anti - piracy

Post Page Advertisement [Top]

 

இனிக்கும் விஷம் (தீபாஸ்)



அத்தியாயம் 03

பங்களாவில் அமுதவல்லியின் அறையில், வண்ணன் தனது தந்தைக்கு அருகில் நின்று கொண்டிருந்தான்.

அங்கு சற்று தள்ளி முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு இருந்த இஷானியை பார்க்கப் பிடிக்காமல் அவனின் தந்தை எங்கோயோ பார்த்தபடி இருந்தார்.

பாசமாகய்  அமுதவல்லி வண்ணனின் கைப்பற்றியதும், உணர்ச்சி வசத்தில் அவரின் கை நடுங்குவதை  உணர்ந்துகொண்டவனுக்கு, அவரின் நெகிழ்வு ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்தது..

தந்தைக்குப் பின் அந்த வீட்டின் மூத்தவரான அமுதவல்லிக்கு தன் மேல் இருக்கும் பிரியத்தில் நிம்மதியை உண்டானது.

“உதித்தை காப்பாத்த வண்ணனாலத்தான் முடியும்” என்ற முகில் அதியனின் வார்த்தைகேட்டதும் தள்ளி உட்கார்ந்திருந்த இஷானி  ஆத்திரத்துடன் அவருக்கு முன்வந்து நின்றாள்.

அவளின் செயலை வேட்டிக்கை பார்த்த வண்ணனுக்கு இஷானிக்கு தான் உதித்தை காப்பாற்றும் வேலையில் இறங்குவது பிடிக்கவில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிந்ததால் நெருப்பின் மீது நிற்பதுபோல ஒரு உணர்வு உண்டானது...

அவளோ முகிலிடம் கீச்சுக் குரலில் சத்தமாக “உங்களுக்கு என் பையனை காப்பாத்த இஷ்டம் இல்லைன்னா கம்முனு இருங்க, எதுக்கு தேவையில்லாம இவனை வச்சு டிராமா பண்றீங்க...? என் மகனை காப்பாத்த எனக்குத் தெரியும்” என்றாள் இஷானி.

அவள் சொன்னதைக் கேட்டு கடுப்புடன் பல்லைக் கடித்தவர் மனதினுள் ‘இந்நேரம் அவக்கூட விவாகரத்து மட்டும் ஆகாம இருந்தா... ஒரே அடியில் பல்லை கலட்டி இருப்பேன்... உரிமையை அத்துவிட்டதால இப்போ கையை கட்டிக்கிட்டு சும்மா இருக்க வேண்டியது இருக்கு..’ என்ரு கடுப்பானவர், இஷானியிடம் பதில் சொல்லாமல் அமுதவல்லியிடம்,

“அத்தே உங்க மகளை எந்த கிறுக்குத்தனமும் பண்ணாம அடங்கி இருக்கச் சொல்லுங்க, ஆரம்பத்தில் இருந்து எல்லாமே கோணலா பண்ணிப் பண்ணி அவளோட லைஃபையும் அப்படியே மார்த்திக்கிட்டா...

அவள் எப்படி போனாலும் எனக்கு கவலை இல்ல.. ஆனா உதித் என்னோட மகன், அவனுக்கு நல்லது செய்யப்போறேன்னு இவள் குழப்பி இன்னும் சிக்கலில் இழுத்து விட்டுடுட்டா கொன்னு புதைச்சிருவேன்... அவளை சொல்லி அடக்கி வைங்க” என்று கர்ஜித்தார்.

“இஷா அதுதான் மாப்பிள்ளை சொல்றார்ல, உதித்தை வந்து பேசச் சொல்லு... அவன் எப்போ வருவான்னு போன் பண்ணிக் கேளு” என்றாள் முதியவள்.

இஷானிக்கு தெரியும் முகிலனுக்கு தான் மட்டும் தான் ஆகாது பிள்ளைகள் மேல் பாசம் அதிகம் என்று தெரியும்,

உதித் பிரச்சனையில் இருப்பது தெரிஞ்சா கண்டிப்பா வேடிக்கை பார்த்துட்டு இருக்க மாட்டார் எந்த அளவுக்கும் இறங்கி காப்பாத்துவார்னு தெரியும். ஆனால் அந்த வேலையை வண்ணனிடம் ஒப்படைப்பதாக சொல்லிக்கொண்டு வந்து நின்றதும் தான் அவளின் நம்பிக்கை ஆட்டம் காண ஆரம்பித்தது.

இருந்தாலும் ஒருவேளை தான் இறங்கி சொதப்பிட்டா... என்ற பயம் உண்டானது... ஏற்கனவே கணவனுக்கும் சந்திரிக்கா விஷயத்தில் தன்னுடைய தவறான அணுகுமுறை நிரந்தரமாக முகில் அதியனை தன்னைவிட்டு பிரித்துவிட்டதால் மகன் விஷயத்திலும் அப்படி எதுவும் ஆகிவிடக் கூடாது என்று நினைத்தாள்.

இப்போதைக்கு மகனை பிரச்சனையில் மாட்டாமல் தப்பிக்க வைப்பதே புத்திசாலித்தனம் எனப் பட்டது. எனவே தனது  மொபைலில் இருந்து உதித்துக்கு டயல் செய்தாள் இஷானி.

உதித்தோ கோபம் ஆற்றாமை மற்றும் எரிச்சலுடன் பப்பில் இருந்து வீடுநோக்கி வந்துகொண்டிருந்தான். குடித்திருந்தாலும் நிதானமாகவே கார் ஓட்டிக்கொண்டு வந்தான்.

அவனின் தற்போதைய நிலை நினைத்து மிகவும் சோர்ந்து போனான் மனதினுள் ‘பிளான் பண்ணியபடி எல்லாம் நடந்திருந்தால் இப்போ இப்படியா இருந்திருப்பேன்... லாராகூட லைஃபை ஸ்டார்ட் பண்ணி இருப்பேன்...

எங்க டி போன...? நானே நீ எங்க போனனு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன். நீ காணாம போனதுக்கு நான்தான் ரீசன்னு மத்தவங்க பேசுவதை பார்த்து அம்மா பயந்துட்டாங்க...

என்னை அந்த இஸ்யூவில இருந்து காப்பாத்தணும்னு அவங்களே முடிவெடுத்து மும்பையை விட்டு சென்னைக்கு என்னைய இழுத்துட்டு வந்துட்டாங்க,

லாரா... நீ மட்டும் இப்போ என் கண் முன்னாடி வந்தே... உனக்கு இருக்கு... என்கிட்ட இருந்து எப்படி உன்னால போக முடிஞ்சது...?

அந்த சந்திரிக்கா பேய் கிட்ட சவகாசம் வச்சுக்காதனு படிச்சுப் படிச்சுச் சொன்னேன்... கேட்டியா...? அவக்கிட்டதான் மாட்டிக்கிட்டீயோ...? அந்த பேயைப் போய் ‘இந்தியாஸ் பிரவுடஸ்ட் வுமன் என்டர்பிரேனியர்னு’ கொண்டாடுறாங்க. அவள் இத்தனை அட்டூழியம் பண்ணியும் எதுலையுமே மாட்டிக்காம தெனாவட்டா திரியிறா.. ஆனா நானு தப்பே பண்ணாம தலைமறைவா இருக்கேன்.

காதலி லாராவின் பிரிவு அவனின் மனதை பலவிதத்தில் அசைத்துப் பார்த்தது... லாரா காணாமல் போனதுக்கு காரணம் என்று அவன் எண்ணிய அந்த சந்திரிக்காவின் மீது கோபம் அளவுக்கு அதிகமாய் பொங்கியது .

இதுமட்டுமா, அழகான தேன்கூடு போல இருந்த தனது குடும்பத்த கலைச்சு விட்ட முதல் கல் வண்ணன், ரெண்னாவது கல் அந்த பேய் சந்திரிக்கா சந்த். தலைமேல் வளர்ந்த பிள்ளைகள் வைத்திருக்கும் தனது தந்தையை குடும்பத்தை விட்டு பிரித்து கல்யாணம் செய்துகொண்ட அந்த சந்திக்கா சந்த மீது கொலைவெறி வந்தது.

இவ்வாராக பல எண்ணங்களுடன் பங்களாவை நோக்கி வந்து கொண்டிருந்தவனுக்கு மறுபடியும் அம்மாவிடம் இருந்து மொபைல் அழைப்பு வந்ததும் “அம்மா... இன்னும் பத்து நிமிஷத்தில் அங்க இருப்பேன்” எனச்சொல்லி அவர் பேசும் முன் என்ன பேசவந்தார் என்றே கேளாது பேசி வைத்துவிட்டான்.

அங்கு வண்ணன் நிற்பதையும்... இவன் பொருட்டு இன்வெஸ்டிகேஷனில் அவன் இறங்கப் போவதையும் அவர் சொல்வதற்குள் வைத்துவிட்டான் உதித். ‘இது சரிபட்டுவருமா...? அவன் எதிரியாக நினைக்கும் வண்ணனிடம் எப்படி பிகேவ் பண்ணப் போறானோ...’ என்ற கவலையுடன்

“இதோ இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துடுவானாம் அம்மா” என்று அமுதவல்லியிடம் பதில் சொன்னாள் இஷானி

********

கனவில் இருந்து விடுபட்ட நட்சத்திரா விடிபல்புவின்  வெளிச்சத்தில் ஜூலியைக் கண்டாள். அவள்  முறைத்துக்கொண்டு நிற்பது தெரிந்த பின்பே தான் இப்பொழுது இருப்பது விடுதியிலென்ற நிதர்சனம் புரிந்தது.

‘ச்சே.... அந்த இன்சிடென்ட் நடந்து முடிஞ்சு வருஷத்துக்கு மேல ஆகியும் மறக்க முடியலையே... என்னோட இந்த ஆக்டிவிடியை பார்த்து ரூம் மேட் பயந்து போயிட்டாளோ...?’ என்று நினைத்துக்கொண்டே ஜூலியிடம்

“என்ன...? என்ன இப்படி நிக்கிறீங்க...?” என்றாள்.

“நான் கேக்க வேண்டியதை நீ கேக்குற...? ஆமா கனவுல அட்டம்ப்ட் ரேப்பா...? கையை காலை அப்படி உதறிகிட்டு கிடந்த..” என்றதும்

அவள் கேட்ட தோரணையில் அதிர்ந்து “இல்ல... இல்ல...” என்று பதற்றமாக சொல்லிக்கொண்டே மனதினுள் ‘என்ன இவள், இப்படி எல்லாம் கேக்குறா...!? கொஞ்சம் கூட மரியாதை இல்லாம நீ வா போனு பேசுறா...?” அதிர்ச்சியில் கண்கள் விரித்து பார்த்தபோது...

ஜூலி அந்த அறையின் டியூப்லைட்டை எரியவிட்டு தரையில் நட்சத்திராவால் தூக்கி எறியப்பட்டது என்னவென பார்த்தாள் அவளின்  ‘பேக் பேக்’ தான். ஒழுங்கில்லாத நிலையில் அது கிடந்தது.

நட்சத்திராவோ சட்டென படுக்கையை விட்டு எழுந்தவள் வேகமாகச் சென்று அந்த பேக் பேக்கை எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள்.

“ஆமா... அந்த பேக்ல அப்படி என்ன இருக்கு..? நானும் நீ வந்ததுல இருந்து பார்க்குறேன் பாத்ரூம் போனாக் கூட அதோடயே போற வருற...?” என்றாள்.

“அதுல என்னோட முக்கியமான திங்க்ஸ் இருக்கு, மிஸ் ஆகிடக் கூடாதுன்னு தான் வேற ஒன்னும் இல்ல...” என்றவளிடம்,

“இப்படி மூணு மணிக்கு நீ கட்டிப் பிடிச்சு தூங்குன பேக் பேக்கை விட்டெறிஞ்சு, கையை காலை உதறி, விடுங்க... விடுங்க... னு சத்தம் போட்டு என்னையும் முழிக்க வச்சிட்ட... இனி நான் தூங்குனாப்புல தான், ஆமா டெய்லி இப்படி பண்ணுவியா இல்ல இன்னைக்கு தான் புதுசாவா...?’ என்றதும்.

“ஊரைவிட்டு வந்து புது இடத்தில் தங்கி இருக்கற பயத்தில் கனவு வந்துருச்சு... இங்க பழகிட்டா நார்மல் ஆகிடுவேன்” என்றதும்,

“அது உண்மையா இருந்தா நல்லது, ஓகே... நாம நாளைக்கு ஃப்ரீயா பேசலாம், இன்னும் மூணுமணி நேரம் தான் தூங்க முடியும்” என்று கொட்டாவி விட்டுக்கொண்டே ஜூலி தூங்கிவிட   

நட்சத்திராவுக்கு தூக்கம் தூரப் போய்விட்டது. வாழ்கையில் ஒரு தடவை பட்ட அந்த அனுபவம் தந்த படிப்பினை தான் அதன் பின் எதற்கும் யாரையும் நம்பவே கூடாது என்ற நிலையை அவளுள் விதைத்தது.

‘மும்பையில் இருந்து சென்னைக்கு உதித் முகிலனை பார்க்கணும்னு கிளம்பி வந்துட்டேன். அங்க இருந்த உதித் இப்போ எதுக்கு சென்னைக்கு வந்தான்....?

தப்புச் செஞ்சவங்க தானே ஓடி ஒளியனும், ஒருவேளை இவனும் கிரிமினலா இருந்தா என்ன பண்ண...? ஆனா அக்கா அவனை பத்தி நல்ல விதமாத்தானே என்கிட்ட சொல்லி இருக்கா...

இவ்வளவு பெரிய சிட்டியில எங்கன்னு போய் அவனைத் தேட...? இங்க பணக்கார பசங்க டைம் செலவு பண்ற இடம் எது எதுன்னு கண்டுபிடிக்கணும். என்னோட தேடலை பப், டிஸ்கோத்தே போன்ற இடத்துல ஆரம்பிக்கணும்,

அதை எல்லாம் தெரிஞ்சுக்கிட வகுலாவை காண்டாக்ட் பண்ணனும், அவள்தான் இப்போ இங்க சென்னையில் தங்கி சினிமாவில் சின்ன சின்ன சீன்களில் தலை காட்ட ஆரம்பிச்சிருக்கா அவளுக்கு டிஸ்கோத்தே பப் எல்லாம் அத்துபடியாத்தான் இருக்கும்.

விடிஞ்சதும் முதல் வேலையா அவள்கிட்ட தான் பேசணும் என்று எண்ணியவளுக்கு தூக்கம் தொலைதூரம் போனது. மொபைலில் தனது காண்டாக்டில் இருந்த வகுலாவை தொடர்பு கொள்ள நினைத்தவள், வாட்ஸ் ஆப்பை மொபைலில் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தாள்.

பழைய மொபைல் தான் ஆனால் பழைய நம்பர் இருந்த சிம் கார்ட்டை டெல்கியில் இருந்து கிளம்பும் முன்பே உடைத்து வீசி எறிந்தவள் நட்சத்திரா பேரில் வேறு சிம் ஒன்றை வாங்கி தனது மொபைலில் பொருத்தி இருந்தாள். மொபைலையும் ரீபுட் செய்து வைத்திருந்தாள்.

டிரைனில் வரும் போதுதான் காண்டாக்ட் நம்பர்ஸ் பேக்கப் எடுத்து தனது லேப்டாப்பில் பதிந்து வைத்திருந்ததை மீண்டும் மொபைளில் ஸ்டோர் செய்தவள் இப்பொழுதுதான் மறுபடி வாட்ஸ் ஆப் டவுன்லோட் செய்து அதில் வகுலாவுக்கு ஹைய் என்று மெசேஜ் போட்டுவிட்டு படுக்கலாம் என்று பார்த்த போதுதான் அவள் ஆன்லைனில் இருப்பது தெரிந்ததும். அவளுடன் பேச காலையில் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையென நினைத்தாள்

சுருக்கமாக “அவளைத் தான் பார்க்கவேண்டும், இப்பொழுது தான் சென்னையில் இருப்பதாகவும் டைப் செய்து, இப்பொழுது தான் நட்சத்திராவாக இங்கு வந்துருப்பதாகச் சொல்லி மெசேஜ் தட்டி அனுப்பினாள்.

அடுத்த மூன்றாவது நிமிடம் அவளுக்கு வகுலாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை கண்டதும் கடந்த சில மாதங்களாக சிரிப்பு என்பதையே மறந்ததுபோய் இருந்த நட்சத்திராவின் முகத்தில் புன்னகை உதித்தது.

“ஹேய் டால்...” என்ற வகுலாவின் அழைப்பில் சந்தோசத்துடன், “எப்படி இருக்க வகுலா...?” என்றதும்.

“சூப்பரா இருக்கேனு எல்லாம் உன் கிட்ட பொய் சொல்ல மாட்டேன் டி. ஆனா மோசமாவும் இல்ல.. ஏதோ போய்கிட்டு இருக்கு, ஆமா சென்னையிலா இருக்க..? எந்த ஹோட்டலில் ஸ்டே பண்ணி இருக்க..? விடிஞ்சதும் முதல் வேலையா உன்னை வந்து பார்த்துட்டுத்தான் மத்த ஜோலியே.. கிட்டத்தட்ட நாம மீட் பண்ணி டூ இயர்ஸ் ஆச்சுல்ல... ஆமா நம்ம பார்ட்னர் எப்படி இருக்கா..?” என்று படபடவென பேசித் தள்ளினாள் வகுலா...

----தொடரும்----

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib