anti - piracy

Post Page Advertisement [Top]

                                                                     

------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்-13

 

 தீரன் அவளை காரில் இழுத்துபோட்டு சென்ற விதத்தையே அவளால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அவன் அய்யாவின் மகன்..., தன்னை மீடியேட்டராக வைத்து அவனின் தந்தையை சந்திப்பதற்காக பேசவந்ததை பார்த்து தவறுதலாக புரிந்துக்கொண்டேன் நான். அதனால் பயந்து ஊரை கூட்ட முனைந்ததனால் தன்னை அவன் காரினுள் இழுத்துக்கொண்டு போனான் என்ற எண்ணத்தை ஞாபக்கத்திற்கு கொண்டுவந்து நடந்ததை சகித்துக்கொள்ள முயன்றாள்.

 

இருப்பினும் அதனைத் தொடர்ந்து அவன் தன் வாயை அடைக்க கொடுத்த முத்தத்தால் உணர்ந்த முதல் ஆண் ஸ்பரிசத்தை நினைத்து வெட்கம் உண்டானது. தனது வெட்கத்தை நினைத்து அவளின் மேலேயே கோபமும் உண்டானது.

 

அவளின் தொலைந்த பர்சினுள் இருந்த புது மொபைலையும் ஆயிரக்கணக்கில் பணத்தையும் பார்த்து மேலும் மிரண்டுப்போயிருந்த யாழிசை மீட் சூன்என்ற வார்த்தையில் உடலெல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

 

அவளின் படபடப்பை பார்த்த சந்தியா “ஏய்! என்னடி ஆச்சு உனக்கு” என்று கேட்டாள்.

 

யாழிசை தன்னை இயல்பு போல காட்ட முயன்று அதில் தோற்றாள். ஆனால் உண்மையை அவளிடம் கூற தீரனின் வார்த்தையினால் பயந்தாள்.

 

எனவே “கொஞ்சம் வயித்துவலி. இதோட டான்ஸ் பிராக்டீஸ் செய்தது வேறு வலிய அதிகமாகிடுச்சு. மதியம் என்னால் ப்ராக்டீஸ் செய்ய முடியாது. நான் லாபியில் உங்களோடு பிராக்டீஸ் செய்ய வருகிறேனு சொல்லிட்டு வந்து ஓரமாய் உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்கிறேன். அப்போதான் நாளைகழித்து என்னால புரோகிராமில் நல்லா பெர்பார்ம் பண்ண முடியும். இப்போ கிளாசில் உட்கார்ந்து பாடமும் என்னால் படிக்க முடியாது.

 

“யாழி ரொம்ப முடியாவிட்டால், நீ ஆப்டர்நூன் லீவ் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி போய் நல்லா ரெஸ்ட் எடுடி. நீ இல்லாட்டி நம்ம டான்ஸ் ப்ரோகிராமே சொதப்பிடும் எங்களுக்குத்தான் ப்ராக்டீஸ் தேவை. நீ டைரக்டா இனி ஸ்டேஜில் பெர்பார்ம் செய்தால் போதும். முதலில் உன் இந்த மூன்றுநாள் பிரச்சனை நீ ரெஸ்டில் இருந்தாலே முடிவுக்கு வந்துடும்.

 

சந்தியா அவளை இப்போதே வீட்டிற்கு கிளம்பிப்போ என்று கூறியதுமே வீட்டுக்கு இப்போ போனால் தனியா அவுட் பஸ்ஸில் போகணுமே, காலேஜ் பஸ் என்றால் தீரமிகுந்தனை தவிர்த்துவிடலாம்’, என்று மனதினுள் நினைத்தவள்,

 

இல்ல சந்தியா நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் காலேஜ் பஸ்லயே போய்டுறேன்" என்று கூறிவிட்டு லஞ்ச் பாக்சை எடுத்துக்கொண்டு சாப்பிட சென்றாள் சந்தியாவுடன்.

 

என்றும் இல்லாதவகையில் யாழிசை மிகவும் அமைதியாக யோசனையுடனே இருப்பதை பார்த்துக்கொண்டிருந்த சந்தியாவிற்கு, யாழிசை ரொம்ப வித்தியாசமாக இருப்பதாக மனதில் பட்டது, ‘என்னவாக இருக்கும்? ஒருவேளை அந்த தீரமிகுந்தன் அவளிடம் வேறு எதுவும் பிரச்சனை செய்திருப்பானோ?’ என்ற நினைத்தாள்.

 

ஆனால் ‘சே...சே... வயிறு வலி ரொம்ப இருக்குதுபோல என்னிடம் வேறு எதுவும் பிரச்சனைனா சொல்லியிருப்பாளே!, என்னிடம் எதையும் மறைக்கமாட்டா,,,’ என்று எண்ணியபடி சாப்பிட்டு முடித்துவிட்டாள்.

 

யாழியைப் பார்த்தவள் “இன்னும் சாப்பிடாமல் அப்படியே வச்சுகிட்டிருக்க. ரொம்ப வயிறு வலிக்குதா? நீ சாப்பிட்டுக்கிட்டு இரு, நான் போய் உனக்கு ஒரு செவனப் வாங்கிட்டு வருகிறேன். அதக் குடிச்சா கொஞ்சம் வலிகேட்கும்” என்று எழுந்து சென்றாள்.

 

அப்பொழுது யாழிசை வைத்திருந்த மொபைல் அழைத்தது. புது எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் பயத்துடனே அதனை அட்டன் செய்தால் அவள்.

 

“மிஸ் யாழிசை?” என்ற அறிமுகமில்லாத குரலில் யோசனையுடன், “ம் நான்தான் நீங்க?” என்று கேட்டவளிடம்,

 

“நான் மிஸ்டர் தீரமிகுந்தனின் செக்ரட்ரி பேசுறேன். உங்க பர்ஸ் உங்கக்கிட்ட சேர்ந்துடுச்சு தானே? சாரி மேடம் அதில் இருந்த உங்க போனையும் ஏ.டி.எம் கார்டையும் உள்ள வைக்காம விட்டாச்சு. நீங்க காலேஜ் முடிந்ததும் உங்க காலேஜுக்கு பக்கத்தில இருக்குற காஃபி ஷாப்புக்கு வரமுடியுமா? வந்தால் அதை நான் உங்களிடம் ஒப்படச்சுடுவேன்.”

 

தயங்கிய யாழிசை, “சார் என் பர்ஸில புதுசா ஒரு போனும் ஆயிரக்கணக்கில் பமும் இருக்கு. அந்த போனில் என்னுடைய போன் மெமரியில் உள்ள எல்லா காண்டாக்டுகளும் பதியப்பட்டிருக்கு இதற்கு என்ன அர்த்தம்?

 

எனக்கு இதெல்லாம் தேவையேயில்ல. என்னுடையத மட்டும் தந்துடுங்க. இந்த மொபைலில் உள்ள காண்டாக்ட் நம்பர்ஸ் எல்லாத்தையும் உங்களின் கண் முன்னேயே டெலிட் செய்துட்டு இதுல இருக்கும் பணத்தையும் உங்கக்கிட்ட கொடுத்துடுறேன்” என்றாள் யாழிசை.

 

“மிஸ் யாழிசை! அந்த போனை எங்க பாஸ் உங்களுக்கு பிரசன்ட் பண்ணியிருக்கிறார். அதை நீங்க யூஸ் பண்ணனும்றது அவர் விரும்பம் அதனால உங்க பழைய போன் காண்டாக்ட்ஸ் எல்லாத்தையும் உங்களின் நியூ போனில் பதிஞ்சிட்டு பர்சினுள் பழையதை வைக்காமல் விட்டுட்டார். அந்த போனின் பவுச்சில உங்களோட ஏடிம் கார்ட் இருப்பதை இப்போதுதான் பாஸ் பார்த்தார். அதனால்தான் அதை உங்களிடம் ஒப்படைக்கச்சொல்லி என்கிட்டக் கொடுத்தார். பர்சை வாட்ச்மேனிடம் கொடுத்து உங்கக்கிட்ட கொடுக்க வந்தபோது சந்தேகத்தில் ஆயிரம் கேள்விகளில் என்னை கேட்டு திக்குமுக்காட வச்சுட்டார் வாச்மேன். அதனால் மறுபடியும் அவர்மூலமா உங்க ஏடிஎம் கார்ட் மற்றும் போனை கொடுக்க முடியாது. ப்ளீஸ், நீங்களே வந்து வாங்கிக்கோங்களேன் என்றான் மாதவன்.

 

யாழிசைக்கு கையில் இருந்த அந்த விலைவுயர்ந்த போனும் அதில் இருந்த ஆயிரக்கணக்கான பணத்தையும் எப்படியாவது அவனிடமே திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்ற உந்துதலிலும் தனது ஏடிம் கார்ட் மற்றும் மொபைலையும் வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்திலும் “சரி நான் காஃபி ஷாப்பிற்கு வரேன்” என்று சொல்லியவள் தோழி சந்தியாவிடம் தான் வீட்டிற்குப் போவதாகச் சொல்லிவிட்டு கல்லூரி விட்டு வெளியேறினாள்.

 

அவள் காஃபி ஷாப்பிற்குள் நுழையும் போதே அவளுடன் வந்து இணைந்து உள்நுழைந்தான் தீரன். சட்டென்று அவன் முகத்தை பார்த்ததும் அடையாளம் தெரியாதவகையில் அவன் அணிந்திருந்த புளூ ஜீன்ஸிற்கு பொருத்தமாக அதே கலர் கேப் கொண்டு முகத்தை மறைப்பது போன்றும், பெரிய சைஸ் கூலிங் கிளாஸ் கொண்டும் மீதியாக தெரியும் முகத்தையும் மறைக்கும் விதமாக அணிந்திருந்தான். புல்சிலீவ் வொயிட் பனியனுடன் காலில் விலை உயர்ந்த கேன்வாஸில் அரவம் எழுப்பாமல் தன்னை நெருங்கிவந்த தீரனை அந்த நிலையிலும் யாழிசை உணர்ந்துகொண்டாள்.

 

வந்தவன் இயல்பாக “ஹாய் யாழி பேபி. அந்த கார்னர் டேபிளுக்கு போயிடலாம்” என்றபடி அவளின் கையோடு தனது கையை பிணைக்க முயன்றான்.

 

அவன் அவ்வளவு உரிமையாக தன்னுடன் நெருங்கி நடக்க முயன்றதுமே மிரண்டுபோனவள், தன் கையேடு கை கோர்க்க அவன் முயன்றதும் “என்ன செய்றீங்க நீங்க?” என்று வெடுக்கென்று தனது கையை அவனிடம் இருந்து பறித்தவள் வேகமாக அவன் கூறிய டேபிளுக்கு போய் அமர்ந்தாள்.

 

அவளின் அந்த செயல் தீரனின் முகத்தில் புன்னகையை விதைத்தது. அவளின் பின்னாலேயே வந்தவன் அவளின் எதிரில் அமர்ந்தபடி “என்ன சாப்பிடுற?” என்று கேட்டதும்

 

“நான் ஒண்ணும் உங்கக் கூட சாப்பிட வரல. இந்தாங்க நீங்க என் பர்ஸில் வச்சது” என்று போன் மற்றும் கத்தையாக ரூபாய் நோட்டுகளை எடுத்து “இதையும் வாங்கிக்கோங்க” என்று அவனிடம் நீட்டினாள்.

 

அவன் அவள் நீட்டிய ரூபாய் நோட்டுக்களை வாங்கியவன். போனை அவளின் புறம் நகர்த்தி “எடுத்து பர்சினுள் வைத்துக்கொள் பேபி” என்றான். அப்பொழுது அவர்களிடம் வந்து நின்ற செர்வரிடம் “டூ கோல்ட் காபி” என்று ஆர்டர் கொடுத்தான்.

 

அவனின் நிதானமான அச்செயல் அவளை ஆத்திரம் கொள்ளச் செய்தது. “என்ன நெனச்சுகிட்டு இருக்கீங்க உங்க மனசுக்குள்ள?! இந்தளவு நீங்க என்கிட்ட மிஸ்பீகேவ் செய்தும் எதுவும் செய்யாம சும்மா இருககிறதை பார்த்து  என்னைய இளப்பமாக நினைச்சுட்டீங்களா?” என்றவளின் கோபத்தை சுவாரஷ்யத்துடன் வேடிக்கைப் பார்த்தவனிடம் இன்னும் கோபமாக

 

“நீங்க வானவராயர் ஐயாவோட மகன்ற ஆதாரத்தக் காட்டியதால மட்டும்தான் என்னால உங்களை அலட்சியபடுத்த முடியலை. ஏதோ ஒரு காரணத்தினால உங்களால ஐயாவை நேராப்போய் பார்க்க முடியலை, அப்படி பார்த்தால் ஐயாவுக்கு பிரச்சனை வரும்னு நீங்க சொல்லியதை அலட்சியப்படுத்த முடியாம எங்க வானவராயர் ஐயாவுக்காக பொறுமையா இருக்கேன்.

 

நீங்க சொல்றதோட உண்மைத் தன்மையைப்பத்தி விசாரிக்காம ஏதாவது செய்து, அது என்னையும் என் குடும்பத்தையும் இத்தனை காலமா ஆதரிக்கிற ஐயாவுக்கு எதாவது ஆபத்தா மாறிவிடுமோன்ற காரணத்துக்காக பல்லை கடிச்சுக்கிட்டு பொறுமையாய் இருக்கேன்.

 

இப்படி ரூபாய் கொடுத்து, போன் வாங்கிக்கொடுத்து என்னைய விலைக்கு வாங்கிடலாம்னும்.... என்னை வேறமாதிரி எண்ணத்தோட நெருங்கலாம்னும்,,,, நீங்க திரும்ப திரும்ப இதுபோல் செய்தீங்க,,,, நான் பொல்லாதவளாக ஆகிடுவேன்” என்று படபடவென பொரிந்தாள்.

 

“ம்கூம் நோ பேபி, என்கிட்ட இப்படி கோபமாக பேசக்கூடாது” என்றபடி அவனின் வேலட்டினுள் இருந்து அவளின் ஏ.டி.எம் கார்டை எடுத்து அவளிடம் நீட்டினான்.

 

“என்ன? இதை மட்டும் கொடுக்குறீங்க! என் போன் எங்க?” என்று கேட்டபடி அதனை எடுத்து தன் பர்சினுள் வைத்தபடி கேட்டாள் யாழிசை.

 

அவளின் முன் அவன் நகட்டி வைத்த அந்த கேலக்சி s8யை காட்டி “இதோ உன் போன்” என்றான்.

 

 “இது ஒண்ணும் என் போன் இல்ல. ப்ளீஸ் விளையாடாம என் போனை கொடுங்க நான் இங்க உங்களோடு உட்கார்ந்து இருக்கிறத தெரிந்தவங்க யாராவது பார்த்துட்டால் என்னைய தப்பா நினைப்பாங்க”

 

என்றபடி அவன் தன்னை ரசித்துக்கொண்டு பேசுவதை கண்டு அதில் இருந்து தப்பிக்க எழுந்து போக முடியாமல் தான் வந்த நோக்கம் நிறைவேறாமல் அசெளகரியமாக அமர்ந்திருந்தாள்.

 

“அதுக்குள்ள போகணும்னு அவசரப்பட்டால் எப்படி? இன்னும் நான் பேசவந்ததை பேசி முடிக்கவில்லையே. உனக்கு உன் பழைய போன் வேணும் அவ்வளவுதானே!?

 

என்றவன் அவளின் முன்னே அவளின் போனை எடுத்தவன் அவளின் புறம் நகர்த்தி “எடுத்துக்கோ” என்றான்.

 

"என் போனை  எடுத்துக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி என் பர்சில் நீங்க வச்ச போனை நீங்க எடுத்துகோங்க என்று அவன் தன பக்கம் நகர்த்திய அந்த புது போனை அவனின் புறம் நகர்த்தி வைத்தாள். 

 

அவள் கையில் இருந்த பர்சை வெடுக்கென பறித்தவன் அந்த ரூபாய் நோட்டுகளையும் இரண்டு மொபைல்களையும் அதனுள் வைக்க முயன்றவன் இடம் பற்றாகுறையால் ரூபாய் தாள்களை அவனின் வேலட்டினுள் அடுக்கியவன் இப்பொழுது கிடைத்த இடைவெளியில் இரண்டு மொபைலையும் அதில் திணித்து ஜிப் போட்டு அவளிடம் நீட்டினான்.

 

அவன் தன்னிடம் நீட்டிய அவளின் பர்சை யோசனையுடன் வாங்கித் திறந்து அதில் இருந்த தனது மொபைலை எடுத்துபார்த்தவள் அவன் தந்த மொபைலை எடுக்க முயன்றதும், என் அப்பா விஷயமா நான் அந்த போனில் தான் பேசுவேன். வெளியில் எடுக்காத என்று கடுப்போடு சொன்னான். 


தன்னையே பார்த்துகொண்டிருந்த தீரனை பார்த்ததும் எரிச்சலுடன் “டைம் ஆகுது. காலேஜ் விட்டு நான் எப்போதும் போகும் நேரத்திற்கு வீட்டிற்கு போகணும். இல்லாட்டி பாட்டி பயந்துடுவாங்க.... இன்னும் அரை மணி நேரத்தில நான் பஸ் ஏறிடணும்.” என்றபடி அவன் கொடுத்த போனை பர்சினுள் இருந்து உருவி எடுக்க முயன்றபோது...

 

“அப்போ நான் உனக்கு கொடுத்தது எதுவும் வேண்டாம் அப்படித்தானே?” என்றான் தீரன்.

 

“விடிய விடிய ராமாயணம் கேட்டும் சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொன்ன கதையால்ல இருக்கு நீங்க பேசுறது. நீங்க என் பர்ஸில் வைத்திருக்குற மொபைலை ரீபுட் செய்துட்டு உங்கக்கிட்ட கொடுக்கிறேன்” என்றாள்.

 

“அப்போ அதுக்கு முன்னாடி நீ ஒரு வேலை பண்ணனும்” என்றவன் செக்புக்கை எடுத்து அதை நிரப்பி இந்தா இதில ஒரு சைன் பண்ணிக் கொடு” என்று அவளிடம் நீட்டினான்.

 

அதை வாங்கி பார்த்தவள் அதில் டூ குரோர்ஸ்க்கு அவள் செக் கொடுப்பதாக நிரப்பப்பட்டு இருப்பதை பார்த்தவள்,

 

“என்ன திரும்பத்திரும்ப என்கிட்ட விளையடுறீங்களா?” என் அக்கெளண்டில் மொத்தமே சிக்ஸ்தௌசன்ட் எயிட் ஹன்ட்ரெட் ரூபீஸ் தான் இருக்கு. என்கிட்டப் போய் கோடிக்கணக்கான ரூபாய்க்கு செக்கில் சைன் செய்யச் சொல்றீங்க? நீங்க என்ன லூசா?” என்றாள்.

 

“என்ன சொன்ன? உன் அக்கெளண்டில் வெறும் ஆயிரங்கள்ல மட்டும்தான் பணம் இருக்குதா? அதில் குரோர் கணக்கில் பணம் இருக்குதுன்னு நான் சொல்கிறேன். யார் சொல்றது சரின்னு பார்ப்போமா?” என்றவன் அவளது பர்ஸை பிடிங்கி அதில் இருந்து போனை எடுத்து இயல்பாக அவளின் அக்கெளண்ட் இருக்கும் பேங்கின் பேலன்ஸ் பார்ப்பதற்கு என்று கொடுக்கப்பட்ட நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுத்து, அவளிடம் அதில் வந்த மெசேஜ்ஜை காண்பித்தான்.

 

அவள் அக்கவுண்டில் பல கோடி ரூபாய் பாலன்ஸ் இருப்பதாக பார்த்ததும் அவளுக்கு தலையே சுற்றியது. “இது எப்படி சாத்தியம்? இத நான் நம்ப மாட்டேன். நீங்கள் என்னைய ஏமாத்துறதுக்கு ஏதோ செய்றீங்க.

 

அவள் அசந்து போன அந்த நொடியில் அவளின் மொபைலை தன்னிடம் பத்திரப்படுத்திக்கொண்ட தீரன், “லுக் பேபி, உன் அக்கெளண்டில் பணத்தை போட்டதே நான்தான். உனக்கு சந்தேகம் இருந்தால் அதை உன் கண் முன்னாலேயே இன்னும் ஒருதடவை புரூப் பண்றேன்” என்றவன் அவளின் பர்சை எடுத்து அதில் இருந்த ஏடிஎம் கார்டை எடுத்தவன் “ம்வா” என்று நேராக கவுண்டருக்கு போனான்.

 

கவுண்டரில் இருந்தவரிடம், “பில் பே பண்ணனும் கார்ட் அக்சப்ட் செய்வீங்க தானே?” என்று கேட்டதும், “சுயூர் சார் என்றவர் கார்ட் சுவைப் செய்ய அவன்பக்கம் சுவைப் மெசினை திருப்பி வைத்தார்.

 

அப்பொழுது அவளது கார்டை அவளிடம் கேட்காமலேயே அவளின் கையில் இருந்த பர்சை பிடுங்கி எடுத்து அதன் பாஸ்வேர்டை யூஸ் செய்து சுவைப் செய்தான்.

 

பின்பு “ம் வா போலாம்” என்று இரண்டு எட்டு வைத்தான் அவள் அசையாமல் அங்கேயே நின்றுவிட்டதை இரண்டு எட்டு முன் வைத்தவன் உணர்ந்து திரும்பி அவளை பார்த்தான்.

 

“புரூப் பண்றேன்னு சொனீங்க?” என்றாள் யாழி.

 

திரும்பவும் அவளின் அருகில் வந்தவன் “உன் அக்கெளண்டில இருந்து இப்போ நான் பில் பே செய்ததால் அமௌவுன்ட் ரெடியூஸ் ஆனதுக்கு உன் அக்கவுண்டில் இருக்கும் பேலன்ஸ் அமௌவுண்டும் பற்றிய மெசேஜ் வரும் இல்லையா அதப்பாரு” என்று காட்டினான்,

 

பார்த்து கண்கள் விரிய நின்றவளிடம் “என்னால ரொம்ப நேரம் இங்கே இருக்க முடியாது” என்றபடி அவளின் சம்மதம் இல்லாமலேயே அவளின் தோளில் கை போட்டு தன்னுடன் இழுத்துச்சென்றான்.

 

பார்ப்பதற்கு அவளை அவன் சாதாரணமாக பிடித்து கூப்பிட்டுப் போவதாக போல் இருந்தாலும், அவன் பிடியோ இரும்பாக இருந்தது. இவ்வளவு அருகாமையில் அவனின் கைவளைவில் பொது இடத்தில் அவன் தன்னை நடத்தும் விதத்திலும்,,,, மேலும் அவன் தன் அக்கெளண்டில் இருப்பதாக கூறிய பெரும் தொகையும் நினைத்து ‘இது எதில் கொண்டுபோய் முடியுமோ?!’ என்று பெரிதும் யாழிசை கலவரப்பட்டு இருந்தாள். யாழிசையின் மூளை என்ன செய்வது என்று தெரியாமல் வேலை நிறுத்தம் செய்துவிட்டது.

 

படிக்கு வந்தவன் அவளுடன் இறங்கவும் வாசலில் ரெடியாக இருந்த காரில் பின் கதவை திறந்தவன் அவளை அதில் ஏற்றி பின் தானும் அவளுடன் ஏறி அமர்ந்தான் தீரன்.

 

“என்னோட காரை ஏன் எடுத்து வரல மேன்?” என்று மாதவனிடம் கேட்டதும். .

 

பாஸ் உங்களை இங்கேயே தேடி வந்துட்டாங்க. உங்க காரை அடையாளம் வச்சு தேடி வந்திருக்காங்கனு நினைக்கிறேன். அதனால் தான் நான் என் காரை எடுத்துட்டு உங்களை உடனே வரச்சொல்லி அவசரப்படுத்தினேன்” என்றான்.

 

“யாழிசைக்கூட நான் இருக்கிறதை யாரும் பார்க்கலைதானே...?! யாழி பேபி அவங்க கண்ணில் பட்டுடக் கூடாது” என்றான்.

 

அவளோ “முதல்ல எனக்கு பதில் சொல்லுங்க. என்னைய சுற்றி என்னதான் நடக்குது?!” என்று கேட்டாள்.

 

தீரன் அவளின் புறம் திரும்பி “டோன்ட் பியர் பேபி” என்றவன் திரும்பவும் அவளிடம் அந்த செக்கை நீட்டி “இதில் சைன் போட்டுடு” என்றான்.

 

யாழிசை கலவரமாக தீரனை பார்த்ததும் அப்படி பார்க்காத. நான் உன் அக்கெளண்டில் போட்ட அமௌவுண்டை நீ எனக்கு செக் போட்டு கொடுத்துட்டா பிரச்சனை சால்வ் ஆகிடும்ல. இதோ பார் உன் அக்கெளண்டில இன்னைக்கு காலையில் தான் நான் அமௌவுண்டை டிரான்ஸ்வர் பண்ணினேன்.

 

காஃபி ஷாப்பில் பில் பே பண்ணிட்டு அமௌண்ட் ரெடியூஸ் ஆனதிற்கும் மீதம் உன் அக்கவுண்டில் உள்ள பாலன்ஸ் அமௌவுன்ட் பற்றிய மெசேஜ் வந்திருக்கு பார், பார்த்திட்டு நான் சொல்றதை அக்சப்ட் செய்வதா? வேண்டாமானு யோசி” என்றான் தீரன்.

 

தீரனிடமிருந்த தனது மொபைலை வேகமாக வாங்கியவள் அதில் இருந்த மெசேஜ்ஜை ஓபன் செய்து பார்த்தாள் அதன் இருப்புத்தொகை இரண்டு கோடியே ஆறாயிரத்து ஐநூறு என்று இருந்தது. யாழிசையால் இன்னும் நம்ப முடியவில்லை “ஒரு நிமிடம் காரை நிறுத்துங்க” என்று கத்தினாள்.

 

மாதவன், கிரீச். என்று காரை நிறுத்தியதும் யாழிசை அவள் அமர்ந்திருந்த பக்கத்தில் இருந்த காரின் கதவைத் திறக்க முயன்றாள் ஆனால் அது லாக்காகி இருந்ததால் ஓபன் ஆகவில்லை.

 

“நான் நினைச்சால்தான் நீ காரைவிட்டு இறங்கமுடியும்” அவளின் தவிப்பை சுவாரஸ்யத்துடன் வேடிக்கை பார்த்தபடி கூறினான் தீரன்.

 

கார் நின்றிருந்த இடத்தின் அருகில் இருந்த ஏடிஎம் மெசின் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டிய யாழிசை “நீங்களும் என்கூடயே அங்க வாங்க.... நானு என் கார்டை யூஸ் பண்ணி அதில் பேலன்ஸ் செக் செய்யணும்” என்றாள்.

 

“ஓகே...” என்ற தீரன் அவன் அமர்ந்திருந்த பக்கம் உள்ள கதவை ஓபன் செய்து இறங்கியவன் அவள் இறங்க கை நீட்டினான் ஆனால் அவள் அதனை அலட்சியப்படுத்தி இறங்க முயன்றாள்.

 

தீரனோ அவள் இறங்கிய மறுநிமிடம் அவள் தோளில் கைபோட போகவும், முறைத்து பார்த்து விலகி நடந்தவளின் பின்னாலேயே சென்ற தீரனின் உதட்டில் புன்னகை அரும்பியது.

 

உள்ளே சென்றதும் தீரன் கார்டை அவளிடம் கொடுத்தான். அவள் கார்ட் யூஸ் செய்து பேலன்ஸ் பார்த்த மறுநிமிடம் அரண்டே போனாள். ஏனெனில் அதிலும் பாலன்ஸ் இரண்டு கோடியே ஆறாயிரத்து ஐநூறு இருப்பதாகவே காட்டியது.

 

எங்க காட்டு நானும் பார்க்கிறேன்... என்றவன் அவளின் ஏ.டி. எம் கார்டையும் தன் வசம் வைத்துக்கொண்டான். அதை கவனிக்காமல் அவளோ... என்ன நடக்குது என்ற யோசனையானாள்....

 

நடுக்கத்துடன் தீரனை ஏறிட்டு பார்த்த யாழிசையின் கையோடு கை கோர்த்த தீரன், அவளை காருக்கு கூட்டிக்கொண்டு வந்தான்.

 

இயந்திரமாக அவனுடன் வந்தவளை முன்பு போலவே காரின் பின் டோரை திறந்து உள்ளே தள்ளி அமரச்செய்தவன் அருகில் அவனும் ஏறி அமர்ந்ததும் கார் செல்ல ஆரம்பித்தது.

 

யாழிசை, “கொடுங்க அந்த செக்கை என்று அவனிடம் இருந்து வாங்கியவள் வேகமாக தனது கையெழுத்தை அதில் போட்டு இந்தாங்க. நீங்க என் அக்கவுண்டில் போட்ட பணத்திற்கான செக். இனி இதேபோல் என்னிடம் பணத்தை காட்டி விளையாட நினைக்காதீங்க” என்றாள்.

 

அவள் கனவிலும் நினைத்துப்பார்த்திராத பணத்தை அவளின் கைகளில் கொடுத்தால் ஆசையாக பார்க்காமல் அதிலிருந்து விலகவே நினைக்கும் அவளின் குணம் அவனை கவர்ந்தது.

 

இருந்தாலும் அவளின் அச்சத்தைக் கண்டு இனி அவளை விட்டுவிட முடியாதபடி அவளையும் தன் ஆட்டத்திற்குள் இழுத்துவிட்டாகி விட்டது. இனி அவளை என்னுடன் வைத்து காப்பதுதான் இதற்கு தீர்வு என்று நினைத்தான் தீரன்.

 

மேலும் தன்னை அவள் நெருங்க வேண்டுமானால் இதுபோன்ற அதிரடியான செயல்கள் உதவாது. அது அவளை என்னிடம் இருந்து அச்சப்பட்டு தள்ளியே நிறுத்தும். இனி அவளை வைத்து தான் ஆடும் ஆட்டத்தை அவள் அறியாமலே செய்ய வேண்டும் என முடிவெடுத்தான்.

 

எனவே தீரன், “சாரி பேபி உன் பேங்க் அக்கெளண்டில் நான் மிஸ் பீகேவ் செய்தது, தப்புத்தான். ஸாரி, நீ உன் பர்சை என் காரில் விட்டுடுட்டுப் போனதும் அதில் உள்ள உன் மொபைலை பார்த்தேன். அதென்ன ஏடிஎம் பாஸ்வேர்டை கூட உன் காட்டோட கவர்லயே எழுதி வச்சிருக்கிற?! அதெல்லாம் எவ்வளவு கான்பிடன்சியலாய் வச்சிருக்கணும்ங்கிறதை உனக்கு புரியவைக்குறதுக்கு இப்படி பண்ணினேன்.

 

உன்னைய வச்சு, என் அம்மா என்கிட்ட கொடுத்ததை என் டாட் அதுதான் உங்க வானவராயர் ஐயாக்கிட்ட சேர்க்கணும்ல, அவங்க குடும்பப் பாரம்பரியத்தின் அடையாளமாய் இருந்த, மிகவும் மதிப்பு வாய்ந்த ஆண்டிக் டைமன்ட் நகையை உன் மூலமே அவர்களிடம் ஒப்படைக்கணும்.

 

உன்னை நான் அதனால கொஞ்சம் டெஸ்ட் பண்ணினேன். நீ அடுத்தவர்களின் பணத்தை தொடக்கூட மாட்டனு இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். இனி உன் மூலம் நான் அதை அவர்கிட்ட சேர்க்குற ஐடியாவ தைரியமாக செய்யலாம்”

 

என்றவன் மனதினுள் அவளை வைத்து தமிழ்நாட்டில் கேம் பிளே பண்ண திட்டம் தீட்டிவிட்டான் தீரன்.

 

அவன் அவ்வாறு சொல்லியதும், “அப்போ உங்களுக்கு என்னை பார்த்ததும் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படுறவ போல தெரியுதா?” என்று கோபமாக கேட்டாள்.

 

“எனக்கு உன்னையப் பார்த்ததும் அப்படியெல்லாம் தோணலைதான். ஆனாலும் வெளித்தோற்றத்த வச்சு ஒருவரை கணிக்க முடியாதுனு வாழ்க்கை எனக்கு கத்துக் கொடுத்துருக்கு... அதனாலேயே உன்னய டெஸ்ட் பண்ணிப் பார்க்க வேண்டியதா போச்சு.. அதனால வேற வழி இல்லாம அதைச் செஞ்சேன். உன்னைய முதல் முதலில் பார்த்தப்போ நீ எனக்குள்ள தாக்கத்த ஏற்படுத்திட்ட என்பது மறுக்கமுடியாத உண்மை.” என்றவன், அவள் அறைந்த கன்னத்தை தடவியபடி கூறினான்.

 

அதோட நீ கிளாசிக்கல் டான்சர்னு தெரிந்ததும் எனக்குள் உன் மேல உள்ள ஆர்வம் இன்னும் அதிகமாச்சு. ஏன்னா என் மாம் ஒரு ப்ரோபசனல் கிளாசிக்கல் டான்ஸர்.

 

அதையெல்லாம் வெறும் அட்ராக்ஸன் தான்னு உதறித்தள்ளிய நேரத்தில என் அப்பாவை நான் தேடிவந்த இடத்தில அவரின் குடும்பத்தில் நீயும் ஒருத்தியாய் இருப்பதை கண்டதும் ஏனோ என்னுள் உன்மேல் உள்ள ஈர்ப்பு அதிகமாகிடுச்சு.

 

கடைசியாக நீ கனவிலும் நினைத்துப் பார்த்திராத பணத்தை உன் கைகளில் நான் கொடுத்தேன். அதை துளியும் ஆசையாய் பார்க்காம இதோ என்னிடமே திருப்பி கொடுத்துட்ட” தன்கையில் வைத்திருந்த செக்கை காண்பித்தான்.

 

“இதிலிருந்து உன் குணம் என்னை மொத்தமாக உன்கிட்ட சாச்சிடுச்சு யாழிபேபி, ஐ.லவ்.யூ. கூடிய விரைவில் எனக்கான உன் பதிலை எதிர்பார்கிறேன்” என்று கூறினான் தீரன்.

 

யாழிசைக்கு அவன் அவ்வாறு கூறியதும் படபடப்பாக ஆகிவிட்டது. அவள் டென்சனாவதை பார்த்த தீரன் “ரிலாக்ஸ் பேபி” என்றவன் அவளின் கரம் பிடித்து அழுத்திவிட்டான்.

 

அப்பொழுது அவளை காலையில் காரில் ஏற்றிய இடத்திலேயே இறக்கிவிட கார் நின்றது .கார் நின்றதும் வேகமாக கதவைத்திறந்து இறங்கியவள், அவளின் மொபைலை இன்னும் வாங்கவில்லை என்பதனை உணர்ந்து திரும்பி அதை கேட்க நினைக்கும் போது கார் இருந்தபக்கம் யாரோ வரும் அரவம் தெரிந்ததும் வாங்காமலேயே ஓடிவிட்டாள்.

 

தீரன் வேண்டுமென்றேதான் அவளின் மொபைலை அவளிடம் கொடுக்கவில்லை. அவளின் கையெழுத்து அவனுக்கு தேவையாக இருந்தது. இதோ அதனையும் வாங்கியாச்சு. அதனை வைத்து அதேபோன்ற பல கையெழுத்தை இட்டு அவளுக்குத் தெரியாமலேயே அவளை பலகோடிகளின் அதிபதியாக்கப் போகிறான். அதனால் பல அதிர்ச்சிகளையும் அனர்த்தங்களையும் யாழிசை சந்திக்கப் போவதை பேதை இப்போது அறியவில்லை.

 

வீட்டிற்கு வந்த யாழிசைக்கு தூக்கம் தொலைந்து போனது. தீரன் அவளின் மனதினுள் சலனத்தை விதைத்திருந்தான். அதனை உணர்ந்த யாழிசை ‘நானா இப்படி தடுமாறுவது?! ம்கூம் நான் ஒன்றும் அவ்வளவு பலவீனமானவள் கிடையாது. அவனை இனி சந்திக்காமல் அவனிடம் இனி மாட்டாமல் இருந்துவிட்டால் நான் அவனை மறந்துடுவேன் என்று அவளுக்குள்ளேயே அவள் கூறிக்கொண்டாள்.

 

எனவே இனி தனியாக எங்கும் செல்லக்கூடாது என்றும் தெரியாத நம்பரிலிருந்து போன் வந்தால் அட்டன் செய்யக்கூடாது என்றும் அவனின் நினைவு வரும்போதெல்லாம் மனதினுள் சஷ்டிகவசத்தை கூறி அவனின் நினைவுகளை விரட்டவேண்டும் என்று முடிவெடுத்தாள் யாழிசை.

 

மறுநாள் காலை, யாழிசை தனது காலேஜ் பஸ் ஸ்டாப்பிற்கு தன்னை சைக்கிளில் கூட்டிக்கொண்டு போய் இறக்கிவிடச் சொல்லி தன் அப்பாவை கூப்பிட்டதும் அவரும் சட்டையை மாற்றி கொண்டு கிளம்புவதை பார்த்த ருக்குமணி பாட்டி,

 

தனது மகன் கணேசபிள்ளையிடம் “உனக்கு என்ன வயசு திரும்புதா? அவ சொல்றான்னு சைக்கிளில் பின்னால் வச்சுகிட்டு பஸ் ஏத்திவிடவா போற?.இத்தனை நாள் அவ ஆடாத ஆட்டத்தையா புதுசா நேத்து உன் மகள் ஆடிட்டா? அதுதான் அவ எட்டு வயசில இருந்து ஆடிட்டுத்தானே இருக்கா. இப்போ என்னமோ புதுசா ஆடி கால் வலிக்குற மாதிரி பம்மாத்து பண்ணிக்கிட்டு, பஸ் ஸ்டாண்டில் மகாராணிய சைக்கிளில் ஏத்திட்டுப்போய் இறக்கணும்னு கொஞ்சம் கூட புல்லரிக்காம வயசான காலத்துல உன்னை டபிள்ஸ் ஏத்தி சைக்கிள்ல விடச்சொல்கிறா.... நீயும் சட்டைய மாத்திட்டு கிளம்புற?” என்று தன் மகனையும் பேத்தியையும் வசைபாடினாள்.

 

அவர் அவ்வாறு கூறியதும், “ஏய் கிழவி, யாரை பார்த்து வயசாகிடுச்சுன்னு சொல்ற? என் அப்பாவை பார்த்தா உனக்கு வயசானவர் மாதிரியா தெரியுது? தலையில் கொஞ்சம் நரை முடி இருக்கிறத பார்த்துட்டு என் அப்பாவ வயசானவர்னு நீ எப்படி முடிவெடுக்கலாம்? அது இளநரை” என்று தன் பாட்டியுடன் மல்லுக்கு நின்றாள்.

 

அவள் அவ்வாறு சொன்னதும், “வாடி, என் சீம சித்ராங்கி, உன் அப்பனுக்கு இப்பத்தான் இளமை திரும்புது நீ ஒருவயசு பாப்பா! அதனால உன்னை தூக்கிட்டு சுத்தசொல்லுவ. என் மகனை உன் கொடுமையில் இருந்து காப்பாத்த நான் பேசுனா என்னையே என் புள்ளைக்கு எதிரா பேசுனதா திருப்பி விடுற. ஆமா! நான் தெரியாமத்தான் கேட்கிறேன், உனக்கு உண்மையாவே கால் வலியா? அல்லது தனியா போறதுக்கு பயந்துகிட்டு அவன துணைக்கு கூப்பிடுறயா?” என்றதும் திருதிருவென முழித்தாள்.

 

“இத்தன நாளா தனியா போன பாதையில இப்பமட்டும் போறதுக்கு என்ன பயம் உனக்கு? எதுனாலும் உண்மைய சொல்லு பாப்பா நானும் இரண்டு நாளா உன்னை பார்த்துக்கிட்டுதான் இருக்கிறேன், ஏதோ அரண்ட மாதிரி தெரியிற” என்று கேட்டாள் ருக்மணி பாட்டி.

 

அவர் அவ்வாறு கேட்டதும் நான் எதுக்கோ பயந்து, அப்பாவ என் கூட கூப்பிட்டுப்போறேனு இந்த ருக்கு மோப்பம் புடிச்சுடுச்சே?! பாட்டிக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சுது நம்மை இனி காலேஜுக்கே போக விடாது என்ன செய்யலாம்? என யோசித்தாள்.


---தொடரும்---

 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib