அத்தியாயம்-01
அமெரிக்காவில் லாஸ்வேகாசில் உள்ள அம்னியோ நைட் கிளப்பில் வி.ஐ.பி.கள் மட்டும் அனுமதிக்கப்படும் பகுதியில் இருந்த சோபாவில் கால்களை நீட்டி, எதிரில் இருந்த மேஜையில் ஒரு கையூன்றி அதில் நாடியைத் தாங்கியவாறு அமர்ந்திருந்தான் தீரமிகுந்தன். கையில் இருந்த மதுக்கோப்பையில் உள்ள பானத்தை குடிப்பதற்கு மறந்து தனது நண்பன் ப்ராங் கூறிய சேதியைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
அவர்கள் எப்பொழுதும் முக்கியமான
விசயங்களை அலசி ஆராய்வதற்கு பிரத்யோகமாக அவர்களுக்கென்றே அமைக்கப்பட்டிருந்த, அந்த கிளப்பின் பெரும்பான்மையான பங்குகளின்
சொந்தக்காரனான ப்ராங்குடன் அங்கு அமர்ந்திருந்தான்.
பிராங்கின் குடும்பத்திற்கு
சொந்தமாக இரும்பு எஃகு தொழிற்சாலை உள்ளது. அத்துடன் பிராங் உலகநாடுகளை தன் பிடியில் வைத்திருக்கும் அதிநவீன
மின்சாரம், தகவல் தொடர்பு, மற்றும் பூமியில் பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் திரவங்களை குழாய் வழி கொண்டு செல்லுதல் மற்றும் காகிதக்கூழ் ஃபேக்டரி’ ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ள நிறுவனமான சி.என்.ஜி நிறுவனத்தின்
அனைத்து துறைகளிலும் உள்ள பங்குகளின் பெரும்பான்மையான பங்குதாரன் அவன்.
எனவே மேற்கூறிய நிறுவனத்தின்
போர்ட் மெம்பர்சில் முக்கியமான புள்ளி ப்ராங்.
ப்ராங் பெண்களை தனது
பணத்தாலும் அழகாலும் கவர்ந்திழுக்கக்கூடிய கருத்த சுருட்டை முடியுடன் மென் பச்சை
நிறக்கண்களுடனும் விளையாட்டு வீரனைபோல் கச்சிதமான உடலமைப்பும் கொண்ட பக்கா
பணக்காரவீட்டு தோற்றத்துடன் ஆங்கிலேயக் குடும்பத்தில் பிறந் து இருந்தான்.
அவனது மூளையாக, சிறுவயதில் இருந்து ஒன்றாகவே சுற்றித் திரியும் தீரனிடம் தாங்கள் செய்யவிருக்கும் அடுத்த ப்ராஜெக்ட்டைப் பற்றி
விவாதித்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் ஆங்கிலத்தில்
பேசிக்கொண்டிருப்பதை நாம் தமிழிலேயே பாப்போம்.
“டீரன் இந்த தடவை
நாம் ப்ராஜெக்ட் செய்யும் இடம் எது தெரியுமா?” என்று கேக்கும் போதே தீரன் கூறினான்.
“ஐ நோ ப்ராங். இந்தியாவில்
தானே, ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது”
“நார்த் இந்தியாவில நம்ம ப்ராஜெக்ட்டை செய்வதென்றால் நமக்கு மிகவும் எளிது.
ஏனெனில் அங்கு ஏற்கனவே நாம் காலூன்ற உதவிய நம் விசுவாசமான ஜென்டில்மேன்கள்
இருக்கிறார்கள்.”
“ஆனால் அங்கு நமக்கு தேவையான கனிமவளங்களை எல்லாம் ஏற்கனவே கன்ஸ்யூம்
செய்துட்டோம்.”
“அதனால நம்ம டார்கெட் இப்போ சவுத் இந்தியா என்னுடைய அனுமானம் சரிதானே ப்ராங்?”
என்று கேட்டான் ப்ராங்கால்
டீரன் என்று அழைக்கப்படும் நம் ஹீரோ தீரமிகுந்தன்.
அவனின் பதிலை கேட்ட ப்ராங், “அமேசிங் மேன் இட்ஸ் மை டீரன். உன்னுடைய இந்த
அறிவுதான் என்னை இப்போ உச்சத்தில் கொண்டுபோய் வைத்திருக்கு. உன்னைப் போல அறிவுள்ள
நண்பன் எனக்கு வாய்த்தது என் அதிர்ஷ்டம்” என்றான் ப்ராங்.
அவன் கூறுவதைக் கேட்டுச்
சிரிப்புடன் தீரன் கூறினான், “இப்படியெல்லாம் என்னை நீ புகழ்ந்து பேசுவதால் இந்த ப்ராஜெக்ட் நல்லபடி முடித்துக் கொடுப்பதற்கு எனக்கு நீ தரும்
பங்குத் தொகையை நான் வேண்டாமென சொல்லி விடமாட்டேன் ப்ராங்” என்றான்.
“ஓ... நோ..!
கமான்மேன், இந்த தடவை நான்
உனக்கு தரும் லாபத்தை 10% அதிகரிக்க முடிவெடுத்திருக்கேன் டீரன்” என்றான் ப்ராங்.
“என்ன சொல்ற
பிராங்? 10% அதிகம் சேர்ந்து தருகிறாயா?. அப்போ இந்தத்தடவை ப்ராஜெக்டுக்கு பிளான் போடுவதோடு மட்டும் என் வேலையை முடிக்க நீ விடமாட்ட?! என்ன வேலை செய்யணும்றதை தெளிவா இப்பவே சொல்லிவிடு.”
“நீ சொல்ற அந்த ஜாப்பை என்னால் ஒப்புகொள்ள முடியுமா? முடியாதாகின்றதை இப்பவே நான் சொல்லிவிடுகிறேன்.”
“நான் மனது வைத்தால்தான் என்னை உன்னால் வேலை வாங்க முடியும்
நண்பா இது உனக்கேத் தெரியும்னு நினைக்கிறேன்” என்று கூறியபடி ஆராய்ச்சி பார்வையை அவனின் மேல் செலுத்தினான் தீரன்.
அவன் கூறியதை கேட்ட பிராங் “உன்னைய எனக்குத் தெரியாதா தீரன்? எனக்கு நம்மக்கிட்ட உள்ள(Economic hitman)பொருளாதார அடியாளர்களில் ஒருத்தர் கூட சவுத் இன்டியா போக சரியான ஆளா இருப்பதாக தெரியலை.”
“என் நண்பனான நீ ஒருத்தன்தான் தமிழ் பேசத்தெரிந்த நம் வேலையை முழுமையாக செய்யத்
தகுதி வாய்ந்தவனாக எனக்குப் பட்டது.”
அதோடு இதுவரை நீ இதுபோன்ற இடங்களுக்கு
எல்லாம் போனதில்லைல. இப்போ அதுக்கு நீ ஒத்துக்கொண்டால் ஒரு பைசா செலவில்லாமல் சகல சவுகரியத்தோட
அந்தப் பகுதியை நீ சுற்றிப் பார்த்தது போலவும் இருக்கும், நம்ம வேலையை கச்சிதமாக முடிக்கவும் முடியும்னு நான்
நினைத்தேன்.”
“இந்த ப்ராஜெக்ட் கச்சிதமாக முடிந்தால் நாம்தான் வேர்ல்ட் டாப் மோஸ்ட்
மில்லினியர் மேன், சோ நீ நெனச்சு பார்க்காத அளவு உனக்கு கமிஷன் கிடைக்கும் டீரன்” என்றான் பிராங்.
அவன் சொல்லியதை கேட்ட தீரன்
கூறினான், “நண்பா மத்த
நாய்ங்கக்கிட்ட காசுன்ற எழும்புத் துண்டை காட்டி நீ நெனச்சதை எப்படி சாதிக்கணும்றதை
பிளான் பண்ணிக் கொடுக்கும் என்னிடமே காச காட்டி உசுப்பேத்த நினைக்கிறயா? இந்த தீரன்
காசுக் கிடைக்கும்னு தனக்கு இஷ்டம் இல்லாத வேலையையெல்லாம் செய்ய மாட்டான்.”
“நோ பிராங் என்னால் நீ
சொன்னதை செய்ய முடியாது. என்னால் வெஸ்டன் கல்ச்சருக்கு ஆப்போசிட்டான சவுத் இந்தியாவை சகித்துக்கொள்ள
முடியாது.”
“மை மாம் ஒழுக்கம், நம் தமிழ்
பண்பாடுனு எனக்கு போதிப்பதிலேயே நான் அரண்டுட்டேன்.”
“அவங்களுடன் செலவழிக்கும் சில மணிநேரங்களில் எனக்கும் அவங்களும் இடையில்
சிலநேரங்களில் எழும் கலாச்சார பழக்கவழக்கங்களின் கருத்து மோதல்களிலேயே நான் தமிழ்
நாட்டை வெறுத்துட்டேன்.”
“என் மாம் நான் பிறந்ததில் இருந்து என்னுடன் தமிழில் மட்டுமே உரையாடுவதால்தான்
என்னால் தமிழை புரிந்துக் கொள்ளவும் பேசவும் முடிகிறது.”
“ஆனால் நான் அவர்களிடம் தமிழில் பேசும் போது மை மாம் நிறையத் தடவை ‘ஏன்டா இப்படி
தமிழை கொலை பண்ற?’ என்று கூறுவதை
நான் பலமுறைக் கேட்டிருக்கிறேன்.”
“அதனால் அவர்களையும் உன்னையும் தவிர மற்ற யாருக்கும் எனக்கு தமிழ் தெரியும்னு
நான் இதுவரை காட்டியதுமில்லை மற்ற யாரிடமும் இதுவரை நான் தமிழில் பேசியதுமில்லை” என்றான் தீரன்.
அவன் கூறியதை கேட்ட ப்ராங் “உன்னை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது டீரன்.
ஆனால் இந்த தடவை நமக்கு வந்த தகவல் ஒரு மாபெரும் பொக்கிசத்தை பற்றியது. உலகில்
அதிக அரிதான ஸ்தோத்திரியம் பற்றியது.”
“இதைத்தான் நாம் நார்த் இந்தியாவில் கன்ஷ்யூம் செய்தோம், ஆனால் அங்கு கிடைத்த அளவை விட சவுத் இந்தியாவில் 80%
அதிகமாக ஸ்தோத்திரம் இருப்பதாக ஆதாரம் கிடைத்துள்ளது.”
“இந்த ப்ராஜெக்ட் மட்டும் நம்ம கைக்கு கிடைத்தால் நான் உலகத்தில் நம்பர் ஒன்
பணக்காரனாக ஆகிடலாம்.”
“இதுக்கு முன்னாடி நீ செய்து முடித்த ப்ராஜெக்ட்டுக்கு உனக்கு கிடைத்த 10
மில்லியன் டாலரைவிட இந்த ப்ராஜெக்ட்க்கு பத்துமடங்கு கூடுதலாக கமிசன் கிடைக்கும்
இது உனக்கும் மிகப்பெரிய ஆஃபர் டீரன்” என்றான்.
ஆனால் அவன் சொல்லுவதற்கு எந்த
பதிலும் சொல்லாமல் யோசனையுடன் இருந்த தீரனை பார்த்து அவனை எப்படியாவது சம்மதிக்க
வைத்துவிட வேண்டும் என்ற உந்துதலுடன் ப்ராங் கூறினான்.
“டீரா! இது உடனே
ஸ்டார்ட் பண்ண வேண்டிய ப்ராஜெக்ட். இந்த ப்ராஜெக்டை செயல்படுத்த நாம் முயற்சிகள்
மேற்கொள்வதை தடுப்பதற்கு சிலர் தமிழ்நாட்டில் களம் இறங்க ஆயத்தமாவதாக நான்
கேள்விப்பட்டேன்.”
“அவங்க செயல்படத் துவங்குவதற்கு முன்னமே நாம் அஸ்த்திவாரத்தை அங்கே எழுப்ப முடுக்கிவிடவேண்டிய
நிர்பந்தத்தில் இருக்கிறோம்.”
“இந்த சூழலில் அங்கு ப்ராஜெக்ட்டை செயல்படுத்த சூட்டபுல் (ECONOMIC HITMEN) பொருளாதார அடியாளை பொறுமையாக செலக்ட் செய்வதற்கு
அவகாசம் இப்போ இல்லை.”
“NSA –National Security Agency
உள்ளிட்ட உளவு நிறுவனங்கள் அடியாட்களை
கண்டுபிடிப்பது, அவர்களை பன்னாட்டு
நிறுவனங்களில் தம் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்வது என்ற உத்தி நம்மகிட்ட உள்ளது.”
“பொருளாதார அடியாட்களுக்கு அரசு
சம்பளம் வழங்காது அதற்கு பதிலாக தனியார் நம்மிடம் பெற்றுக் கொள்வார்கள்.”
“ஒருவேளை அந்த அடியாட்கள்
எடுத்துக் கூறும் புள்ளி விபரங்கள்
தவறானது என்று கூறி அவர்கள் பிடிபட்டாலும் அந்த கரும்புள்ளி அவர்களுக்கு சம்பளம்
வழங்குவதாக சொன்ன நம்ம நிறுவனங்களின் மீதே விழும்.”
“அவர்களுக்கு பின்னால் உள்ள
அரசாங்கமும் வங்கிகளும் அந்த நிறுவனங்களின் பேராசை என்று முத்திரைக் குத்தி அந்நிறுவனத்தின்
உரிமையாளரை வெளிநாடுக்கு தப்பிக்க வைத்து அங்கு சுகபோக வாழ்க்கை வாழ அவர்களுக்கு வழிவிட்டுவிடும் தானே.”
“அதனால் நீ முதலில் அங்குபோய் வேலையை ஸ்டார்ட் பண்ணு. நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ
அவ்வளவு சீக்கிரம் சூட்டபுல் மேனை செலைக்ட் செய்து அவனை அங்கு உன்னிடம்
அனுப்புறேன். நீ அவனிடம் பொறுப்புகளை ஹேன்டோவர் செய்துட்டு இங்க வந்திடலாம் டீரன்.”
“இது நம் லைப் டைமில் அரிதாக கிடைத்திருக்கும் வாய்ப்பு. இதை நழுவவிடவோ ப்ரிபேரிங் இல்லாத வேறு ஒருவனை இந்த பணியில் ஈடுபடுத்த எனக்கு மனசு இல்ல.”
“உன்னால் மட்டும்தான் இதை சக்ஸசாக முடிக்க முடியும் டீரன்.
ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாதே!” என்றான்.
அவர்கள் பேசிகொண்டிருக்கும்
போதே தீரனின் மொபைல் ஒலி எழுப்பியது. அதனை அட்டன் செய்தவன் டென்சனுடன்
“வாட்? எந்த ஹாஸ்பிடல்? இதோ நான் புறப்பட்டுட்டேன் நான் இப்போ இருக்கிற இடத்தில் இருந்து அங்கு வர
ஒருமணிநேரம் ஆகும். ப்ளீஸ் ட்ரை டு சேவ் மை மாம்” என்றபடி இருக்கையை விட்டு எழுந்தான்.
“ஆன்ட்டிக்கு என்ன
ஆச்சு டீரன்?” என்று அவனை கேட்ட
ப்ராங்கிடம்
“மாம்க்கு
ஆக்சிடென்டாகி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கிறார்கள். கிரிட்டிக்கல் பொஷிசனில் இருப்பதாக இன்பார்ம்
செய்தார்கள். என்னால் இப்போ ட்ரைவ் பண்ண முடியாது ப்ராங். ஹாஸ்பிடலுக்கு என்னை
கூப்பிட்டுப் போ”
என்று கூறிய தீரன் கண்கள்
கலங்கியது போல் இருப்பதை பார்த்த ப்ராங்
“அவங்களுக்கு
எதுவும் ஆகாது டீரா. வா நாம் ஹாஸ்பிடலுக்கு போலாம்” என்றவன் தனது ஆடி ஆர்8 காரில் தீரனை
ஏற்றிக் கொண்டு பயணம் ஆனான் ப்ராங்.
எதற்குமே தீரன் கலங்கி இதுவரை
ப்ராங் பார்த்ததில்லை. வாழ்கையில் முதல்முதலாக கலங்கிய முகத்துடன் நண்பனை பார்த்த
ப்ராங் எதுவும் பேசி அவனை மேலும் சங்கடப்படுத்தாமல் காரை ஹாஸ்பிடல் நோக்கி
விரட்டினான்.
ஹாஸ்பிடலின் வாசலை அவர்களின்
கார் சொன்ன ஒருமணி நேரத்துக்குள் அடைந்திருந்தது. வாசலிலேயே தீரனுக்காக காத்துக்கொண்டிருந்த
இமாமி வேகமாக அவர்களிடம் வந்தவன், “மேம் இன்
செக்கண்டு ப்ளோர் ஐ சி யூ”, என்றான்.
“எப்படி ஆச்சு
இமாமி!” என்று தீரன்
கேட்டான்.
அதற்கு தீரனின் விசுவாசியான
இமாமி கூறினான்,
“மேம் ஷாப்பிங் போன இடத்தில் திடீர்னு ரொம்ப வேர்த்து கொட்டவும் இதயம் அசௌகரியமாக
இருப்பதாக பீல் செய்திருக்கிறார்கள், அவங்களுக்கு இதுபோன்ற சிம்டம்ஸ் இருந்தால் உடனே
போடக்கூடிய டேப்லெட்டை வீட்டில் வைத்துவிட்டு வந்ததை பார்த்தவங்க, வீட்டிற்கு
போயிடணும் என்று காருக்கு வந்து டிரைவ் செய்து வீட்டிற்கு செல்ல
நினைத்திருக்கிறார்கள்.”
“ஆனால் பாதி வழியிலேயே அவங்களால் காரை டிரைவ் செய்ய முடியாதவாறு பெய்ன் கூடி கண்ரோல் இழந்த கார்
சாலையை விட்டுவிலகி அங்கிருந்த மரத்தில் மோதி ஆக்சிடென்ட் ஆகிடுச்சு”.
“போலீஸ் முதலில்
உங்களுக்குத்தான் போன் பண்ணியிருகிறார்கள், நீங்கள்
முக்கியமான மீட்டிங்கில் இருந்ததால் உங்களுக்கு வரும் போன் காலை எல்லாம் என்
மொபைலுக்கு டைவர்ட் செய்திருந்ததால் நான்தான் அந்த காலை அட்டன் செய்தேன்.”
“போலீஸ் என்னிடம் இன்பார்ம் செய்ததும், ஹஸ்பிடலுக்கு நான் விரைந்து வந்துக் கொண்டே உங்களை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் நீங்கள்
மொபைலை அட்டன் செய்யவில்லை.”
“நான் ஹாஸ்பிடல் வந்தபோது உங்கள் அம்மா கொஞ்சம் கான்சியஸ்சாகத்தான் இருந்தாங்க.”
“அவங்க எப்படி ஆக்சிடென்ட் ஆனது என்ற விபரத்தை என்னிடம் சொல்லிவிட்டு இந்த
பேக்கை பத்திரமாக உங்களிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு மயக்கமாகிட்டாங்க” என்றான் இமாமி.
இமாமி கடந்த பத்து வருடங்களாக தீரனின் மைக்ரோ-மொமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறான். தீரனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்.
காரணம் அவன் ஆப்ரிக்க நாட்டுக்காரன்.
பத்துவருடங்களுக்கு முன் இமாமி அமெரிக்காவில் தனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து
தனிநபருக்கு ரகசியமாக ரிஸ்க் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு
தேவைப்படும் மற்றவரின் மொபைலில் இருந்து தகவல்களை திருடி தந்து சட்டத்துக்கு
புறம்பாக சம்பாதித்துக் கொண்டிருந்தான்.
பத்துவருடத்திற்கு முன் தீரன்
தனது முயற்சியால் மைக்ரோ-மொமன்ட்ஸ் கம்பெனியை ஆரம்பித்திருந்த சமயம் அது.
ஒருநாள் தீரன் தனது காரை ஊரின்
ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தி டிக்கியில் இருந்த இமாமியை அதைவிட்டு இறங்கச் சொன்னான்.
அவன் ஏற்கனவே டிக்கியில்
இருப்பதை பார்த்து விட்டதாகவும், போலீஸ் அவனை தேடி வந்ததையும் தான் நோட் பண்ணியதாகவும், இருந்தும் அவனை
காட்டிக் கொடுக்காமல் இருந்ததாகவும் கூறி “யார் நீ?” என்று கேள்வி கேட்டான்.
அதற்கு ஆப்பரிக்க மக்களுக்கே
உரிய கருப்பு நிறத்து இளைஞனான அவன், தனது நாட்டில் உள்ள தனது வீட்டின் வறுமைக்காக அமெரிக்காவில் தனது நண்பனின்
உதவியுடன் மொபைல் ஹேக்கிங் மூலம் பணம் சம்பாதித்தையும், அதில் தான்
திருடித்தந்த ஒரு தகவலின் அடிப்படையில் கொலை நடந்துவிட்டதால் ஹேக்கிங்
செய்துத்தந்த தன்னை சைபர் கிரைம் அடிப்படையில் குற்றவாளி என்று கைது செய்ய போலீஸ்
துரத்துவதாகவும், தன்னை போலீசில் மாட்டாமல் தப்பிக்க உதவுமாறும் கேட்டான்.
தீரன் அவனை போலீசில் மாட்டாமல்
தப்பிக்க வைத்து முறையாக எந்த சர்டிபிக்கேட்டும் இல்லாத இமாமியை தனக்கு பெர்சனல்
பி.ஏவாக நியமித்து, அவனுக்கு அதிகபடியாக சம்பளத்தை கொடுத்து அவனின் ஹேக்கிங் மூளையை தனது
பிஸ்னசுக்காக பயன்படுத்திக் கொண்டு தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.
அதிலிருந்து இமாமியும் தீரனின்
விசுவாசமான வேலைகாரனாகி விட்டான். தான் செய்த குற்றத்தில் இருந்து தப்பிக்க உதவி செய்து, நினைத்துப் பார்க்காத அந்தஸ்த்தையும் பணத்தையும் சம்பளமாக
கொடுத்து தனக்கு மறுவாழ்வு கொடுத்த தீரனுக்கு .தனது உயிரையும் கொடுக்கும் விசுவாசியாகவே
மாறிவிட்டவன் இமாமி.
ஹாஸ்பிடலில் அவனின்
வருகைக்காகவே தனது கடைசி மூச்சை பிடித்து நிருத்தி வைத்திருந்தார்
தீரனின் அம்மா பத்மினி.
தனது அம்மா இருந்த அறைக்குள் நுழைந்த
தீரன் தனது அழகான அம்மாவின் தலையில் போடப்பட்டிருந்த கட்டும் உடல்முழுவதும்
அங்காங்கே போடப்பட்டிருந்த கட்டுடனும் செயற்கை சுவாசத்துடனும் இருந்த தன் அம்மாவை
பார்த்தவன் உள்ளம் வலி எடுத்து, அவனையறியாமல் அவன் கண்ணில் கண்ணீர் உற்பத்தியானது. “அம்மா..” என்ற அவனின் வார்த்தையில் கண்விழித்து பார்த்த பத்மினி.
அவனையும் அவன் கையில் இருந்த
தனது ஹேன்ட் பேக்கையும் மாறிமாறி பார்த்தபடி எதுவோ அவனிடம் சொல்ல முயற்சித்த
பத்மினியின் கண்கள் நிலைகுத்தி நின்றது.
தனது கண்முன்னே தனது அன்னையின்
மரணத்தை கண்ட தீரனுக்கு ‘ஐயோ!... அம்மா...
என்னைவிட்டு செல்லாதே...’ என்று கத்த
வேண்டும் போல் இருந்தது.
அவளின் கடைசி துயிலில் இருந்து
எழுப்பிவிட வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டு “அம்மா...” என்று பேசமுயன்று
தொண்டை துக்கத்தில் அடைத்து குரல் எழும்பவில்லை.
பத்மினியை உலுக்கியபடி “எழுந்துடுங்க... நீங்க எனக்கு வேணும்..! நான் யாரும்
இல்லாத அனாதையாகிவிடுவேன்” என்று கத்த வேண்டும்போல் இருந்த உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாமல் தனக்குள்ளேயே இறுகி
நின்றவன், கால்கள் தொய்ந்து போய் விட, விழுவதை தவிர்க்க கட்டிலின் விளிம்பை பற்றி குனிந்து தனது அன்னையின்
நெற்றியில் முத்தமிட்டவன் கண்ணீர்த்துளிகள் அவனின் அம்மாவின் முகத்தில் விழுந்து
வழிந்தது.

No comments:
Post a Comment