித்தி. இதுவரை தீரன் தனது புகைப்படத்தையோ பேட்டியையோ வெளியிட்டதில்லை. அப்படிப்பட்ட தீரமிகுந்தனின் பேட்டியைப் புகைப்படத்துடன் தான் வெளியிடும் வாய்ப்பு அருகில் இருப்பதை பார்த்தவன் பரபரப்பானான்.

 

தீரன் தன்னுடைய முகத்தை வெளிக்காட்ட விரும்பியதில்லை. பிராங்கும் தீரனை முன்னிறுத்த முயன்றதில்லை. காரணம் தீரனின் தோற்றமும் அதில் உள்ள ஆளுமையும் பிராங்கின் மனதில் பொறாமையை சிறுவயதிலேயே தூண்டிவிட்டிருந்தது.

 

படிக்கும் காலத்தில், பிராங்க் தீரனுடன் கம்பைன் ஸ்டடி செய்தால் அவனின் கைடன்ஸ் மூலம் நல்ல மதிப்பெண்களை பெற முடியும் என்பதாலும் அவனுடன் செலவழிக்கும் நேரம் திரில் மற்றும் சுவாரஸ்யத்துடன் அமையுமென்ற காரணத்தாலும் அவன் தன்னருகில் இருந்தால் பணக்கார சொசைட்டி நண்பர்களின் முன் அவனுடன் சேர்ந்து செய்யும் அலப்பறைகளால் தன்னைப் போன்றோர்கள் முன், தன்னுடைய பாரம்பரிய அமெரிக்க பணக்காரத்தனத்தாலும் தான் தனியாகப் பார்க்கப்படுவதால், அவன் தீரனின் நட்பை விட்டுத் தனித்திருக்க என்றும் நினைத்ததில்லை.

 

அவன் அருகில் இருந்தால் மட்டுமே அவனின் மூலம் தன்னால் ஜொலிக்க முடியுமென்பது புரிந்ததால் அவனுடனான நட்புக்காக தான் அனுபவிக்கும் சுகபோக வாழ்க்கையை தீரனுக்கும் கொடுக்க நிறைய பணம் செலவழித்து அவனின் நடப்பை தக்கவைத்துக் கொண்டிருந்தான்.

 

தீரன் மட்டும் சாதாரணமானத் திறமைக் கொண்ட ஒருவனாக இருந்திருந்தால் பிராங் அவனின் நடப்பை பெரிதாக நினைத்திருப்பானா என்பதுக் கேள்விக்குறியே.

 

தீரனை அங்கு பார்த்த அந்த நிருபர் அது தீரமிகுந்தன் தான் என்று கண்பார்ம் செய்ய தனது பேக்கினுள் இருந்த சில இம்பார்டன்ட் போட்டோஸ் கிளிப்பில் இருந்த தீரனின் போட்டவை வேகமாக எடுத்து அத்துடன் அவனை ஒப்பிட்டுப் பார்த்தவன் தீரமிகுந்தன் தான் என்று உறுதியானதால் பரபரப்பானான்.

 

உடனே தீரனை நோக்கி மற்ற நிருபர்களுக்குள் முண்டியடித்தபடி முன்னேறியவன். ப்ளீஸ் சார் டூ நாட் கோ மிஸ்டர் தீரமிகுந்தன் சார். ப்ளீஸ் கிவ் யுவர் விசிட் டூ இந்தியா ஒன்லி ஏ சிம்பிள் இண்டர்வியூ வித் மிஸ்டர் தீரமிகுந்தன்”, என்று கூவியபடி அவனை நெருங்க முன்னேறினான்.

 

தீரனுக்கு விடைக் கொடுத்த மினிஸ்டர் ரங்கராஜன் கேள்விக்காக தன்னை நோக்கி வரும் நிருபர்களிடம் பேச நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு நிருபர் தீரமிகுந்தனை அடையாளம் கண்டு தன்னிடம் இண்டர்வியூ எடுக்க மறந்து அவனை நோக்கி ஓடுவதைக் கண்டு கொண்டு நிருபர்களிடையே சலசலப்பு உண்டானதை கண்டார்.

 

உலக டாப் டென் பத்திரிகை நிறுவனத்தில் ஒரு அங்கமான த டைம்ஸ் ஆப் இந்தியாநிருபர் மினிஸ்டருடன் வந்த தொழில் அதிபரின் பெயரைக் கூறி கூப்பிட்டபடி அவரிடம் பேட்டி எடுக்க விரைவதை கண்ட மற்ற நிருபர்கள், யார் அந்த தீரமிகுந்தன் என்று ஒருவருக்கொருவர் பேசி அவர்களும் தீரமிகுந்தனை அடையாளம் கண்டதும் மினிஸ்டரை மறந்து தீரனிடம் விரைந்தனர்.

 

செக்யூரிட்டிக் கார்ட்ஸ்வுடன் செல்கின்ற தீரனோ அங்கு தொடங்கிய சிறு சலசலப்பிலேயே நிலைமையை புரிந்து கொண்டவன், தன் முகத்தை மறைக்கும் விதமாக கண்ணாடி மற்றும் தொப்பியை அணிந்தபடி வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டான்.

 

அப்பொழுது கருப்பு நிற சீருடையுடன் திமுதிமுவென்று வந்த பத்து பிரைவேட் பாதுகாவலர்கள், நிருபர்கள் தீரனை அணுக முடியாதவாறு தடுத்து நிறுத்தினர்.

 

இரவு தனது லக்ஸ்சூரியஸ் பிளாட்டின் இரவு உணவிற்குப் பின் அமர்ந்திருந்தவன், யோசனையில் ஆழ்ந்திருந்தான். ஏசி ஓடியும் அவன் மனதில் உள்ள குழப்பதின் காரணமாக புழுக்கமாக உணர்ந்தான் தீரன்.

 

தனது படுக்கை அறையில் இருந்த பால்கனிக்கு வெளி காற்று வாங்குவதற்கு வந்தான். அவன் கண்களில் கருப்பு நிற சீருடை அணிந்து கார்டனை சுற்றி சுற்றி நடந்து கொண்டிருந்த பாதுகாவலர்களை கண்டதும் மனம் தனக்குள்ளேயேக் கேள்விக் கேட்டது.

 

இந்தக் காவலை தாண்டி தன்னை யாராலும் அணுக முடியாது என்பதைப் போல தானும் இந்த காவலை தவிர்த்து வெளியில் சென்று தனது தந்தையை சந்திக்கும் முயற்சியில் ஈடுபடுவது கடினமே!என்பதை உணர்ந்துக் கொண்டவன், பிறர் அறியாமல் எப்படி தனது அப்பாவைச் சந்திக்கலாம் என்று யோசனைச் செய்தான்.

 

அத்துடன் தான் வந்துள்ள வேலையை முடிக்க மினிஸ்டரைச் சந்திக்க ஹோட்டலை சூஸ் செய்யலாம் என்று நினைத்திருந்த எண்ணத்தை, பத்திரிக்கைகாரர்கள் ஏர்போர்டில் அவனை சூழ முயன்ற காரணத்தால் மாற்றிக் கொள்ள நினைதிருந்தான் தீரன்.

 

மேலும் தான் இருக்கும் இடத்திற்கு மினிஸ்டரை வரவழைத்தால் தன்னால் வெளியிடங்களுக்கு போகும் வாய்ப்பை ஏற்படுத்த முடியாது என்பதை உணர்ந்தவன், அவரை எங்கு சந்திக்கலாம்? என்று யோசனை செய்தவுடன் அவனுக்குள் சில முடிவெடுத்து மினிஸ்டர் ரங்கராஜனின் மொபைல் நம்பரை அழுத்தினான்.

 

வணக்கம் மிஸ்டர் ரங்கராஜன்என்று தமிழை ஆங்கிலம் போல் உச்சரித்த தீரனின் வார்த்தைகளிலேயே ரங்கராஜன் பேசுவது தீரன் தான் என்று கண்டு கொண்டார்.

 

ஆனால் ஏர்போர்டில் பார்த்ததில் இருந்து ஆங்கிலத்தில் மட்டுமே தன்னிடம் உரையாடிய தீரனுக்கு தமிழ் தெரியும் என்று ரங்கராஜன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 

மேலும் அவனை ஏர்போர்டில் சந்தித்ததிலிருந்து தீரன் வணக்கம் என்ற தமிழ் வார்த்தையை மட்டும் பேசுவதை கேட்டிருந்தவர் தமிழில் அந்த ஒரு வார்த்தை மட்டுமே அவனுக்கு தெரியும் என்றுத் தப்புக் கணக்குப் போட்டார்

 

வணக்கம் மிஸ்டர் தீரமிகுந்தன். ஐ ஆம் வெயிடிங் பார் யுவர் போன் கால்என்று ஆங்கிலேயத்திலேயே பதில் கொடுத்தார் அவனிடம்.

 

நான் சொன்னதைச் செய்யாமல் விடமாட்டேன் மிஸ்டர் ரங்கராஜன், ஆனா, நீங்க ஏர்போர்டுக்கு ரிப்போர்ட்டர்ஸ் வரவச்சிருக்கக் கூடாது. அப்படி கூப்பிட்டதால் அடுத்த நம்ம மீட்டிங் ஸ்பாட் எதுனு டிசைட் செய்வதில் இப்போ கூடுதல் கவனம் செலுத்தணும்ங்கிற நிலமை வந்துருச்சுஎன்று தமிழிலேயே பதில் கூறினான் தீரன்.

 

தீரன் தொடர்ந்து தமிழிலேயே பேசுவதை கண்ட ரங்கராஜன் மிஸ்டர் தீரமிகுந்தன்... நான் மினிஸ்டர் அதனால இது போன்ற பப்ளிக் பிளேசில் வந்தால் ரிபோர்டர்ஸ் என்னைப் பார்த்து பேட்டி எடுக்க வருவது சகஜம்.

 

ஆனால் உங்களோட நேம் பிஸ்னஸ் மேகசீனில் அடிக்கடி அடிபட்டாலும் இதுவரை நீங்கள் பிரஸ் ரிப்போர்ட்டர்களை உங்களை அணுக விட்டதோ, உங்களோட போட்டோவை பத்திரிக்கையில் வெளியிடவோ நீங்கள் விரும்புறதில்லைனு எனக்குத் தெரியாது.

 

என் பி.ஏ உங்களை பற்றி இப்பத் தான் என்கிட்ட சொன்னான். நீங்க எவ்வளவு பெரிய ஆளு!, உங்க கூட சந்தித்து பேசி நாம சேர்ந்து வொர்க் பண்ணப் போறோம்கிறது எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்குது.

 

அதோட உங்க உடை, நடை, பாவனை எல்லாம் அமெரிக்ககாரனைப் போல் இருந்தாலும் உங்களோட முகமும், பேரும் பார்க்கிறப்போ நீங்க நம்ம பக்கத்து ஆளோனு நினைக்கத் தோணுச்சு, அந்த சந்தேகம் கூட இப்போ நீங்க பேசிய தமிழில் உறுதியாகிடுச்சு. எனக்கு இனப்பற்று ஜாஸ்த்தி தம்பி. உங்களை அப்படி கூப்பிடலாமில்லையா?” என்று இடையில் கேள்வி கேட்டார்.

 

அவர் அவ்வாறுக் கேட்டதும் ஓகே..என்று தீரன் சொன்னதும் தம்பி நம்ம ஊர்க்காரர் ஆகிட்டீங்க, பிறகு எதுக்கு வெளியிடத்தில பார்த்துப் பேசணும். நாளைக்கு என் வீட்டுக்கு வாங்களேன் தம்பி. அங்க வச்சு பேசலாம்என்று நீண்ட உரையைக் கொடுத்து அரசியல்வாதி என்று புரூப் செய்தார்.

 

ஓகே மிஸ்டர் ரங்கராஜன், டுமாரோ ஆப்டர் நூன் உங்க வீட்டில் சந்திக்கலாம். ஆனால் நாம பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னாடி பத்திரிக்கைகாரர்களோட பேச நான் விரும்பவில்லைஎன்று கூறினான்.

 

தம்பி உங்களுக்கு பத்திரிக்கைகாரர்கள் தொந்தரவு இருக்கக் கூடாதுனு தான் பப்ளிக் பிளேசில நம்ம மீட்டிங் வைக்காமல் என் வீட்டுக்கு உங்களை கூப்பிடுகிறேன். நல்லது தம்பி அப்போ நாளைக்கு பார்க்கலாம்என்றதும் தீரனும் அவரிடம் ஓகே ரங்கராஜன்என்றபடி தொடர்பைத் துண்டித்தான்.

 

தீரன் சொன்னது போல இன்று மதியம் அமைச்சரின் வீட்டிற்கு வந்து கொண்டே வெளியில் ஆவலுடன் வேடிக்கைப் பார்த்தான்.

 

தனது அம்மாவும், அப்பாவும் ஒன்றாக வாழ்ந்திருந்தால் தானும் இம்மக்களில் ஒருவனாக வளர்ந்திருப்பேன்என்று தனக்குள் கூறிக்கொண்டான். அவனின் தந்தை இருக்கும் ஊர் கோயம்புத்தூருக்கு மிக அருகில் என்பதை உணர்ந்தவன் தான் இருக்கும் இடத்தில் இருந்து எளிதில் போகும் தொலைவில் அவர் இருந்தும், தன்னால் அவரை உரிமையாக பார்க்கவோ, போகவோ முடியாது என்ற நிதர்சனம் உரைத்ததும் அவ்வளவு நேரம் சுற்றுச் சூழலுடனும் அங்கிருந்த மக்களின் மீதும் தோன்றியிருந்த பிடிப்பு சட்டென அறுந்தது.

 

தீரனின் தற்போதைய இருப்பிடத்தின் முன் ஏர்போர்டில் இருந்து அவனைத் தொடர்ந்து மோப்பம் பிடித்து வந்த நிருபர்களின் கண்ணில் மாட்டாமல் காரில் விண்டோவை ஏற்றி விட்டு, முன் பின் இரு கார்களுடன் புறப்பட்டு வந்த தீரன், மினிஸ்டர் ரங்கராஜன் வீடு இருந்த தெருவை அடைந்தான்.

 

அமைச்சரால் அங்கு ஏற்பாடு செய்யப்படிருந்த தமிழ்நாட்டு போலீஸ், நிருபர்களை அத்தெருவின் முன்பே பிளாக் செய்து வைத்திருந்தனர்.

 

அமைச்சரின் வீட்டின் காம்பவுண்டுக்கு உள்ளே சிறிது நேரம் பயணித்து, வாசலில் நின்ற காரின் இருந்து இறங்கிய தீரனை வரவேற்கத் தனது மனைவி மற்றும் மகன் சக்ரவர்த்தியுடன் நின்றிருந்தார்.

 

அமைச்சரின் மனைவி தமிழ்நாட்டுப் பெண்களுக்கே உரிய நெற்றி குங்குமத்துடன், பட்டு புடவையில் மிடுக்கான தோற்றத்துடன் இரண்டு கை எடுத்து கும்பிட்டு வரவேற்றார்.

 

தீரனும், கை எடுத்துக் கும்பிட்டுக் கொண்டே புன்னகைத்தான். அமைச்சர் தனது மனைவியையும் மகனையும் அறிமுகப்படுத்தி வைத்தவர் மதிய உணவு உண்டு விட்டு பேசலாம்என்ற படி தீரனை அழைத்துக் கொண்டே சாப்பாட்டு அறைக்குச் சென்றார்.

 

இந்திய உணவு காரம் இல்லாமல் சமைக்கப்பட்டிருந்தது. இன்னைக்கு சஷ்டி, அதனால் அசைவம் சமைக்கலஎன்று கூறிய அமைச்சர், தனது மனைவிப் பரிமாற மகனுடன் அமர்ந்தவர் தீரனையும் அருகில் உள்ள இருக்கையில் அமரச் சொன்னார்.

 

எனக்கு இந்த உணவு பழக்கம் தான், என் மாம் ஃப்ரைடே என்றால் ரைஸ் சாம்பார் பொரியல், ரசம் பாயாசத்துடன் தான் எனக்கு லஞ்ச் குடுப்பாங்க, ஐ லைக் இட். தேங்க்ஸ் பார் யுவர் லஞ்ச்என்றவன் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடும் போது தனது அன்னையின் நினைவில் அவனின் உள்ளம் நெகிழ்ந்தது.

 

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மாடியில் இருந்து வந்த பாட்டுச் சத்தமும் அதைத் தொடர்ந்துச் சலங்கை ஓலியும் கேட்டது.

 

அந்த சத்தம் கேட்ட மறுநொடி அமைச்சர் ரங்கராஜன், “வள்ளி... என்ன சத்தம்?” என்று கேட்டதும்.

 

நம்ம சந்தியா, அவ காலேஜ் பிரண்ட்ஸ் கூட மாடியில் ஏதோ டான்ஸ் ப்ரோகிராமிற்கு பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்கா. நான் போய் அவளை சத்தம் கீழே வராமல், அவள் ரூமிலேயே இருக்கச் சொல்கிறேன்எனச் சொல்லி மாடிக்கு விரைந்தார்.

 

ஆனால் சலங்கை ஒலி கேட்டதும் தீரனின் உள்ளம் பரபரப்படைந்தது, சிறுவயதில் இருந்து அவன் காதில் ஒலித்த ஜதி கட்டையின் சத்தமும், சலங்கை ஒலியும் திரும்பக் கேட்டதும் அங்கு போகச் சொல்லி அவன் கால்கள் துடித்தது. ஆனால் தன்னை கஷ்ட்டப்பட்டு கட்டுப்படுத்தி அமர்ந்துக் கொண்டான்.

 

சாப்பிட்டு முடித்து வாஸ்பேசனில் கை கழுவுவதற்கு வந்த தீரனுக்கு அங்கிருந்த ஜன்னலின் வழியே வெளியே தனது தோழிகளுடன் கார்டனில் அரட்டையடித்துக் கொண்டிருந்த யாழிசை காட்சியளித்தாள்.

 

தீரனின் விழிகள்,ஏனோ அவளை அவன் அறியாமல் படம் எடுத்துத்து தனது மனப்பெட்டகத்தினுள் பதிந்து வைத்துக் கொண்டதை அவனே அறியவில்லை.

 

பேசும் போது அபிநயம் சிந்தும் அவளின் கண்களை கண்டு மாடியில் ஒலித்த சலங்கை ஒலி, அவளின் பாதத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டுமென உள்ளம் அடித்துக் கூறியது. அவளுடன் இன்னும் ஐந்து ஆறு பெண்கள் அங்கு நின்றாலும் அவனின் பார்வை ஏனோ யாழிசையை மட்டுமே படம்பிடித்தது.

 

தனை மறந்து தீரன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டு நின்றிருந்த போது ஏய்! வாங்கப்பா... என் ரூமை கிளீன் பண்ணியாச்சாம், போகலாம்என ஒருத்திச் சொல்லவும், மற்றவர்களுடன் யாழிசையும் அங்கிருந்து நகர்ந்து விட்டாள். அதில் தன்னிலை அடைந்த தீரன் தன்னை இயல்பாக்கிக் கொண்டு திரும்பி வந்தான்.

 

வந்தவன் சாப்பாடு ரொம்ப டேஸ்டா இருந்தது மிஸஸ் ரங்கராஜன். என் மாம் செய்து சாப்பிட்ட ஒரு பீல் கொடுத்ததுக்கு. என் சின்ன காம்ப்ளிமென்ட்என்றவன் தனது வேலட்டினுள் வைத்திருந்த சிறு கண்ணாடி பேழையில் இருந்த ஒரு பவுன் தங்க காசை ரங்கராஜனின் மனைவியிடம் கொடுத்தான்.

 

அதை வாங்கத் தயக்கத்துடன் தனது கணவனை பார்த்த ரங்கராஜனின் மனைவி வள்ளியிடம், தீரன் கூறினான் தமிழ்நாட்டில் ஒரு வீட்டுக்கு விருந்துக்கு போகும் போது வெறும் கையோடு போகக்கூடாதுனு என் மாம் சொல்லியிருக்காங்க, சோ! இதை கொடுப்பதற்காக கொண்டு வந்தேன் ப்ளீஸ்! அக்சப்ட் இட்என்று கூறிய மறுகணமே ரங்கராஜன் வாங்கிக்கோ வள்ளி, தம்பி ஆசையா தருவதை வேண்டாம் என்று சொல்லக்கூடாது,” என்று கூறியதும் அதைப் புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள் வள்ளி.


 ----தொடரும்---

 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib