anti - piracy

Post Page Advertisement [Top]

                                                                             

 ------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்-05


 

 ரங்கராஜன் தீரனிடம் வாங்க தம்பி நாம உள்ள கான்பெரென்ஸ் ரூம்ல போய் பேசலாம்என்று கூப்பிட்டுக் கொண்டு போனார். அந்த அறையில் மினிஸ்டர் மற்றும் பி.ஏ உடன், அவரின் மகன் சக்ரவர்த்தி ஆகியோர் மட்டுமே இருந்தனர்.

 

உள்ளே சென்றதும் உட்காருங்க தம்பிஎன்று இருக்கையை காண்பித்து அதன் எதிரில் உள்ள இருக்கையில் அவர் அமர்ந்தார். அவரின் பி.ஏ அவரின் இருக்கையின் பின் நின்று கொண்டான். சக்ரவர்த்தி தீரனின் அருகில் இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தான்.

 

தீரன் தனது லேப்டாப்பை எடுத்து அதில் செயற்கை கோளிலிருந்து வந்த ரகசிய இந்திய ஆராய்ச்சிப் பற்றிய தனிமங்களைத் தேடும் புகைபடம் இருந்ததைக் காண்பித்தான் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் தமிழ்நாடு முழுக்க மண்ணுக்குள்ளே மறைந்துக் கிடந்த விஷயத்தை அந்தச் செயற்கை கோள் புகைபடம் காண்பித்தது.

 

அதைப் பார்த்த சக்ரவர்த்தி அப்பா, மினரல் ரிசோர்செஸ் எல்லாம் நம்ம ஊரை சுற்றி இருக்கிறதா இந்த மேப் காண்பிக்குதுஎன்று வியப்புடன் கூறினான்.

 

அவன் கூறியதை ஆமோதிப்பது போன்று தலை அசைத்த ரங்கராஜனைப் பார்த்த தீரன் ஓகே இப்போ நாம் ப்ரொஜெக்டைப் பத்திப் பேசலாமா?” என்று கேட்டான்

 

ம்.. சொல்லுங்க தம்பி நீங்க இப்போ காமிச்ச மேப்புக்கும் நீங்க செய்ய வந்திருக்க வேலைக்கும் என்ன சம்மந்தம்?” என்றார்.

 

மேப்பில் காவேரி ஆற்றுப் படுகைகளின் ஆழத்தில் ஏராளமான கனிம வளங்கள் இருக்கு. அதனை எடுத்து கமெர்சியல் யூஸ்க்கு இந்தியா பயன்படுத்தினால் அரபு நாடுகளைப் போல பணக்கார நாடாக இன்னும் பத்து வருஷங்களில் மாறிடும்.

 

ஆனால் அவ்வாறு அக்கனிம வளங்களை பூமியில இருந்து எடுக்க ஹைடெக்னிக் மெசின்ஸ் மற்றும் யுத்திகள் தேவைபடுகிறது அதுக்கான சோர்ஸ் இப்போ இங்க இல்லை

 

அதை எங்களோட சி.என்.ஜி நிறுவனம் சிறப்பாக உங்களுக்காக செய்து கொடுக்கும். உலக அளவில் மார்கெட்டில் கல்லாக்கட்ட கனிமங்களை துறை முகங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் எடுத்துட்டுப் போக காவேரி படுகைகளில் நால்வழிச்சாலைகள் அமைத்து தருவதற்கு எங்கள் நிறுவனமே முன்வந்து செய்து கொடுக்குது.

 

அதுக்கு ஆகுற செலவுகளுக்கும் கூட எங்கள் நாட்டில் இருக்கிற பேங்குகள் கடன் கொடுக்க முடியும். அப்படி நீங்க கடன் வாங்க எங்கள் நிறுவனத்திற்கு அந்த தனிமங்களை பூமிக்கடியில் இருந்து எடுக்க இந்திய அரசாங்கத்திடம் அனுமதி நீங்க வாங்கி கொடுக்கணும்என்றான்.

 

அவன் சொல்லி முடித்த மறுநிமிடம் ரங்கராஜனின் பி.ஏ தமிழ்மணி தலைவரே அவர் சொல்ற காவேரி டெல்ட்டா பக்கம் எல்லாம் விவசாயம் பார்க்கிற நிலம் இருக்கு, அதில் இது போல பூமிக்குள் இருந்து பெட்ரோல், மீத்தேன், ஈத்தேன்னு எடுக்கிறோம்னு போனா விவசாயத்துல ஆர்வமா பண்றவங்க கிட்ட இருந்து பலத்த எதிர்ப்பு வரும்என்று கூறினான்.

 

அவ்வளவு நேரம் தீரன் ரங்கராஜனின் பி.ஏ வை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அவன் ரங்கராஜனை அலார்ட் படுத்திய மறுநிமிடம் தீரனின் பார்வை அவனின் மேல் கூர்மையாகப் படிந்தது.

 

அவன் அவ்வாறு கூறியதும் ரங்கராஜன் இந்த பச்சை துண்டை போட்டுக்கிட்டு போராடுறோம்னு போய் டெல்லியில நின்றவங்க என்னத்த சாதிச்சுபுட்டாங்க? ஆட்சி நம்ம கையில இருக்கும் போது நாம எதுக்கும் பயப்பட வேண்டாம்என்றார்.

 

பின் தீரனிடம் நீங்க சொல்றதெல்லாம் சரிதான் தம்பி, ஆனா இதப்பத்தி மேலிடத்தில் பேசணும், அப்போ இது உண்மையா? சாத்தியமா?ன்னு பல கேள்வி கேட்பாங்க. அத புரூப் பண்ண, புள்ளி விபரங்கள் எல்லாம் கேட்பாங்களே, நீங்க சொல்ற இந்த ப்ராஜெக்ட் செய்றதுக்கு விவசாய நிலத்தையெல்லாம் கையகப்படுத்த வேண்டியிருக்கும்.

 

அதுக்கு நிறைய காம்பென்சேசன்லாம் கொடுக்க வேண்டியிருக்கும் அதை தடுக்குக்குறேனு புதுசு புதுசா பல தலைவன் உருவாவான். அவனை எல்லாம் பணத்தாலேயோ மற்றதாலேயும் கவனிக்க வேண்டியிருக்கும்.

 

இந்த ரிஸ்க்கை எடுக்கிற எனக்கும் கொஞ்சம் ஆதாயம் வேணும். இதுக்கெல்லாம் நீங்க பாரின் கரன்சியை அள்ளி விடுவீங்களா?” என்று பச்சையாக டீல் பேசினான் ரங்கராஜன்.

 

அவர் அவ்வாறு கூறியதும் தீரனின் பார்வை, ‘நீங்கள் தேர்ந்தெடுத்த லட்சனமான தலைவன் இவன் தான்என்று எள்ளலுடன் அவனின் பி.ஏ தமிழ்மணியை பார்த்து கண்களினால் அலட்சியப்படுத்தியவன், ரங்கராஜனிடம்.

 

நான் இங்க வருவதற்கு முன்னாடியே நீங்க கேட்கிற ஸ்டேடிஸ்டிக்ஸ் ரிபோர்ட் எல்லாம் சர்வே செய்து ரிசல்ட் கலெட் பண்ணி எடுத்து வந்திருக்கேன். நம்ம ப்ராஜெக்ட்ட ஆரம்பிச்சு பூமிக்கடியில் இருந்து நேச்சுரல் மினரல்ஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டால் அடுத்த பத்து வருஷத்தில இந்தியாவின் தொழில் துறை எங்கயோ போயிடும், அதோட கனிம ஏற்றுமதியால் கவர்மெண்டோட பண வரவால் இந்தியாவோட வளர்ச்சி இப்போ இருப்பதை விட நினைத்து பார்க்காத அளவில் அதிகமாயிருக்கும்.

 

அதனால் இந்த ப்ராஜெக்ட் செய்றதுக்கு நீங்கள் வாங்கிய கடனையும் ஈசியா அடைச்சுடலாம். உங்களின் நாடும் வளர்ந்த செல்வம் கொழிக்கும் நாடாக மாறும். அதற்கான புள்ளி விபரங்கள் இதோஎன்று தனது கணினியில் இருந்த ஸ்டேடிஸ்டிக்ஸ் ரிசல்டை காண்பித்தான்.

 

நீங்கள் இந்த ப்ராஜெக்ட்டை எங்களோட நிறுவனத்திற்கு கொடுத்தால் உலக அளவில் எங்களின் தொழிலை விரிவு படுத்தி அதில் லாபம் பார்க்குறவங்க லிஸ்ட்டில் எங்களின் சி.என்.ஜியும் இருக்கும்.

 

அதுக்காகத்தான் நீங்க ஆரம்பிக்கப் போற வேலையில் உங்களுக்கு பினான்சியலா நாங்க சப்போர்ட் செய்றோம். உங்களுக்கும் அதில் பங்கு உண்டு மிஸ்டர் ரங்கராஜன்என்று கூறினான்.

 

நான் தலைவரைப் பார்த்து இதபத்தி பேசிட்டுப் பதில் சொல்கிறேன். கண்டிப்பா இதை முடிச்சு குடுக்க முயற்சி பண்றேன் தம்பிஎன்றார்.

 

நீங்க வச்சுருக்க ஸ்டேடிஸ்டிக்ஸ் ரிசல்ட்டோட காபியை என் பி.ஏவிடம் கொடுங்க அதை காட்டித்தான் நான் மேலிடத்தில் பேசணும் தம்பிஎன்றார்.

 

வந்த விசயத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட திருப்தியில் தீரன், “ஸ்யூர் ரங்கராஜன். ஐ ஆம் வெரி ஹாப்பி, தட் திஸ் மீட்டிங் ஹேஸ் பீன் சக்சஸ்என்றவன்,

 

உங்க வீடு ரொம்ப அழகாக இருக்கு, வெஸ்டர்ன் பில்டிங்கை விட டிபரன்ட்டாக இருக்கு, இதை பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான்.

 

அவனுக்கு மனதின் ஓரத்தில் மீண்டும் கார்டனில் தான் பார்த்த அந்த பெண்ணைத் திரும்பப் பார்க்க வேண்டும் போன்ற ஒரு எண்ணம் முனுமுனுத்துக் கொண்டே இருந்தது. எனவே அவரின் வீட்டைச் சுற்றிப் பார்க்கும் சாக்கில் அவளை திரும்பப் பார்க்கும் சந்தர்பத்தை உருவாக்க முயன்றான்.

 

அவன் அவ்வாறு கூறியதும், “தம்பி இது காரைக்குடி செட்டியார்களின் பாரம்ப்பரியத்தை பறைசாற்றும் வகையில் கட்டியிருக்கிற வீடு. வீடு முழுக்க பர்மா தேக்கு, ஐரோப்பாவின் டைல்ஸ், முட்டை சுண்ணாம்புக் கலவை, இத்தாலியின் மார்பிள் இதையெல்லாம் வச்சுக் கட்டியிருக்காங்க எங்க பெரியவங்க

 

இது இரண்டு அடுக்குகளைக் கொண்ட சதுர வடிவக் கோபுரங்கள் போன்ற அமைப்புல இருக்கும். இந்தக் கோபுரத்தின் கூரைக்கும் கூலிங் டைல்ஸ் யூஸ் பண்ணி இருப்பாங்க.

 

வீட்டின் முகப்பில நீளமாகத் திண்ணையும், ஆஜானுபாகுவான மரத்தூண்களும், அலங்கார வேலைப் பாடுகள் கொண்ட முகப்புக் கதவும் செட்டிநாட்டு வீடுகளுக்குகே உள்ள தனி தன்மைங்க தம்பி

 

 உங்களை மாதிரி வெளிநாட்டில இருந்து வருகிறவனங்க, இந்த வீட்டை பிரம்மிப்பா பார்த்துட்டுப் போவாங்க. வாங்களேன் நானே உங்களுக்கு வீட்டைச் சுத்திக் காட்டுறேன்என்று கூட்டிக் கொண்டு போனார்.

 

கார்டனில் பார்த்த அவளை திரும்பப் பார்க்கவே அவருடன் சென்றான் தீரன். ஆனால் வீட்டின் அமைப்பும் அழகும் அவனை அதில் லயிக்க செய்தது. அப்பொழுது வீட்டின் மேல்புறம் வந்தபோது ரங்கராஜனுக்கு மொபைலில் அழைப்பு வந்தது.

 

நீங்க பாருங்க தம்பி! நான் பேசிட்டு வருகிறேன்என்று அமைச்சர் நின்றதும், அந்த பக்கம் திரும்பிய தீரனின் காதில் பெண்களின் சிரிப்புச் சத்தம் கேட்டது.

 

திரும்பவும் அலைபாய்ந்த மனதோடு சத்தம் வந்த பகுதிக்கு சென்ற தீரனுக்கு தனது தோழிகளுடன் எதற்கோ ஒளிந்து விளையாடிய படி வந்த, அவன் ஜன்னல் வழி பார்த்தவள் பின்னால் அடியெடுத்து வைத்தபடி அங்கிருந்த தூணை அறியாமல் தட்டி விழப்போவதைக் கவனித்த தீரன். அவள் விழுவதற்குள் அருகில் வந்து அவளை பிடித்தான்.

 

பயத்தில் கண் மூடியவள், தன்னை தாங்கி பிடித்தவனை யார் என்று அறிய மெல்ல கண் விழித்து அவனை இறுக்க பிடித்தபடி முகத்தை பார்த்ததும் உறைந்து நின்றாள் யாழிசை.

 

தன் கைவளைவில் மருண்ட விழிகளுடன் தன்னை பார்த்து பின் உறைந்து நின்ற யாழிசையின் உடலில் பதிந்திருந்த தீரனின் கை உணர்ந்த அவளின் மென்மை அவனை கிறங்க வைத்தது. மேலும் கையினால் அழுத்தம் கொடுத்து தீரன் பிடித்ததும் தன்னிலையடைந்த யாழிசை துள்ளி அவனிடம் இருந்து தன்னை விடுவிக்க முயன்றாள்.

 

பேபி, வாட் எ கிளாசிக் பியூட்டி யூ ஆர்?! ஐ வான்ட் டு கிஸ் யூ ஷால் ஐ ப்ளீஸ்?” என்றபடி அவள் முகம் நோக்கி அவன் குனிய முயன்றதும் அவனை பிடித்து தள்ளி கொண்டிருந்த யாழிசையின் கை அவன் கன்னத்தை அறைந்தது.


 ---தொடரும்---

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib