anti - piracy

Post Page Advertisement [Top]

                                     

------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்-08

 

 தீரன் இந்தியாவிற்கு வரயிருந்த ஒருவாரம் முன்பு இமாமியும் அவனும் சேர்ந்து ஆபீஸ் ரூமில் தங்களுக்குள் விளையாட்டாய் பேசிக் கொண்டிருந்தனர். இமாமியிடம் நீ என்ன அவ்வளவு பெரிய மொபைல் ஹாக்கிங் ஜாம்பவானா? உன்னால் சாதாரண மக்களிடம் வேண்டுமானால் உன் வேலையை காட்ட முடியும். பெரிய வி.வி.ஐபிகளிடம் எல்லாம் உன் ஜம்பம் செல்லாது. இப்போ அவங்கெல்லாம் ரொம்ப அலார்ட் ஆகிட்டாங்கஎன்று கூறி கலாய்திருந்தான்.

 

இமாமியால் தீரனின் அந்த கலாய்த்தலை லேசில் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

 

தீரன் தனக்கு மறுவாழ்வு கொடுத்தான், இருந்த போதிலும் அவனின் அபரிமிதமான ஹாக்கிங் திறமையை தீரன் சந்தேகிப்பதா? என்று டெம்ட்டான இமாமி, தீரனிடம் தன்னை புரூப் செய்வதற்கு மறுநாள் ஒரு காரியத்தைச் செய்து வியக்க வைத்திருந்தான்.

 

முன்பு லண்டனில் வசிக்கும் மகேஷ் மல்கோத்ராவின் புதிதாக அறிமுகப்படுத்திய டெக் நியூ மாடல் போனின் மொமண்ட்ஸ் எல்லாம் தீரனின் மைக்ரோ மொமண்ட்ஸ் நிறுவனம் வடிவமைத்து கொடுத்தது. அந்த மொமண்ட்ஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த போன் வடிவமைப்பில் தீரன் கொடுத்த சில ஐடியாக்கள் மூலம் சந்தையில் வாங்க பெரும் போட்டி நிலவியது.

 

எனவே லண்டன் வாசியான இந்திய வம்சாவளி மகேஷ் மல்கோத்ரா அவருக்கு தீரனின் மேல் பெரும் மதிப்பும் தீரனின் பிஸ்னஸ் மூளைக்கு அவர் பெரிய விசிறியுமாக ஆகியிருந்தார்.

 

பிராங்கை தீரன், மகேஷ் மல்கோத்ராவின் டெக் நியூ மொபைல் ஷோரூம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள கூட்டிக்கொண்டு சென்றான்.

 

பிராங்கிற்கு ஒரு பழக்கம் இருந்தது சந்தையில் அறிமுகமாகும் லேட்டஸ்ட் மாடல் மொபைல்களை முதலில் வாங்கி உபயோகித்து அதை பற்றி சிலாகிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

 

தீரன் பிராங்குடன் நுழைவதை கண்ட மகேஷ் மல்கோத்ரா இருவரையும் வரவேற்று தனது மொபைல் வெளியீட்டு விழாவில் சிறப்பிக்க வந்த விருந்தினர் என்று அங்கு கூடியிருந்த வி.ஐ.பிகளிடமும் பிரஸ் ரிபோர்டர்கள் முன்பும் அறிவித்தவர்.

 

தங்களது நியூ போன் அறிமுக நிகழ்ச்சியின் போது 22 கேரட் தங்க பிளேட் கொண்டு வடிவமைக்கப்பட்ட அரிதான மூன்று மொபைல்களை (விளம்பரத்திற்காக) வடிவமைத்திருப்பதாக கூறி அதை பார்வைக்கு திறந்து வைக்கும் பொறுப்பை தீரனிடம் வழங்கினார்.

 

திறந்து வைத்த தீரனிடம் அதில் ஒன்றை பரிசாக வழங்கப்படுவதாக கூறி எடுத்துக்கொடுத்தார். மற்றொன்றை அவரது நிறுவனத்தின் ஷோரூமை அழகு படுத்துவதற்காக வைக்கப்டுவதாக அறிவித்தார். இன்னும் ஒன்றை ஒன்னரை மில்லியன் டாலருக்கு விற்பனைக்கும் வைத்திருந்திருப்பதாகவும், மிகவும் பிரபலமான ஒருவரிடம் ஒன்னரை மில்லியன் டாலருக்கு அதை கொடுக்க இருப்பதாகவும் அந்த நபர் யார் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பேட்டிக்கொடுத்தார்.

 

தீரனுடன் வந்திருந்த பிராங்கிற்கு அந்த மொபைலை வாங்கி விட வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. மனதிற்குள் அரிதான மதிப்புமிக்க ஒன்று தன்னிடம் இல்லாமல் தீரனிடம் மட்டும் இருப்பதா?! என்ற பொறாமையும் அதில் சேர்ந்துகொண்டது .

 

தீரனுக்கு பிராங்கிற்கும் இடையே சிறுவயதில் இருந்து ஒரு பழக்கம் இருந்தது. அதாவது, தீரன் பிராங்கிற்கு ஏதேனும் காரியம் செய்துக் கொடுத்தால் அதற்கு பதிலுக்கு பிராங் தீரனுடன் ஏதேனும் ஒரு போட்டியில் பங்கு கொள்ளவேண்டும் அல்லது தீரன் பிராங்கிற்காக ஒரு காரியம் செய்து முடித்தால் பிராங் தீரன் கேட்கும் ஒன்றை கொடுக்கவேண்டும் இதுவே அவர்களின் டீலாக இருந்தது .

 

பிராங்கால் தீரனுடன் போட்டியில் கலந்து ஜெயிக்க முடியாது எனவே அவன் தன்னிடம் கேக்கும் பொருளை அவனுக்கு வழங்குவதாக கூறி அவனை தனக்கு வேண்டிய காரியத்தை செய்ய வைப்பான்.

 

இப்பொழுது தீரனின் மூலமே அந்த மூன்றாம் கோல்டு பிளேட் செல்போனை வாங்க பிராங் முடிவு செய்தான். எனவே, “தீரா ஒரு டீல் நமக்குள் என்று தீரனிடம் பேச்சு கொடுத்தான் பிராங்.

 

பிராங்கின் பார்வை அந்த கோல்ட் பிளேட் செல்போனின் மீது ஆவலாக படிவதை ஏற்கனவே தீரன் கண்டுகொண்டான். எனவே, அவன் டீல் என்று பேசியதுமே தீரன் கூறினான் என்ன பிராங் அந்த மூன்றாம் கோல்ட் பிளேட் மொபைல் உனக்கு கிடைக்க நான் ஏற்பாடு செய்யணும் அப்படிதானே?! என்று கேட்டுவிட்டு அவனின் முகத்தை பார்த்தான் தீரன்

 

எஸ் தீரா!, ஐ வான்ட் இட்என்று பிராங் கூறவும், “அப்போ நீ இப்போ வச்சிருக்கும் உன் ஆப்பில் ஐபோனை என் இமாமிற்கு நீ கிஃப்டாக கொடுக்கணுமேஎன்றான்.

 

ஏனெனில் போன வாரம் தான் பிராங் அந்த மொபைலை வாங்கினான். இன்று வந்ததுபோல் அன்றும் மாலுக்கு பிராங்கும் தீரனும் தங்களுக்கு வேண்டிய திங்க்ஸ் பர்சேஸ் செய்ய வந்திருந்த போது எப்பொழுதும் போல் இமாமியும் தீரனுக்காக அவனின் பாதுகாப்புக்காக உடன் வந்திருந்தான். அப்பொழுது அங்கிருந்த மொபைல் ஷோரூமில் இருந்த அந்த ரேர் கலர் அட்வான்ஸ் ஆப்பிள் மொபைலை ஆர்வமுடன் வாங்குவதற்கு இமாமி எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அப்பொழுது அவனுக்கு வந்த மொபைலை அட்டன் செய்துவிட்டு திரும்பி அந்த மொபைலை வாங்குவதற்கு இமாமி அது இருந்த இடத்தை பார்த்தால் அது எம்ப்டியாக இருந்தது. கேஸ் கவுண்டரில் பிராங் அந்த மொபைலை வாங்கிக்கொண்டிருப்பதை பார்த்த இமாமியின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது

 

இமாமி அந்த மொபைலை ஆர்வமாக பார்க்கும்போதே பிராங்கின் பார்வையும் அதில் பதிந்து விட்டதை கண்டுகொண்டான் தீரன்.

 

இமாமிக்கு மொபைல் அழைப்பு வந்த தருணத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அந்த மொபைலை பிராங் பே செய்து வாங்கியதை கிட்ட இருந்து பார்த்தவன் தீரன்.

 

எனவே இப்பொழுது அவன் ஆசைபட்ட அந்த கோல்ட் பிளேட் மொபைலை பிராங் அடைவதற்கு தீரன் உதவி செய்தால் அவன் போனவாரம் இமாமி ஆசையாக வாங்க நினைத்ததை தன்வசமாக்கி அந்த மொபைலை இமாமியிடமே கொடுத்துவிடவேண்டும் என்று டீல் பேசினான் தீரன்.

 

தீரனின் இந்த டீலை ஏற்பதற்கு யோசித்த பிராங்கிடம் பார் இந்த கோல்ட் ஐபோனை, நீ யோசிப்பதைப் பார்த்தால், இந்த ரேர் பீஸ் உனக்கு கிடைக்கும் அதிஸ்டம் இல்லை போல.

 

அவனின் அந்த வார்த்தையில் டெம்ட் ஆன பிராங், “ஓகே! ஓகே! தீரா நீ எனக்கு இந்த கோல்டன் ஐ போன் கிடைக்க உதவினால்! என் இந்த ஐபோனை இமாமிக்கு நான் கிஃப்டாக கொடுத்து விடுகிறேன்என்று ஒப்புக்கொண்டான்.

 

இங்குதான் பிராங்கிற்கு எதிராக விதி வேலை செய்ய ஆரம்பித்தது.

 

தீரன் கூறியதுபோல் அந்த கோல்டன் டெக் ஐபோனை மகேஷ் மல்கோத்ராவிடம் பேசி பிராங்கிற்கு அதை விற்பதற்கு ஒப்புகொள்ள வைத்தான். தீரனின் மேல் கொண்ட அபிமானத்தால் அவரும் பிராங்கிற்கு அதனை கொடுப்பதற்கு ஒத்துக்கொண்டு அதே மேடையிலேயே அந்த ரேர் ஐபோனை வாங்கும் அதிர்ஷ்டசாலி பிராங்என்று அறிவித்துவிட்டார்.

 

பிராங் அந்த ஐபோனுக்காக ஒண்ணரை மில்லியன் டாலருக்கான செக்கை கொடுத்த மறுநிமிடம் தீரன் தனது மறு கையை நீட்டி உன் ஐபோன் கொடு. நான், நீ இமாமிக்கு பிரசென்டாய் கொடுத்தாகச் சொல்லி இதை அவனுக்கு கொடுத்துடுகிறேன்என்றதும்.

 

இப்பவேவா? வீட்டிற்கு போனதும் கொடுக்கிறேனேஎன்றதும் அதற்கு மறுப்பாக தீரன் தலையசைத்தான்.

 

இதெல்லாம் அருகில் நின்றிருந்த இமாமி பார்த்தும் பார்க்காத மாதிரி தீரனின் பின் பாடிகார்ட் என்ற தோரணையில் நின்று கொண்டிருந்தான்.

 

பிராங் செக் கொடுத்த மறுநிமிடம் கோல்டன் போன் கிட் பேக் மற்றும் பில்லுடன் அவனுக்கு வழங்கப்பட்டதை எடுத்து பிரித்து தனது மொபைலில் இருந்த சிம் மற்றும் காண்டாக்ட்ஸ் அனைத்தையும் சென்ட் செய்து தான் போனவாரம் வாங்கியிருந்த போனின் மெமரிகார்டு மற்றும் சிம்மை எடுத்து இப்பொழுது வாங்கிய நியூ கோல்டன் டெக் ஐபோனில் போட்டவன் ஒருவாரம் முன்பு இமாமியிடம் போட்டி போட்டு வாங்கிய அந்த போனை தீரனிடம் கொடுத்தான்.

 

தீரன் தனக்கு பின்னால் நின்றிருந்த இமாமியிடம் டேக் திஸ் இமாமி. இது என் நண்பன் உனக்கு கொடுக்கும் பரிசுஎன்று கூறி கொடுத்தான்.

 

இமாமி தாங்க்யூ சார்என்று பிராங்கிடம் கூறினாலும், அவனது நன்றியை தீரனிடம் காண்பிக்கும் வகையில் அவனுக்கு மேலும் அரணாக தான் நிற்பேன் என்பதை செயலால் உணர்த்தினான் இமாமி.

 

இப்படியாக இமாமியின் வசமான அந்த ஐபோனுடன் இதற்கு முன்பு தீரனுடன் பிராங்கின் வீட்டிற்கு செல்லும் போதே அந்த போனில் பிராங்கின் வீட்டின் வைஃபை ஆக்டிவாவதை கவனித்திருந்தான்.

 

(நீங்கள் உங்கள் செல்போனில் பதிவு செய்யும் உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள்,உங்கள் ரகசிய எண்கள் போன்றவை மிகச் சுலபமாகத் திருடுபோவதற்கு வாய்ப்புள்ளது. உங்கள் மொபைல் போன் விற்கும் நிலை ஏற்பட்டால் உடனே அதில் உள்ள அனைத்து பர்சனல் விஷயங்களையும் கண்டிப்பாக டெலிட் செய்ய வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் பாதுகாப்பு மட்டும் உங்கள் பர்சனல் டேட்டாக்களைப் பாதுகாக்காது. முடிந்தால் போனை ரீசெட் செய்துவிடுங்கள். நீங்கள் உங்களுடைய வங்கியில் உள்ள பணத்தை மற்றொருவரின் வங்கிக் கணக்கிற்கு Netbanking பயன்படுத்தி Transfer செய்யலாம். அவ்வாறு Transfer செய்ய வேண்டுமென்றால் நீங்கள் Beneficiary-யை Add செய்ய வேண்டும். அதாவது நீங்கள் யாருக்கு பணத்தை அனுப்ப வேண்டுமோ அவர்களின் Bank Account Number மற்றும் IFSC number-யை இணைக்க வேண்டும். இதைத்தான் Beneficiary Add என்கிறோம்.)

 

மேலும் பிராங் அவசரமாக புது கோல்ட் பிளேட் போனை வாங்கி தன் பழைய போனில் இருந்த மெமரி கார்டு மற்றும் சிம் கார்டை எடுத்துவிட்டோமே என்று அசால்டாக பழைய போனை டீலுக்காக தீரனிடம் கொடுத்துவிட்டான்

 

அதை கைப்பற்றிய இமாமியின் ஹேக்கிங் மூளை, பிராங்கிடம் வாங்கிய போனில் ஏற்கனவே பதிவாகியிருந்த பிராங்கின் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள், ரகசிய எண்கள் போன்றவை ஆராய்ந்து தெரிந்து கொண்டான்.

 

ஆனால் அவனின் ஐ.எப்.எஸ்.சி மட்டும் அவனால் தெரிந்து கொள்ள இயவில்லை அவன் இந்தியா வரும் ஒருவாரம் முன்பு காலையில் தீரன் நீ என்ன பெரிய ஹேக்கரா என்று கலாய்த்தலை லேசில் எடுத்துகொள்ள முடியவில்லை.

 

அன்றே பிராங் தீரனுடன் அவன் இந்தியா செல்வதற்கு ஒருவாரம் முன்பு இந்தியாவில் மேற்கொண்ட ப்ராஜெக்ட் செய்வதற்கு ஸ்பான்சர் செய்தவர்கள் சிலருடன் பிராங் வீட்டில் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தான்.

 

அவர்களிடம் தங்களின் திட்டங்களை பற்றி விவரித்து தீரன் கூறிவிட்டு அந்த மீட்டிங் முடிவுற்றதும் மற்றவர்கள் வெளியேறினர்.

 

அவர்களுடன் இமாமியை மெயின் ஹாலில் அமரச் சொன்ன பிராங், தீரனிடம் நியூ பிஸ்னஸ் ஸ்பான்சர்கள் கொடுத்த நிதித்தொகைக்கு தனி அக்கவுன்ட் ஓபன் செய்ததைப் பற்றி தீரனிடம் கூறினான்.

 

இப்பொழுது வந்தவர்கள் ஸ்பான்சர் செய்த அமெளண்ட் தன் வங்கி அக்கவுண்டிற்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டதா என்று பாப்போம் என்று கூறி பேங்க் அக்கவுண்ட்டை செக் செய்ய தனது நெட் பேங்க் அக்கவுண்ட்டை ஓபன் செய்தான்.

 

ஹாலில் அமர்ந்து இருந்த இமாமி பிராங்கிடம் இருந்து வாங்கிய அந்த ஐபோனை எடுத்து பிராங் வீட்டின் வைஃபைவில் ஏதேனும் அவனது கம்ப்யூட்டரில் இருந்த தகவலை ஹேக் செய்வோமா என்று முயன்று பார்த்தான்.

 

அவனின் அபரிமிதமான ஹேக்கிங் திறமையை தீரன் சந்தேகிப்பதா? தீரனிடம் தன்னை புரூப் செய்வதற்காக அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தான்.

 

(வைஃபை மூலம் இணையத்தை வழங்குபவர் ஹேக்கராக இருந்தால், நம் லாக் ஃபைல்களை (log file) திருட வாய்ப்பு இருக்கிறது. இந்த லாக் ஃபைல்கள் இருந்தாலே, நம் போன் மூலம் என்ன செய்தோமோ, அதை நம் போன் இல்லாமலேயே ஹேக்கரால் செய்ய முடியும். இன்று நமது செல்போனில் இருக்கும் நிதி சார்ந்த விவரங்களை மட்டும் ஹேக் செய்வதற்கும், நம் பணத்தை நம் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை திருடவும் முடியும்)

 

பிராங் அவனது வங்கி கணக்கை பாஸ்வேர்டு போட்டு ஓப்பன் செய்ததை ஹேக் செய்து அறிந்த இமாமி அவனது நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் மற்றும் வங்கி கணக்கு முதலியவற்றை பிராங் இயக்குவதை தான் வைத்திருந்த போனிலேயே பாலோ செய்ய ஆரம்பித்தான்.

 

பிராங் தீரனிடம் கூறினான், சொன்னதுபோல் ஸ்பான்சர்கள் என்னுடைய அக்கவுண்டிற்கு பணத்தை போட்டுவிட்டார்கள் தீரா! இனி இந்த ப்ராஜெக்ட் செய்வதற்கு செலவழிக்கும் பணத்திற்கு பிரச்சனையில்லை என்று கூறியவன், சந்தோசத்துடன் தீரனுடன் சிலமணித்துளிகள் செலவழித்தான்.

 

பின் தீரன் பிரங்கிடம் விடைபெற்று வெளியில் வந்தவன் இமாமியுடன் காரை அடைந்து தங்களது இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டான்.

 

கார் பிராங்கின் வீட்டை விட்டு சிறிது தூரம் வந்த பின்பும் யோசனையுடம் இருந்த இமாமியை பார்த்த தீரன் என்ன இமாமி பலத்த யோசனை போல?” என்று கேட்டான்.

 

பாஸ்... சான்சே இல்லை! எவ்வளவு பணம்? ஒரு தீவை விலைக்கு வாங்குமளவுக்கு உள்ள உங்களின் நண்பரின் பணத்தை என்னால் என் அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடச்சிருக்கு பாஸ். ஆனால் அப்படி செய்து நான் மாட்டிக்கொள்ள விருப்பலை. ஆனால் அவ்வளவு பணம் எதுக்கு பாஸ் அவரது கணக்கில் பெயர்வாரியாக கூறி இவர்கள் கொடுத்தார்கள்?” என்று கேட்டான் இமாமி.

 

அவன் கூறியத்தைக் கேட்டு ஷாக்கான தீரன், ஏய் இமாமி! நீ வெளியில் தானே இருந்த அதுவும் நீ சொன்னதுபோல் டீடெய்ல்டாக என்னிடம் பிராங் சொல்லவில்லையே, உனக்கு எப்படி அவனது அக்கவுன்டில் ஸ்பான்சர்கள் போட்ட பணத்தோட அளவும் பெயர்வாரியாய் இன்னார் போட்ட அமெளண்ட் இவ்வளவு முதல்கொண்டு சொல்லமுடிந்தது? என்று ஆச்சரியப்பட்டதும்.

 

தன்னுடைய பாக்கெட்டில் இருந்த போனை தூக்கி காண்பித்த இமாமி, “பாஸ் இந்த போனில் பிராங் சார் வீட்டு வைஃபை பாஸ்வேர்ட் ஆக்டிவ்ல தான் இருக்கு.அவர் வீட்டில் அவர் வைஃபையில் செய்யுற அனைத்து வேலைகளையும் என்னால் கண்காணிக்கவும் அதை ஹேக் பண்ணவும் முடியும்.

 

அவரோட நெட் பேங்கிங் அக்கெளண்டும், பாஸ்வேர்ட், மற்றும் ஐ.எப்.சி குறியீடு எல்லாம் இப்போ என் பாக்கெட்டில் அதை வச்சு அவர் பேங்க் அக்கெளண்டை ஹேக் செய்து அந்த பணத்தை என்னால் திருட முடியும்.

 

ஆனால் என் கணக்கில் அதை டிரான்ஸ்பர் செய்தால் பணம் திருடு போவத வச்சு பிராங் தோண்டி துருவினால் நான் மாட்டிக்குவேன் சோ அந்த தப்பை நான் செய்யமாட்டேன்.

 

பட் அந்த அக்கெளண்ட் பற்றிய எந்த தகவலாவது உங்களுக்கு தேவைப்பட்டால் நான் அவரின் இந்த போனை யூஸ் செய்து ஹேக் செய்து உங்களுக்கு கொடுக்கமுடியும்என்று கூறிய இமாமி, “பாஸ் இப்போதாவது நான் பெரிய ஹேக்கர்னு ஒத்துக்குவீங்களா?” என்று கேட்டான்.

 

அவனின் இந்த செயலில் வியந்துபோயிருந்த தீரன். எஸ் இமாமி யு ஆர் தெ ஹேக்கர் கிங்என்று கூறியிருந்ததை எல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்த்தான் தீரன்.

 

இதை வைத்து பிராங்கை மடக்கப் பிளான் போட்ட தீரன் இமாமியை பட்டன் போனில் தொடர்பு கொண்டான்.

 

இமாமி போனை அட்டன் செய்ததும், “இமாமி உன்னால் பிராங்கின் பேங் அக்கெளண்டை ஹேக் செய்து பணத்தை வேறொரு அக்கெளண்டிற்கு டிரான்ஸ்பர் செய்ய முடியுமல்லவா?” என்றதும்.

 

எஸ் பாஸ், ஐ கேன் டூ இட். பிராங்கின் அந்த அக்கெளண்டில இருக்கிற பணத்தை யார் வித்ரா செய்தார்கள்னு பிராங் அறியாமல் உலகத்தின் எதாவது ஒருமூலையில் இருந்தும் மொபைல் பேங்கிங் ட்ரான்ஸாக்ஷன் மூலம் பணத்தை திருடிக்கொள்ள என்னால் முடியும்”.

 

இமாமி, நீ என்ன செய்ற அந்த அக்கெளண்டில் எவ்வளவு பணம் இருக்குதுன்றதையும் இந்த ஒருவாரத்தில் எங்கிருந்தெல்லாம் அவனின் அக்கெளண்டிற்கு பணம் வந்திருக்கிறதுன்ற டீடைல்ஸ் எல்லாம் அவனின் அக்கெளண்ட் பாஸ்வேர்ட் மூலம் கேதர் செய்து வை. நான் சொல்லும் போது சொல்கின்ற அக்கெளண்டில் அந்த பணத்தை டிரான்ஸ்பர் செய்திடுஎன்று கூறினான்.

 

பாஸ் நான் சொல்வதுபோல் அந்த அக்கெளண்டில இருந்து பணத்தை யார் எடுத்தார்கள் என்ற விஷயத்தை சாதாரண மனிதர்களால் கண்டுபிடிப்பது முடியாது தான்.

 

ஆனால்... ஒரு நாட்டின் பாதுகாப்பு துறையில் உள்ளவர்களை கூட தெரிந்து வைத்திருக்கும் பிராங் போன்ற ஆட்கள் முயற்சி செய்தால் உலகத்தின் எந்த மூளையில் உள்ள அக்கெளண்டில யார் கணக்கிற்கு அது டிரான்ஸ்பர் ஆகியிருக்குது என்பதை தெரிந்துகொள்ள முடியும்என்று கூறினான்.

 

ஆமாம் இமாமி. நீ சொல்வது போல் பிராங் பணம் காணாமல் போயிருப்பதை அறிந்துகொண்டு ஆக்சன் எடுக்கத் தொடங்கும் இடைவெளிக் காலம் நம்மளுடயது.

 

ப்ராங் என்னை அடக்கப்பார்கிறான் அது அவனுக்கே குழிபறிப்பதற்கு சமானம். அவனுக்கும் எனக்கும் இடையில் ஒரு தீர்க்கப்படாத கணக்கு இருக்கு. இதன் மூலம் அந்த கணக்கை நான் நேராக்கிக் கொள்வேன்என்றான் தீரன். மேலும் இமாமிக்கு சில கட்டளைகளை பிறப்பித்தவன் தொடர்பை துண்டித்தான்.

 

தொடர்பை துண்டித்தவன் லேப்டாப்பை சட்டவுன் செய்து எடுத்து மீண்டும் தனது பேக்பேகினுள் வைத்தவன், தனது திங்க்ஸ் எல்லாவற்றையும் பேக் செய்து எடுத்துக்கொண்டான்.

 

ரூமிற்கு பின் பக்கம் வந்து இரவு உணவை உண்டவன். வேறு புதிய ட்ராக்சூட் மற்றும் டீசர்ட் போட்டுக்கொண்டு ரூமை உள்பக்கம் தாளிட்டான். ரூமின் பால்கனிக்கு வந்து சுற்றிலும் கூர்ந்து கவனித்தான்.

 

அங்கிருந்த இரவின் இருளை அங்கு போடப்பட்டிருந்த விளக்குகளின் வெளிச்சம் விரட்ட முயன்றுக் கொண்டிருந்தது.

 

அவனின் ரூமின் பால்கனிக்கு அருகில் மரத்தின் கிளை நீண்டு இருந்தது. பேக்பேக்கை தனது தோள்களில் மாட்டியவன் பால்கனி சுவற்றில் ஏறி கையில் வைத்திருந்த கொக்கியுடன் கோர்த்திருந்த கயற்றின் நுனியை பிடித்தபடி கொக்கியை தூக்கி அடர்ந்திருந்த அந்த மரத்தின் மீது விட்டெறிந்தான். கொக்கி அதன் பெரிய கிளையில் லாவகமாக மாட்டிக்கொண்டது அதன் கையிற்றை இழுத்துப்பார்த்தவன் பின் அதனை தன் இடுப்போடு சுற்றி முடுச்சுப் போட்டுக் கொண்டான்.

 

அந்த கிளையை பிடித்து அதில் தொத்தி அந்த மரத்தின் கிளையின் வழியே சென்று கொக்கியயையும் எடுத்துக்கொண்டவன் மரத்தின் வழியே கீழிறங்கினான்.

 

அவனின் பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்திருந்த செக்யூரிட்டி டீம் அவன் ரூமிற்குள் இருப்பதாக நினைத்து உள்ளேயிருக்க அவன் ஹோட்டலை விட்டு வெளியேறியிருந்தான்.

 

ஹோட்டல் இருந்த தெருவை கடந்ததும் கருப்பு நிற வால்வோS60 காருடன் மாதவன் அவனுக்காக காத்திருந்தான்.

 

மாதவனின் அருகில் வந்த தீரன் லெட்ஸ் வீ கோஎன்றபடி முன்புற கதவை திறந்து ஏறிக்கொண்டதும். மாதவனும் மறுவார்த்தை பேசாமல் டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்ட ஆரம்பித்தான்.

 

அவர்களின் கார் ஊட்டியை நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தது. நேரம் இரவு 12:30யை நெருங்கிய வேலையில் மாதவன் ஒரு வீட்டின் முன்பு காரை நிறுத்தினான்.

 

தீரன் காரிலேயே அமர்ந்திருக்க மாதவன் இறங்கி மொபைலில் மணி நான் வந்துட்டேன்என்று கூறும் போதே அவனின் அருகில் ஓடி வந்த மணி,

 

சார் நான் ரெடி,லண்டனில் இருக்கும் என் முதலாளி மகேஷ் மல்கோத்ரா நீங்கள் கூட்டிட்டு வந்திருப்பவரிடம் வீட்டை காட்டும் படியும் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி எனக்கு ஆர்டர் செய்திருகிறார்.

 

என் பைக்கை எடுத்துக்கொண்டு நான் முன்னால் போகிறேன் நீங்கள் என்னை தொடர்ந்து வாருங்கள்என்றவன், அந்த இரவு வேலையில் மாதவன் பின்தொடர ஊருக்கு சற்று தள்ளியிருந்த நவீன பார்ம் ஹவுஸ்க்கு கூட்டிக்கொண்டு போனான்.

 

மணி கூட்டிக்கொண்டுபோன இடம் சுற்றிலும் வீடுகளே இல்லாத பசுமையான தோற்றத்தில் தனித்திருந்த ஒரு மாளிகையாக இருந்தது.

 

பல ஏக்கரில் சுற்றிலும் உயரமான காம்பவுண்ட் எழுப்பப்பட்டு இருந்தது. அதன் கேட் அருகில் நின்றிருந்த வாட்ச்மேனிடம் பைக்கில் இருந்தபடியே ஏதோ மணி கூறவும் காரை நோக்கி சல்யூட் அடித்த அந்த வாட்ச்மேன் வேகமாக கேட்டை திறந்து விட்டவன், ஓடிச்சென்று அங்கிருந்த விளக்குகளை எரியவைக்கும் மின் தூக்கியை இயக்கினான்.

 

உள்ளே பசுமையாக புல்வெளிகளும், குன்றுகள் போன்ற அமைப்பும், அதில் இருந்து செயற்கையா இயற்கையா என்று ஆச்சரியப்படும் வகையில் வழிந்து சென்றுக் கொண்டிருந்த நீரூற்றுகளும், மரங்கள் கூட அழகாக செப்பணிட்டு வளர்க்கப்பட்டு இருத்தது. அந்த இரவிலும் அங்காங்கே வழிநெடுக்க அழகான வேலைப்பாடுடைய உயரமான தூண்களின் மேல் தொங்கிக்கொண்டிருந்த விளகுகளின் வெளிச்சமும் அந்த இடத்தை ரம்மியமாக காட்டியது.

 

உள்ளே சென்ற கார் ஒரு பங்களாவின் முன் நின்றது. தீரன் கீழிறங்கியதும் அவனது மொபைல் ஒலி எழுப்பியது.

 

ஐ ஆம் மகேஷ் மல்கோத்ரா ஸ்பீக்கிங் மிஸ்டர் தீரமிகுந்தன்

 

எஸ். மிஸ்டர் மகேஷ் மல்கோத்ரா. ஐ ஆம் தீரமிகுந்தன். ஐ ஆம் இன்பிரன்ட் ஆப் யுவர் ஊட்டி கெஸ்ட் ஹவுஸ். இன்னும் ஒருவாரத்தில் உங்களது இந்த வீட்டிற்கான அமெளண்ட் உங்க அக்கெளண்டிற்கு வந்து சேரும். தகுந்த நேரத்தில நீங்கள் செய்த இந்த உதவியை மறக்கமாட்டேன் மிஸ்டர் மகேஷ் மல்கோத்ராஎன்றான் தீரன்.

 

அவருக்கு இந்தியாவில் பல இடங்களில் சொந்த ரெசார்ட் இருந்தது. அவரின் ஊட்டி ரெசார்ட்டை தான் தீரனுக்கு இமாமி கேட்டுக்கொண்டதின் பேரில் கிரயம் செய்துக்கொடுக்க முன் வந்துள்ளார்.

 

அவருக்கு இதை விற்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் தீரமிகுந்தனின் மேல் உள்ள அபிமானத்தால் தீரன் கேட்டுக்கொண்டதுக்காக தனது மாளிகையை கொடுக்க முன் வந்துள்ளார்.

 

உங்களுக்கு உதவி செய்வதை என் கடமையாக நான் நினைக்கிறன் தீரன். நமக்குள் இன்னும் பல பிஸ்னஸ் ஒப்பந்தங்கள் நிகழ வேண்டும் என்பதே என் ஆசைஎன்று அவர் கூறவும்,

 

ஸ்யூர் மிஸ்டர் மல்கோத்ரா, வி வில் ஜாயின் டு டூ மெனி வொர்க் இன் பியூச்சர். இப்போ, ஐ வான்ட் டு டேக் சம் ரெஸ்ட். பை மிஸ்டர் மல்கோத்ராஎன்று கூறிவிட்டு போனை அணைத்தான் தீரன்.

 

அங்கு அவர்களின் முன் வந்து நின்ற மணியிடம், “சார் உங்களுக்கு இங்க தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்துடுறேன். என் முதலாளி இங்கு வந்து தங்கும் போது சமைக்க வீட்டை சுத்தம் செய்ய வரும் ஆட்களை காலையில் இங்கு வரவழைத்துடுவேன். எதுவும் தேவையென்றால் ஒரு போன் செய்யுங்கள் உங்களின் முன் வந்து நின்றுடுவேன்என்றபடி அந்த பங்களாவின் சாவியை தீரனிடம் நீட்டினான்.

 

மணி நீட்டிய சாவியை மாதவன் வாங்கிக்கொண்டு, அவனிடம் ஓகே மணி, நீங்க கிளம்புங்க. இந்த பங்களாவில் தங்கியிருப்பது உங்களின் முதலாளி மகேஷ் மல்கோத்ரானே மற்றவர்களிடம் சொல்லிடுங்கஎன்று கூறி அவனை அனுப்பிவைத்தான்.

 

அந்த மாளிகையின் உள்சென்றவர்கள் எல்லா இடத்தையும் ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு பாதுகாப்பையும் உறுதிபடுத்திக்கொண்டு ஹால் சோபாவில் எதிர் ஏதிரே அமர்ந்தனர்.

 

அமர்ந்த மறுநிமிடம் தீரன் மாதவனிடம், வானவராயரின் குடும்பத்திற்கும் யாழிசைக்கும் என்ன சம்பந்தம் அவள் எப்படி வானவராயரின் வீட்டில் குடும்பத்தார் போட்டோவில் இடம் பிடித்தாள்?” என்று கேள்வியை தொடுத்தான்.

 

மாதவன் வானவராயரையும் அவரது மகள் பிருந்தா மற்றும் மனைவி வெள்ளையம்மா ஆகியோரை பற்றி தான் தீரன் கேட்பான் என்று நினைத்திருக்க திடீரென்று புதிதாக யாழிசையை பற்றி கேட்டதும் குழம்பிவிட்டான்.

 

யாழிசையின் பேரை கூட அவன் சரி வர நினைவில் கொள்ளவில்லை. அவள் வானவரயரின் கணக்குப் பிள்ளையாகிய கணேச பிள்ளையின் மகள் என்பதை தவிர வேறு ஒன்றையும் அவன் தெளிவாக யாழிசையை பற்றி விசரிக்காததால் யாரை பாஸ் கேட்கிறீர்கள்?” என்று கேட்டான்.

 

அவனிடம் பதில் கூறாமல் தனது லேப்டாப்பை எடுத்து வானவராயரின் குடும்ப விவரம் இருந்த போல்டரை ஓப்பன் செய்து அதில் பிருந்தாவுடன் இருந்த யாழிசையின் உருவத்தை மாதவனிடம் காண்பித்தவன் இவளைத் தான் கேட்கிறேன்என்று காண்பித்தான்.

 

ஓ இவுங்களை கேட்கிறீர்களா பாஸ்? இது வானவராயர் ஐயா வீட்டு கணக்குப் பிள்ளையின் மகள்என்றான்.

 

அவன் அவ்வாறு கூறியதும், “கணக்குப் பிள்ளை என்றால்?” என்று அதற்கு அர்த்தம் புரியாமல் கேட்டான் தீரன்.

 

அவர்களின் தொழில் மற்றும் சொத்தின் கணக்குகளை பார்க்கும் அக்கெளண்டர்என்றதும்,

 

ஓ ஆடிட்டரா?” என்ற அவனின் கண்டுபிடிப்பில்,

 

பாஸ் அவர் ஆடிட்டிங் படித்தவர் இல்ல, கணேச பிள்ளையின் குடும்பம் வழிவழியாக வானவரயரின் ஜமீன் வீட்டு கணக்குகளை தங்களின் அனுபவ அறிவை வைத்து வரவு செலவுகளை தங்களுக்கு தெரிந்த விதத்தில், பார்பவர்களும், புரிந்துக்கொள்ளும் விதத்திலும் எழுதி வைத்து அதன் ரகசியம் காப்பவர்கள்.

 

இந்தியாவில் செல்வந்தர்களின் வீட்டில் உள்ளவர்கள் அவர்களது வீட்டு கணக்கையும் சொத்து கணக்கையும் மெய்ண்டெய்ன் செய்ய இந்த மாதிரி கணக்குப்பிள்ளைகளை நியமித்துக் கொள்வர்என்றான்.

 

யாழிசையை பற்றி உனக்கு தெரிந்ததை சொல்என்று திரும்பவும் கேட்டான் தீரன்.

 

பாஸ்,கணேச பிள்ளையின் மகள் பெயர் யாழிசைன்றதைக் கூட நான் சரியாக தெரிந்துக்கல. நான் வானவரயரின் குடும்பத்துல இருக்கிறவங்க பற்றி மட்டுமே கவனத்தில் எடுத்து விசாரிச்சேன்.

 

வானவராயருக்கும் வெள்ளையம்மாளுக்கும் கல்யாணம் முடிந்து பனிரெண்டு வருடம் முடிஞ்சதுக்குப் பிறகு தான் பிருந்தான்ற மகள் பிறந்தாள்.

 

எனவே அதுவரை குழந்தையில்லா அந்த தம்பதியினர் தாயில்லாது வளர்ந்த தங்களது வீட்டு கணக்குப்பிள்ளையின் மகளாகிய இந்த யாழிசையை வெள்ளையம்மாள் பெறாத தாயாக பார்த்துக்கொண்டதாக கேள்விப்பட்டேன்.

 

அந்த கணக்குபிள்ளையின் குடும்பத்துல இருக்கிற எல்லோரும் வணவராயரின் குடும்பத்தின் மீது மிகுந்த விசுவாசம் உள்ளவர்கள்னு கேள்விப்பட்டேன். அதோடு யாழிசையின் படிப்புச்செலவையும் சிறுவயதில் இருந்தே வானவராயர் தான் செய்வதாகவே கேள்விபட்டேன்.

 

அதனால் தான் சாதாரண கணக்கரின் மகள் பெரிய பள்ளியில் சேர்ந்து படிக்க முடிந்ததாகவும் இப்பொழுது கோயம்புத்தூரின் டாப் ஒன் எஞ்சினியரிங் காலேஜில் படிக்க முடிவதாகவும் கேள்விப்பட்டேன்.

 

மேலும் இந்த கணக்கு பிள்ளை குடியிருக்கும் வீடு கூட வானவராயரின் தாத்தா அவர்களுக்கு தானமாக கொடுத்ததுனு கேள்விப்பட்டேன். இது தவிர அந்த யாழிசையை பற்றி வேறெதுவும் தெரியாது.

 

ஓகே மாதவா! நான் இந்த யாழிசையை பார்த்து பேசணும், அதுவும் யாருக்கும் தெரியாமல் அவளோடு பேசணும். எப்பொழுது? எப்படி அவளை பார்க்கலாம்?” என்று தீரன் கேட்டான்.


---தொடரும்---

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib