------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------
அத்தியாயம்-06
யாழிசையோ
பயந்த முகத்துடன். “நான்
வீட்டுக்குப் போறேன்... என்னைய முதலில் கொண்டு போய்
விடு சந்தியா”. அவன்
பின்னாலேயே வந்து விடுவானோ என்று பயந்தபடி திரும்பி திரும்பி
வாசலை பார்த்தபடி கூறினாள்.
அவளின்
பயந்த தோற்றத்தை கண்ட மற்றவர்கள் “ஏய்! எதுக்குடி இப்படி எதையோ பார்த்து பயந்தது மாதிரி ஓடிவருற..?” என்று
கேட்டனர்.
தன்
கையை வாசல் புறம் நீட்டி. “அங்க... நான் அவன்...” என்று யாழிசை உளறிக்
கொட்டி,கிளறி
மூடவும்,
“அங்க யார் யாழி? என்னாச்சு?” என்று
சந்தியா தனது அறையின் வெளியில் சென்று எட்டிப் பார்த்தாள்.
யாரும்
இல்லாததைக் கண்ட சந்தியா,“ஏய்!
யாழி,
இங்கெல்லாம் யாரும் வர மாட்டாங்கப்பா” என்றாள். சந்தியாவின்
வார்த்தைகளை கேட்ட யாழி
“இல்லப்பா இந்த கண்றாவியான
ட்ரெஸ்ஸை, நீங்க
எல்லோரும் போடும் போது நான் மட்டும் தப்பிச்சுடலாம்னு நைசா பின்னாடியே அடியெடுத்து வச்சு ரூமை விட்டு
வெளியில் போனேனா...!” என்று
கூறவும்.
“அப்போ நீ அங்கு ஒரு
பூதத்தை பாத்தியாக்கும்!” என்று
அவர்களுடன் வந்திருந்த தோழி காவேரி சீரியஸாக கேட்பது போல்
அவளை கலாய்த்தாள்.
உடனே
லலிதா,“நீ
சும்மா இரு காவேரி, அவளே
எதையோ பார்த்து பயந்த மாதிரி இருக்கா! நீ வேற ஏன்டீ அவளை கேலி பண்ணுற?”. என்றுக்
கூறியவள், “நீ
சொல்லு யாழி! பின்னாடியே அடியெடுத்து வச்சு, அப்பறம்
என்ன ஆச்சு?” என்று
கேட்டாள்.
“பின்னாடியே அடியெடுத்து வச்சுக் கிட்டு நீங்க
யாரும் என்னைப் பார்த்துடுவீங்களோனு! ரூமை பார்த்துக்கிட்டே எதுவோ
தட்டி விழப்பார்த்தேனா?” என்றதும்,
“அச்சச்சோ! அப்புறம்”. என்று
கோரசாக அவளது தோழிகள் கிண்டல் செய்து கேட்டதுக் கூட உறைக்காமல் நடந்ததை சொல்லிக் கொண்டிருந்தாள்
யாழி .
“அப்போ எங்க அய்யாவின்
வீட்டு ஹாலில் மாட்டியிருந்த அவரின் சின்ன வயசு
போட்டோவில பார்கிற மாதிரியே
ஆனால் இன்னும் கொஞ்சம் கலரா பாரின் ரிடர்ன் போன்ற ஸ்டைலிஷ்ஷா ஒருத்தன்” என்று கூறியதும்,
“யாழி... இரு.. இரு...
மீதத்தை நான் சொல்கிறேன், அவன் உன்னை
கீழே விழாமல் தாங்கி பிடிச்சதும் நீ அவனை பார்க்க... அவன் உன்னை பார்க்க...
அப்படியே பாரதிராஜாவோட பழைய படத்தில் இருந்து வருவது போல
தம்தன... தம்தனனு.. பேக்ரவுன்ட் மியூசிக் கேட்டிருக்குமே!” என்றதும்.
கொலவெறியான
யாழிசை, “பிசாசே
பிசாசே என்னை என்ன எவனை பார்த்தாலும் கட்டிக்கிட்டு டூயட் பாடுறவ மாதிரியா இருக்கு?” என்று
கேள்வி கேட்டவள் குரல் வருத்தத்துடன், “ஏன்டீ! நான் பார்க்க டீசெண்டாத் தானே
ட்ரெஸ் பண்ணியிருக்கேன்? பிறகு
ஏன்டி என்னிடம் போய் அப்படி கேட்டான்?!” என்று கவலையுடன் கூறினாள்.
“உன்ன கீழே விழாமல்
தாங்கிப் பிடிச்சுட்டு அப்படி என்னத்தெடீ கேட்டான்?” என்று
கோரசாக அவளது தோழிகள் அவள் கூறுவதை நம்பாமல் கலாய்ததும் .
“ஏய்! என்னப்பா நீங்க
யாரும் நான் சொல்றத நம்பலையில்ல,
நான் விளையாட்டுக்கு பேசுறதப்போல எல்லோரும் ரியாக்சன்
கொடுக்குறீங்க?!”
“ஏய், சத்தியமா, உண்மையாகவே நான்
பார்த்தேன். ஆறடி உயரத்தில் பிளாக் கலர்
கோர்ட் சூட் போட்டு கிட்டு வித்தியாசமா கலர்புல்லா டாட்டூ அவன்
கழுத்துல இருந்து விரல் நகம் வரை
போட்டுக்கிட்டு இருந்தான், நான் பார்த்தேன்.”
“அவன்தான்
என்னையத் தாங்கிப்பிடிச்சு என்கிட்ட...” என்றவள் அதற்குமேல் சொல்ல தயங்கி, “ம்...கூம் இனி நான் இங்க
ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்பா! ஸாரி..! சந்தியா,நான் வீட்டுக்குப்
போகணும்” என்று
கூறினாள்.
தீரன்
அந்தக் கிளாசிக் பியூட்டி கொடுத்த அடியில் அதிர்ந்து நின்ற ஒரு நொடியை அடுத்து, அவன் கை அவள் அறைந்த
இடத்தை தடவியபடி அந்த இடத்தை விட்டு
அகன்று மறுபுறம் சென்றுவிட்டான். அதனால் சந்தியா எட்டிப்பார்க்கும் போது அந்த
இடத்தில் ஆள் அரவம் இல்லை.
மறுபுறம்
சென்றவன் அங்கிருந்து வெளியில் தெரிந்த தோட்டத்தைப் பார்த்தவாறு பால்கனியில்
சாய்ந்து நின்று கொண்டு தனது
மனதிற்குள்ளேயே ‘நானா? இப்படி? இவளை விட
அழகான கேர்ல்ஸ் கூட என்னைய பார்த்து அவங்களே வருவது போலத்தானே இதுவரை
நடந்தியிருக்கேன்.’
‘ஒரு
பெண்யிடம் அட்ராக்ட்டாகி! பார்த்த மறுநிமிடமே அவக்கிட்ட
முத்தம் கேட்டு அடிகூட வாங்கிட்டேன். நல்லவேளை
ஒரு அடி கொடுத்துட்டு சத்தம் போடாமல்
ஓடிட்டாள். இல்லாவிட்டால் நிலைமை கிரிட்டிகல் ஆகியிருக்கும்.’
நான்
தன்னிலை மறந்தது ஏன்? எது
இப்படி என்னை செய்ய வைத்தது?
காரணம், கேட்ட சலங்கை ஒலியா? அது தோற்றுவித்த மனச்சலனமா? என்று கேள்வி கேட்டவன்
மனதில் அவன் அம்மாவின் உருவமும் அதனைத்
தொடர்ந்து அவர்களின் பாரத நாட்டிய பள்ளியின் லாபியும்..
அதில் அவள் தாய் எழுப்பிய ஜதிக் கட்டைகளின் சத்தமும் அதனை தொடர்ந்து அந்த
ஜதிக்கட்டைகளின் தாளத்துக்கு அபிநயம்
பிடித்த அழகியவளின் உருவமும் ஒன்றன் பின்
ஒன்றாக அவனின் மனக் கண்ணில்
தோன்றியது.
அவன்
வாயோ “துரோகி
துரோகி” என
முனுமுனுத்தது. “அவள் கண்களால்
என்னிடம் வலைவீசி கால்களால் சலங்கை
ஒலி எழுப்பி, மோகமாய் என்னை அழைத்து அதை தணிக்காமல் போயிட்டாளே?” என்று
தனக்குள்ளேயே கூறியவனுக்கு உடல் முழுவதும்
இயலாமையிலும் ஆத்திரத்தாலும் வெடவெடத்தது. அவன் கண்கள் இரண்டும் கோவைப்பழம் போல
சிவப்பாகியது.
அந்த
நேரம், “தம்பி, நீங்க
இங்கேயா நிற்கிறீங்க? நீங்க
அந்த பக்கம் போன மாதிரியிருந்ததேன்னு அங்குட்டு போய்
தேடிக்கிட்டு இருக்கேன்” என்று
கூறியபடி அவனின் முகம் பார்த்தவர் அவன் முகத்தில் தோன்றியிருந்த ரவுத்திரத்தை
கண்டு அதிர்ந்து “என்ன
ஆச்சு தம்பி” என்று
கேட்டார்.
தன்னை
இயல்பாக்கிக் கொண்டவன் “நத்திங்
மிஸ்டர் ரங்கராஜன், அடுத்து
நீங்க உங்க ஹெட் கிட்டப் பேசினதுக்குப் பிற்கு
நாம மீட் பண்ணலாம் நான் இப்போ கிளம்புறேன்” என்றதும்.
“சரிங்க தம்பி
வாங்க” என்றவர்
அவனை வாசலுக்கு அழைத்துக் கொண்டுப்
போனார்.
வாசலில் தனது
தோழிகளுடன் நின்று கொண்டிருந்த சந்தியா அங்கிருந்தபடியே “ட்ரைவர் காரை எடுங்க. நான்
வெளிய போகணும்” என்று
சற்று தள்ளியிருந்த அவர்களின் வீட்டு ட்ரைவரை கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவளுடன் வாசலை பார்த்து திரும்பி நின்று கொண்டிருந்தாள்
யாழிசை.
தீரனுடன்
அங்கு வந்த ரங்கராஜன் தனது மகள் அங்கு நிற்பதைப் பார்த்து அவனிடம்
“என்
மகள் சந்தியா, அவள் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் கூட டான்ஸ் ப்ராக்டீஸ் செய்துக்கிட்டு
இருந்ததால் உங்களுக்கு அறிமுகப்படுத்தலை” என்றவர் அங்கிருந்த பெண்களுக்குள் சந்தியாவைச்
சுட்டிக் காட்டி “அவள் தான்
என் மகள்” என்று கூறினார்.
பின்“சந்தியா...” என்று குரல் கொடுத்தார்.
தீரனின்
பார்வை வாசலுக்கு வரும்போதே ஐந்தாறு பெண்களுடன் தன்னை ஒரு பார்வையிலேயே தன்னிலை
இழக்க வைத்த அவனின் கிளாசிக் பியூட்டி அங்கே நிற்பதை கவனித்து விட்டான்.
உடனே
அவனது கை தன்னை அறியாமல் அவள் அறைந்த கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டது.
மேலும் மற்றவர்களின் முன் தனது தடுமாற்றம் வெளிபட்டு விடக்கூடாது என்பதற்காக
விறைப்பான முகத்தோற்றத்தை வைத்துக் கொண்டான்.
தனது
தந்தையின் குரல் கேட்டுத் திரும்பிய சந்தியா, தனது தந்தை அருகில் ஆறடி உயரத்தில் அட்டகாசமான தோற்றத்தில் யாழிசை
கூறியது போல் கருப்பு நிற
கோர்ட் சூட்டுடன் நின்று கொண்டிருந்ததைப்
பார்த்ததும்,
பார்வை
முழுவதும் அவனிடம் இருந்தாலும்,
“என்னப்பா!” என்று
கேட்டபடி அவரின் அருகில் வந்தவள்,
மனதிற்குள்ளேயே ‘யாழிசை
கூறிய அடையாளங்களெல்லாம் இவனுக்கு பொருத்தமாக இருக்குதே! ஆனால் அப்பா அவரை
சந்திக்க வந்தவர்கள் யாரையும் மேல் மாடிக்கெல்லாம் வர அலோவ் பண்ணமாட்டாரே!’ என்று நினைத்தாள்.
‘அப்பா காலையில் இருந்து
வீட்டையே இரண்டு பண்ணிக் கொண்டு அம்மாவை ஒரு வழி
செய்துக் கொண்டு இருந்தாரே?
அது இவனின் வருகைக்காகவா? அம்மாவை ஓவரா இவனை வரவேற்கப் படுத்தினார்னு
தானே இவர் வரும் போது குடும்பத்துடன் வரவேற்கணும்னு என்னையும் அலங்காரம்
பண்ணிக்கிட்டு நிற்கச் சொன்னதுக்கு, முடியாது என் ஃப்ரெண்ட்ஸ் வர்றாங்க நான் அவங்க கூட இருக்கணும்னு
சொல்லிட்டேன்’ என்று
நினைத்தபடி வந்தாள்.
வந்தவளிடம்
“சந்தியா, இவர்தான் சி.என்.ஜி
கம்பெனி சார்பில் யூ.எஸ்.ஏவில் இருந்து வந்திருக்கும் மிஸ்டர் தீரமிகுந்தன்” என்றார்.
சந்தியா
உடனே “ஹலோ
சார், என்று
கை கொடுக்க நீட்டியதும் தீரன் “வணக்கம்” என்று
சொல்லி இரு கரம் எடுத்துக் கும்பிட்டான்.
உடனே
நீட்டிய தனது கையை மடக்கியபடி தானும் கையெடுத்து கும்பிட்டவளின் உதடுகளில் புன்னகை
விரிந்தது. அத்துடன் சந்தியா. “உலகப்புகழ்
பெற்ற சி.என்.ஜி நிறுவனத்தின் பிரதிநிதியாய் வந்திருக்கிற கிரேட் மிஸ்டர்
தீரமிகுந்தனை சந்திச்சதுல ரொம்ப சந்தோசம்” என்றாள்.
“எனக்கும் உங்களை மீட்
பண்ணியதுல மகிழ்ச்சியே மிஸ் சந்தியா. ஆமா நீங்க எங்கயோ வெளியில கிளம்பியது போல
தெரியுது, உங்களை
நிக்க வச்சு நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை” என்று கூறினான் தீரன்.
உடனே
சந்தியா பதில் சொல்வதற்குள் ரங்கராஜன் முந்திக் கொண்டு
“தம்பி
அவளுக்கு இன்னைக்கு லீவ் தான் அவக்கூட
படிக்கின்ற பிள்ளைளோட பொழுதப் போக்கத்தான்
வெளியில போறாள் உங்களுக்கு நின்னு பேசுறதில் அவளுக்கு சிரமமில்ல” என்றார்.
‘மவனே... உன்
முன்னால என்னைய ஊர் சுத்துறேனு
என் அப்பா சொல்லி என் மூக்கை உடைத்தாரே. அவர் முன்னாடி நீ என் ஃப்ரெண்டு யாழிசையை
பயமுறுத்தி வீட்ட விட்டு
துரத்துறதை என் அப்பாக் கிட்ட போட்டுக் கொடுத்து
உன் மூக்கை உடைக்கப் போறேன் பார்...’ என்று கருவியபடி
“அப்பா நான் ஒண்ணும்
வெட்டியா பொழுது போக்க வெளியில் கிளம்பல. என் காலேஜ் ஆடிடோரியம்
ஓப்பனிங் ஃபங்ஷனுக்கு சீப் கெஸ்ட்டாக வரும் மினிஸ்டர் ரங்கராஜனின் முன்னாடி
எங்களோட டான்ஸ் திறமைய காட்ட ஒத்திகையும் அதுக்கு செட்டா போட்டுக்க டிரஸ் எடுக்கறதுக்கும்
தான் நாங்க பிசியா அலையிறோம்.:
ஆனா
வந்த இடத்தில் என் ஃப்ரெண்டு யாழிசையை யாரோ ‘என்றபடி தீரனை
பார்த்து’ பயமுறுத்தி
ரிகர்சல் முடிக்கும் முன்னாடியே நம்ம வீட்டை விட்டு கிளம்ப
வச்சுட்டாங்க. நம்ம வீட்டுக்குள்ள மாடி”. என்று அவள் சொல்ல போவதை
தடுப்பதற்காக இடை புகுந்த தீரன்.
“மிஸ்டர் ரங்கராஜன், உங்க பொண்ணு படிக்கும்
காலேஜ் பங்ஷனுக்கு சீப் கெஸ்ட்டாக நீங்கள் தான்
போகப் போறீங்களா? சாப்பிடும்
போது மேலே கேட்ட சலங்கச் சத்தம் கேட்டது இவங்களாலத் தானா?”
“உங்க
பொண்ணு கிளாசிகள் டான்சரா? ஏன்
கேட்கிறேன்னா என் மாம் அமெரிக்காவில் பரதநாட்டிய ஸ்கூல் வச்சு
நடத்திக்கிட்டு இருந்தாங்க. அதனால தான்.
பரதநாட்டியத்தில் எனக்கும் ஈடுபாடு உண்டு” என்றவன், “உங்க காலேஜ் பங்ஷனில
நடக்கும் பரதநாட்டியத்தைப் பார்க்க எனக்கு அழைப்பு கிடையாதா மிஸ் சந்தியா? ” என்று
கேட்டான்.
அவன்
அவ்வாறு கேட்டதும் “ஐயய்யோ!
எனக்கு பாரத நாட்டியமெல்லாம் சுத்தமா தெரியாது. என் ஃப்ரெண்டு யாழிசை தான்
பரதநாட்டிய டான்சர்” என்று உளறியவள், ‘அச்சோ!
ஏற்கனவே இவனை பார்த்த யாழி பயந்துட்டாள், இதில் இவனுக்கு பிடிச்ச பரதத்தை வேறு அவள்தான் ஆடுவாள்னு இவன்கிட்டயே
உளறிவிட்டேனே!’ என்று நாக்கை கடித்து மேற்கொண்டு பேசாமல் முழித்தபடி நின்றாள்.
தனது
மகள் அவனை அவள் காலேஜ் பங்ஷனுக்கு அழைப்பு விடுப்பாள் என்று நினைத்துக் கொண்டிருந்த
ரங்கராஜன், அவள்
முழித்துக் கொண்டு நிற்கவும், “தம்பி நீங்க அவங்க காலேஜ்
விழாவில் கலந்துக்கறது அவங்க காலேஜுக்கு எவ்வளவு பெருமை. ஆனா நீங்க விழாவிற்கு
வரும் விஷயத்த முன்கூட்டியே நான் கரஸ்பாண்டன்டிடம் சொல்லிடணுமே. அப்போதான்
உங்களுக்கு தக்க பாதுகாப்பு வசதிய அவங்களால செய்ய முடியும்” என்று பரபரத்தார்.
அவர்
அவ்வாறு கூறியதும் “அத
பத்தி பிறகு பேசலாம் மிஸ்டர் ரங்கராஜன். நான் இப்போ உடனே கிளம்பணும்” என்று கூறிக் கொண்டிருக்கும் போது
அவனை வழியனுப்ப வாசலுக்கு வந்திருந்த வள்ளியிடம் “விருந்துக்கு மிக்க நன்றி மிசஸ் ரங்கராஜன்
வருகிறேன்” என்று
பொதுவாக எல்லோருக்கும் கைக்கூப்பியவன் திரும்பி பார்த்தான்
அவர்களின்
வீட்டுப் படியின் முன் கையில் துப்பாக்கி ஏந்திய கருப்புநிற
உடையணிந்த ஒருவன் குண்டு துளைக்க முடியாத கருப்பு நிற
பி.எம்.டபிள்யூ கார் டோரை திறந்து விடுவதற்கு ரெடியாக
நின்றிருந்தான்.
அந்த
காரின் முன் இரண்டு காரும் அதன் பின் புறப்பட இன்னும் இரண்டு காரும் ரெடியாக
இருப்பதை பார்த்தவன் விறுவிறுவென்று அங்கிருந்த மற்ற பெண்கள் யாரையும் சட்டைச்
செய்யாமல் படியிலிருந்து இறங்கிக் காரில் ஏறி உட்கார்ந்ததும் கார் நகர்ந்தது.
காரில்
அமர்ந்தவன் தலையை திருப்பாமல் கண்களை மட்டும் ஓரமாக சுழற்றி யாழிசையை அழுத்தமாக
பார்த்தபடி சென்றான்.
யாழிசைக்கு
தன்னை தாங்கி பிடித்த தீரன் இவன்தான். ஆனால் அப்பொழுதைய அவனின்
நடத்தைக்கும் இப்பொழுது அவனின் இந்த பாராமுகத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்!.
அச்சோ
இவன் இம்புட்டுப் பெரிய அப்பாடக்கரான ஆளா இருக்கானே!
இவன் கன்னத்துல நான் அறைஞ்சு வேற வச்சிருக்கேனே என்னையப் பழிவாங்கறேன்னு ஏதாவது
செய்துடுவானோ? அதுக்காக
முத்தம் கேட்டால் எவ்வளவு பெரிய அப்பாடக்கரு ஆளுனாலும் அடிதான் வாங்குவான்.
“ஐயய்யோ. ஏந்தான்
ருக்குபாட்டி சொல்றதை கேட்காம இப்படி வந்து மறக்க முடியாத
ஒரு அதிர்ச்சியை வாங்கிக் கட்டிக்கிட்டேனோ!” என்று மைன்ட் வாய்சில் பேசுவதுபோல் நினைத்து சத்தமாகவே
பேசிவிட்டாள் யாழிசை.
அப்பொழுது
ஆதரவாக அவளின் தோளில் சந்தியாவின் கரம் பதிந்தது. அவளின் ஸ்பரிசத்தில் ஏறிட்டு
சந்தியா முகம் பார்த்த யாழியிடம்
“உன் கிட்ட மிஸ் பிகேவ்
பண்ணினவன் இப்போ போகிற இந்த தீரமிகுந்தன் தானா?” என்று கேட்டாள். “ஆம்” என்று அவள் தலை அசைத்ததும், ஒருநிமிடம் அதிர்ந்து பின் அதைச் சமாளித்த சந்தியா “சரி வா போலாம்” என்று காருக்குள் அவளுடன்
ஏறினாள்.
ஆனால்
அவர்களுடன் இருந்த மற்ற தோழிகள் யாரும் தீரனை யாழிசை கூறியவனுடன் சம்மந்தப்படுத்தி
பார்க்கவில்லை அவனின் உயரமும்,
ஸ்டைலும், அவனின்
பி.எம்.டபிள்யூ காரும் ஆயுதம் ஏந்திய அவனின் பாதுகாவலர்களையும் பார்த்து
அதிசயித்து நின்றிருந்தனர்.
அவர்கள்
காரில் ஏறியதும் “ஏய்
லலிதா உன் மொபைலை எடுத்து தீரமிகுந்தனை பற்றி செர்ச் செய்து யார் என்று சொல்லுடி,என்ன ஒரு கம்பீரம். ஏய்!
அவனுக்கு கதவை திறந்து விட்டவன் கிட்ட
துப்பாக்கியிருந்துச்சுல்லப்பா”
என்றாள் ஒருத்தி.
அடுத்தவள்
“ஏய்
அவன் கார் முன்னாடி இருந்த காரில் இருந்தவங்ககிட்டயும் துப்பாக்கி இருந்துச்சு,பின்னாடி இருந்த காரில் இருந்தவுங்ககிட்டையும்
துப்பாக்கி இருந்துச்சு. பெரிய ஆளா இருப்பான் போல!” என்றாள்.
மற்றொருத்தி “ஏய் நம்ம பிரதமர்
நரேந்திர மோடி வச்சிருகிறது போலயே இவனுக்கும்
புட்டலட் புரூப் பி.எம்.டபிள்யூ காரெல்லாம் வச்சிருக்கிறான். நான் நல்லா
பார்த்தேன் அது புள்ளட் புரூப் காரே தான்” என்று ஒருத்திக் கூறினாள்.
லலிதாவோ, “எப்பா இந்த
தீரமிகுந்தன் பற்றி அமெரிக்க மேகசீனின்களில் நிறைய ஆர்டிகள் வந்திருக்கு” என்று தனது மொபைலில்
கூகுலில் செர்ச் செய்து கிடைத்த விஷயத்தைக் கூறினாள்.
“இவன் பெரிய பிஸ்னஸ்
மேனாம். மேலும் அமெரிக்காவின் பரம்பரையாக அயர்ன் ஓர் பிஸ்னெஸ் செய்யும்
குடும்பத்தோட தற்போதைய எம்டி ப்ராங்ன்றவனின் பேக் போன்
இவன் தானாம்.
ஆனால்
அந்த ப்ராங்கை விட இவனுக்குத்தான் பாதுகாப்பு அதிகமாம். ஏன்னா இவனின் பிஸ்னஸ்
மூளைக்கு அங்கிருக்கும் மற்ற பிஸ்னஸ் மேனெல்லாம் பயப்படுறாங்களாம்” எனறாள்.
அவர்கள்
பேசுவதை எல்லாம் கேட்ட யாழிசைக்கு பயத்தில் இத்தனை செல்வாக்குள்ளவனை போயா
நான் அடிச்சு வச்சிருக்கேன் போச்சு என்னைய ஏதாச்சும் பண்ணிடப் போறான்!
என்று பயந்து வெளிறிய முகத்தோடு உட்கார்ந்திருந்தாள்.
அப்பொழுது
சந்தியா, யாழியின்
அரண்ட முகத்தை பார்த்து தனது மற்ற தோழிகளை “இப்போ எல்லோரும் வாயை மூடுங்கப்பா.
இந்த மாதிரி ஆள்கள் எவ்வளவு திறமையானவங்களோ அவ்வளவு ஆபத்தானவங்க என்ன!
அவன் இருக்கிற உயரத்துக்கு நம்மளையெல்லாம் ஒரு கணக்காகவே நினைக்கமாட்டான் அதனால்
நாம கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்”
என்றாள்.
அவள்
அவ்வாறு கூறியதும், “ஏய்!
சந்தியா, எங்களை
வேண்டுமானால் நீ சொல்வதை போல் கணக்கில் எடுத்துக்க மாட்டான்
ஆனால் உன்னைப்போல மினிஸ்டரின் மகளையும், யாழிசையை போன்ற ரொம்ப அழகான பொண்ணுங்களையும் அவன்
கணக்கில் எடுத்துக்குவான்னு தோணுது”
“அதோட
நம்ம யாழி ஒருத்தனை உங்க வீட்டில் பார்த்து பயந்தாலே அவள் சொன்ன அடையாளம் எல்லாம்
இந்த தீரமிகுந்தனுக்கு பக்காவா பொருத்தமா இருக்கு.”
ஏய்
யாழி... உண்மையச் சொல்லு. அவன் உன்னிடம் என்ன சொன்னான்? நீ எதுக்கு பயந்து
ஓடிவந்த?” என்று
கேட்டாள்.
சந்தியாவும்
அவள் என்ன சொல்ல போகிறாளோ! என்று பயத்துடன் பார்க்க
யாழி
பயத்துடன் கூறினாள், “அவன்
என்னை கீழே விழாமப் பிடிச்சானா?
பிடிச்சிட்டு விடாம...” என்று தயங்கி தயங்கி பின் கூறினாள், “என்னை கிஸ் பண்ணிக்கிறேனு
முகம் கிட்ட வந்தானா... நான் அவன் கன்னத்தில பளார்னு ஒரு அறை
கொடுத்துட்டு ஓடி வந்துட்டேன்பா”
என்றாள்.
அவள்
அவ்வாறு சொன்னதும் “என்னது
உன்னை கிஸ் பண்ணிகிறேனு கேட்டானா?!” என்று ஒருத்தியும்.
“என்னது அவனை கன்னத்தில
அடிச்சுட்டீயா?!” என்று
இன்னொருத்தியும்
“ஆச்சோ! என்னடி இப்படிப்
போய் மாட்டிக்கிட்ட” என்று
இன்னொருத்தியும் என்று ஆளுக்கு ஒவ்வொன்றாகப் பேசி அவளைக் கலவரப்படுத்தினார்கள்.
அவள்
கலவரமாவதைப் பார்த்த சந்தியா,
“எல்லோரும் கொஞ்சம் சும்மா இருங்கப்பா” என்றவள், யாழிசையிடம்
“ஏய்! யாழி, நீ எதுக்கு இப்படி பயப்படுற? கிஸ் கேட்டா, அடிக்காம என்ன செய்வ? நான் என் அப்பாக்கிட்ட
சொல்லி அவனை நம்ம காலேஜ் பங்ஷனுக்கு வரவிடாமல் செய்துடுறேன், கொஞ்ச நாள் எங்கயும்
தனியாப் போகாத. அவன் இங்கயேயா இருக்கப் போறான். அவன் வந்த வேலை முடிஞ்சதும்
அமெரிக்கா போயிடப் போறான். அதுவரை கொஞ்சம் ஜாக்கிறதையா இருந்துட்டா
போதும், நீ
பயப்படாத யாழி” என்றாள்.
தனது
இருப்பிடத்திற்கு வந்த தீரன்,
ஐ போனை வைத்து விட்டு
தனது பேக்கினுள் இருந்த பட்டன் போனை எடுத்து அதில் இமாமியை அழைத்தான்.
அவனின்
ஐ போனில் அழைப்புகள் தன்னை உளவு பார்ப்பவர்களால் மொபைல் ஹேக்கிங் செய்து அறிய
வாய்ப்புள்ளதால் சீக்ரெட்டாக அவன் இமாமியுடன் பேசுவதற்கென்றே பட்டன் போனை
பயன்படுத்த வைத்திருந்தான்.
டச்
கிரீன் போன் சந்தைக்கு வந்ததில் இருந்து, மொபைல் ஹேக்கர்கள் தகவல் திருடுவது எளிதாகிவிட்டது. அதுவும் மொபைல்
பீச்சர்ஸ் அட்வான்ஸ்சாக ஆக அதில் ஹேகிங் பண்ணுவதும்
சுலபமாககிவிட்டது.
எனவே
தற்போது பெரிய பெரிய பணக்காரர்கள் முன்பு வந்த நோக்கியா பட்டன் போன் மாடல்களுக்கே
திரும்பி விட்டனர். மேலும் பல நாடுகளில் ஆட்சியின் தலைமை பொறுப்பில்
உள்ளவர்கள் பட்டன் போனை தவிர மற்ற போன்களை உபயோகிக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
இமாமி
தன்னுடைய பட்டன் போனிற்கு அழைப்பு வந்ததும் அது தனது பாஸ் தீரனுடையது என்றதால் தனியாக
சென்று அதை அட்டன் செய்தான்.
“அவர்களின்
ஆங்கில உரையாடலை நாம் தமிழிலேயே பாப்போம். “ஹாய் இமாமி நம்ம பிஸ்னஸ் எல்லாம் எப்படி போய்கிட்டிருக்குது” என்று
கேட்டான்.
“பாஸ் நீங்க இல்லைன்ற குறை தவிர
மத்தபடி எல்லாமே நீங்க இருந்து செய்றது போல
உங்களின் அட்வைஸ் படி நல்லாவே போய்க்கிட்டுருக்குது பாஸ்” என்றான்.
“ஓகே,இமாமி நீ என்ன செய்ற நம்ம
டீமை வச்சு, இங்க
இந்தியாவில் தமிழ்நாட்டின் ஊட்டி சைடில் சீக்ரெட்டா நாம
தங்கும் இடமும் காரும் ஏற்பாடு செய்யணும்.
இன்னும்
ரெண்டு நாளில் அந்த இடத்துக்கு நம்ம டீமில் இருந்து, ஒரு டென் கைசை அனுப்பி
வை. செக்யூரிட்டி எல்லாம் அங்க பக்காவா இருக்கணும்.
ப்ராங்
இதை ஸ்மல் செய்யாமல் வேலையை முடி. அப்படியே தமிழ்நாட்டு மினிஸ்டர் ரங்கராஜனின்
மகள் பற்றிய பயோகிராபி பைலில் இருக்கும்,
அதை
எடுத்து பார். அதில் அவரின் மகள் சந்தியா பற்றிய டீடைல்ஸ் இருக்கும் அந்த டீடைல்ஸ்
வைத்து அவளில் வகுப்பில் யாழிசைன்ற ஒரு கிளாசிக் பியூட்டி படிக்கிறாள் அவளை பற்றிய
டீடைல்ஸ் கலெக்ட் செய்து இன்னும் இரண்டு நாட்களில் இங்க வரும் நம் டீம்
மேட்ஸ் என்னிடம் சம்மிட் செய்யணும்” என்றதும்,
“ஓ.கே பாஸ், சரியா எல்லாம் செய்து
முடிச்சிட்டு உங்களுக்கு இந்த நம்பரில் இன்ஃபார்ம் செய்றேன்” என்றான் இமாமி.
“ஓகே பை இமாமி, என்னைய காண்டாக்ட்
பண்ணும்போது நான் மொபைல் எடுக்காட்டாலும், மிஸ்ட் கால் பார்த்து உனக்கு நைட்டு இங்கு பத்து மணி
இருக்கும் போது கால்
பண்ணிடுவேன், பை இமாமி” என்றவன் தொடர்பை
துண்டித்தான்.
---தொடரும்---

No comments:
Post a Comment