anti - piracy

Post Page Advertisement [Top]

                                                         

------------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்- 21 & 22

 

தீரன் சொன்னதை கேட்ட மிதுனன் “மிஸ்டர் தீரமிகுந்தன், நீங்க செய்றதெல்லாம் வில்லங்கமானதாகவே இருக்கே... ஆனா. இதற்கெல்லாம் காரணம் இந்த பூமியை கப்பாத்தன்னு சொல்றீங்க...!. நீங்க சொல்லுறதை வச்சு மட்டும் எப்படி நான் உங்களை நல்லவர்னு முடிவெடுக்க முடியும்? என்னையேயே நீங்க கடத்திதான் வச்சுருக்கீங்க...? இதைவிட மோசம் என்னன்னா ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் உங்க கஸ்டடியில் எடுத்துருக்கீங்க. நல்ல ஒரு ஆண் மகன் செய்வது போலவா உங்க செயல் இருக்கு...?”.

 

நான் எப்போ என்னைய நல்லவன்னு உன்னிடம் சொன்னேன்...? எனக்கு நான் நினைத்தது நடக்கணும் அதற்குரிய சாமர்த்தியம் எனக்கு இருக்குதுன்றதை நான் இப்போ புரூப் செய்து காட்டவா?”.

 

அவனின் வார்த்தையில் ‘எப்பா என்ன திமிர்..?!’ என்று மலைத்துபோன மிதுனன் புருவச்சுளிப்புடன் பார்த்தான்.

 

“ஹேய் மேன்! யாழிசையை அவள் விருப்பம் இல்லாமல்தான் தூக்கிட்டு வந்திருக்கிறேன்.... ஆனால் என் விருப்பத்துக்கு அவள் மறுப்பு சொல்லாமல் உன் கண் முன்னாலேயே அவளை என்னோட பியான்சியாக நான் என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி அறிமுகப்படுத்தி காட்டட்டா...?”.

 

“வேணாம் தீரன், உனக்கு யாழிசை பற்றி என்ன தெரியும்? அவள் பூப்போன்றவள்... நீயோ பூகம்பம் போன்றவன்... அவளை விட்டுவிடு.

 

தீரனால் மிதுனனின் பேச்சை ரசிக்கமுடியவில்லை. மிதுனன் சி.என்.ஜிக்கு எதிராக மாணவர்களை திரட்டும் போராட்டக்காரன் என்றும் அவன் காணாமல் போனதினை அறிந்த மிதுனனின் பெரியப்பா சத்தியமூர்த்தி, வானவராயர் மற்றும் அவர்களின் நண்பர்கள் அவனை காணாமல் தேடி தவித்துக்கொண்டும் அவர்கள் போட்ட திட்டத்தின்படி பெரும் போராட்டத்திற்கு இளைஞர்களை திரட்ட மிதுனனின் பெரும் பங்கு இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருப்பத்தையும் அறிந்து தான் இருந்தான் தீரன்.

 

இந்த நிலையில்தான் அதற்கு மறைமுகமாக உதவுவதாகவும் அதற்குரிய நிதி ஆதாரங்களை ஏற்படுத்திக்கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டுப் பேசினால் அதனை கருத்தில் கொள்ளாமல் மிதுனன் யாழிசையை பற்றி பேசுவதை அவன் விரும்பவில்லை. அதிலும் அவள் அவனுக்கு பொருத்தமில்லாதவள் என்று அவன் கூறியதை அவனால் சகித்துக்கொள்ளவே இயலவில்லை.

 

ஏற்கனவே ஒருதடவை நண்பன் என்று நினைத்தவனால் சூடுவாங்கிய பூனையின் நிலையில் இருந்த தீரன், மிதுனன் யாழிசையின் பரிவாக பேசுவதைக்கூட ஏற்க முடியவில்லை.

 

எனவே அவன் கண்முன்னே அவளைத் தனக்குரியவள் என்று அவனுக்கு உணர்த்திவிட வேண்டும் என்றும், தன்னைத் தாண்டி யாராலும் அவளை இனி நெருங்க முடியாது என்று காட்டவேண்டுமென ஆத்திரம் எழுந்தது.

 

அவனுக்கிருந்த இந்த மனநிலையில் யாழிசையின் மனநிலையை அவன் யோசிக்க மறந்தான். தனது அதிரடி செயலால் அவள் காயமடைந்ததை இன்னும் காயப்படப்போவதை காலம் கடந்து அவன் உணர்ந்துக்கொண்டு அவளின் காயத்தை ஆற்றுவதற்கு தடுமாறப்போவதையும் அவன் அறியவில்லை.

 

அப்பொழுது அவர்கள் பேசிகொண்டிருந்த அறையின் கதவு திறந்தது உள்ளே வந்த இமாமியை பார்த்த தீரனின் முகம் உற்சாகத்தில் மலர்ந்தது.

 

“வெல்கம் மை பாய்! ஹவ் இஸ் யுவர் ஜெர்னி?” என்றபடி அவனிடம் சென்று அணைத்து விடுவித்தான்.

 

“ஐம் ஆம் பைன் பாஸ். வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்” என்ற இமாமியுடன் பேசியபடி அந்த அறையை விட்டு வெளியேற போன தீரன்.

 

“மீட் மிஸ்டர் மிதுனன். இவனை வச்சுத்தான் அடுத்த நம்ம பிளானை இம்ப்ளிமெண்ட் செய்யப்போறோம்.

 

“ஹாய், ஐ ஆம் இமாமி” என்றபடி அவனிடம் கைகுலுக்க தனது கரத்தை நீட்டினான்.

 

உயரமும் அதற்கேற்ற பருமனுடன் ஆப்பிரிகர்களுக்கே உரிய நிறத்துடன் சுருட்டைமுடியுடன் குத்துச்சண்டை வீரனை போன்ற தோற்றத்தில் இருந்த அந்த ஆப்ரிக்க நாட்டுக்காரன் தீரனுடன் மிகவும் மரியாதையாக பேசியதை பார்த்த மிதுனன் திறந்திருந்த கதவுக்கு காவல் காப்பதுபோல் நின்றிருந்த அமெரிக்க நாட்டுக்காரன் நான் என்ற தோற்றத்தில் இருந்தவனையும் பார்த்த மிதுனனுக்கு என்னடா நடக்குது இங்க?!’ என்ற மலைப்புடன் நின்ற மிதுனனின் முன் நீண்ட இமாமியின் கரத்தை தயக்கத்துடன் பற்றி குலுக்கினான்.

 

“சீயூ லேட்டர்!” என்று கூறிய இமாமி, தீரனுடன் அடுத்து அவசரமாக ஏதோ வேலைக்கு செல்வதுபோல் வெளியேறினான்.

 

வெளியில் வந்த தீரனிடம் “பாஸ் ,ஆர் யூ ஸ்யூர் டூ திஸ்” என்று கேட்டான் இமாமி.

 

இமாமி வரும் போது ஹாலில் அரேஞ் செய்திருந்த பார்ட்டிக்கான ஏற்பாட்டை பார்த்துத்தான் அவ்வாறு கேட்கிறான் என்பதனை புரிந்துகொண்ட தீரன், எஸ். ஐ வான்ட் ஹெர் டூ பி மையின்.”

 

“டூ யூ லவ் ஹெர்?” என்ற இமாமியின் கேள்விக்கு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன் நீ கேட்பதற்கு சரியான பதில் சொல்லத்தெரியலை எனக்கு... அவள் மேல் ஒரு ஈர்ப்பு இருக்குது.... ஆனால் அதற்காக இன்னொரு பெண்ணை இனி என் லைப்பில் நான் கொண்டுவர சிறிதும் விரும்பவில்லை” என்று குழப்பமாக அவனிடம் பதிலளித்தான் தீரன்.

 

‘என்னைத்தவிர யாரும் பார்வையில் கூட அவளை நெருங்க விடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.... எனக்கு அவளின்மேல் வந்துள்ளது லஸ்டாக இருக்கும் பட்சத்தில் அதை தீர்க்க அவளே மருந்து...என அவனுக்குள் அவனே கூறிகொண்டான்.

 

முழு ஒப்பனையுடன் தயாராக்கிக் கொண்டிருந்த யாழிசைக்கு ஆங்கிலம் பேசத் தெரியும் என்றாலும் அவளை சுற்றி இருந்த அந்த இரு பெண்கள் மற்றும் நேற்று அவளுக்கு மேக்கப் போட்டுவிட்ட ஸ்டீபன் ஆகியோரின் அமெரிக்க ஆங்கிலத்தை கிரகித்து கொள்ள மிகவும் சிரமப்பட்டாள்.

 

அவள் மேக்கப்போடுவதற்கு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவளின் மனதினுள் பயப்பந்து ஒன்று உருவாகி உருண்டுக் கொண்டிருந்தது.

 

தான் செய்வது சரிதானா? என்ற கேள்வியும் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ...?! என்ற குழப்பமும் அவளை ஆட்படுத்தி அலைக்களித்துக் கொண்டிருந்தது.

 

அவளை தீரனின் பியான்சியாக அறிவிக்கும் பார்ட்டிக்கு செல்ல இங்கே ஏற்பாடு நடந்துக்கொண்டிருந்த இந்த வேளையில் அங்கே சந்தியா வீட்டில் அவளை மாப்பிள்ளை பார்க்க வரும் கலெக்டருக்காக அலங்காரப்படுத்திக் கொண்டிருந்தனர்.

 

அவளின் உள்ளமோ மிதுனனை விடுவித்ததில் இருந்து நடந்ததை நினைத்து பார்த்துக்கொண்டிருந்தது மேலும் நடப்பதை தடுக்கமுடியாமல் மனம் தடுமாறிக் கொண்டிருந்தது.

 

சந்தியா வீட்டில் அன்றைய மிதுனனின் எஸ்கேப் நிகழ்ச்சிக்கு பின் அவள் வீட்டிலேயே அவள் அன்னியமாகி விட்டதுபோல் உணர்ந்தாள்.

 

எந்நேரமும் அவளை கண்காணித்துக்கொண்டே இருப்பதை அவள் உணர்ந்தே இருந்தாள்.

 

மிதுனன் தப்பித்துவிட்டதை, அவனை அடைத்து வைத்திருந்த இடத்தை பார்த்து உறுதிப்படுத்தியப்பின் நேராக ரங்கராஜன் அவளின் அறை கதவைத்தான் வந்து தட்டினார்.

 

தூங்கி எழுந்ததுபோல பாவனை செய்தபடி வந்து கதவை திறந்த சந்தியாவை ரவுத்திரமான தோற்றத்துடன் நின்ற ரங்கராஜனின் முகத்தை கண்டு, அவளின் தொண்டை பயத்தில் உலர்ந்துவிட்டது.

 

‘அப்பா’ என்று அவள் பயத்துடன் எழும்பாத சத்தத்துடன் உதடு அசைந்த மறுநொடி அவளின் கன்னத்தை அவரது கை பதம்பார்த்தது.

 

ஒரே அடியில் தடுமாறி பின்னால் விழுந்ததும் அவளை நோக்கி முன்னேறி வந்த ரங்கராஜன் “எதுக்கு அவனை தப்பிக்க வச்ச...? என்ன காதலா.... தொலைச்சுப்போடுவேன் தொலைச்சு.... நீ இப்போ செய்துவச்ச காரியத்துக்கு உன்ன.... என்று மீண்டும் அவளை அறையப் போகும் போது அவளின் அம்மா ஓடிவந்து குறுக்கே விழுந்து அந்த அடியை தனது முதுகில் வாங்கியவள்,

 

“நான் விசாரிக்குறேங்க” என்று அவரின் அடியில் தகதகவென எரிந்த முதுகைப் பொருட்படுத்தாமல் சந்தியாவின் பக்கம் திரும்பிய அவளின் அம்மா “என்ன காரியம் செய்துவச்சுருக்குற சந்தியா? அப்பாவுக்கு எதிரா, நீ இப்படி செய்வேன்னு நான் நினைத்துக்கூட பார்கல...! சொல்லுடி, ஏன் இப்படி செய்த..? அவன் இப்போ எங்கே தப்பிச்சு போயிருப்பான்னு உனக்கு தெரியுமா...? தெரிஞ்சா சொல்லிடுடீ... அப்படி சொல்லிட்டனா அப்பா உன்மேல் கோபப்படாம நான் பார்த்துக்கிறேன்.

 

ஆனால் எதுவும் கூறாமல் அடியை வாங்கியவள், அழக்கூட செய்யாமல் அழுத்தமுடன் அமர்ந்திருந்தாள். அப்பொழுது ஆட்களை மிதுனனை தேடச்சொல்லி அனுப்பிவிட்டு சந்தியாவின் அறைக்குள் வந்த சக்ரவர்த்தி அவளின் முகத்தை முறைத்துப் பார்த்தபடி உள்ளே வந்தவன்,

 

“அப்பா அவ சொல்லமாட்டப்பா... சிசிடிவில இப்போ தான் பார்த்துட்டு வந்தேன். வாசலிலே அவனை அனுப்புறதுக்கு முன்ன ரெண்டுபேரும் கொஞ்சிட்டு இருக்கிறத பார்த்தேன்... எனக்கு அப்படியே இவளையும் அவனையும் வெட்டிப் போட்டணும் போல இருக்குது. அவன் மட்டும் என் கையில கிடச்சான் செத்தான்.... என்ன தைரியமிருந்தா மினிஸ்டர் மகளை லவ் பண்ணுவான்...?” என்று கர்ஜித்தான்.

 

அவன் அவ்வாறு கூறியதும் சந்தியாவின் அம்மா வள்ளி, ரங்கராஜன் அவளை அடிப்பதற்குள் முந்திக்கொண்டாள். “என் தலையில கல்லைத் தூக்கி போட்டுட்டீயே.., இப்படியா செய்வ...?. பெத்த வயிறு பத்திகிட்டு எரியுதே...! என்று கூறியபடி சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்.

 

அப்பொழுது சக்ரவர்த்தி வேகமாக அவளின் மொபைலை தேடி எடுத்தவன் “அப்பா இதில் அவன் போன் நம்பர் இருக்கும். எப்படியும் இவளை அவன் காண்டாக்ட் செய்வான். இதை நானே வச்சுருக்கிறேன். இனி இவளை காலேஜ் அனுப்ப வேண்டாம்.

 

ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்த ரங்கராஜன் “நாளைக்கே இவளைப் பொண்ணுப் பார்க்க நம்ம கலெக்டர் தம்பிய வரச்சொல்லணும். அவரும் நம்ம ஆளுதான். நம்ம கூட்டாளியும் கூட. கலெக்டர் மாப்பிள்ளையானா நம்ம அரசியலுக்கும் துணையா இருக்கும்.

 

அவர்கள் பேசுவதை கேட்ட சந்தியா, “ஐயோ எனக்கு கல்யாணம் எல்லாம் இப்போ வேண்டாம்” என்று கத்தினாள்.

 

அதனை கேட்ட வள்ளி, “வாயை மூடு, உன்னிடம் யாரும் இப்போ அபிப்ராயம் கேட்கலை. ஒழுங்கா சொன்னதை கேக்குற வழியைப் பார். அடிவாங்கி உடம்பை புண்ணாகிக்காத...” என்று கூறியபடி மூவரும் அவளது அறையை விட்டு வெளியேறினர்.

 

பிராங் மிகவும் டென்சனாக அவனது தந்தையின் முன் அமர்ந்திருந்தான். “வாட் ஹேப்பன் பிராங். மார்க் ரூபன்ஸ்க்கு இன்னும் இதுதெரியாமலா இருக்கும்?. நீ நம் பிஸ்னசை கையில் எடுத்தப்பிறகு நல்லபடியாக போய் கொண்டிருப்பதால் தான் நான் விலகிக்கொண்டேன். ஆனால் இத்தனை நாள் உயர்த்திய நம் நிலையை இப்போ தரைமட்டமாக்கி விட்டோமோ? என எனக்கு பயமாக இருக்குது”.

 

“டாட் என் அக்கெளண்டில் இருந்த அமெளண்ட்ஸ் ஹவ் டு லூடெட்(கொள்ளையடித்தது)?. ஐ கேன்’ட் பிலீவ் இட். நான் என்னுடைய பெர்சனல் பி.சில மட்டும்தான் என் அக்கௌன்ட் ட்ரான்ஸாக்ஷன் அண்ட் வெரிஃபிகேஷன் செய்வேன். என்னுடைய பாஸ்வேர்டை இதுவரை யாரிடமும் நான் ஷேர் செய்ததில்லை. பிறகு எப்படி இது நடந்துச்சுனு தெரியல! அதுவும் இந்தியாவில் ஒரு மூலையில் இருக்கும் யாழிசைன்ற பெர்சனால்! எப்படி இதை செய்ய முடிந்தது என்று விளங்கவில்லையே” என்று புலம்பினான்.

 

நீ சொல்வதை பார்த்தால், இந்த ப்ராஜெக்ட்டோட அடுத்த மூவ்மெண்டுக்கு தேவையான அமௌன்ட் இப்போ நம் கையில் இல்லை. இதற்கு ஸ்பான்சர் செய்தவர்கள் பணம் பற்றாக்குறையால் வேலையை நிறுத்தினோம்னு தெரிந்தால் நம்மை சும்மா விடமாட்டார்கள். மேலும் மார்க் ரூபன்ஸ் இந்த விஷயம் தெரிந்தால் நம் நிலைமை அவ்வளவுதான். நம் சேப்டரை குளோஸ் செய்திடுவான்” என கவலையுடன் கூறினார்.

 

“நோ டாட். இப்போதைக்கு நம்மிடம் பணம் இல்லை என்பதை யாருக்கும் தெரியவிட வேண்டாம். மேலும் நான் அந்த யாழிசையை சும்மா விடப்போவது கிடையாது. மேலும் ப்ராஜெக்ட் மூவ் ஆகிக்கொண்டிருக்கும் வரை யாருக்கும் நம்மிடம் பணம் திருடப்பட்டு இல்லாமல் போனதை பற்றி தெரிய வாய்ப்பில்லை.

 

ப்ராஜெக்ட் இனிசியல் மூவ்மெண்டுக்கு நம் அஸெட் அனைத்தையும் கேஸாக மாற்றி ஸ்பென் பண்ணுவோம். இதில் நம் எல்லா சொத்துக்களையும் இழந்தாலும் இந்த ப்ராஜெக்ட் சக்சஸ் ஆக பினிஷ் ஆகிடுச்சுன்னா திரும்ப இப்போ இருக்கிறதை விடபலமடங்கு அஸெட்டை நம்மால் வாங்க முடியும்” என்றான்.

 

அவன் அவ்வாறு கூறியதும் அவனின் தந்தை, “நீ புரிந்துதான் பேசுகிறாயா பிராங்?. நம் அஸெட் முழுக்க விற்று கேஸாக மாற்றினாலும் இந்த ப்ராஜெக்ட் மூவ்மெண்டுக்குரிய இனிசியல் மூவ்மெண்டுக்கு கூட அது போதுமானதாக இருக்காது. நமக்கு இந்த ப்ராஜெக்டுக்கு ஸ்பான்சராக கிடைத்த தொகையில் டென் பர்சண்ட் கூட நம் சொத்துத்தேறாது. நாம் இப்போ செய்யக்கூடியது இரண்டே இரண்டுதான். ஒன்று இருக்கிறதை எல்லாம் கேஸாக மாற்றிக்கொண்டு யாரும் நம்மை கண்டுபிடிக்காத ஒரு இடத்திற்கு போய் ஒளிந்துக்கொள்ள வேண்டும்.

 

அவ்வாறு செய்தால்தான் நமக்கு ஸ்பான்சர் செய்தவர்களிடம் இருந்து தப்பிக்கமுடியும். ஆனால் அவ்வாறு நாம் தப்பிப்பது அதுவும் அந்த டெவில் மார்க் ரூபன்ஸ் கிட்ட இருந்து எஸ்கேப்பாவது அவ்வளவு எளிதானது இல்லை.

 

இரண்டாவது, இருக்கிற சொத்தினை விற்று வரும் பணத்தைக் கொண்டு நம்மிடம் பணம் கொள்ளையடித்த அந்த யாழிசை என்ற பெர்சனை கண்டுபிடித்து நம் கஸ்டடிக்கு கொண்டுவந்து கொடுக்கிற டார்சரில் நம்மிடம் இருந்து அவள் கைப்பற்றிய தொகையை மீட்க முயற்சிக்க வேண்டும்.

 

நான் நினைக்கிறேன் நமக்கு நல்லா தெரிந்தவர்களால் மட்டுமே இதை செய்ய சாத்தியம் இருக்கிறது. உனக்கு யார்மீதாவது சந்தேகம் இருக்கிறதா பிராங்? அந்த தீரமிகுந்தனுக்கும் உனக்கும் இடையேயான உறவு நல்லபடியாகத்தானே இப்பொழுதும் உள்ளது?” என்று கேள்விக்கேட்டார்.

 

அப்பொழுது பிராங்கின் மொபைல் ஒலி எழுப்பியது அதில் வகுலா அழைப்பதை பார்த்த பிராங்கிற்கு எரிச்சலாக இருந்தது. எனவே சே இவளை. என்று பல்லை கடித்தபடி அட்டன் பண்ணிய மறுநிமிடம் டோன்ட் பாதர் மீ நவ். ஐ ஆம் இன் இம்பார்டன்ட் வொர்க். வென் மை வொர்க் பினேஷ்ஸ், அப்போ உன்னை நான் காண்டாக்ட் செய்கிறேன். அதுவரை என்னை தொந்தரவு செய்யாதே” என்று படபடவென பொரிந்தான்.

 

ஏற்கனவே வகுலாவிற்கு கடந்த பத்துநாட்களாக தங்களது எங்கேஜ்மென்ட் ஆன பிறகு முன்புபோல் தன்னுடன் பிராங் நேரம் செலவு செய்து தன்னை ஆராதிக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்தாள். அவனின் கோபமான இப்பேச்சு மேலும் வருத்தத்தை கொடுத்தது அவளுக்கு.

 

ஏனோ அவளின் மனம் இப்பொழுது தீரனின் அணுகுமுறையோடு அதனை ஒப்பிடுப்பார்த்தது. தீரன் தன்னுடன் நேரம் செலவழிக்க வெளியில் சுற்ற வரவில்லையே தவிர தனக்கும் அவனுக்குமான கல்யாணப் பேச்சு ஆரம்பித்ததில் இருந்து அவனின் அன்பை வெளிப்படுத்தும் வகையில் அழகழகான மலர்களும் அடிக்கடி கிப்ட்களும் அவள் கையில் கிடைக்குமாறும் அதில் அவனின் காதலை வெளிபடுத்தும் வாசங்களுடன் அனுப்பிவைப்பான்.

 

அதை பார்த்ததும் அவனின் அருகாமைக்கு அவள் ஏங்கி அவனை அழைக்கும் போதெல்லாம் தன்மையாக அவனின் வேலையையே காரணம் காட்டி வரமுடியாததுக்கு வருத்தத்தை தெரிவித்ததையும் நினைத்து பார்த்தாள்.

 

பிராங்கிடம் வகுலாவுக்கு அவள் எதிர்பார்த்த அன்யோன்யம் கிடைத்தது. அவள் விரும்பிய பொருளாதார வளம் பிடித்தது. ஆனால்! ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள் என்பதுபோல் காதலில்லா காமம் சலிப்பினை உண்டுபண்ணி இப்பொழுது அவனின் காதலுக்கும் அவள் மனம் ஏங்க ஆரம்பித்தது.

 

தன்னை உரசிக்கொண்டு தீரன் திரியாவிட்டாலும் அவன் தள்ளியிருந்தே உணர்த்திய காதல் அருகில் இருந்தும் பிராங்கிடம் இப்பொழுது கிடைக்காத ஏமாற்றத்துடன் அவன் தன்னை பேசிய கோபமான வார்த்தை அவளையும் சீற வைத்தது.

 

எனவே வகுலா கூறினாள், “தீரனை விட்டு நான் உன் கூட வந்ததற்கு இப்பொழுது நான் வருத்தப்படுகிறேன் பிராங்!என்று கோபத்தை குரலில் மறைக்காமல் பேசினாள்.

 

தீரனை பற்றிய பேச்சை எடுத்ததும் ஒருநிமிடம் அதிர்ந்த பிராங், “இப்போ எதுக்கு நமக்கு இடையில் தீரனை கொண்டு வர்ற பேபி?” என்று கேட்டவன், தன் தந்தை தான் பேசுவதை கவனித்துக்கொண்டிருப்பதை உணர்ந்து. இட்ஸ் ஓகே, ப்ளீஸ் அன்டர்ஸ்டாண்ட் மை சிட்டிவேசன் .ஐ கால் யூ பேக்” என்றபடி மொபைலில் பேச்சை துண்டித்தான்.

 

பிராங் மொபைலை துண்டித்த மறுநொடி பிராங்கின் டாட் கூறினார், நீ தப்பான டெஸிஸின் எடுத்திட்டேனு நினைக்கிறேன் பிராங். வகுலாவை நீ உன் பியான்சியாக அனௌன்ஸ் செய்றதுக்கு முன்பே நான் உன்னிடம் கூறியதை இப்போ ஞாபப்படுத்துறேன்.

 

இந்த வகுலா தீரனின் எக்ஸ் பியான்சி தானே! அவர்களின் ரிலேசன்சிப் ப்ரேக்கப் ஆனதற்கு நீதான் காரணமா? அவ்வாறு நீ காரணமாக இருந்தால் அது உனக்கு நல்லதல்ல. நம்முடைய அனைத்தும் அறிந்தவன் அவன். அவன் நம்மை விட்டு பிரிந்தாலோ! உன்னை பழிவாங்குகிறேன் என்று கிளம்பினாலோ! அது நமக்குத்தான் ஆபத்து என்றேன்.

 

இப்போ நடந்திருக்கும் பிரச்சனைக்கும் இந்த தீரனுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று நீ இப்பொழுது வகுலாவிடம் பேசியபின் நிச்சயமாக நான் நினைக்கிறேன்.

 

நான் அவனை நீ இந்தியா அனுப்புவதற்கு முன்பே இந்த ப்ராஜெக்டுக்கு அவன் சூட்டபுல் பெர்சன் கிடையாது. என்ன இருந்தாலும் அவன் பேசிக்கலி ஒரு இந்திய குடும்பத்தின் வாரிசு. அவன் இங்கு பிறந்து வளர்ந்தவன் என்றாலும் எதோ ஒரு வகையில் அவனுக்கு அவனது இனத்தின் மீது ஒரு பற்று வந்துவிட்டால் நமக்கு எதிராக இந்த ப்ரோஜெக்ட்டை திருப்பிவிட்டுவிடுவான்.

 

அவனின் திறமையை சிறுவயதில் இருந்து கண்ணால் பார்த்தவன் நான். இன்று நம் பிஸ்னஸ் உலகில் நம் நேம் எல்லோரும் அறியக்கூடியதாக இருப்பதற்கு தீரனின் அறிவுதான் காரணம். அப்படிப்பட்டவனை நமக்கு எதிராக திரும்பும் வாய்ப்பை ஏற்படுத்தி விட்டதே என்று எச்சரித்தேன். நீ கேட்கவில்லை, அதோட ரிசல்ட் நம்மை எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கு பார்!”

 

ஏற்கனவே பிராங்கிற்கு ஹேக்கிங் மூலம் தான் நம் அக்கௌன்ட் குளறுபடி நடந்திருக்கு என்று தெரிந்ததுமே, இமாமியின் நினைவுதான் வந்தது. உடனே அவனை அணுக முயன்றதும் தான், அவன் அவனது சொந்த நாட்டிற்கு திடீர் என்று சென்றுவிட்டதாக தகவல் அவனுக்கு கிடைத்தது.

 

இந்த ஹேக்கிங்கிற்கும் அவனுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ! என்ற சந்தேகத்தையும் அதனை தொடர்ந்து அப்போ அவன் தீரனுக்காக இதை செய்தானோ என்ற நினைவும் அவனை கலவரப்படுத்தியது.

 

அதேநேரம் தீரன் இந்தியாவில் ப்ராஜெக்டை நல்லவிதமாக செயல்படுத்திக் கொண்டிருப்பதாக அவன் தகவல் அறிந்ததால் தீரனின் மேல் சந்தேகம் கொள்வது தவறோ! என குழம்பினான்.

 

ஆனால் அவன் தந்தையின் வார்த்தையில் புதிர்கள் அவிழ்வதுபோல் தெரிய அவனின் முகம் கோபத்தால் செவசெவ என்று ரத்த நிறத்தை அடைந்தது. டீரா ஐ வான்ட் டு கில் யூ என்று அவன் வாய் முனுமுனுத்தது.


 

அத்தியாயம்-22

 

தீரன் இமாமியிடன் அங்கு ஏற்பாடாகிக்கொண்டிருந்த மேல்நாட்டு பாணி பார்டி ஏற்பாட்டை மேற்பார்வை பார்க்கும்படி கூறிவிட்டு, தான் பார்ட்டிக்கு தயாராகி  வருவதாக சொல்லி அவனின் அறைக்குள் சென்று ரெடியாகியவன் அருகில் இருந்த யாழிசையிருந்த அறையினுள் நுழைந்தான்.

 

அவளைப் பார்த்தவனின் கண்கள் அவளைவிட்டு நகர மறுத்தது. சற்று முன் அவளை தனது திருமண வாழ்கையில் இணைக்கமாட்டேன் என்று இமாமியிடம் சொன்னது அறவே அவனுக்கு மறந்துபோனது.

 

“மை பேப்” என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டவன், ”ஐ வில் நாட் லூஸ் ஹெர். ஐ வில் மேக் ஹெர் கம்ப்லீட்லி மைன்”, என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். சஞ்சலத்தில் இருந்த யாழிசையோ அவனின் தீவிரமான பார்வையில் மேலும் அரண்டு போனாள்.

 

அதை கருத்தில் எடுக்காது அவளின் அருகில் வந்தவன். “ஆர் யூ ரெடி பேபி?” என்று கேட்டதும், ‘ரெடியில்லன்னு சொல்லிடலாமா? சபையில் ஓர் கூட்டத்தின் மத்தியில் தீரனின் பியான்சி என்று அறிமுகபடுத்துவதை நான் மறுப்பு சொல்லாமல் இருந்து நிச்சயம் வரை போவதன் அர்த்தம்?

 

ஆமாம் பரிசம் போட்டுவிட்டால் பாதி பொண்டாட்டி என்று நம் ஊரில் கூறுவார்களே! அதன் பின் வேறு ஒருவனுடன் வீட்டில் எனக்கு கல்யாண ஏற்பாடு செய்தால் இனி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? என்று யோசித்தாள்.

 

அப்பொழுது அவளின் மனசாட்சியோ அடியே அழகி முதலில் நீ முழுசா இவனிடமிருந்து தப்பிப்பாயா என்பதே கேள்விகுறியா இருக்கு. இதில் உன் வீட்டார் உனக்கு பின்னாடி மாப்பிள்ளை பார்பதுவரை கற்பனை செல்வது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லயா.

 

இதுவரை வந்தாச்சு இனி அவனிடம் மறுப்புச்சொல்லும் சூழலும் தாண்டி எல்லாம் ரெடியாகிடுச்சு இப்போ போய் இது வேண்டாம்னு சொன்னால் அவனுக்கு கோபம் வந்து அப்பாவை ஏதேனும் சிக்கலில் மாடிவிட்டுடுவானோ! என்று பல யோசனையுடன் அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் நின்றாள்.

 

அவள் அசையாமல் யோசனையுடன் நிற்பதை பார்த்த தீரன் ‘இவள் யோசிப்பதை பார்த்தாள் காரியத்தையே கெடுத்திடுவாள் போல. பார்ட்டி முடியுற வரை இவளை யோசிக்கவிடக்கூடாது வெளியில் இருந்து வேறு ஆளை வரவைத்து விட்டேன்.

 

அதோடு அந்த மிதுனன் வேறு லைவா பார்ட்டிஹாலில் நடப்பதை காணும் படி ஏற்பாடு செய்தாகிவிட்டது. இவள் முரண்டு பண்ணினால் நம் குரூப்பில் உள்ளவர்களே மனம் சிணுங்க சான்ஸ் இருக்கு. எனவே இவள் பார்ட்டி முடியும் வரை வாய் திறக்காமல் இருக்குமாறு செய்யவேண்டும் என்று முடிவெடுத்தவன்.

 

“ஹேய் கமான் பேபி, எல்லோரும் நமக்காக காத்திருகிறார்கள்” என்று ஆங்கிலேயர் பாணியில் அவளது கரத்துடன் தன் கரத்தை பிணைத்து தன்னுடன் பார்டி ஹாலுக்கு கூட்டிக்கொண்டு வந்தான்.

 

அங்கு தீரனின் குரூப்பில் இருந்து இருவர் பியானோ இசைக்க வெல்வெட் விரிப்பில் தன்னவளோடு நடந்து அங்கிருந்த சிறு திட்டுபோன்ற உயரமான இடத்தில் வந்து நின்றான்.

 

அவனுடன் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தவளின் டென்சன் எக்கச்சக்கமாக எகிறியிருந்தது. ஏனெனில் அங்கிருந்த அந்நிய தேசத்தவர்களின் கூட்டத்தை கண்டவள் தான் இந்தியாவில் இல்லையோ என்ற எண்ணத்தையும், ஆங்காங்கே ஆயுதம் ஏந்தி நின்ற முறுக்கேறிய தசைகளுடன் இருந்த கூட்டத்தை கண்டவளின் உடல் பயத்தில் வெடவெடத்தது. தனது பயத்தை போக்க தன்னை இக்கட்டில் நிறுத்திய தீரனிடமே ஒன்றியபடி நடந்தாள்.

 

தன்னை அறியாமல் அவள் அவனுடன் ஒன்றி நடந்து வந்தது இருவரும் அன்னியோன்யமாய் வருவதுபோன்ற தோற்றத்தைக் கொடுத்தது.

 

அவளின் பயத்தை தன்னுடன் நெருங்கி நடந்துவந்தவளின் நடுக்கத்திலேயே அவன் உணர்ந்துக்கொண்டான். அவளின் பயம் வெளியே தெரியாத விதமாக அவளின் காதோரம் கிசுகிசுக்கும் குரலில் “பேபி ரிலாக்ஸ் எல்லோரும் நம்முடைய பாய்ஸ்தான்.

 

“என்னது நம்மோட பாய்ஸ்ஸா? கையில துப்பாக்கி வச்சுகிட்டு கொள்ளக்கூட்டத்தில் உள்ளவங்க போல இருக்காங்க. அவங்க பாஸ் போல நீ இருந்துக்கொண்டு என்னையும் உன் கூட கூட்டுச் சேர்க்கிற? அவங்க நம்மோடவங்க கிடையாது. உன்னோடவங்க.

 

படபடப்புடன் அவனின் சீண்டலில் மற்றதை மறந்து சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் பார்வையில் தானும் அவனைப்போலவே அவனிடம் ரகசியமாக பதில் கொடுத்தாள்.

 

அவர்களின் ரகசிய பேச்சு பார்வைக்கு காதலில் கொஞ்சும் கிளிகள் போன்ற தோற்றத்தை உண்டாக்கியது. தீரன் விரும்பியதும் அதுதானே. எனவே அவனின் முகம் மந்தகாசமான நிலையையும் சிரிப்பையும் உதிர்த்தது.

 

அங்கிருந்த ஐம்பது பேர்களில் பெரும்பான்மையானவர்கள் அன்னிய தேசத்தவர் என்பது தெளிவாகத்தெரிந்தாலும், மாதவனின் குடும்பம் மற்றும் அங்கு வீட்டு வேலைக்கு பணிபுரியும் வேலையாட்கள் தவிர முன் வரிசையில் வரவழைக்கப்பட்டு அமர்ந்திருந்த மிதுனனின் பெரியப்பா சத்தியமூர்த்தியும் அமர்ந்திருந்தார்.

 

சத்தியமூர்த்தியை இன்று காலை ஆறுமணிக்கு அவரின் வீட்டில் சந்தித்த மாதவன் அவரிடம் மிதுனனை சந்திக்க விருப்பமிருந்தால் எந்த கேள்வியும் கேட்காமல் தன்னுடன் வரவேண்டும் என்று கூறினான்.

 

மிதுனனை அவர் தேடாத இடமில்லை அவனை பற்றிய எந்த சேதியும் கிடைக்காது கவலையில் இருந்தவரிடம் மாதவன் பேசியதும் மிதுனனின் மேல் உள்ள பாசத்தில் அவர் பரப்பரப்பானார்.

 

மறுநிமிடமே எதைவைத்து இவன் கூறுவதை நம்பி இவனுடன் செல்ல என்று தயங்கி, “நீங்கள் யார்? நீங்க சொல்றதை நான் எப்படி நம்ப?” என்றவரிடம்,

 

மாதவன் தனது மொபைலில் மிதுனன் காலேஜில் கடத்தப்படும்போது எடுத்த போட்டோ, மற்றும் சந்தியா வீட்டில் இருந்து தப்பித்துவரும் போது எடுத்த போட்டோ, அத்துடன் அவனை தீரனின் ஆட்கள் வண்டியில் கைத்தாங்கலாக ஏற்றுவதுபோன்ற போட்டோஸ், அத்துடன் அவனின் காயம் அடைந்த தலையில் கட்டுடன் படுக்கையில் இருந்த காட்சியை காண்பித்த வீடியோ பதிவு அதனை தொடர்ந்து அவனின் காயத்திற்கான சிகிச்சை நடந்த போது எடுத்த போட்டோஸ் இப்பொழுது அவன் தலையில் கட்டுடன் படுக்கையில் இருக்கும் போட்டோஸ் முதலியவற்றை காண்பித்து இப்போ நம்புறீங்களா? என்று கேட்டான்.

 

அவனை யார் முதலில் கடத்தியது? இப்போது யாரிடம் அவன் உள்ளான்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.

 

நீங்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் என்னால் பதில் கூற முடியாது. ஒரு சிலது மட்டும் சொல்கிறேன் என்றவன், “மிதுனனை கடத்தியது மினிஸ்டர் ரங்கராஜன். அவரிடம் இருந்து தப்பித்த மிதுனனை மீண்டும் மினிஸ்டரின் ஆட்களிடம் மாட்டாமல் சேஃப்பாக எங்க பாஸின் கஸ்டடியில் கொண்டுசென்று அவரின் காயத்திற்கு டிரீட்மன்ட் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்.

 

அவரை உங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால் என் பாஸ்க்கு சில விசயங்கள் உங்களால் எங்களுக்கு நடக்க வேண்டியிருக்கிறது. அது என்ன என்று தெரிந்துகொண்டு மிதுனனை மீட்க்க நீங்க என்னுடன் இப்பொழுது வரவேண்டும்”

 

சத்தியமூர்த்தியும் மறுப்பேதும் கூறாமல் அவனுடன் கிளம்பி வந்துவிட்டார். வந்த இடத்தில் அவனை காண்பிக்காமல் அங்கு நடந்துக்கொண்டிருக்கும் மேல்நாட்டு பாணி பார்ட்டியில் அந்நிய தேசத்து மக்களுடன் தான் இருத்தப்பட்டதை பல கேள்விகளுடன் சுற்றிலும் தனது கண்களை ஓட்டி அங்கிருந்த நிலைமையை கிரகித்துக்கொண்டிருந்தார்.

 

அங்கு பார்ட்டி சூழல் மட்டும் இல்லை. அதி நவீன பாதுகாப்பு வளையத்துடன் அந்த இடம் இருந்தது. பெரிய கோட்டை சுவருடன் கூடிய பிரம்மாண்டமான கதவுகளுக்கு உள்ளே வாட்ச்மேன் இடத்தில் இருந்தவன் அணிந்திருந்த உடையும் கையில் இருந்த துப்பாக்கியும் ஒரு நாட்டின் எல்லையில் பாதுகாப்புக்கு நின்றுக்கொண்டிருக்கும் ராணுவ வீரனினை நினைவுப் படுத்தினான்.

 

மேலும் அங்காங்கே துப்பாக்கி ஏந்திய வெள்ளையர்கள் கூர்மையான பார்வையுடன் ரவுண்ட்ஸ் செய்துகொண்டிருந்தனர். மெட்டல் டிடைக்டர் கொண்டு ஆராய்ந்துவிட்டே அவரை உள்ளே அனுப்பினர்.

 

மேலும் அவரிடம் இருந்த மொபைல் அவர்களால் கைப்பற்றப்பட்டு சுவிச் ஆப் செய்யப்பட்டு அவர்களின் வசமே வைத்துக்கொண்டனர் திரும்பிப் போகும் போது கொடுக்கப்படும் என்றுக் கூறப்பட்டது.

 

உள்ளே வந்த பின்பே கவனித்தார். அவர் மட்டுமல்ல அங்கிருந்த யாருமே மொபைல் வைத்திருந்த அடையாளம் தெரியவில்லை. மேலும் அங்காங்கே சி.சி.டி.வி கேமாராக்கள் பொருத்தப்பட்டு அதுவும் உயரமான இடத்தில் பொருத்தப்பட்டு சுற்றிக் கொண்டு இருந்தது. அங்கிருந்த சூழ்நிலையும் பாதுகாப்பு வசதியையும் மக்களையும் பார்த்தவருக்கு தான் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா? அல்லது வெளிநாட்டிலுள்ள இராணுவ கட்டுப்பாட்டு இடத்திற்குள் உள்ளோமா?! என அசந்துபோனார்.

 

அப்பொழுது யாழிசையுடன் சிகப்பு கம்பளத்தில் நடந்து வந்துக்கொண்டிருந்த தீரமிகுந்தனை பார்த்தவர், ‘தீரன் யார் என்று அடையாளம் காண முயற்சித்துக்கொண்டிருந்தார்’ அதில் தன்னை ஏன் அமர வைத்திருக்கிறார்கள் என்று யோசனையுடனும் குழப்பத்தோடும் இருந்தார் சத்தியமூர்த்தி.

 

சி.என்.ஜி சார்பாக தீரமிகுந்தன் என்பவன் வந்திருக்கிறான் என்பதுவரை அவர் கேள்விபட்டிருந்தார். ஆனால் தீரமிகுந்தனை அவர் நேரில் கண்டதில்லை. ஆனால் அப்பெயரை கண்டவர் ஒருவேளை சி.என்.ஜி சார்பாக வந்திருக்கும் அந்த அமெரிக்காரன் இடத்திற்குத்தான் தன்னை இப்பொழுது கூட்டி வந்திருக்கிறார்களோ என்ற ஐயம் எழுந்தது.

 

அப்படியானால் சி.என்.ஜிக்கு எதிராக மக்களை திரட்டி கூட்டம் போடுவதை தடுக்க மிதுனனை கடத்தி வைத்து தன்னையும் அவர்களுக்கு பணிய வைக்கத்தான் இங்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்களோ! என்ற கேள்வியும் உண்டானது.

 

மேலும் இங்குள்ள சூழலை பார்க்கும் போது இவர்களிடம் இருந்து மிதுனனை மீட்பதென்பதோ இவர்களை மீறி இந்த இடத்தைவிட்டு தான் வெளியில் செல்வதோ முடியாத காரியம் என்ற எண்ணம் உண்டானது.

 

இவ்வாறாக அவர் யோசித்துக் கொண்டிருக்கையில் மேடையில் நின்றிருந்த தீரன் எல்லோரையும் வெல்கம் செய்யும் வகையில் பேச்சை ஆரம்பித்தான்.

 

“மை டியர் பிரண்ட்ஸ். ஐ வெல்கம் ஆல் தோஸ் ஹூ ஹெவ் பார்டிசிபேட் இன் மை செரமோனிஸ்”. அதன் பிறகான தீரனின் உரையை தமிழிலேயே பார்ப்போம் “ஒரு முக்கியமான நண்பர் இன்னும் ஐந்து நிமிடத்துள் இங்கே வந்துவிடுவார் அதுவரை மை பியான்சியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

 

இவள் யாழிசை இஞ்சினேரிங் மாணவி. மேலும் நான் இவள் மீது காதல் கொண்டது இவளின் மென்மையான குணத்திற்காகவும் என் மாம் ஆசைப்பட்டதுபோல் அனைத்து தமிழ்நாட்டு பெண்களின் ஐடியல் வுமனாக என் கண்களில் பட்டு என் உள்ளத்தை நிறைத்ததாலும்.

 

மேலும் எனக்கு இவளின் மேல் பற்றுதல் உண்டானதுக்கு காரணம் இவளும் என் அம்மாவைப் போன்ற ஒரு கிளாசிகல் டான்சர் என்ற காரணத்தால் என்று நினைக்கிறேன்.

 

“எது எப்படியோ! எங்கேயோ பிறந்து வளர்ந்த நான் இன்று தமிழ்நாட்டில் பிறந்த மிஸ் யாழினியின் மேல் காதலாகி வாழ்கையில் இணைய முடிவெடுத்து என் பியான்சியாக உங்களிடம் இன்ரடியூஸ் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

 

என்று பேசிக்கொண்டிருக்கையில் ஒருவன் பதட்டமாக உள்ளேவந்து தீரனிடம் பேசமுடியாமல் அவனின் பேச்சில் குறுக்கிடத் தயங்கி நின்றுக்கொண்டிருப்பதைப் பேச்சினூடே கவனித்துவிட்டான் தீரன்.

 

எனவே ஓகே friends உங்களை என்டர்டையின் செய்ய மை மியூசிசீயன் ஃப்ரெண்ட் கிட்டாருடன் காத்திருக்கிறான். “ப்ளீஸ் பிளே ப்ரோ. உன்னுடைய இசையை கேட்க ஆவலாக இருக்கிறோம்” என்று கூட்டத்தின் கவனத்தை கிட்டார் புறம் திருப்பிவிட்டவன்,

 

இமாமியை அருகில் அழைத்து சிலநிமிடம் யாழிசையிடம் நான் வரும் வரை யாரும் நெருங்க விடாதவாறு பார்த்துகொள்ளச் சொல்லிவிட்டு “பேபி ஒன்செகன்ட் நான் இல்லாமல் மேனேஜ் செய்துக்கோ உடனே வந்துவிடுவேன்” என்று கூறிக்கொண்டிருக்கும்போது டெனிஸ் என்பவன் அவர்களின் அருகில் நெருங்கி “பாஸ்” என்று அழைத்தவன் அவனிடம் ஒரு வயர்லஸ் மொபைலை கொடுத்தான்.

 

அதை வாங்கி காதிற்கு கொடுத்த தீரன் “யாரு மினிஸ்டர் ரங்கராஜனா? நம் கேட் முன்பு நிற்கிறாரா? நீ சொல்லிவிடு மிஸ்டர் மகேஷ் மல்கோத்ரா அவர்களின் வீடு இது அவரின் ஒப்புதல் கடிதமோ அல்லது அவரின் இன்ஸ்ட்ருக்ஷனோ இல்லாமல் உள்ளே விடமுடியாது என்று சொல்லிவிடு. மகேஷ் மல்கோத்ரா இப்பொழுது வரும் நேரம்தான், அவரே ரங்கராஜனிடம் பேசி அவரை திருப்பி அனுப்பிவிடுவார்.

 

என்று கூறிக் கொண்டிருக்கும்போதே வாக்கிடாக்கியில், ”பாஸ்! தூரத்தில் மிஸ்டர் மகேஷ் மல்கோத்ரா கார் வருகிறது” என்று கேட்டின் வெளியில் நின்றிருந்த கேரி என்பவன் கூறியதை கேட்ட தீரன்,

 

“வெல், ஹி மேனேஜ் த சிட்டிவேசன். கூல் மேன்” என்றபடி அழைப்பை துண்டித்தான் தீரன்.

 

ஆமாம் நேற்று தீரன் நகைக்கடைக்கு ரிங் வாங்குவதற்கு சென்றபோது ஹோட்டலில் அவன் இல்லாததால் சி.என்.ஜி செக்யூரிட்டி கார்ட்ஸ் அவனை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்த வேளையில் நகைக்கடையில் பர்சேஸ் செய்துவிட்டு வெளியேறுகையில் அவனை பார்த்துவிட்டான் அவனின் செகயூரிட்டி டீமில் இருந்த ஒருவன்.

 

அத்துடன் அவனை பாலோ செய்து அவனின் இருப்பிடத்தை கண்டுபிடித்தவன் உள்ளே என்ன நடக்குது, எப்படி உள்ளே செல்லலாம் என்று முயன்றும் அந்த கேட்டினுள் நடப்பதை கண்டுபிடிக்க முடியாமல் எதையும் அறியமுடியாமல் திரும்பி அந்த டீமை அரேஞ் செய்த பிராங்கிடம் ரிப்போர்ட் செய்திருந்தனர்.

 

எனவே பிராங் மினிஸ்டர் ரங்கராஜனை தொடர்புகொண்டு மிஸ்டர் தீரன் இருக்கும் இடத்தை கூறி அவனை அங்குபோய் பார்த்து வரும் படியும் ஏனோ தீரன் நம் எதிரிகளிடம் மாட்டிகொண்டிருகிறானோ! என்று அச்சமாக இருப்பதாகவும்,

 

அவ்வாறு மாட்டியிருப்பது உண்மை என்றால் அது யாருக்கும் தெரியக்கூடாது அவ்வாறு தெரிந்தால் இந்த ப்ரோஜெக்ட்டை தொடர்ந்து கொண்டு செல்வதில் தடங்கள் ஏற்படும். அதனால் எங்களுக்கு மட்டும் லாஸ் அல்ல! உங்களுக்கு கிடைக்கும் பலகோடி கமிஷனும் கிடைக்காமல் போய்விடும் என்று கூறி பிரைன் வாஸ் செய்து ரங்கராஜனை அங்கு உளவு பார்க்க அனுப்பியிருந்தான்.

 

எனவே காலையில் தன்னுடைய அல்லகை நான்கு பேருடன் அங்கு மினிஸ்டர் என்ற பந்தாவுடன் வந்த ரங்கராஜன் உள்ளே தீரமிகுந்தன் இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்திருகிறது தான் அவரை பார்த்து முக்கியமான விஷயம் பேசணும் என்று சலம்பல் செய்துக்கொண்டிருந்தார்.

 

அப்பொழுது பலபலவென்ற கருப்புநிற வால்வோ கார் வந்து நின்றது அதன் கதவின் கண்ணாடி இறங்கி தலையை வெளியில் நீட்டி “என்ன பிரச்சனை இங்கே?” என்று கேட்டார் மகேஷ் மல்கோத்ரா.

 

அப்பொழுது கேர் அவரின் அருகே வந்து மரியாதையாக சல்யூட் செய்து “மிஸ்டர் தீரமிகுந்தனை பார்க்கணும் என்று உள்ளே நுழைய பிரச்சனை செய்துகிட்டு இருக்கிறார் என்றான். அவரைப் பார்த்ததுமே அது மினிஸ்டர் ரங்கராஜன் என்பதனை உணர்ந்துக்கொண்டார்.

 

இருந்தாலும் அது தெரியாததுபோல் பாவனை செய்து காரில் இருந்து இறங்கிய மல்கோத்ராவை பார்த்ததுமே அவரின் காரினையும் தோற்றத்தினையும் பார்த்த ரங்கராஜன் பெரிய ஆளா இருப்பான் போலே யார் அது? என்று பார்த்தபடி நின்றார்.

 

“யார் நீங்க? என் வீட்டின் முன் நின்று என்ன பிரச்சனை செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் மல்கோத்ரா.

 

அதற்கு மினிஸ்டரின் அல்லக்கைகள், “யாரைப்பார்த்து என்ன கேள்வி கேக்குற? ஆளும் கட்சியின் மினிஸ்டர் ரங்கராஜனை பார்த்து யாருனா கேக்குறே?” என்று உதார்விட்டனர்.

 

அவர்களை பேசவிட்டு பின் அடக்குவதுபோல் பாவலா காண்பிப்பதற்காக “தம்பிகளா நீங்க இருங்க நானே பதில் சொல்லிக்கிடுறேன்” என்று சத்தம் போட்டுவிட்டு,

 

“இங்க பாருங்க ஸார் உங்களை பார்த்தாலும் பெரிய இடமாத்தான் தெரியுது இருந்தாலும் மினிஸ்டர் என்ற மரியாதை கொடுத்து பேசுங்க இல்லாட்டி என் தொண்டர்கள் பொங்கிடுவாங்க.

 

நம்ம தீரமிகுந்தன் தம்பி இங்கதான் தங்கி இருப்பதாக தகவல் வந்துச்சு ஒரு முக்கியமான விசயமா பார்க்க வந்தா மினிஸ்டர் என்னையே உள்ள விட மாட்டேன் என்று தடுப்பதெல்லாம் நல்லாயில்ல” என்று கூறினார் ரங்கராஜன்.

 

“சாரி மிஸ்டர் ரங்கராஜன், நீங்க யாரென்று எனக்குத்தெரியாது. நான் டெக் நியூ கம்பெனி எம்.டீ மகேஷ் மல்கோத்ரா! இது என்னுடைய பில்டிங். நீங்க பார்க்க நினைக்கும் நபர் இங்கே இருப்பதற்கான வாய்ப்பு இல்லை எனக்கு தெரியாமல் என் அனுமதியில்லாமல் யாரும் இங்கே உள்ளே செல்ல முடியாது.

 

அவர் பெயரைக் கேட்டதுமே எவ்வளவு பெரிய ஆள் இவர், இருந்தாலும் நாம மடங்கிப் போனால் நம்ம தொண்டர்களுக்கு முன் நல்லா இருக்காதே இப்ப என்ன செய்ய?

 

என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவர் மல்கோத்ராவிடம், அப்போ இது சி.என்.ஜி தீரமிகுந்தன் தங்கியிருக்கும் இடமில்லையா? இது உங்களின் தனிப்பட்ட பங்களாவா? எனக்கு வந்த நியூஸ் வேறமாதிரி இருந்ததே” என்று கூறிக்கொண்டே தன்னுடைய மொபைலை எடுத்து தீரனுக்கு டயல் செய்தார் ரங்கராஜன்.

 

ஒருரிங்கிலேயே அதை அட்டன் செய்த தீரன் “சொல்லுங்க மிஸ்டர் ரங்கராஜன்” என்ற தீரனின் குரலில்,

 

“தம்பி நீங்க ஊட்டியில தங்கி இருக்கிற பங்களாவின்  முன் நான் நிக்கிறேன். ஆனால் இது நியூ டெக் எம்.டி வீடு. இதில் நீங்க இல்லைனு சொல்கிறார்களே?” என்றார்.

 

அவர் கூறியதை கேட்ட தீரன், “ரங்கராஜன் நான் இப்போ கோயம்புத்தூரில் இருக்கிறேன் இன்று அல்லது நாளை காலை உங்களை நான் ஹோட்டல் ரெசிடன்சியல் புளுவில் சந்திக்கிறேன். என்னை பார்க்க வேண்டுமானால் இப்பொழுது நீங்கள் கோயம்புத்தூரில் அல்லவா இருக்கவேண்டும் நீங்க ஊட்டியில் இருக்கிறதா சொல்றீங்க? என்று பதில் கொடுத்தான்.

 

அவனின் வாய்வார்த்தையில் குழம்பிய ரங்கராஜன், “அப்போ நமக்கு கிடைத்த தகவல்தான் தவறோ!” என்று குழம்பியபடி “அப்போ நாங்க வருறோம் மல்கோத்ரா சார் என்றவர், “ஏய் வண்டியை எடுடா. அட்ரஸ் மாறி வந்துட்டோம்” என்று கூறி காரில் ஏறி திரும்பச் சென்றதை பார்த்துவிட்டே மல்கோத்ரா தனது காரில் ஏறி உள்ளே நுழைந்தார்.

 

மற்றவர்களைப்போல் எந்த தடங்கலும் இல்லாமல் நேராக பார்ட்டி நடக்கும் ஹாலுக்கு வந்த மல்கோத்ராவை கண்டதும் அவரை நோக்கி சென்ற தீரனைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி டன் என்று கூறியபடி வந்த மல்கோத்ராவை,

 

“ஐ நோ. தாங்க்ஸ் பார் கமிங்” என்றபடி அணைத்து வரவேற்று அழைத்துச்சென்று முன்னால் போடபட்டிருந்த இருக்கையில் அமர வைத்தான் தீரன்.

 

அதன் பின் யாழிசையின் அருகில் தீரன் வந்து நின்று, “ஃப்ரெண்ட்ஸ், நான் சொன்ன முக்கியமான நபர் என்னுடைய நலம் விரும்பி அண்ட் மை பிஸ்னெஸ் பார்ட்னர் மிஸ்டர் மகேஷ் மல்கோத்ரா இங்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

 

இப்பொழுது நான் என் யாழிசையை உங்களின் முன்னிலையில் என்னுடைய பியான்சியாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன் என்று கூறியவன் தனது பாக்கெட்டினுள் இருந்த மோதிரத்தை எடுத்தான்.

 

அதை பார்த்த யாழிசை இதை எப்படி நான் மருகியபடி நின்றாள். குழப்பத்துடன் நின்றுக்கொண்டிருந்த அவளின் கண்களை பார்த்து “வில் யூ மேரி மீ” என்று அவளின் முன் மண்டியிட்டு அந்த மோதிரப்பேழை திறந்து காண்பித்தான்.

 

மந்திரத்துக்கு கட்டுபட்டவள் போல் யாழிசை, தனது தலையை குனிந்து அதை போட்டுவிட தன் கரத்தை அவனின் முன் நீட்டினாள். அவளின் அந்த இணக்கத்தில் பூரித்து போனவன் அவளின் விரல்பிடித்து மோதிரத்தை போட்டுவிட்டவன்.

 

அவள் கையிலும் ஒரு மோதிரத்தை கொடுத்து தனக்கு போடச்சொல்லி விரலை அவளின் முன் நீட்டினான். அவளும் அவன் கண் நோக்கி பேசியதில் மெய் மறந்து அவன் சொல்வதை செய்யும் தலையாட்டிப் பொம்மையாக மாறி அதை அவனுக்கு அணிவித்தாள்.

 

அதனை தொடர்ந்து தீரன் அனைவரின் முன்பும் அவளை அணைத்து ஆங்கிலேயர் பாணியில் முத்தமிட்டான்.

 

அதை எதிர்பார்க்காத யாழிசைக்கு அதுவும் சபை நிறைய மனிதர்களின் முன் அவனின் செயல் அவளுக்கு மிகுந்த கூச்சத்தையும் தலைநிமிர்ந்து பார்க்கமுடியாத நிலையையும் உண்டாக்கியது.

  
                  ----தொடரும்-----

 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib