அத்தியாயம்-12
வகுலாவிற்கும் அவனுக்குமிடையே நடந்த நிகழ்வுகளில் தான் அடைந்த துன்பத்தை இன்றைய பிராங்குடனான உரையாடலில் அசைபோட்டு மேலும் மனதை ரணமாகிக்கொண்டிருந்த தீரனின் காதில் திரும்பத்திரும்ப ஒலித்த மொபைலின் ஒலி கலைத்தது.
தனது
பேக்பேக்கினுள் இருந்து சத்தம் கேட்டதும் அதை ஓபன் செய்து எடுப்பதற்குள் அழைப்பு
நின்றுவிட்டது.
இமாமி தான்
போன் செய்திருப்பான் என்று நினைத்து மொபைலை எடுத்தவன் கையில் அகப்பட்டதோ
யாழிசையின் மொபைல்.
அதனை
எடுத்தவன் கை அன்னிச்சையாக அதன் கேலரியில் இருந்த போட்டோஸ்களைக் ஓபன் செய்தது.
அதில்
அவள் தோழிகளுடன் எடுத்த போட்டோஸ் சிலதும் பிருந்தாவுடன் எடுத்த போட்டோஸ் சிலதும்
இருந்தது.
பிருந்தாவை
பார்த்தவன் தனக்கும் பிருந்தாவிற்கும் தோற்றத்தில் ஏகப்பட்ட ஒற்றுமை இருப்பதை
கண்டவனுக்கு தனது தங்கை அவள் என்ற ஒட்டுதல் ஏற்பட்டது. பிருந்தா
ஆணாக பிறந்திருந்தால் தன்னைப்போலவே இருப்பாள் என்று அவனால் எண்ணாமல் இருக்க
இயலவில்லை.
மேலும்
அதில் யாழிசைக்கும் பிருந்தாவிற்கும் உள்ள அன்னியோன்யம் இருவரும் சேர்ந்து
போட்டோவிற்கு போஸ் கொடுத்தவிதத்திலேயே அவனுக்குப் புரிந்தது.
அவனின்
விரல்கள் யாழிசையின் உருவத்தை பெரிதுபடுத்தி ‘உனக்கு உங்க அய்யாவின் மகளைத்தான்
பிடிக்குமோ? மகனையும் பிடிக்கணும். பிடிக்க வைப்பான் இந்த தீரன்’ என்று அவளின்
போட்டோவிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் இமாமியிடம் இருந்து மொபைல்
அழைப்பு வந்தது.
எடுத்து அழைப்பை
ஏற்றதும் இமாமி கொஞ்சம் பதற்றத்துடனே “பாஸ்” என்ற குரலைக் கேட்டு ‘அவ்வளவு
சீக்கிரம் இமாமி எதற்கும் பதற்றம் கொள்ளமாட்டானே’ எனற எண்ணத்துடன் தீரன்,
“இமாமி, எனி ப்ராப்ளம்?”
என்றதும்,
“பாஸ்,
மிஸ்டர் பிராங்கின் அக்கௌன்ட் டிரான்ஸர் டீடெய்ல்ஸ் ஹேக் செய்து
சொல்லச் சொன்னீங்கள்ல?”
“எஸ்
அதில் என்ன பிரச்சனை”
“ஹேக்கிங்
செய்ததில் பிரச்சனை இல்ல. ஆனால் ட்ரான்ஷக்சன் செய்த நபர்களும் அந்த அக்கவுண்டின்
இருக்கும் பணத்தின் மதிப்பும் என்னைய மிரட்டுது” என்ற இமாமியின் வார்த்தைகள் அவன் ஓரளவு
எதிர்ப்பார்த்திருந்தான். இருந்தாலும் ‘தான் எதிர்பார்த்ததை விட அதிகபடியான தகவலை
இமாமி கூறப்போகிறான்’ என்று அவன் உள்மனம் கூறியது.
அதை
ஆமோதிக்கும்படி ‘வேர்ல்ட் டாப் மோஸ்ட் பிஸ்னஸ்
மற்றும் கார்பரேட்டார்சின் தலைமை புள்ளியில் உள்ளவர்கள் மூன்று பேரின் பெயர்களை
கூறி அவர்கள் அந்த அக்கெளண்டில் பணம் போட்டிருகிறார்கள்! அதுவும் இந்தியாவை போன்ற
இன்னும் சில வளரும் நாடுகளை விலைக்கு வாங்கும் அளவு பணம் அதில் தற்போது உள்ளது!’
என்றதும் யோசனையில் அமைதியாக இருந்தவனிடம்,
“அவ்வளவு
பெரிய தொகைய நாம கையாடல் செய்தால் இந்த உலகத்தையே கண்ரோல் பண்ணிக் கொண்டிருக்கும்
கார்பரேட்டார்களின் எதிரிகள் லிஸ்டில் முதல் இடத்தில நாம இருப்போம். அப்படி நடந்தா
புதைகுழிக்குள் நம்மை நாமே இழுத்துச் செல்வதற்கு சமம்” என்று கூறினான்.
அவன்
அவ்வாறு கூறிய மறுநிமிடம் “இமாமி உனக்கு என்மேல் நம்பிக்கை இல்லையா?
அல்லது என் கூட இனி பயணிப்பது உனக்கு நல்லதில்லைனு நினைக்கிறயா?
இரண்டு கேள்விகளுக்கு நீ என்ன பதில் கூறினாலும் நான் உன்னை தப்பா எடுத்துக்க
மாட்டேன்.
நீ என்கூட
தொடர்ந்து வேலைப் பார்க்கனும்னு இருந்தாலும் சரி அல்லது என்னோட வாழ்கையில நான்
விரும்பும் என் அன்பிற்கு தகுதியான உன்னை உன் பாதையில் போகணும்னா அதுக்கான
செட்டில்மெண்டோடு தனித்து செல்ல பாதை ஏற்படுத்தி கொடுக்கவானு முடிவு செய்யணும்.”
அவன்
வார்த்தைகளை கேட்டு உணர்ச்சி வசபட்ட நிலையில் “பாஸ், என்
மேல் எனக்கு இருக்குற நம்பிக்கையைவிட, உங்களின்
மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கை அதிகம். அதோடு நீங்கள் எங்கேயோ அங்கேதான் இந்த
இமாமி இருப்பான் பாஸ்.
என்னோட
கவலையெல்லாம் எனக்காக இல்ல. இதில்
இறங்கிட்டா, அப்புறம் உங்களோட நிம்மதி ஆயுளுக்கும் இனி இல்லாமல் போய்விடுமேன்ற
பயம்தான் பாஸ்.
நீங்க
இவ்வளவு ஸ்ட்ராங்கா இது நடக்கணும்னு நினைத்தால் நானும் உங்கக்கூட
நின்னு செஞ்சு முடிச்சுடலாம் பாஸ். இந்த
நிமிசத்தில் இருந்து நான் அதற்கு தயாராகிட்டேன் அடுத்து நான் என்ன செய்யணும்?”
இமாமியின்
பதிலில் நிம்மதியடைந்த தீரன், “இமாமி உன்னைய
என்னோட உறவா சம்பாதிக்கும் பாக்கியம் கிடைச்சதால நான்தான் உலகத்திலேயே லக்கிமேன். ஒகே!
இமாமி, இப்போ நாம வேகமாக செயல்படவேண்டிய நேரம். நாம கைவைக்கும் நபர்கள் ரொம்ப
ஆபத்தானவங்க, அதனால அவங்க நம்ம வேலையை காட்டியதும் அலார்ட்டாகி நம்மை தேடுறதுக்கு
முன்னாடியே நீ அந்த பணத்தை நான் சொல்வதைபோல் செய்ய, பிளான் செய்து வைத்துடு.
மாதவன் கிட்ட
யாழிசைக்கு டீமேட் அக்கௌன்ட் ஓபன் செய்யச் சொல்லப்போகிறேன். அதற்கு என்ன செய்யணும்றதை
அவன் பார்த்துபான்” என்று பேசியப்பின் இன்னும் சில விசயங்களை செய்யச் சொல்லி
இமாமியிடம் தீரன் கூறினான். அவன் கூறிய விசயங்கள் அனைத்தும் யாழிசையை சுற்றியே நடத்தும்படி
இருந்தது.
“இமாமி,
நான் சொன்ன வேலையை எல்லாம் செய்து முடிச்ச அடுத்த இருபத்திநாலு மணிகுள்ள, நீ அமெரிக்காவை
விட்டு நகரவும் பிளான் பண்ணிக்கோ.
வேலை
முடிஞ்ச மறுசெகன்ட் அமெரிக்காவை விட்டு நீ வெளியேறிப் போற இடத்தை எதிரிகளுக்கு குழப்பம்
ஏற்படும்படி செய்யணும், அதுக்கு ஆப்ரிக்காவில இருக்கிற உன் சொந்த ஊருக்குப்
போவதுபோல பயண டிக்கெட்டெல்லாம் எடுத்து அங்கிருந்து கிளம்பிடு. ஆனால் ஆப்ரிக்கா
போகாத இடையிலேயே என்று அவ்விடத்தின் பெயரை கூறி அங்கு இறங்கிரு அங்கு இருக்கும் பிரைவேட்
ஏற்போர்ட்டுக்குப் போயிடு.
அங்க உன்
பேரை “ஹெயில்”ன்னு மாத்திச் சொல்லு. நியூ டெக் மொபைல் நிறுவன ஊழியராக உன்னை
நீ அடையாளப்படுத்தப்பட்டு ஹெயில் என மாற்றப்பட்டு அடையாள அட்டையுடன் ஒருவன் உன்னைய
எதிர்பார்த்துக்கிட்டு இருப்பான். அவன்கூட
ஃபிளைட் ஏறிட்டா அடுத்த திரீ டேஸ்ல என்கூட இங்க நீ இருக்கணும்.
அதோட,
நம்ம டீம் மெம்பர்கள்ல முக்கியமானவர்கள் என்று, சிலரின் பெயரை கூறிய தீரன்,
அவர்களோட எப்போதும் நாம காண்டாக்டில் இருக்குறபடி ஏற்பாடு பண்ணிடு. நாம
தங்கப்போகும் இடத்தை பாதுகாப்பா வைக்க, நம் டீம் மெம்பர் சிலரை
இப்போவே நான் இருக்குற அட்ரசுக்கு அனுப்பி வை.”
தீரன்
கூறியதை கவனமாக கேட்ட இம்மாமி, “நீங்க
சொல்வதுபடியே எல்லாம் செய்துவிடுறேன் பாஸ். ஆனா, அந்த
யாழிசைன்ற காலேஜ் கேர்ளை பற்றிய டீடைல்சை கலெக்ட் செய்யச் சொன்ன விஷயத்தை பத்தி
மாதவன்கிட்ட நான் சொன்னதும் அவன். ஏற்கனவே உங்களுக்கு யாழிசைய பத்தி எல்லாத்தையும்
சொல்லிட்டதா சொல்றான். அதோடு அந்த யாழிசையப் பத்தி அவன்
சொல்லி தெரிஞ்சுகிட்டதில் ரொம்ப சிம்பிளான கேர்ள்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
அப்படிபட்டவங்களை
சுத்தி நாம பின்ற வலையில் அவங்க மாட்டினாலும் நாம அவங்களை கண்ட்ரோலில் எடுக்கும்
முன்னாடி நம்ம எதிரிகளால் அடையாளம் கண்டுகிட்டா அந்த கேர்ளுக்கும் நமக்கும்
சம்மந்தம் இருக்கும்னு யாரும் நினைத்துகூட பார்க்க மாட்டார்கள் அதனால் நம்மை அவங்க
ஸ்மெல் பண்ணி நெருங்குறதுக்கு ரொம்ப லேட் ஆகும். அதுக்குள்ளே நாம அந்த பணத்தவச்சே
நம்மை ஸ்ட்ராங்காக்க டைம் கிடைச்சிடும்.
ஆனா,
பணம் காணோம்றது தெரிஞ்சதுமே அவிங்க அல்லாட்டானதும் முதலில் மாட்டுறது
யாழினிதான். அவங்க கிட்ட அவள் மாட்டிக்கிட்டாள்னா நாம செய்தது எல்லாமே வீணாகிடும்.
அவிங்க அவளை தங்களோட கண்ட்ரோலில் எடுத்தே அவளை வச்சே அவகிட்ட உள்ள பணத்தை ஈசியா
மிரட்டி வாங்கிக்க முடியும். அப்படி வாங்கிட்டா அவளோட வாழ்கையும் முடிஞ்சிடும்.”
என்றான் இமாமி.
“நோ இமாமி,
என்னை மீறி அவளை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. நீ இங்கு வரும்போதே. அவ என்கிட்ட
இருப்பாள்” என்றான் தீரன்.
தனது வாழ்க்கை
பாதையை வேறு ஒருவன் முடிவு செய்ததை பற்றி உணராமல் வகுப்பில் அமர்ந்திருந்த
யாழிசைக்கு பாடம் எதுவுமே மனதில் ஏறவில்லை. அவளின் நினைவு முழுவதுவும் காலையில்
நடந்த சம்பவத்தின் தாக்கமே நிறைந்திருந்தது.
அவளின்
அருகில் அமர்ந்திருந்த சந்தியா எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் தன் தோழி யாழிசை ஏதோ
ஒரு யோசனையிலேயே இருப்பதை கண்டவள், தனது வீட்டில் அவளுக்கு ஏற்பட்ட அனுபவத்தை
நினைத்துதான் இன்னும் கலங்கிக்கொண்டு இருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டு. “யாழிஅடியே
யாழி, நான் உங்களை எல்லாம் என் வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போனது தப்புதான்.
ஸாரி,
நான் இருக்குற என் வீட்டில என்னைய மீறி என் அப்பாவோ அவர் கூட
இருக்குறவங்கலாளேயோ என் ஃப்ரெண்ட்ஸை எதுவும் பண்ண முடியாதுனு நினைச்சு உன்னைய
கூப்பிட்டுக்கிட்டுப் போனதால் வந்த வினைதான் இது. ப்ளீஸ்டீ நீ நடந்ததையே நினைச்சுக்கிட்டு
இருக்காத” என்று சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
‘உன் வீட்டில
நடந்தது மட்டும்தானே உனக்குத் தெரியும். அதுக்குப் பின்னாடி நடந்ததை நான்
யார்கிட்ட சொல்ல? குறிப்பா உன்கிட்ட சொல்லவே
முடியாதே! அவன் சொல்றது உண்மை போலவும் இருக்கு அவன் சொல்லுறதை கேட்டு வந்த பயத்தால
என் ஃபிரண்ட் உன்கிட்ட கூட என் நிலைமையை சொல்லி அவன் சொல்வதை கேட்கலாமா?
கூடாதானு கேட்க தயக்கமா இருக்குதே’ என்று மனதினுள் புலம்பிக்கொண்டிருந்தாள்
யாழி.
அப்பொழுது
காலேஜ் பியூன் அவளின் வகுப்பிற்கு வந்து “இந்த கிளாசில் இருக்கும் யாழிசைன்ற ஸ்டூடண்டோட
பர்ஸ் கீழே கிடந்துச்சுனு ஆபீஸ் ரூமில் ஒருவர் எடுத்துட்டுவந்து கொடுத்திருக்கிறார்.
ஆப்டர்நூன் லஞ்ச் பிரேக் டைமில் ஆபீஸ் ரூமிற்கு வந்து ஒரு சைன் போட்டுவிட்டு அந்த
பர்சை வாங்கிட்டு போகச்சொல்லிடுங்க” என்று கூறிவிட்டுச் சென்றான்.
அவன்
கூறியதை கேட்டதும் அந்த ஆசிரியர் “யாழிசை” என்றதும், எழுந்து நின்றவளை “இப்படியாமா
உன் திங்சை கேர்லஸ்சாக மிஸ் செய்வ?” என்று
கேட்டப்பிறகே, பரபரப்பாக அவள் பேக்கை எடுத்து அவள் பர்ஸ் அதில் உள்ளதா?
என்று தேடிப்பார்த்தாள்.
அதில்
இல்லாததை பார்த்தவள், “ஆமாம் மிஸ் என் பர்ஸ் என் பேகில இல்ல” என்று கூறினாள். அவள்
கூறியதை கேட்ட ஆசிரியர், “இங்க
பாருப்பா. அவள் பர்ஸ் தொலைஞ்சது கூட தெரியாமல் இருக்கிறா,
ஆனால் அதை யாரோ ஒரு நல்லவர் எடுத்து ஆபீசில் வந்து கொடுத்திருக்கிறார்.
யார் அந்த ஆள்னு விசாரித்து, முடிந்தால் அவர்களுக்கு தாங்க்ஸ் சொல்லிடு” என்று
கூறிவிட்டு அவளை அமரச்சொன்னார்.
அவள்
அமர்ந்த மறுநொடி மதிய லஞ்சுக்கு பெல் அடித்ததும், ஆசியர் அடுத்த வகுப்பில்
சந்திப்போம் என்று கூறி வெளியேறியதால் “சந்தியா என்கூட ஆபீஸ் ரூம் வாடி என்
பர்ஸ்சை வாங்கிட்டு வந்துவிடலாம்” என்று இழுத்துக்கொண்டு விரைந்தவள் அதிலதான் என்னோட
போன், ஏடீஎம் கார்டுனு எல்லாத்தையும் வச்சிருக்கேன்.
நம்ம
காலேஜ் காம்பஸில இருக்குற ஏடீஎம்யில் குரூப்டான்ஸ்க்கு வாங்குன டிரஸ்க்கு அமெளண்டு
எடுத்து தர கொண்டு வந்தேன். கடவுளே, எல்லாம் பத்திரமாக இருக்கணும்” என்று
புலம்பியபடி வேகவேகமாக சந்தியாவையும் இழுத்துக்கொண்டு நடந்தாள்.
“எரும
மாடே அதுக்காக இப்படியா இழுத்துக்கிட்டு ஓடுவ? உன் பர்சுக்குள்ள உள்ளத அமுக்கிடணும்ன்னு
நினைகிறவன் கையில் அது கிடைச்சிருந்தா ஆபீஸ்ரூமில மெனெக்கெட்டு வந்தெல்லாம்
கொடுத்திருக்க மாட்டான், எல்லாம் இருக்கும்” என்று சொல்லிமுடிக்கும் போதே. ஆபீஸ் ரூமை
அடைந்திருந்தனர்.
அங்கிருக்கும்
இன்சார்சரிடம் கேட்டு தனது பர்சை வாங்கியவள், சைன்
பண்ணிவிட்டு “யார் சார் கொடுத்தா?”
என்றதும், “வாட்ச்மேன் தான் யாரோ ஒருத்தர் வந்து கொடுத்ததா சொன்னார், டீடைல்ஸ்
வேணும்னா வாச்மேன்கிட்டயே விசாரிச்சுக்கோங்கமா” எனச் சொல்லிவிட்டு அவரின் வேலையை
பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
வெளியில்
வந்ததும் தனது பர்சை திறந்து பார்த்தவள் அதில் இருந்த போனை எடுத்ததும் “எப்படீ
சாம்சங் கேலக்சிs8 போன் வாங்கின? இது
பிப்டி தவுசன்ட் ரூபாய்க்கும் மேல விலை இருக்கும்னு நினைக்கிறேன்.
இதையெல்லாம் உன்னால் வாங்க முடியுது. இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியா டான்ஸ் காஸ்ட்யூமுக்கு
பர்சேஸ் செய்யலாம்னு சொன்னதுக்கு மட்டும் முடியாதுனு சொல்லிட்டல்ல நீ” என்று
கேட்டாள் சந்தியா.
தனது
பர்சினுள் அந்த போனை பார்த்ததும் “இல்ல அது
நான் வாங்கல” என்று அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தவள் தனது மடியில் அந்த பர்ஸில்
இருந்த திங்சை எல்லாம் கொட்டிப் பார்த்தாள். அதில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்
இருபதும் மேலும் தனது பேனா, பென்சில்
மற்றும் சில்லரை இருப்பதையும் பார்த்தவளுக்கு எவ்வாறு ரியாக்ட் செய்வது என்றே
புரியவில்லை.
ஏனெனில்
அவள் அதில் வைத்திருந்தது வெறும் இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்கள் மற்றும் அவளது
போன் மற்றும் ஏ.டி.எம் கார்ட் முதலியவை அதில் இல்லை.
ஆனால்
புதுபோன், சார்ஜர் மற்றும் பல ஆயிரம் ரூபாய் தாள்கள் ஆகியவற்றை கண்டவளுக்கு இது
தீரனின் செயல்தான் என்று உரைத்தது. வேகமாக அந்த போனை ஆன்செய்த மறுநிமிடம் நியூ
மெசேஜ் வந்ததற்கான இண்டிகேட்டர் அதில் வந்ததை பார்த்தவள் மெசேஜ் ஓபன் செய்ததும்
அதில் யாழி பெர்சனல் போன் நம்பர் என்று ஒருநம்பர் குறிக்கப்பட்டிருந்தது.
வேகமாக
காண்டாக்ட்ஸ் எடுத்து பார்த்தவளுக்கு தனது போனில் இருந்த காண்டாக்ட்ஸ் நம்பர் அனைத்தும்
அதில் பதியப்படிருந்ததை பார்த்தவள் படபடப்பானாள். வேகமாக அந்த போனிலேயே தனது
நம்பரை டயல் செய்தால் ஆனால் ரிங் போய்க்கொண்டே இருந்தது ஆனால் யாரும் அதை அட்டன்
செய்யவில்லை.
முழு ரிங்
போய் கட்டான பின்பு அதில் மீண்டும் மெசேஜ் வந்ததை கவனித்தவள். அந்த இரண்டு மெசேஜ்களும்
தனது போனில் இருந்துதான் வந்திருப்பதே அவள் புத்தியில் உரைத்தது.
வேகமாக மெசேஜ்
ஓபன் செய்து பார்த்ததும் அதில் “Meet soon” என்று
இருந்ததை பார்த்ததும் அவனையா? திரும்பவுமா? என்ற
பயம் எழுந்தது யாழினிக்கு.
----தொடரும்---

No comments:
Post a Comment