இனிக்கும் விஷம் (தீபாஸ்)
அத்தியாயம் 04
வாட்ச்மேன் கேட்டை விரிய திறக்க உதித்தின் கார் உள்ளே நுழைந்தது.
அங்கு பங்களா வாசலில் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகத்தைக் கண்டவனுக்கு ‘அவனா...?
என்ற கேள்வி எழுந்த போதே சுல்லென்ற கோபம் மூண்டது. நடையிலும் கோபம்
கொப்பளித்தது...
சரக் சரக்கென காலில் போட்டிருந்த ஜூ சப்தம் எழுப்ப அமுதவல்லி அறைக்குள்
வந்தான் உதித். ஏனெனில் தனது தந்தைக்கும் அவனுக்கு இடையில் இன்டர் மீடியேட்டராக
கடந்து சில வருடமாக இருப்பவள் அவளின் அம்மம்மா அமுதவல்லி தான்.
உள்ளே நுழைந்தவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அங்கு தனது தந்தை
மற்றும் அம்மாவுடன் வண்ணன் நின்றிருந்ததை
சற்றும் எதிர்பார்க்காததால் முதலில் அதிர்ந்தவன் அடுத்து கனல் வீசும் கண்களை
வண்ணனின் மீது செலுத்தியபடி திரும்பிச்செல்ல முயன்றபோது வேதவல்லியின் அழைப்பு
தடுத்தது.
“உதித் கண்ணா, என்ன திரும்பிப் போற...? உன்கிட்ட பேசத்தான்
காத்துகிட்டு இருக்கோம்” என்றவளிடம்,
“அம்மம்மா... இந்த வீட்டுக்கு சம்மந்தம் இல்லாதங்க முன்னாடி எனக்குப்
பேச விருப்பம் இல்ல... முதலில் வெளிய அனுப்புங்க... பிறகு நான் பேச வருறேன்”
என்றான்.
முகிலனோ தனக்கும் இஷானிக்கும் கருத்து வேறுபாடு முற்றி அவளை விட்டு
தான் பிரிவதாக முடிவெடுத்த போது உதித் தன்னைவிட்டு சற்று தூர நிற்க ஆரம்பித்தான்..,
அதன் பின்பு மனைவியை விவாகாரத்துச் செய்ததும், தவிர்க்க முடியாத
இடத்தில் மட்டும் ஓரிரு வார்த்தை பேசினான்...
இஷானியை விவாகாரத்துச் செய்தப்பின் சந்திரிக்காவோடு தனது மூன்றாம் திருமணம் ஆனதும் உதித் முற்றிலும் தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் ஒதுங்கி நின்றுவிட்டான் .
அவனின் கோபத்தில் உள்ள நியாயம் புரிந்து உதித்தின் கோபத்துக்கு
மதிப்புக் கொடுத்து அவனின் போக்கிலேயே விட்டு விட்டார் முகில்.
தூரத்தில் இருந்தே அவனுக்குத் தேவையானதை கவனித்துக் கொண்டிருந்தவர், இன்று வண்ணனை எடுத்தெறிந்து பேசிய பேச்சை
ஆட்சேபிக்கும் தொனியில் “உதித்...” என்று கர்ஜித்து அழைத்தார்.
அப்பாவின் கண்டிப்பான குரல், அவனை மறுபேச்சு பேசவிடாமல் அடக்கியது.
வெளியில் போக திரும்பியவன் கால்கள், அதற்கு மேல் அடியெடுத்து வைக்க தயங்கி
நின்றது.
அவனின் அம்மா அப்பாவுக்கு இடையில் உண்டான கருத்து வேறுபாடுகள், மோதல்கள்,
பிரிவு என்று எத்தனையோ நடந்த போதும் அவனிடம் அவர் நல்லத் தந்தையாக மட்டுமே இதுவரை
நடந்துக் கொண்டுள்ளார். அப்படிப்பட்ட அவரிடம் நேரில் எதிர்த்துப் பேச தைரியம்
இல்லை என்று சொல்வதை விட விருப்பம் இல்லை உதித்துக்கு.
வேறு ஒருத்தியோடு வாழ்வை அவர் இணைத்துக்கொண்டாலும் அவரின் சொத்துகள், தொழில்கள் எல்லாவற்றிலும் பிள்ளையென தன்னையுமே
முன்னிறுத்தியவர்... பிஸ்னெஸ் இக்கெட்டில் தனக்கு பின்னால் இருந்து தூக்கி நிறுத்துபவர்
அவர்தானே...
முகில் அதியனின் வாரிசு என்ற செல்வாக்கு தரும் மதிப்பை முற்றிலுமாக
அனுபவித்துக் கொண்டிருப்பவன் தானே உதித்.... அப்படிப்பட்ட தந்தையின் முகத்துக்கு
நேராகக் கேள்வி கேட்க அவனால் முடியவில்லை.
வெளியில் செல்ல முயன்றவன் தனது கோபத்தை கண்டு, தனக்குக் கட்டுப்பட்டு தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்த
இரண்டாவது மகனிடம்,
“என்ன சொன்ன...? வீட்டுக்கு சம்மந்தம் இல்லாதவங்களா..?
யாரைச் சொன்ன வண்ணனையா...?
உன் அம்மா உன்கிட்ட என்ன அளந்து விட்டுருக்கானு நான் கேட்க மாட்டேன்,
அவளை வச்சுக்கிட்டே இத்தனை காலம் உனக்கு சொல்லாத உண்மையை இப்போ சொல்றேன்
நல்லாக் கேட்டுக்கோ...
இதோ நிக்கிறாளே உன் அம்மா.... அவள் பொறந்து வளர்ந்த வீடு இதுவா
இருக்கலாம்,
இதோ படுத்து இருக்காங்களே உன் பாட்டி, உனக்கு வெவரம் தெரிஞ்சு இந்த வீட்டு நிர்வாகத்தை கட்டிக் காப்பாத்துறது இவங்களா இருக்கலாம்...
ஆனா இந்த வீடு வண்ணனோட வீடு, உன்பாட்டிக் கூடப்பிறந்த அக்கா கனகவல்லியின் வீடு... கனகவல்லிக்குப் பிறகு அவரின் மகள் துவாரகா வீடு...
என்னோட முதல் வொய்ப் துவாரகாவுக்குப் பிறகு எங்களோட மகன் வண்ண முகிலின் வீடு இது.... இப்போ புரிஞ்சதா....? இந்த வீட்டுக்கு சம்மந்தம் இல்லாத ஆள் யாருன்னு...?” என்றவர் கோபமுடன் இஷானியை பார்த்துக்கொண்டே...
“இத்தனைக்குப் பிறகும் இங்க உரிமையாய் இஷானியை வர விடுறதுக்கு காரணம்
இதோ படுக்கையில் இருக்காங்களே உன் பாட்டி இவங்க பெத்த மகள் இவள்ன்ற காரணத்துனால
தான்..” என்றார்.
“அம்மா...” என்று அதிர்ந்து இஷானியை அழைத்தான் உதித் முகில்,
கல்லூரியில் முதலாம் ஆண்டில் உதித் படித்துக்கொண்டிருந்த போது திடீரென
யாரோ ஒரு வண்ணனை தனது மூத்தமகனென ‘முகில் அதியன்’ பேட்டியில் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்ததை
ஊடகத்தில் கண்டவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை,
டெல்லியில் நடந்த உலகத் தொழிலதிபர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளப் போன
தனது தந்தை... அருகில் அவரின் மகன் என்று வண்ண முகிலை நிறுத்தி அறிமுகப்படுத்தியதை
மும்பையில் தனது வீட்டு தொலைக்காட்சியில் பார்த்த உதித் கோபத்தில் அருகில்
டீபாயின் மீதிருந்த பேப்பர் வெயிட்டரை எடுத்து விட்டெறிந்து டிவியை உடைத்தான்.
இஷானியோ இதுவரை மிகவும் அன்புள்ள மனைவியாக நடந்து கணவனை தக்க வைத்துக்கொண்டிருந்தாக
நினைத்திருந்தவளும் பேட்டியைப் பார்த்து அதிர்ந்துபோனாள். மகனின் கோபத்தை கண்டவள்
அவனை தன்னுடன் இறுக்கிப் பிடிக்க நினைத்தாள்.
ஏற்கனவே குறுக்குப் புத்தியும், கயமையும் நிறைந்தவள் தான் இஷானி.., அதனை
வெளிப்படுத்தாது அடக்கி இத்தனை நாள் நல்லவளாக நடித்துக் கொண்டிருந்தாள்.
இப்பொழுது கை நழுவிப் போகும் முன் கணவனை இறுக்கிப் பிடிக்க மகனையே
துருப்புச் சீட்டாக பற்றிக்கொள்ள நினைத்து தனது கைப்பிடிக்குள் மகனை கட்டிபோட
வஞ்சகமாய் திரித்து பல விஷயங்களை கோபமுடன் உதித்துடன் சொல்லி வைத்திருந்தாள்.
அப்பாவும் மகனும் தன்னால் முகம் திருப்பிக்கொண்டு மனம் விட்டுப் பேசாமல் போவது இஷானிக்கு இன்னும்
வசதியாய்ப் போனது.
ஆரம்பத்தில் மகனிடம் உண்மையை முகில் சொல்லிவிடுவாரோ.... என்று
தயங்கியவள் அவ்வாறாக எதுவும் அவர் சொல்லாமல் விட்டதுக்குக் காரணம் மகனின் மீதிருந்த அவரின் பாசம் எனப் புரிந்து நிம்மதிக்
கொண்டாள்.
இத்தனை நாள் உண்மையைச் சொல்லாது அமைதிக் காத்த கணவன். இனிமேலா சொல்லப்
போகிறார், உதித்தும் தந்தையோடு பேசுவதில்லையே... என்று ஆசுவாசம் கொண்டிருந்தாள்,
இன்று இப்படி பட்டென உண்மையைப் போட்டு உடைக்கவும் மகனிடம் என்ன சொல்லிச் சமாலிக்க
என்றுப் புரியாமல் கையைப் பிசைந்துக்கொண்டு நின்றுவிட்டாள் இஷானி.
தனது அம்மா, அப்பா சொன்னதுக்கு மறுப்புச் சொல்லமுடியாமல் கைகளை பிசைந்துக்கொண்டு
நிற்பதை கண்டு, தந்தை சொல்வது உண்மை என்று தெரிந்ததால் சோர்ந்துப் போய் அங்கிருந்த
இருக்கையில் அமர்ந்தான்.
மகனின் சோர்வைக் கண்ட முகில், “உன்னையக் கஷ்டப்படுத்தணும்னு இந்த
உண்மையைச் சொல்லலை, வண்ணனை மனசால உன் அண்ணன்னு நீ ஏத்துக்கிடணும்னு நினைச்சுத்தான்
இப்போ இந்த உண்மையைச் சொன்னேன்.
நீ பிறந்ததில் இருந்து இப்போது வரை என்னோட மகனா... மதிப்பா... எல்லா
வசதிகளோடும் வளர்த்து நல்ல தகப்பனா உனக்கு இருந்திருக்கேன்.
ஆனா வண்ணன், அவனை அவனே காப்பாத்திக்கிட பக்குவமும் மெச்சூரிட்டுயும்
வந்துருச்சுன்ற கான்பிடெண்டு எனக்கு வரும் வரை, யாரோவா அனாதையா விட்டிருந்தேன். அவனோட
ஸ்கூல் படிப்பு முடியும் வரை அனாதையாத் தான்
நான் வளரவிட்டேன்.... என்னோட பிஸ்னெஸ் டென்ஷனில் அவனை பின்னாடியே போய் காப்பாத்திக்கிட்டு
இருக்க முடியாத என்னோட கையாலாகாதத் தனத்தால அனாதையா விட்டு வச்சிருந்தேன்.
இதோ... இப்போ சிங்கமாட்டம் வளர்ந்து நிக்கிறான், நீயும் அவனும் சேர்ந்து
தொழிலில் நின்னா நம்மை யாரும் அசைச்சுக்க முடியாது...
லாரா விஷயத்துல உன்னைய சிக்க வைக்க நம்ம தொழில் எதிரிங்க உனக்கு எதிரா
பேச ஆரம்பிச்சிருக்காங்க... உன்னை மாட்டிவிட ஏதாவது பொருத்தமான துப்பை அவங்க கண்டுப்
பிடிச்சிட்டா உன்னய கம்பி என்ன வச்சு நம்ம குடும்பப் பேருக்கு களங்கம்
பண்ணிடுவாங்க...,
நீ குற்றவாளின்னு முடிவாகிட்டா உன் பொறுப்பில் இருக்கிற கம்பெனியோட
மார்கெட் வேல்யூ மட்டும் இல்லாம முகில் குரூப்பின் எல்லா ஷேர்ஸ் வேல்யுவும் டவுனாகி
பிஸ்னஸ்ல பெரிய சரிவு வந்துடும்” என்று சொல்லி முடிக்கும் முன்
“அப்பா... நான் பண்ணலைப்பா... லாராவுக்கு என்ன ஆச்சு எங்க போனானே
எனக்குத் தெரியாதுப்பா...” என்றான்.
நீ சொல்றதை உண்மைன்னு நம்புறேன்... ஆனா நடந்தது என்னெனு தெரிஞ்சாதான்
உன்னையைக் காப்பாத்த முடியும் உதித். அதேபோல வெளியாட்கள் கிட்ட உன்னை காப்பாத்துற
வேலையை கொடுத்தாலும் எதிரிங்க அவங்களையும் விலைக்கு வாங்க சான்ஸ் இருக்கு,
அதனால வண்ணனை தான் லாராவுக்கு என்ன ஆச்சு என்னெனு கண்டுபிடிக்க கூப்பிட்டு
இருக்கேன், நீ அவன்கூட கோவாப்ரேட் பண்ணனும் ” என்றார்.
******
மெரீனா கடற்கரையில் மண்ணில் கால் புதைய தோழிகள் இருவரும் மாலை முடிந்து
இரவு தொடங்கும் நேரம் நடந்துக்கொண்டிருந்தனர்,
“உண்மையாவே மொத்தமா எல்லாத்தையும் விட்டுட்டு கிளம்பி வந்துட்டயாடி...
அடுத்து என்ன பண்ணப் போற...?’
பேசாம என்னையப்போல ஆக்டிங் டிரை பண்ணிப் பார்க்குறயா...? உனக்கு
சான்ஸ் கிடைச்சா நிச்சயம் பெரிய இடத்துக்குப் போயிடுவ.
உன் ஸ்டெக்சரும், ஃபேஸ்கட்டும் ரசிகர் பட்டாளம் அல்லும், அவ்வளவு
எடுப்பா இருக்க. எல்லா கேரக்டருக்கும் பொருந்துவ... ஆனா முதல் தடவை கால்சீட் கிடைக்க படாத
பாடு படணும்” என்றவளிடம்.
“பிறகு எப்படி வகுலா சீரியலில் நுழைய உனக்கு சான்ஸ் கிடைச்சது...?”
“அதுக்கு காண்டாக்ட் நிறைய வேணும் டால்... பார்ட்டி பப் எல்லாம் போய்
கொஞ்சமா ஆட்களை பழக்கப்படுத்திக்கிட்டேன், மாடலிங் லைனில் இருக்கிறதால இதெல்லாம்
பாசிபுல் ஆச்சு. ஆனாலும் பேர் சொல்லக்கூடிய அளவில் எந்த கேரக்டரும் இன்னும் கிடைக்கலை”
வகுலா பேசப் பேச நட்சத்திராவின் மூளைக்குள் பல யோசனைகள், ‘என்னால திரையில்
தலைகாட்ட முடியாது. என்னையத் தேடி அலைபவர்களின் கண்களில் மீடியா மூலம்
மாட்டிக்கொள்ள நான் என்ன தத்தியா...?
ஆனா பெரிய இடத்துப் பசங்க இருக்கிற இடத்தில தான் உதித்தை தேட
ஆரம்பிக்கணும், அதனால இப்போதைக்கு இவளிடம் ஓகே சொல்லி எனக்கும் மீடியாக்காரங்க
காண்டாக்ட் வேணும்னு சொல்லி பப், பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போகச் சொல்லலாம்’ என்று
தனக்குள் முடிவெடுத்தவள்.
“ம்... ஓகே வகுலா, எனக்கும் என்ன பண்ணனு ஒண்ணுமே தெரியலை... நீ சொல்றது போல முதலில் டிரை பண்ணிப்
பார்கிறேன், ஆனா இங்க உன்னையத்தவிற வேற யாரையும் எனக்குத் தெரியாதே... எனக்கு
காண்டாக்ட் கிடைக்க நீதான் ஹெல்ப் பண்ணனும்” என்றதும்.
“சூப்பர் டால், எனக்கும் பார்டிக்கும், பப்புக்கும் போகும் போது கூட
கம்பெனிக்கு ஒரு ஃப்ரெண்ட் இருந்தா நல்லா இருக்கும்னு தோணும், இனி நான் போற
இடத்துக்கு எல்லாம் நாம சேர்ந்து போலாம்” எனச் சொல்லியவள் கொஞ்சம் தயக்கத்துடன்,
“உன்னை எனக்கு நட்சத்திரான்ற பேர்ல திடீர்னு கூப்பிட வரலை தாரா...
அப்படி என்ன தான் ஆச்சு...? ஊரைவிட்டு உன் அடையாளம் எல்லாம் விட்டு இப்படி வந்து
இருக்கணும்னு என்ன அவசியம்..?
ஆரம்பத்துல இருந்தே எங்க எல்லாரையும் விட நீ லக்சூரியசான திங்க்ஸ்,
ஜூவல்ஸ், கையில பணம்னு திருஞ்சாலும் இப்போ வரை உன் ஃபேமிலியை பத்தி எந்த விஷயமும்
ஷேர் பண்ணாம கொஞ்சம் ஒதுங்கியே தான் இருந்த.
உன்கிட்ட குளோசா இருந்தது நம்ம பார்ட்னர் ‘நட்சத்திரா’ மட்டும்
தான்... இப்போ அவள் பேரை நீயே குத்தகைக்கு எடுத்துக்கிட்டதா என்கிட்டே சொல்லுற...
நான்லாம் எத்தனை தடவை உன்கூட குளோசா பழக டிரை பண்ணி இருக்கேன்
தெரியுமா...? ஆனா நீ கூடப் படிக்கிற யார்கூடயுமே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல நெருங்கிப்
பழகுனதே இல்லை.
முதலில் நான் கூட, நீ ஹெட்வெயிட்டாலத்தான் அப்படி இருக்கியோனு நினைச்சேன்.
ஆனா காலேஜ் ப்ராஜெக்ட் பண்ணும் போது உங்க ரெண்டுபேரோட நானும் பார்ட்னரா ஜாயின்
பண்ணின அந்த லாஸ்ட திரீ மந்த்ஸ் தான் நீ எவ்வளவு ஸ்வீட்டுன்னு எனக்கு தெரிஞ்சது.
எதோ ஒரு காரணத்துக்காகத்தான் யார் கூடையும் ஒட்டாம தனியா இருக்கேனு
நினச்சேன். இப்போ என்னடானா எதுவுமே இல்லாம அநாதை போல வந்து நிக்கிறேன்னு நீ
சொல்லும்போது வருத்தமா இருக்கு. அப்படி என்னதான் டி உனக்குப் பிரச்சனை...?”
எனக்கேட்டாள் வகுலா.
----தொடரும்----
No comments:
Post a Comment