அத்தியாயம்-14
தீரன் நேற்று இரவு தங்கியிருந்த ரடிஸ்சன் புளூ ஹோட்டல் அறையில் அமைச்சர் ரங்கராஜன் உடன் அமர்ந்திருந்தான்.
“தம்பி
நீங்க சொன்னமாதிரி தலைவரிடம் பேசிட்டேன், முதலில் யோசிச்ச தலைவர் இன்னும் ஆறு
மாசத்தில தேர்தல் வரப்போகுது இந்த நேரத்தில் பிரச்சனையில் மாட்டிக்கிடவானு யோசிச்சாரு.
நான் தான் தேர்தல் செலவுக்கு கணிசமா ஒரு தொகைய இந்த ப்ராஜெக்ட் அப்ரூவல் செஞ்சா உங்க
சி.என்.ஜி கம்பெனிக்கிட்ட வாங்கித்தாரேனு சொல்லி ஓரளவு சம்மதிக்க வச்சிருக்கேன்.
அதோட ஒரு
பெரிய தொகை உங்க மூலமா கிடைச்சா தேர்தல் உறுதிமொழிகளில இலவசமா லக்சூரியஸ்
பொருட்களை கொடுப்பதா அறிக்கை கொடுத்துட்டால் மக்களோட கவனம் இலவசம்ன்ற மாயைமேல திரும்பிடும்னு
சொன்னேன்.
நான்
பேசுனதை மனசில வச்சுத்தான் உங்களின் சி.என்.ஜி நிறுவனத்தோட கைகோர்க்க சம்மதிக்கிற
நிலைமைக்கு வந்திருக்கார் தலைவர். பின்ன
தேர்தல் செலவுக்கு கணிசமான தொகை கிடைக்கும்னு சொல்லவும் தலைவர் ஒத்துக்கிட்டுத்தானே
ஆகணும்.
அதனால்தான்
உங்ககிட்ட பேசவந்தேன். எத்தனை “சி” தருவீங்கனு தலைவர் கேட்டு கன்பார்ம் செய்யச்
சொன்னர்.
இதெல்லாம்
ஆறப்போடக்கூடாதுல்ல, அதுதான் சட்டு புட்டுன்னு பேசி
முடிக்க உங்களை பார்க்க கிளம்பி வந்துட்டேன். இங்க வர்றதுக்கு முன்னால
நீங்க வேலை ஆரம்பிகிறதுக்கு ஆக்கிரமிக்கச் சொன்ன லேண்ட் எல்லாத்தையும்
கையகப்படுத்துறதுக்கு இடைஞ்சல் தருகிற ஆள்கள்னு சந்தேகப்படக் கூடியவங்களை லிஸ்ட்
எடுக்க ஆட்களை அனுப்பியிருக்கேன்” .ரங்கராஜன் டீல் பேசியதும் அவர்
எதிர்பார்த்ததுக்கும் மேலேயே பணத்தை தருவதாக தீரன் சொன்னதால்
“ரொம்ப சந்தோசம்
தம்பி சக்ஸஸ்புல்லா முடிச்சுடலாம். அப்படியே
எனக்கும் தனியா கமிஷன் தந்துட்டா நல்லது. என்றபொழுது அவரின் மொபைல் ஒலி
எழுப்பியது. அதனை அட்டன் செய்த ரங்கராஜன்
“ம்ஆமா
இங்கயே வந்துட்டயா?. இந்த வேகம்தான் மாரியப்பா உன்கிட்ட எனக்கு பிடிச்சது.
ஒருநிமிஷம் லைன்ல இரு” என்றவர்,
தம்பி
நான் விசாரிக்க அனுப்புன ஆள் விவரத்தோட இங்கேயே வந்துட்டான்போல போனில எதையும்
பேசவேண்டாம்னு சொல்லிட்டேன். உங்க முன்னாடியே அவன வச்சு பேசிட்டோம்ன்னா. பிறகு
செலவப்பத்தி நமக்குள்ள பிரச்சனை வராது. உங்களுக்கும் திருப்தியா இருக்கும்ல.”
“ஓ ஸ்யூர்.
இருங்க, செக்யூரிட்டி கைஸ்கிட்ட சொல்லணும்.
வந்திருப்பவனின் பேர் என்ன?”
“என்னோட
வலதுகைனு சொல்லுவான். அவன் பேரு மாரியப்பன்” எனப் பெருமையாக பேசினார் ரங்கராஜன்.
அவர்
கூறியதை செக்யூரிட்டியிடம் இன்பார்ம் செய்த பத்து நிமிடத்திலேயே ரூமின் கதவை
தட்டினான் மாரியப்பன். அவன் வருவதற்கு ரங்கராஜனே சென்று கதவை திறந்துவிட்டார்.
உள்ளே வந்த
மாரியப்பன் கைகட்டி அமைச்சரின் அருகில் நின்று கொண்டு “அண்ணே நீங்க சொன்னபடி
பக்கத்து ஏழு ஊரில நம்ம கச்சி பொறுப்பாளர்களை வைத்து நிலத்தை தொழிலுக்கு லீசுக்கு
எடுக்க சி.என்.ஜி நிறுவனம் வர்றதும்,
நிலத்துகாரங்ககிட்ட பேசி கொடுக்கச் சொல்லணும்னு சொன்னேன். அப்பதான்,
மேட்டுபாளயத்தில் இருக்கும் வானவராயர் அய்யாகிட்ட கேட்டுட்டுத்தான்
அங்கிருக்கும் விவசாய கூட்டமைப்பு மொத்தமா நிலத்த கொடுக்கிறத பத்தி எதுவும்
முடிவெடுக்க முடியும்னு சொல்றாங்க.
அதோட இப்போ
காலேஜ் பசங்க கொஞ்ச பேர் சேர்ந்து மாணவர் படைன்னு ஒன்று ஆரம்பிச்சிருக்காங்கலாம் ஊரில்
எந்த காரியம் நடந்தாலும் முன்னாடி வந்து நின்னு அவங்க தொந்தரவு செய்வாங்க.
அவங்களையும் விசயம் ஆரம்பிக்கிறதுக்கு முன்ன சரிகட்டணும்னு சொல்றாங்க.”
சொன்னதைக் கேட்டு யோசனையுடன் “அந்த பெருசு வானவராயரை சமாளிக்க காசுபணம் உதவாது.
வேற வழியில்தான் ஏதாவது செய்யணும். நீ எதோ மாணவர் படைன்னு சொல்றயே அதுல மிதுனன்ற
ஒரு பையன் இப்போ எதுனாலும் முன்னால நிக்கிறானே அவனும் இருக்குறானா?”
“ஆமாங்க
தலைவரே, அந்த பையன்தான்!”
அந்த
பையன் இப்போ என்ன செய்றான்? வேலைபார்க்குறானா படிக்கிறானா?”
“படிச்சுட்டுத்தான்
இருக்கான். அதுவும் நாம் சின்னம்மா படிக்கிற காலேஜ்ல தான் படிக்கிறான்”
“அடடே
நம்ம பொண்ணு படிக்கிற காலேஜிலையா படிக்கிறான்?” என்றவர் ஒரு முடிவு எடுத்ததுபோல,
“தம்பி நாளைக்கு
மறுநாள் என் பொண்ணு காலேஜ் நியூ பில்டிங் ஓபனிங் செய்துவைக்க நான் போறேன். அங்கதான்
இந்த பிரச்சனை பண்ற மிதுனன்றவனும் படிக்கிறான். நான் என்ன நினைகிறேனா நீங்களும்
என்கூட அந்த பங்சனில் கலந்துக்கிட்டு உங்க ப்ராஜெக்ட நல்லபடி செஞ்சு முடித்தால்
நாடு எந்த அளவு வளர்ச்சிபாதையில போகும்ற உங்க புள்ளிவிவரத்தை பேஸ் செய்து ஒரு
ஸ்பீச் கொடுங்க.
அந்த மிதுனனுக்கு
முந்தி நாம ஸ்டூடன்ஸ் கிட்ட முந்திக்கிட்டு நல்லபடியா பேசிட்டால், அந்த பையனால்
பசங்களை அவன் பின்னாடி திரட்ட கொஞ்சம் தினற ஆரம்பிச்சுவிடுவான்.
அந்த கேப்பில் அவனை என்ன செய்யலாம், எப்படி
மடக்கலாம்னு யோசித்து செய்துடலாம்” என்றார்.
இவ்வாறாக
அவனைப் பற்றியப் பேச்சுகள் போய்க்கொண்டிருப்பது தெரியாமல் மிதுனன் தனது காலேஜ்
பங்சனின் ஆர்கனைசிங் வேலையில் மும்முரமாக இத்தனை நாள் இருந்ததினால் அவன் தனது
ஏரியாவில் நடந்த சலசப்புகளை கவனிக்கவில்லை.
இன்று
காலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவனின் அருகில் அமர்ந்து இருந்த அவனின்
அப்பா, “மிதுனா நம்ம மேலக்காட்டு வயக்காட்டை 25 வருஷம் லீசுக்கு சி.என்.ஜின்ற
நிறுவனத்துக்கு கேட்டு வந்தாங்க. நம்ம நிலத்த மட்டும்ன்னு இல்ல மேலக்காட்டை சுத்தி
இருக்கிற 7 கிராமத்தோட நிலங்களை அந்த நிறுவனம் அரசாங்க உதவியோடு கைபத்த நடவடிக்க
எடுக்கிறதுபோல தெரியுது.
என்னமோப்பா
நம்ம மக்களுக்கு காலங்காலமா சோறு போட்ட நிலத்தை
எல்லாம் பொத்தல் போட்டு,
பூமிக்கடியில் இருந்து எண்ணெய் எடுக்கப்போறாங்களாம்! நம்ம ஊரில்
இருக்கிறவங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப் போறாங்கலாம். அதுக்காக ஃபோர்வே போடப்போறதா
சொல்லிக்கிடுறாங்க. விவசாய நிலத்தை மலடாக்காம
எதுசெய்தாலும் சரிதான்.”
அப்பாவின்
ஆதங்கத்தைக்கேட்டு யோசனையான மிதுனன் “நீங்க லீசுக்கு குடுக்க சம்மதிச்சு எதுலயும்
கையெழுத்து போட்டுட்டீங்கலாப்பா?”
‘இதுல என்னமோ
இருக்கு சரியில்லையே’ என்று மனதினுள் நினைத்தபடி கேட்டான்.
“இல்ல
மிதுனா! ஆனா ஊரைச்சுத்தி நிலத்தை வாங்க கவர்மெண்டோட சப்போர்ட்ல ஆளுங்கட்சி தரப்புல
எம்.எல்.ஏ மினிஸ்டர் ஒத்துழைப்போடு நிறுவனம் ஆக்ஷன் எடுக்கிறதுனால பொது ஜனங்க என்ன
செய்யமுடியும்?”
அதை பற்றிய
விசயங்களை ஆழமாக விசாரித்துவிட்டே இனி பேசணும் என்று முடிவெடுத்தவன்,
“அப்பா பொங்கல் சாட்டுறதுக்கு ஊர் பொதுக்கூட்டம் நாளைக்குதானே
கூட்டுறதா சொல்லியிருக்கீங்க? அதுக்குள்ள நம்ம நிலத்தை சுத்தி இருக்கிற நம்ம
அங்காளி பங்க்காளிங்கக்கிட்ட, கூடத்தில் நம்ம ஊர் நிலத்தை கேட்டுட்டு வர்ற அந்த சி.என்.ஜி
நிறுவனத்துக்கு நிலத்தைக் கொடுத்தா நம்மபூமி விவசாயத்துக்கு லாயக்கில்லாததா
மாறிடும்னு எடுத்துச் சொல்லுங்க. நிலத்தை அவிங்களுக்குத் தரமுடியாதுனு
ஒட்டுமொத்தமா பேசச்சொல்லி கூட்டத்தில் முடிவெடுக்கச் சொல்லுங்க.
அதற்குமேல்
பிரஷர் கொடுத்தா, இதைப்பத்தி வரும் சாதக பாதகத்த நல்லா விசாரிச்சு நாங்கள் தெளிவான
பின்னாடி நிலத்தை கொடுக்கிறத பத்தி யோசிக்கிறோம்னு பேசச் சொல்லுங்க.
என் கலேஜ் ஃபங்ஷன் முடிய இன்னும் ஒரு நாள்தான் இருக்கு, முடிஞ்சதும்
இது என்ன ஏதுன்னு இறங்கிப் பார்த்து முழுவிவரத்தையும் எல்லோருக்கும் சொல்கிறேன்”
என்றான்.
“மிதுனா!
எதுனாலும் பார்த்து செய்யணும். நீ
கடைசிவருஷ படிப்பில இருக்க, வாழ்கையில
நீ செட்டில் ஆகுற இந்த நேரத்தில் பொதுக் காரியத்தில ஊருக்காக இறங்குனா உன்
எதிர்காலம் பாதிக்கப்படுமோனு கவலையா இருக்கு”.
“அப்பா
நான் படிச்சு வேலைக்கு போகணும்னு நினைக்கிறதுக்கு காரணமே கொஞ்சம் காசுசேர்த்து நம்ம
விவசாய நிலத்த இன்னும் விரிவுபடுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்யணும்ற ஆசையால தான்”
“அதெல்லாம்
பேச்சுக்குத் தான்ப்பா இயற்கை விவசாயம் லாபம்ன்னு சொல்ல நல்லா இருக்கும்”.
“என்னப்பா
கண்ணு முன்னாடியே நம்ம அய்யாவை பார்த்துட்டுமா இப்படி நம்பிக்கை இல்லாம பேசுறீங்க?
நம்ம வானவராயர் ஐயா மாதிரி நானும் இயற்கை விவசாயத்தில் சாதிக்கணும்னு நினைக்கிறேன்.
அந்த நிலமே மலடாகிடுமோன்ற உங்களின் கவலை இப்போ என்னையும் தொத்திக்கிடுச்சு அப்படி
ஆகிடக்கூடாது!
சரிப்பா
காலேஜ்கு நேரமாகிடுச்சு நான் புறப்படுகிறேன் என்றபடி வெளியில் வந்தான்.
காலேஜ்
பஸ் ஸ்டாப்பில் தனது தந்தையின் துணையுடன் நின்றுகொண்டிருந்தாள் யாழிசை. அவள்
கிளம்பும் முன் பாட்டி ருக்மணி உனக்கு தனியாக போக என்ன பயம்? என்று கேட்டதும்
அலார்ட் ஆகிவிட்டாள். இந்த பாட்டிக்கு விஷயம்
தெரிந்தால் தன்னை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்துவிடுவாள். காலேஜுக்கு படிக்க கூட
விடமாட்டாள். அதனால மனதிற்குள் ‘ரூட்டை மாத்து யாழி’ என்று கூறிவிட்டு,
“யாரப் பார்த்து
பயப்படுறாயா?ன்னு கேள்வி கேட்டுட்ட பாட்டி? என்னையப் பார்த்து என் காலேஜே
கிடுகிடுத்து போயிருக்கு. நானாவது இன்னொருத்தரை பார்த்து பயப்படுறதாவது? உனக்கென்ன
உங்க மகனை நான் கஷ்ட்டப்படுத்தக் கூடாது அவ்வளவு தானே?! எனக்கு கால் வலிச்சாலும்
பரவாயில்ல நான் நடந்தே போய்கிடுறேன். இப்போ உனக்கு திருப்தியா பாட்டி?!”
என்று சிலிர்த்துக்கொண்டுப் பேசினாள்.
யாழிசை அவ்வாறு
கூறியதும் கணேசபிள்ளை, “அம்மா புள்ள கால் வலின்றதாலத்தான
என்னையக் கூட்டிடிட்டுப் போகச் சொல்லிகிட்டு இருக்காள். இதுக்குபோய் ஏன் அவகூட
நீங்க மல்லுகட்டிகிட்டு இருக்கீங்க?! வா யாழிமா நான் உன்னைய ஸ்டாப்பில் விடுறேன்”
என்றபடி வெளியேறினார்.
ஆனால்
ருக்கு பாட்டியோ மேலும் கூர்மையாக அவளை பார்த்தபடி “சரிப்பா கூட்டிட்டுபோ. சாயங்காலம்
எப்போ வருவான்னு கேட்டுக்கோ உன் மகக்கிட்ட, அப்போதானே நீ ஸ்டாப்பில் ரெடியா அவ வர
நேரம் காத்திருக்கமுடியும்”.
அப்பா
கூப்பிட்டதும் தனது பாட்டியின் துளைக்கும் பார்வையைக் கண்டும் காணாதவாறு
தப்பித்தால் போதும் என்று தனது காலேஜ் செல்லும் பேக்பேக்கை எடுத்துக்கொண்டு,
“அப்பா சாயந்தரம் லேட்டாகத்தான் இன்னைக்கு வருவேன். நாளைக்கு
ப்ரோகிராமுக்கு ரிகர்சல் பார்த்து முடிந்ததும் உங்களுக்கு போன் செய்கிறேன்” என்று
கூறியபடி ருக்குவின் அருகில் வந்தவள் அவளின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டுவிட்டு,
“பை கிழவி” என்று பின்வரும் அவளது வசவுகளில் இருந்து தப்பிக்க வேகமாக
வெளியேறினாள்.
அவ்வளவு
நேரம் யாழிசையின் கலக்கத்தை அவளின் செயல்களின் மூலமே உணர்ந்து ‘எதையோ தன் பேத்தி
தன்னிடம் மறைக்கிறாள் என்று புரிந்த ருக்கு, ‘என்
பேத்தியை எந்த ஆபத்தும் நெருங்காமல் பார்த்துக்கோ கடவுளே’ வேண்டியபடி அவளை
யோசனையுடன் பார்த்துக்கொண்டே அவளைப் பாதுகாக்கும் கடமையை செவ்வனே செய்யவேண்டும்
என்ற எண்ணத்தில் சத்தமாய் போகும் மகனிடம்,
இப்போ
மட்டும் பஸ் ஏத்திட்டு கம்முனு இருந்துறாத வேலைக்குப் போனாலும் நேரத்தோட
சாயங்காலமும் அவள் பஸ் வர்ற நேரம் பஸ்ஸ்டாப்புக்கு போய் கூட்டிவா கணேசா” என்று
கூறினார்.
இருந்தபோதிலும்
தன் அருகே வந்த யாழிசை தனது கவலையை மறக்கடிப்பதற்கு, வேண்டுமென்றே
தன்னை திசை திருப்புவதற்காக. தன் கன்னத்தை அழுத்தி முத்தம் கொடுக்கிறாள் என்பதனை
ஒருநிமிடம் மறந்து,
“பாப்பா
எத்தன தடவ சொல்றது வயசுப்பிள்ள போல நடந்துக்கிடணும். இப்படி கட்டிபிடித்து முத்தா
கொடுகிறது எல்லாம் என்ன பழக்கம் பாப்பா?”
என்று கத்தியதை
காற்றுவாக்கில் வந்து அவளின் காதில் விழுந்த சத்தத்தை சட்டைசெய்யாமல் “அப்பாடா
இந்த பாட்டி இருக்கே மனசுல இருக்கிறதை தோண்டி எடுக்குறதுக்குள்ள எஸ் ஆகிட்டேன்”
நினைத்துக்கொண்டு பஸ்ஸ்டாப்பில் நின்றாள் யாழிசை.
தூரத்தில்
அவள் பஸ் வருவதை பார்த்த யாழிசை “அப்பா பஸ் வந்துடுச்சு நான் போய்க்கிறேன் சாயந்தரம்
காலேஜில் பஸ் கிளம்பும் முன்னாடி போன் செய்கிறேன். நான் போன் செய்த அரை மணி
நேரத்துக்குள்ள பஸ் ஸ்டாப்புக்கு வந்துவிடுங்க. நான் வர இருட்டிடும்னு
நினைக்கிறேன்” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே பஸ் அவர்களின் அருகில்
வந்துவிட்டது.
கணேசபிள்ளை
யாழியிடம், “சரிம்மா அப்பா உன்னை கூப்பிட வருறேன் பத்திரமா போயிட்டுவாமா!”
என்று மகளிடம்
கூறிவிட்டு அவள் பஸ் ஏறி செல்வதை பார்த்த பின்பே அந்த இடத்தை விட்டு அகன்றார் கணேசன்.
யாழிசை
பஸ் ஸ்டாப் வரும் வழியிலும் ஸ்டாப்பிலும் நிற்கும் போது எங்கேனும் தீரனின் கார்
நிற்கிறதா என்று நோட்டம் இட்டுக் கொண்டேதான் இருந்தாள். ஆனால் அப்படி எங்கேயும்
இருப்பதுபோல் தெரியவில்லை என்றதும், கொஞ்சம்
நிம்மதியும், கொஞ்சம் ஏமாற்றமும் ஒருங்கே அவள் மனதினுள் எழுந்து ஏதோ கலவையான ஒரு
மனநிலைக்கு ஆளாகியிருந்தாள்.
ஆனால்
அவள் அறியாத விஷயம் ஒன்று அவளை சுற்றி அரங்கேறிக் கொண்டிருந்தது. அவள் பஸ்
ஸ்டாப்பில் புதிதாக ஒரு பழக்கடை தோன்றியிருந்தது. அவள் காலேஜ் கேண்டீனில்
வேலைக்கென தடியாக இரண்டுபேர் புதிதாக சேர்ந்திருந்தனர். மேலும் அவளின் காலேஜ் பஸ்
டிரைவர் புதியவனாக மாற்றபட்டிருந்ததார். இவையாவும் தீரனின் செயல் என்பதையும் அவள்
ஓர் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டதையும் உணரவில்லை.
மேலும்
நாளை ஸ்டாக் மார்கெட்டில் ஓர் பெரும் தொகை அவளின் பேரில் இன்வெஸ்ட் செய்யப்பட்டு
அதன் மூலம் முக்கிய பங்குகள் பெரும் ஏற்றத்தை அடையப் போவதையும்,
அதன் காரணம் தேடப்பட்டு, அதில்
அவளின் பெயர் ஸ்டாக் மார்கெட்டில் கேள்வியாக உச்சரிக்கபடுவதையும் அவள் அறிய
வாய்ப்பில்லை. இதெல்லாம் அவள் எதிர்கொள்ளும்போது அவள் நிலை?
---தொடரும்----

No comments:
Post a Comment