anti - piracy

Post Page Advertisement [Top]

                                                                             

------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்-10

 

 அவள் இறங்கியதும் மாதவன் வேகமாக காரில் ஏறி பாஸ் ஹோட்டலில் நீங்கள் இல்லையோன்ற சந்தேகம் பிளாக்கேட்ஸ் டீமிற்கு வந்துருச்சு, இப்போதான் ஹோட்டலில் இருந்த நம்ம ஆள் அவர்களுக்கு டவுட் வந்ததை எனக்கு மெசேஜ் செய்தான்”.

 

ம்.... இந்த நியூசை நான் பிப்டீன் மினிட்ஸ் முன்னயே எக்ஸ்பெக்ட் பண்ணினேன் மாதவ்என்றவனின் கையில் யாழிசையின் பர்ஸ் இருந்தது.

 

யாழிசையை வாய்பொத்தி காருக்குள் இழுக்கும் போது அவளின் கையில் வைத்திருந்த பர்ஸ் காரினுள் விழுந்திருந்தது. அவள் காலேஜ் வாசலில் இறங்கும் போதே காரினுள் கிடந்த அந்த பர்சை தீரன் கவனித்து விட்டான் இருந்தபோதிலும் அதை அவளிடம் கொடுக்காமல் தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.

 

அந்த பர்சை திறந்து பார்த்தவன் அதில் பேனா, பென்சில் மற்றும் சில ரூபாய் நோட்டுக்களுடன் அவளின் ஏ.டி.எம் கார்ட் மற்றும் மைக்ரோ மேக்ஸ் மொபைலும் இருப்பதை பார்த்ததும் மொபைலை எடுத்து அதனை இயக்கிய அவனின் மூளை பரபரப்பு அடைந்தது.

 

ஏனெனில் அவளின் மொபைலில் பெர்சனல் இன்போர்மேசனில் வங்கி அக்கவுண்டு நம்பர் மற்றும் ஏ.டி.எம் பாஸ்வேர்ட் முதலியன ஸ்டோர் செய்து வைத்திருந்தாள்.

 

மாதவனிடம் “இப்ப ஏதாவது ஒரு மொபைல் ஷோ ரூமிற்கு போகணும்என்றதும் மாதவனும் கோயம்புத்தூர் டவுனில் இருந்த ஒரு பெரிய மொபைல் ஷோரூமின் முன்பு காரை நிறுத்தினான்.

 

தீரன் தனது முகத்தை மறைக்குமாறு கண்ணாடி மற்றும் கேப் அணிந்து அவனுடன் சென்றவன் சாம்சங் கேலக்சிs8 போனை வாங்கி மாதவனை பில் போட சொல்லியவன் காருக்குள் வந்து தான் வைத்திருந்த புது சிம்மை அதில் ஆக்டிவ் செய்தவன், யாழிசையின் போன் மெமொரிஸ் மற்றும் மெமோரி காட்டில் உள்ளதை அதில் அப்லோடு செய்து அந்த மொபைலை அவளின் பர்சினுள் வைத்து மாதவனிடம் கொடுத்தான். அவனிடம் கல்லூரியில் இருக்கும் யாழிசையிடம் சேர்பிக்குமாறு கூறிவிட்டு அவளின் மொபைலை தனது வசம் வைத்துக்கொண்டான்.

 

மேலும் மாதவனிடம் தான் ஹோட்டல் போவதாக கூறியவன், தேவையான போது உன்னைத் தொடர்புக் கொள்கிறேன் என்ச்சொல்லி தான் அவனின் காரில் ஏறிய இடத்திலேயே. மாதவனை இறக்கிவிட்டவன், காரை எடுத்துக்கொண்டு தான் இரவு புறப்பட்ட ரடிஸ்சன் புளூ ஹோட்டலை அடைந்தான்.

 

தீரன் ஹோட்டலுக்குள் நுழையும் போது ரிசப்சனில் இருந்த பெண், தீரனின் பாதுகாப்புக்கு பிராங்கால் நியமிக்கப்பட்ட டீம் ஹெட்டுடன் ஏதோ பேசுவதையும் அதனை தொடர்ந்து அந்த பெண் கையில் சாவிக்கொத்துடன் அவனுடன் செல்வதையும் பார்த்தான்,

 

அவர்கள் இருவரின் பின்னேயே சென்றவன், அவனின் ரூம் கதவை தட்டிவிட்டு பதில் இல்லாததால் அதை திறந்த நொடி அவர்களின் முன் சென்று நின்று, “வாட் தெ ஹெல் யூ ஆர்.? எப்படி நீங்க என் அனுமதியில்லாமல் நான் தங்கியிருக்கும் ரூமை ஓபன் செய்யல்லாம்?” என்று கர்ஜித்தான்.

 

தீரன் காரை விட்டு இறங்கும்போது தொப்பி மற்றும் கண்ணாடியால் தன்னை பார்த்ததும் அடையாளம் தெரியாத விதமாக மறைத்து இருந்தான். மேலும் தனது பேக்பேக்கை முதுகில் சுமந்த படி நீண்ட நாள் பழகிய இடம் போல விருவிருவென உள்ளே நுழைந்தான்.

 

அவனைப் பாதுகாக்க சி.என்.ஜி போட்டிருந்த காவல் படையில் உள்ள சிலர் நின்றிருந்த பகுதியை தவிர்த்து, மாற்று வழியில் உள்ளே நுழைந்திருந்தான்.

 

அதன் பின்பே அவனின் அறையை ரிசப்சனிஸ்ட் ஓபன் செய்ததும் திடீர் என்று தீரன் அங்கே பிரசன்னமானது போல் நின்றான்.

 

தீரனை பார்த்ததும் “சார்என்று சல்யூட் அடித்த பாதுகாப்பு துறையின் ஹெட், “சாரி சார்,டைம் மார்னிங் நைன் ஓ கிளாக் மேல ஆகியும் நீங்க ரூம் விட்டு வராததால் தட்டி பார்த்தோம், ரெஸ்பான்ஸ் இல்லைன்றதும் உங்களுக்கு எதுவும் உள்ளே ஆபத்தோன்ற சந்தேகம் வந்தது. அதனாலத்தான் ரிசப்சனில் சொல்லி ஸ்பேர் கீ போட்டு நீங்க சேஃப்யா இருக்கிறீங்களானு பார்க்குறதுக்காக கதவை ஓபன் செய்தோம்என்றான்.

 

நான் உள்ள இருந்தாத்தானே டோரை நாக் செய்யும்போது ரெஸ்பான்ஸ் செய்ய முடியும்?. நான் மார்னிங் 6ஓ கிளாக் ஜாகிங் போய் முடிச்சுட்டு, கொஞ்சம் பக்கத்தில இருக்கிற இடத்தை எல்லாம் சுத்திட்டு வந்தேன்என்றான்.

 

தீரன் கூறியதை அவன் நம்பவில்லை என்பதை அவனின் முக பாவனையிலேயே உணர்ந்து கொண்டான். ஆனால் என்னிடம் நீ கேள்வி கேட்டுவிடுவாயா? என்று தீரனின் மிரட்டும் பார்வையிலேயே தனது சந்தேகத்தை தனக்குள்ளேயே அவன் புதைத்துக்கொண்டான்.

 

ஸாரி சார், இனி அலார்ட்டா இருப்போம்என்று கூறியபடி அவன் ஒரு எட்டு பின் எடுத்து வைத்து ஸ்டான்டர்டீசில் நின்று கொண்டான்.

 

தீரன் அந்த ரிசப்சனிஸ்டிடம் கோபமாக வுட் யூ திங் ஆப் தெ ட்ரூத் வித் அவுட் எக்ஸாம்னீங் அதர்ஸ்?. இப் ஐ டெல் யூ திஸ் டு யுவர் ஹோட்டல் அட்மினிஸ்டிரேசன் யூ வில் பீ பணிஸ்ட்என்று கண்ணில் கோபத்துடன் பேசியவனைக் கண்டு பயத்துடன்,

 

சார் ப்ளீஸ் டோன்ட் கம்ப்ளைன்ட் மீ. இவங்க சொன்னதை நம்பிட்டேன். அதுதான் அவசரப்பட்டுட்டேன். இனிமேல் இதுபோல தவறைச் செய்யமாட்டேன்என்றவளுக்கு பாவப்பட்டு ஒகேயென தலையை அசைத்தும் ஆசுவாசம் அடைந்த அந்தப் பெண் தாங்க்ஸ் எ லாட் சார். ஹேவ் எ கிரேட் டேஎன்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

 

அவள் போனதும் உள்ளே சென்று டோரை லாக் செய்துக் கொண்டான் தீரன். உள்ளே வந்தவன் வேகவேகமாக தான் அங்கே விட்டுப் போயிருந்த தனது ஐ போனை எடுத்து சுவிட்ச் ஆன் செய்தான்.

 

அவன் ஆன் செய்த மறுநிமிடம் பிராங்கிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் அதை காதில் வைத்த மறுநிமிடம். வேர் டிட் யூ கோ? ஹவ் யூ புட் ஆப் யுவர் போன்?தீரா நீ நினைக்கிற மாதிரி நடந்துக்க இது ஒன்றும் சாதாரண ப்ராஜெக்ட் கிடையாதுஎன்று கடுமையான குரலில் பிராங் பேசினான்.

 

இப்போ நான் ஒரு உண்மையை சொல்கிறேன் கேட்டுக்கோ இந்த ப்ராஜெக்டை சக்சஸ்புல்லா முடிக்க ஸ்பான்சர் செய்தவர்களில் முக்கியமானவரை பற்றி நான் இன்னும் உனக்கு சொல்லலை, அது அமெரிக்க பிஸ்னஸ் உலகின் டெவில் மிஸ்டர் மார்க் ரூபன்ஸ்என்றான்.

 

அவன் அப்பெயரை கூறிய மறுநிமிடம் தீரன் மனதிற்குள் தான் நெருப்புடன் விளையாட ஆரம்பித்து விட்டதை உணர்ந்தான். இருந்தபோதிலும் தேங்க்ஸ் பிராங் இப்போவாவது உனக்கு இதை சொல்லணும்னு தோன்றியதே!

 

நீ என்னைய இந்தியா அனுப்புறதுக்கு முன்பே யோசித்திருக்கணும் என்கூட சின்ன வயசில் இருந்து பழகும் உனக்கு தெரிந்திருக்கணும் இந்த தீரனுக்கு ஆபத்துக்களோட விளையாட ரொம்ப பிடிக்கும்னு.”

 

இதில் எனக்கொன்னும் ரிஸ்க் இல்லை பிராங் என்றவன் மனதிற்குள் அந்த டெவில் மார்க் ரூபன்சை, உனக்கு எதிராக திருப்பி விடுகிறேன் பார்என்று கூறிக்கொண்டான்.

 

நான் ஏற்று வந்த ப்ராஜெக்ட்டை நல்ல முறையில் செய்துக் கொண்டுதான் இருக்கிறேன் ப்ராங். ஆனால் எனக்கான நேரத்தை நீ மட்டுமல்ல அந்த பிஸ்னஸ் டெவில் மார்க் ரூபன்ஸ் கூட தொட்டுப்பார்க்க நான் அனுமதிக்க மாட்டேன்என்றான்.

 

பிராங் கூறிய அமெரிக்க டாப் டென் பிஸ்னஸ்மேனும் தனது அப்பாவின் தம்பியுமான பிஸ்னஸ் டெவில் மார்க் ரூபன்ஸ், அவரை எதிர்ப்பவர்களை அவருக்கு எதிராக செயல்படுபவர்களை அழிப்பதில் அசுரனுக்கு நிகரானவர் என்பதை கண் முன்னே தீரன் கண்டிருந்த போதிலும், அவரது பெயரை தான் கூறிய பின்பும் கூட தனக்கு கீழ்படிந்து போகாமல் திமிராக பேசும் தீரனை கண்டு அவனின் மனஉறுதியை கண்டு ஆத்திரமடைந்தான் பிராங். அவனின் மன உறுதியை ஆட்டுவிக்க சரியான ஆயுதத்தை கையில் எடுத்தான்.

 

தீரா உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல மறந்துட்டேன். நோ... நோ... மறந்துட்டேன்றதை விட, அதை உன்ட்ட சொல்லி நீ வருந்தப்பட கூடாதுனு சொல்லாமல் விட்டுவிட்டேன். ஆனா இப்போ அதை உனக்கு சொல்லணும்னு ஒரு ஆசை துளிர்க்கிறது. அது என்ன தெரியுமா? இப்போ வகுலமாலினி என்னோட பியான்ஷி. நேற்றுதான் நானும் அவளும் மேரேஜ் செய்ய டிசைட் செய்து டேட் பிக்ஸ் செய்து ஒரு கெட் டுகதரில் அனவுன்ஸ் செய்தோம்.

 

நல்ல வேலை நீ இங்கு இல்லை. உன்னுடைய எக்ஸ் காதலியை என் பியான்சியாக அனவுன்ஸ் செய்யும் போது நீ இங்கு இல்லை. நீ என்னுடைய நண்பன், நீ இங்கிருந்தால் நீ இல்லாமல் என் எங்கேஜ்மென்ட் நடந்திருக்காது. அப்படி நடந்திருந்தால் உன் ஹார்ட் என் அருகில் வகுலா பியான்சியா இருப்பதை பார்த்து ஹெர்ட் ஆகியிருக்கும்.

 

இப்பொழுதாவது நீ அலார்ட் ஆகிக்கோ தீரா, இதுதான் ட்ரூத். உன்னிடம் திறமை இருக்கலாம். ஆனால் பணம் மற்றும் பரம்பரை செல்வாக்குடைய நாங்கள் நினைத்தால் எது வேண்டுமானாலும் எங்களோடதா ஆக்கிக்குவோம்.

 

உன் திறமையை வைத்து உன் காதலியைக்கூட உன்னால தக்கவச்சுக்க முடியலைல ஆனால் என்கிட்ட இருக்க அபரிமிதமான பணத்தை வச்சு அவளை நான் ஆசைப்பட்டபடி என்கிட்ட கொண்டுவந்துட்டேன் பார்த்தாயா?

 

அதேபோல் என் அங்கிளின் பரம்பரை அந்தஸ்து, பணபலத்ததுக்கு முன்னாடி உன் ஆட்டம் செல்லுபடியாகாது.

 

நீ ஆடினால், சாதாரண காதலியை இழந்ததுபோல் என் அங்கிள் மார்க் ரூபன்சிடம் மோதி உன் வாழ்க்கையை நீ இழந்துடுவ! இந்த அட்வைசை நீ என்னுடைய நண்பன் என்றதால உன்னிடம் சொல்றேன். டேக் கேர் மை ஃப்ரெண்ட் தீராஎன்றவன்.

 

வெய்ட், வெயிட் தீரா இன்னும் ஒண்ணு சொல்லிடுறேன் வகுலா எனக்கு சூப்பரா கோவாப்ரேட் செய்றா, ஷி இஸ் ஆசம்என்று கூறி விரசமாகச் சிரித்தான்.

 

இதுபோல் நடந்திருக்கும் என்பதை தீரன் அறிந்துதான் வைத்திருந்தான், இருந்தபோதிலும் ஒரு காலத்தில் அவளை தனது வருக்காலமாக நினைத்து வகுலாவிடம் மயங்கிய அவனுக்கு பிராங்கின் வார்த்தைகளால் ஏற்பட்ட மனவலியை தவிர்க்க முடியவில்லை. அவனின் வார்த்தைகள் தீரனை காயப்படுத்தியது. இருந்தாலும் அதை வெளிகாட்டாதபடி ஹா...ஹாஹா... .என்று சிரித்தவன்,

 

பிராங் என்னை விட நீ பணக்காரன்னு தெரிஞ்சதால என்னை விட்டுட்டு உன்கூட வந்தவ, உன்னை விட பணக்காரன் அவ கண்ணில பட்டாலோ அல்லது உன் பணம் உன்கிட்ட இல்லாம போனாலோ அவ வேற ஒருவனை பார்த்துகிட்டுப் போய்க்கிட்டே இருப்பா. உனக்காக என் ஆழ்ந்த அனுதாபங்கள் இல்ல இல்ல, வாழ்த்துக்கள். எனிவே, உன் கல்யாண வாழ்க்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்னு சொன்னேன் பிராங்எனச் சொல்லி தொடர்பைத் துண்டித்தான்.

அவனது மொபைலை தூக்கி பெட்டின் மேல் போட்டவன், வேகமாக போய் பிரிட்ஜ்ஜை திறந்து அதில் இருந்த ஹாட் டிரிங்சை அப்படியே பாட்டிலுடன் எடுத்து தொண்டையில் சரித்தான். அவன் மனதில் வகுலாவின் உருவம் வந்துவந்து போனது.

 

அவனுக்கு ஐந்து வயது இருக்கும்போது. பிறந்த குழந்தையாக வகுலமாலினியை பத்மினியின் தோழியும் அவளின் டான்ஸ் அக்காடமியின் பார்ட்னருமாகிய விசாலி கையில் ஏந்தி வீட்டினுள் வந்ததும் தீரன் ஆசையாக எட்டிப்பார்த்தது இன்னும் நினைவில் இருந்தது.

 

பன்னீர் ரோஜா இதழ் நிறமும் மென்மையுமாக பூப்போல இருந்த அவளை ஆவலுடன் தொட்டுபார்த்த தீரன் ஆன்டி, ஷி இஸ் பிரிட்டி, ஐ லவ் ஹெர்... டெய்லி நான் ஸ்கூல் விட்டு வந்ததும் பேபியை என்னிடம் கொஞ்சநேரம் தாங்க நான் அவளை பார்த்துப்பேன்என்றான்.

 

அவன் அவ்வாறு கூறிய மறுநிமிடம் விசாலியின் டெலிவரி டைம்க்கு உதவியாக இந்தியாவில் இருந்து அங்கு வந்திருந்த விசாலியின் விதவை பெரியம்மா நல்லா இருக்கே! நோக்கு தூக்கத்தெரியாமல் தூக்கி பிள்ளைக்கு ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆகிடுச்சோனோ யாருக்கு நட்டம்?. குழந்தையைத் தொட்டாவாளுக்கு நான் பொல்லாதவளாக்கும்என்று பட்டு மாமி கூறி சத்தம் போட்டாள்.

 

பட்டு மாமியின் வார்த்தையில் சிலிர்த்துக்கொண்டு ஆன்டி, “ஐ ஹேட் தேட் ஒல்ட் லேடி, ஷி ஆல்வேஸ் ஸ்கோல்டு மீ...என்றான்.

 

அவன் முகம் கூம்பி பேசுவதைப் பொருத்துக்கொள்ள முடியாத விசாலி, “மாமி அவாளும் குழந்தையாச்சே. தீராவிடம் கடுமையா பேசாதேல். பொறுமையா இப்போ அவன் தூக்கினால் குழந்தை கழுத்து நிக்காது. கொஞ்ச நாள் சென்று கழுத்து நின்னப் பிறகு தூக்கு நீன்னு சொன்னா பு ரிஞ்சுப்பான்என்றாள்.

 

பட்டு மாமிக்கு கணவன் இல்லாத தீரனின் அம்மா பத்மினி, விசாலி வீட்டு மாடியில் தங்கியிருப்பதும், தீரனின் மீதும் பத்மினி மீதும் விசாலியும் அவளது டாக்டர் கணவனுமாகிய ஸ்ரீராமும் அக்கறையாக இருப்பதுவும் பிடிக்கவில்லை.

 

கணவன் இல்லாத அழகிய சுந்தரி ஒருத்தியை வீட்டோட மாடியில தங்க வைப்பதா? என்ற எரிச்சலில் இருந்த பட்டு மாமிக்கு பத்மினியும் அவள் மகன் தீரனும் கண்ணில் படும்போது எல்லாம் கரித்துக் கொட்டுவதையே வழக்கமாக வைத்திருந்தாள்.

 

பத்மினி அமெரிக்காவிற்கு வந்த சமயம் அவள் கருத்தரித்திருந்ததை அறிந்து, கண்ணும் கருத்துமாக தனது கணவன் வேலை பார்த்த மருத்துவமனையிலேயே வைத்து கவனித்துக்கொண்டாள் தோழி விசாலி. அவள் பிள்ளை உண்டாகியிருந்த நேரம் அவளுக்கு பக்கத்துணையாக இருக்கவேண்டும் என்ற காரணத்தினால் பட்டு மாமியின் விஷமான வார்த்தைகளை சகித்துக்கொண்டும், உதாசீனத்தை பொறுத்துக்கொண்டும் இருந்தாள் பத்மினி.

 

தீரன் சிறுவயதில் இருந்தே நெருப்புப்போல இருந்தான். அவன் பட்டு மாமியின் வார்த்தைகளால் பாதிக்கப்பட்டால் நேரடியாகவே மாமியுடன் சண்டைக்கு நின்றான்.

 

இதனால் பத்மினி விசாலியிடம், தன் மகனால் வீட்டில் ஏற்படும் சலசலப்புக்கு முற்றுபுள்ளி வைப்பதற்காக அவளின் மாடிவீட்டை காலிசெய்து அவர்களின் டான்ஸ் அக்காடமி மாடியில் உள்ள போர்சனில் தங்கி கொள்வதாக வாதாடி காலிசெய்து பரதநாட்டிய அகாடமி வளாகத்தின் மாடியில் குடியேறினாள்.

 

டான்ஸ் அக்காடமி இருந்த பகுதி செல்வந்தர்கள் வசிக்கும் ஏரியா அங்குதான் பக்கத்து வீட்டில் இருந்த பிராங்க்குடன் தீரனுக்கு நட்பு உருவானது.

 

சிறுவயதில் பிராங்கும், தீரனும் அடுத்தடுத்த வீட்டில் வசித்தார்கள் என்ற போதிலும் பிராங் தீரனுடன் சேர்ந்து விளையாட அவனது பணக்கார வீட்டு பெரியோர்கள் அனுமதித்ததில்லை. ஆனால் தனது வயதை ஒத்த தீரன் தான் படிக்கும் பள்ளியில் தனது கிரேடில் படிக்கும் தீரனின் துறுதுறுப்பும் சேட்டைகளும் பிராங்கை கவர்ந்தது

 

ஒருதடவை பிராங் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது நூல் அறுந்து காற்றில் பட்டம் பறந்து வந்த பிராங்கின் பட்டம், தீரன் வீட்டில் இருந்த மரத்தில் மாட்டிக்கொண்டது.

 

அதனை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்த பிராங்கிடம் வந்த தீரன் ஹாய்! அது உன் கைட்டா?” என்று கேள்வி எழுப்பினான். அவன் கேட்டதும் ஆர்வமாக எஸ் என்னுடயதுதான் தீரன். நீ தீரன் தானே? என் கிரேட் தானே? நான் உன்னை ஸ்கூலில் பார்த்து இருக்கிறேன்என்றான்.

 

அவன் அவ்வாறு கூறவும் தீரனும், “நானும் உன்னைய பார்த்திருக்கிறேன். நாம இனிமேல் ஃபிரெண்ட்ஸ் ஓகே வா?” என்று கேட்டவிட்டு ஷேக்கன் செய்ய கைநீட்டினான் அவனிடம்.

 

அவனின் கை பற்றி குலுக்கிய பிராங்கும் ஃபிரெண்ட்ஸ் என்று கூறினான். மேலும் தீரனிடம் என் கைட்டை உன்னால் எடுத்துத் தரமுடியுமா? என்று கேட்டான்.

 

அதற்கு தீரன் எடுத்துத் தருறேன். ஆனால் நான் எடுத்துக்கொடுத்தால் நீ என்கூட சைக்கிள் போட்டிக்கு வரவேண்டும் டீல் ஓகே யா?” என்று கேட்டான்.

 

தீரனின் சைக்கிள் சாதாரமானது, பிராங்கின் சைக்கிள் அட்வான்ஸ் கியர் உடையது. அவன் அவ்வாறு கூறியதும் அவனது சைக்கிளை பார்த்தவன் இந்த சைக்கிளிலே தான் என்னுடன் போட்டியிட போகிறாயா?” என்று கேட்டான்.

 

அதற்கு தீரன் எஸ், நான் வின் பண்ணினால் சைக்கிளை அடுத்து நாம சந்திக்கும் ஒருவாரம் முழுவதுவும் நம்ம சைக்கிளை எக்ஸ்சேஞ்ச் பண்ணி ஓட்டணும். டீல் ஓகேவா?” என்று கேட்டான்.

 

தீரனால் தன்னுடைய சைக்கிளை முந்திக் கொண்டு ஓட்ட முடியாது என்ற எண்ணத்தில் டீல் ஓகே என்றான் பிராங்.

 

உடனே தீரன் அந்த மரத்தில் லாவகமாக ஏறி அவனின் பட்டத்தை எடுத்துக்கொடுத்து பிராங்குடன் சைக்கிள் போட்டியிலும் வென்றான் தீரன்.

 

அதன் பின் வந்த நாட்களில் இருவரும் சந்திக்கும் அடுத்த வாரம் முழுவதுவும் பிராங்கும் தீரனும் சைக்கிளை மாற்றிக்கொண்டனர்.

 

தீரனுடன் சேர்ந்து வேகமாக சைக்கிள் ஓட்டுவது, வீட்டிற்கு தெரியாமல் தீரனுடன் எஸ்சாகி வெளி உலகம் சுற்றிப்பார்ப்பது, அவனின் சக வயது நண்பர்களுடன் தீரனால் பிராங்கும் பல நட்பை பெற்றது போன்ற பல நன்மைகள் பிராங்கிற்கு தீரனால் கிடைத்தது.

 

பிராங் தீரனுடைய நட்பை பெற்ற பிறகு அவனுடன் சேர்ந்து படிப்பதினால் முன்பைவிட நல்ல மதிப்பெண் பெறுவதையும் உற்சாகமாக இருப்பதையும் கண்ட பிராங்கின் பெற்றோர் முதலில் அந்தஸ்த்தை காரணம் காட்டி மறுத்தாலும் இப்பொழுது தீரனுடன் பழகுவதை மறுக்கவில்லை.

 

ஆனால் பிராங்கிடம் அவனது பெற்றோர் கூறினர், நண்பனாக தீரனிடம் பெரும் உதவிகளுக்கு அவனிடம் பதிலுக்கு நடப்பை கொடு என்பதை கூறாமல் தீரனை யூஸ் செய்து நீ உனக்கு வேண்டியதை சாதித்துக்கொள். நீ நினைப்பதை தீரன் செய்யவைக்க தீரனுக்கு வேண்டிய பொருளை வாங்கிக்கொடுப்பதாக டீல் பேசு என்று தவறுதலாக அவனை வழிகாட்டினர்.

 

அன்றிலிருந்து தீரனுக்கும் பிராங்கிற்கும் உரிய நட்பு டீலாகவே தொடர்ந்தது. தீரனுக்கு அவனின் மூலம் பணம் மற்றும் பொருள் ஆதாயமும். பிராங் நினைப்பதை சாதிக்க தீரனை கருவியாக்கும் பழக்கமும் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

தீரன் என்னதான் அமெரிக்க கலாச்சார சூழலில் வளர்ந்தாலும், தன் அம்மா பத்மினி சிங்கிளாக நிற்பதற்கு போராடுவதையும், அதில் வெற்றப்பெறுவதற்கு மனக்கட்டுபாடு தான் காரணம் என்பதையும், அவ்வாறு அவர் இருப்பதற்கு காரணம் நம் தமிழ் பண்பாடு என்றும் தீரனுக்கு போதிப்பதனாலேயோ என்னவோ..! தீரன் பெண்களிடம் பழகும் போது கண்ணியமாக நடந்துகொண்டான். தன் மேல் வந்து விழும் பெண்களை நாசூக்காகவும் ஒதுக்கும் பண்பு இயல்பிலேயே அவனுக்கிருந்தது.

 

பிராங் பணக்காரனாக இருந்தாலும் டீன் ஏஜில் அவன் கண்களுக்கு அழகாக தெரியும் பெண்களின் கண்ணெல்லாம் தன் மீது இல்லாமல் தீரனின் மீது படிவதை தாங்கிக்கொள்ள இயலவில்லை.

 

ஆண்களில் கண்ணியமாகவும், திறமையாகவும், ஆரோக்கியமாக ஆறடிவுயரத்தில் செதுக்கிவைத்த முகத்தோற்றத்தில் இருந்த தீரனைக் கண்ட பெண்கள் அவனின் அன்புக்கு பாத்திரமாக விரும்புவது இயல்பாக நடந்தது.

 

அதேபோல் என்னதான் பிராங் அழகான ஆங்கிலேய தோற்றத்தில் செல்வந்தனாக இருந்தாலும், பெண்களிடம் கண்ணியமில்லாமல் நடந்துக்கொள்வதும், ஒருத்தியை மட்டும் நோக்காமல் அழகான பெண்கள் எல்லோரையும் அடைய நினைப்பதும், அலைபாயும் அவனின் பிளேபாய் லீலைகளை கேட்கும் பெண்கள் அவனிடம் அன்பை பெற முயலாமல் அலார்டாக அவனிடம் நடந்துக்கொள்வதும் இயல்பாக நடந்தது.

 

இப்படிபட்ட சூழலில் பத்மினி தனது நாட்டிய பள்ளியின் வருமானத்தில் தீரனை வளர்த்தாள். இளம் வயதிலேயே தீரன் தன்னுடைய படிப்புடன் தனக்கு தேவையான செலவுகளை ஈடுகட்டுவதற்கு தானே சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டான்.

 

என்னதான் பொத்தி பொத்தி தீரனை வளர்க்க பத்மினி விரும்பினாலும் தனிமனித சுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தையில் குடும்ப உறுப்பினர்கள் கூட ஓரளவுதான் ஒருத்தரின் செயலை கட்டுபடுத்த முடியும் என்ற சூழல் உள்ள இடத்தில் வளரும் தனது மகனை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாமல் பத்மினி திணறினாள்.

 

பத்மினியின் தோழி நாட்டிய பள்ளியை தொடங்கி, அதில் பத்மினியை சக பார்ட்னராக ஏற்றுக்கொண்ட. விசாலியும் அவ்வாறே தன் மகள் வகுலமாலினியும் அமெரிக்க கலாச்சாரத்தில் வளர்வதை கண்டு வருத்தமடைந்திருந்தாள்.

 

இந்நிலையில் வகுலமாலினி அழகான மங்கையாக வளர்ந்து நின்றாள். ஒருதடவை நண்பர்களுடன் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துக்கொண்டு வந்த வகுலா மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததை பார்த்த விசாலி குடும்பத்தினர், இனி அவளை அப்படியே விட்டால் அமெரிக்க கலாச்சாரத்தில் மூழ்கி குடும்ப வாழ்க்கையை தொலைத்து விடுவாளோ என்ற அச்சம் கொண்டனர். எனவே அவளுக்கு கல்யாணம் செய்துவைத்து விடவேண்டும் என முடிவெடுத்தனர்.

 

தீரனின் படிப்பும் கண்ணியமான நடத்தையும் அவனின் திறமையும் கண்ட விசாலி தம்பதியினர் தனது மகள் வகுலமாலினியை தீரனுக்கு மணமுடிக்க ஆசைபடுவதாக பத்மினியிடம் கூறினார்கள்.

 

பத்மினி தோழி கூறியதை சந்தோசமாக ஏற்றாள். தீரன், விசாலி வீட்டில் இருந்து வெளிவருகையில் சிறுவயதானாலும் பட்டுமாமியின் வார்த்தைகளால் மிகவும் காயப்பட்டிருந்தான், எனவே அவன் அவர்களின் வீட்டிற்கு போவதை அதன் பின் தவிர்த்துவிட்டான்.

 

எப்பொழுதாவது அவர்களை பார்க்கும் சூழல் வந்தாலும் ஒரிரு வார்த்தைகளுக்குமேல் நின்று பேசியதில்லை. ஆனால் வகுலாவை அவளது பெற்றோருடன் பார்க்கும் போதெல்லாம் அவளுடன் பேசவேண்டும் என்ற ஆவல் பொங்கும். இருந்தபோதிலும் அதை வெளிப்படுத்த மாட்டான்.

 

சிறுவயதில் இருந்து வகுலமாலினிக்கு அவளின் அம்மா விசாலி வீட்டிலேயே பரதம் பயிற்று வித்திருந்தாலும் அவளின் பதினாறாம் வயது பருவத்துக்குபின் சிறப்பு நிகழ்ச்சிகளில் நடக்கும் நாட்டியத்தில் பங்கெடுக்கும் போது அக்காடமியில் பத்மினியின் கொரியோகிராபில் பரதம் பழகினாள். அதனால் அவளின் நடனநிகழ்ச்சி சிறப்பாக அமையும் என்பதை உணர்ந்து அதுபோன்ற பிராக்டிஸ் நேரம் அகாடமிக்கு வர ஆரம்பித்தாள் வகுலா.

 

அந்நேரம் தீரனை கண்டவள் முன்போல் ஒதுங்கிச் செல்லாமல் பேச ஆரம்பித்தாள். தீரனுக்கு ஏற்கனவே அவளின் மேல் சிறுவயதில் இருந்து ஏற்பட்ட ஈர்ப்பு இன்று வளர்ந்து அழகு மங்கையாக இருபவளின் மேல் ஆர்வமாக மாறியிருந்ததால் அவள் வரும் நேரங்களை ஆவலுடன் தீரனும் எதிர்பார்த்திருந்தான்.

 

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்யலாம் என்று முடிவெடுத்து அதை தெரிவித்ததும் ஆசையுடன் தீரன் அதற்கு ஒத்துக்கொண்டான்.

 

பட்டு மாமியின் மகனும் அமெரிக்காவில் குடியேறியதால் அடிக்கடி விசாலியின் வீட்டிற்கு பட்டு மாமி வந்து போக இருந்தாள். சிறுவயதில் வகுலாவினை வளர்ப்பதில் உதவிய பட்டு மாமிக்கும் வகுலாவிற்கும் இடையில் சுமூகமான உறவு இருந்தது.

 

இந்நிலையில் வகுலாவின் என்கேஜ்மெண்டுக்கு வந்த பட்டு மாமிக்கு சிறுவயதில் இருந்து ஏனோ தீரனைப் பிடிக்காத காரணத்தால் இக்கல்யாணத்தில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமலேயே என்கேஜ்மெண்டில் கலந்துக்கொள்ள வந்தார்.

 

இந்நிலையில் தீரனின் என்கேஜ்மேண்டுக்கு வந்த பிராங், வகுலாவின் அழகைக் கண்டு ஆச்சரியமடைந்தான். அழகான எதைக் கண்டாலும் பிராங் ஆசைப்பட்டு, அதனைத் தன்னுடையதாக ஆக்க நினைக்கும் குணத்தை அறிந்தவன்தான் தீரன். என்றபோதிலும் வகுலா ஒன்றும் பொருள் இல்லையே, தான் ஆசையாக அவளை காதலிப்பது பிராங்கிற்கும் தெரியுமே. தனக்கே பிராங் துரோகம் செய்யமாட்டான் என தப்புக்கணக்குப் போட்டான் தீரன்.


---தொடரும்---

 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib