Post Page Advertisement [Top]

 

------------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்- 25 & 26

 

 தீரனை வீழ்த்தவும் யாழிசையை தங்களின் கஸ்டடிக்கு கொண்டுவரவும் பிராங் திட்டம் தீட்ட ஆரம்பித்துவிட்டான். அதன் விளைவாக வகுலா தீரனை தேடி இந்தியாவிற்கு விமானம் ஏறி பயணத்தை தொடங்கிவிட்டாள்.

 

அதேநேரம் யாழிசையைப் பற்றி மினிஸ்டர் ரங்கராஜனின் மூலம் பிராங் துப்பு துலக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் அவனுக்கு கிடைத்த ரிப்போர்டில் யாழிசையை பற்றி, கணேச பிள்ளையின் மகளாகிய அவள், அவளின் குடும்பத்திற்குத் தெரியாமல் அவளுக்குப் பிடித்த அவளை விரும்பிய வெளிநாட்டு தொழில் அதிபரை வருங்கால கணவராகத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும்,

 

அவள் வீட்டில் வேறு இனத்தவரை மருமகனாக ஏற்றுக்கொள்ளமட்டார்கள் என்ற காரணத்தால் அவர்களுக்குத் தெரியாமல் அவள் வீட்டை விட்டு அந்த தொழிலதிபருடன் அவள் பிறந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும்,

 

அவளது தற்போதைய முகவரி என்று கோயம்புத்தூரில் உள்ள ஒரு வீட்டின் முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வீட்டை அவளின் காதலனான வெளிநாட்டுத் தொழிலதிபர் அவள் பெயரில் வாங்கி தந்ததாகக் கூறப்பட்டு இருந்தது.

 

இதை பார்த்த பிராங்கிற்கு அவளிடம் தற்போதுள்ள அந்த ஷேர்களும் ஈ-கோல்டும் அந்த வீடும் அவனிடம் இருந்து கொள்ளையடிக்கபட்ட பணத்தில்தான் வாங்கப்பட்டுள்ளது என்ற உண்மை உரைக்க ஆத்திரம் கொண்டான்.

 

மேலும் அவளுக்கு உதவி செய்யும் அவளின் வெளிநாட்டு தொழிலதிபர் யார்? என்ற விபரத்தை அதில் குறிப்பிடாமல் இருப்பதை கண்டு வெகுண்ட பிராங், அது யார்? என்பதை இன்னும் பன்னிரண்டு மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து அவனிடம் ரிபோர்ட் செய்யவேண்டும் என்று மினிஸ்டர் ரங்கராஜனுக்கு உத்தரவு பிறப்பித்தான்.

 

ரங்கராஜன் யாழிசையை பற்றி விசாரித்தபோதுதான் அவள் தனது மகளின் தோழி என்ற விவரம் தெரியவந்தது. தனது மகளிடம் விசாரித்தால் யாழிசையின் காதலனை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்தார்.

 

தன் மகள் சந்தியாவிற்கும் மிதுனனுக்கும் இடையில் காதல் என்று தெரிந்த பிறகு அவளைக் கல்லூரி அனுப்பாமல் வீட்டுச் சிறையில் வைத்து கலெக்டர் மாப்பிள்ளைக்கும் அவளுக்கும் கல்யாணம் முடிக்க ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்கிறது.

 

எனவே சந்தியா மிகவும் மனச் சோர்வில் இருந்தாள். அவளின் ஒவ்வொரு செயலும் அவள் வீட்டவரால் கண்காணிக்கபடுவதை கண்டும், வீட்டை சுற்றி அவள் வெளியேறி செல்ல முடியாதவாறு காவலும் தன்னை மீறி நடக்கும் அவளின் கல்யாண ஏற்பாட்டை நிறுத்த முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தாள்.

 

மிதுனனை அவள் தப்பிக்க வைத்த அன்றிலிருந்து அவளிடம் முன்பு பாசமாக பேசும் அவளின் அப்பாவின் குணம் காணாமல் போய் இருந்தது. அப்படிப்பட்டவர் இன்று சந்தியாமாஎன்று அன்புடன் அவளை அழைத்தபடி அவளின் அறைக்குள் நுழைந்தார் ரங்கராஜன்.

 

சந்தியாவால் அவரின் இந்த திடீர் மாற்றத்தை கண்டு யோசனையாக இருந்தபோதிலும் தன்னை பெற்றவர் தானே மகள் என்ற பாசம் அவருக்குள் முற்றிலும் அழிந்தா போயிருக்கும்! என்ற மற்றொரு மனதின் கூக்குரலில்

 

 என்னப்பாஎன்று அவளும் குரல் தழுதழுக்க கேட்டாள். ஒண்ணுமில்லமா நீ சாப்பிட்டீயா?என்று கேட்டபடி அவள் அமர்ந்திருந்த சோபாவில் அருகில் அமர்ந்து அவளின் தலையை பாசமாக தடவியபடி கேட்டார்.

 

“ம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்தவளை. உனக்கு அப்பா நல்லதைத்தான் செய்வேன் நீ சரியாவே சாப்பிடாம இருப்பதா உன் அம்மா வருத்தபடுறா பாரு எவ்வளவு வாடிட்ட

 

அவளும் எப்படியாவது அப்பாவிடம் அவர் சொல்பேச்சு கேட்பதுபோல் நடித்து காலேஜ் சென்று மிதுனனைப் பற்றியும் அவனின் நிலைமை பற்றியும் தெரிந்து எப்படியாவது இந்த கல்யாணத்தில் இருந்து தப்பிவிடணும் என யோசித்தவள்.

 

நீங்க எனக்கு நல்லதைதான் செய்வீங்கனு இப்போ புரிஞ்சுகிட்டேன்பா. நீங்க சொல்றபடி இனி கேட்டு நடப்பேன். எனக்கு வீட்டுக்குள்ள இப்படி அடைஞ்சு கிடப்பது ஒருமாதிரி இருக்குதுப்பா.

 

காலேஜ் போனால் பழையபடி நான் சந்தோசமாக மாறிடுவேன்பா என்னைய காலேஜ் மட்டும் போகவிடுங்கப்பா

 

ஆங் .நீ காலேஜ் போகணும்னு சொன்னதும்தான் ஒரு விஷயம் எனக்கு நியாபகம் வருது. உன் கூட நம்ம வீட்டுக்கு கூட காலேஜ் பொண்ணுங்களை அன்னைக்கு கூட்டிக்கிட்டு வந்தயே, அதில் யாழிசைன்னு யாராவது வந்தங்கலாமா?”

 

எதுக்குப்பா யாழிசையை பத்தி கேக்குறீங்க? அவளுக்கு என்னாச்சுப்பா?என்று பதட்டத்துடன் கேட்டாள்.

 

இல்லம்மா அந்த பொண்ணு யாரோ ஒரு வெளிநாட்டு பணக்காரன் கூட ஓடிப்போயிடுச்சாம். அவன் யாருன்னு தெரியாம அவங்க வீட்டில தேடிட்டு இருக்காங்க. அதுதான் உனக்கு அந்த பொண்ணு யாரை காதலிச்சானு தெரியுமா?

 

இல்லப்பா யாழிசை அப்படி யாரையும் காதலிக்கலையே, எதுனாலும் எனக்கு தெரியாமல் செய்ய மாட்டாளே, என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்பா யாழிசைஎன்று கூறியவளின் சுருதி படிப்படியாக குறைந்தது.

 

அமெரிக்காவில் இருந்து இங்கு வந்திருந்த அந்த தீரனால் ஒருவேளை யாழிசைக்கு எதுவும் ஆபத்து வந்திருக்குமோ? என்ற எண்ணம் அவளுக்குள் அந்நேரம் எழுந்தது.

 

ஆனால் அவன் தன் அப்பாவிற்கு வேண்டப்பட்டவன். அவனைப் பற்றி அப்பாவிடம் கூறுவதால் நன்மை ஒன்றும் நடந்து விடாது என்ற எண்ணமும் அவளுள் எழுந்தது.

 

ரங்கராஜன் சந்தியா அவளின் தோழி யாழிசையை பற்றி விசாரித்ததும் முதலில் அவளுக்கு காதலன் என்று யாரும் கிடையாது என்று சொல்லியவளின் குரல் போக போக தேய்ந்து யோசனையில் வலுவிழந்து போவதை கவனித்தவர்,

 

அம்மாடி சந்தியா, வேற எதோ ஒரு விஷயம் அந்த பொண்ணைப் பத்தி உனக்கு தெரிஞ்சிருக்குப்போல, சொல்லும்மா. அந்த பொண்ணு வீட்டில் திடீர்னு யாரோ ஒருவன் கூட போய்விட்டதை நினைத்து அவளை கண்டுபிடிக்க முடியாமல் கலங்கி போய் இருக்காங்க.

 

உனக்குத் தெரிந்த விஷயத்தை சொன்னால் பெண்ணைப் பெத்தவங்களுக்கு அவளை கண்டுபிடிக்க உதவியா இருக்குமில்ல. நானும் பெண்ணை பெத்தவன் தானே எனக்கு தெரியும்மா ஒரு பெண்ணோட தகப்பனின் தவிப்புஎன்று அவளிடம் உண்மையை வரவழைக்க வார்த்தைகளில் ஜாலமாடினார்.

 

அவர் பெற்ற மகளுக்கு அவரின் நரித்தந்திரம் லேசாக புரிபட்டது. தன் தோழி யாழிசைக்கு வெளிநாட்டுக்காரனுடன் உறவா? என்று கேட்டதுமே தீரனின் ஞாபகம் தான் அவளுக்கு வந்தது.

 

ஆனால் தீரன் பற்றி தன் தந்தையிடம் சொன்னால் கண்டிப்பாக அவர் அவனுக்குத்தான் சாதமாக நடந்துகொள்வார் என்ற எண்ணம் எழுந்தது.

 

எனவே அவரிடம் அதை பற்றி கூற அவளுக்கு தயக்கம் ஏற்பட்டு முதலில் காலேஜ் போய் தன் தோழி மற்றும் அவளின் மிதுனனைப் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஏக்கத்தில், தான் காலேஜ் போனால்தான் ஏதாவது தெரியவரும் தன்னால் முடிந்த எதையாவது செய்யவும் முடியும் என்று நினைத்தாள்.

 

மேலும் யாழிசை வீட்டில் அவர்களின் பெற்றோரிடம் தீரனைப் பற்றி கூறவேண்டும் அதற்கு தான் காலேஜ் போகவேண்டும் எனவும் முடிவெடுத்தாள் அதனால், “அப்பா, யாழிசைப் பற்றி தெரியவேண்டும் என்றால், நான் காலேஜ் போனால்தான் விசாரிக்க முடியும்.

 

அவளுக்கு லவ்வர்னு யாரும் கிடையாது ஆனால் நீங்கள் சொல்வதை பார்த்தால் அவள் யாராலோ கடத்தபட்டலோ என்ற சந்தேகம்தான் எனக்கு வருது. காலேஜ் போனால், நான் என் ஃப்ரெண்ட்ஸ் மூலம் அவளை யாராவது சேஸ் பண்ணாங்களானு கேட்டு தெரிஞ்சுக்க முடியும்.

 

அப்பா ப்ளீஸ்பா என் ஃப்ரெண்ட்டுக்கு என்ன ஆச்சுன்னு கூட எனக்குத் தெரியல, நான் காலேஜ் போகணும்பா, யார் அதுன்னு தெரிஞ்சா அவளை காப்பாத்த தி கிரேட் மினிஸ்டர் ரங்கராஜனாகிய என் அப்பா உங்களிடம்தான் வந்து நிப்பேன். பிளீஸ்ப்பா நான் காலேஜ் போறேன்பா.

 

ரங்கராஜனுக்கு தன் மகள் பேச்சை நம்பவா! வேண்டாமா! என்ற சந்தேகம் எழுந்தது. இருந்தும் தான் இந்த உதவியைச்செய்தால் தனக்குத் தருவதாக பிராங் சொன்ன டாலர்களின் மதிப்பு, அவரை எப்படியும் அவன் கேட்டுள்ள விவரத்தை புரட்டிக் கொடுத்துவிடவேண்டும் என்ற ஆசையை விதைத்தது.

 

மேலும் வெளிநாட்டு தொழிலதிபர் பிராங்கின் உறவை பலப்படுத்தி தன் கருப்புப்பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்ய நினைத்தார். அதற்கு தன் மகளை தக்க கண்காணிப்புடன் காலேஜ் அனுப்பவும் முடிவெடுத்தார்.

 

எனவே அவர் "சந்தியா நீ இந்த அளவு கேட்கும் போது என்னால் உன்னைய காலேஜ் அனுப்பாமல் இருக்க முடியாது. ஆனால் உனக்கு நான் ஏற்கனவே கலெக்டர் மாப்பிள்ளையோடு நிச்சயம் செய்துட்டேன்றதை மறக்ககூடாது."

 

தீரமிகுந்தன் கைகளில் அவனின் முத்தத்தால் இளகி தொய்ந்து நழுவியவளை தன்னுடன் சேர்ந்து அணைக்கும் போது அவனது மொபைலின் சத்தத்தில் தன்னிலையடைந்தான் தீரன்.

 

தன் கைவளைவில் தன்னால் மீட்டப்பட்ட யாழிசையின் வெட்கமும் மயக்கமும் கண்டவனுக்கு அவளின் மீதான மயக்கம் அதிகரித்தது. அவன் கண்ட வெளிநாட்டு பெண்களின் விரசமான வெளிப்படையான கூடலை கண்டிருந்த தீரமிகுந்தனுக்கு அவளின் வெட்கமும் அறியாமையும் அப்பழுகில்லாத நிலையும் அவளுக்கு தான் காதல் ஆசானாக ஆசை பொங்கியது.

 

இருந்தாலும் தற்போது வந்த மொபைல் அழைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவளை தன்னிலிருந்து பிரித்து தள்ளி நிறுத்தினான். அதில் தன்னிலை உணர்ந்த யாழிசைக்கு தான் அவனுக்கு கொடுத்த ஒத்துழைப்பை நினைத்து பெரும் சஞ்சலத்துக்கு ஆளானாள்.

 

எனவே அவனின் முகம் பார்க்க முடியாமல் மறுபுறம் திரும்பி நின்றாள். அவளின் பின்னாலிருந்து தன்னுடன் சேர்த்து அவளை அணைத்தவன்.

 

ஒரு இம்பார்ட்டன்ட் கால் வந்துருக்கு பேப். சோ ஐம் கோயிங் நவ். பட் வெயிட் டில் அய் கம் டியர்”. என்று கூறி அவளின் கழுத்தில் முத்தம் பதித்து விலகிச்சென்றான்.

 

தீரமிகுந்தனின் அதிரடியான இதழ் முத்தயுத்தம் யாழிசையை பெரிதும் சஞ்சலபடுத்தியிருந்தது. யாழிசைக்கு இரவு நெருங்க நெருங்க ஒருவித பயமும் எதிர்பார்ப்பும் ஒருங்கே எழுந்தாலும், இப்பொழுது அவளுக்கு அவனின் மேல் காதல் மயக்கம் கூடியிருந்தாலும் தனது அப்பா மற்றும் பாட்டி அங்கே தன்னை நினைத்து தவித்துக் கொண்டிருப்பதை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள்.

 

மேலும் அன்று சத்தியமூர்த்தி வேறு உன்ன பெத்து வளர்த்தவங்களுக்கு நல்ல பேரை இப்படி ஓடிவந்து சம்பாதித்து கொடுத்துட்டேமா என்ற குதர்க்கமான வார்த்தை அவளை அவனின் மீது உண்டான மயக்கத்தை அழுத்தி வைக்கவே முயன்றது.

 

ஆனால் அவனின் ஆளுமையை ஓர் முத்ததிலேயே கண்டுகொண்ட யாழிசை அவனை தன்னால் தடுக்க முடியுமா? என்ற எண்ணமும், தனது இந்த ரெண்டாங்கெட்டான் மனநிலையில் அவன் தன்னை நெருங்கினால் தன்னால் முழுமையாக அவனுடன் ஒன்ற முடியுமா? இதை எப்படி தவிர்ப்பது என்றும் எண்ணிக்கொண்டிருந்தாள்.

 

வெளியில் சென்று தனது சகாக்களுடன் இணைந்துக்கொண்ட தீரமிகுந்தன் “என்ன இம்பார்ட்டென்ட் இன்போர்மேசன் வந்திருக்கு இமாமி?” என்றதும்,

 

பாஸ் வகுலாவை பிராங் கிளப்பில் சந்திச்சுப் பேசியிருக்கான். அப்போ அவளிடம் உங்க மொபைல் நம்பர் கொடுத்திருக்கான். அதுக்கூட இந்தியாவிற்கு வர அவளுக்கு டிக்கட்டும் எடுத்துக்கொடுத்திருக்கான்.

 

வகுலாவை இந்தியா அனுப்பி உங்களை டைவர்ட் பண்ணவோ அல்லது உங்களை ஸ்பை செய்வதற்கோ பிளான் செய்திருக்கான்என்றான்.

 

அப்பொழுது அவனுக்கு அமெரிக்காவில் இருந்து மொபைலில் அழைப்பு வந்தது. அதனை பார்த்ததும் யோசனயானான் தீரன்.

 

ஏனெனில் இந்த நம்பரில் இருந்து அவனுக்கு சி.என்.ஜி டீமிடம் இருந்தும் பிராங்கிடம் இருந்து மட்டும்தான் அழைப்புகள் வரும். ஆனால் இப்பொழுது வந்திருப்பது தெரியாத நம்பரில் அழைப்பு, இந்த நம்பரை பிராங் தவிர வேற அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது இமாமி சொன்னதிற்க்கும் வந்த அழைப்பிற்கும் தொடர்பு இருக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது.

 

பிராங்கின் மூவ்மென்ட் என்ன என்பதை இந்த போன் அழைப்பில் இருந்து கண்டுக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் அதன் கடைசி ரிங்கில் அழைப்பை அட்டன் செய்தான்.

 

தீரா நான் ஆண்ட்டி விசாலி பேசறேன்பா. எப்படி இருக்க? நல்லா இருக்கிறயா?” என்றுக் கேட்டாள் வகுலாவின் அம்மா விசாலி.

 

தானும் தனது அம்மாவும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்ததில் இருந்து தனது அம்மாவிற்கு பிறகு குடும்ப அளவில் நெருக்கமாகப் பழகிய பெரியவர் என்ற முறையில் அவரிடம் எப்பொழுதுமே தீரன் மரியாதையாகத்தான் பேசுவான்.

 

எனவே ம் ஐ,ம் பைன் சொல்லுங்க ஆண்ட்டி என்ன திடீர்னு போன் செய்திருக்கிறீங்க? இந்த நம்பர் உங்களுக்கு எப்படி கிடைத்தது?என்றுக் கேட்டான்.

 

ஒரு சந்தோசமான விஷயம் சொல்லத்தான் உனக்குப் போன் பண்ணினேன் தீரா .வகுலாதான் இந்த போன் நம்பரை கொடுத்தாள். பத்மினியின் ஆசையை என்னால் நிறைவேத்தமுடியாமல் போயிடுமோனு ரொம்ப தவிச்சுப் போயிருந்தேன்.

 

உனக்கும் வகுலாவிற்கும் கல்யாணம் முடியணும்னு அவளும் நானும் அவ்வளவு ஆசைப்பட்டோம். ஆனால் இந்த வகுலா இடையில் அந்த பிராங் கூட சேர்ந்து உன்னைய ஹர்ட் செய்ததால் முடிவு செய்த கல்யாணம் நின்னுடுச்சு.

 

ஆனால் இப்போ வகுலாவுக்கு அந்த பிராங்கோட உண்மையான முகம் தெரிந்து அவன் கிட்ட இருந்து விலகிட்டா. இப்போ திரும்பவும் உன்கூட சேரணும்னு ஆசைப்படுறாஎன்று சொல்லிக்கொண்டு போனவளை,

 

தீரன் இடைப்புகுந்து ஆண்ட்டி நோஎன்று மேற்கொண்டுப் பேசப்போனவனை, “ஒரு நிமிஷம் நான் முழுவதும் பேசிமுடிச்சுடுறேன் தீரா. பத்மினியின் கடைசி ஆசைக்காக கொஞ்சம் பொறுமையா நான் பேசுவதை கேட்டுட்டு அப்பறம் நீ பதில் சொல்லுஎன்றவர் தொடர்ந்தார்.

 

அவள் என்னிடம் உன்கூட திரும்ப கல்யாணம் என்று பேச்சு எடுத்த போதே நான் சொல்லிட்டேன். இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை தீரனின் முடிவுதான் இறுதியானதுன்னு. இருந்தாலும் அவள் சொல்றா நான் தீரனின் அருகில் இருந்தால் அவன் என்னை புரிந்து திரும்ப ஏத்துகிடுவான்னு சொல்லி உன்னையப் பார்க்க இந்தியா கிளம்பி வந்துட்டு இருக்கிறாள். தமிழ்நாட்டில் உனக்கு அம்மாவழிச் சொந்தம் அப்பாவழிச் சொந்தம்னு எல்லோரும் இருக்காங்க.

 

என்னுடைய பெரிய பாட்டனாரின் பேரன் உன் அப்பாவின் ஊர்தான். அவங்க வீட்டிற்குத்தான் வகுலா வருகிறாள். அவங்க மூலம் உன் அப்பாவின் சொந்தங்களை நீ சந்திக்க வாய்ப்பு இருக்கு. வகுலாவிற்கு இந்தியா புதிது, நீ இருக்கிற தைரியத்தில் தான் அவளை அனுப்பிவைக்கிறேன். வகுலாவை பார்த்துக்கோ தீரா. நீயும் மனசு மாறி இரண்டு பேரும் சேர்ந்தால் மிகவும் சந்தோசம். ஆனால் அதற்காக உன்னை வற்புறுத்த மாட்டேன். அங்கு வரும் வகுலா உன் பொறுப்பு. எனக்காக அவளைப் பத்திரமாக கவனித்து இங்கு திரும்ப அனுப்பி வைப்பாயா தீராஎன்று கேட்டாள்.

 

அவளிடம் மறுப்புச் சொல்ல முடியாததால் “ஓகே ஆண்ட்டி நீங்க அவளோட திரும்ப என் மேரேஜ் என்றுப் பேசி வற்புறுத்த மாட்டேனு சொன்னதால நான் வகுலாவிற்கான பொறுப்பை எடுத்துக்கிறேன்என்றான்.

 

அவன் மொபைலை வைத்ததும் மிகுந்த யோசனைக்கு ஆளானான். வகுலாவை அவளின் சொந்தகாரர்களின் வீட்டிற்குப் போக விடக் கூடாது என்று முடிவெடுத்தான்.

 

ஏனெனில் அவ்வாறு போய் விசாரித்தால் தனது அப்பா வானவராயர் பற்றி பிராங்கிற்கு தெரியவரும். எனவே அவர்களுக்குப் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளதை அவன் உணர்ந்துக் கொண்டான்.

 

அதுமட்டுமில்லாது சி.என்.ஜிக்கு எதிராக களம் இறங்கும் டீமிற்கு பலமே வானவராயர்தான். அவர் தன்னுடைய அப்பா என்றுத் தெரிந்தால் இன்னும் விபரீதம் உருவாகும் என்பதை அவன் புரிந்து சூழலை எப்படி ஹேண்டில் செய்ய என்று தீவிரமாக தனது சகாக்களுடன் ஆலோசனை நடத்தினான்.

 

அவ்வாறாக ஆலோசனை செய்ததின் முடிவாக தங்களின் கட்டுப்பாட்டில் அவளை இந்தியா ஏர்போர்ட் வந்ததும் கொண்டுவந்துவிட முடிவெடுத்தனர். அதன் பின் அவர்களுடன் மைன்ட் ரிலாக்ஸ் என்ற பேரில் சிறிது மது அருந்தியவன் யாழிசை தற்போது இருக்கும் அவனின் அறைக்குத் திரும்பினான்.

 

கதவு திறந்து தீரமிகுந்தன் அடியெடுத்து உள்ளே வந்தான் அவன் அருகில் வரவர அவன் கண்ணின் சிகப்பும் பேபி என்று கூறியபோது அவன் வாயிலிருந்து வந்த ஆல்கஹால் வாசனையும் அவன் குடித்திருக்கிறான் என்ற உண்மையை அவளுக்கு பறைசாற்ற பூப்போன்ற பெண்ணவள் புயலைக் கண்டதுபோல் மருண்டுவிழித்தாள்.

 

சத்தியமூர்த்தி தன்னிடம் பகிர்ந்த வார்த்தைகள் வானவராயருக்கு அத்தனை அதிர்ச்சியாக இருந்தது. உன் மகனை நான் பார்த்தேன் வானவாஎன்று சத்தியமூர்த்தி கூறியதும், “என் மகனா! என்ன சொல்ற சத்தி?என்று குழப்பத்துடன் அவரை கேள்விகேட்ட வானவராயரிடம், “உன் காதில் விழுந்த வார்த்தை சரிதான். உன் மகனைத்தான் பார்த்தேன். உனக்கும் பத்மினிக்கும் பிறந்த தீரமிகுந்தனை சந்தித்துவிட்டுத்தான் இப்போ வருகிறேன்என்றார் சத்தியமூர்த்தி.

 

என்ன பத்மினிக்கும் எனக்கும் மகன் பிறந்தானா? என் மகனை நீ பார்த்தயா? அவன் பேர் தீரமிகுந்தனா? எப்போ பார்த்த? எங்க பார்த்த? பத்மினி எப்படி இருக்கிறாள்? என்னை அங்க கூட்டிட்டு போ சத்திஎனப் பரபரத்தார்.

 

தனது நண்பனின் நிலையை பார்த்த சத்தியமூர்த்திக்கு கண் கலங்கியது. எப்பொழுத்தும் நிதானத்துடனும் கம்பீரத்துடனும் வளம் வரும் வானவராயரிடம் கண்ட இந்த தடுமாற்றமும் படபடப்பும் அவரின் நிலையை அவருக்கு தெளிவாக விலக்கியது.

 

முன்பு பிருந்தாவின் அம்மாவை கல்யாணம் செய்யும் முன் மணந்திருந்த தனது மனைவி பத்மினியின் நடத்தை அன்று விமர்சிக்கப்படுவதை பொருக்காமல் அவளை அடக்க தான் பேசிய வார்த்தையை சந்தேகம் என்று புரிந்து விலகிச்சென்ற பத்மினியை நினைத்துப் பார்த்தார்

 

வருத்தத்தில் பத்மினியை தேடி அழைந்தவனின் காதில் விழுந்த பெரியவீட்டு மருமகள் ஓடிப்போய்விட்டாள் என்று ஊர் பேசிய வார்த்தையில் பெரும் அவமானமடைந்தார்.

 

வானவர் தனது அக்கா தேவகியின் மகள் பத்மினியைத் தான் முதலில் திருமணம் செய்திருந்தார். தேவகி தனது தம்பியும், தன் மகள் பத்மினியின் கணவனுமாகிய வானவராயரின் வேதனையை கண்டு பெரிதும் கலங்கிப் போனாள்.

 

மகளினால் நிலைகுலைந்து போன தனது தம்பியின் நிலைமையையும் தான் பிறந்த வீட்டின் நிலைமையையும் சீர்படுத்த, தன்னுடைய மகள் பத்மினி இருந்த இடத்தில் பொறுமையே உறைவிடமான வெள்ளையம்மாளை இருத்த போராட ஆரம்பித்தாள்.

 

ஜமீந்தார் வீட்டில் மகளாக பிறந்த தேவகியும் அக்ரஹாரத்து வீட்டு சேதுபதியும் இளவயதில் காதல் கொண்டு வீட்டுக்குத் தெரியாமல் வட இந்தியா சென்று கல்யாண வாழ்க்கையைத் துவங்கினார்கள்.

 

சேதுபதி அக்காலத்திலேயே கல்லூரியில் டாப் ரேங்கில் உள்ள மாணவர் மேலும் அவர் கலெக்டர் ஆவதற்கு முழு முயற்சி செய்திருந்த வேலையில் தேவகியுடன் காதலில் விழுந்தார். வட இந்தியா போனபின் அவர் சிரமங்களுகிடையே தேர்வு எழுதி கலெக்டர் ஆன சமயம் அவருக்கும் தேவகிக்கும் பத்மினி மகளாகப் பிறந்தாள்.

 

வட இந்தியாவில் சேதுபதியின் தாயின் தூரத்து உறவினர் பர்வதம் வெங்கடேசனின் தம்பதியினர் தான் அவர் டிரைனிங் சென்றிருந்த போது வயிற்று பிள்ளையோடு இருந்த தேவகிக்கு தேவையான உதவிகளை செய்து பாதுகாத்து வந்தனர்.

 

அந்த பங்கஜம், வெங்கடேசன் தம்பதியரின் மகள்தான் விசாலி, விசாலியின் அம்மா கிளாசிக்கல் டான்ஸர் டீச்சர். அவரிடம் தான் பத்மினி சிறு வயதில் இருந்தே பரதம் பயின்று அதில் தேர்ந்திருந்தாள்.

 

பத்மினியின் கலை ஆர்வம் கலாச்சார சிறப்புமிக்க பரதத்தில் இருந்தாலும் அவளின் இளவயது சேர்க்கையும் போக்கும் அக்காலத்திலேயே ஆண் பெண் நண்பர்களுடன் வெள்ளைக்காரன் அறிமுகபடுத்தியிருந்த பார்ட்டி கலாச்சாரம் கொண்ட டெல்லியில் வாழும் செல்வந்தர்கள் வீட்டு பிள்ளைகளுடன் என்றானது.

 

அங்கேயே பிறந்து வளர்ந்ததினால் பத்மினி நாகரீகமாக உடையணிவது நாசூக்கான ஆங்கில பேச்சு மற்றும் ஆண்பெண் வித்தியாசமில்லா நட்பு ஆகியவற்றை பார்த்து பயந்தாள் தேவகி.

 

அதேநேரம் சேதுபதியும் கலெக்டர் பதவியில் இருந்ததால் பெரிய பெரிய ஆட்களின் பழக்கமும் அவர்களுடன் சேர்ந்து மது அருந்துவதையும் பழகியிருந்ததால் அவரின் உடல் நிலையும் பாதிப்படைந்தது.

 

எனவே தேவகி தனது மகளின் எதிர்காலம் அங்கிருந்தால் பாதிக்கப்பட்டுவிடுமோ எனப்பயந்து தான் பிறந்த ஊருக்கே வந்துவிட்டார்.

 

வானவராயரின் குடும்பமும் இத்தனை வருடம் கழித்து குடும்பத்துடன் தங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லி வந்து நின்ற தேவகியை குடும்பத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

 

ஊருக்கு வந்து சிறிது நாட்களிலேயே சேதுபதியின் உடல்நிலை மோசமாகச் சென்றதால் அவரின் கண் மூடுவடுவதற்குள் தனது மகளின் கல்யாணத்தை முடிக்க ஆசை கொண்ட தேவகி தனது தம்பியையே தன் மகளுக்கு மாப்பிள்ளையாக்க முடிவெடுத்தார்.

 

நாகரிக மங்கையான பத்மினிக்கும் விவசாயத்தையே விரும்பி தன் குடும்பத்து பெரும்பான்மையிடங்களில் தோப்பு வயல்காடு ஆகியவற்றை ஆர்வத்துடன் கவனித்த அக்மார்க் பெருவிவசாயி வானவராயருக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு கல்யாணம் முடிந்தது.


 

அத்தியாயம்-26

 

ஆறடி உயரத்தில் உழைப்பால் உரமேறிய தேகத்துடனும் வெள்ளைநிற வேஷ்டிச் சட்டையுடுத்தி வானவராயர் நடந்து வருகையில் அத்தனை தோரணையாக கம்பீரமாக இருக்கும்.

 

அவருக்கு மக்களிடையே இருந்த செல்வாக்கை அவர் வெளிசெல்லும் போதும், வீட்டிலிருக்கும் போது வீட்டின் உள்ளவர்களும் அவருக்கு கொடுக்கும் மரியாதைகளும் அவரின் தீர்க்கமான பார்வையும் பேச்சும் பத்மினியை ஈர்த்தது.

 

அவன் கிராமச் சூழலில் வாழ்பவனாக இருந்தாலும் அவனைப் போன்ற கம்பீரமான ஆணை பத்மினி அவள் பழகிய நாகரிக உலகில் சந்தித்ததில்லை. எனவே விரும்பியே வானவராயரை மணமுடித்தார்.

 

 அதேபோல் நாகரிக மங்கையாக பத்மினி இருந்தாளும் வானவராயர் அவரின் அக்கா மகளாகிய பத்மினியை முதலில் பார்த்தது டெல்கியில் நடந்த ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியில் தான்.

 

அதில் கண்ட அவளின் விழி அசைவில் தன் மனதை அவளிடம் தொலைத்தவராக இருந்தாலும் தன் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்த தன் சகோதிரியின் மகள் மீது தனக்கிருந்த ஆசையை வெளிக்காண்பிக்காமல் அணை போட்டே வைத்திருந்தார்.

 

மேலும் இங்கு வந்த பின்பு சேதுபதியின் பெரியப்பா மகன் ராஜேஷ் அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி வந்து பத்மினியை வெளியிடங்களுக்கும் சினிமா மற்றும் ஷாப்பிங் தளங்களுக்கும் கூட்டிபோவதையும் கண்டார் வானவராயர்.

 

அவனுடன் பத்மினி பழகுவதையும் கண்ட வானவராயர் தன் அக்காவின் கணவனான சேதுபதியின் உறவினரை தடுக்க முடியாமல் அமைதிக்காத்தார்.

 

இந்நிலையில் அவருக்கும் பத்மினிக்கும் கல்யாணம் என்று பெரியவர்கள் பேசியதைக் கேட்ட வானவராயர் பத்மினிக்குத் தன்னை கல்யாணம் செய்வதில் விருப்பம் இருந்தால் தனக்கும் இக்கல்யாணத்தில் சம்மதம் எனக் கூறினார்.

 

பத்மினியிடம் இருவரின் கல்யாணப் பேச்சை தேவகி எடுத்தபோது பக்கத்து அறையில் இருந்த வானவராயர் அவளின் பதிலை ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

 

தேவகி பத்மினியிடம், பத்மினி அப்பாவின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே போகுது அவர் இருக்கும்போதே உன் கல்யாணத்தை முடிச்சுடணும்னு  ஆசைப்படுறார். அதனால உனக்கும் வானவராயனுக்கும் கல்யாணம் முடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கோம். நீ என்னம்மா சொல்ற? என்று கேட்டார்.

 

அதற்கு பத்மினி வாவ்!, ஐ ரியலி லைக் தேட் ஹேன்சம் மேன், எனக்கு கல்யாணத்துக்கு டபுள் ஓகேஎன்று சந்தோசமாகவே தனது பதிலை கூறினாள்.

 

பத்மினியின் பதில் காதில் விழுந்ததால் மிகவும் சந்தோசமானார் வானவராயர். அதற்குப்பின் தன் மனதில் உள்ள விருப்பத்தை மற்றவர் அறியாமல் பத்மினிக்கு உணர்த்தினார்.

 

வானவராயர் வெளியில் சென்று வரும்பொதெல்லாம் அழகிய சேலைகளை வாங்கிக் கொண்டுவந்து பத்மினிக்காக குவித்தவர், தனது விருப்பத்திற்காக தினமும் சேலை உடுத்தச்சொல்லி கேட்டுக்கொண்டார்.

 

மேலும் வீட்டுப்பெரியோர்களும் கல்யாணம் முடிவானபின் அவளை வெளியிடங்களுக்குச் செல்லகூடாது என்று தடை விதித்துவிட்டார்கள்.

 

அந்நேரம் வானவராயருக்கும் அவளுக்கும் இடையில் பூத்திருந்த காதல் மயக்கத்தில் பத்மினியும் அதற்கு உடன்பட்டாள். ஆனால் இதையெல்லாம் அறிந்த ராஜேஷ் மனதில் ஒருதலையாக உருவாகியிருந்த பத்மினியின் மீதான தனது காதல் கைசேராத நிலையால் வானவராயரின் மீது பொறாமை எழுந்தது.

 

தனக்கு பத்மினியின் மேல் உண்டாகியிருந்த காதலை அவளிடம் சொல்லி நாகரிக மங்கையான அவளும் சிட்டி வாழ்க்கைக்கு பழக்கம் இல்லாத வானவராயரும் வாழ்கையில் இணைந்தால் சரிவராது என்றும், உன்னை உயிராய் விரும்பும் நானும் நீயும் கல்யாணம் செய்வதே சிறந்தது என்று கூற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தான்.

 

ஆனால் அவளை வீட்டில் சந்திக்க வரும் போதெல்லாம் முன்பு போல் அவளின் கவனம் தன்னுடன் வெளியில் செல்வதற்கு ஆர்வம் காட்ட வில்லை. மேலும் அவனாக வழிய அவளை வெளியில் செல்ல கூப்பிட்டாலும் அதற்கு பத்மினி அவனிடம் தனக்கு நிச்சயிக்கப்பட்ட கல்யாணத் தேதியை கூறி அதுவரை வீட்டார் வெளியில் செல்லத் தடை விதித்திருப்பதையும் கூறினாள்.

 

தனக்கும் வானவராயருக்கும் நிகழவிருக்கும் கல்யாண ஏற்பாட்டை ஆசையுடன் விவரிப்பாள். எனவே பத்மினியிடம் தனது மனதில் உள்ளதை ராஜேஷால் சொல்ல முடியாமல் போனது.

 

மேலும் வானவராயரின் மீது ராஜேஷுக்கு மனதில் பொறாமை அதிகரித்தது. இந்நிலையில் இருவருக்கும் கல்யாணம் முடிவு செய்த நாளுக்கு முன்பே சேதுபதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் வீட்டு ஆட்களின் முன்னிலையில் அவரின் கடைசி ஆசைக்காக, பந்தலிடப்பாடாமல் அய்யர் மந்திரம் ஓதாமல் அரைமணி நேரத்தில் கல்யாணம் முடிவதற்கு உண்டான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு பெரியோரின் ஆசியுடன் கடவுளின் பாதத்தில் வைத்து எடுக்கப்பட்ட மஞ்சள் கயிற்றை தாலியாக்கி பத்மினியின் கழுத்தில் வானவராயர் மூன்று முடிச்சு போட்டார்.

 

தன் மகளின் கல்யாணத்தை பார்த்ததே போதும் என்ற திருப்தியுடன் அன்று இரவே சேதுபதியின் உயிரும் பிரிந்தது. அந்த துக்க அனுசரிப்புக்கு ஒரு மாதம் பின் இயல்பாக வானவராயரும் பத்மினியும் வாழ்க்கையைத் துவங்கினர்.

 

வானவராயர் தனிமையில் தனது மனைவியான பத்மினியிடம் அத்தனை அன்பையும் காதலையும் காண்பித்தாலும் மற்றவர்களின் முன் அவளிடம் கண்டிப்பானவராகவே நடந்துகொண்டார்.

 

அடிக்கடி சினிமா பர்ச்சேஸ் என்று வெளியில் கூட்டிப் போகச்சொல்லி வானவராயரை கட்டாயப்படுத்தினாள் பத்மினி. வேலைச் சுமையின் காரணமாக சொன்ன நேரத்திற்கு அவரால் வராமல் போய் நிறைய தடவை ஏமாற்றத்தை சந்தித்த பத்மினி அதன் பின் அவரிடம் வெளியில் கூட்டிப் போகச்சொல்லி கேட்பதை தவிர்த்தாள்.

 

ஆனால் இதையெல்லாம் வீட்டிற்கு இடையிடையே வரும் ராஜேஷ் கவனித்து சினிமா டிக்கெட்டுகளுடன் வந்து பத்மினியை வெளியில் படத்திற்கு அழைத்தான்.

 

அவளும் நண்பன் என்ற முறையில் அவள் பழகிய நாகரிக சூழலில் தப்பில்லை என்ற எண்ணத்துடன் வீட்லுள்ளவர்களிடம் பெர்மிசன் கேட்காமல் தகவல் மட்டும் கூறிவிட்டு சென்றாள்.

 

அன்றே முதன் முறையாக வானவராயருக்கும் பத்மினிக்கும் இடையில் வாக்குவாதம் வலுத்தது. வானவராயர் வாழும் ஊர் நாகரீகத்தின் சாயல் படராத கிராமமாக இருந்ததால் ராஜேஷுடன் அவள் தனித்து கல்யாணத்திற்குப் பின் வெளியில் சென்றதும், அவர்கள் இருவரையும் தியேட்டரில் கண்ட மற்றவர்கள் பத்மினியின் நடத்தையை கேவலமாக பேசுவதையும் வீட்டிற்கு வரும் போதே அறிந்த வானவராயருக்கு அத்தனை கோபம் ஏற்பட்டது பத்மினியின் மேல். வீட்டிற்குள் வந்ததும் அவர் “பத்மினி.” என்று சத்தம் போட்டு அழைத்தார்.

 

அப்போதுதான் சினிமா போய்விட்டு வீட்டிற்கு வந்தவளை அவளின் அம்மா தேவகியும் அவளின் பாட்டியும் வசவு உரித்தனர்.

 

குடும்பப்பொண்ணு கட்டுன புருஷன் குத்துக்கல்லாட்டம் இருக்கும்போது இன்னொரு ஆளுகூட ஊர் சுத்திட்டு வந்தால் அந்த குடும்பத்தோட மானம் மருவாதி என்னெத்துக்கு ஆகும்?” என்று கூறிய அவளின் அம்மா மற்றும் பாட்டியிடம், “சே. உங்க யாருக்குமே நாகரீகமே தெரியல நான் இங்க வந்தபோது இருந்து எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்டா இருந்தது ராஜேஷ்தான். எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்றதுக்காக என் ஃப்ரெண்ட் கூட படத்துக்குப் போறதப் போய் ஒரு பெரிய விஷயமா பேசாதீங்க” என்று கத்திவிட்டு ரூமிற்குள் போய் படுத்திருந்தாள்.

 

அவ்வாறு ரூமில் படுத்திருந்த பத்மினியின் காதில் வானவரயரின் குரல் விழுந்ததும், “எதுக்கு நாகரீகமில்லாமல் நடுவீட்டில் வைத்து கத்துறீங்க?” என்று கூறியபடி எழுந்துவந்தாள்.

 

ஏற்கனவே அவளின் மேல் கோபம் கொண்டிருந்த வானவராயருக்கு அவளின் அப்பேச்சு மேலும் கோபத்தை தூண்டியது.

 

உடனே கோபத்துடன் அவளைப் பார்த்து அடிச்சு பல்லை உடைச்சுருவேன் யாரைப் பார்த்து நாகரீகமாக நடக்கலன்னு சொல்ற? ஊருக்குள்ள எனக்கிருந்த மதிப்பு மரியாதை எல்லாத்தையும் உன்னோட அநாகரீகமான செயலால் குழிதோண்டி புதைச்சிட்டு என் முன்ன தைரியமா நின்னு பேச வேறு செய்வியா?” என்றபடி எட்டி அவளின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டார்.

 

தீரன் உள்ளே நுழைகையில் அவன் மனதில் யாழிசை மீது இங்கிருந்து போகும் போது இருந்த மயக்கம் இப்போதில்லை. வகுலாவைப் பற்றியப் பேச்சு வந்ததாலும். அவளின் வருகை பற்றிய செய்தியாலும் அவளின் மூலம் தீரனுக்கு பெண்களின் மீது உண்டான காழ்புணர்ச்சி முன்னெழுந்து நின்றது.

 

அதுவும் அவன் அருந்தியிருந்த மது வேறு அவனின் யோசனையை சற்று மட்டுப்படுத்தியிருந்தது. எனவே அவளைப் பார்த்து முன்னேறியவனின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் யாழிசையை அத்தனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

உள்ளே வந்தவன் “கமான் கமான் என் கூட பெட்டில் புரலத்தானே. காத்திருக்க. யூ பிளட்டி பாஸ்டர்ட் நீங்கெல்லாம் லஸ்ட்க்கு அலையிறவங்கதானே. லவ்வுக்கு இம்பார்டன்ட் குடுக்கறதவிட, லஸ்ட்டுக்கும், லச்சூரியஸ் லைப்க்கும்தானே இம்பார்ட்டென்ட் கொடுக்கிற பியூட்டிஃபுல் பிளட்டி பாஸ்டர்ட் தானே நீங்க.

 

ஏய்! என்ன தள்ளித். தள்ளிப் போற? ம்கம்மான் உன்னைய லஸ்டில் மூழ்கடிகிறேன் .அவனைவிட இப்போ என்னிடம்தான் டாலர்ஸ் அதிகம் இருக்குது சோ. கம் டு மீ, நீ ஆசைப்பட்ட ஹெவன்க்கு நான் கூடிட்டுபோறேன்என்றபடி அவளை நோக்கி முன்னேறினான்.

 

அவனின் வார்த்தைகளும் அவனின் நிலையும் அவளுக்கு மிகவும் பயத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. அவனின் மேல் உண்டாகியிருந்த நெகிழ்ச்சி போய் இப்புதிய அவதாரம் கண்டு ஓடி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுது அவளுக்கு ஏற்பட்டது. அவனின் கையில் அகப்படாமல் துள்ளி ஓடிவந்து கதவுக்கருகில் வந்தவள் அதனை திறக்க முயன்றாள்.

 

ரூம் அவனுக்கென்று ஒதுக்கியதும் அவனின் கைவிரல் தடம் மற்றும் பாஸ்வேர்ட் போட்டால்தான் கதவை திறக்கவோ லாக் பண்ணவோ முடியும் வகையில் செட் செய்யப்ட்டிருந்தது. அது தெரியாமல் திரும்ப திரும்ப லாக்கை ஓபன் செய்ய முயன்றாள். அவளின் பார்வை தன்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த தீரனின் மேலேயே இருந்தது.

 

அத்தனை போதையிலும் தள்ளாடாத நடையில் சிவந்த கண்களுடன் தன்னை நோக்கி நிதானமாக முன்னேறியவனின் கைக்கெட்டும் தூரம் தானிருப்பதை உணர்ந்து, கதவை திறக்க முடியாததால் அதனை விட்டு அதற்கு எதிர்புறம் இருந்த பால்கனி கதவுப்பக்கம் ஓடினாள்.

 

ஓடியவள் லாக் செய்யாமல் வெறுமனே சாத்தியிருந்த கதவைத் திறந்தவள் வெளியில் சென்று அவன் திறந்து வராதவாறு அப்பக்கத்தில் இருந்து கதவின் மேல் அழுத்தமாக சாய்ந்து நின்றுக்கொண்டாள். தீரன் இருதடவை தட்டி பார்த்தவன் கதவு திறக்காததால் அவன் போதை மயக்கத்திலேயே படுக்கையில் சென்று படுத்தவுடன் உறங்கிவிட்டான்.

 

மலைப்பகுதியின் இரவுநேர குளிரில் சுவட்டர் கூட இல்லாமல் தான் உடுத்தியிருந்த சேலையின் முந்தானைக் கொண்டு தன்னை சுற்றிக்கொண்டு கதவின் மீது சாய்ந்த படியே சரிந்து அமர்ந்தவளின் மேனி குளிர் மற்றும் பயத்தின் காரணமாக வெடவெடவென்று நடுங்கியது.

 

அதிகாலை மூன்று மணிக்கு ரெஸ்ட் ரூம் செல்ல எழுந்த தீரன் தலைகீழாக கிடந்த டீ டிரேயையும் சிதறிக்கிடந்த பூக்களையும் கண்டவனுக்கு தூக்கம் தொலைதூரம் சென்றது. இரவில் நடந்த விசயங்கள் அவனின் நினைவடுக்கில் தேடியவனுக்கு தான் செய்த இமாலயத் தவறு புரிந்தது.

 

அவ்வாறு புரிந்த மறுநிமிடம் யாழிசையை அவனின் கண்கள் அறை முழுவதும் அலசியவனின் பார்வை பால்கனி கதவை கண்டதும் துள்ளி எழுந்து கதவை தள்ளினான்.

 

அவனின் தள்ளுதலில் கதவும் திறந்தது கதவின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் தேகம் அதிகக் குளிரினின் முடங்கிய அவளின் கைகால்கள் குளிரினால் முடங்கி அப்படியே சுருண்டமாதிரியே கீழாக சரிந்துக்கிடந்தாள்.

 

வேகமாக அவளை கைகளில் அள்ளியவன் ரூமிற்குள் வந்ததும் ஹீட்டரை அதிகப்படுத்தி அவளின் கை கால்களை சூடு பறக்கத் தேய்த்துவிட்டான். அப்படியும் அவளின் கைகால்கள் சில்லிட்டே இருந்தது அவளின் பற்கள் குளிரில் கெட்டியிருந்தது.

 

கெட்டிலில் நீரை சூடுபடுத்தி டீ பாக்கெட்டின் உதவியுடன் தேநீர் தயாரித்தவன் அவளை தன் மீது சாய்த்து அதை பருக வைத்தான். இருந்தும் அவளின் நிலை சரியாகாததை கண்டவன் அவளின் மீது பிலாங்கெட்டினால் மூடி தனது மேலுடையை கழட்டியவன் அப்போர்வைக்குள் தானும் நுழைந்து தனது உடம்பின் சூட்டை அவளுக்குக் கடத்தினான்.

 

அவனின் செயல் உணர்ந்து விலக அவள் நினைத்தாலும் அவளின் உடல் ஒத்துழைக்கவில்லை. தனது உடலின் சூட்டை அவளுக்குக் கடத்தியவன் கிடுகிடுத்த அவளின் உதடுகளை தன்னுதட்டால் சிறைபடுத்தி அவளின் மூச்சுக்காற்றின் வெப்பத்தை அதிகரித்தான்.

 

அவளின் உடல் நிலையை மீட்டெடுக்கவே அவளை தனது கைவளைவில் போர்வைக்குள் வைத்திருந்தான். அவள் உடல் நிலை சீராக ஆரம்பித்த நேரம் ஆணாக அவனையும் பெண்ணாக அவளையும் உணந்த்தவனின் தேகம் அவளுக்காக தகிக்க ஆரம்பித்தது.

                   ----தொடரும்----

 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib