anti - piracy

Post Page Advertisement [Top]

                                                                      

------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்-11

 

  வகுலாவுக்கும் தன்மேல் காதல் உள்ளதே பிறகு எப்படி வகுலாவை பிராங்கால் கவர்ந்து கொள்ள முடியும் என்றும் இந்திய குடும்பத்தில் பிறந்த அவளும் இந்திய கலாச்சாரத்துடந்தான் இருப்பாள். தன்னை விரும்பும் அவளால் தன்னைவிட்டுச் செல்ல முடியாது என்ற நம்பிக்கையில் இருந்தான் தீரன்.

 

நிச்சயதார்த்ததிற்கு வந்திருந்த பிராங்கினை கண்ட பட்டு மாமி, அவனின் பார்வை ஆவலுடன் வகுலாவின் மீதுபடிவதை கண்டவள், யார் அந்த பையன்? என்று விசாரித்தாள்.

 

அவனின் செல்வாக்கை கேள்விபட்டவள் நிகழ்ச்சிக்குப்பின் வகுலாவிடம் வந்து “பிராங் மாதிரி பணக்கார பையனை உனக்கு பார்க்காமல் அந்த முரடன் தீரனைதான் உனக்கு மாப்பிள்ளையாக உன் தகப்பனார் பார்க்கவேண்டுமா? என்னமோ! போ. நான் வளர்த்து ஆளாகின பொம்மனாட்டினால ஆதங்கத்தை கொட்டிட்டேன் குழந்த அதை நீ பெரிசுப்பண்ணாத” என்று கூறிச் சென்றாள்.

 

இந்நிலையில் தீரன் டெக் நியூ மாடல் மொமண்ட்ஸ் மற்றும் மொபைல் வடிவமைப்பில் உதவுவதற்கென்று பிசியாக இருந்தான். தங்களின் கல்யாணத்திற்கு முன் அந்த ப்ராஜெக்ட்டை செய்து முடித்துக்கொடுத்தால் கல்யாணத்தின் போதும் அதன் பின்னும் வகுலாவுடன் நிறைய நேரம் செலவழிக்கலாம் என்றும் இந்த ப்ராஜெக்ட்டின் மூலம் கிடைக்கும் அதிகப்படியான லாபத்தை வகுலாவிற்காக செலவழிக்கலாம் என்பதால் அதில் பிசியாக இருந்துவிட்டான்.

 

எனவே வகுலா தீரனுடன் டைம் செலவழிக்க அழைத்த போதெல்லாம் தீரனால் அவளுடன் செல்லமுடியவில்லை. அதனை கண்ட பிராங் வகுலாவை தற்செயலாக வெளியில் சந்திப்பது போல் பிளான் செய்து சந்தித்து அவளுடன் தீரனின் நண்பன் என்று கூறி அறிமுகமானான்.

 

ஏற்கனவே அவனை தங்களின் நிச்சயதார்த்தத்தில் பார்த்ததாலேயும் மேலும் அவனின் செல்வ வளத்தையும் மீடியாவில் பிஸ்னஸ் மேகசீனில் அவனின் போட்டோஸ் வெளிவருவதையும் கண்டு இருந்த வகுலா அவனின் செல்வ வளத்தையும் கேட்டு பிரமித்து இருந்தாள்.

 

தீரன், பிராங்கின் நண்பன் என்று தனது தோழிகளிடம் கூறுவதையே பெருமையாக நினைத்த வகுலா, பிராங்கே அவளுடன் பேச முன்வந்ததை கண்டு கிறுகிறுத்துப் போனாள் எனவே அவனுடன் அவளும் ஆசையாக பழக ஆரம்பித்தாள்.

 

பிராங்கை தான் முதலில் சந்தித்த விஷயத்தை அவள் தீரனிடம் கூறினாள். அவள் கூறியதைக் கேட்ட தீரன், பிராங் என்னுடைய நண்பன்தான் என்றாலும் வெளியிடங்களில் அவனை சந்திக்க நேரிட்டால் ஒரு ஹாயுடன் அவனைவிட்டு விலகிச் சென்று விடுமாறும் பெண்கள் விசயத்தில் அவன் உத்தமனாக இருக்கமாட்டன் என்று கூறி சொல்லி வைத்தான்.

 

வகுலாவோ, தீரனுக்கு பிராங்கின் மேல் பொறாமை. தன் லவ்வர் இன்னொருவனோடு பேசுவதா என்ற பொஷசிவ்னால் தான் அப்படிச் சொல்வதாக நினைத்தாள்.

 

அதன்பின் பிராங்குடனான அவளின் சந்திப்பை தீரனிடம் சொல்லாமல் மறைத்து பழக ஆரம்பித்து விட்டாள். இந்நிலையில் தீரனுக்கு தான் மேற்கொண்ட டெக் நியூ போன் ப்ராஜெக்ட் சிறப்பாக செய்துமுடித்ததால் கிடைத்த பணத்தாலும் பாராட்டாலும் சந்தோசமடைந்தான்.

 

தீரன் அதை வகுலாவுடன் கொண்டாட நினைத்தான் அதற்குமுன் பத்மினியிடம் தனது வெற்றியை கூறி ஆசிபெற வீட்டிற்கு வந்தான்.

 

ஆடிடோரியத்தில் ஒரு கலைநிகழ்ச்சிக்காக படையப்பா படத்தில் வரும் மின்சார பூவே என்ற பாடலுக்கு ரம்யாகிருஷ்ணன் ரோலில் நடனமாட வகுலாவும் அவளுடன் ஜென்ஸ் வாய்சுக்கு வேறு ஒரு பெண் ஆணின் கேரக்டரில் பரதத்தை அவளுடன் ஜோடியாக ஆட ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

வாசலில் வகுலாவின் வாகனம் நிற்பதை கண்ட தீரன் அவள் லாபியில் இருக்கிறாள் என்பதை உணர்ந்துக் கொண்டான் எனவே அவளை காணும் ஆர்வத்தில் உள்ளே நுழைந்தான்.

 

தங்களது குரு, பத்மினியின் மகன் தீரனின் பியான்ஷி வகுலா என்பதை பரவலாக அறிந்திருந்தனர் அங்கு பயிலும் மாணவர்கள். இந்நிலையில் தீரன் மற்றவர்களை வகுலா அறியாமல் வெளியேறச் சொல்லி கேட்டுக்கொண்டான்.

 

மேலும் தான் அவளுக்கு சர்ப்பிரைசாக நடனம் ஆடி காண்பித்து அவளுடன் தனக்கு ஏற்பட்ட ஊடலை போக்க உதவுமாறு கேட்டுக்கொண்டான்.

 

மற்றவர்கள் சென்றதும் பாட்டை ஒலிக்க விட்டான் தீரன். பாடலின் ஒலியில் திரும்பி ஆடிட்டோரியத்தை பார்த்த வகுலா அங்கு தீரனைக் கண்டதும் தன்னை அவன் தவிர்த்து விட்டதால் தான் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை என்று மனதினுள் நினைத்தபடி அவனை பார்த்துவிட்டு அசால்டாக திரும்பிக் கொண்டாள்.

 

அவள் கூப்பிடும்போது தான் அவளுடன் வெளியில் செல்லாத கோபத்தில்தான் இவ்வாறு நடந்துக் கொள்கிறாள் என்று நினைத்த தீரன் அவளை நடனமாடி இம்ப்ரஸ் செய்ய நினைத்தவன் பாடலை ஒரு தடவை கிரகித்து பின் ஓடவிட்டு அபிநயம் பிடிக்க ஆரம்பித்தான்.

 

அந்தப் பெரிய பரந்த ஆடிட்டோரியத்தில் யாரும் இல்லா தனிமையில் காதில் ஒலித்த அந்த பாடல் அதில் லிரிக்சை அனுபவித்து உச்சரித்தபடி அழகே உருவான வகுலமாலியின் அழகை ரசித்தபடியே தான் வளரும் போதிலிருந்து கண்ட அனுபவித்த பரதநாட்டிய அசைவுகளை ஆரம்பித்தான்.

 

அதில் வகுலாவின் மீது உள்ள மயக்கத்தையும் கிறக்கத்தையும் பாடலின் வரிகளுக்கு தக்க நாட்டியமாக தொடுத்து வழிய விட்டுக்கொண்டிருந்தான்.

மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்

 

(தீரனின் அசைவினில் நடன லயத்தினில் விழிகளில் வழிந்த அழைப்பினில் பெருமிதமான சிரிப்பினில் சற்று தடுமாறிய வகுலா தனது காலில் சலங்கையை பூட்ட ஆரம்பித்தபடி அவனின் அழகான நடனத்தை வியந்து பார்த்தாள்)

 

மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்

காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும்

சகியே சகியே சகியே

என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும்

 

(என்று அழைப்பு விடுத்தான் அவளுக்கு) அவளும் சலங்கையை கட்டிமுடித்து தாளலயத்துடன் இணைந்து அவனுடன் ஆடத்துவங்கினாள்.

 

மின்சாரா கண்ணா

மின்சாரா கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு

என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்

கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும்

நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்

 

(என்று இரண்டு பேரும் நடன அசைவுகளை உடல் உரச உள்ளம் தீமூட்ட நடனத்தில் லயித்து ஆடிக்கொண்டிருந்தனர்)

 

மதனா மதனா மதனா

என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்

மின்சாரா கண்ணா.

 

(என்ற வரிகள் வரும் போது உள்ளே நுழைந்த இமாமி ஸ்டேஜில் ஏறி பாஸ் என்று கையை ஆட்டி சத்தமாக தீரனை அழைத்தான்)

 

இமாமி கூப்பிட்டதும் தீரன் சட்டென்று தன்னிலைக்கு வந்தவன் தன்னுடன் இணைந்து குலைந்து ஆடிக்கொண்டிருந்த வகுலாவின் காதில் ஒன்செகன்ட் பேபி என்று கூறி ஸ்டேஜின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த இமாமியிடம் வந்தான்.

 

வகுலாவுக்கு தனது கட்டுக்குள் இருந்து தீரன் அவ்வளவு சீக்கிரம் விடுபட்டு இமாமியிடம் போனது எரிச்சலைத் தந்தது. அவனை எரித்துவிடும்படி பார்வையைப் பார்த்தவள். டக்கென்று அடுத்து வந்த பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல் தள்ளி நின்று இமாமி மொபைலில் எதையோ காண்பிப்பதை பார்த்துகொண்டிருந்த தீரனை நோக்கி அசைவுகளை கொடுத்தவண்ணம் நிற்காமல் ஆட்டத்தை தொடர்ந்தாள்.

 

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்

என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்

என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்

என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள

உனக்கொரு வாய்ப்பல்லவா

நான் உண்ட மிச்சபாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால்

மோட்சங்கள் உனக்கல்லவா

வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா

மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்

என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்

 

என்று நடன அசைவுகளிலேயே தனக்கு அடிமை கணவனாக தீரனை வரச்சொல்லி அழைப்பு விடுத்தாள்.

 

இமாமி காண்பித்ததை பார்த்தவன் கண்கள் கோபத்தாலோ ஏமாற்றதாலோ துரோகத்தாலோ சிவந்தது அவ்வளவு நேரம் ரசித்துப்பார்த்து தொட்டு இணைந்து ஆடிக்கொண்டு இருந்த அவனின் மோகம் அறுபட்டு குரோதமாய் வகுலாவைப் பார்த்தான்.

 

பின் ஆத்திரத்துடன் குதித்து அவளின் முன்வந்தவன் பாடலின் வரிகளுக்கு ஏற்ப வகுலாவின் முன் ருத்திர தாண்டவம் ஆடினான்.

 

வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்

அதன் விழியில் வழிவது அமுதமல்ல விசம் என்று கண்டேன்

அதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகிவிட்டேன் ஆ

வாள் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது

வலைகளியே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது

வா என்றால் நான் வருதில்லை

போ என்றால் நான் மறைவதில்லை

இது நீ நான் என்ற போட்டி அல்ல

நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

 

(என்று கோபத்துடன் ஆடிமுடித்தவன் வகுலாவின் கன்னத்தில் அரை கொடுத்தான்)

 

மின்சாரா கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய் என்ற பாடல் வரிகள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது சலங்கை ஒலி நின்றிருந்தது.

 

அவனின் ஆக்ரோசத்தில் கன்னத்தில் விழுந்த அடியில் ஒரே ஒரு நிமிடமே உறைந்து போய் நின்ற வகுலா, அடுத்தகணமே ஆக்ரோசத்தைத் தத்தெடுத்துக் கொண்டாள்.

 

என்ன தைரியமிருந்தால் என்னை நீ கை நீட்டி அடிக்கலாம்? ஆக்ரோசமாக அவனின் சட்டையின் காலரின் இருபக்கமும் பிடித்த வகுலாவின் இரண்டு கைகளுக்கிடையில் தனது கைகளை நுழைத்து தீரன் அவளின் பிடியை விட வைத்தான்.

 

பின் அவளின் கழுத்தை பிடித்து தள்ளிக்கொண்டே தப்பு செஞ்ச உனக்கே இவ்வளவு கோபம் வருதே, பாதிக்கப்பட்ட எனக்கு எவ்வளவு கோபம்வரும்?. உன்டோட செயல் என்னுடைய இமேஜை ஸ்பாயில் செய்றதை வருத்தத்தோட சும்மா வேடிக்கை மட்டும் பார்க்க நான் என்ன ஏசுவா? அல்லது கையாலாகாதவனா? என்று கூறிக்கொண்டே சுவற்றோடு அவளை சேர்த்து அழுத்தினான்.

 

அப்பொழுது தற்செயலாக அங்கே வந்த பத்மினி தீரனின் ஆக்ரோசமான தோற்றத்தில் வகுலாவின் கழுத்தில் கைவைத்தபடி அவளை சுவற்றோடு சேர்ந்து அழுத்திக்கொண்டு இருப்பதை பார்த்து திகைத்தவள் பின் கோபத்துடன் “தீரா?என்று கத்தினாள்.

 

பத்மினியின் சத்தத்தில் அவளின் புறம் திரும்பிய தீரன், “மாம் இவ என்ன செய்தானு தெரியாம அவள் பக்கம் நீங்க பேசாதீங்க!” என்று கர்ஜித்தான்.

 

பத்மினியோ அவனைவிடக் கோபமாக “அவள் எதுனாலும் செய்திருக்கட்டும். ஆனா அதுக்கு நீ அவக்கிட்ட இப்படி நடக்குறதை என்னால் பொறுத்துக்க முடியாது, என் மேல் ஆணை இப்போ நீ அவளை விட்டுடணும்” என்று அவனின் கோபத்திற்கு குறையாத அளவில் கோபத்துடன் தீரனுக்கு பதில் கொடுத்தாள்.

 

உடனே தீரன் வகுலாவின் கழுத்தில் இருந்த கையை அவளை வெறுப்புடன் பார்த்தபடி எடுத்தான்.

 

மறுநிமிடம் வேகமாக பத்மினியிடம் வந்த வகுலா தனது கழுத்தை தேய்த்துக் கொண்டே கோபம் குறையாத குரலில் “ஆன்ட்டி பட்டு மாமி சொன்னதுபோல் உங்க சன் முரடன் தான் ரவுடிதான் இது தெரியாம நான் இவனை கல்யாணம் செய்ய நினைச்சதுக்கு எனக்கு நல்ல பரிசு கொடுத்துட்டார் உங்க மகன்” என்றாள்.

 

அவள் கூறியதும் ஏளனமாக தீரன், “உனக்கு என் கூட என்கேஜ்மெண்ட் செய்யுறதுக்கு முன்னாடி நீ எப்படி இருந்திருந்தாலும் நான் அதை பெரிசா எடுத்திருக்க மாட்டேன்.

 

ஆனா என்னோட ஃபியான்ஷி பப்ளிக் பிளேசில் பிராங்குடன் நெருக்கமாக இருக்கிறதையும் அவன்கூட ஒன் நைட் ஸ்டே பண்ணியதையும் என்னால் மனிக்கவே முடியாது.

 

இனி உன்னைய என்னால கல்யாணம் செய்யமுடியாது உன் மூச்சுக்காத்துக் கூட நான் இருக்குற இடத்தில் இருக்க வேணாம். முதலில் இங்கிருந்து போய்விடு” என்று கர்ஜித்தான்.

 

பத்மினிக்கு அவர்களின் உரையாடலில் மூலம் தீரன் எதனால் இவ்வளவு கோபப்படுகிறான் என்று புரிந்தது. இருந்தபோதிலும் ஒரு பெண்ணின் மேல் அதுவும் தனது உயிர் தோழி விசாலியின் மகளின் மேல் தன் மகன் சாட்டும் குற்றச்சாட்டை பத்மினியால் நம்ப முடியவில்லை.

 

மேலும், என்னதான் அவனை பொத்தி வளர்த்தாலும் அவனின் தந்தையைப் போலவே அவனும் சந்தேக நோய்க்கு ஆளாகிவிட்டானோ?! இது என்ன பரம்பரை வியாதிமாதிரி, பரம்பரை குணமா? என்று தீரனின் மேல் கோபமே கொண்டாள்.

 

எனவே கோபத்துடன் “தீரா வாயை மூடு. என் விசாலியின் மகளையே சந்தேகப்படுறியா? நீ இப்படி இருப்பனு தெரிந்திருந்தால் நானே அவக்கூட உன்னுடைய கல்யாணம்கிற பேச்சைத் தடுத்திருப்பேன். ஒரு பெண்ணைப் பார்த்து அவளோட கேரக்டரை மோசமா பேசுறது அவளை எந்தளவு நோகடிக்கும் தெரியுமா? முதலில் உன் வார்த்தைக்காக அவளிடம் மன்னிப்புகேள்” என்று கண்டிப்புடன் கூறினாள்.

 

தீரன் தனது அம்மாவின் வார்த்தையில் மேலும் காயமுற்றான். தீரன் வகுலாவின் மீது எவ்வளவு ஆசை வைத்திருந்தான்! நிச்சயமான பிறகு அவளும் தன்மேல் ஆசையாகத்தானே இருந்தாள்? நேரமின்மை காரணமாக இருவரும் நாள் முழுவதும் ஒன்றாக சுற்றவில்லை என்றாலும் சந்தித்த நேரங்களில் ஆசையாக தன்னுடைய தழுவல்களுக்கும் முத்தங்களுக்கும் அவளும் ஆவலுடன் மூழ்கித்தானே போனாள்!

 

மேலும் வகுலாவிடம் தான் எல்லைக் கடந்துப் பழகக் கூட அவள் சற்றும் தடை விதிக்கவில்லையே! நெருக்கத்தை அதிகப்படுத்தவே அவள் முயற்சி செய்திருந்தாள்.

 

ஆனால் நான்தான் எல்லைகளை கடக்காமல் கட்டுப்பாட்டுடன் நடந்துக்கொண்டேன். கல்யாணத்திற்கு பின்பே அவளை மொத்தமாக எடுத்துக்கொள்ள விரும்பினேன், ரெண்டு குடும்பத்தோட மறைமுக அட்வைஸ் அதுவாகத்தானே இருந்தது. அதைக்கேட்டு அவளுக்கு அது தான் செய்யும் மரியாதை என்று ஓரளவுக்குமேல் முன்னேறிப் போகாமல் என்னை கட்டுபடுத்தி கொண்டேனே. அப்படி கட்டுப்பாட்டுடன் இருந்ததுதான் தன் தவறோ? என்று இப்பொழுது அவனுக்கு எண்ணத் தோன்றியது.

 

அதற்காக உண்மையான லவ் என்மேல் இருந்தால் எப்படி அவளால் வேறு ஒருவனுடன் முடியும்? தன்மேல் அவளுக்கு இருந்தது லவ் இல்லையோ? வெறும் லஸ்ட் தானோ!” என்ற எண்ணமே அவனுக்கு வேப்பங்காயாக கசந்தது.

ஏனோ லவ் இல்லாத லஸ்ட் அவனுக்கு அருவெறுப்பாக இருந்தது. வகுலாவின் மீது கொண்ட லவ்வினாலேயே அவளின்மேல் ஆர்வமும் ஆசையும் அவனுக்கு உண்டானது.

 

ஆனால் தற்போதைய அவளின் நடத்தையை தெரிந்துக் கொண்டவனுக்கு அவளின் மேல் இருந்த ஆசை விலகி கோபம், வெறுப்பு மற்றும் ஏமாற்றம் முதலியவை உண்டாகியது.

 

அந்த கோபத்துடனேயே, “மாம், யாரிடம் நான் மன்னிப்புக் கேட்கனும் இவளிடமா?” என்றவன், அங்கு ஓரமாக நின்றிருந்த இமாமியிடம் வேகமாக சென்று அவனின் கையில் வைத்திருந்த மொபைலை பறித்தான். அதில் பிஸ்னஸ் நியூஸ் உள்ள இமேகசீனில் இருந்த அந்த போட்டோவுடன் இருந்த செய்தியை அவளிடம் காட்டினான்.

 

அதில் வகுலாவும் பிராங்கும் பப்ளிக் பிளேசில் நெருக்கமாக இருந்த போட்டோவும் முத்தமிட்டுக் கொண்டிருந்த போட்டோவும் இருந்தது. அதன் அடியில் பிஸ்னெஸ் மேன் பிராங் அவனின் நண்பனும் மற்றும் பிஸ்னஸ் பார்னர் & அட்வைசருமான தீரமிகுந்தனின் பியான்சியுடன் டேட்டிங் என்று விமர்சனம் இருந்தது.

 

அதன் சாரம்சத்தை வாசித்துப் பார்த்த பத்மினிக்கு தனது தோழியின் மகளை தன் மகனுக்கு மனைவியாக்கி தனது வாழ்கையின் இக்கட்டான காலத்தில் பக்கபலமாக இருந்த தோழி விசாலியிடம் பெற்ற நன்றிக் கடனை நல்லவிதமாக வகுலாவை வாழவைப்பத்தின் மூலம் தீர்க்க நினைத்த தனது கனவுக்கோட்டை தகர்ந்து விட்டதைக் கண்டாள்.

 

இனி தீரனை தனது நன்றிக் கடனுக்காக அவளை திருமணம் செய்துக்கொள் என்று கூறுவது அபத்தமானது என்று அவளுக்கு புரிந்தது. மேலும் அவ்வாறு கெஞ்சி கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைப்பதற்கு அப்பாற்பட்டவர்கள் இன்றைய காலத்துப் பிள்ளைகள் என்ற நிதர்சனத்தை பத்மினி உணர்ந்தே இருந்தாள்.

 

வாழ்க்கையில் யாருக்கும் நன்றிக்கடன் மட்டும் பட்டுவிடக்கூடாது. அவ்வாறு பட்டுவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் நம் மனம் அடிமையாகிக் கிடக்கும்.

 

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு. (107)

விளக்கம்: தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழு பிறப்பிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் நன்றியுடையோர்.

 

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று. (108)

விளக்கம்: ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது. நன்மை அல்லாத விஷயங்களை அன்றைக்கே மறந்து விடுவது நல்லதாகும்.

 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு. (110)

விளக்கம்: எந்ந நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்: ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.

 

இவ்வாறு பத்மினி தான் விசாலியிடம் பட்ட நன்றி கடனையும் அவ்வாறு உதவிய அவளின் நட்பை வகுலாவின் இந்த மோசமான செயலை மன்னிக்காமல் தீரனை கட்டாயப்படுத்த இயலாத தனது நிலையை எவ்வாறு தோழியிடம் விலக்குவேன் என்று மருகி நின்றாள்.

 

இந்த திருப்பத்தை வகுலா எதிர்பார்க்கவில்லை. இப்படி போட்டோ ஆதாரத்துடன் பத்மினியின் முன் தான் பிடிபட்டதும் ஒருநிமிடம் வெட்கித்தான் போய்விட்டாள் வகுலா. ஆனால் மறுநிமிடமே நிமிர்வாக இதிலென்ன தப்பு என்றமாதிரி அவளின் பேச்சு இருந்தது.

 

நான் பிராங்கிடம் நடந்துக்கொண்டதை விமர்சிக்க தீரனுக்கு எந்த யோக்கியதையும் இல்லை ஆன்ட்டி, ஏன்னா நான் அவனை அவாய்ட் செய்ததில்லை. அவனின் பியான்ஷி நான்னு வெறுமனே வாய்வார்த்தையாக மட்டும் சொல்லிக்கிட்டாப்ல போதுமா? என்னுடன் நேரம் செலவிடாமல் இருந்தது தீரன் தான்.

 

ஆனா பிராங் எவ்வளவு பெரிய பணக்காரர்? நான் ஆசைப்பட்ட இடத்துக்கெல்லாம் அவராகவே என்னையக் கூட்டிட்டுப் போனார். என் கண் ஆசையாக பார்த்ததெல்லாம் கேட்காமலேயே வாங்கிக்கொடுத்தார். அவர் கூட நான் இருக்கிறதை பொறாமையாக மத்தவங்க பார்த்தாங்க.

 

ஆனா அவர் என்னைய ஆசையாக பார்த்தார். என் அருகாமைக்கு மயங்கினார். எனக்கும் தீரனுக்கும் நிச்சயம் ஆகாததுக்கு முன்னாடி அவர் என்னை பார்த்திருந்தால் கண்டிப்பாக என்னிடம் மேரேஜ் பண்ணிக்கோனு கேட்டிருப்பேனு சொன்னார்.

 

நான் தீரனோட பியான்ஷின்ற நிலையில் இருந்தும் கூட என்கிட்டே மயங்காம. என்கூட நேரம் ஸ்பென்ட் பண்ணாம ஒதுக்கிய தீரன் எங்கே? என் அருகில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்னை தொடாமல் இருக்க முடியாமல் என்மேல் காதலாக இருக்கும் பிராங் எங்கே?!

 

என்னை லவ் செய்யும் பிராங்கிடம் என்னைக் கொடுத்தது எனக்கொன்னும் தவறா தெரியலை இதுக்காக என்கூட நடக்கயிருக்கிற கல்யாணத்தை வேண்டாம்னு தீரன் சொல்றதால் எனகொன்றும் நட்டமில்ல இவ்வளவு நடந்த பிறகும் என்னிடம் மேரேஜ்க்கு ப்ரொபோஸ் செய்யாமல் பிராங் இருப்பதற்கு காரணம் தீரனுக்கும் எனக்கும் நடந்த நிச்சயதார்த்தம் தான்.

 

இனிமே தீரனுக்கும் எனக்கும் இடையே உள்ள நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டதுனு சொன்னால் உடனே பிராங் என்னை மேரேஜ் செய்துக்க சம்மதிச்சிடுவார். எனக்கு இதில் நட்டம் கிடையாது லாபம் தான்என்று கூறினாள் வகுலா.

 

அவள் அவ்வாறு கூறியதும் “என்ன சொன்ன? பிராங்கிற்கு உன்மேல் லவ்வா?” என்று கேட்டுவிட்டு ஹஹஹஎன்று சத்தமாக சிரித்தான் தீரன்.

 

அவன் உனக்கு மட்டும் கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து உன்னோடு மட்டும்தான் லவ்ன்ற போர்வையில் லஸ்ட்ல இருந்தான்னு நினைக்கிறாயா?” அவனுக்கு எத்தனையோ இதுமாதிரி லஸ்ட் வந்துபோனதை நானும் பார்த்திருக்கேன்” என்றான்.

 

வகுலாவோ, “பிராங் மாதிரி மில்லினியர்ஸ் மற்றும் பிஸ்னஸ் மேன்கள் இந்த மாதிரியிருப்பது சகஜம்தான். பின்ன உன்னைய மாதிரியா? பியான்சிக்கிட்ட கூட தள்ளி நிற்க அவர் என்ன பொண்ணுங்களை திருப்திபடுத்த லாயக்கு இல்லாதவரா? எப்படி இருந்தாலும், என் அழகை வைத்து அவரை என்னுடன் கட்டிபோடத் தெரியாமல் இருக்க நான் என்ன அழகில்லாதவளா?

 

எனிவே. தீரனோடு எனக்கு என்கேஜ்மென்ட் ஆனதால் நான் அடைந்த நன்மை மில்லினியர் பிராங்கின் அறிமுகம் எனக்கு கிடைத்ததே. அதற்கு தாங்க்ஸ்” என்று கூறியவள் விறுவிறுவென்று வெளியேறினாள்.

 

அவளின் வார்த்தைகள் தீரனை ரணப்படுத்தியது. இதெயெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பத்மினிக்கு தனது மகனின் ரணம் கண்டு இதயம் வலித்தது.

 

போய்க்கொண்டிருந்த வகுலாவின் முதுகைப் பார்த்து தீரன் கத்தினான். போ போ உன்னைமாதிரி ஒருத்திகூட எனக்கு கல்யாணம் நடக்காம நின்றது எனக்கும் சந்தோசமே. ஹ உனக்கு லஸ்ட் தான் முக்கியம். லவ், இரண்டாம் பட்ச்சம் தான்னு எனக்கு முன்பே தெரிஞ்சிருந்தா, நீ எனக்கு குடுத்த இடத்துக்கு இந்நேரம் உன்னை அம்மாவாக்கி இருக்க முடியும்.

 

ஆனால் கல்யாணத்தை உன்னுடன் நான் யோசித்தே பார்த்திருக்கமாட்டேன். பிராங் பணக்காரன்ற காரணத்தால் என்னைவிட்டு பிராங்கிடம் போன உனக்கும், ஃபிரெண்டோட லவ்வர் மேலேயே கன்னம் வைத்த அந்த பிராங்கிற்கும் உரிய தண்டனை இந்த தீரன் கொடுக்காமல் அடங்கமாட்டான்” என்று கத்தியது போய்கொண்டிருந்த வகுலாவின் காதுகளில் விழுந்தது, அதை அவள் சட்டை செய்யவில்லை.

 

ஆனால் காலம் அதற்கு பதிலடி கொடுக்கக் காத்திருந்தது.


----தொடரும்----

 

 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib