விழியோரத் தேடல் நீ (தீபாஸ்)
தேடல்-1
அந்த கருப்புநிற ஆடிகார் டிராபிக் சிக்கனில் நின்றிருந்தது,
அதன் பின்சீட்டில் உட்கார்ந்திருந்த மஹிந்தன் வெளியில் பார்த்தான்.
காருக்கு பக்கத்தில் சிகப்புநிற ஸ்கூட்டியில் செம ஸ்டெக்சருல
ஒருத்தி சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தாள். ஏனோ நம்ம
மஹிந்துக்கு அவளின் கண்ணியமான சுடிதார்கூட வஞ்சனையில்லாமல் காண்பித்த வளைவு சுளிவுகளினால்
ஈர்க்கப்பட்டு ‘வாவ்...!
செம சேப்’. என்று நினைச்சுகிட்டே முகத்தை பார்த்தால் பச்சைக்கலர் துப்பட்டாவை முகமூடியாக்கி... நெற்றி கண்
தவிர மத்ததெல்லாம் மறைச்சிருந்தாள்.
ஆனாலும் மறைக்காமல் விட்ட சந்தநிற நெத்தியையும் கண்ணையும்
பார்த்தவன் ‘எப்பா... என்ன அழகான கண்ணு, ஐலேஸ் கூட இவ்வளவு அழகா இருக்குமா...?’ என்று
அவனை அறியாமலே அவளின் கண் அழகை ரசிச்சுக்கிட்டு இருக்கும்போது கிரீன்சிக்னல் விழுந்தது.
எனவே அந்த ஸ்கூட்டி ஒருபக்கமும் இவன் கார் ஒருபக்கமும் பிரிஞ்சு பயணத்தை தொடங்கியது.
மஹிந்தனின்
கார் கடற்கரையில் இருந்த அப்பெரிய மதில்களுடன் ஆன பெரிய கதவின் அருகில் சென்றதும் வாட்ச்மேன்
வேகமாக கதவை திறந்தார்.
கார் அதன்
பாதையில் ஐந்து நிமிடம் பயணம் செய்து அப்பெரிய பேலசின் முன் நின்றது.
காரிலிருந்து
இறங்கிய நம்ம மஹிந்தன் அவனோட லேப்டாப் பேக்கை மட்டும் ஸ்டைலிசா எடுத்து சோல்டரில் போட்டுகொண்டு
அந்த பளிங்கு மாளிகையினுள் வேகமாக நுழைந்தான்.
வேலைசெய்துகொண்டிருந்த
யாரையும் கண்டுகொள்ளாமல் மாடியில் இருந்த அவனுடைய அறைக்கு வந்தான்.
பைவ் ஸ்டார் ஹோட்டல் ரூமில் இருக்கும் சுத்தம், வடிவம்
அழகைவிட வாவ்..! என்று வாய்பிளந்து பார்க்குமாறு
இருந்த அந்த அறையின் கதவை கூட அடைக்காமல்... ஒருபக்கம் சுவர் முழுவதும் அழகாக அமைக்கபட்டிருந்த
கபோர்டில் தனது
லேப்டாப்பேக்கை வைத்தான்.
அவனுக்கு
பின்னாலேயே வந்த கார் டிரைவர், காரில் இருந்த லக்கேஜை கொண்டுவந்து வைத்துவிட்டு வெளியில்
வந்து சத்தம் எழுப்பாமல் மெதுவாக கதவை
அடைத்துவிட்டு சென்றான்.
அப்போது மஹிந்தனின் மொபைலில் அவனின் அம்மாவின் அழைப்புவந்தது.
“ம்...சொலுங்கமாம்”
என்றான்.
“இப்போதான் வந்தியா மஹிந்த்” என்று
அவனின் அம்மா சுபத்ரா கேட்டாள்.
“ம்...ஆமா... இப்போ எதுக்கு போன்பண்ணினீங்க?
ஏதாவது முக்கியமா பேசணுமா?” என கேட்டான்.
“அப்பா உன்கூட பேசணும்னு சொன்னாங்க.
நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஆறுமணிக்கு எங்ககூட டீ டைமில் ஜாய்ன் பண்ணிக்க
வந்துரு மஹிந்த் என்றாள்” சுபத்ரா.
“ஓகே வர்றேன்...” என்று
கூறிவிட்டு ஆளைவிழுங்கும் அந்த நுரை மெத்தையில் அக்கடாவென விழுந்தான் மஹிந்தன்.
மஹிந்தனின்
அப்பா விஷ்வநாதன். அவர் தனது தந்தையின் தொழில்களை சிறப்பாக நடத்திவருபவர்.
தன் மகன் மஹிந்தன் தன்னுடைய தந்தையின் மறுஉருவமாக இருப்பதில் சிறிய பொறாமை உண்டு.
அவரது தந்தை
மஹிந்தனின் இருபதாவது வயதில் இறந்துவிட்டார்.
மஹிந்தனின் அப்பா விஷ்வநாதன் பணக்கார வீட்டில் உள்ள
மற்ற பிள்ளைகளை போல் ஆடம்பரத்தில் அலாதி பிரியம் உள்ளவர். பரம்பரை சொத்தை காப்பதற்கு மட்டுமே அவரால் நேரத்தை
செலவிட முடியும்.
மஹிந்தனின் தாத்தா சண்முகநாதனைப் போல் தந்தைக்கு இருக்கும்
சொத்தை மூன்று மடங்கு பெருக்க திறமையில்லை அவருக்கு. ஆனால் மஹிந்தனை வளர்த்தது அவரது தாத்தா சண்முகநாதன்
தான்.
விஸ்வநாதன்
சுபத்திரா தம்பதியருக்கு மஹிந்தன்,மதுரா ஆகிய இரண்டு பிள்ளைகள். மஹிந்தனின்
அம்மா சுபத்திராவிற்கு பார்ட்டி மற்றும் தனது மகளிர் கிளப்பின்
பொதுச்சேவை தான் உலகம்.
சுபத்ராவை
பார்ப்பவர்கள் அவருக்கு நாற்பத்தெட்டு வயது என்று சொன்னால் நம்பமாட்டார்கள்.
முப்பதுக்குள் இருக்கும் பெண்களை போன்ற தோற்றத்தில் இருப்பார். அத்தோற்றத்தை
மெயின்டெய்ன் செய்ய எல்லா வழிகளையும் பின்பற்றுபவர். தன்
பிள்ளைகளை வளர்க்க உரிய பணியாளர்களை நேர்முக தேர்வின் மூலம் பணியமர்த்தி கண்காணித்து
வந்தவர்.
தாத்தா சண்முகநாதன்
உயிருடன் இருக்கும் வரை தனது ஓய்வுநேரம் முழுவதும் செலவிடுவது தனது பேரன் பேத்தியுடன்தான். அதனால்
மஹிந்தன் தனது ரோல்மாடலாக தனது தாத்தாவை கொண்டே வளர்ந்தான்
.
மஹிந்தன்
சிறு வயது முதல் அவன் இருக்கும் இடத்தில் நடக்கும் எல்லா போட்டியிலும்
அவனே வெற்றிபெறுபவனாக இருப்பான். அவ்வெற்றிக்காக எல்லா வித வழிகளையும் ஆராய்ந்து செயல்படுத்தும்
திறன் இயற்கையாகவே அமைந்திருந்தது.
பணம் அறிவு
இரண்டும் இருந்ததினால் திமிரும் எதிரில் இருப்பவரை அடக்கியாளும் குணமும் கொண்டிருந்தான். அவன்
அடங்கும் ஒரே ஆள் அவன் தாத்தா மட்டும்தான். தனது தங்கை
மதுராவின் சொல்லிற்கு சிறிது செவிசாய்ப்பான்.
மஹிந்தனின் தாத்தா இறப்புக்கு பின் அவனை அடக்கி நல்வழிப்படுத்த
ஆள் இல்லாமல் போய்விட்டது.
தனது மேல் படிப்பை லண்டனில் முடித்து வந்து தனது பரம்பரை
தொழில்களை கையில் எடுத்தவன் ஒரே வருடத்தில் ஈட்டியவருமானமும் எட்டிய உயரமும் கண்ட அவனது தந்தை தாயையுமே வியந்து ஒரு அடி தள்ளிநின்று பேசும்
நிலையை கொண்டுவந்தது.
******
ஸ்கூட்டியில் வீட்டுக்கு
வந்த கவிழையா தனது வீட்டின் காலிங்பெல்லை விடாமல் அழுத்தினாள். சமையல்
அறையில் பாத்திரத்தை கழுவிக் கொண்டிருந்த அவளின் அம்மா பெல் அடிப்பது தன் மகள்தான்
என்று தெரிந்துகொண்டதால்.
“உள்ளயிருந்து போய் கதவை திறக்கறவர அடிச்சுகிட்டே இருக்காதேனு
எத்தனை தடவதான் இவளுக்கு சொல்றதோ...!. எப்பப்பாரு என்னைய டென்சன்படுத்தறதே
இவளுக்கு வேலையாபோச்சு..” என்று அவள் ஏற்படுத்திகொண்டிருந்த காலிங்பெல் சவுண்டில்
இரிடேட் ஆகி கோபமுடன் கதவை திறந்தாள்.
“கவி எத்தனை தடவை சொல்லிட்டேன், இப்படி கைஎடுக்காம காலிங்பெல்
அடிக்காதேன்னு அந்த சவுன்ட் எவ்வளவு இரிடேட்டிங்கா இருக்கு தெரியுமா?”
என்று அவள் அம்மா கேட்பதை காதில் வாங்காமல்.
கவி
.தனது ஹேன்ட்பேக்கை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு பொத்தென சோபாவில் உட்கார்ந்து தனது காலை டீபாயின் மேல்
வைத்தவளை பார்வதி கோபமாக முறைப்பதை பார்த்து
“எவ்வளவு வெயில் தூசில உன் மகள்
கஷ்ட்டப்பட்டு காலேஜுக்கு ஸ்கூட்டில போயிட்டு வந்துருக்கா. இப்போவே அவளை வறுத்தெடுக்க
ஆரம்பிக்கணுமா..? மீ பாவம் விட்டுடு என்செல்ல அம்மால்ல”
என்று ஒரு பிட்டை போட்டுவைத்தாள்.
தன் மகளின்
முகத்தில் களைப்பை பார்த்ததும், “எப்பதான் நீ திருந்தப்போறியோ போ...
போய் மூஞ்சி கைகால் அலம்பிட்டுவா டீ எடுத்துட்டு வருறேன்” என்றாள் பார்வதி.
“வருண் இன்னும் ஸ்சூல்விட்டு வரலையாமா?
என பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும்
அவளின் தம்பியை கேட்டாள்.
“அவன் வருறநேரம்தான், இப்போ வந்துருவான்” என்றபடி அவள்
அடுப்படிக்குள் நுழைய கவிழையா அவளது அறைக்குள் சென்றாள். கீழிருந்த
இரண்டு அறைகளில் ஒரு அறையை அவளுக்கென்று எடுத்துகொண்டதில் அவளுடன் அடிக்கடி உரிமைபோராட்டம்
நடத்தி கொண்டிருந்தான் வருண்.
ஈஸ்வரன்-பார்வதி தம்பதியருக்கு
கவிழையா, வருண் என இரு பிள்ளைகள்.
ஈஸ்வரன் வங்கியில் மேலாளராக உள்ளார்.
பார்வதி பிள்ளைகளை முழுவதுமாக கவனிப்பதற்கு தன்னுடைய ஆசிரியர் வேலை சற்று இடையூராக
இருந்ததால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர குடும்ப தலைவியாக இருப்பவர்.
ஈஸ்வரன் அன்பான குடும்பத்தலைவன்
தனது வங்கிமேலாளர் வருமானத்திலேயே சிக்கனமாக சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளவர்.
பிள்ளைகளின் சின்னசின்ன ஆசைகளை நிறைவேற்ற தயங்கமாட்டார்.
கவிழையா வியர்வை நீங்கி டிரஸ்மாத்தி
முன் அறைக்குள் வருவதற்கு முன்பே அவள் அப்பாவும் தம்பியும் ட்ரெஸ் மாத்திட்டு உட்கார்ந்து பார்வதி கொடுத்த டீயோடு வடையையும் சாப்பிடுவதை பார்த்தவள்
“அம்மா எனக்கு முதலில் வடை கொடுக்காம எனக்குப்பின்னாடி வந்த
ரெண்டுபேருக்கும் கொடுக்கறது சரியில்லை”
எனகூறினாள்.
“பந்திக்கு முந்து படைக்கு பிந்து
என்ற பழமொழியை ஃபாலோ செய்றவங்க நாங்க.. உன்னமாதிரி
நாங்க என்ன அசமந்தமா?” என்றான் வருண்.
“டேய் யாரபார்த்து அசமந்தம்னு சொல்ற..?.
என்னை என்ன உன்னமாதிரி வேலவெட்டி இல்லாதவன்னு நெனச்சுகிட்டயா?
ஐ கெட் அ ஜாப்...
அப்பா... எனக்கு காம்பஸ் இண்டர்வியூவில
மஹிந்தன் சாப்ட்வேர் இன்டஸ்ட்ரீஸில் வேலை கிடைச்சிருக்கு” என்றாள்.
“கவி உண்மையாவாடீ
சொல்ற..?” என பார்வதி கேட்டாள்.
உடனே ஈஸ்வர்,
“அவ என் பொண்ணு, அவளுக்கு வேலைக்கிடைக்கலனா தான் நீ ஆச்சரியபடணும்” என்று பார்வதியிடம் கூறியவர்.
வருணிடம், “நீயும் அக்கா மாதிரி காலேஜ் காம்பஸ் இண்டர்வியூவில வேலைக்கு செலக்ட் ஆகுற தகுதியை வளர்த்துக்கோ” என கூறினார்.
“சரிப்பா என்று அவரிடம் சொன்ன வருண், ஒரு
வடைக்கு போட்டிப்போடுற சின்னப்பிள்ளையை எப்படிம்மா வேலைக்கு எடுத்தாங்க...!?” என தன்
பெரிய சந்தேகத்தை எழுப்பினான் பார்வதியிடம்
உடனே “கவி யாரைப்பார்த்து
சின்னப்பிள்ளைன்னு சொன்ன பொடியா?” என அடிக்க துரத்த ஆரம்பித்தாள்.
“ஒருவரை ஒருவர் கிண்டல் பண்ணாமல்
சாப்பிடுங்கள்” என அதட்டினார் ஈஸ்வரன்.
தந்தையின் அதட்டலில் சாப்பிட
உட்கார்ந்த பிள்ளைகள் அப்பா எதுவோ தீவிர யோசனையில் இருப்பதைப் பார்த்து அமைதியானார்கள்.
“நைட் அடுப்படி வேலைகளை முடித்து படுக்கவந்த பார்வதி
யோசனையுடன் படுத்திருந்த ஈஸ்வரனை “ரொம்ப நேரமா யோசிச்சிட்டே இருக்கிறீங்க பிள்ளைங்க தூக்கப்
போனதும் எதுக்கு இந்த யோசனைன்னு கேக்கலாம்னு
இருந்துட்டேன்... இப்ப சொல்லுங்க என்ன யோசனை?” என்று கேட்டாள்.
“என் ஃப்ரெண்டோட பையனுக்கு நம்ம கவிய கேக்குறாங்க.
அந்த பையன் வெளிநாட்டுல வேலை பாக்குறான். ஒரு
வருசத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை பையனை பார்த்திருக்கேன். கவிக்கு
பொருத்தமா இருப்பான். நல்ல இடம் அதுதான் என்ன சொல்லன்னு யோசிக்கிறேன்” என்றார்.
“நல்ல இடம்னா பேசி முடிச்சிடலாம்.
அது தான் காலேஜ் படிப்ப முடிச்சுட்டாள்ல” என்றாள் பார்வதி.
“இல்ல... கல்யாணம் முடிச்ச கையோடு
மாப்பிள்ளை வேலை செய்ற வெளிநாட்டுக்கே கவியையும் கூட்டிட்டு போறமாதிரி அவங்க பேசுறாங்க.
நம்ம கவி
அவளுக்கு வேலைக்கிடைச்சிருக்கு என்று ஆசையாக சொன்னா. பெரிய
கம்பெனில கைநிறையா சம்பளத்தோட வேலை கிடைச்சிருக்கு என்று சொல்ற பிள்ளைட்ட அதில் ஜாயின்
பண்ணாதனு சொல்ல கஷ்டமாயிருக்கு”
“மாப்பிள்ளை
என்ன படிச்சிருக்கார்ங்க, மத்த டீடைல்ஸ் எல்லாம் சொல்லுங்க என்ன செய்யலாம்னு
யோசிப்போம்.”
“மாப்பிள்ளையின்
பேரு தனுஷ் போனவாரம் தான் லீவில் இந்தியா வந்திருக்கிறார். கடைவீதியில்
என்னோட கவியைப் பார்த்திருக்கிறார். அவருக்கு நம் கவியை ரொம்பப் பிடிச்சிருக்காம்.
நம்மளைவிட
வசதியானவங்க. நல்லபடிப்பு, வேலை எல்லாம் நிறைவா இருக்கு. நீங்க
உங்க பொண்ணுக்கு எவ்வளவு போட்டாலும் சரி அதையெல்லாம் டிமான்ட் பண்ணமாட்டோம்னு சொல்றாங்க..
லீவ் முடிஞ்சு தனுஷ் வெளிநாடு போவதுக்குள்ள கல்யாணத்தை முடிவு செய்ய ஆசைபடுறாங்க” என கூறினார்.
அதற்கு பார்வதி.
“கவலைப்படாதீங்க நாளைக்கு காலையில் கவிட்ட பேசிட்டு அதுக்கு பிறகு உங்க ஃப்ரெண்ட்கிட்ட
முடிவை சொல்லலாம். எல்லாம் நல்ல படிதான் முடியும் நீங்க மனசப்போட்டு குழப்பிக்காம
தூங்குங்க” என்றாள்.....
தேடல்-2
டைனிங் ரூமில் தன்னுடைய மனைவியுடன்
அமர்ந்திருந்த விஷ்வநாதரின் பார்வை படியில் இறங்கி வந்துகொண்டிருந்த மஹிந்தனின் மேல்
பதிந்தது. அவனின் ஆறடி உயரத்தையும், அகண்ட
தோள்களையும், சிக்ஸ்பேக் உடல்கட்டையும், வீட்டில்
உடுத்தும் உடையின் நேர்த்தியும், கண்களின் கூர்மையும் நிமிர்ந்த நடையையும்,
ரசித்தவரின் உள்ளம்.
மத்த அப்பாக்கள் மாதிரி உரிமையாக
என்னால் ஏன் என் மகனுடன் பேசமுடியவில்லை என்ற ஏக்கம் எழுந்தது.
எப்போது மகனுக்கும் தனக்கும் இடையில் இடைவெளி வந்தது என்ற கேள்வியும் அவருள்
எழுந்தது.
ஆனால் அதை ஆராயவிடாமல்,
“ஏதாவது பிரச்சனையா டாடி?” என்று கேட்டபடி வந்து அமர்ந்தான் மஹிந்தன்.
சுபத்திரா தனக்கு எதிரில் அமர்ந்த
மஹிந்தனுக்கு தன் அருகில் இருந்த டீபாயில் இருந்த கெட்டிலில் இருந்து தேநீரை அழகிய
வெள்ளிக் கப்பில் கலந்து கொடுத்தார்.
கையில் வாங்கப் போன மஹிந்தன், வாங்காமல்
“மாம் நான் பால் டீ குடிக்கறது
நிறுத்தி பைவ் இயர்ஸ் ஆகிருச்சு” என்று கூறினான். பக்கத்தில்
இருந்த அலாரத்தில் பீப் என்ற சத்தம் கொடுத்த. உடனே
அங்கு வந்த செர்வன்ட் மணியிடம் “எனக்கு டீ” என்றான்.
உடனே கெட்டிலின் உதவியில் ஐந்தே
நிமிடத்தில் அவன் கேட்ட கிரீன்டீயை மணி கலந்து கொடுத்து வெளியில் போகும் வரை மூன்று
பேரும் அமைதியாக இருந்தனர்.
அவன் போனதும்
“ம்...சொல்லுங்க என்ன விஷயம்” என்றவனிடம்.
“நம்முடைய
எஸ்.வி.என் மோட்டார் கம்பெனி ஷேர்ஸ் 65%
நம்மளோடதா இருந்துச்சு.. அதுல 20% உன்தங்கை
மதுராவை கல்யாணம் பண்ணிக் கொடுத்ததால அவளோட ஃபேமிலிக்கு சேர்ந்திடுச்சு. இப்போ
45%தான் நம்மகிட்ட இருக்கு.
பார்த்தீபன் குடும்பத்தின் 35%
ஷேர்ஸ் கூட, மதுரவோட 20% ம் பார்த்தீபன் வீட்டிற்கு போயிட்டதால இனி மெஜாரிட்டி
ஷேர்ஸ் பார்தீபன் குடும்பத்துக்கிட்ட. இப்போ அவங்ககிட்ட 55% இருக்குது.
அதனால அடுத்த பங்குதாரர் கூட்டத்தில்
சேர்மன் பதவியில் இருந்து என்னைய தூக்கிட கூடிய சூழ்நிலை இருக்கு” என்றார் விஸ்வநாதன்..
அதனை கேட்டு யோசனையாக மஹிந்தன்
“இதுக்கு உங்கட்ட ஏதாவது சொல்யூசன் இருக்கா?” .
“உன் தங்கை
மதுரா வீட்டில் இருக்கிற அவளின் பெரிய மாமனாரின் மகள் ஐஸ்வர்யாவை உனக்கு கல்யாணம் செய்து
கொடுக்க அவங்க வீட்டில ஆசைப்படுறாங்க....
கல்யாணத்திற்கு டவுரியா அவங்க குடும்பப் பங்கில் 20% உனக்கு
தருவதாக சொல்றாங்க....
இந்த கல்யாணம் உறுதியானா அடுத்த
பங்குதாரர் கூட்டத்தின் தேர்தலில் எப்பொழுதும் போல் சேர்மன் பதவியும்,
கம்பெனியும் நம்ம கைவிட்டு போகாம இருக்கும்” என்றார்...
அப்போது சுபத்திரா சொன்னாள்
“நாளைக்கு நைட்டு உன் தங்கை மதுரா வீட்டில நம்ம எல்லோரையும் விருந்திற்கு கூப்பிட்டிருக்காங்க,
அப்போ உனக்கும் அந்த ஐஸ்வர்யாவுக்கும் கல்யாணம் முடிக்கிறத பத்தி பேசுவாங்கன்னு
எதிர்பார்க்கிறேன் மஹிந்த்” என்றார்...
கொஞ்சம் யோசித்த மஹிந்தன்,
“ஓகே மாம் எத்தனை மணிக்கு அவங்க வீட்டில் இருக்கணும்?”
அவன் ஓகே சொல்வானோ மாட்டானோ என்ற
டென்சனில் இருந்த சுபத்ராவும் விஸ்வநாதனும் அப்பாடா... என்று
மூச்சு விட்டனர்.
சுபத்திராவே மஹிந்தனிடம்
“ஒரு எட்டு மணிக்கு நாம அங்க வருவதா உன் தங்கச்சிட்ட சொல்லிடுறேன் மஹிந்த்”
என்றார்.
*******
மஹிந்தனின் கார் அந்த நட்சத்திர
விடுதியை அடைந்ததும் காரிலிருந்து இறங்கி அவனுக்காகவே காத்திருந்த பிரெஞ்ச் கிளையண்டை
ரிசீவ் செய்து வியாபார
ஒப்பந்தத்தை நல்லபடியாக முடித்துவிட்டு. அதனை கொண்டாட
அவர்களுடன் அவ்விடுதியில் உள்ள பப்க்கு உள்ளே கூட்டிச்சென்றான். அங்கே அவன் காதில்
விழுந்த, “ஐஸ்வர்யா டார்லிங்...” என்ற
பெயரைக் கேட்டதும் யார் அது என்பதை பார்க்க தன்னையறியாமல் திரும்பிப் பார்த்தான்.
அங்கு கறுப்புநிற ஜீன்சும் இளம்
ரோசாநிற கையில்லாத மேல் சட்டையுடுத்தி பக்கத்தில் நின்ற வாலிபனின் கைகோர்த்து பளிச்சென்ற
வெண்மையான நிறத்துடன், அவள் உடுத்தியிருந்த சட்டை நிற ரோஸ் உதடுகள், திருத்தப்பட்ட புருவத்துடனும்,
மையிட்டக் கண்களுடன் நின்றுகொண்டிருந்த ஐஸ்வர்யாவைக் கண்டதும் அவன் மனதில் அன்று
தன் காரின் அருகில் நின்ற ஸ்கூட்டி பெண்ணின் கண்கள் அவன் கண்ணுக்குள்ளே ஒரு நிமிடம்
மின்னி மறைந்தது. உடனே தலையைக் குலுக்கித் தன்னை சுதாரித்துக் கொண்டான்.
அந்த ஐஸ்வர்யாவின் பின்புறம்
இருந்த மேசையில் தன்னுடன் வந்த கிளையண்டுடன் சென்று உட்கார்ந்துகொண்டு அவளின் செயலை
நோட்டம் விடஆரம்பித்தான்.
அவளோ உடன் இருந்தவனிடம்
“அஜய் இன்னைக்கு நைட் எஸ்.வி.என்
மோட்டார்ஸ் குடும்பத்தின் ஒரே பையனான மஹிந்தனுக்காக என்னை பெண்ணுபார்க்க வருறாங்க....
என்னால உனக்கு மதியத்திற்குமேல் கம்பெனி கொடுக்க முடியாது!
ஒரு பெக்குக்கு மேல எடுக்க கூடாதுன்னு என் வீட்டில் தடா போட்டிருக்காங்க”
என்றாள்..
அதை கேட்ட அஜய்
“உனக்கு கல்யாணமா? ஜோக் அடிக்காதே” என்றவனிடம்..
“இந்த வாழ்க்கையை
அனுபவிக்க எனக்கு பணம் வேணும். அந்த மஹிந்தனை என் அண்ணன் கல்யாணத்தில பார்த்திருக்கிறேன்
செம ஹேன்சம்மேன். பவர்புல் பெர்சன். அவனின்
மனைவியாய் இருந்தா என்னுடைய ஸ்டேட்டஸ், ஃப்ரண்ட்ஸ்
மத்தியில் எகிறிடும்... அதனால் நான் இந்த கல்யாணத்தை விரும்புறேன்”
என்றாள்.
அவளுக்கு பின்னாடி உட்கார்ந்து
அவள் பேசியதை கவனித்துக் கொண்டிருக்கும் மஹிந்தனை கவனிக்காமல் பேசிய ஐஸ்வர்யா அந்த அஜய் என்பவனுடன் பேசிக்கொண்டே வெளியேறிவிட்டாள்.
மஹிந்தனுக்கு அவள் பேசியதை கேட்டபிறகு
யோசிக்க வேண்டியது இருந்ததால். அக்கிளையண்டை தனது செக்ரட்டரி பொறுப்பில் விட்டுவிட்டு
வீட்டிற்குத் திரும்பினான்.
காரில் உட்கார்ந்து தன்னைபற்றி
யோசிக்க ஆரம்பித்தான்.
அவனைப்போன்ற குடும்பத்தின் திருமணங்கள்
அனைத்தும் தொழில் அடிப்படையில் தான் முடிவாகும் என்பதை அவன் பார்த்தும் கேட்டும் இருக்கிறான்.
அவன் பெற்றோர்களின் திருமணமும்
தங்கள் வியாபாரத்தை பெருக்க நடந்தது என தன் தாத்தா சொல்லி கேட்டிருக்கிறான்.
தன்னுடைய தங்கை திருமணமும் அப்படித்தான்
நடந்தது. அவர்களைப் போன்ற பணக்கார சொசைட்டியில் உள்ள பெண்களில்
அவன் அறிந்தவரை டிஸ்கோத்தே, பப், பாய்பிரண்ட் போன்றவை வெகு சாதாரணம்.
தனது தங்கை மட்டும் அதில் விதிவிலக்கு.
காரணம் தனது தாத்தா.
ஆனால் தான் தொழில்,
அறிவு இரண்டில் மட்டுமே தன் தாத்தாவையும், பெண்கள்
விஷயத்திலும், மற்றபொழுதுபோக்கு விசயங்களில் தன் தந்தைபோலவும் இருப்பதை
உணர்ந்தான்.
மஹிந்தன் நினைத்தான்,
தன்னுடைய குணத்திற்கு தன்னை கட்டுப்படுத்தும் குணம் கொண்ட பெண்ணுடன் வாழ்க்கை
அமைந்தால் போராட்டமாக இருக்குமென நினைத்தான். ஐஸ்வர்யா
தன்னை ஃப்ரீயா விட்டுவிடுவாளென நினைத்து ஐஸ்வர்யாவுடனான தன்னுடைய கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ள
முடிவெடுத்தான் மஹிந்தன்.
******
அன்று சரியாக இரவு எட்டுமணிக்கு
பார்த்தீபன் வீட்டில் காரில் தன் பெற்றோருடன் வந்திறங்கிய மஹிந்தனை கண்டு
“அண்ணா…!” என ஓடிவந்து கைபற்றிய மதுரா,
தனது பெற்றோரையும் அணைத்து வீட்டின் உள்ளே அழைத்து சென்றாள்.
.
வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் மஹிந்தனின் வீட்டவரை
மரியாதையுடன் நடத்தினர் “ஹாலின் பக்கவாட்டு அறையில் இருந்து வந்த ஐஸ்வர்யா” ஜீன்ஸ்பேன்ட் தொப்புள் தெரியுமாறு பனியனுடன் இருந்தவள்
மஹிந்தனின் அருகில் சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தாள்.
மஹிந்தனையும் அவனின் பெற்றோர்களையும்
பார்த்து “வெல்கம் டூ அவர் ஹோம்” என கொஞ்சி பேசினாள்.
மஹிந்தனின் குடும்பம் “காரில் இங்கு வரும்போதே அவன்
தனது பெற்றோர்களிடம் ஐஸ்வர்யாவை தான் கல்யாணம் செய்வதற்கு சரி சொல்லிவிடுங்கள் என்று சொல்லியிருந்தான்.
எனவே சுபத்திரா, ஐஸ்வர்யாவை பார்த்து
“இனி நீ எங்கள் வீட்டு மருமகள்” என்று கன்னம் தடவி, இருவீட்டாரின் கல்யாணபேச்சிற்கு சம்மதத்தை தெருவித்தார்.
மஹிந்தனின் தங்கை மதுரா, தன் பெற்றோரை
பார்த்து, “அப்போ அண்ணண் இந்த கல்யாண ஏற்பாட்டிற்குச் சம்மதம் சொல்லிவிட்டானா?”
என கேட்டதும். ஆமாம்! என தலையசைத்து
பதில் கொடுத்தனர்..
அவர்கள் வந்து பத்துநிமிடத்திலேயே
மஹிந்தனுக்கு எப்போதடா இங்கிருந்து கிளம்புவோம் என்றாகிவிட்டது. ஐஸ்வர்யாவின் உரிமையான
தொடுதல் அவனுக்கு அசெளகரியத்தை கொடுத்தது.
அவன் பெண்களின் அருகாமையை உணராதவன்
இல்லை. ஆனால், இதுவரை வெளியிடங்களிலும்
தனது குடும்பத்தாரின் முன்பும் எந்த ஒரு பெண்ணுடனும் தன்னை இணைத்து பார்க்கும்படி அவன்
நடந்துகொண்டதில்லை. தன்னை இப்பொழுதும் கெத்தாக அவர்களின் முன் காட்டவே விரும்பினான்.
அப்பொழுது ஐஸ்வர்யா அவனிடம்,
“மஹி வாங்க சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு ஷாப்பிங் போகலாம்”
என கொஞ்சும் குரலில் கூறிக்கொண்டு உரிமையுடன் மஹிந்தனின் கைகோர்த்து நெருங்கி
அமர்ந்தாள்.
அவள் அவ்வாறு தன் கைகோர்த்து
அழைத்தது, மஹிந்தனுக்கு ஹோட்டலில் தான் பார்த்த போது அஜய்யுடன்
ஐஸ்வர்யா கை கோர்த்து நெருங்கி நின்ற காட்சி மனதில் தோன்றியது.
உடன் மஹிந்தனின் உதடுகள் ஒரு ஏலனச் சிரிப்பை உதிர்த்தது.
*****
கவிழையாவிற்கு
இன்று ஞாயிறு அதனால காலையில் லேட்டாக எழுந்து குளித்துவிட்டு சாப்பிட மேஜைக்கு
வந்தாள்.
“அம்மா இன்னைக்கு சாப்பாட்டில் என்ன ஸ்பெசல்? நெய்வாசனை
தூள் கிளப்புது” என்றாள்.
அதற்கு பார்வதி,
“கல்யாணம் முடிக்கிற வயதில் இருந்துகிட்டு அடுப்படி பக்கமே வந்துடாம இருந்தால்.
கல்யாணத்துக்கு அப்பறம் உன் புருஷனுக்கு எப்படி சமைச்சு கொடுப்ப...?” என
கடுப்புடன் கேட்டார்.
அதை கேட்டுக்கொண்டு வந்த ஈஸ்வரன்
“இப்ப எதுக்கு அவளை திட்டுற அதெல்லாம் என்மகள் அருமையாக சமைத்து மாப்பிள்ளையை
அசத்திடுவாள்” எனறார்
மகளுக்கும் கணவனுக்கும் சாப்பாடு
எடுத்து பரிமாறிக்கொண்டே ஈஸ்வரனிடம் மகளுடன் பேசச்சொல்லி கண்ஜாடை காமித்தாள்.
உடனே சரி என்று தலை அசைத்தவர்,
தன் தட்டில் உள்ள வெண்பொங்கலை சாப்பிட்டுக்கொண்டே மகளிடம்
“கவி உனக்கு இந்த
வாரத்தோட காலேஜ் முடிஞ்சுடுதுதானே... அதனால அப்பா உனக்கு கல்யாணம் முடிக்கலாம்னு நினைக்கிறேன்.
உனக்கு அதில ஒன்னும் பிரச்சனை இல்லையே..?.” என்று
கேட்டார்.
அவர் கேட்டதும் கவிழையா,
“அப்பா.... இப்ப என்ன கல்யாணத்திற்கு அவசரம்?.
நான் என் படிப்ப முடிச்சிட்டு அட்லீஸ்ட் ரெண்டு வருசமாவது எனக்கு கிடைத்த வேலையை பார்க்கணும் அதுவரை கல்யாணம் என்ற பேச்சே இருக்கக்கூடாது ப்ளீஸ்...ப்பா”
என்று கூறினாள் மேலும்,
ரெண்டு வருடம் வேலை பார்த்த பின்னாடி, நீங்கள் யாரை கல்யாணம் செய்யச் சொன்னாலும் செய்றேனேப்பா, இப்போ எனக்கு கல்யாணம்
வேண்டாம்” என்றாள்.
அதனைக் கேட்ட பார்வதி
“அதெல்லாம் நீ வேலைக்குப் போய் ஒன்றும் சாதிக்க வேண்டாம்
“மூன்று மாதம் முடிந்ததும் உனக்கு கல்யாணம். அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டார்”
என்று கூறினாள்....
அதனை கேட்டதும் கவிழையாவின் கண்களில்
கண்ணீர் ததும்பிவிட்டது.
மகள் கண்கலங்குவதை பார்த்த தந்தை,
தனது முடிவை மாற்றிகொண்டார்.
என் மகளுக்கு இன்னும் ஒருவருடம்
கழிச்சுதான் கல்யாணப் பேச்சை எடுக்க முடிவெடுத்திருப்பதாக என் ஃப்ரெண்டுகிட்ட சொல்லிக்கிறேன் பார்வதி.
இனி ஒருவருசம் அவளின் கல்யாணத்தை
பற்றி வீட்டில்
யாரும் பேசவேண்டாம் என அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பாவம் கவிழையாவிற்கு இன்னும்
ஐந்துமாதத்தில் அவர்களின் அனுமதியில்லாமல் கல்யாணம் முடியும் என்பதை அவர் அறியவில்லை.
******
வெளியில் போவதற்கு கிளம்பிவந்த கவிழையா,
அம்மா, வனித்தாவுடன் நானும் லைப்ரரி போயிட்டு அப்படியே அவள் பிறந்தநாளுக்கு கடைக்குச்சென்று
ட்ரெஸ் எடுத்துட்டு இருட்டுறதுகுள்ள வீடு வந்துவிடுவேன்”, என
கூறினாள்.
மகளைப் பார்த்து
“பத்திரமாக போய்ட்டுவா கவி ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடனும்” என்று கண்டிப்போடு சொல்லி அனுப்பி வைத்தார்..
அந்த நேரம் அவங்க வீட்டு வாசலுக்கு வந்துவிட்ட வனித்தா,
“ஆன்ட்டி நான் உங்க மகளை பத்திரமாக உங்களிடம் ஒப்படைச்சுடுவேன்”
என கூறி கவிழையாவை “வா சீக்கிரம் போகலாம். உனக்கு சாயந்தரம் வரைதான் டைம் கொடுத்துருக்காங்க நேரம் கம்மியா இருக்கு” என்று
கூறி கைபிடித்து இழுத்துச்சென்றாள். வாசலில் நின்ற ஸ்கூட்டியில் இருவரும் ஏறிச் சென்றனர்.
மாலின் முதல் தளத்தில் இருந்த “சவுத் ஸ்டைல் வுமன்ஸ்கலெக்சன்” 50% டிஸ்கவுன்ட் என்ற பலகை இருந்த
கடையை சுட்டிக் காட்டிய வனி, “கவி அந்த கடைக்கு போய் எனக்கு ட்ரெஸ் பார்போமா?”
என கேட்டாள்.
கவிழையா அவள் சொன்ன கடையைப் பார்க்கும்போது எதிரில்
வந்த ஜோடியினை
பார்த்தவள் முகம்சுளித்தாள். காரணம், அந்த ஜோடியில்
ஆணின் கரம் அந்த
லேடியின் இடையில்
பதிந்திருந்த விதம்.
ஸ்...அப்பா இதுகளையெல்லாம் கண்டுக்கக் கூடாது என நினைத்தவள் “வா! போகலாம்”
என வனியுடன் அந்தகடைக்குச் சென்று ட்ரெஸ் வாங்கிவிட்டு வரும்போது கவிழையா தரையில்
கொட்டியிருந்த தண்ணீரில் காலைவைத்து வழுக்கி விழப்பார்த்தாள். அப்போ இரண்டு வலிமையான கரம் அவளைத் தாங்கிப் பிடித்தது.
பிடித்தவன் அவள் கண்களைப் பார்த்ததும்
கையை விலக்க மறந்து அக்கண்ணில் தோன்றிய பல பாவங்களை ரசிக்க ஆரம்பித்தான்.
கவி விழப்போகும் அதிர்ச்சியில் கண்ணை இறுக்கமூடியவள்
விழவில்லை என்று தெரிந்ததும் அப்பா... தப்பித்தோம்!
என்ற பாவனையை கண்களில் காட்டி நன்றியை சொல்லும் நோக்குடன் அவன் முகம் பார்த்தவள்.
அய்யோ இவனா என அதிர்ந்து!
பின் அவளின் கண்கள் கோபத்தை பிரதிபலித்தது..
கொஞ்சநேரம் முன் கவி பார்த்த
ஜோடியின் ஆண் அவன். அச்ஜோடி மஹிந்தன்-ஐஸ்வர்யா
தான், நேற்று ஐஸ்வர்யா ஷாப்பிங் போகலாம் என்று கூப்பிட்டதும்
மஹிந்தன் அதை பொய்காரணம் சொல்லி தவிர்த்துவிட்டான்.
இன்னைக்கு காலையிலேயே மஹிந்தனை
மீண்டும் மொபைலில் கூப்பிட்ட ஐஸ்வர்யா ஷாப்பிங் கூட்டிட்டுப் போகச் சொல்லி நச்சரித்தாள்.
அவளுடனான கல்யாணத்திற்கு சம்மதித்தாகிவிட்டது.
கொஞ்சம் பழகித்தான் பார்ப்போமே என்று நினைத்து மஹிந்தனும் சரி கூட்டிட்டுப்போறேன்
என்று சொல்லியதால் இதோ
மாலுக்கு அவளுடன் வந்திருக்கிறான்.
அங்கு வந்தவன் கண்களில் கவி விழுந்தாள் கவியின் கண்ணின் பாவத்திலும் அழகிலும் ஈர்க்கபட்டான்
மஹிந்தன் .
கவிழையா அவன் பிடியிலிருந்து
வெளிவர முயன்று முடியாமல் போனதால் “ஹலோ மிஸ்டர் முதலில் என்னை விடுங்க” என்று கோபமாகச் சொன்னாள்.
அவளின் சாயம் பூசாத இளம்ரோசா
உதடுகளைப் பார்த்துக்கொண்டே அவளை விட்டான் மஹிந்தன்.
அந்த நேரத்தில் ரெஸ்ட்ரூம் போயிருந்த ஐஸ்வர்யா மஹிந்தனைத் தேடி அங்கு வந்தவள்
“வாட் ஹேப்பென்ட் ஹியர் மஹிந்த்” என்றவளிடம்.
“நத்திங் லெட்ஸ்
வி கோ” என்று கவிழையாவை மென்று தின்பவன் போல் பார்த்துக்கொண்டு
ஐஸ்வர்யாவை பழையபடி இடுப்பில் கைகோர்த்து அவ்விடத்தை விட்டு அகன்றான்.
கவிழையாவிற்கு உடம்பே அவன் தொட்டதிலும்,
பார்த்ததிலும், கூசிப்போய் “சீ...!
முதலில் வீட்டிற்கு போய் சோப்புபோட்டு தேச்சு குளிக்கணும்”
என்று சத்தமாக மஹிந்தனின் காதில்விழுமாறு கூறினாள்.
அதை கேட்ட மஹிந்தனுக்கு கோபத்தில்
கண்கள் சிவந்தன.
’
மஹிந்தன் முதலில் கவிழையா அவனை பார்க்கும்போதே அவள்
கண்களைக் கவனித்துவிட்டான்.
இரண்டு நாளாக அக்கண்கள் அவ்வப்பப்போது
அவன் மனதில் தோன்றி மறைந்ததால் பார்த்த
உடனே அவள்தான் என்று மனம்சொன்னதை உறுதிசெய்ய அவளை பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.
இதுவரை அவன் எந்தபெண்களின் பின்பும் போனதில்லை அவனைத்தேடி வருகின்ற பெண்களை அவன் தொடாமல் விட்டதில்லை.
அவனுக்கே அவன் செயல் புரியாமல்
பின்பு அவள் தான் பழகிய பெண்களைவிட வித்தியாசமான இயற்கை அழகில் இருப்பதால் வந்த ஈர்ப்பு.
ஒருதடவை அவளை நெருங்கிவிட்டோம் என்றால் இந்த ஈர்ப்பு போயிடும் என்ற நினைத்துத்தான் அவளை பின்தொடர்தான்.
இப்பொழுது
“சீ” என்ற கவிழையாவின் வார்த்தை அவனை சீண்டிவிட்டது.
******
வழி நெடுக கவிழையா அவனை திட்டிக்கொண்டே
வந்ததை பார்த்த வனித்தா அவளை ரிலாக்ஸ் ஆக்கணும் என்பதுக்காக, “கவி
நீ, இவ்வளவு அழகாக இருக்கக்கூடாதடி...!” என்றாள்.
“இப்ப எதுக்குடி
என் அழகைப் பத்திப் பேசுற...?” என காட்டமாக கேட்ட கவியிடம்.
“இல்லை….
கவி உன் அழகை பார்க்கும் எனக்கே உன்னை கட்டிக்கணும் போல இருக்கு” என்று சொன்னதும்
“ஏய் செய்,
லூசு வனி இப்படியெல்லாம் பேசிட்டிருந்தேனா ஓடும்வண்டியில் இருந்து தள்ளி விட்டுடுவேன்
பார்த்துக்கோ”
“இல்ல கவி
நீ திட்டுறயே அந்த ஹேன்சம்மேன்” என்று சொன்னதும்
“உனக்கு ஹேன்சமாக
தெரிகிற அவன் எனக்கு விஷச்செடியா தெரியிறான்” என்றாள்..
“பக்கத்தில்
அவனோட ஆளைவச்சுகிட்டே மத்த பொண்ணுங்கள கண்களால மேயுற இவனைப் போன்ற வளர்ந்த மாடுகளை
சாட்டையை வைத்து வெலாசித் தள்ளனும்” என்று கூறினாள்.
“அதற்குத்தான் சொல்கிறேன் கவி, அவனைப்
பார்த்தால் மிகப் பெரிய இடத்துப் பிள்ளை போல தெரிகிறான் நீ எதற்கு அவன் காதுல விழுறமாதிரித் திட்டின கவி...?” என்றாள்.
அதற்கு கவிழையா “நீவேற.... நான் அவனை அடிக்காமல் விட்டேனே..!”
என்றாள்
“அடியே கவி!
நீ திட்டியதுக்கே அவன் ரியாக்சனை பார்த்து நான் சினிமாவில் பார்க்கிறது போல
உன்னை பழிவாங்க அவன் வந்து விடக்கூடாது என கடவுள் கிட்ட மனு போட நினைச்சுகிட்டு இருக்கேன்”
என்றாள்.
அவ்வாறு சொன்னதும் கவிழையா வனித்தாவை
“நீ நிறைய சினிமா பார்த்து இதுபோல் ஓவரா கற்பனை செய்ய ஆரம்பிச்சிட்ட. சினிமா
வேற, வாழ்க்கை வேற வனி”என்றாள்.
“தேவையில்லாம
இதுபோல கற்பனை செய்து என்னை பயமுடுத்தாதடி பக்கி” என்று
கூறியபடி அவள் அம்மா சொன்ன நேரத்திற்குள் வீடுவந்து சேர்ந்தாள் தனது தோழியுடன்.
தேடல்-3
மஹிந்தனுக்கு இரவு தூக்கமே வரவில்லை கண்ணுமூடினால் ஐஸ்வர்யாவுக்குப் பதில் மாலில் பார்த்த
அந்த ஸ்கூட்டிப்பெண் கண் அழகியே கண்களுக்குள் வந்தாள்.
அத்துடன் தன்னை அவள்
‘சீ’ என்று சொன்ன வார்த்தையும் அருவருத்த பார்வையுமே அவனை
இம்சைப்படுத்தியது..
அவள் மேல கட்டுக்கடங்காத கோபம்
வந்தது யார்டீ நீ? என்றவன், எழுந்து தன்
ஐபோனை எடுத்து மாலில் இருக்கும்போது அவளுக்குத் தெரியாமல் எடுத்த அவளின் போட்டோவை மஹிந்தனின்
விசுவாசியும் நண்பனுமான கதிரின் மொபைலுக்கு அனுப்பினான்.
இரவு 11:15 எனக்
கடிகாரம் காட்டியது. இருந்தாலும் கதிரின் நம்பருக்கு டயல் செய்தான்.
தூக்கக் கலக்கத்தில் இருந்தவன்
இந்த நேரத்தில் யார் போன்பண்றது என்றபடி கண்கூட திறக்காமல் அழைப்பை அட்டன் செய்தவன்.
மஹிந்தனின் குரல்கேட்டதும் தூக்கம் சட்டென விலகிச்சொல்ல
“சொல்லு மஹிந்த், என்ன
செய்யணும்?” என்று கேட்டான்.
அவனது பதிலில் எப்பொழுதும் போல
மகிழ்ந்து போன மஹிந்த் “உன் மெயிலுக்கு ஒருத்தியோட போட்டோ அனுப்பியிருக்கிறேன்
பாரு... அவளைப்பத்திய எல்லா விபரமும் இன்னும் இரண்டு நாளைக்குள்
என் கையில் இருக்கணும்
நேத்து மாலில் ஈவினிங்
5மணிக்குப் அவளை பார்த்தேன். அப்போ எடுத்த போட்டோவைத்தான் உனக்கு அனுப்பியிருக்கேன்.
அவளைத் தேடும் வேலைய மாலில் இருக்கும் கண்காணிப்புக் கேமரா கன்ரோலிங் அறையில்
இருந்து தொடங்கு” என
சொல்லி தொலைபேசியை வைத்தான் மஹிந்தன்.
மஹிந்தன் ஒரு பெண்ணைத் தேடச்சொல்வது இதுவே முதல் தடவை.
அந்தவிசயம் கதிருக்கு விருப்பமானதாக இல்லை. இருந்தாலும்
மஹிந்தனின் விருப்பத்தை அவனின் முகக்குறிப்பில் இருந்தே நிறைவேற்றிக் கொடுப்பவன் கதிர்...
போன்பண்ணி செய்யச்சொன்னதை முடிக்காமல்
விட்டுவிடுவானா...? கதிர்
அந்த நேரத்தில் தனது
தேடலை மாலில் துவங்க
கிளம்பிச் சென்றான்.
மஹிந்தனின் நிழல் போன்றவன் கதிர்
என்பதை, மஹிந்தனின் அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து இடத்தில் இருப்பவர்களும் தெரிந்து
வைத்திருந்தனர்.
அவன் சென்ற அந்த மாலின் பெரும்பான்மையான
தளங்களின் ஏக போக உரிமையாளன் மஹிந்தன். அங்கு பல
இடங்களில் பொருத்தபட்டிருந்த சி,சி.டி கேமராக்களை கண்ரோல் செய்து மெய்ன்டைன் செய்யும்
அறையில் வேலைபார்ப்பவன், கதிர்
கேட்ட விபரத்தை அவன் காட்டிய போட்டோ மற்றும் அவள் மாலில் இருந்த நேரத்தை கதிரின் மூலம்
அறிந்து கேமராப் பதிவில் தேடி கவிழையா ஸ்கூட்டியை பார்க்கிங்கில் இருந்து வெளிக்கொண்டுவரும்
போது தெரிந்த அவள்
வண்டி நம்பரைக் குறித்துக் கொடுத்தான்.
மறுநாள் மதியமே மஹிந்தனின் மேசையில்
கவிழையாவின் அத்தனை விபரங்களையும் வைத்தான் கதிர்.
அதனை எடுத்து பார்த்த மஹிந்தன்
முன் பக்கத்தில் இருந்த அவள் புகைப்படத்தின் அடியிலிருந்த கவிழையா என்ற அவள் பெயரை உச்சரித்துக் கொண்டே விரல்களால் படத்தில் இருந்த
முகவடிவைத் தடவினான்..
அவள் கண்கள் அவனைப்பார்த்து சிரிப்பதுபோல
இருந்தது. ‘ரொம்ப அழகாகத்தான் இருக்கிறாள்.... ஆனால் இந்தவாய்
என்னைய திட்டியதற்கு என்ன தண்டணை கொடுக்கலாம்..?’ என்று கூறிக்கொண்டு மற்ற விபரங்களைப்
பார்த்தான். அவள் தன்னுடைய நிறுவனத்தில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவள் என்பது
தெரிந்ததும் அவன் முகத்தில் ஒரு வெற்றிச்சிரிப்புத் தோன்றியது.
அவன் உதடுகள் “வீ வில் மீட் சூன் பேபி...” என்று
உச்சரித்தது.
*****
மஹிந்தனின் பேலஸ் அன்று மிக அழகாக அழங்கரிக்கப்பட்டிருந்தது.
அவனது வீட்டின் மிக நெருங்கிய
சொந்தங்கள் மட்டும் கூடி இருந்தனர் பணியாளர்கள் அனைவரும் உற்சாகமாக பரபரப்புடன் பணிபுரிந்து
கொண்டு இருந்தனர்.
அங்கிருந்த அனைவரும் நிச்சயதார்த்ததுக்கு
ஐஸ்வர்யாவின் வீட்டை நோக்கிச்
செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.
மஹிந்தனின் செக்ரட்டரி அந்த நிச்சயதார்தத்திற்கு
தேவையான எல்லா ஏற்பாடுகளையும்
சரிபார்த்து வேலையாட்களை வைத்து வேலைவாங்கிக்
கொண்டிருந்தாள்.
மஹிந்தன் கண்ணாடிமுன்னால் நின்று
அவனின் தோற்றத்தை
சரிபார்த்துக் கொண்டிருந்தான். அவனை பொருத்தவரையில் அவ்வைபவம் அவனது அந்தஸ்த்தை மற்றவர்களுக்கு
எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வு...
அதனால், அனைத்து
ஏற்பாடுகளும் சிறப்பாக செய்துமுடிக்கணுமென எல்லோருக்கும் கட்டளை இட்டிருந்தான்....
அவனாக இதுவரையில் ஐஸ்வர்யாவிடம்
பேசியதில்லை. அதற்காக கோபித்துக் கொண்டு ஐஸ்வர்யாவும் இருந்ததில்லை.
அவளே அவனைப்பார்க்க அவன் இருக்கிற இடத்திற்கே வந்துவிடுவாள்.
ஆனாள் மஹிந்தன் அன்று மாலுக்கு
கூட்டிப்போனதுக்குப் பிறகு வேறு எங்கேயும் அவளை வெளியே கூட்டிட்டுப்போகவில்லை...
அதை அவள் வன்மமாக மனதில் பதித்திருந்தாள்.
கல்யாணத்திற்குப் பிறகு அதனை ஈடுகட்ட முடிவுசெய்திருந்தாள்.
அன்று அவனோடு மாலுக்குப்போனபோது
கிடைத்த மரியாதையும் அவன் வாங்கித்தந்த பரிசுப்பொருட்களும் அவள் நண்பர்களிடத்தில் அதிகரித்த
அவளுடைய அந்தஸ்த்து அவளை போதை கொள்ள வைத்திருந்தது.
ஐஸ்வர்யாவின் பெரியப்பாமகனும்
மஹிந்தனின் தங்கை மாப்பிள்ளையுமாகிய பார்த்தீபன், நிச்சயதார்த்ததிற்கு வீட்டின் மேல் தளம் முழுவதும் ஆடம்பரமாக அழகாக அழங்கரிக்க
ஏற்பாடு செய்திருந்தான்.
நிச்சயதார்த்தம் ஆரம்பிக்கக்கூடிய
நேரத்திற்கு அரை மணிநேரம் இருக்கும்போது மஹிந்தனின் கார் அங்கு வந்துசேர்ந்தது.
காரிலிருந்து இறங்கிய மஹிந்தனை
ஆராத்தி எடுத்து அழைத்தனர்... .
விருந்துக்கு வந்திருந்தவங்களை மேல் தளத்தில் கூட்டிக்கொண்டு போய்
உட்காரவைத்துக் கொண்டிருந்தனர்.
அங்கு போகப்போன மஹிந்தனைத் தடுத்த
பார்த்தீபன் “மஹிந்தன் நிச்சயதார்த்த மோதிரம் உங்களிடம் தானே இருக்கு?”
என்று கேட்டான்.
“ம்...நான்தான்
வச்சிருக்கேன்” எனப்பதில் சொன்ன மஹிந்தனிடம் “நீங்க
வாங்கிய மோதிரம் அவளின் விரலுக்கு சரியாக இருக்குதான்னு பார்க்காமல் வாங்கிட்டீங்கனு
மதுரா சொன்னாள்.
கிரவுண்ட் பிளோரில் ரைட் சைடில் உள்ள ஐஸ்வர்யாவின் ரூம்க்கு போய் அவளுக்கு போட்டு சரிபாருங்க மஹிந்த்,
அது அவளுக்கு அளவு சரியில்லை என்றால் மதுரா உங்களிடம் வேறு மோதிரம் கொடுப்பாள்
அதை போட்டுவிடுங்க” என்றுகூறினான்.
பார்த்தீபன் சொன்ன ஐஸ்வர்யாவின்
அறையிருந்த பக்கம் சென்ற மஹிந்தன் ஐஸ்வர்யாவின் ரூம்வாசலில் சென்று கதவுதிறக்கும் போது கேட்ட பேச்சுக்குரலில் உள்ளே செல்லாமல் அங்கேயே நின்றுகொண்டு
கவனிக்க ஆரம்பித்தான்.
ஐஸ்வர்யா தனது நண்பர்களுடன் தனது
அறையில் முழு மேக்கப்புடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தாள்.
அங்கிருந்த அவளின் நண்பர்களில்
ஒருவன். “டார்லிங் யூ ஆர் லுக்கிங் வெரி செக்சி டுடே”
என்றுகூறி அவள் உதட்டில் முத்தமிட்டான்.
உடன் அங்கிருந்த ஐஸ்வர்யாவின் மற்ற நண்பர்கள்
‘ஹேய்’ என்ற
ஒலி எழுப்பி “அஜய் இனி நீ ஐஸ்க்கு இப்படி முத்தம் கொடுக்கக்கூடாது
இனி அதுக்கு முழு உரிமை உள்ளவர் கிரேட் பிஸ்னஸ் கிங் மஹிந்தன்தான்”
என்றுக் கூறினர்.
கதவினை திறக்க லாக்கில் கைவைத்ததும்
அதன் லாக் ஒபெனாகி கிடைத்த சிறு இடைவெளியில் உள்ளிருந்தவந்த ஐஸ்வர்யாவின் நட்பு பட்டாலங்களுக்கிடையே நடைபெற்ற கலாட்டாக்களை, ஏனோ
மஹிந்தனுக்கு ரசிக்கும் படியாக இல்லை.
எனவே அவனுக்கு உள்ளே செல்ல இஷ்டம்
வரவில்லை எனவே அவன் உள்ளே போகாமலே திரும்பி நேராக மதுராவிடம் வந்து சேர்ந்தான்.
மதுராவிடம் உள்ள மோதிரத்தை வாங்கிக்கொண்டு
அதனையே நிச்சயதார்த்துக்கு போட்டுவிட முடிவு செய்தான்.
அவன் பார்த்துப்பார்த்து தேர்ந்தெடுத்த
மோதிரம் அவன் நெஞசில் உறுத்தியது முதல் முதலாக தான் தவறான முடிவு எடுத்து விட்டோமோ?
என யோசனை செய்ய ஆரம்பித்தான். அந்த யோசனையுடனே நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள
ஆரம்பித்தான்.
அங்கு வந்த ஐஸ்வர்யாவை அவன் கண்டுகொள்ளவே
இல்லை. மஹிந்தனின் அந்த உதாசீனமானச் செயல் ஐஸ்வர்யாவை கடுகடுப்பாகியது.... இருந்தாலும் அவனின் அந்தஸ்தின் காரணமாக அடக்கிவாசிக்கவே முடிவுசெய்தாள்.
இருவரும் வெவ்வேறு மனநிலையில்
இருந்தாலும் நிச்சயதார்த்தம் சிறப்பாகவே முடிந்தது. நிச்சயம்
முடிந்த மறுநிமிடமே மஹிந்தன் அங்கிருந்து வெளியேறி தனியாக அவனின் பீச் ரெசார்டிற்கு
வந்துசேர்ந்தான்.
அவன் மனம் சோர்வாக இருக்கும்போது
எப்பொழுதும் வரும் இடம் இந்த ரெசார்ட்தான் ஆனால் தனியாக வரமாட்டான் அவனின் நண்பன் கதிருடன் தான் அங்கு வருவான்.
கதிர் அவன் நிச்சயதார்த்தத்திற்கு
வந்திருந்தான் ஆனால் கூட்டத்தில் தள்ளிநின்று எல்லோரையும் கவனித்துக்கொண்டு இருந்தான்.
வீட்டிற்கு வெளியில் மட்டுமே அவன் மஹிந்தனுடன் நட்பு பாராட்டுவான்.
.
அவனின் வீட்டுக்குள் வரமாட்டான்.
மஹிந்தனின் குடும்பநிகழ்ச்சியில் கலந்துகொள்வதை முடிந்தஅளவு தவிர்த்துவிடுவான் கதிர்.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இப்பொழுதுபோல ஒதுங்கி ஒரு காவளாளியின் பணியை
எடுத்துக்கொள்வான்.
கண் மூடி அமர்ந்திருந்த மஹிந்தனுக்கு
புல்லட்டின் சத்தம் கேட்டது. ஆம் கதிர்தான் தன்னுடைய இரண்டுசக்கர வாகனத்தில் அங்கு
வந்துசேர்ந்தான்.
கதிரைப்பார்ததும் மஹிந்தனின்
முகம் மலர்ந்தது.
வந்தவன்
“என்ன பிரச்சனை மஹிந்த்? என்றதும்.
.
“எப்பிடிடா? என் முகத்தைப்
பார்த்தே எனக்கு பிரச்சனை’னு தெரிஞ்சுக்கிற? ஆனால்
இப்போ என்னுடைய பிரச்சனையில் உன்னால எனக்கு எதுவும் செய்ய முடியாது...”
என்று கூறினான்.
அதனைக்கேட்ட கதிர்
“என்னால் முடியுமா முடியாதான்னு நான்தான் சொல்லனும் அதை நீ சொல்லக்கூடாது” என்றான்.
“ஓ…அப்படி
சொல்றயா..?! ஒகே பிரச்சனையை சொல்றேன் கேளு கதிர்..
இதுவரை நான் முடிவெடுத்தது எதுவும் தவறாய் போனதில்லை, ஆனால் என் கல்யாணத்திற்கு
தவறான ஒருத்திய அவசரப்பட்டு செலைக்ட் செய்திட்டேனோனு நினைக்கிறேன்”
என்றவன், தான் பப்பில் ஐஸ்வர்யாவைப் பார்த்ததுமுதல் இன்று அவள்
ரூமுக்குள் நடந்ததுவரை
எல்லாத்தையும் கூறினான்.
“என்னை கண்ட்ரோல் பண்றவளா என்
வொய்ப் இருக்கக்கூடாது’னு
நினைத்து எந்த வரைமுறைக்கும் கட்டுப்படாத ஒருத்திக்கூட நிச்சயம்வரை வந்துட்டேன்..
என்னோட ஜூனியர்ஸ்க்கு இப்படிப்பட்ட
ஒருத்தி அம்மாவா ஆனா அவங்களை என்ன லட்சணத்தில இவ வளர்த்து ஆளாக்குவா...?
இனி இந்த கல்யாணத்தை நிறுத்தவும்
முடியாது... அதுதான் என்ன செய்யனு யோசனையா
இருக்கு?” என்று கூறியவனை கவலையோடு பார்த்தான் கதிர்.
கதிர் பிறந்து வளர்ந்தது குப்பத்தில்.
அவன் பெற்றவர்களை பார்த்ததில்லை. அவனின் பதினாறு
வயதுவரை வளர்ந்தது அவனின் மாமா ரவுடி மாரியிடம். மாரிக்கு
குடும்பம் கிடையாது.
அவன் வசித்த குப்பத்தின் அருகிலிருந்த
விளையாடும் மைதானத்தில் மஹிந்தன் பிளஸ் ஒன் படிக்கும் போது கிரிக்கெட் விளையாட தினமும் வருவான்.
கதிர் வேடிக்கை பார்க்க அந்த
மைதானத்திற்குள் அடிக்கடி வருவான்.
ஒருநாள் மஹிந்தனுக்கும் கூட விளையாடும்
மற்றவனுக்கு தகராறு வந்தது.
மஹிந்தன் கவனிக்காத போது பேட்டால் மஹிந்தனனின் பின் மண்டையில் அடிக்க வீசியதை
பார்த்து பக்கத்தில் இருந்த கதிர் குறுக்கே வந்து அவ்வடியை தன் முதுகில் வாங்கி சுருண்டு
மயங்கி கீழே விழுந்தான்.
அன்று முதல் கதிர் மஹிந்தனின்
நட்பு ஆரம்பித்தது. மயக்கம் தெளிந்த பின் கதிருக்கு ருபாய் நோட்டு கட்டை
கொடுத்தான் மஹிந்த். அதனை வாங்க மறுத்த கதிர், தனக்கு ஒரு வேலை வாங்கித்தரச்
சொன்னான்.
அவனை மஹிந்தன் தன் வீட்டிற்கு
கூட்டிச்சென்று தன் தாத்தாவிடம் அவனை காட்டி கதிர் தனக்கு உதவியதை கூறி வேலை கொடுக்கச்
சொன்னான்.
தன் பேரன் கூட்டிவந்த காரணத்தால்
தங்கள் மோட்டார் பேக்டரியில் அவனுக்கு வேலை போட்டுக் கொடுப்பதாகச் சொன்னார். மறுநாள்
ஃபேக்டரியில் தன்னை வந்து பார்க்கச் சொன்னார்.
கதிர் அவர்களின் வீட்டில்
இருந்து திரும்பி போகும்போது எதிரில் வந்த மஹிந்தனின் பெற்றவர்கள் கதிரின் தோற்றம்
கண்டு அவனை கடிந்து பேசி விரட்டினர்.
பக்கத்தில் இருந்த மஹிந்தன்,
கதிருக்காக அவனது பெற்றவர்களை எதிர்த்து பேசினான். அன்றுமுதல்
கதிரின் அனைத்தும் ஆகிப்போனான் மஹிந்தன்.
கதிருக்கு,
குடும்பத்தையும், பெண்களையும் பற்றி எதுவும் தெரியாது.
மஹிந்தன் வருந்துவதை தாளமுடியாத கதிர், “மஹிந்
நான் உனக்கு ஒரு யோசனை சொல்லவா?” என்று கேட்டான்.
“ம்... சொல்லு கதிர்” என்ற
மஹிந்தனிடம்
“அன்னைக்கு
கவிழையான்ற பெண்ணை பற்றிய விபரம் விசாரிக்க சொன்னல்ல. நான்
விசாரித்தவரை அவள் ரொம்பவும் ஒழுக்கமான பெண், மேலும் ஒரு ஆண் நண்பன்கூட அவளுக்கு இல்லை,
ஆறு மணிக்குமேல் தன் குடும்பத்தாரை தவிர மற்றவர்களுடன் அவளை வெளியில் பார்க்கமுடியாது
நீ ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணிக்ககோ. கவிழையாவை எப்படியாவது உனக்கே உனக்கானவளா உன் குழந்தைகளுக்கு
அம்மாவாக மட்டும் இருப்பவளா வச்சுக்கோ” என்றான்.
கதிர் அறியவில்லை இது எவ்வளவு
பெரிய பாவம் என்று இந்தச் செயலால் எத்தனை பேர் வாழ்க்கை காயப்பட போகிறது என்பதையும்.
கவிழையாவின் பெயரை கேட்டதுமே
மஹிந்தனுக்கு ஆர்வம் வந்துவிட்டது மேலும் அவளைப்பற்றி கதிர் கூறியதும், கவிழையா அவனுடையவள்
என்று முடிவெடுத்துவிட்டான் மஹிந்தன்.
கவிழையாவிற்கு சிறிதுநாளாகவே
தங்களை யாரோ பின் தொடர்வதுபோல் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. எனவே அவள்
தன் தோழி வனித்தாவிடம் கூறினாள்
“வனித்தா,
நம் பின்னாடி ஒரு கறுப்புநிற கார் வருகிறதுபார்...’ என்றாள்.
வனிதா பார்த்துவிட்டு,
“ஆமாம்! சூப்பரா பளபளக்குதுல. பார்க்க
பிளைட் மாதிரி இருக்கு. அது மாதிரி காரையெல்லாம் நம்மால் பார்க்கத்தான் முடியும்”
என்றாள்.
அவளது பதிலில் கடுப்பான கவி,
நான் உன்கிட்ட அந்தக் காரின் அழகைபத்தியா கேட்டேன்....?
என்றாள்.
உடனே வனித்தா
“நீதானடீ அந்த காரை பார்க்கச் சொன்ன?!” என்றாள்
.
“கொஞ்சநாளாகவே
நாம் போகிற இடமெல்லாம் இந்தக்கார் என் ஸ்கூட்டியை ஃபாலோ பண்றதுபோல தெரியுது வனி.. அதை நீயும் கவனிச்சயானு கேட்கத்தான் உன்னையப் பார்க்கச்
சொன்னேன். அந்தக் காரின் அழகை பார்க்க சொல்லலை....” என்றாள்
“நாம தினமும்
இந்த பாதையில்தான் காலேஜ் போறோம். அந்த கார்காரனின் கம்பெனியும் நம்ம காலேஜ் போகுற பாதையில
இருக்கலாம்.... அவனின் வேலைநேரமும் நம்ம போற... வார... நேரத்தை
ஒத்து இருக்கலாம். அதனால் நாம வீட்டிற்கு திரும்புற போதும் அந்தகாரும் இந்த ரூட்டில்
வந்து இருக்கலாம்..., இதை வச்சு... அந்த காரு நம்மை ஃபாலோ பண்ணுதுன்னு நீ
நினைக்கலாமா...?” என்று வனிக்கேட்டாள்.
அதற்கு கவிழையா,
“இந்த ரோட்டில் மட்டும் அது நம்ம பின்னாடி வந்தா நீ சொல்வது சரி.
ஆனா... நாம இரண்டு பேரும் வாரம் இரண்டுதடவை போகுற லைப்ரரி பாதையிலும், வெள்ளிகிழமையில
போகுற பெருமாள்கோவில் பாதையிலும் இந்த காரு நம்ம பின்னாடி வருவதை நான் கவனிச்சேன்”
என்றாள்.
அதைக் கேட்டதும் வனித்தா
“நீ சொல்வதைப் பார்த்தால் யோசிக்கக்கூடிய விசயமாகத்தான் இருக்கு.
ஆனால் இன்னையோட நம்மலுக்கு காலேஜ் லைப் முடிஞ்சுடும். இனிமே நாம வெளியில் போகும் பாதை எல்லாம் மாறப்போகிறது. அதனால்
இதைபற்றி ரொம்ப யோசிப்பதை விட்டுட்டு அடுத்தவாரம் நீ வேலையில் சேரப்போவதை பற்றியும்.
நான் எனக்கு வேலை கிடைப்பதற்கு என்ன செய்யன்றதை பற்றியும் யோசிப்போம்”
என்றாள்.
வனித்தா அவள் கவனத்தை மாற்றியதால்,
கவி வனித்தாவிடம், “நான் வேலையில் ஜாயின் பண்றதுக்கு முன்னால கொஞ்சம் ஆபீஸ்வியர் கலைக்சன்ஸ் வாங்கணும் வனி”.
அதனை கேட்ட வனி,
“எனக்கு பிறந்தநாள் டிரஸ் எடுத்த கடைக்குப் போய் பார்ப்போமா?.
அந்த கடையில செலக்டிவ்
கலெக்செனாய் நம்மால வாங்கக்கூடிய விலையில் இருந்ததுல...” என்றாள்.
அதற்கு கவிழையா
“அப்போது தள்ளுபடி போட்டு இருந்தாங்க வனி அதனால் அது போல கடையில் வாங்க முடிந்தது, மத்தநேரத்தில் அதுபோன்ற மாலில உள்ள கடைகளை சும்மா சுற்றிபார்க்கத்தான்
முடியும். அங்கு வாங்கப்போய் விலையைக் கேட்டால் நமக்கு மயக்கந்தான்
வரும்” என்றாள் கவி .
அதற்கு வனித்தா
“நான் நாளைக்கு மதியம் சாப்பாடு முடிந்து உன் வீட்டிற்கு வருவேன் நீ கிளம்பியிருக்கிற,.
நாம் போய் அந்தக்கடையில் டிரஸ் வாங்கத்தான் போகிறோம்” என்று
கூறிக்கொண்டு வரும் போதே வனித்தாவின் வீடு வந்துவிட்டது.
அங்கே அவளை இறக்கிவிட்டு அடுத்த
தெருவில் உள்ள தன் வீட்டிற்கு சென்றாள் கவிழையா.
கவிழையா தன் வீட்டு வாசலில் ஸ்கூட்டியை
விட்டு இறங்கும்போது அத்தெருவில் இரண்டு தடியன்கள் கடப்பதை கவனித்தாள்.
சிறிது நாட்களாக அவர்கள் அந்த
தெருவையே சுற்றி சுற்றி வருவதாக அவளுக்குத் தோன்றியது. தன்
தலையை உலுக்கி ‘சே’ எல்லாம் நம் பிரம்மை. நம்மை
வேவு பார்க்க நம்ம என்ன பெரிய வி. ஐ. பி யா என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.
ஆனால் அவள் அறியவில்லை.
எவனோ ஒருவன் கவிழையாவின் அனைத்து நடவடிக்கைகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு
வந்துவிட்டான் என்பதை அறிய நேரும் போது என்ன ஆவாளோ...?.
----தொடரும்----
No comments:
Post a Comment