Post Page Advertisement [Top]



 ------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்-15

 

 வழியில் அவன் சந்தித்த அவனின் ஆசான் சத்திய மூர்த்தியுடன் தங்களது ஏரியாவில் நிலங்களை சி.என்.ஜி நிறுவனம் கைப்பற்ற முயல்வது பற்றிய சாராம்சத்தை விவாதித்ததே மிதுனன் கல்லூரி வளாகத்துக்குள் நுழைவதற்கு முன்பு அவன் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

 

மிதுனன் தனது அப்பாவின் உடன்பிறந்த அண்ணனும் அவனது ஆசானுமாகிய சத்திய மூர்த்தியின் வளர்ப்பில், அவரை போன்றே நாட்டு நடப்பில் ஈடுபாடு கொண்டவனாகவும் அநியாயத்தை கண்டால் எதிர்த்து நிற்கும் போர்குணம் உடையவனாகவும் வளர்ந்து நின்றான். அவர்கள் விவாதத்தில் மிதுனனுக்குத் தெளிவான விசயங்கள்,

 

இதோ, “1991ம் ஆண்டு முதல் தாராளமயமாக்கல் என்ற கொள்கையில் இந்தியா பல பணக்காரர்களை உருவாகியிருகிறது. இந்தியா போன்ற நாடுகளின் தனியார்மயமாதல் என்ற கொள்கையில் ஏற்றுமதியான கனிமங்கள், பூமியை குடைந்து எடுக்கப்பட்ட வளங்கள் மூலம் கார்பரேட் தங்களது வளங்களை பெருக்கிக்கொண்டன. இதனால் செல்வங்கள் மிகச்சில நபர்களிடம் மட்டுமே குவியத்தொடங்கின.

 

மிதுனனின் பெரியப்பா Confessions of an Economic Hitman by John Perkins:2004 என்ற புத்தகத்தை படித்ததாகவும் அதில் பொருளாதார அடியாளாகிய ஜான் பெர்கின்ஸ் தனது அடியாள் பணிக்கு கியூடோ, எக்குவடோரின் தலைநகருக்கு வரும்போது அந்நாடு இருந்த அழகையும் செழிப்பையும், நிலைமையையும் வர்ணித்து கூறியிருந்தார்.

 

அவர் பணி (ஏற்றுமதியான கனிமங்கள் பூமியை குடைந்து எடுக்கப்பட்ட வளங்கள் மூலம்) நிறைவுற்று அதன் பின் சில வருடங்கள் கழித்து அங்கு வந்தபோது அவர் போட்டுவைத்த புள்ளியில் அரங்கேறியிருந்த கோர தாண்டவத்தால் சிதைக்கப்பட்ட அவலட்சனமான எக்குவட்டாரையும் வர்ணித்து கூறியிருந்தார்என்று கூறியதும் மிதுனனின் நினைவிற்கு வந்தது.

 

கார்ப்பரேட்டார்கள் அதுபோன்ற கோர தாண்டவத்தை இங்கு ஆட முயல்கிறார்களோ! என்ற எண்ணமும் அதனை தொடர்ந்து அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது.

 

இதே யோசனையுடன் கல்லூரிக்கு வந்தவனின் எண்ணம் யாழிசையை கண்டதும் காணாமல் போனது. அவள் தனது தோழிகளுடன் நாட்டிய பயிற்சி மேற்கொண்டிருந்தாள்.

 

இயற்கையிலேயே அழகாக இருந்த அவளின் எளிமையான தோற்றத்திலும் ஜொலிக்கும் அவளின் கம்பீரத்தின் மீதும், ஆண்களை எட்டநின்று பேச வைக்கும் அவளின் கண்ணியமான நடவடிக்கை மற்றும் அவளின் நடன அசைவுகளில் மயக்கும் கண்களின் மேல் வரவர தான் பித்தாகிவிடுவோமோ! என்று பயந்தான் மிதுனன்.

 

அவளை மிதுனன் ஆசையாக பார்க்கும்போது தன்னை அவளுக்கு பதில் அவளின் அருகில் இருக்கும் சந்தியா ஆசையாகப் பார்ப்பதை அவன் அசெளகரியமாக உணர்ந்தான்.

 

சந்தியாவும் அழகில் குறைந்தவள் இல்லை. அவளின் வீட்டில் இருந்த செல்வச்செழுமையின் காரணமாக மினுமினுத்த அவள் தேகமும். செல்வ சீமாட்டியாக இருந்தபோதிலும் எல்லோரிடமும் எளிமையாக பழகும் குணம் அவளையும் அழகியாகவே காட்டியது.

 

இருந்தபோதிலும் அவளின் தந்தை பெரிய அரசியல்வாதியாக மக்களிடம் தெரிந்தாலும் அவரின் மறுபக்கம் இருட்டானது என்பதனை உணர்ந்தவன் அவன். எனவே அப்படிப்பட்ட அவரின் மகளுக்கும் தனக்கும் சம்மந்தம் இருப்பது தன்னுடைய பொதுச்சேவைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவளிடம் நட்பைக்கூட வளர்க்காமல் ஒதுங்கியே இருந்தான்.

 

முதல் முதலில் யாழிசை கல்லூரியில் அவள் சேர்ந்த வருடம் பங்குபெற்ற முதல் நடன நிகழ்ச்சியிலேயே ஈர்க்கப்பட்டான் மிதுனன்.

 

யாழிசையுடன் நெருங்கிப்பழக முயன்ற மிதுனன், அவள் தன்னுடைய ஆர்வமான பார்வையை அடையாளம் கண்டு ஒதுங்க நினைத்ததை கண்டுக்கொண்டான்.

 

எனவே காலேஜ் ஹீரோவாக தன்னை பார்க்கும் கூட்டத்தில், தன்னை பார்த்து வில்லனாக மருண்டு ஓடும் யாழிசையிடம் நெருங்க அவளின் தோழி சந்தியாவிடம் நட்பாக கூட பழகக் கூடாது என்று ஒதுங்கியிருந்ததை மறந்து நட்பாக நெருங்கி பழக ஆரம்பித்தான்.

 

மிதுனனின் கண்ணியமான பேச்சும் அவனின் ஹீரோயிசத்திலும் ஈர்க்கப்பட்ட சந்தியா அவனின் மேல் ஆர்வம் கொண்டாள். யாழிசையின் மீதான காதலை வளர்க்க சந்தியாவுடன் நட்பாக அறிமுகமானதால் முக்கோண காதலாக மாறிப்போன நிலையை எண்ணி தவித்தான் மிதுனன்.

 

சந்தியாவின் மனதில் தான் நுழைந்ததை யாழிசை அறிந்துக்கொண்டதை உணர்ந்த மிதுனன், தனது காதலை யாழியிடம் வெளிபடுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டான்.

 

ஏற்கனவே தன் ஆர்வமான பார்வையை தவிர்க்கும் யாழிசை, அவளின் தோழி சந்தியா தன்னை விரும்பும் விசயம் தெரிந்ததால் கட்டாயம் தன் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்து செய்வது அறியாமல் குழம்பி நின்றான்.

 

மேலும் இந்த வருடத்துடன் தனது கல்லூரி வாழ்க்கை முடிந்துவிடும். எனவே தன் மனதில் யாழிசை மீது தனக்கு இருக்கும் காதலை சொல்லிவிட வேண்டும் என்றும் முடிவெடுத்திருந்தான் மிதுனன். ஆனால் அவன் நினைத்தபடி எதுவும் நடக்கப்போவது இல்லை என்பதை காலம் அவனுக்கு உணர்த்த காத்திருந்தது.

 

மிதுனனின் மொபைல் தொடர்ந்து வைப்ரேட் ஆவதை கண்டு யார் என்பதை காண சற்று ஓரமாக சென்று பார்த்தான். அதில் சத்தியமூர்த்தி பெரியப்பா என்று வந்ததும் முக்கியமான விசயமாக இருந்தால் மட்டுமே கல்லூரியில் இருக்கும் இந்த நேரத்தில் தன்னை தொடர்பு கொள்வார் என்ன விசயமாக இருக்கும்?! என்ற யோசனையுடனேயே அதை இயக்கி காதிற்கு கொடுத்தான்.

 

மிதுனா வகுப்பிலா இருக்க? உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணுமே.

 

“இல்ல பெரியப்பா, இன்று கிளாஸ் எதுவும் நடக்காது. நான் நாளைக்கு நடக்குப்போற ஆடிடோரியம் ஓப்பனிங் பங்ஷனுக்கான வேலையில இருக்கிறேன். சொல்லுங்க எதுவும் முக்கியமான விசயம்ன்றாலத்தான நீங்க இந்த நேரத்தில் கால் பண்ணுவீங்க. .முதலில் விஷயத்தை சொல்லுங்க.

 

“மிதுனா நான் இப்போ வானவராயர் ஐயாக்கூட இருக்கேன். சி.என்.ஜி நிறுவனம் வேகமாக சுத்தியுள்ள எட்டு ஊரு நிலத்தையும் கைப்பத்த மும்மரமா வேலையில இறங்கிடுச்சு.

 

நாம இறங்கி வேலைபாக்காட்ட நிலைமை கைமீறிப் போயிடும். முளையிலேயே தடுக்கணும். இன்னும் ரெண்டு நாள்ல ஊர்க்குள்ள பெருசா ஆர்பாட்டம் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கணும். நிலத்தை சி.என்.ஜிக்கு லீசுக்கு கொடுக்கிறவங்களை தடுக்கணும்.

 

நீ என்ன செய்றனா! உன் பங்கிற்கு, நம்ம காலேஜ் பசங்களை ஒன்னு சேர்த்து ரெடியாகணும். சி.என்.ஜி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்துச்சுன்னா வருகிற பாதகங்களை எடுத்துச்சொல்லி எதிர்ப்பு தெரிவிக்க உன் சைடில் இருந்து ஆட்களை திரட்டு.

 

போராட்டக் கூட்டத்துக்கு இடையில இரண்டு நாள்தான் இருக்கு. அதனால்தான் நீ கிளாசில் இருக்குற நேரமா இருந்தாலும் பரவாயில்லைனு உன்னை தொந்தரவு செய்துட்டேன்” என்றார்.

 

அவர் கூறிய விவரத்தை கேட்ட மிதுனனுக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. இபொழுதே கல்லூரி ப்ரோகிராம் அரேஜ்மென்டுடன் தனது தோழர்களை திரட்டும் பணியில் ஈடுபட முடிவெடுத்தான்.

 

இந்த பரபரப்பில் யாழிசையிடம், ‘தான் அவளை விரும்பும் விசயத்தையும் சந்தியாவிடம் தான் அவளிடம் நட்பை மட்டுமே நாடுவதையும் இருவரையும் ஒண்ணா நிறுத்தி விளக்கிச் சொல்லிடணும்.

 

இதனால் சந்தியாவுக்கும் யாழிசைக்கும் இருக்கிற ஃப்ரெண்ட்ஷிப்ல விரிசல் விழாம பக்குவமாகவும் பேசணும். யாழிசைக்கிட்ட விருப்பத்தை சொன்னதுக்குப் பிறகு அவளின் பதில் எதுவாக இருந்தாலும் அதை அக்சப்ட் பண்ணனும் என்று பிளான் செய்தது எல்லாம் மறந்துவிட்டது.

 

இப்பொழுது அவனின் எண்ணம் முழுவதுவும் தனது தாய் பூமி பாதுகாக்கப்படவேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? என்ற எண்ணமே மேலோங்கி அதன் அடிப்படையிலே செயல்பட ஆரம்பித்தான் மிதுனன்.

 

கல்லூரியில் மதியம் லஞ்ச் டைமில் மிதுனன் தனது தோழர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டிருந்தான். இன்று மாலை ப்ரோகிராம் ரிகர்சல் முடிந்ததும் முடிந்த அளவு ஸ்டூடன்ஸ் யாரும் வீட்டிற்கு போகாமல் கல்லூரியிலேயே தங்க வைக்கும்படி கூறிக்கொண்டிருந்தான்.

 

நாளை நடக்கவிருக்கும் ஸ்டேடியம் ஓபனிங் பங்ஷன் விழாவிற்கு வரும் ரங்கராஜனிடம் அவரும், அவரின் கட்சியும் ஆதரவு அளித்துவரும் சி.என்.ஜி நிறுவனத்தின் திட்டத்தால் வரும் தீமைகளை பட்டியலிட்டு அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் தடுக்க ஸ்டூடன்ஸ் அனைவரும் சேர்ந்து தயாரித்த பெட்டிசனை அவரிடம் கொடுத்து அவரின் கட்சி மேலிடத்தில் கொடுக்க சொல்லணும். இதுக்கான விழிப்புணர்வை இன்று இங்கு தங்கும் ஸ்டூடன்ஸ் எல்லோரையும் லாபிக்கு பின்னால் இருக்கும் இடத்தில் ரகசியமாக கூட்டி ஒரு ஸ்பீச் கொடுத்து அவர்களின் கையெழுத்தையும் அந்த பெட்டிசனில் வாங்கணும் என்று நண்பர்களிடம் கூறினான்.

 

அதன்படி அன்று இரவு ரிகர்சல் முடிய ஏழுமணி ஆகியிருந்த நேரத்தில் ஸ்டூடன்ஸ் மத்தியில் சற்று சலசலப்பு உண்டானது. அதில் சிலர் தங்களின் தோழிகளை “சீனியர்ஸ் எல்லோரும் நைட் இங்க ஸ்டே பண்ணிட்டு மார்னிங் வீட்டிற்கு போகலாம்னு பிளான் போட்டிருக்காங்க. நாமளும் இந்த ப்ரோகிராமை சாக்கு வச்சு டுடே நைட் இங்கயே ஸ்டே பண்ணி ஜாலியா என்ஜாய் செய்யலாம் என்றனர்.

 

சந்தியா யாழியிடம், “யாழி ப்ளீஸ்டீ நீயும் நானும் நைட் இங்க தங்குவோமே! இன்னைக்கு நம்ம காலேஜ் ஹீரோவான மிதுனன்கிட்ட என் மனதில் இருக்குற லவ்வை சொல்லிடணும்னு நினைக்கிறேன்.

 

நீ என்கூட இருடீ. எனக்கு கொஞ்சம் தெம்பாக இருக்கும்ல நாளைக்கு மார்னிங் சிக்ஸ் ஓ கிளாகிற்கு உன் வீட்டில் டிராப் பண்றது என் பொறுப்பு. ப்ளீஸ்யாழி, என் செல்லமில்ல சரின்னு சொல்லுடி”.

 

அவளுக்காக யாழிசையும் தங்க ஒத்துக்கொண்டு தங்கள் டீமுடன் ஹச்.ஓ.டியை பார்த்து நாளை ப்ரோகிரமிற்கு பிராக்டிஸ் காலேஜில் தங்கியிருந்து முடிப்பதற்கு பெர்மிசன் வாங்கினார்கள்.

 

ஹைச்.ஓ.டி தங்குவதற்கும் ப்ராக்டீஸ் செய்வதற்கும் பிளேஸ் அரேஜ் செய்து கொடுத்துவிட்டார்.

 

மிதுனன் நினைத்ததுபோல் பெருவாரியான மாணவர்களை அவனால் திரட்டிட முடியவில்லை. இருந்தபோதிலும் தங்கியிருந்த அவனின் நண்பர்களிடம் நாளை ப்ரோகிராம் ஸ்டார்ட் ஆகும் முன் முடிந்த வரை அவன் தயாரித்து வைத்திருந்த பிட் நோட்டீஸை அவர்களுடைய தோழர்களுடன் பகிர்ந்துவிடும்படி கூறினான் மிதுனன்.

 

அந்த பிட் நோட்டிசின் சாரம்சம் இதோ:

 

ஏற்கனவே காவிரி நீருக்காக மக்கள் திரள் போராட்டங்கள், நீதிப் போராட்டங்கள், அரசியல் போராட்டங்கள் என பல்முனை யுத்த களத்தில் நிற்கும் நம் முன், இதுபோன்ற கார்ப்பரேட்டார்கள் வரவிருக்கும் நிலையில் இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று, விவசாயத்தை விட்டுவிட்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் வாழும்வரை வாழ்ந்துவிட்டு, நமது நிலத்தில் கடைசிவரை அடிமையாய் வாழ்ந்து மடிவது.

 

மற்றொன்று, நாம் சென்ற பிறகு நமது பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்ற அச்சம் இருக்குமானால், விவசாய நிலத்தில் இருந்து கனிமவளங்களை எடுக்கும் திட்டத்தை எதிர்த்து இன்றிலிருந்தாவது தீர்க்கமாகப் போராடுவது.

 

ஏற்கனவே விவசாய நிலங்களை நிலத்தரகர்களிடம் விற்றுவிட்டவர்களுக்கும் இதில் பிரச்சினை இருக்கிறது என்பதனையும் மறந்துவிட வேண்டாம்.

 

இன்னொரு கூடுதல் செய்தியையும் நாம் தெரிந்துக் கொள்ளவேண்டும். 35 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப் படுமேயானால், 6.25 லட்சம் கோடி மதிப்பிலான கனிமவளங்களை எடுக்க முடியும் எனச் சொல்கிறார்கள்.

 

ஆனால்,இது முழுமைக்கும் தனியார் நிறுவங்களுக்கான சொத்தாக மாறவிருக்கிற தொகை. அல்லது தனி மனிதர்களின் சொத்து. காவிரி பகுதியில் முறையாக விவசாயம் நடந்தால், 35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில்கள் நடக்கும். இது தமிழக மக்களுக்குக் குறிப்பாக காவிரி டெல்டா பகுதி மக்களுக்குள் பகிரப்படும் தொகையாக இருக்கும்.

 

இதுதான் நம்மை, நம் மண்ணை, நமது அடுத்தடுத்த தலைமுறைகளைக் காக்கும் சொத்தாக அமையும். கோடிக்கணக்கான மக்கள் பகிர்ந்து கொள்ளப்போகும் உணவை, உடையை, நிலத்தை தனியார் நிறுவனம் வளைக்கப் பார்க்கிறது.

 

மிகப்பெரிய அரச பலத்துடனும் மற்றும் பொருளாதாரத்தில் அசுர நிலையில் நிற்கும் தனியார் நிறுவனத்துடனும் மோதி வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி எழலாம்.

 

இங்கே நமது வாழ்வு, நமது இருப்பைவிட நமது சந்ததியினரின் இருப்பை முன்னிறுத்தியே நாம் எதனையும் சிந்திக்க வேண்டியுள்ளது. அவர்களுக்காக சொத்துச் சேர்க்க பல வகையில் நம்மை வதைத்து அவர்களுக்காகவே வாழ்வதாகச் சொல்கிறோம்.

 

அவர்கள் வசிக்க நிலம் வேண்டும் அல்லவா! அவர்கள் சுவாசிக்கக் காற்று வேண்டும் அல்லவா! அவர்கள் உண்ண உணவு வேண்டும் அல்லவா!

 

தமிழீழத் தேசியத் தலைவரின் சிறப்புப் பெற்ற வாசகங்களுள் ஒன்று, “நாம் போராடினால் நாடு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது, போராடாமல் அப்படியே இருந்துவிட்டால் நம் மண்ணும் இனமும் அடிமையாய் வாழ்ந்து மடிவதுதான்”.

 

நமக்காக யாரும் விண்ணில் இருந்து குதித்துப் போராட வரமாட்டார்கள். நமக்கான போராட்டத்தை நாம்தான் முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே நியூட்ரினோ, கூடன்குளம் என நமது மண்ணையும் வளத்தையும் மலடாக்கும் திட்டங்கள் நம்முன் வைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நம் மண்ணை மாசுப்படுத்தும் ஸ்டெர்லைட் பல ஆண்டு நீதிப் போராட்டங்களுக்கு இடையேயும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்தான், நம் வளத்தைக் காக்க நாம் அனைவரும் ஒன்று சேர்வது அவசியமாகிறது”.

 

என்று படிப்பவர்களுக்கு மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இளம் வயதினரை தூண்டும் தூண்டுகோலாகவும் இருந்தது அந்த பிட்நோட்டிஸ்.

 

இரவு பிராக்டிசிற்கு ஏற்பாடு செய்துக்கொடுத்த இடத்தில் கூடியிருந்த யாழிசையின் தோழியர் வட்டம் பிராக்டீஸ் என்ற பேரில் அரட்டையில் ஈடுபட்டிருந்தவர்களில் சந்தியா மிதுனனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

 

மேலும் அவர்களுக்கு நாளைக்கு ப்ரோகிராம் ஏற்பாடுகளுக்காக காவலாக போடப்பட்டிருந்த அங்கேயே தங்கியிருந்த புதிதாக சேர்ந்த சாந்தி, விமலா ஆகிய இரண்டு லெக்சரர்களும் அவ்வப்பொழுது அவர்களை வந்து பார்வையிட்டுக்கொண்டே இருந்தனர். இரவு நேரம் ஆதலால் தனியாக அந்த பில்டிங்கை விட்டு செல்ல அவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கூறிவிட்டனர்.

 

மேலும் இருவரும் அவர்களுக்குள் இதெல்லாம் தேவையா? இந்த பிள்ளைகள் இத்தனை நாள் செய்யாத ப்ராக்டீசையா நைட்டு செய்துடப் போறாங்க?

 

ரிகர்சலில வேணும்னே இதுக லூட்டி அடிச்சதப்பார்த்து ஹச் ஓடி தவறுதலா புரிஞ்சுக்கிட்டு இன்னும் ப்ராக்டீஸ் வேணும் செய்ங்கனு சொல்லிட்டு போயிருச்சு .நாமல்ல இப்போ இதுகளை பத்திரமா பார்த்துக்கிட வேண்டியிருக்கு. பொம்பள பிள்ளைங்களை தனியா விட்டா வம்பாயிடும். இவங்க பேரன்ட்சுக்கும், மேனேஜ்மென்டிற்கும் நாமதான் பதில் சொல்லனும் என்று அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்.

 

மிதுனன் காலேஜில் தங்கியிருப்பதை தெரிந்து வைத்திருந்த சந்தியா எப்படியாவது அவனை சந்தித்துவிடமாட்டோமா! என்று தவித்துக் கொண்டிருந்தாள்.

 

அது கோயட் காலேஜாக இருந்தாலும், இரவு உணவிற்குப்பின் பாய்ஸ் தனி பிளாக்கிலும், கேர்ள்ஸ் தனி பிளாக்கிலும் தங்க வைக்கப்படிருந்ததன் காரணமாக எல்லோரும் கலந்து நேரத்தை செலவழிக்க இயலவில்லை.

 

எனவே மற்றவர்கள் அறியாமல் போய் அவனை பார்ப்பதென்பது முடியாத காரியமாகிவிட்டது சந்தியாவிற்கு.

 

அவனாவது ப்ரோகிராம் ஆர்கனைசிங் காரணத்திற்காக தங்களை தேடிவருவான் என்று பார்த்தாள். அதுவும் நடக்கவில்லை.

 

இருந்தாலும் கூடியிருந்த தோழிகள் சினிமா பாட்டு டான்ஸ் என்று தங்களது அந்த பொழுதை கலகப்பாக்கி அனுபவித்தபடி இரவை குதூகளித்துக் கொண்டிருந்தனர்.

 

தீரமிகுந்தன் வைத்திருந்த யாழிசையின் மொபைலில் அவள் காலேஜ் கிளம்பி பஸ் ஸ்டாண்டில் அவளின் தந்தையுடன் நின்றது முதற்கொண்டு இப்பொழுது அவள் டான்ஸ் ப்ராக்டீஸ் செய்வதுவரை பல போட்டோ கிளிப்புகளுடன் வாட்ஸப்பில் அப்போ அப்போ தகவல்கள் அவனுக்கு வந்துகொண்டிருந்தது.

 

அவளின் ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்த்துக்கொண்டே வந்தவனுக்கு காலேஜ் வந்தபிறகு அவளின் போட்டோ கிளிப் ஒவ்வொன்றிலும் அவள் இருக்கும் இடத்தில் அவளை ஆர்வமுடன் பார்த்தபடி ஒருவன் இருப்பதை கண்டான் தீரன்.

 

முதலில் அதனை அவ்வளவாக கண்டுகொள்ளாத தீரன், யாழிசை இருக்கும் எல்லோ போட்டோஸ் மற்றும் வீடியோ கிளிப்புகளில் அவன் இருப்பதோடு மட்டும் இல்லாமல், எல்லாவற்றிலும் அவனின் பார்வை யாழிசையின் மீது காதலாக படிவத்தைக் கண்டவனுக்கு எரிச்சலாக இருந்தது. அவன் அவளை வைத்து போட்டிருக்கும் திட்டத்திற்கு இவன் ஏதேனும் இடைஞ்சல் பண்றவனா இருப்பானோ?! என்ற யோசனை எழுந்தது.

 

அவன் யாழிசையைப் பற்றி திரட்டிய தகவலில் அவளின் நட்பு வட்டம் மிகவும் குறுகியதாகவும், வீடுண்டு கல்லூரி உண்டு தனது ஐயா வீட்டு மனிதர்கள் என்று அவள் வட்டம் சிறியதாக இருப்பதாக அவன் நினைத்திருந்தான்.

 

அவளின் நட்பு வட்டத்தில் கூட ஆண்களில் நெருக்கமானவர்கள் இல்லை என்றே இருந்தது. அப்படியிருக்க இதென்ன புதுசா ஒருவன்? என்று யோசனையுடன் மிதுனனின் உருவத்தை பெரிதாக்கி பார்த்தான்.

 

அவன் தன் அளவு அழகனாகவனாக இல்லையென்றாலும் உரமேறியிருந்த அவனின் உடலும், கண்களில் இருந்த கூர்மையும், இவன் சாதாரணமாக ஒதுக்கக் கூடியவன் அல்ல என்ற எச்சரிக்கை மணியை தீரனின் மனதினுள் உண்டாக்கியது.

 

மிதுனனை பற்றிய டீடைல்ஸ் திரட்ட ஆட்களை முடிக்கிவிட்ட அரைமணி நேரத்திலேயே அவனுக்கு ரிப்போர்ட் வந்துவிட்டது. அவ்வாறு கிடைத்த விடை அவனை மேலும் யோசனையில் ஆழ்த்தியது தீரனை. அன்று மினிஸ்டர் ரங்கராஜன் கூறிய மாணவர் படையின் பிரதிநிதி மிதுனன் இவன்தான் என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது.

 

மனதினுள் யாழி பேபி ,உன்னை சுற்றி இருக்கும் உன் நலம் விரும்பிகள் அனைவரும் என் வேலைக்கு எதிரானவர்களாகவும் ஹீரோயிசம் மிகுந்தவர்களாக இருக்கிறார்களே!

 

உன்னையப்பத்தி பொதுவாக விசாரித்தால் எளியவளாக தெரிந்தாலும், அப்படியல்ல நீ! .இந்த தீரனின் காதலியாக பொய்யாக உலகில் அடையாளப்படுத்துவதாக இருந்தாலும் அவள் எப்படி லேசுபட்டவளாக இருக்கமுடியும்? எனக்கும் உன்னைச் சுற்றியிருக்கும் சவால்களைத் தாண்டி உன்னை என் கஷ்டடிக்கு கொண்டுவருவது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் பேபி என்று மனதோடு பேசிக்கொண்டான்.

 

அப்பொழுது இமாமியிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை அட்டன் செய்த தீரனிடம் “பாஸ் நம்ம பிளான் சக்சஸ். நான் கலிபோர்னியா போர்ஸ்டெட் சிட்டியை விட்டு மூவ் ஆகிற நேரம் வந்துடுச்சு.

 

நம்ம அசட் எல்லாம் கைமாத்திட்டேன். மிஸ் யாழிசை பேரில் அந்த ஐ லேண்டை பர்சேஸ் செய்திட்டேன். அதற்கான பேமென்ட் அவங்க அக்கவுண்டிற்கு மார்னிங் டிரான்ஸ்பர் ஆகுறபடி பின் தேதியிட்ட காசோலை மிஸ் யாழிசை கொடுப்பதாக ஏற்பாடுகளையும் செய்துட்டேன். டாக்குமென்ட்களில் டூ டேஸ்குள் அவங்க சைன் போட்டுடணும்.

 

நாளை இந்தியாவின் சேர் மார்கெட்டில், சென்சக்ஸ் புள்ளிகள் அகோரமான உச்சத்தை தொட்டிருக்கும். பெரும்பாலான ஷேர்ஸ் மிஸ் யாழிசை பேரில் வாங்கபட்டிருப்பதால் அவரை அடையாளம் காண பத்திரிகை உலகம் முண்டியடிக்கும்.

 

பிராங்கின் அக்கெளண்ட் பணம் முழுவதுவும் மிஸ் யாழிசை பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதையும் அவன் பிளாங்க் செக் நெட் பேங்கிங் மூலம் யாழிசைக்கு வழங்கியதாக இருக்கும் டீடைல்சையும் அதனை தொடர்ந்து அவரின் அக்கவுண்டின் முழுத்தொகையும் யாழிசையின் பேரில் கைமாறியிருப்பத்தையும் நாளை பிராங் கண்டுபிடித்து விடுவான்.

 

சோ அவனும் மிஸ் யாழிசையை பற்றிய தேடலை தொடங்கி விடுவான். மத்தவங்க எல்லோரும் யாழிசையை ரீச் செய்வதற்கு முன்பு நாம் அவங்களை நம்ம கஸ்டடிக்கு கொண்டுவந்திடணும் என்று கிளம்பும் அவசரத்தில் வேகமாக மூச்சு விடாமல் பேசிமுடித்த இமாமியிடம்.

 

குட் மை பாய்!. லெட்ஸ் மூவ் தட் பிளேஸ் கேர்புல். நெக்ஸ்ட் வீக் நீ கூட இந்தியாவில் இருக்க எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன்.

 

நாளைக்கு யாழிசையையும் என் கஷ்டடிக்கு கொண்டுவந்துடுவேன். உலகத்தின் பார்வையில் அவள் என் காதலியாக அடையாளம் காணப்படுவாள். பிராங் அவனின் அக்கௌன்ட் பணத்தை யாழிசை என்ற பெயர் உள்ள இந்தியப்பெண் கையாடல் செய்திருகிறாள் என்று அறியவரும்போது அவளை என் கஸ்டடியில் கொண்டுவந்திருப்பேன் அவளை அவனால் நெருங்க முடியாது.

 

இனி மொபைலில் என்னை முடிந்த அளவு காண்டாக்ட் செய்யாதே. நாம் நேரில் சந்திப்போம் பை இமாமி! மீட் சூன் என்று கூறி தொடர்பை துண்டித்தான் தீரன்.

 

தீரன் யாழிசையை தன்னுடைய இந்த வேலைக்கான தேவைக்கு வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்வான் என்று மட்டுமே நினைத்திருந்தான். மேலும் தங்களது கஸ்டடிக்கு எடுத்தபின் அரட்டி வைத்து தங்களுக்கு சாதகமாக அவளை நடக்க வைக்க நினைப்பான் என்று மட்டுமே நினைத்திருந்தான் இமாமி.

 

ஆனால் அவனும் ஏன் தீரனும் நினைக்காத ஒன்று யாழிசைக்கும் தீரனுகுக்கும் இடையில் பிரிக்கமுடியாத பந்தம் ஒன்று உருவாகப்போவதையும் தீரன் ஆட்டிவைக்க நினைக்கும் யாழிசையின் கண் பார்வைக்கு அவன் ஆடப்போவதையும் காலம் நிகழ்த்த காத்திருந்தது. எனினும் அதற்குமுன் அவள் படும் அவஸ்த்தைக்கும் தீரனே பொறுப்பாவான்.

 

தீரனுடன் பேசிய இமாமி, காலச்சூழலை உணர்ந்துதான் இந்தியா போவதை பிராங் தன்னை ஸ்மெல் செய்து தேட ஆரம்பிக்கும் முன் எஸ் ஆகவேண்டியதே முக்கியம் என்று நினைத்து பிளைட் பிடிக்க வேகவேகமாக வெளியேறினான்.

                                           ---தொடரும்---

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib