------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------
அத்தியாயம்-16
இமாமியிடம் தீரன் பேசிமுடித்த மறுநிமிடம் அவன் மாதவனை மொபைலில் அழைத்தான். “அழைப்பை ஏற்று “யெஸ் சார்,” என்ற மறுநிமிடம்,
“மாதேஷ்
அன்னைக்கு காரை ஹோட்டல் விட்டு கொஞ்சம் தள்ளி நிறுத்த்திருந்தியே அங்கே வந்து
நில்லு. இன்னும் ஃபிப்டீன் மினிட்ஸ்ல நான் அங்க வந்துடுறேன்”
“ஓகே
சார்” எனச்சொல்லியதும், இணைப்பை துண்டித்துவிட்டு அன்று போலவே பால்கனிக்குச்
சென்று கயிற்றினால் மரத்தின் மூலம் இறங்கி ஹோட்டலில் இருந்து வெளியே வந்து,
விருவிருவென நடந்து மாதவன் அவனுக்காக காரை நிறுத்திய இடத்துக்கு வந்து அதில் ஏறிக்கொள்ளவும்
கார் புறப்பட்டது.
காரில்
ஏறியபின் இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் அனைத்தும் ஆங்கிலேயத்திலேயே
இருந்தது அதை நாம் தமிழிலேயே பார்ப்போம்.
“யாழிசை
பேர்ல நான் சொன்ன பேங்க்ல அக்கௌன்ட் ஓபன் செய்துட்டேனு இமாமி செக் பண்ணிட்டு சொன்னான்.
அதேபோல அவகிட்ட அன்னைக்கு காஃபி ஷாப்ல பார்த்தப்போ செக்கில் வாங்கிய அவளோட
சிக்னேச்சரை காப்பிகேட் பண்ணி டீமேட் அக்கெளண்டும் ஓபன் பண்ணினேல,
அந்த பேங்க் அக்கௌவுண்டில் நெட் பேங்கிங் மூலம் கடந்த மூன்று நாளாக
செக் மற்றும் டிடி மூலமும் எவ்வளவு பணத்தை டிரான்ஸ்பர் செய்ய ,முடியுமோ
அவ்வளவு செய்தாகிவிட்டது.
இமாமி
இத்தனை நாள் அமெரிக்காவில் இருந்ததால பிராங்கின் வீட்டுக்கு பின்னாடி ஒரு ரெடிமேட்
மூவிங் புட் ஸ்டால் ஓபன் செய்து பிராங்
வீட்டின் வைஃபை சிக்னல் கிடைக்கும் இடத்தில் அந்த ஸ்டாலினை நிறுத்தி அதனுள் சீக்ரெட்டாக
பிராங்க் வீட்டின் வைஃபை சிக்னல் மூலம் அவனது அக்கௌன்ட்டையை ஹேக் செய்தான்.
பிராங்கின்
நம்பருக்கு வரும் மெசேஜ்களை ஹேக்கிங் மூலம் பிளாக் செய்து வைத்திருந்தான். அதனால்
நாம் செய்த இந்த விஷயத்தை பிராங் மோப்பம் பிடிக்க முடியாமல் போயிடுச்சு.
ஆனா இனிமே
அங்க இருந்தா மாட்டிப்பான் சோ,
இமாமி அங்கிருந்து மூவ் ஆகிட்டான். இன்னும்
இருபத்திநாலு மணி நேரம்தான் நமக்கு இருக்கு. அதற்கு பின் பிராங் அலார்ட்
ஆகிவிடுவான். அதுக்குள்ள நம்ம வேலையை முடிச்சிடனும் சொன்னதுபோல எல்லாம் அரேஞ்
செய்துட்டதானே?”
“எஸ் பாஸ்.
மிஸ் யாழிசைக்கு டீமேட் அக்கௌன்ட் ஓபென் செய்து அதில் இ.டி.எப்பில்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேப்பர் கோல்ட் வாங்கியாச்சு. மேலும் வோர்ல்ட் டாப் 2௦ கம்பெனி
சேர்களில் அந்த கம்பெனியின் பத்து பெர்சன்ட் ஷேர்களை யாழிசையின் பேரில் பர்சேஸ் பண்ணியாச்சு”.
இதுபோன்ற
இன்னும் பலவழிகளில் பிராங்கின் அக்கௌன்ட்டில் இருக்கும் அமௌன்ட் மொத்தத்தையும் தனது
கட்டுபாட்டின் கீழ வருமாறு தீரன் ஆட்டத்தை வெற்றிகரமாக ஆடி முடித்திருந்தான்.
மாதவன்
ஏதோ மனதில் கேள்வியை வைத்துக்கொண்டு கேட்பதற்கு பயந்தோ,
தயங்கியோ அமர்ந்திருப்பதை கண்டுக்கொண்ட தீரன், “கேளு
மாதவா, இமாமிக்கு அடுத்ததாக நான் நம்பிக்கை வச்சு உன்னைய என் வேலைக்கு
செலைக்ட் பண்ணித்தான் இத்தனை பொறுப்பை உனக்கு கொடுத்தேன்.
வெறும் காசுக்காக
மட்டும் வேலைப் பார்க்கிறவனா நீ இருந்திருந்தா உன்னை நான் இந்த வேலைக்கே
எடுத்திருக்க மாட்டேன். செய்த உதவியை மறக்காதவன் நீ” என்ற தீரனின் முகம் மிகவும்
யோசனையில் இருந்தது.
ஏனெனில்
மாதவன் அமெரிக்காவில் வேலைக்குச் சேர்ந்த ஒருமாதத்தில்,
அவனது படிப்பு செலவிற்கு வீட்டை அடமானம் வைத்து அதிகவட்டிக்கு, கந்துவட்டி
கந்தசாமியிடம் பணம் கடன் வாங்கித்தான். அவனின்
வீட்டு கடன் தொகையை முழுவதும் உடனே கட்டிவிடவேண்டும்.
இல்லையேல் வாங்கிய கடனுக்கு வீட்டை எனக்கு
எழுதிக்கொடுத்துவிடு என்று மிரட்டியதால் இயலாமையில் அவனது தந்தைக்கு நெஞ்சுவலி
வந்து ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடுவதாக தகவல் அறிந்த மாதவன் செய்வது அறியாமல்
தவித்து தனது நண்பனின் அட்வைசின் பேரில் அவனது படிப்பு செலவுக்கு வாங்கிய
கடனுக்கான ஆதாரம் மற்றும் அவனது தந்தை தற்போது ஆஸ்பத்திரியில் அட்மிட்
செய்திருப்பதற்கான ஆதாரமாக அவரின் மெடிகல் சர்டிபிகேட் அடங்கிய பேப்பர்களை தான்
வேலை பார்த்த தீரனின் கம்பெனி நிர்வாகத்திடம் சப்மிட் செய்து அவர்களின் உதவியை
நாடினான்.
அதன்
உண்மைத் தன்மையை விசாரித்து உறுதிசெய்த அவனது நிர்வாகம் அவனுக்கு அக்ரீமென்ட்
பேசில் த்ரீ இயர்ஸ் வேலை கொடுத்து முன் பணமாக அவனது தேவையை ஓரளவு சமாளித்து மீளும்
அளவு பணத்தை கொடுத்து உதவியது.
கான்ராக்டில்
மட்டுமே நிர்வாகத்துடன் அவனுக்கு நேரடித்தொடர்பு.
மற்றபடி அவனுக்கு பணம் இஸ்யூ செய்தது தீரனின் தனிப்பட்ட அவனின் பணத்தில்
இருந்துதான். தீரன் வெளிப்பார்வைக்கு அமெரிக்கர்களை பிரதிபலிப்பவனாக இருந்தாலும்
அவனின் அம்மா பத்மினி அவனுக்குள் விதைத்திருந்தது ஒரு பக்கா தமிழ் மகனைத்தான்.
எனவே
அவனது கம்பெனியில் அவனை அறியாமல் அவன் தேர்ந்தெடுக்கும் நபர்களில் அதிகம்
தமிழர்கள் இடம் பிடித்துவிடுவர். மேலும் அவ்வாறு அமர்த்தப்படும் தமிழ்ர்களுக்கு
ஒரு பிரச்சனை என்றால் வெளியில் அவனின் ஸ்டாப் என்ற போர்வையில்,
உள்ளத்தில் அவனின் இன உணர்வினால் அவர்களின் துயரைத் துடைத்து விட்டே மறுவேலை
பார்ப்பான்.
தீரன்
தனிப்பட்ட அவனின் பணத்தில் தனக்கு உதவியதை அறிந்த மாதவன் அன்றிலிருந்து மிகவும்
சின்சியராக தனது கம்பெனிக்கு உழைக்கும் ஊழியனாகவும் தனது சி.இ.ஓ தீரனின் மேல்
கண்மூடித்தனமான பக்தியையும் வெளிபடுத்த ஆரம்பித்திருந்தான்.
அவனின்
அந்த சின்சியாரிடியையே தீரன் இப்பொழுது மாதவனிடம்
சுட்டிக்காட்டினான்.
‘கேட்க
நினைப்பதை தயங்காமல் கேள்’ என்று
கூறியதும், சற்று அவனின் மேல் இருந்த பயத்தை ஒதுக்கிய மாதவனுக்கு தீரன் பிராங்கின்
அக்கவுண்டில் இருக்கும் பணத்தை, மிக அதிக
அளவு பணத்தை பிராங்கிற்குத் தெரியாமல் கொள்ளையடிக்கிறான் என்பதை மட்டுமே தெரிந்து
வைத்திருந்தான். ஆனால் அதன் மொத்த மதிப்பு என்ன என்பதையும்? ஏன் இவ்வாறு செய்கிறான்?
நண்பனுக்கே ஏன் இந்த துரோகம்?
என்றே குழம்பி நின்றான்.
தயக்கத்துடன்,
“பாஸ் மிஸ்டர் பிராங் நாம் செய்த செயலை ஸ்மெல் செய்தால் அவரின் அக்கௌன்ட் பணத்தை
கையாடல் பண்ணியதாக கம்ளைன்ட் ஆதாரத்துடன் சப்மிட் செய்தால் முதல் குற்றவாளியாக
யாழிசையும் அதன் தொடர்ச்சியாக நாமளும் பிட்டிபட்டு விடமாட்டோமா?!”
“நீ சொல்றதுபோல்
பிராங்கால் எதுவும் வெளிப்படையாக செய்யமுடியாது. அவனோட அந்த பணம் முதுவதுவும்
கருப்பு சந்தைக்கு உரிய பணம். எப்படி அவ்வளவு பணம் அவனுக்கு கிடைத்தது என்பதற்கான
விளக்கத்தை அவனால் வெளியில் பகிரங்கமாக சொல்லமுடியாது.
அவனுக்கு
கிடைத்த அந்த பணம் என்னை இங்கு செய்ய அனுப்பியிருக்கும் வேலையை வெற்றிகரமாக செய்து
முடிக்க ஸ்பான்சர் செய்த பெரும் பணமுதலைகளுக்கு,
கொடுத்தப் பணம் காணமல் போயிடுச்சுனு தெரிந்தால் பிராங்கோட நிலைமை மிகவும் சிக்கலாகிடும்.
அதனால
திருடனுக்கு தேள் கொட்டியதுபோல வெளிப்படையா சொல்ல மாட்டான். சீக்ரெட்டா பணத்தை
சுருட்டியவர்களை தேட ஆரம்பிப்பான். அப்படித் தேடி இங்க வந்தால் சுட்ட பணத்த
வச்சே நாம நம்ம பலத்தையும், பாதுகாப்பையும்
ஸ்ட்ராங் பண்ணியிருப்போம். பிராங்கால்
மட்டுமல்ல வேறு யாருமே நம்ம கிட்ட வர முடியாது
அப்படி
பிராங் என்கிட்டே மோதனும்னா அவன் சொத்தை எல்லாம் விற்கும் பணத்தை விட அதிகமாக பணம்
மற்றும் பலம் அவனுக்கு தேவைப்படும். ஃப்ரெண்ட்டுக்கே ஏன் இந்த துரோகம் செய்கிறேனு
நீ நினைக்கலாம்
சின்ன
வயசுல ரெண்டு பேருமே நல்ல ஃப்ரெண்ட்ஸாத்தான் இருந்தோம்.
அம்மா எனக்கு
ஸ்கூலில கொடுக்குற ஹோம்வொர்க்க குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடித்தால் எனக்கு
சாக்லேட் வாங்கி கொடுப்பதாகவும் ஸ்கூலில் எக்சாமில் நல்ல மதிப்பெண்கள் வாங்கினால்
நான் கேட்ட டாயை வாங்கிக்கொடுப்பதாகவும் என்னுடைய முன்னேற்றத்திற்கு
என்னிடம் டீல் பேசியதாலோ என்னவோ எனக்கு சிறுவயதில் இருந்தே டீல் மேல் ஒரு மோகம்
பிறந்தது.
என்னிடம்
இருந்த திறமையை பிராங் அவனின் தேவைக்கு யூஸ் செய்ய ஆரம்பிச்சான். என் டீல் மோகத்தை
பயன்படுத்திக்கொண்டு நினைச்சதை சாதித்துகொண்டான்.
எனக்கும்
அப்பொழுது நான் ஆசைப்பட்டதை பிராங்க் கூட டீல் போட்டு அடைய முடிந்ததால அதை
அப்படியே கண்டினியூ பண்ண ஆரம்பிச்சிட்டேன்.
கடைசியில்
எங்களுக்கு இடையில் உள்ள நட்பு செத்து போய் ஒருவரின் தேவையை ஒருவர் பயன்படுத்திக் கொள்வதையே
எங்களுக்குள் நட்பு என்ற போர்வையில் நாங்கள் தொடர ஆரம்பிச்சிட்டோம்.
இருந்தாலும்
நான் மனசில அவன என் நண்பனா தான் நினைச்சேன். அதையும் ஒருநாள் பிராங் மாற்றிட்டான்.
அவன் என் நண்பனில்லைன்றதை நான் தெரிந்துக்கொள்ள அவன் செய்த காரியத்த நினைத்தால்
அப்படியே அவனை.” என்று ஆங்காரமாய் சொன்னவனின் கண்கள் இரண்டும் சிவந்து கை விரல்களை
மடக்கி அவனின் தொடையிலேயே குத்திக்கொண்டான்.
மாதவன் “பாஸ்”
என்று பயத்துடன் கூறினான். அதில் தன்னை
நிலைபடுத்திக்கொண்ட தீரன், “அவனுக்கு வலிக்கணும்.
நான் விரும்பியதை இல்லாமல் செய்த அவனுக்கு அவன் விரும்பும் பணம் அவனிடம் இல்லாமல்
செய்யணும். அவன் பணத்தை யூஸ் பண்ணி எனக்கு துரோகம் செஞ்சான். நான் என் மூளைய ஆயுதமாக்கி
அவனை ஒன்றுமில்லாதவனாய் ஆக்கப் போறேன். அதுக்கு ஒரு நல்ல சான்சை அவனே தரும்போது
நழுவவிட நான் என்ன முட்டாளா!?
இந்தியாவில
அதுவும் என் பூர்வீக பூமிய என்னைய வச்சே அழிக்க நினைச்சதுதான் அவன் செய்த முதல் தவறு.
என் உடை, நடை, பாவனை நான் பிறந்து வளர்ந்த அமெரிக்காவின் சாயல் இருக்கலாம்.
ஆனால் எனக்குள்ள நான் தமிழன் தான்! அதை நான் உணர்ந்ததோ என் அம்மா
என்னைய தனியா விட்டுட்டுப் போறோமே அப்படின்ற வருத்தத்தில. என் வேரை தேடி இங்கு
அனுப்பிவைக்க ஏற்பாடு செய்திருந்ததை நான் பார்க்கும் நேரத்தில,
இந்த இடத்தை சூறையாடச்சொல்லி பிராங்க் கொடுக்க,
வேலையை முன்வச்சே அவனை அவனே அழிக்கும் ஆயுததத்தை என் கையில்
கொடுத்தது போலன்னு அவனுக்குத் தெரியலை.
அவன்
சொன்னதை நான் செய்யமாட்டேனு மறுத்திருந்தால் அவன் எனக்குப் பதிலா வேற ஒருத்தனை
அனுப்பி தமிழ்நாட்டை சூறையாடும் நடவடிக்கை எடுத்திருப்பான்.
அதனால, நானே
செய்றதா சொல்லி இங்கு வந்தேன். உள்ளிருந்தே இந்த பிளானை முறியடிக்கணும், என்னை கொன்னு
புதைச்சாலும் இன்னொருத்தன வச்சு இந்த பிளானை எக்ஸிகியூட் பண்ண முடியாது.
வச்சிருந்த பணம் கோடி கோடியாப் பணம்.
அவன்கிட்ட இருக்கிற பணத்தை எல்லாம் நானே அவன் கிட்ட இருந்து கொல்லையடிச்சுகிட்டே
இருக்கேன். அதுக்கான திட்டம் போட்டு அதை செயல் படுத்திக்கிட்டு இருக்கேன்.
பிராங்க்
பணம் முழுசும் காணாமப் போனத இன்னும் பதினெட்டு மணிநேரத்ததுக்கு பின்னாடி
பார்த்துட்டு கதறிகிட்டே தேடி ஓடப்போகிறான்.
இன்னும் ஆறுமணிநேரத்தில்
இந்தியப் பங்குசந்தையை கண்காணிக்கும் செபி அந்நிய முதலீடு இந்தியாவின் தனிப்பட்ட
நபர் யாழினி என்ற ஒருவரின் மூலம் அதிக அளவில் இன்வெஸ்ட் செய்யப்பட்டதால் இந்திய
பங்கு சந்தையின் சென்சஸ் புள்ளிகள் உச்சத்தை தொடப்போகிறது. அந்த காரணி யார் என்று
தேடப்பட்டு என் பேபி யாழிசையை நாளை அடையாளம் தேடி வந்து சந்திக்க மீடியா
முதற்கொண்டு பெரிய பெரிய தலைகள் எல்லாம் ஆட்களை அனுப்பப் போறாங்க.
அவளை அவங்க
நெருங்கும் முன்னாடி நாம அவளை தூக்கி வந்துடனும். அவளை சுத்தி நம்ம டீம் மெம்பர்ஸ்
எந்தநேரமும் அலார்டா இருக்கிறார்களா மாதவா?”
என்று கேட்டான் தீரன்.
“எஸ்
பாஸ்” என்று கூறிய மாதவன், தான் செய்த திட்டத்திற்கான முன்னேற்பாடுகள்
அனைத்தும் சரியாக செய்திருப்பதை ஒருமுறை
தெளிவுபடுத்தினான் தீரனிடம்.
மாதவன்
ஏற்கனவே தீரனின் மேல் ஒரு பிரமிப்பும், பக்தியும் கொண்டிருந்தான். இந்நிலையில்
யாழிசையிடம் அவன் நடந்து கொண்டிருந்த செயல்களின் மூலம் தீரனின் மேல் சற்று மனச் சிணுக்கத்தில்
இருந்தவன் இப்பொழுது தீரன் கூறிய விளக்கங்களில் தெளிவடைந்தான்.
சொன்ன
தகவல்களின் அடிப்படையில் தன் தாய் பூமியை காக்கும் பணியினை தீரன் மேற்கொண்டிருகிறான்
என்று தெரிந்ததும் அவனின் பக்தனாகவே ஆகிவிட்டான் மாதவன். ஏதோ ஒரு வகையில் தானும்
அவனுக்கு உதவியாக இருப்பதை நினைத்தவன் பெருமையாக உணர்ந்தான்.
யாழிசையும்
அவள் அறியாமலே இந்த விசயத்தில் ஈடுபடுத்தபட்டிருப்பதும் கூட ஏனோ இப்பொழுது
மாதவனுக்கு தவறாக தெரியவில்லை.
அவனுக்கு
இப்பொழுது ஏற்பட்ட தீரனின் மேல் உள்ள பக்தியால் அவன் காதலியாக யாழிசையை
தேர்ந்தெடுத்ததை யாழிசைக்கு கிடைக்கும் பெரும் வெகுமதியாகவே அவன் நினைத்தான்.
மறுநாள்
காலை யாழிசையை அவள் வீட்டில் இறக்கிவிட சந்தியா காரில்
அழைத்துச் சென்றாள். சந்தியாவின் முகம்
சோர்வாக இருந்தது. அவளின் சோர்வின் காரணத்தை யாழிசை அறிவாள்.
தனது தோழி
அன்று இரவு தங்கியதே மிதுனனிடம் அவள் காதலை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்ற
காரணத்திற்காகத்தான். ஆனால் சூழ்நிலை அமையாததால் இருவரும் பேசமுடியாமல் போனது.
எனவே
யாழிசை சந்தியாவை இயல்பாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் “ஏன்டி
இப்படி மூஞ்சியை தூக்கிவச்சுகிட்டு இருக்க? இன்னையோடவா காலேஜ் முடிஞ்சுடுச்சு. உன்
ஆள்கிட்ட இன்னொருநாள் பேச சந்தர்ப்பம் கிடைக்காமலேயா போய்டப் போகுது?”.
“இல்ல
யாழ் இது மிதுனனின் பைனல் இயர். இனிமே ப்ராஜெக்ட் வொர்க் தான் நிறைய அவனுக்கு
இருக்கும். சோ, காலேஜுக்கு மிதுனன் இனி அவன் ப்ராஜெக்ட் வொர்க் பிரசென்ட் பண்ண
மட்டும் தான் வருவான். அதனால்தான் இன்னைக்கே என் மனசில உள்ளதை சொல்லிடணும்னு நினைச்சேன்.
இன்னொன்று
தெரியுமா யாழிசை?! நான் மட்டும்தான் அவனை விரும்புகிறேன். ஆனால் இவன் என்னைய
இதுவரை காதலாக ஒருமுறை கூட பார்த்தது இல்ல. எனக்குத் தெரியும் அவன் என்னைய
காதலிக்கலைனு. அவனோட கண்ணு உன்னைய மட்டுமே சுத்தும்கிறத்தை கவனிச்சுக்கிட்டுத்தான்
இருக்கேன்”,
“ஏய்!
நிறுத்து சந்தியா, அப்படியெல்லாம் இல்ல. நீ தேவையில்லாம
போட்டு மனசை உலட்டிகாத. நான் மிதுனனை நல்லப் பையன்றதைதாண்டி வேற மாதிரி யோசித்துகூட
பார்க்கலை. இனிமேலும் பார்க்க மாட்டேன்.”
அவள்
பதற்றத்தை கண்ட சந்தியா, “நீ
எதுக்கு இப்போ டென்சனாகுற?! எனக்குத் தெரியும் நீ மிதுனனை விரும்பல. நான் அவனை
விரும்புறதை நீ தெரிஞ்சுக்கிட்டதால மிதுனனோட காதலை நீ ஏத்துக்க
மாட்டன்றது எனக்குத்தெரியும்.
ஆனாலும் நான்
சொல்வதை நீ எப்படி எடுத்துக்க்கப் போறனு எனக்குத் தெரியவில்ல. என் மனதில் உள்ளதை உன்கிட்ட
சொல்லாம விட நான் விரும்பவில்ல” என்று கூறிவிட்டு தன்னை திடப்படுத்திக்கொண்டு பேச
ஆரம்பித்தால் சந்தியா.
யாழ்
மிதுனன் காதலை உன்கிட்ட சொல்ல தடையாக இருக்கிறது நான்தான். அவர் உன்கிட்ட நெருங்கி
வரும்போது எப்போதும் உன்கூடவே நின்னு ஆர்வமான நான் அவனை பார்ப்பதைப் பார்த்து
தயங்கி விலகிப்போயிடுகிறான்.
எனக்கு அவனின்
மனது தெரிஞ்சும், அவன் மேல் இருக்கிற என் காதலை விட
முடியல. நீ அவனை விரும்பாததால ஒருவேளை என்னால அவரை என் காதல் மூலம் என்னிடம்
கொண்டுவந்துடலாம்னு நான் நினைப்பதால் கூட இருக்கலாம்.
அவன் உன்கிட்ட,
காதலை சொல்லுறதுக்கு முன்னாடி நான் என் காதலை அவரிடம் சொல்லிட நினைக்கிறேன். அவன் எனக்கு
ஓகே சொல்லமாட்டானு எனக்குத்தெரியும். இருந்தாலும் நூற்றில் ஒரே ஒரு பர்சென்ட் நான்
காதலைச் சொல்லி ஒருவேளை ஓகேனு சொல்லிட்டா,
எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என் வாழ்க்கை.
அது
நடக்காது! என் காதல் நிறைவேறமால் போனாலும் நான் கடைசிவரையில என் காதலுக்கு
போராடினேன்ற ஆத்ம திருப்திக்காக என் காதலை சொல்லப் போறேன்.
உன்கிட்ட
ஒரே ஒரு ரிக்வஸ்ட் மட்டும் வைக்கிறேன்
யாழ். நான் என் காதலை சொல்லி அவர் மறுபதற்கு காரணமாக அவர் உன்னை அவர் காதலிப்பதாக
சொல்வார்.
அவர்
சொல்லும்போது நான் அவரிடம் என் காதல் கைகூடாமல் போனதுபோல் அவருடைய காதலும்
தோத்துப் போகக்கூடாதுனு மனசால சொல்லுவேன். அவருக்கு கண்டிப்பாக அவர் ஆசைப்பட்ட உன்
அன்பு கிடைக்கணும்னு விஷ் செய்வேன்.
காதல்
தோல்வியின் வலி என்னவென்று உணர்ந்தவள் நான். அதை அவருக்கு நீயும் கொடுக்காத
யாழிசை. அவர் ரொம்ப நல்லவர் அவர் காதலை சொன்னால் நீ அதை மறுக்காத. என் போன்ற வலி மிதுனனுக்கு
ஏற்படக்கூடாது”.
யாழிசைக்கு
சந்தியாவின் நல்ல மனதும், அவள் மனம் படும் பாடும் உணர்ந்து அழுகை அழுகையாக வந்தது.
“உன்னையப் போல தேவதையின் காதல் கிடைக்க அவன் கொடுத்து வச்சிருக்கணும். உன் காதல் சக்ஸஸ்
ஆகும்.”
பேசிக்கொண்டிருக்கும்
போதே அவளின் வீடு வந்துவிடவும் அத்துடன் அந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி
வைத்துவிட்டு ஒருவருக்கொருவர் விடைபெறும் போது காலேஜ் நடன நிகழ்ச்சிக்கு தேவையான
உடை மற்றும் அதற்கு தோதாக வாங்கிய ஆர்டிபீசியல் நகைசெட்டை மறக்காமல் எடுத்துகொண்டு
வருமாறு சந்தியாவிடம் யாழிசை நினைவுறுத்தினாள்.
பின்பு காலேஜ்
பங்சனுக்கு கிளம்ப பஸ் வருவதற்குள் ரெடியாகிவிட வேண்டுமே என்ற அவசரத்திள் உள்ளே
வந்த பேத்தியை பார்த்து முறைத்தார் ருக்கு பாட்டி.
‘ஆகா
உள்ளே வரும்போதே இந்த ருக்கு என்னை இப்படி முறைச்சு பார்க்குதே. இத எப்படித்தான்
சமாளிகிறதோ?!’ என்று நினைத்தபடி
ஈஎன்று தனது பல்லெல்லாம் தெரியும்படி அசடாக சிரித்து,
“என்
செல்ல ருக்கு, இப்படியா வீட்டுக்கு வந்த புள்ளைய பயமுறுத்தரதுபோல முறைக்கிறது?. மீ
பாவம், இந்த பத்ரகாளி தோற்றத்த என்னால பார்க்க முடியல. கொஞ்சம் சிரியேன்.
அப்போதான் புன்னகை அரசி மாதிரி அழகா பார்க்கிற மாதிரி இருப்ப”.
அவளின்
அசட்டு சிரிப்பையும் பசப்பும் வார்த்தையையும் கண்டு
மயங்காமல் தனது கோபப்பார்வையை மாற்றாமல் கூறினார், “இதுக்குத்தான்
உன்னைய காலேஜ் படிக்க அனுப்ப வேண்டாமென்று படிச்சு படிச்சு சொன்னேன்.
யாரு கேட்டா? அதென்ன பொட்டபுள்ள வெளியில தங்குறது? காலேஜில உன் கூட உனக்கு பாடம்
எடுக்குற டீச்சர் இருக்குறதா நீ சமாதானம் சொன்னாலும் என்னால இதெல்லாம் ஏத்துகிட
முடியாதுனு தெரியாதா பாப்பா?. இனி உன்னைய
காலேஜ் அனுப்பட்டும் உன் அப்பன் அப்பத்தெரியும் இந்த ருக்குவின் கோவம்”.
ஏனோ கடந்த
சில நாட்களாக பேத்தியின் முகத்தில் இருந்த கலக்கமும், நேற்று இரவு அதை தொடர்ந்து
வீட்டிற்கு வராமல் காலேஜில் தங்குவதாகவும் பாதுகாப்பாக பெண்கள் மட்டும் ஒரு
பிளாக்கில் ஆசிரியரின் துணையுடன் இருப்பதாக அவள் போன் செய்து சொன்னதாக,
இரவு வீட்டிற்கு வந்த கணேசப்பிள்ளை கூறியதில் இருந்து அவருக்கு மனதில் ஏதோ தன்
பேத்திக்கு ஆபத்து என்பதுபோல் ஓர் உறுத்தல் ஆரம்பித்திருந்தது.
எனவே
சரியாக தூக்கம் வராமல் எப்பொழுது யாழிசை வீட்டிற்கு வருவாள்?
அவளை தன் கைக்குள்ளேயே பொத்தி வைத்துக் கொள்ளவேண்டும். தன் அருகில்
தனது பேத்தி இருந்தால் அவளை எந்த ஆபத்தும் தீண்டாமல் தான் பார்த்துக் கொள்ளலாம்
என்றும் வழிமேல் விழிவைத்து காத்திருந்தாள் ருக்கு பாட்டி.
எனவே தன்
மனதின் உள்ள உறுத்தல் தணியும் வரை அவளை படிக்க கூட காலேஜுக்கு அனுப்ப ருக்கு
பாட்டிக்கு தயக்கம் உண்டானது.
----தொடரும்---

No comments:
Post a Comment