------------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------
அத்தியாயம்-18
“நத்திங்
பேபி, டோன்ட் வொரி.... டுடே ஒன்லி யூ ஹவ் ஆன்சைட்டிங். இட் வில் பைன் பார் டுமாரோ...”
என்றபடி அவளை தாங்கிப் பிடிக்க முயன்றான்.
அந்த
நிலையிலும் அவனின் கரத்தில் தன் மேனி படுவதை தவிர்த்து விலகி
சுவற்றை பிடித்தபடி ஒரு எட்டு தள்ளி சென்று
நின்றாள்.
அவள்
தன்னை விட்டு விலகுவதை உணர்ந்தும் அதை தான் உணர்ந்ததுபோல் காட்டிக் கொள்ளாமல் அவளை
ஒரே எட்டில் நெருங்கி தன்னுடன் சேர்ந்து அணைத்துப் பிடித்ததுபோல் வைத்துக்கொண்டு
கட்டிலை நோக்கி நகர்ந்தான்.
அவள்,
“விடு... விடு என்னை..” என்றதை பொருட்படுத்தாது கட்டிலில் அவளுடன்
அமர்ந்தவன் அருகில்
இருந்த டீபாயின் இருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து “இந்த லைம் ஜூஸ் குடி....
அப்போதான் நீ பெட்டரா பீல் பண்ணுவ”.
“நா....ன் வீ....ட்டுக்கு போகணும்...
என்னை விட்டுடுங்க...” அவளின் சோர்வும், அவள்
குரலில் இருந்த பயமும் தீரனின் மனதை சற்றும் அசைத்ததாக அவளிடம் காட்டிகொள்ளாமல்.
“போலாம்..
போலாம்... கொஞ்ச நாள் என் வேலை இங்கு முடியிறவரை என்னோட கேர்ள்ஃப்ரெண்டா... பியான்ஷியா....
என்கூட இருந்துட்டு, நான் இந்தியா விட்டு கிளம்புக் போது நீ ப்ரீயா எங்கனாலும்
போலாம்....”
அவனின்
வார்த்தைகளை கிரகித்து உள்வாங்கியவள் புருவம் சுளித்து.... “என்னது.... நான் உன்
பியான்ஷியா? என்னை கடத்தி வைத்திருக்கும் வில்லன் நீ...! எத்தனை நாள் என்னைய அடைச்சு
வச்சிருக்க முடியும்?”
“நான் உனக்கு ஹீரோவாகணும்னு நினைத்தேன்!
ஆனால் நீ என்னை வில்லனாய் பார்க்கத்தான் ஆசை படுற போல.... ஓகே, தேட்ஸ்
யுவர் விஷ்.... நான் வில்லனவே... நடந்துக்கவா
பேபி...?”.
பயத்தில் அவளின் கண்கள் அகன்றது.... .தன்னை
மேலிருந்து கீழ்வரை ரசனையாக பார்த்தபடி அவன் பேசியதில் அவள் உடல் முழுவதும்
கூசியது..... அவன் கூறிய தோரணை அவளிடம் தீரன் தவறாக நடந்துக்கொள்ளப்போகிறான் என்று
அர்த்தப்படுத்துவதாக யாழிசைக்கு பட்டதும்,
பயம்
மற்றும் கோபத்துடன் “மேல கைய வச்ச.... ஒண்ண கொன்னே போட்டுடுவேன்.... அது
முடியாட்டி என்னைய நானே கொன்னுடுவேன்...”
அவளின்
அந்த பேச்சில் புருவம் சுளித்தபடி, திமிராக
அவளிடம் “ஆர் யூ திங் யூ ஆர் எ கிளியோபட்ரா? என்
மேல் இன்ட்ரஸ்ட் இல்லாத லேடீசை நான் போர்ஸ் செய்கின்ற பெர்சன் கிடையாது. ஆனால்
உனக்கு விருப்பம் இல்லையென்றாலும் நீ என் பியான்சியாக இனி இந்த உலகத்தின் முன்
அடையாளப்படுத்தபடுவாய்.
நமக்குள்ள
ஒரு அக்ரீமென்ட் போட்டுக்கலாம். மத்தவங்களுக்கு நாம் லவ்வர்ஸ்.... ஆனால் யாருமற்ற
நாம் இருவர் மட்டும் செலவழிக்கும் பொழுதுகளில் நான் லவ்வராக உன்னை
நெருங்க மாட்டேன். என்னுடைய கேமில் உன் சம்மதம் இல்லாமல் உன்னை இழுத்து வந்துட்டேன்....
உனக்கு என் மேல் இன்ட்ரஸ்ட்
இல்லைன்ற காரணத்துக்காக இந்த கேமில் இருந்து உன்னை வெளியே விட
முடியாது.
என்
பாதுகாப்பை விட்டு நீ போனாள் உன்னைய மர்டர் செய்துடுவார்கள்.... உனக்கு
பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி நான் தர சில
வருசம் ஆகும். அது வரை இந்த அக்ரீமென்ட் டிராமாக்கு நீ
அக்சப்ட் செய்துதான் ஆகணும்
பேபி...”
.
அவன் அவ்வாறு கூறியதும் யாழிசை பயத்திலும் பதட்டத்திலும் அழுகையிலும்
திணறியபடி,
“என்னைய என்னெனு நினைச்சுகிட்டு இருக்குறீங்க...? அக்ரீமெண்டாம்...
காதலாம்... ஏதோ கேமாம்..... எப்படி தெரியுது என்னை பார்த்து உங்களுக்கு? வேண்டாம்...
இது சரியில்ல..... என்னைய காணோம்னு தெரிந்ததும் வானவராயர் ஐயா இப்போ தேட
ஆரம்பிச்சுருப்பார். அவர் கண்டுபிடிக்கிறதுக்குள்ள என்ன நீயாவே விட்டுடுவது உனக்கு
நல்லது”.
அவனுக்கு
ஆயிரம் சிந்தனைகள் அதனால் உண்டான டெண்சங்களிலும்
அவளின் அருகாமை தன்னை ஏதோ வகையில் பாதிப்பதை அவன்
உணர்ந்துகொண்டான்.
தன்னுடைய
இத்துனை டெண்சன்களை தவிர்க்க அவன் மதுவை எடுக்க தயங்கினான்.... காரணம் அதனால்
அவனின் யோசனையில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டுவிடுமோ என
எண்ணினான் .
அவன்
எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக கையாலவேண்டியிருந்தது... அவன்
எதிர்த்து செயல்படுவது சாதாரண சக்திகளுடன் அல்ல. உலகத்தையே ஆட்டிப்படைக்கும்
இன்றைய நவநாகரீக கார்ப்பரேட்டுகளின் போர்வைக்குள் இயங்கும் அரக்க குணமுடைய பணம்
என்ற சக்திக்கொண்ட பெரும் முதலைகளிடம், வெறியர்களிடம்.
அவனின்
இச்சூழலில் அவளின், அருகாமை தன்னை பாதிப்பதை உணர்ந்தவன் எரிச்சலடைந்தான்... தனது
கையருகில் உள்ளவளின் அணைப்பை தான்
நாடுவதை தடுக்க தன்னிடமே போராடினான்.
வகுலாவினால்
ஏற்பட்ட காயத்திற்குபின் தன்னுடைய வாழ்வில் கல்யாணம் என்ற ஒன்றின் மூலம் இன்னொரு
பெண்ணை முழுதாக நம்பி தனது வாழ்க்கையை பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று
முடிவெடுத்திருந்த தான், திரும்ப யாழிசையிடம் தடுமாறுவதை அவன் விரும்பவில்லை.
பெரும்
பணத்தை கண்டாள் பெண்கள் ஆசைகொண்டு பச்சோந்திகளாக மாறிவிடுவார்கள் என்று
வகுலாவினால் கிடைத்த அனுபவத்தால் எண்ணியவனின் மூளை யாழிசையிடம் பணத்தை காட்டி
தன்னை நோக்கி இழுக்க முயற்சித்து அது பலிக்காமல் போனது அவளின் நேர்மை என அவன்
எடுத்துக்கொள்ளவில்லை.
எனவே தன்
அழகிலும் ஆழுமையிலும் நம்பிக்கை கொண்டு அவளிடம் காதல் கல்யாணம் என்ற வார்த்தைகளை
பயன்படுத்தி தன்னிடம் கொண்டுவந்து தான் தேடும் அவளின் அருகாமையை அனுபவிக்கவும்
தனது கேமில் அவளை ஒரு கருவியாகவும் பயன்படுத்திக்கொள்ள நினைத்தான்.
அதன் பின்
இந்தியாவில் இருந்த தான் புறப்ப்படும்போது அவள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன்
இருக்க அவள் கனவிலும் எதிர்பார்க்காத ஓர் தொகையை கொடுத்து அவளைவிட்டு சென்றுவிடவேண்டும்
என நினைத்திருந்தான்.
ஆனால் தற்போதைய அவளின் பேச்சில் எரிச்சல் கொண்டான் தீரன். அவன் இந்த
இருநாட்களாக பல வேலைகளை செய்துகொண்டும் இன்னும் பலவற்றை நடத்திமுடிக்க
நடவடிக்கைகளை மேற்கொண்டும் இருந்தான்.
அவன்
நாடிவந்த இளைப்பாறல் அவளிடம் கிடைக்காது என்பதை ஏற்கப் பிடிக்கவில்லை.... தனக்கு
அவளின் மேல் ஏற்பட்ட சலனம் அவளுக்கும் அடி மனதில் முன்பு ஏற்பட்டதை அவளை இங்கு
மயக்கிக்கொண்டு வருவதற்குமுன் சந்தித்த வேளைகளில் கண்டு
கொண்டிருந்தான்.
ஒருவேலை தான் அன்பாக அணுகினால், தன்
மேல் உள்ள அவளின் அபிமானம் வெளிவந்து அவளுடன் இளைப்பார முடிந்தால்... என்ற எண்ணமே
அவனை அவளிடம் தயக்கமின்றி அணுக
வைத்தது
ஆனால்
அவளின் உதாசீனம் ஏனோ அவன் எப்பொழுதும் கடைபிடிக்கும் பொறுமையை தகர்த்தெறிந்தது.
அவளிடம் மட்டும் அவன் போடும் கணக்கு எல்லாமே தவறாக போவதாக ஆத்திரம் அவனுக்குள்
விளைந்தது.
அவனின் பலகீனமாக
யாழிசை இருப்பதாக தீரன் அந்த நேரம் உணர்ந்தான். அப்பலவீனத்தை
விரட்ட வேண்டும் என்று முடிவெடுத்தவன்.
எனவே
கடுமையாக அவளிடம் வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பித்தான்.
“ஹேய் லுக் திஸ்...” என்றபடி
அன்று காலையில் வெளிவந்த பிஸ்னெஸ் நியூசை வேகவேகமாக அருகில் இருந்த மேஜையில்
இருந்த நியூஸ் பேப்பரை எடுத்து காண்பித்தான்.
அதில்
தலைப்புச் செய்தியாக இன்று இந்திய சென்சஸ் புள்ளிகள் வரலாறு காணாத உச்சத்தை
தொட்டிருப்பதாக போட்டிருந்தது.
மேலும்
ஒரு குறிப்பிட்ட நபரே இந்த மாற்றத்திற்கு காரணம். அந்த ஒரு நபர் வாங்கி குவித்த
பங்குகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி என்றும் அதன் உண்மைத்தன்மை பற்றி கேள்வி
எழுப்பபடுவதாகவும் இருந்தது.
அந்த
நியூசை வாசித்த யாழிசை குழப்பத்துடன் இதை போய் எதற்கு என்னிடம் இவன் காண்பிக்கிறான்?
என்று குழப்பத்துடன் ஏறிட்டு பார்த்த அவளிடம்.
“ஏன் இதை
உன்னிடம் காட்டுகிறேனு உனக்கு புரியலதானே..?!” சொல்கிறேன் அந்த சென்சஸ்
புள்ளிகளின் ஏற்றத்திற்கு காரணம் டாப்
டென் கம்பெனிகளின் மோஸ்ட ஷேர்ஸ் உன்னால் பர்சேஸ் செய்யப்பட்டதுதான்...”
அவன்
சொன்னதும் அவளின் அந்த சோர்விலும் “ஏளனமான சிரிப்பை
உதிர்த்த யாழிசை யாரு...? நானு...?
சி.... பே...! ஷேர்ஸ் வாங்குறதுனா எப்படின்னு கூட தெரியாது...
.சென்சஸ்... சென்சஸ்... சொல்றீயே அப்படினா
என்னென்றதையே ஒரு குத்து மதிப்பாத்தான் தெரிஞ்சு வச்சுருக்கேன்.... நான்போய்
ஷேர்ஸ் வாங்குறேனாம் அதுவும் இந்திய சென்சஸ் உலக அளவில் இதுவரை எட்டாத புதிய
உச்சத்தை தொட்டுவிடும் அளவு வாங்கிருக்கேனு சொன்னா ஒண்ணாங்கிலாஸ் பிள்ளைகள் கூட
நம்பாது...” என்று சொல்லிவிட்டு என்கிட்டேயேவா புருடால் விடுற.... என்று மிதப்பான
பார்வை பார்த்தாள்.
அவளின்
அந்த ஆட்டிடியூடை கண்டவன் “ஹ...ஹ...ஹா...” என்று வில்லன் சிரிப்பு சிர்த்தபடி ஒரு
வீடியோ பதிவை அவளிடம் காண்பித்தான்.
அதில் அவள் வீட்டின் வாசலில் இரண்டு ஜீப்பும் கையில் பைலுடன் சில
மனிதர்களும் வாசல் வரை சென்றதும் அவர்களை எதிர்கொண்டு சோகமே உருவான தோற்றத்தில்
அவளது அப்பா கணேசபிள்ளை வாசலில் நிற்பதையும் பார்த்தவள் பரபரப்பானாள் .
“யாரு அவங்க? அப்பா ஏன்
இவ்வளவு சோகமா இருக்காங்க? என்னனு
சொல்லுங்களேன்...” என்று படபடத்தாள்.
அவங்க
இன்கம்டாக்ஸ் ஆபீசர்ஸ். உன் வீட்டில் இன்கம்டாக்ஸ் ரைடு நடத்த வந்திருகிறார்கள்”
“என்னது.... எங்க வீட்டில்
இன்கம்டாக்ஸ் ரைடா?”
“பிறகு பல
நூறு கோடி மதிப்பிலான ஷேர்ஸ் திடீர்னு பர்சேஸ் பண்ணினால் இன்கம்டாக்ஸ் விசாரணை
வரத்தானே செய்வார்கள்?” அவங்க மட்டும் உன்னை தேடல அமெரிக்க டாப் பிஸ்னெஸ்மேன்
பிராங்கின் அக்கவுன்ட் பணம் முழுவதும் இ பாங்கிங் மூலம் உன்னால்
கொள்ளையடிக்கப்பட்டதை அவன் கண்டுகொண்டான். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவ்வாறு
கொள்ளையடித்தது நீனு ஸ்மெல் செய்யப்பட்டு அவனாலும் நீ தேடப்படுவ...!”
“என்னது
நான் கொள்ளயடிச்சேனா? அதுவும் நெட் பாங்கிங் மூலமா?
ஐயோ என்னைய சுற்றி என்னதான்
நடக்குது?! என்னைய எதுக்காக இப்படி சித்ரவதை செய்ற...?”
ஏதோ மர்ம கதை சொன்னதை போல் அதுவும் தன்னை மையமாக சுழலும்
கதையாக அக்கதை இருப்பதாகவும் கண்டவள் அரண்டபடி கேள்வி எழுபினாள்.
“லுக் பேபி... இதுதான்
நிலைமை.... இதில் இருந்து நீ தப்பிக்கணும்னா நான் சொல்கிறபடிதான் நீ நடந்துக்கணும்”.
அந்த
பேச்சை ரசிக்காத யாழிசை, “முடியாது...
உன் மிரட்டலுக்கெல்லாம் பயந்து உன் கிரிமினல் வேலைக்கு என்னை பயன்படுத்துறதை நான்
அனுமதிக்க மாட்டேன்..... நீ சொல்றதை நான் கேட்கப்போறது கிடையாது...”
அவள்
அவ்வாறு கூறியதும் உன்னுடைய இந்த முடிவால் உன் அப்பாவும் பாட்டியும் பாதிக்கப்படுவாங்க
அதுவும் உனக்கு ஒகே வா...? அப்போ...
நான் சொல்வதை நீ செய்ய மாட்டாய்?”
“அவங்களுக்கு
என்ன பிரச்சனை கொடுப்ப?” என்று குரல் பிசிறு தட்ட கேட்டாள்.
அவளின்
சோர்வினை மனதில் கொண்டு “இதை முதலில் குடி.... அப்போதான் நான் உன்
கொஸ்டியன்களுக்கு ஆன்செர் செய்வேன்”
முதலில்
அவன் கொடுப்பதை குடிக்க மறுக்கத்தான் நினைத்தாள் ஆனால் அவளுக்கு அவனிடம் இருந்து
நிறைய கேள்விகளுக்கான பதில் தேவைப்பட்டது. எனவே வெடுகென்று அவன் கையில் எடுத்து
நீட்டிய டம்ளரை பிடுங்கியவள் அதை குடித்து முடித்து கீழே வைத்தவள் “ம்...சொல்லு”
என்றாள்.
இதுவரை
உன்னைத்தவிர உன்னைய சார்ந்த யாரையும்
என் கேமிற்குள் நான் இழுக்கவே இல்ல.... ஏன் நேற்று உன் வீட்டு
வாசலுக்கு வந்த இன்கம்டாக்ஸ் ஆபிசரை கூட உன் செகரட்டரியாக நான் நியமித்திருந்த என்
ஆள் சென்று வாசலுடன் திருப்பிவிட்டுட்டான் .நீ கொடுத்த இந்த லெட்டரால்...” என்று
ஒரு காகிதத்தை அவளிடம் கொடுத்தான்.
அதன்
சாரம்சம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு
உங்களின் பார்வைக்கு.
வணக்கம் .
கணேசப்பிள்ளையின் மகளாகிய
நான் என் குடும்பத்திற்குத் தெரியாமல் எனக்குப் பிடித்த என்னை விரும்பிய
வெளிநாட்டு தொழில் அதிபரை என் வருங்கால கணவராக தேர்ந்தெடுத்துள்ளேன். என் வீட்டில்
வேறு இனத்தவரை மருமகனாக ஏற்றுகொள்ளமட்டார்கள் என்ற காரணத்தால் அவர்களுக்குத்
தெரியாமல் நேற்றே நான் வீட்டை விட்டு அவருடன் வெளியேறிவிட்டேன்.
எனது தற்போதைய முகவரி என்று
கோயம்புத்தூரில் உள்ள ஒரு வீட்டின் முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது .
எனக்கு
அவர் அந்த வீட்டை என் பெயரில் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் என் பேரில் உள்ள
இ.கோல்ட் மற்றும் ஷேர்ஸ் எல்லாம் அவரின் மூலமே எனக்கு கிடைத்தது. நான் அவருடன்
வெளியூர் சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ளேன். இன்னும் ஒருவாரம் சென்றுதான் நான்
ஊருக்குத் திரும்புவேன். அதற்கு பிறகே என் பியான்ஷி பற்றிய செய்தியுடன் அனைவரையும்
சந்திப்பேன்.”
என்று
அவளது கையெழுத்துடன் அச்சிடப்பட்ட காதிதம் அவள் கையில் இருந்தது.
அதை வாசித்துப்பார்த்த யாழிசை இது ஆங்கிலத்தில் உள்ளதே அதனால் இதன்
விவரம் தனது தந்தைக்கு புரியாதுதானே, ஒருவேளை
இந்த கடிதத்தில் உள்ளதை அவர் அந்த அதிகாரிகளிடம் கேட்டு அறிந்திருந்தால்....
அவரின் மனம் என்ன பாடுபடும்.... என்ற நினைவே அவளைக் கொன்றது.
அவளது
கலங்கிய முகம் கண்ட தீரன், “ஹேய்..
உன் வீட்டிற்கு போன ஆபீசர்ஸ் இந்த லெட்டரை பார்த்தபின் ஒரு பார்மாளிட்டிக்காக ஒரு
டென் மினிட்ஸ் உன் வீட்டை சோதனை செய்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். டோன்ட் வொரி... வேற எதுவும் பெருசா நீ வருத்தப்படுவதுபோல்
அங்கு நடக்கலை...!”
அவனின்
வார்த்தையில் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தவள், “இதுக்கு
மேல என்ன நடக்கணும்? தன் மகள் ஓடிப்போய்விட்டாள்னு அந்த லெட்டரை படித்தவன் கூறியதை,
ஒரு தகப்பன் கேட்டுட்டார். இதைவிட வேறு என்ன பெருசா வருத்தபடுற
நிகழ்ச்சி நடக்கணும்” என்றவள் சோர்ந்துவிட்டாள்.
மேலும்
யோசனையுடன் என்னைய இன்னைக்கு காலையில் தானே நீ இங்க கடத்திட்டுவந்த?
ஆனால் நான் நேததே வீட்டைவிட்டு
வந்ததாய் அதில் இருந்ததே...?”
“நோ பேபி..... உன்னைய நான்
இங்கு கொண்டு வந்து இன்றுடன் டூ டேஸ் ஆகிடுச்சு....
“நீ
மூச்சை அடக்கியிருப்பதை கவனித்தனால் அதிக நேரம் உன் நோசில் அந்த அணிசீசியா ட்ரக்கை
நீ சுமல் செய்யும்படி நான் பிடித்ததால் ஓவர் டேஸ் ஆகிடுச்சு.... அதனால
ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு நீ கண் விழிக்க தர்ட்டிபைவ் அவர்ஸ் ஆகிடுச்சு”
“என்னது இரண்டுநாள்
ஆகிருச்சா? ஐயோ... இன்னுமா என்னைய தேடி கண்டுபுடிச்சு உன்னிடம் இருந்து மீட்டு
கூப்பிட்டுபோக எங்க வானவராயர் ஐயா வரவில்லை?
“ரிலாக்ஸ் பேபி,. நீ இதுவரை
இருந்தது பாஸ்ட் லைப். அது எண்டு ஆகிடுச்சு. இனி அந்த லைப்பிற்குள் உன்னால் போக முடியாது....
இனி நான் அமைத்துத்தரும் நியூ லைப்பில் ஹேப்பியாக நீ இருகிறதுக்கு நான் ஹெல்ப்
பண்ணுவேன். ஆனால் அதற்கு நீ நான் சொல்வதை கேட்கணும்” என்றான்.
---தொடரும்---

No comments:
Post a Comment