anti - piracy

Post Page Advertisement [Top]

                                                                            


------------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்-17

 ருக்கு பாட்டி யாழிசையை கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததும் அவள் ஒரு நிமிடம் செய்வது அறியாமல் திகைத்து நின்றாள். மறுநிமிடம் அத்திகைப்பில் இருந்து மீண்டு,என்ன சொல்றீங்க பாட்டி? காலேஜ் போகக்கூடாதா! என்ன விளையாடுறீங்களா? மத்தநாள் போல் இன்னைக்கு உங்க கூட என்னால போராடிட்டு இருக்கக் கூட நேரம் இல்லாம அவசரமா காலேஜ் கிளம்புறேன். ஏன் இப்படி?”

 

“பாப்பா நான் சொல்றது உனக்கு விளையாட்டா தெரியுதா? உன் அப்பனை உனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கட்டிவைக்க சொன்னா அதை காதிலேயே வாங்காம உன்னை காலேஜுக்கு படிக்க அனுப்பிட்டான். இப்போ நான் தான் தவிச்சுகிட்டு இருக்க வேண்டியிருக்கு. இன்னைக்கு அவன் கிட்ட சொல்லி ஒரு முடிவு எடுக்காம நான் விடுறதா இல்ல”

 

“ஐயோ, புரிஞ்சிக்கோங்க பாட்டி. எட்டு மணிக்கெல்லாம் இன்னைக்கு காலேஜ் பஸ் வந்துடும், இன்னைக்கு ப்ரோகிராமில நான் சேர்ந்திருக்கேன்.

 

புரோகிராம் ஆர்கனைஸ் பண்ணும் போது சந்தியாக்கூட துணைக்கு நான்தான் இருக்கணும். இப்படி திடீர்னு போகாம இருந்துட்டா திரும்பி காலேஜ் போகும்போது எல்லோரும் என்னை வறுத்து எடுப்பாங்க, ப்ரோகிராம் வேறு குழம்பிபோய் அதற்கு காரணமான என்னை எல்லோரும் சேர்ந்து ஒருவழி பண்ணிடுவாங்க”.

 

வீட்டின் பின்னால் இருந்த குளியலறையில் குளித்துவிட்டு மேல் துண்டால் தலையை துடைத்துக்கொண்டே வந்த யாழிசையின் அப்பா கணேச பிள்ளை,

 

“என்ன பாப்பா இப்பத்தான் வந்தயா? வந்ததுமே பாட்டிகிட்ட என்ன வழக்கு?”

 

அவ்வளவு நேரமும் தனது பாட்டியிடம் விரைப்பாக பேசிக்கொண்டிருந்த யாழ் அவளின் அப்பாவை பார்த்ததும் தன்னுடைய பேச்சின் தன்மையை மாற்றிக்கொண்டு சாந்தமான குரலில், “இல்லப்பா பாட்டி என்னைய காலேஜுக்கு போகக்கூடாது என்று சொல்றாங்கப்பா!

 

காலேஜில் பங்சன் நடக்குது. நான் ப்ரோக்கிராம்ல வேற கலந்திருக்கேன். கொஞ்ச நேரத்தில பஸ் வேற வந்துடும். கிளம்ப விடாமல் என்னை நிறுத்தி வச்சு பாட்டிதான் வழக்காடிட்டு இருக்காங்க.”

 

என்னம்மா புள்ளைக்கு லேட்டாயிடுச்சுல்ல, எதுனாலும் அவள் வந்ததும் பொறுமையா பேசிக்கலாம். இப்போ அவள் கிளம்பட்டும்”

 

ருக்கு பாட்டியோ “வேண்டாம் கணேசா, நான் அவளை காலேஜுக்கு அனுப்புறதா இல்ல. முதல்ல அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பாரு! என்னமோ என் மனசு கிடந்து தவிக்குது.”

 

அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கணும். அவ்வளவுதானே? நான் இப்பவே பாப்பா ஜாதகத்த எடுத்து நம்ம ஜோசியருகிட்ட காட்டிட்டு அப்படியே தரகரைப் பார்த்து மாப்பிள்ளை நம்ம தகுதிக்கி ஏத்த மாதிரி கொண்டுவர சொல்றேன். நல்ல இடத்து மாப்பிள்ளை அமையுற வரை அவ காலேஜுக்கு போகட்டும்.

 

என்னமோ போ, இப்பவாச்சும் அவளுக்கு வரன் பாக்குறேனு சொன்னியே அதுவர எனக்கு சந்தோசந்தான். கல்யாணம் முடியிற வரை அவள் வீட்டு வேலைய பார்க்க கத்துக்கிடட்டும் இனி அவள தனியா வெளிய அனுப்ப எனக்கு மனசு வரல்ல.”

 

அவர்கள் இருவரும் பேசுவதை கேட்ட யாழிசைக்கு இத்தனை நாள் தன் படிப்புக்கு சப்போர்ட் செய்த அப்பா இப்போ திடீர்னு இப்படி பேசவும் ‘அவ்வளவுதான் நான் நினைத்தமாதிரி இனி என்னை டிகிரி வாங்க விட மாட்டங்கபோல. இவங்கள எப்படித்தான் சமாளிக்கிறது?’ என்று யோசனை செய்துக்கொண்டு இருந்தவளின் செவிகளில் விழுந்த அவளின் தந்தையின் வார்த்தைகளில் அவளது இதயத்துடிப்பு கொஞ்சம் இயல்புக்கு திரும்பியது.

 

ஆம்! கணேசபிள்ளை அவரது அம்மா ருக்குவிடம் “இங்க பாரும்மா இந்த காலத்தில் என்னதான் என் மகள் அழகான குணவதியான பொண்ணா இருந்தாலும் நான் அவளுக்கு சேர்த்து வைச்சிருக்கும் வெறும் இருபது பவுனுக்கு என்னைய மாதிரி வாய்க்கும் வயித்துக்கும் போதுமான அளவு சம்பாத்தியம் செய்யும் மாப்பிள்ளயாத்தான் பார்க்க முடியும். ஆனா அதுவே என் மகள் இஞ்சினியர் படிப்ப முடிச்சானா இன்னும் நல்ல பெரிய உத்தியோகத்தில் இருக்கிற மாப்பிள்ளை அமைகிற வாய்ப்பு இருக்கு.

 

இந்த காலத்தில் புள்ளைங்க நாம குடுக்கிற நகை நட்டை பெருசா பார்த்து கல்யாணம் முடிக்கிறது இல்ல. இப்போ எதிர்பார்ப்பெல்லாம் நல்லா படிச்சிருக்கணும். தன்னையப் போலவே தன் மனைவியும் வேலைக்குப்போய் கைநிறைய சம்பாதிக்கணும் அப்படினுதான் பெரிய உத்தியோகத்துக்கு போகிற பிள்ளைங்க நினைக்கிறாங்க.

 

கடவுள் புண்ணியத்தில அவளுக்கு படிப்பு நல்லாவே வருது. நம்ம அய்யா தயவால தகுதிக்கு மீறி அவளை படிக்க வைக்கவும் முடியுது.

 

என்னோட சிநேகிதனோட புள்ளையும் இவளமாதிரி இஞ்சினேரிங் படிக்கும் கடைசி வருஷ படிப்பின் போது காலேஜுக்கு கம்பெனியில் இருந்து வந்து வேலைக்கு அவளை எடுத்துகிட்டாங்கலாம். அவ வேலையை பார்த்து பெரிய இடத்தில் கைநிறைய சம்பாதிக்கும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து விரும்பி வந்து கல்யாணம் செய்துக்கிட்டாங்கலாம்.

 

தன் பொண்ணு காரு பங்களானு இப்போ வசதியா வாழ்கிறாள்னு என்னைய பார்க்கும் போதெல்லாம் பெருமை பேசுறதோட நம்ம யாழிசையையும் நல்லா படிக்க வை! இவளின் வாழ்க்கைத்தரமே உயர்ந்திடும்னு சொல்லுவான்.

 

அவன் சொல்வதை யோசித்துதான் நம்மைவிட படித்து, அவள் நல்ல நிலைமைக்கு போவதற்கு சந்தர்ப்பம் இருக்கும் போது நாம எதுக்கு அவசரப்பட்டு கல்யாணத்தை இப்போவே முடிக்கணும்?”

 

“தாங்ஸ்ப்பா தாங்ஸ். நான் பயந்தே போய்ட்டேன். பாட்டி சொல்றத கேட்டு நீங்க என்னை காலேஜ் போக வேண்டாம்னு சொல்லிடுவீங்களோனு பயந்திட்டேன். அப்பானா அப்பாதான். எனக்கு பஸ் வந்துடும் நான் போய் கிளம்பறேன். பாட்டிய எனக்காக நீங்க சமாளிங்க” துள்ளிக்குதித்து கிளம்ப ஓடிவிட்டாள்.

 

அதன் பின் அவளின் பாட்டி ருக்கு என்னமோ கணேசா என்று தந்தையிடம் பேசுவதும் அதற்கு அவர் சமாதானப்படுத்துவதும் கேட்டுக்கொண்டே வேகமாக கிளம்பிக்கொண்டிருந்தவளின் மொபைல் ஒலி எழுப்பியது.

 

தீரன் வைத்திருந்த யாழினியின் மொபைலில் அவளது தோழி லலித்தாவிடம் இருந்து அழைப்பு வந்ததும் அதை இப்பொழுது அவளுக்கு வாங்கித்தந்திருந்த மொபைளுக்கு டைவர்ட் செய்திருந்தான்.

 

யாழினி தன வைத்திருந்த அந்த விளாசி உயர்ந்த போனை வீட்டில் பார்த்து எது என்று கேள்வி வந்துவிடக்கூடாதே என்ற பதட்டத்தில் சட்டென அட்டன் பண்ணியபடி மறைவாகச் சென்றாள் யார் என்று பார்காமலேயே அட்டன் பண்ணியவளிடம்

 

“யாழி,., ஏய்... நீ தானே?” என்ற குரலிலேயே அவளுடன் பஸ்ஸில் ஒன்றாக காலேஜ் செல்லும் லலித்தாவென கண்டுக்கொண்டு சொல்லு லல்லி என்றாள்.

 

"என்ன சொல்லு லல்லினு அசால்டா கேக்குற.... அடியே பஸ் உன் ஸ்டாப்ப தாண்டிடுச்சு இன்னும் என்னடி செய்ற வீட்டில? என்றதும்.

 

அச்சோ! பஸ் போயிடுச்சா. சரி நான் அடுத்து வருகிற அவுட் பஸ்ஸில் வந்துடுறேன். ஏய் லல்லி நம்ம ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிருடீ நான் காலேஜ் பஸ் மிஸ் செய்துட்டேன். அவுட் பஸ் பிடித்து காலேஜுக்கு வர எப்படியும் 9மணி ஆகிடும்னு சொல்லு மறந்திடாத”.

 

பேசிவிட்டு வேகமாக கிளம்பி பாட்டி, அப்பா போயிட்டுவாறேன் என்று வெளியில் வாசலுக்கு சென்ற பேத்தியை “அடியே சாப்பிட்டு போ, பாப்பா”

 

“நான் கேண்டீனில் சாப்பிட்டுக்கிறேன்” என்று கூறியபடி இன்னும் இருந்து பதில் சொன்னால் ஏதாவது காரணத்தை வைத்து பேச்சை இழுத்து இந்த ருக்கு இன்னும் லேட் செய்திடும், இல்லாட்டி என்னை காலேஜ் போகவிடாமல் செய்திடும் என்றபடி பஸ்ஸ்டாபிற்கு நடையை கட்டியவள் தனது பர்சை எடுத்து அவுட் பஸ்சிற்கு தேவையான சில்லறை ரூபாயை எடுத்து வைத்துக்கொள்ள திறந்தாள்.

 

அதில் மிதுனன் இன்று காலையில் சந்தியாவுடன் காரில் ஏறிக்கொண்டிருக்கும் போது விரைந்து ஓடிவந்து “கேர்ல்ஸ் இந்தாங்க என்று பிட் நோட்டிஸ் ஒன்றை கைகளில் கொடுத்தவன்,

 

நைன் ஓ கிளாக் ப்ரோகிராம் ஆரம்பிக்கும் முன் friends கூட ஒரு பத்து நிமிஷம் நம்ம காலேஜ் பற்றி இல்லாத பொது விஷயத்திற்கான மீட்டிங் ஒன்று அரேஞ் செய்திருக்கிறேன்.

 

இந்த நோட்டீசை அதில் கலந்துக்க முன்ன படிச்சிட்டு ஜாயின் பண்ணுங்க. இட்ஸ் மை ஹம்பல் ரெக்வெஸ்ட் friends. நைன் ஓ கிளாக் லாபியின் பின்புறம் மீட் பண்ணலாம்.” என்று கூறிவிட்டு அவசரமாக சென்றான்.

 

அப்பொழுது நேரமின்மையின் காரணமாக அந்த நோட்டீசை தனது பர்ஸ்சினுள் தினித்து விட்டவள் அதன் பின் தோழியுடன் வந்த மிதுனனை பற்றிய பேச்சில் அதை படிக்க மறந்துவிட்டாள். ஆனால் இப்பொழுது சில்லறை எடுக்கும் போது கையில அகப்பட்ட அதை நடந்துக் கொண்டே வாசித்துப்பார்த்தாள்.

 

அதில் சி.என்.ஜி நிறுவனம் அவர்களின் ஊரைச் சுற்றி உள்ள எட்டு ஊர்களின் பெரும்பான்மையான விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அதற்கு தற்போது உள்ள அரசு சப்போர்ட் செய்கிறது என்றும் அதனால் அதனை தடுத்து நிறுத்தனும் என்றும், அதன் முதல் முயற்சியாக இன்று வரும் அமைச்சரிடம் மனு கொடுக்க மாணவர்கள் தீர்மானிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவ்வாறு அந்த நிறுவனம் நம்மிடையே ஊடுருவினால் என்னென்ன பாதகம் விழையும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

அதில் சி.என்.ஜி நிறுவனம் என்றதுமே அந்த நிறுவனத்தின் சார்பில் தானே தீரமிகுந்தன் இங்கு வந்திருக்கிறான் என்று எண்ணம் யாழிசையின் மனதை கனக்க வைத்தது.

 

மேலும் அமைச்சரான ரங்கராஜனுக்கும் தீரமிகுந்தனுக்கும் நல்ல உறவு இருப்பதை அன்று சந்தியா வீட்டில் தான் சென்றதின் மூலம் புரிந்து வைத்திருந்த யாழிசை, மிதுனன் இந்த விஷயத்தை மினிஸ்டர் ரங்கராஜனிடம் எடுத்துக்கொண்டு போனால் கண்டிப்பாக தோல்வியில்தான் முடியும் என்றும் மேலும் அவரிடம் மாணவர்கள் சார்பில் கொடுக்கப்படும் அந்த பெட்டிஷன் குப்பைக்குத்தான் போகும் என நினைத்தவள் மனம் வருந்தினாள்.

 

மேலும் மிதுனன் தந்திருந்த நோட்டீஸ்யில், அந்த நிறுவனத்தின் ஊடுருவலால் நிகழும் பாதகங்களை வாசித்தவள் உள்ளம் உலைக்களமாக கொதித்தது. சே இப்படி நாட்டுக்கு துரோகம் நினைப்பவனா? என் அய்யாவின் மகன்?

 

வானவராயர் ஐயாவின் மகன்ற காரணத்தால அன்று தன்னிடம் நடந்துகொண்ட முறைக்கு கோபம் கொள்ளாமல் தவிர்க்கவும் அவனின் காதல் மொழியில் சற்று உள்ளம் இளகவும் முடிந்தது.

 

ஆனால் அதே தீரமிகுந்தன் நாட்டுக்கு அநியாயம் செய்ய முயல்கிறான் என்று தெரிந்ததும் அவளால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

 

அப்பொழுது அவள் நடந்து வந்துகொண்டிருந்த பாதையில் அவளின் முன் வந்து நின்றான் தீரன்.

 

அப்பொழுதுதான் அவள் அவனை பற்றிய குற்றச்சாட்டை வாசித்ததினால் அவனை நேரில் கண்டவுடன் கனல் கக்கும் கண்களுடன் பார்த்தாள்.

 

தீரன் அவளின் முகத்தில் தோன்றியிருந்த ருத்திர பாவத்தை கண்டு புருவச்சுளிப்புடன் “பேபி” என்றான்.

 

அவன் தன்னை இப்பொழுது பேபி என்று அழைத்தது அவளுக்கு வேப்பங்காயாக கசந்தது. என் மண்ணையே மலடாக்கும் எண்ணம் கொண்ட ஒருவன் என்னை செல்லமாக கூப்பிடுவதா? என்று அருவருப்பு அவளுக்கு உண்டானது.

 

யார் யாருக்கு பேபி? சீ! தேசத்துரோகி உன்னைய போய் ஒரு நிமிஷம் எனக்கு மனதில் நெருக்கமாக நான் நினைத்து விட்டேனே! என்று என் மீதே அருவருப்பா இருக்கு.” என்று ஆவேசமாக கையை ஆட்டி பேசியவளின் கையில் இருந்த காகிதத்தை பார்த்தவன் சூழலை ஒருநிமிடத்தில் புரிந்துக்கொண்டான்.

 

அப்பொழுது அவளை சமாளிக்கும் பொருட்டு “ஹேய் அந்த மிதுனன் கொடுத்த பிட் நோட்டீசுக்கு போய் நீ இவ்வளவு இம்பார்டன்ட் கொடுக்கணும்னு அவசியமில்லை பேபி”,

 

“நிறுத்துங்க! எனக்கு யாருக்கு இம்பார்டன்ட் கொடுக்கணும் யாருக்கு இம்பார்டன்ட் கொடுக்கக் கூடாதுனு தெரியும். அதை நீங்க எனக்கு சொல்லணும்ற அவசியம் இல்ல. நீங்க என்கிட்ட நடந்துகிட்ட விதத்த நான் பெரிசுப்படுத்தாம இருந்ததுக்கு காரணம், எங்க ஐயாவின் மகன் நீங்கள்னு காட்டிய ஆதாரம் உண்மையென பட்டதினால தான்.

 

இனி எனக்கு உங்களின் மேல் நல்ல எண்ணம் வராது. என் நலனா? என் வானவராயர் அய்யாவின் நலனா? கேட்டா என் ஐயாவின் நல்லதுதான் எனக்கு பெரிசா தெரிந்தது.

 

எங்க வானவராயர் ஐயாவா என் தாய் பூமியான்னு பார்த்தா என் தாய் பூமிதான் எனக்கு பெரிசு. அதை மலடாக்க வந்தவன் நீ.”

 

என்று அவன் முன் ஒற்றை விரலை நீட்டி “நீ தான் என் முதல் எதிரி. உன்னைய நான் எதிர்த்து நிற்பதைத்தான் என் வானவராயர் ஐயாவும் விரும்புவார்.” என்று ஆவேசமாக பேசினாள் யாழிசை.

 

தீரனுக்கு நிறைய நேரம் அவளிடம் அங்கு நின்று பேசி அவளை சமாதானப்படுத்தி கூட்டிப்போகும் சூழ்நிலை இல்லை. எனவே அவளுக்கு யோசிக்க சந்தர்ப்பம் கொடுக்கக்கூடாது என்று முடிவெடுத்து.

 

“ஓகே பேபி வா. எதுனாலும் காரில் போய்க்கிட்டே பேசலாம்” என்று அவளின் கை பிடிக்க கை நீட்டினான்.

 

ஏய் தொட்ட உன் கையை ஒடச்சுடுவேன்”, என்று கர்ஜித்தவள் அன்றுபோல் இன்றும் தன்னை இழுத்துபோட்டு காரில் போக வழிவிட்டுவிடக்கூடாது என்று ஒருநொடியில் முடிவெடுத்து திரும்பி ஓட ஆரம்பித்தாள்.

 

ஆனால் இரண்டே எட்டில் அவளை பிடித்த தீரன். தனது பேண்டின் பின் பாக்கெட்டினுள் இருந்த துப்பாக்கியை எடுத்து அவள் நெற்றிப் பொட்டில் குறி வைத்தவன் “ம் அசையக்கூடாது வா வந்து வண்டியில் ஏறு” என்று கர்ஜித்தான்.

 

அப்பொழுதுதான் அவள் தன்னை சுற்றி பார்த்தாள். மலைப் பிரதேசமாகிய அந்த ஒற்றையடிப் பாதையில் தானும் அவனும், சற்று தள்ளி ஒரு காரும் மட்டுமே இருப்பதை உணர்ந்தவள், அவன் கையில் இருந்த துப்பாக்கியையும் அவன் கண்காட்டிய ரவுத்திரத்திலும் இனி அவனிடம் இருந்து தன்னால் தப்பிக்க முடியாது என்ற நிதர்சனம் புரிந்ததும் யாழிசையின் உள்ளம் சோர்ந்தது.

 

தலை பாரமாக அழுத்த, கண் இமை கணக்க எழுந்து அமர்ந்த யாழிசை தான் புதிதாக உள்ள இடத்தில் தன்னை உள்வாங்கி இருந்த மென்மையான மெத்தையின் ஸ்பரிசத்தில் தன்னிலை உணர்ந்தவள் தான் காரில் தீரமிகுந்தனால் கடத்தப்பட்டது நினைவிற்கு வந்தது.

 

துப்பாக்கியை தனது நெற்றியில் வைத்து அவன் மிரட்டவும் ஒருநிமிடம் அதிர்ந்தாலும் மறுநிமிடமே சுடப்போறீயா சுடு துப்பாக்கிக்கு பயந்து நீ சொல்வதற்கு அசைந்துக் கொடுக்கமாட்டேன்.

 

அவளின் கண்களில் பயம் இருந்தாலும் அதை மறைத்து தன்னிடம் வாயாடும் அவளின் இந்த புது அவதாரத்தை தீரன் அந்த நிலையிலும் ரசிக்கவே செய்தான்.

 

ஆனாலும் மறுநிமிடமே அவளை கோழிக்குஞ்சை அமுக்கும் பருந்துபோல் தனது கைவளைவிற்குள் கொண்டுவந்தவன் ஒரு கர்சீபினை அவளின் மூக்கில் அழுத்தினான்.

 

அதில் இருந்த மயக்க மருந்தினை அவள் தம் கட்டி சுவாசிக்காமல் அடக்குவதை புரிந்துகொண்ட தீரன் அவளை அப்படியே இரண்டு எட்டு இழுத்து கொண்டு காரின் அருகில் போய் அவளுடன் காரில் ஏறினான்.

 

காரில் முன்பு ட்ரைவர் இருக்கையில் அமர்ந்திருப்பவன் வேறு தேசத்தவன் என்று அவனின் உருவம் அடையாளம் காட்டியது.

 

அவர்கள் இருவரும் ஏறியபின்பு கார் வேகமெடுத்தது. தீரனோ அவளைத் தன்னுடன் அணைத்துப் பிடித்தவன் அவள் முகத்தில் வைத்திருந்த கர்சீப்பை பத்து நிமிடம் விடாமல் அவளிம் மூக்கின் அருகிலேயே வைத்திருந்தான்.

 

சிறிது நேரத்திற்கு பின் அவளால் தம்பிடிக்க முடியாமல் அந்த மருந்தை சுவாசித்தவள் மயக்கத்திற்கு சென்றாள்.

 

அதுவரை அவளை பிடித்திருந்த தீரன் அவளிடம் “சாரி பேபி, ரொம்ப அடம்பிடிப்ப போல? ஸ்கூல் ஸ்டூடண்ட் மாதிரி இத்துனூண்டு இருந்துக்கிட்டு என்னமா துள்ளுற?

 

அவன் அழுத்திபிடித்ததினால் கன்றி போய்யிருந்த அவளின் மணிக்கட்டையும் கன்னத்தையும் கண்டவன் “சாரி சாரி பேபி இனி நான் சொல்றபடி நீ நடந்துகிடணும் ஓகே?” என்று கூறியபடி கன்றிய இடத்தில் வாயினால் காற்றை ஊதினான்.

 

அவளின் மூளையில் அவனின் பேச்சும் செயலும் பதிவாகியிருந்ததை இப்பொழுது அவளின் நினைவடுக்கு அவளிடம் ஞாபகப்படுத்தியது.

 

கண்விழித்தவள் இரவாகிவிட்டதை உணர்ந்து திடுக்கிட்டாள். காலையில் தன்னை பாட்டி அவ்வளவு தடுத்தும் கேளாமல் இப்படி வந்து மாட்டிக்கொண்டேனே. என்னைக் காணாமல் அப்பாவும் பாட்டியும் தவித்துவிடுவார்களே.

 

யோ என்று தலையில் கை வைத்தவள். அவன் என்னிடம் வம்பிழுத்த முதல் தடவையே யாவிடம் அவனை பற்றி கம்ப்ளைன்ட் செய்யாத தனது முட்டாள் தனத்தை நினைத்து இப்பொழுது வருந்தினாள்.

 

அவள் இருந்த படுக்கையை விட்டு மெதுவாக எழுந்து வந்து கதவை திறந்து பார்க்க முயன்றாள். ஆனால் அது பூட்டப்படிருந்தது.

 

வேகமாக ஜன்னலின் அருகில் சென்று திறந்து பார்க்க நினைத்தாள் .ஆனால் அவள் நுகர்ந்த மயக்க மருந்தின் வீரியத்தினாலோ என்னவோ தலை சுற்றியது. அதைப் பொருட்படுத்தாது முன்னேறியவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.

 

சுவற்றை பிடித்தவள், இரவு விளக்கின் ஒளியில் சுவற்றைப் பிடித்து நடந்தவளின் கண்ணில் ஒரு கதவு தெரிந்தது அதை திறந்ததும் அது பாத்ரூம் என்று தெரிந்ததும் அவள் அடக்கிக் கொண்டிருந்த வாமிட் அவளையும் மீறி வெளிவந்தது.

 

பாத்ரூமின் வாசலில் நின்றபடி வாமிட் செய்துக் கொண்டிருந்தவளின் காதில் கதவு திறக்கும் ஒலியோ அதை தொடர்ந்து உள்ளே வந்த உருவத்தையோ அவளின் உடல் சோர்வின் காரணமாக உணரமுடியாமல் போனது.

 

தீரனால் யாழிசை கடத்தபடுவதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்பே மிதுனனும் கடத்தப்பட்டான்.

 

கல்லூரியில் மினிஸ்டரை வரவேற்கவும் திடீரென்று அவருடன் வேர்ல்ட் பேமஸ் பிஸ்னஸ் அட்வைசர் மற்றும் தீ போல வேகமாக வளர்ந்துவரும் பிஸ்னஸ்மேன், அத்துடன் சி.என்.ஜி நிறுவனத்தின் பிரதிநிதி ஆகிய அம்சமெல்லாம் ஒருங்கே கொண்ட தீரமிகுந்தன் வருவதை நினைத்து ஆச்சரியமான காலேஜ் நிர்வாகம் நிகழ்ச்சிகள் சிறப்பாக இருக்க மேலும் மெனக்கெட வேண்டும் என்று தன் ஸ்டாப்களை கூப்பிட்டு அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருந்தது.

 

கூடுதலாக பாதுகாப்பு மற்றும் அரேஞ்மெண்டிர்க்கு தீரனின் பாதுகாப்பை முன்னிறுத்தி அவனின் சார்பில் வந்திருந்த செக்யூரிட்டி டீமிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் இன்ஸ்ட்ரக்சன் கொடுக்கப்பட்டது.

 

அப்பொழுது ஒரு ஸ்டாப் எழுந்து ப்ரோகிராம் ஆர்கனைசிங் செய்வதற்கு நான் இன்ஜார்ஜ் வைத்திருந்த மிதுனன் ஏனோ இன்னும் காலேஜ் வரலை. இப்பொழுது வேறு மாற்று ஏற்பாடு பண்ணனும்.

 

அவர் அவ்வாறு கூறியதை கேட்ட பிரின்சி “என்ன சொல்றீங்க? மிதுனன் இன்னும் வரலையா? அவன் அப்படி அசால்டாக இருக்ககூடியவன் கிடையாதே! அவன் இருந்து செய்தால்தான் பங்சன் சிறப்பாக முடியும். அவனை முன்னிலை படுத்தித்தான் எல்லா வேலையும் செய்தும் சரிபார்த்தும் இருந்தேன். அவனது மொபைல் நம்பருக்கு முயற்சி செய்து பார்த்தீங்களா?

 

பார்த்தாச்சு சார். நாட் ரீச்சபில்னு வருது. அவன் வீட்டு நம்பருக்கும் முயற்சி செய்து கேட்டுட்டேன். அவங்க நேத்து காலையில் காலேஜ் வந்தவன் அதுக்குப் பிறகு வீட்டிற்கே வரலைனு சொல்றாங்க”.

 

அவர் கூறியதை கேட்டவர் “இது யோசிக்கக்கூடிய விசயம்தான். இருந்தாலும் இப்போ அதை நம்மால் விசாரிக்க முடியாத இடத்தில் இருக்கோம். இப்போ பங்சன் ஆரம்பிச்சுடும், அதை நல்லா நடத்துறதுக்கு இப்போ வழியை பார்ப்போம்.

 

இன்னைக்கு ப்ரோகிராமில் கலந்துக்க வர்றவங்களை மொத்தமாக லாபியில் ஆஜர் ஆகச்சொல்லுங்க. எம்.இ ஸ்டூடன்ட் ஜெயகுமாரை வரச்சொல்லுங்க. மிதுனனின் இடத்தில் அவனை வைத்து உடனே ப்ரோகிராமை அரேஞ் செய்ங்க. வேகமா வாங்க, நானும் கூட வருறேன்.” என்று ப்ரின்சியும் லாபிக்கு விரைந்தார்.

 

லாபிக்கு வந்தவர்கள் எல்லோரையும் ஆஜர் படுத்தி சந்தியாவிடம் மிதுனன் கொடுத்த டீடைல்ஸ் வைத்து டிஸ்கஸ் செய்தவர்கள் இப்பொழுது யாழிசை வராததை கண்டு அடுத்த டென்சனுக்கு ஆளாகினர்.

 

பின்பு போன வருடம் ஆனுவல் பங்சனில் யாழிசைக்கு அடுத்து ஆடிய மற்றொரு பெண்ணை அழைத்து அவளுக்கு தெரிந்த ஏற்கனவே அவள் ப்ராக்டீஸ் செய்துவைத்திருந்த பரதத்துடன் நிகழ்ச்சி துவங்க முடிவெடுக்கப்பட்டது.

 

சந்தியாவிற்குத்தான் இருப்பே கொள்ளவில்லை. அவளின் தோழி யாழிசையின் மொபைலில் அவளை தொடர்பு கொள்ள முயன்றவளுக்கு நாட் ரீச்சபிள் என்ற பதிலே திரும்ப திரும்ப கிடைக்கவும் யாழிசையின் வீட்டு எண்ணுக்கு போன் செய்து பார்த்தாள். அவளின் தந்தை அவள் காலேஜிற்கு காலையிலேயே புறப்பட்டு சென்றுவிட்டதாக கூறியது சந்தியாவின் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.

 

யாழிசையின் தந்தை கணேச பிள்ளையை அப்பொழுது சமாதானப்படுத்த நான் கிளாசுக்கே இன்னும் போகலப்பா. அவள் கிளாசில் இருக்கலாம். நான் போய் பார்த்துக்கிடுறேன்” என்று உளறி கிண்டி மூடி மொபைலை வைத்தாள்.

 

மிதுனன் இருந்தாலாவது அவனிடம் யாழிசையை தேடி தரச்சொல்லி கேக்கலாம். ஆனால் அவனையும் காணோம்னு தேடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?’ என்று குழம்பிக் கொண்டிருந்தவளிடம் வந்த அவளின் தோழி,

 

“என்னடீ இப்படி திடீர்னு யாழிசை வராமல் காலை வாரிட்டா? எப்படியாவது நம்ம டான்சை அவள் இல்லாமல் மேனேஜ் செய்து ஆடி முடிக்கணும்.

 

இருக்கட்டும் நாளைக்கு அவள் வரட்டும். அப்போ இருக்கு அவளுக்கு” என்று கூறியவளுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்த சந்தியாவை ஊன்றி பார்த்தாள்.

 

அவள் கலக்கமாக இருப்பதை பார்த்தவள் “ஏய் என்னடி பிரச்சனை? ஏன் ஒருமாதிரி இருக்க? என்று கேட்டாள்.

 

அதன் பின் சந்தியா அவளிடம், “யாசிகா நான் சொல்வதை இப்போ யாரிடமும் நீ சொல்லிடாத உண்மை எதுனு சரியாய் தெரியாம நாம் இதை மத்தவங்ககிட்ட சொல்லக் கூடாது. ஆனால் என்னமோ எனக்கு கலக்கமாக இருக்குதுடி”.

 

அவள் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் சொன்னதை கேட்டவள், “நீ என்ன அவுக எப்படிவேனாலும் கேப்பாக அடிச்சுக்கூட கேப்பாக ஆனா நான் என்ன சொன்னேனு கேட்டா எதுவும் சொல்லிடாத! அப்படின்னு வடிவேலுகிட்ட விஷயத்தை சொல்லாமல் சுத்தலில் அந்த தவள வாய்காரன் விட்டதுபோல சொல்ற?!”

 

அவள் சொன்ன ஜோக்கை கேட்டு ரியாக்ட் செய்யாமல் நீ வேற நேரங்கெட்ட நேரத்தில் லந்து பண்ணிக்கிட்டு இருக்க. நானே யாழிசையின் அப்பா, அவள் காலையிலேயே காலேஜ் கிளம்பி வந்துட்டானு சொன்னதைக் கேட்டு. மணி பதினொன்னு ஆகிடுச்சு, இன்னும் அவள் வரலையேனு கவலையில் இதை யாரிடம் போய் சொல்லனு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். இதோ ப்ரோகிராம் வேறு ஸ்டார்ட்டாக போகுது. அதில் யாழ் காணோம் என்ற டென்சனில் அதில் என்னால் கான்சன்ரேட் செய்யமுடியாமல் இருக்கேன்.”

 

“என்னது! யாழிசை கிளம்பிவந்துட்டதாக அவங்க அப்பா சொல்றாங்களா? அப்போ நிஜமாவே அவள காணோமா? ஏய் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மிதுனனையும் காணோம் என்று பேசிக்கிறார்கள். ஒருவேளை இரண்டுபேரும் எஸ் ஆயிட்டாங்களோ? ஏற்கனவே மிதுனனின் கண் நீங்க இரண்டுபேர் இருக்கிற இடத்தையே சுத்தும். யாரை அவன் பிராக்கெட் போட்டிருக்கான்னு தெரியாமல் நாங்க குழம்பி போய் இருந்தோம். இப்போ இரண்டு பேரையும் காணோம் என்றால் அவள்தானா மிதுனனின் சாய்ஸ்?!” என்று அந்த நேரத்திலும் வம்பு பேசினாள் .

அவள் சொன்னதை கேட்டு கடுப்பான சந்தியா, “அடச்சீ வாயை மூடு. யாரைப்பார்த்து எஸ் ஆயிட்டாங்கலானு கேட்கிற, நீ நினைக்கிறமாதிரி ஓடிப்போகிற ஆளுங்க கிடையாது அவங்க இரண்டு பேரும்.

 

யாழிசை அவுங்க அப்பாவுக்கு தலைகுணிவு வர்றமாதிரி எந்த செயலையும் எப்போதும் செய்யமாட்டா. மிதுனனும் கோழையாக காதலித்தவளை வீட்டிற்கு பெண் கேட்டுப்போய் முறையா மணக்காமல் இழுத்துட்டுபோற ஆளும் கிடையாது. எனக்கென்னவோ இருவருக்கும் ஏதோ ஆபத்தோனு பயமா இருக்குது.

 

அவள் அவ்வாறு கூறியதும் “எதை வைத்து டீ நீ அவங்களுக்கு ஆபத்துனு சொல்ற?”

 

அவள் கேட்டதும் சந்தியாவால் தனது மனதில் உள்ளதை வெளியில் வெளிப்படையாக சொல்லமுடியாத துக்கத்தில் ஆழ்ந்தாள்.


---தொடரும்----

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib