அத்தியாயம்-09
காலேஜ் செல்ல பஸ் ஸ்டாப்பிற்கு எப்பொழுதும் பஸ் வரும் நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்பே கிளம்பி வந்து நின்றுவிடும் யாழிசை, நேற்று தோழி சந்தியா வீட்டில் ஏற்பட்ட அனுபவத்தால் மனஉளைச்சலில் இரவு தாமதமாக தூங்கி தாமதமாக காலையில் எழுந்து அரக்கப் பறக்க கிளம்பினாள். இருந்தபோதிலும் சற்று தாமதமானதால், ஸ்டாப்பிற்கு வேகமாக வந்துக் கொண்டிருந்த யாழிசை பாதையில் நின்றுக்கொண்டிருந்த அந்த கருப்பு நிற காரை கடக்க முயலும் போது அந்த காரின் கதவு படீர் என்று திறந்தது.
அந்த
காரைக் கடந்து மண் பாதையை விட்டு இறங்கி நான்கு
எட்டு வைத்தாலே தார் ரோட்டை அடைந்துவிடலாம் தார் ரோட்டிற்கு போய்
விட்டால், தனது
காலேஜ் பஸ்ஸை பிடித்துவிடலாம் என்று வந்துக்கொண்டிருந்தவளின் பாதையை அந்த காரின்
கதவு திறந்து வைக்கப்பட்டதால் அடைபட்டது. எனவே அவள் முன்னேறி
போக முடியவில்லை.
அவள்
தூர வரும் போதே அந்த காரை கவனித்தவள் ‘லூசுக,..
இந்த பாதையில் போயா காரை கொண்டு வருவாங்க. இது
கார் வந்து போவதற்க்கு ஏற்ற பாதையில்லைன்னு பார்த்தாலே தெரியுதே. இந்த
கார்காரனுக்கு அறிவேயில்லையா?
என்று எண்ணியபடி வந்தவளின்
பாதை அந்த காரினாலேயே மறிக்கப்படவும் எரிச்சலுடன் வைவதற்கு ஏறிட்டுப் பார்பதற்கும்
காரில் இருந்து தீரன் இறங்குவதற்கும், சரியாக இருந்தது.
ஆம்
அவள் நினைத்தது போல அது கார் போவதற்கு ஏற்ற பாதையல்ல, அந்த பாதையில் கார் ஒன்று
நுழைந்தால் எதிரில் ஒரு சைக்கிள் மட்டுமே உருட்டிக்கொண்டு போவதற்கு வழிவிட
முடியும். மேலும் அது மலை பிரதேசமாதலால் வீடுகளில் சமமான சமன்படுத்திய பகுதியில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிக இடைவெளிவிட்டு கட்டப்பட்டிருக்கும். மேலும்
வீட்டில் இருந்து தார்ரோட்டிற்கு வரும் பாதை சரிவாக ஒரு சிறு கார் போகும் அளவு
பாதை மட்டுமே இருக்கும்.
அக்கம்
பக்கத்தில் ஆள் யாரும் இல்லாத அந்த நிலையில் தீரனை கண்டதும் அவள் மூளை அவளுக்கு ‘ஓடிடு... யாழி’ என்ற உத்தரவிட்டது.
“ஹாய் பேபி, “டோன்ட்
கோ ஐ வான்ட் ஸ்பீக் வித் யூ”
என்று டோர் கதவில் கை வைத்து அதை வேகமாக மூடுமாறு இழுத்து தான் போக
கொஞ்சம் வழி ஏற்படுத்தி முன்னேற பார்த்த யாழிசையின் முகத்தில் தோன்றிய
அச்சத்தையும் அதன் காரணமாக தன்னை வில்லனை கண்டு மருண்ட பூவாய் தப்பித்து ஓட முயன்ற
அவளைத் தடுக்க யாழிசையின் கையைப்
பற்றி நிறுத்தினான்.
தீரன்
கையைப் பிடித்ததுமே பதட்டமடைந்த யாழி, “ப்ளீஸ் என்னை விடுங்க” என்று கூறியபடி யாராவது தெரிந்தவர்கள் அந்தவழியே வந்து தன்னை
காப்பாத்த மாட்டார்களா! என்று ரோட்டை திரும்பி பார்த்தபடி
கத்தினாள்.
அப்பொழுது
அவளுடன் பஸ் ஸ்டாப்பில் ஏற ரோட்டில் வந்துக்கொண்டிருந்த கல்லூரி பெண்ணை பார்த்து
அவளின் பெயர்ச் சொல்லி கூப்பிட முயன்ற அவளின் வாயை தீரன் தனது கரம் கொண்டு மூடி
இழுத்து காருக்குள் அவளுடன் ஏறியவன் “மாதவ் லெட்ஸ் வீ கோ” என்றதும், ‘பயம் மற்றும் யோசனையுடன்’ காரை இயக்கிய மாதவன் திரும்பி துள்ளிக்கொண்டிருந்த யாழிசையும்
அடக்கி பிடித்துக்கொண்டிருந்த தீரனையும் பார்த்து “பாஸ்...” என்று சொல்லி தயங்கினான்.
தீரன்
கோபமாக அவனை முறைத்துப்பார்க்கவும் தானாக காரை செலுத்த ஆரம்பித்தது அவனது கை.
“டேய் விடுடா... என்னை” என்று கூறி துள்ளியவளை
அடக்க வழி தெரியாது தீரன் அவளை தன்னுடன் சேர்த்து
அனைத்துப் பிடித்துக்கொண்டான்.
தன்னை
யாழிசை அவனின் அணைப்பில் இருந்து விடுவித்துக்கொள்ள முயன்றபடி கண்டபடி அவனை திட்ட
ஆரம்பித்தாள்.
அவன்
அவளிடம் பேசவும் அவளை அமைதிப்படுத்தி தான் கூறவந்ததை சொல்லமுயன்றவனின் வார்த்தைகளை
கேட்கும் நிலையில் அவள் இல்லாததைக் கண்டவன் அவளின் கூச்சலை நிறுத்துவதற்கு
வழிதெரியாமல் திணறியவன், அவளின்
முகத்தாடையை தனது ஒருகையால் பற்றி அவள் தலையை
நிமிர்த்தி “என்னை
விடு விடுடா...” என்று
கத்தி கொண்டிருந்த அவளின் உதட்டின் மீது தனது உதடுகளைப் பதித்தான்.
அவனின்
அந்த செயலில் அதிர்ந்தது யாழிசை மட்டுமல்ல மாதவனும் தான். அதிர்ச்சியில் மாதவன்
காரை “கிரீச்...” என்று பிரேக் போட்டு
நிறுத்தினான்.
யாழிசையோ
துள்ளவும் முடியாமல் பேசவும் முடியாமல் அவனின் அதிரடி முத்தத்தில் அவனின்
கைகளுக்குள் அடக்கப்பட்ட யாழியின் விழிகள்
கண்ணீரை சொரிந்தது.
கார் நின்றது கூட
உறைக்காமல் அவனின் கைவளைவில் அடங்கியிருந்த யாழிசையின் கண்களின்
கண்ணீர் உதட்டில் வழிந்து உப்பு கரிக்கவும்
தன்னிலை அடைந்த தீரன் அவளின் முகத்திலிருந்து தன் உதடுகளை அகற்றி “ஸாரி பேபி. நீ
ஸ்ட்ரகில் செய்வதை ஸ்டாப் செய்ய எனக்கு
வேறு வழி தெரியவில்லை”
என்று அவன் பேச ஆரம்பித்ததும் மாதவன் தான் நிறுத்தியிருந்த காரை
மறுபடியும் ஓட்ட ஆரம்பித்திருந்தான்.
மாதவனுக்கு
மனம் முழுவதுவும் பாரமாக இருந்தது. நேற்று தீரனிடம் ப்ராஜெக்ட் ரிசல்ட்
கொடுப்பதற்கு முன்பே இமாமியின் உத்தரவின் பேரில் அன்று காலையில் கோயம்புத்தூர்
கார் ஷோ ரூம் சென்று டெலிவரிக்கு காத்திருக்கும் பிளாக் வால்வோவை தீரனுக்காக
எடுத்துக்கொண்டு வந்தான்.
மாலையில்
தீரனை சந்தித்துவிட்டு ப்ராஜெக்ட் ரிசல்ட்டை சப்மிட் செய்த மாதவன் வீட்டை
அடைவதற்கு முன்பே திரும்ப தீரனை ஹோட்டல் இருந்த தெருவில் சென்று காத்திருந்து
பிக்கப் செய்துக்கொண்டு ஊட்டி சென்று சந்திக்க வேண்டிய ஆள் பற்றிய
விவரத்தை கூறிய இமாமியின் உத்தரவை
நிறைவேற்றியவன் அதுவரை செய்த வேலைகளை தீரனுக்கு ஆசையாகத்தான் செய்தான்.
ஆனால்
நேற்று ஊட்டி பங்களாவில் வைத்து யாழிசையை நான் சந்தித்துப் பேசணும் என்று தீரன்
கூறியதுமே மாதவனுக்கு அவனிடம் வேலை செய்வது பிடிக்காமல் போய்விட்டது.
ஏனெனில்
ப்ராங்கும் தீரனும் இருக்கும் இடத்தில் அழகான பெண்களும் இருப்பர் என்று அவன்
கேள்விப்பட்டிருந்தான். எனவே தீரனும் பெண் மோகம் உள்ளவன் என்றே அவன்
நினைத்திருந்தான்.
அப்படிப்பட்ட
ஒருவனின் பார்வையில் தமிழ் குடும்பத்து பெண்
விழுவதை மாதவன் விரும்பவில்லை. மேலும் அவன் அவளிடம் நெருங்க, தானே உடன் இருந்து உதவ வேண்டும்
என்பதை அவனால் ஜீரணிக்க இயலவில்லை.
ஆனால்
அவன் அறியாத விஷயம், பிராங்
இருக்கும் இடத்தில் தீரனும் இருக்கவேண்டியது இருக்கும், பிராங்கின் பணத்திற்கு
அவனின் அருகில் மொய்க்கும் பெண்கள்
தீரனிடம் அவனின் தோற்றம் மற்றும் திறமையால் ஈர்க்கப்பட்டு அவனுடன் தாங்களே
ஆசைப்பட்டு நெருங்கிப் பழக முன் வருவார்கள்
என்றும் தீரன் அவர்களை துச்சமாக மதித்து விலகிவிடுவான் என்பதை மாதவன் அறிந்திருக்கவில்லை.
இருந்தபோதிலும்
தீரனின் ஆளுமையில் இருக்கும் தன்னால் அவனை எதிர்த்துச் சுண்டுவிரலைக் கூட அசைக்க
முடியாது என்பதையும் புரிந்து வைத்திருந்தான்
மாதவன்.
எனவே
கடனே என்று அவனுடன் வந்து யாழிசையின் இருப்பிடத்தையும் அவள் கல்லூரிக்கு பஸ்
ஏறவரும் இடத்தையும் காண்பித்துவிட்டு, அவள் தொலைவில் வருவதை கண்ட தீரனின் சொல்படி காரை அவள் வரும்
பாதையில் நிறுத்தி வைத்தான்.
இந்நிலையில்
காரினுள் அவளை இழுத்துக்கொண்டு அமர்ந்த தீரன் தான் காரோட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில்
யாழிசையிடம் அத்துமீறி நடந்துக்கொண்டதை பார்த்து அதிர்ந்தவன் பின் தீரனின் பேச்சைக்கேட்டு
ஆசுவாசமடைந்தான்.
உடல் வெடவெடக்க
கண்களில் கண்ணீருடன் இருகரம் கூப்பி கும்பிட்ட படி “என்னை விட்டுடுங்க” என்று அவள் கூறியதும்
தீரன் அவளின் கூம்பிய கையை பிடித்து தன் கன்னத்தில் அவள் கரம் கொண்டு அறைந்தவன்.
“ஸாரி.. ஸாரி.. பேபி.
உன்னிடத்தில வேறு யாராவது இருந்திருந்தால் நான் அவளின் வாயை சட்
பண்ண சீக்சில் ஸ்லாப் கொடுத்திருப்பேன். உன்னை என்னால் ஹர்ட் செய்ய முடியாது
பேபி. உன்னிடம் ஸ்லாப் வாங்கத்தான் என்றபடி அவள் அறைந்த கன்னத்தை
தடவிக் கொண்டே மை சீக்ஸ் வெயிட் பண்ணுது” என்று கூறினான்.
“நான் பேசவரும் விஷயத்தை
காதுகொடுத்தே கேட்காம நீ கத்திக்கொண்டிருந்த உன்னைய காம்டவுன் செய்யத்தான்
கிஸ் பண்ணினேன்” என்று
ஹஸ்கியாக கூறினான்.
அவன்
கூறுவதை கேட்டு உதடு துடிக்க அவனின் செயலில் தான் அவமானப்படுத்தப்பட்டதாய் உணர்ந்த
யாழிசையோ “இப்படி
நீ என்னைய கிஸ் பண்ணி களங்கப்படுத்துவதற்கு பதில் என்னைய அடிச்சிருக்கலாம் இப்படி
என்னைய கடத்திக்கொண்டு போறது மட்டும் எங்க வானவராயர் ஐயாவுக்கு தெரி\ஞ்சால் நீ எவ்வளவு பெரிய
கொம்பனா இருந்தாலும் உன்னைய தண்டிக்காம விடமாட்டார்” என்று படபடவெனே
பொரிந்தாள்.
அவள்
கூறியதில் களங்கப்படுத்தாமல்,
பெரிய கொம்பன்,
தண்டிக்காமல் போன்ற
பல தமிழ் வார்த்தைகள் அவனுக்கு புரியவில்லை என்றாலும் அதற்கான விளக்கத்தை
அப்பொழுது அவளிடம் கேட்க அவன் முயலவில்லை.
ஆனால்
யாழிசையிடம் தன் அப்பாவின் பெயர் சொல்லி அவரிடம் கம்ப்ளைன்ட் செய்யப் போவதாக
சொல்வதை ஓரளவு யூகித்து “என்
டாட் கிட்ட என்னைப்பற்றி கம்ப்ளைன்ட் சொல்லப்போகிறாயா பேபி. உன்னைய நான் எதற்கு
மீட் செய்து பேச வந்தேன் தெரியுமா? உன் வானவராயர் ஐயாகிட்ட
அவங்க பர்ஸ்ட் வொய்ப் பத்மினி அதாவது மை மாம் குடுக்கச் சொன்ன
சில பொருளை கொடுக்கிறதுக்கு,
உன்னைய மீடியேட்டராக வைத்து அவரிடம்
சேர்க்க நினைச்சேன்” என்றவனை
கண்கள் விரிய பார்த்தாள்.
“தென், மை மாம்மின் கடைசி ஆசை
அவரின் மகனாய் என்னைய அவர் கூட சேர்க்க நினைச்சது தான். ஆனால்
பிறந்ததில் இருந்து டாட் யார்னே தெரியாம சிங்கிளாக கடைசிவரை ஸ்டான்ட்
செய்து என்னைய மாம் கவனிச்சுக்கிட்டதால், புதுசா
டாட் அப்படின்ற சொந்தத்தை என்னால் அக்சப்ட் செய்ய முடியலை. ஆனால்
என் மாம் இல்லாம போனதுக்கு பிறகு எனக்குனு ஒரு சொந்தம் இந்த உலகில இருப்பது
தெரியாமல் நான் இருக்கிறதை என் அம்மா விரும்பலை” என்றவன் சற்று உணர்வின்
பிடியில் அமைதியானான்.
அதனால
என் அப்பாக்கிட்ட என்னைய அடையாளம் காட்டணும் அப்படின்ற தாட் எனக்குள்ளும்
சிறிதளவு டெவலப்பானது. ஆனால் மை பேட் லக், அதற்கும் எனக்கு சான்ஸ்
கிடைக்கும்னு தோனலை” என்றான்.
அவன்
சொல்வதைக் கேட்ட யாழிசை இன்னும் கோவத்துடன் “நீ சொல்றதை நான் நம்பமாட்டேன். என் ஐயாவின் மகன் இதுபோல தரம் தாழ்ந்து
நடக்க மாட்டான்” என்று
கர்ஜித்தாள்.
“பேபி நீ நான் சொல்வதை
நம்பித்தான் ஆகணும்” என்றவன்
“மாதவா
அந்த டேஸ்போர்டில் ஒரு புளூ பைல் இருக்கும் அதை எடுத்துக்கொடு” என்று கூறினான்.
கார்
ஓட்டியபடியே ஒருகையால் டேஸ் போட்டை திறந்து
அதில் இருந்த புளூ பைலை எடுத்துக்கொடுத்தான் மாதவன்.
“இதை பார்த்தால்,நீ நான் சொல்வது ட்ரூனு
அச்செப்ட் பண்ணுவ” சொல்லியபடி, அந்த பைலில் முதல்
பக்கத்தில் ஜோடியாக பத்மினியும் வானவராயனும் இருந்த போட்டோவை அவளிடம்
காண்பித்தான்.
மேலும்
பத்மினியின் டைரியில் ஒட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் போட்டோசையும் அவர்களின்
விவரத்தையும் அம்புக்குறியிட்டு தீரனுக்கு விளங்குமாறு எழுதி வைத்திருந்தக்
குறிப்புகளை போட்டோவுடன் காட்டினான்.
அதில்
பிருந்தா பிறந்த வருடம் வெள்ளையம்மாளின் அம்மா என்று அவர்களின் வீட்டில் இருந்த
பாட்டி வீரலட்சுமியின் போட்டோவும் அதில் இருந்தது.
மேலும்
தாவணி பாவாடையுடன் வெள்ளையம்மாளும் அதில் இருந்ததையும் கண்டாள். ஆனால் அவள்
வானவராயருக்கு அருகில் ஜோடியாக இல்லாமல் பத்மினியின் பக்கம் நின்றிருந்தாள்.
வானவராயரின்
அருகில் ஜோடியாக அந்த போட்டோவிலேயே நாகரீகமான தோற்றத்தில் மிக அழகாக பத்மினி
நின்றிருந்ததை அவள் விழிவிரிய பார்ப்பதை பார்த்த தீரன், “ஷி இஸ்
மை மாம்” என்று
ஒற்றை விரலில் வருடிக் கொடுத்தான்.
வானவராயன்
மற்றும் பத்மினி ஜோடியாக நின்றிருக்க அவர்களின் முன்பு இரண்டு சேர் போட்டு
அமர்ந்திருந்த வானவராயரின் பெற்றோரும் அதில் இருந்தனர்.
வானவராயரின்
வீட்டு ஹாலில் அவரது பெற்றோர் படம் பெரிதாக பிரேமிடப்பட்டு இருக்கும்.
வெள்ளையம்மாள் தினமும் அதில் மாலையிட்டு வணங்குவதை யாழிசை பார்த்திருந்திருக்கிறாள்.
எனவே அது தனது அய்யாவின் பெற்றோர் என்று அறிந்துக்கொண்டாள்.
அன்று
தனது தோழி சந்தியாவின் வீட்டில் முதலில் தீரனை பார்த்த நொடி அவள் வியந்து பார்த்தது
அவளின் அய்யா போன்ற தோற்றத்தில் தீரன் இருப்பதைத் தான்.
ஆனால்
அதன் பின் அவன் அவளிடம் நடந்துக்கொண்ட விதத்தை கண்டு தனது கண்ணியமான ஐயா
சாயலில் இருப்பதனால் ஒன்றும் இவனும் என் ஐயாவும் ஆகிட முடியாது என்று
எண்ணத்தில் வானவராயருடன் அவனை ஒப்பிட்டுப் பார்ப்பதைத்
தவிர்த்து விட்டாள்.
மேலும்
இப்பொழுது அவன் காமித்த ஆதாரத்தில் இருந்து அவன் கூறுவது உண்மைதான் என்பது தெளிவாக
அவளுக்கு உரைத்ததால் அவள் படபடப்புடன் “நீங்க… எங்க ஐயாவின் மகனா? வாணவராயன் ஐயாவின் மகனாக இருந்துமா.. இப்படி
என்கிட்டே நடந்துக்கிட்டீங்க?!
என்று கேட்டாள்
“ஏய்! பேபி, அதான்
உன் இடத்தில வேறு யாரும் இருந்திருந்தால் அவளோட வாயை சட் செய்ய
ஸ்லாப் பண்ணியிருப்பேன்னு தானே சொன்னேன்,உன்னைய அடிச்சு கஷ்ட்டபடுத்த எனக்கு விருப்பம் இல்ல.
அதுதான் கிஸ் பண்ணினேன் ஏற்கனவே சொல்லிட்டேன். உன்னை
பார்த்த செகென்ட்ல இருந்து யூ ஆர் மைய்ன் என்று எனக்குள் ஒரு ஸ்பார்க் வந்துருச்சு” என்றவனின் வார்த்தையை
கேட்டவளின் கண் அதிர்ச்சியாலோ அப்படியா என்ற கேள்வியாலோ விரிந்தது,
“என் அம்மா எனக்கு வரும்
வொய்ப் எப்படியெல்லாம் இருக்கணும்னு நினைத்தார்களோ அது மாதிரி
நீ இருப்பாய்னு மை ஹார்ட் சொல்லுது. என் மாம் என்னிடம் வெஸ்டர்ன் கலாச்சாரத்தில
டேட்டிங் செய்து ஒருவருக்கொருவர் பழகி பார்த்து புரிதல் ஏற்பட்ட பிறகு செய்யும்
மேரேஜ் கூட அதிகம் டைவர்சில் முடியும், ஆனால் தமிழியன்ஸ் கல்யாணத்திற்கு
முன் ஆணும் பெண்ணும் பழக அனுமதிக்கப்படுவதில்லை. இருந்தாலும் அங்கு கல்யாணத்திற்கு
பிறகு விவாகரத்து மிகவும் குறைவுனு சொல்வாங்க.” என்றவன் அன்றைய நினைவுகளுக்குள் மூழ்கியபடி பேசினான்.
“அவர்கள் அப்படி சொல்லும் போது
கூட அதை நான் ஏத்துக்கலை உன்னைய பார்த்ததும் உன் கூட பழகிப் பார்க்காவிட்டாலும்
நீயும் நானும் வாழும் வாழ்க்கையை என் மனம் விரும்பும்னு தோணுது. என் வாழ்வில் என்
அம்மா இல்லாத வெற்றிடத்தை உன்னால் நிரப்ப முடியும்னு
நினைகிறேன்.”
ஐ
வான்ட் டூ மேரி யூ. நீ என்னுடைய இந்த மேரேஜ் ப்ரொபோஸ்சை அக்சப்ட்
செய்யாததற்கு முன், உன்னை
கிஸ் செய்தது மை மிஸ்டேக் தான். இனி நீ என்னோட மேரேஜ் பிரபோஷலை அக்சப்ட் பண்ணின பின்னாடி தான்
இதுபோல அட்வான்டேஜ் எடுத்துகுவேன் இது
என்னுடைய ப்ராமிஸ்” என்று
கூறினான் தீரன்.
அவனின்
வார்த்தைகளை கேட்டு அதிர்ந்தவள்,
“ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி நடந்துக்கணும், என்ன பேசணும்ற நாகரீகம்
கூட தெரியாதவரை நான் ஏத்துக்குவேன்னு கனவு
காணாதீங்க”
அவளின்
கோபத்தை கூட ரசித்தபடியே கூலாகவே அவளிடம் பதில் கூறினான், “பேபி
என்னை சுற்றி வெஸ்டர்ன் கல்ச்சர் சூழ்ந்து இருந்தாலும் என் அம்மாவோட வளர்ப்பால்
நான் கண்டபடி நடந்துக்காம கட்டுப்பாட்டோட தான்
இதுவரை நடந்திருக்கிறேன்.”
நான்
உன்னிடம் பிகேவ் செய்ததை வைத்து,
என்னைய நீ வேறுமாதிரி நினைக்கிற. நான் என் கன்ட்ரோலை இழந்து
சலனப்பட்டது” என்றவன்
‘உன்னிடம்
மட்டும்தான்’ என்று கூற வந்த வார்த்தையை மனத்திரையில் மற்றொரு பெண்ணின் பிம்பம்
வந்து போனதால் மாற்றிச் சொன்னான்.
நான் மேரேஜ் செய்ய விரும்பியவளிடம் மட்டும் தான்” என்று கூறி முடித்தான்.
ஏனோ
அவ்வளவு நேரம் அவனின் செயலில் கொதித்துக்கொண்டிருந்த அவளின் மனம் கொஞ்சம்
தனது வெம்மையை தனித்திருந்தது. அது அவனின் பேச்சாலோ அல்லது வானவராயர்
குடும்பத்தின் மீது இருந்த விசுவாசத்தினாலேயா என்பதை அவளாலேயே
உணர முடியவில்லை. இருந்தாலும் தனக்கு அவனின் மேல் இருந்த கொலைவெறி
குறைந்ததை அவனிடம் வெளிக்காட்டிக் கொள்ள யாழி விரும்பவில்லை.
அதனால்
யாழிசை இறுக்கமாகவே முகத்தை வைத்துக்கொண்டு, “நீங்க என் அய்யாவின் மகன்றது உண்மைன்னா
நேராகவே பண்ணை வீட்டிற்கு வந்து பேச வேண்டியது தானே?! அதை விட்டுவிட்டு
என் மூலம் ஏன் வானவராயர் ஐயாவை பார்க்க நினைகிறீங்க” என்று கேட்டாள்.
அவள்
அவ்வாறு கேட்டதும் வெளிப்படையாக இப்பொழுது தான் இந்தியாவில் செய்ய ஒத்துக்கொண்ட
பணியைப்பற்றி கூறமுடியாது. அதனைப் பற்றி தெரிந்தால் ஏற்கனவே
என் மீது கோபத்தில் இருக்கும் அவளை மேலும் டெம்ட் செய்ததுபோல்
ஆகிவிடும் என்பதை உணர்ந்தவன் அவளிடம்.
“மை பாமிலி இங்கே
இருப்பது யாருக்கும் தெரியக் கூடாது, அவ்வாறு தெரிந்தால் மை
டாட் பாமிலிக்கு, என்னை
குறி வைக்கிறவங்களால ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது” என்றான்.
அவன்
அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போதே மாதவன் யாழிசையின் கல்லூரி முன்பு காரை
நிறுத்தினான்.
யாழிசை, அவ்வளவு நேரம்
தீரனுடன் பேசிக்கொண்டிருந்தவள்,
கார் நின்றதும் கல்லூரியின் முன்பு வந்துவிட்டோம்
என்பதை உணர்ந்ததும் கேள்வியுடன் தீரனின் முகம் பார்த்தாள்.
உடனே
தீரன் யாழிசையிடம், “நீ
என்னிடம் ஸ்ட்ரகில் செய்ததால் எனக்கு
உன்னை கிஸ் செய்து உன்னை கண்ரோல் செய்ய சான்ஸ் கிடைத்தது.
அதுக்கு தாங்க்ஸ் பேபி. உனக்கு எப்படியோ எனக்கு அது ஸ்வீட் மெமோரிஸ் தான்”
அவன்
தனக்கு அளித்த முத்தத்தை ஸ்வீட் மெமோரிஸ் என்று கூறியதும் அவனை நிமிர்ந்து பார்க்க
முடியாமல் ஜன்னலின் புறம் திரும்பி வெளியே பார்பதுபோல் அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.
யாழிசையின் சங்கடத்தை
புரிந்துக்கொண்ட தீரன் வேறு பேசினான். “நான்
இன்னும் உன்னிடம் பேச நினைத்ததை பேசி முடிக்கலை.
நீ நான் சொல்றது உண்மைனு நினைத்தால் எனக்கு உதவி செய்ய
நீ சம்மதிப்ப” என்றவன், ஒரு பிளைன் கார்டில்
மொபைல் நம்பர் எழுதி அவளிடம் கொடுத்தவன், “இந்த நம்பருக்கு கால்
செய்து என்னுடன் பேச சம்மதம்னு சொல்லு, அடுத்த நிமிடம் உன்னை நான் காண்டாக்ட் செய்வேன்” என்றான்.
“இது யார் நம்பர்?” அவனின்
எண் எனச் சொல்வான் என்று நினைக்க அவனோ
“ஸாரி பேபி...
கான்பிடன்சியல் காரணமாக என்னுடைய மொபைல் நம்பரை யாருக்கும் நான் கொடுக்க முடியாது.
இந்த நம்பர் என்னுடைய அசிஸ்டென்டோடது. இன்னும் ஒண்ணு கவனமாகக் கேட்டுக்கோ. எனக்கு
இங்கு பாமிலி இருக்குதுன்ற விஷயத்தை யாருக்கும் தெரியாமல் உனக்குள்ளே வச்சுக்கோ.
வெளியில் தெரிஞ்சா ரிஸ்க் உன் வானவராயர் ஐயாவுக்குத்தான். பர்டிகுலராக, மிஸ்டர் ரங்கராஜனின்
டாட்டருக்கு கண்டிப்பாக தெரியக்கூடாது என்றான்.
அவன்
கூறியதும் என்ன ஆபத்து? யாரால்? ஏன்? என்ற பல கேள்விகள்
அவளுக்குள் எழுந்தது. அவளின் குழப்பமான முகத்தை பார்த்த தீரன் யாழ் “நீ இறங்கிப் போகாம என் உடனேயே
இருப்பதில் எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்லை!” என்றவனின்
வார்த்தையில் கேட்க நினைத்ததைக் கேளாமல், டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் இறங்கி அவள் இறங்குவதற்கு
தோதாக கதவை திறந்து வைத்திருப்பதை கண்டு, “இல்ல இல்ல நான் உங்க கூட வரலை, கிளம்புறேன்” என்று அவனிடம் கேட்க வந்த
கேள்விகளை கேட்காமலேயே இறங்கிக்கொண்டாள்.
----தொடரும்---

No comments:
Post a Comment