அத்தியாயம்-07
இமாமியுடன் பேசிமுடித்ததும் மொபைல் இணைப்பை துண்டித்த தீரன், ‘அந்த கிளாசிக் பியூட்டி பற்றி நான் எதுக்கு விசாரிக்கச் சொன்னேன்? ஷி மேக் மீ கிரேஸி. பார்த்த நொடியில் இருந்து எனக்குள் அவளின் நினைவை முனுமுனுக்க வைக்கிறாளே. இட்ஸ் நாட் குட் பார் மீ அண்ட் ஹெர். என்னுடைய இந்த எண்ணம் என்னைய தப்பு செய்ய வைக்கும். அவளை காயப்படுத்தி வைக்கும் வந்த வேலையை மட்டும் பாரு தீரா!’ என்று அவனுக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். இவளின் நினைப்புகளில் இருந்து விடுபட வேண்டுமென நினைத்துக் கொண்டான்.
இந்தியாவுக்கு
அனுப்பிய பிராங் கூறிய வேலையை செய்தாலும் அவனுக்குத் தெரியாமல் தீரனின் அம்மா
டைரியில் குறிப்பிட்டிருந்த,
இந்தியாவில் இருக்கும் அவனின் தந்தையைப் பார்க்க இமாமியின்
உதவியுடன் ரகசியமாக சில ஏற்பாடுகளையும் அவன் செய்திருந்தான்.
தமிழ்நாட்டிலிருந்து
அமெரிக்காவிற்கு வேலைக்கு வந்து
தீரனின் மைக்ரோ மொமன்ட்சில் வேலை பார்த்துக் கொண்டிருந்த
மாதவனை முன்பே சந்தித்த இமாமி. ஆள் குறைப்பு என்ற போர்வையில் மாதவனை திரும்ப
இந்தியாவிற்கே அனுப்புவதாக மற்றவர்களை நம்ப வைத்திருந்தான்.
ஆனால்
அந்த மாதவனை தனிமையில் சந்தித்து சீக்ரட்
ப்ராஜெக்ட் ஒன்று கொடுத்திருந்தான். அந்த ப்ராஜெக்ட்டின் சாராம்சம் இதுதான். தமிழ்நாட்டிலுள்ள
மேட்டுப்பாளைய ஜமீனின் வாரிசான வானவராயனைப் பற்றிய அனைத்து விசயங்களையும் இந்தியா
சென்று கலெக்ட் செய்திருக்க வேண்டும்
என்பதே.
அதுவும்
அதை வெளிப்படையாக செய்யாமல் ரகசியமாக செய்ய வேண்டும்.
இந்தியா வரும் தீரன் அவனை ரகசியமாக தொடர்பு கொண்டு கேட்கும்போது ப்ராஜெக்ட்
ரிசல்டை சப்மிட் செய்ய வேண்டும் என்று ஏவப்பட்டான்.
தீரன், இமாமியை அழைத்த பட்டன்
போனிலேயே மாதவனின் நம்பரை அழுத்தினான். மாதவன் வைத்திருக்கும் நோக்கியா போனில்
டிஸ்பிளேயில் இமாமியின் அமெரிக்க நம்பர் இல்லாது தமிழ்நாட்டு என்னை பார்த்து யாராக
இருக்கும் என்ற சந்தேகத்தில் மொபைலை எடுத்து காதிற்கு கொடுத்து, “ஹலோ!” என்ற மறுநிமிடம்
“ஹாய் மாதவா, ஐ ஆம் தீரன் ஸ்பீகிங்.
ஆர் யூ ரெடி டு சப்மிட் ப்ராஜெக்ட் ரிசல்ட்?” என்று கேட்டான்.
மாதவன்
ஏற்கனவே அவனுக்கு சொன்ன வேலையை முடித்து தீரனின் அழைப்புக்கு காத்திருந்ததால்
பவ்வியமாக, “எஸ்
பாஸ் ஐ டன் இட். வேர் சுட் ஐ கம். அண்ட் ஐ’ல் ஹவ் டு ஹேன்ட் ஓவர் த
ப்ராஜெக்ட் ரிசல்ட்?” என்று
கேட்டான்.
கோயம்புத்தூர்
ரடிஸ்சன் புளூ பைவ் ஸ்டார் ஹோட்டலில் அன்று இரவு 10 மணிக்கு
வந்து, தான்
ரிசர்வ் செய்திருக்கும் டேபிள் நம்பரை கூறி அங்கு சந்திக்குமாறு அவனிடம் கூறினான்
தீரன்.
இரவு
மணி 7:15 என்று கடிகாரம் நேரத்தை காட்டியது அங்கிருந்த ஜிம்மில் சென்று
சிறிதுநேரம் வொர்க் அவுட் செய்துவிட்டு தன்னை ரெப்ரஸாகிக் கொண்டு
கோர்ட் சூட்டை தவிர்த்து கேசுவலாக டீசர்ட், ஜீன்ஸ் அணிந்து வெளியில் வந்தான்.
அப்பொழுது
தீரனின் பாதுகாவலுக்கு பிராங்கால் நியமிக்கப்பட்ட செக்யூரிட்டி டீமிடம், தான் கொஞ்சம்
ரிலாக்ஸ் செய்ய ‘ரடிஸ்சன்
புளூ ஹோட்டல்’ போவதாக
கூறியவன், ‘என்னை
உங்களின் டீம் டிஸ்டப் செய்யாமல் தள்ளி நின்றும்,
மற்றவர்களின் கருத்தை கவராமல் டியூட்டி செய்ய முடியுமானால், நான் கிளம்பி போன
பதினைந்து நிமிடம் கழித்து பின்னாடி வரச்சொல்லுங்கள்’ என்று கூறினான்.
“சார் பிரஸ் வெளியில்
இருப்பாங்க” என்று
சொல்லிய மறுநிமிடம் ‘அவங்க, பி.எம்.டபிள்யூ கார்
வெளியில் வந்தால்தான் ஓடி வர்றாங்க
நான் அதை நோட் பண்ணிட்டேன். சோ இன்னோவாவை நான் எடுத்துட்டு போறேன்” என்று கூறியதற்கு,
“சார்! நீங்களே வா
கார் எடுக்குறீங்க? டிரைவர்.” என்று வாய் திறந்து
சொல்லிக் கொண்டிருக்கும் போது தீரன் “ஸ்டாப்பிட்” என்று
கூறினான்.
அவனின்
குரல், பெரிய
ஒலியை கொடுக்கவில்லை என்றாலும்,
அவனின் கண்களில் தோன்றியிருந்த உக்கிரம் அந்த செக்யூரிட்டி டீமின்
ஹெட்டுக்கு பயத்தைக் கொடுத்தது.
அவனின்
அரண்ட தோற்றத்தை கண்ட தீரன் “ஐ கேன் சேப் மை ஸெல்ப். நான்
இங்கு வருவதுக்கான கம்பெனி ட்யூட்டி டைம் மட்டும் உங்க டீமை என்கிட்ட
வச்சுக்கிறேன். மத்த நேரம் எனக்கானது, அதில் பாதுகாப்புன்ற பேரில உங்களோட குறுக்கீடு இருப்பத நான்
விரும்பலை” என்றவன்
ஒரு பேக்பேக்கை மாட்டிகொண்டே “கார் கீ” என்று கேட்டான்.
அவனை
மறுத்துப் பேச பயமாக இருந்ததினால் தன்னிடம்
இருந்த கீயை எடுத்து நீடினான்.
காரில்
கூகுள் மேப்பில் போகவேண்டிய இடத்தின் வழியை பார்த்துக் கொண்டே
டிரைவ் செய்தான் தீரன்.
அவன்
இந்தியா வரும் முன் ரைட் சைடு டிரைவிங்கிற்கு பயிற்சி
எடுத்திருந்ததால் அவனால் காரோட்ட முடிந்தது
என்றபோதிலும், காற்றின் வேகத்தில் டிரைவ் செய்து பழக்கப்பட்டவனுக்கு இங்கு
மிதமான வேகத்திலும் குறுக்கு மறுக்கே வந்த இடைஞ்சலைக் கண்டு எரிச்சலாக இருந்தது
என்றாலும், லாவகமாக
கரை செலுத்தியவன் ஹோட்டலை அடைந்து, அங்கு மாதவனை சந்திக்க டேபிள் ஒன்று ரிசர்வ் செய்திருந்தான். தான் அங்குத் தங்க அறை
ஒன்றும் புக் செய்திருந்தான். உள்ளே சென்றவன் டேபிளுக்கு
விரைந்தான்.
அவ்வாறு
அவன் செல்லும் போது அவனின் பாதுகாப்பிற்கு சி.என்.ஜி நிறுவனம்
அமர்த்தியிருந்த செக்யூரிட்டி ஆட்கள் யூனிபார்ம் இல்லாத கேசுவல் டிரஸ்சில் இடைவெளி
விட்டு பின் தொடர்வதை கண்ட தீரன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அவனுக்கு
எதிர்திசையில் நடந்து வந்த மாதவனும் அவனும் பார்த்ததும், இருவரும் ஒருவரை ஒருவர்
அடையாளம் கண்டு கொண்டனர். தூரம் வந்த மாதவனை பார்த்து கை தூக்கி “ஹாய்” என்று தீரன் சொல்லியதை
பார்த்த மாதவனுக்கு மயக்கமே வந்தது போல் இருந்தது
யூ.எஸ்.ஏவில்
அவனை சுற்றி இருக்கும் பாதுகாப்பு அரணையும், அவனின் கம்பீரத்தையும், உயரத்தையும் அறிந்தவன் மாதவன்.
இந்தியாவில்
செய்ய வேண்டிய ப்ராஜெக்ட் பற்றி பேசுவதற்கு
மூன்று தடவை அமெரிக்காவில் உள்ள அவனின் அலுவலகத்தில் தீரனை சந்திக்க சென்றபோது, தீரனின் முன்பு
அமர்ந்து பேசுவதற்கு கூட மாதவனுக்கு உதரலாக இருந்தது.
அப்படிபட்டவன்
கேசுவலாக தன்னை பார்த்து கை அசைத்ததை கண்டு பரவசபட்டுப் போனான்.
மாதவனிடம் வானவராயனை பற்றிய டீடைல்ஸ் கலைக்ட் செய்ய வேண்டும்
என்று மட்டுமே கூறப்படிருந்தது.
தீரனுக்கும்
வானவராயனுக்கும் உள்ள தொடர்பை பற்றி அவனிடம் தெரிவிக்காததால் மாதவன், அந்த வேலை தனக்கு கொடுத்த
ப்ராஜெக்ட் என்று மட்டுமே நினைத்திருந்தான்.
ஆனால்
வானவராயனின் போட்டோவும், அவரை மறைமுகமாக
பின் தொடர்ந்த போது அவருக்கும் தீரனுக்கும் உள்ள உருவ
ஒற்றுமைகளையும் கண்டு சற்று நெருடல் ஏற்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அவனால்
வெளிபடையாக தீரனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்து அடக்கியே
பேச முடிவெடுத்திருந்தான்.
தீரனின்
கை அசைவை கண்டு வேகமாக “எஸ்
பாஸ்” என்றபடி
அவனின் அருகில் நெருங்கியவனுக்கு கை குலுக்கிய தீரன்
சாதாரணமாக அவனிடம் நலம் விசாரித்தான் பின் மற்றவர்களுக்கு கேட்க முடியாத
தணிந்த குரலில்
“பிராஜெக்ட் பென்டிரைவை உங்களின்
உள்ளங்கையில் மறச்சு வச்சுக்கோங்க மாதவன்” என்றான். மேஜைக்கு சென்று காபி சாப்பிட்டுவிட்டு விடை பெறுகையில்
மாதவனிடம் கை குலுக்குவது போல்
அவனின் கையில் இருந்த பென்டிரைவை கை பற்றினான் தீரன்.
பின்னர் ஹோட்டலில்
தான் புக் செய்த ரூமிற்குச் சென்று
இரவு உணவை அங்கேயே வரச்சொல்லி ரிசப்சனில்
போனில் ஆர்டர் கொடுத்துவிட்டு தனது பேக்கில் இருந்த லேப்டாப்பை எடுத்து அதில்
மாதவனிடம் இருந்து வாங்கிய பென்டிரைவ்வை போட்டுப் பார்த்தான்.
வானவராயரை
பற்றிய குறிப்பு முதலில் டிஸ்பிளே ஆனது. அதில் அவர் பெருவிவசாயி என்று
குறிப்பிடப்படிருந்தது.
மேலும்
அவர் ஊட்டியில் காபி மற்றும் ஏலக்காய், மிளகு என பல ஏக்கரில் எஸ்டேட்டில் சாகுபடி செய்பவராகவும், இயற்கை முறையில்
பழத்தோட்டம் ஒன்று பெரும் அளவில் அவர் உருவாக்கியுள்ளார் என்றும் மேலும்
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர் என்றும் குறிப்பு இருந்தது.
மேட்டுப்பாளையத்தில்
உள்ள தனது பல ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்வதால் அங்கிருக்கும்
மக்களுக்கு இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பவராகவும், அங்குள்ள மற்ற
விவசாயிகளின் முன்னோடியுமாக இருப்பவரெனவும் அதில்
தெரிவிக்கப்படிருந்தது.
அதை
அறிந்ததுமே தான் அமெரிக்காவில் இருந்து செய்ய வந்திருக்கும் வேலைக்கு முதல்
எதிரி தனது தந்தை தான் என்று எண்ணிக்கொண்டான்.
அவர்
பண்ணை வீட்டில் வசிப்பவர் என்றும் அவருடைய முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்
என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது மற்றபடி வானவராயரின் முதல்
மனைவியைப் பற்றிய எந்த விபரமும் அதில் இல்லை.
வானவராயரின்
இரண்டாம் மனைவி என்று வெள்ளையம்மாளின் போட்டோவும். அவரின் ஒரே மகள் என்று
மகள் பிருந்தாவின் போட்டோவும் இருந்தது.
மேலும்
அவர்களின் பண்ணை வீட்டின் உள்ளே அவர்களுக்குத் தெரியாமல் எடுத்த புகைப்படமும்
இருந்தது. அதில் வீட்டின் முன்
இருந்த தோட்டத்தில் பிருந்தாவுடன் இருந்த உருவத்தை கண்டு ஒரு நிமிடம் கண்ணசைக்க மறந்தான்.
அவ்வளவு
நேரம் அவனின் தந்தையின் குடும்பத்தை பார்த்தவனின் மனம் தன்னுடைய முகவரி இதோ ஆனால்
அந்த முகவரியில் இருந்து தொலைந்த தனது நிலையை
எண்ணி ஏனோ மனம் கனத்திருந்தது.
அப்படிப்பட்டவனுக்கு
பிருந்தாவின் அருகில் புகைப்படத்தில் சிரித்தபடி இருந்த யாழிசையை கண்டதும், ‘வாட் எ மிராக்கில், இவளுக்கு என் டாடியின்
குடும்பத்துடன் என்ன சம்பந்தம்?’
என்று எண்ணிக் கொண்டிருக்கும்
போதே. அவனின் ஆப்பிள் ஐ போன் ஒலி எழுப்பியது.
டிஸ்பிளேயில்
பிராங்கின் பெயர் மின்னவும் தனது மொபைலை பார்த்தபடி, லேப்டாப் ஸ்க்ரீனை ஆப்
செய்தவன், பின்
போனை எடுத்து “சொல்லு
பிராங்! நீ எப்படி இருக்க?” என்று
ஆங்கிலத்தில் தனது உரையாடலை ஆரம்பித்தான்
“ஹாய் டீரன் ஐ ஆம் பைன்.
நீ இப்போ எதுக்கு உனக்கு நான் ஏற்பாடு செய்த இடத்தில் தங்காம ஹோட்டலில் போய்
இருக்கிற டீரா?
நீ
ஹோட்டலில் இப்போ பார்த்து பேசிய அந்த கைய் நேம் மாதவன் தானே?! அவன்
உன் கம்பெனியில் தானே வேலை பார்த்தான்?”
என்று
கேட்டு தீரன் அவனின் கண்காணிப்பில் இருப்பதை மறைமுகமாக அவனுக்கு
சுட்டிக்காட்டினான் பிராங், அவன்
பேசி முடித்த மறுநிமிடம்,
“பிராங் உனக்கு ஒரு விஷயம்
தெரியுமா? நமக்கு
பழக்கம் இல்லாத அந்நிய இடத்தில் இருக்கும் போது எங்காவது நான் பார்த்து பேசிய
முகம் அங்கு தெரிந்தால் நமக்குள் ஒரு பரவசம் வருமே இன்னைக்கு
மாதவனை தற்செயலாக பார்த்தபோத அதே ஃபீல் எனக்கு கிடைச்சது.”
“நான்
அவனுக்கு பாஸாய் இருந்தேன் அவன் என் கிட்ட வேலை பார்த்த சாதாரண
ஸ்டாப்னு எல்லாம் என்னால் அப்போ நினைக்க முடியலை.”
எனக்குத்
தெரிந்த ஒரு ஜீவன் இங்கே... என்ற பரவசம் மட்டுமே! அந்நேரத்தில எனக்குள்ள
வந்துச்சு. சோ அவனோட
ஒரு கப் காபீ சாப்பிட்டு மை எக்சைட்மென்ட்டை தனிச்சுக்கிட்டேன்”.
“இதே மாதவனை
என் கம்பெனியில் இருந்து வெளியேற்றும் போது
பினிஷ் செய்ய வேண்டிய பார்மாலிடிஸ்காக அப்பாய்ன்மென்ட்
கொடுக்கக்கூட நான் ஒருநாள் முழுக்க காக்க வச்சு என் வேலையெல்லாம் முடிந்த பின்னாடி
அவனுக்கு ஒரு நொடி சைன் செய்ய
நான் நேரம் ஒதுக்கினேன் தெரியுமா பிராங்?
“ஓகே.
இப்போ நம்ம ப்ராஜெக்ட் பத்தி பேசலாம் பிராங். எஸ்டர்டே நம்ம பிளான்படி மிஸ்டர்
ரங்கராஜன் கூட மீட்டிங் நடந்தது,
அதில நம் குறிக்கோளின் முதல்
அடியை சக்சஸ்புல்லா எடுத்துவச்சாச்சு.”
“தென், ஐ ரிமைன்ட் யூ. பிராங்
நான் வந்த வேலைப் பத்தி ஏதாவது சொல்லணும்னு இருந்தா நீ என்கிட்ட கேட்கலாம். ஆனால்
நம்ம ப்ராஜெக்ட் செய்யும் நேரம் போக
மத்த நேரங்கள் முழுக்க என்னுடையது பிராங்.”
“என்னோட
நேரத்தில நான் எங்கப் போறேன், யாரை பார்க்கிறேன், என்ன
செய்கிறேன் அப்படின்னு நீ கேள்வி கேட்கிறது நல்லதில்ல.”
என்னைய
நீ அனுப்புற மற்ற எகானமிக் ஹிட்மேன் போல
அடக்கி நடத்தணும்னு நினைத்தால் ஏமார்ந்து போயிடுவ பிராங்”, என்று சற்றுக் காட்டமாகவே
பேசினான்.
தீரன் அவ்வாறு
பேசியது பிராங்கிற்கு சந்தோசத்தை கொடுக்கவில்லை. இருந்தபோதிலும் தன்னுடைய கோபத்தை
இப்போது அவனிடம் காண்பிப்பது சரியல்ல என்பதனை மனதினில் கொண்டு கொஞ்சம் நிதானமாகவே
பேச முயன்றான் பிராங்.
தீரா ஐ
நோவ் யூ. பட் இந்த ப்ராஜெக்ட் நாம் செய்ய முடிவெடுத்ததும் நமக்கு இந்த ப்ராஜெக்ட்
லீட் செய்ய ஸ்பான்சர் செய்த மில்லினியர்ஸ் யாரும்
லேசுபட்டவங்கள் கிடையாது.
நான்
உன்மேல் உள்ள நம்பிக்கையில் உன்னை கேள்வி கேட்காமல்
இருக்கலாம் ஆனால் நம்ம ப்ராஜெக்ட் மூவ்ஸ் பற்றியும் என்ன செய்றோம்றதை என்கிட்ட
மட்டும் கேட்டுக்கிட்டு இருக்கமாட்டாங்க.
அவர்களும்
உன்னைய பாலோ செய்வாங்க. ஏன்னா இந்த ப்ராஜெக்ட் சக்சஸ்புல்லா முடிந்தால் கிடைக்கும்
பெரும் லாபத்தில அவர்களும் பங்கெடுத்துக்கணும்ற ஆசையில் மிகப்பெரிய அளவு பணத்தை
இந்த ப்ராஜெக்டுக்காக ஸ்பான்சர் செய்தவங்க அவங்க” என்று கூறினான்.
அவன்
கூறியதை கேட்ட தீரன், ஆனவமான
சிரிப்பை பிராங்கின் காதிற்கு அனுப்பியவன். “என்னை
மிரட்டி கன்ரோல் செய்யப் பார்க்கிறாயா பிராங்.”
“நான்
செய்யனும்னு வந்த ப்ராஜெக்ட் மூவ் எடுத்து வைக்கிற
சந்தர்பங்களில மட்டும் நீ ஏற்பாடு செய்திருக்குற பாதுக்காப்பையும் அந்த வீட்டையும் யூஸ்
செய்யலாம்னு நினைச்சிருந்தேன்.”
“ஆனால்
இப்போ அந்த முடிவை மாத்திக்கிட்டேன். ப்ராஜெக்ட நல்லபடி நான் செய்து முடிப்பேன்.
ஆனா அந்தநேரம் கூட நீ ஏற்பாடு செய்திருக்குற பாதுகாப்பு வளையத்துக்குள் நான்
அகப்படமாட்டேன் பை மை டியர் ஃப்ரெண்ட்” என்றபடி மொபைல் இணைப்பைக் கட் செய்தான்.
மொபைல்
இணைப்பை துண்டித்த மறுநிமிடம்,
தீரன் மூச்சை இழுத்து வெளியிட்டு உள்ளிழுத்து தனது கோபத்தை குறைக்க
முடிவெடுத்தான்.
அப்பொழுது
அவனின் முன் இருந்த சிஸ்டத்தின் ஸ்கிரீன் சேவரை நீக்கியதும் அதில் அவன் பெரிதாக்கி வைத்திருந்த
யாழிசையின் உருவத்தை கண்டவன் உள்ளம் ஆசுவாசமடைந்தது.
அவன்
உதடுகள் “தாங்க்ஸ்
பேபி” என்று
முனுமுனுத்தபடி அவனின் விரல் அவளின் முக வடிவை திரையின் மேலேயே தொட்டு
ரசித்தது.
பின்
தன் செயலை நினைத்து சிரித்தபடி “ஐ
டோன்ட் வான்ட் டூ மிஸ் யூ பேபி”
என்றவன் கண்ணை மூடி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க
ஆரம்பித்தான்.
----தொடரும்---

No comments:
Post a Comment