இனிக்கும் விஷம் (தீபாஸ்)
அத்தியாயம் 05
வகுலா தன்னை பற்றி கேட்டதும், எனக்கு பிரச்சனையே என்னை பெத்த
அம்மாவாலனு சொன்னா நம்புவாளா..? என் அம்மா இவங்கனு என்னால அடையாளம் காட்டா
முடியுமா....?
அதோடு யாரும் நெருங்க முடியாத பெரிய இடத்தில உள்ள என்னைய பெத்து
எடுத்தவ... நான் அவங்க பிள்ளைன்னு உலகத்துக்கு தெரியக் கூடாதுன்னு நினைகிராங்க.
தெரியப்படுத்தகூடாதுன்னு என்னைய மெரட்துராங்க...
உலகத்தோட பார்வையில் படாம ஒளிஞ்சு வாழச்சொல்லி கட்டாயபடுத்தப்படுறேனு சொன்னா
நம்புவாளா...?’ என்று நினைத்தபடி பெருமூச்சு விட்டவள்.
“ஸாரி வகுலா..., இப்போதைக்கு என்னால
நீ கேட்டதுக்கு பதில் சொல்ல முடியாது... நிச்சயமா ஒரு நாள் உன்கிட்ட என்னையப்
பத்திய உண்மையை சொல்லுவேன்... இங்க நான் உயிரைக் காப்பாத்துறதுக்கு தப்பிச்சு ஓடி
வந்துருக்கேன்.
என்னையத் தேடிக்கிட்டு இருக்கிறவங்கக்கிட்ட இருந்து தப்பிக்கத்தான்
நட்சத்திரான்ற பேர்ல சுத்திக்கிட்டு இருக்கேன்....” என்றவளை அதிர்ந்து
பார்த்தால்..
“பிளீஸ், நட்சத்திராவா என்னைய டிரீட் பண்ணு... அப்படிக் கூப்பிட நீ
பயப்பட வேண்டாம்” என்றவளை இன்னும் பயத்தோடு வகுலா பார்க்க...
“ஏய்.. அப்படி பயந்துப் பார்க்காத... நான் ஒன்னும் கொலை, கொல்லை அடிச்சிட்டு
தலைமறைவா இல்ல.. என்னையப் பார்த்தா உனக்கு அக்யூஸ்ட் போலவா தெரியுது...!?”
என்றவளிடம்.
“நீ கொடுக்கிற பில்டப்ப பார்க்குறப்போ பயமா இருக்குது டால்... எதுக்காக
இவ்வளவு தூரம் உனக்கு பழக்கமே இல்லாத சென்னைக்கு மறைஞ்சு இருக்க...? உன் வீட்டுல
உள்ளவங்க உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்களா...?” என்றதும்,
‘இவள் திரும்பத் திரும்ப என் பொறப்பையே நோன்றாளே... இதுக்காகத்தானே
நான் யார்கூடயும் குளோசா பழகுறது இல்ல..’ என்று தனக்குள் புலம்பிக்கொண்டவள் அதை
தவிர்த்துவிட்டு,
“முகில் அதியன் கேள்விப்பட்டு இருப்பேனு நினைக்கிறேன்... பிஸ்னெஸ் மேகசீன்ல
கார்பரேட் செக்ட்டார்ஸ்ல, அடிக்கடி அவரோட பேர் அடிபட்டுக்கிட்டு இருக்குமே...
மீடியால கூட முக்கிய தொழிலதிபர்னு அவரை காமிப்பாங்க பார்த்திருக்கியா...? அவரோட
மகன் உதித் முகில் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கியா....?”
“என்னடி இப்படிக் கேட்டுட்ட, அவரப் பற்றித் தெரியாம இருக்குமா...? முகில்
குரூப் கால்பதிக்காத பிஸ்னெஸ் ஏது...? இங்க கூட டெலி கம்யூனிகேஷன்ல அடுத்து அவங்க
தான் பெரிய அளவில் சைன் பண்ணுவாங்கனு பேச்சு அடிபடுது..
நீ அவங்க கம்பெனி ஒண்ணுல வேலைக்கு ஜாயின் பண்ணப் போறியா...? அப்படி முகில்
குரூப்ல வேலை கிடைச்சிட்டா லைஃப்ல செட்டிலாகிடலாம்...
ஆமா... முகில் குரூப்போட அடுத்த வாரிசு உதித் முகிலனுக்கு
என்கேஜ்மென்ட் ரகசியமா நடந்ததாக் கூட சோசியல் மீடியால நியூஸ் போய்கிட்டு
இருந்ததே... அந்த உதித்தையா கேக்குற...?
மும்பை மாடல் அழகிகக்கூட நிக்கிறது போலவும்..., மும்பை கிரிகெட் டீமோட
ஸ்பான்சர்னு, மேச் அப்போ ஆடிட்டோரியத்துல இருக்கிற அந்த மூஞ்சியை அடிக்கடி டிவியில
காட்டுவாங்களே... ஆளும் செம்ம ஹேன்சம்மா இருப்பான்... ரொம்ப யங்காண பணக்காரன்...
எவளுக்கு குடுத்து வச்சிருக்கோ...? ஆமா... அவனை எதுக்குத் தெரியுமானு கேட்ட..?”
‘உதித் பற்றி தனக்குத் தெரியும், உலக ஞானம் எனக்கும் இருக்குது...
பார்த்துட்டா புட்டுப் புட்டு வச்சென்ல என்று தனக்குள் சபாஷ் போட்டுகுக் கொண்டாள்
வகுலா.
“அந்த உதித்தைத் தேடித்தான் இங்க வந்துருக்கேன். அவர எப்படியாவது கண்டுப்பிடிச்சுப்
பேசணும்... இப்போ சென்னையில தான்
இருக்காரோன்ற கெஸ் இருக்கு... அவரைப் ரகசியமா பார்க்கணும்... அவர்கிட்ட இருந்து ஒரு
உண்மையைத் தெரிஞ்சுக்கிடணும்” என்றதும்.
“ஏய்... ஜோக் அடிக்காத... அவங்க எல்லாம் எவ்வளவு பெரிய ஆளுங்க...
நம்மளால பக்கத்துல கூட நெருங்க முடியாது...”
“அவங்களும் மனுஷங்க தானே... உதித்தோட அம்மாவழி பாட்டி... அதாவது
சந்திரிக்கா சமரை கல்யாணம் பண்ணும் முன்னாடி, டைவர்ஸ் பண்ணிய இஷானி முகிலோட அம்மா
வீட்டுல தான் உதித் இப்போ இருக்கணும், அவங்க வீடு எங்க இருக்குனு உனக்குத் தெரியுமா...?
“டால், உண்மையாவே உதித் முகிலை பார்த்துப் பேசணும்னு நினைக்கிறயா...?
உன்கூட அவங்க பேசணும்னா நீ அவங்களுக்கு தெரிஞ்சவங்களா இருக்கணும்... உண்மையைச் சொல்லு
நீ யாரு...?” சந்தேகம் தொனிக்கும் குரலில் பேசியதும்
“வகுலா நீ யோசிக்கிறது போல எல்லாம் இல்ல...” என்று எதுவோ குண்டக்க
மண்டக்க அவள் யோசிக்கிறாள் எனப் புரிந்து அவளின் எண்ணத்தைத் தடுக்க அவ்வாறு
சொன்னதும்,
“ஆமா.. என்ன இல்ல...? நான் எப்படி நினைக்கிறேனு உன்கிட்ட சொல்லவே
இல்லையே.. பிறகு எப்படி அப்படி இல்லன்னு நீ சொல்லலாம்...?”
“ஏய்... நீ ஒருமாதிரி.... இழுத்ததுல குண்டக்க மடக்க யோசிச்சியோனு பீல்
ஆச்சு...” என்றதும்...
“உன்னையப் பத்தி எதையோ ஒன்னை நான் கண்டுபிடிச்சிட்டேனு பயப்படுரியா
டால்...?” என்றதும்.
‘இவள் நம்மகிட்ட போட்டு வாங்க டிரைப் பண்ணுறாளோ...?’ என்று யோசிக்கும்
போதே..
“அப்போ உதித், தெ கிரேட் பிஸ்னெஸ் கிங் முகில் அத்தியனை எதுத்து அவனோட
காதலிய கல்யாணம் பண்ண நிச்சயம் பண்ணிகிட்டான்.... அவப் பேரு கூட ‘லாரா சந்த்’னு நினைக்கிறேன்.
அந்த லாரா சந்த் பற்றிய குடும்பப் பின்னணி பற்றி எந்த ஆதாரமும் கிடைக்கலைனு நியூஸ்...
அதுக்கும் உனக்கும் எதுவும் தொடர்பு
இருக்கா... டால். உன் பேருல உள்ள பின்னாடிப் பேரு கூட “சந்த்” தானே?”
‘ஹய்யோ இவள் வேற தூண்டித் துருவிக்கிட்டே இருக்காளே... சொல்ற
நிலமையிலேயா நான் இருக்கேன்...’ மனதிற்குள் புலம்பியபடி “இல்...இல்ல...” என்று
பயத்துடன் சொன்னதும்.
“அப்போ.... நீ எதுக்கு உதித்த பார்க்க நினைக்கிறேன்ற ரீசனை என்கிட்ட
சொல்ல மாட்ட அப்படித்தானே...? சரி விடு...
நீ சொல்றதைப் போல இஷானி முகில் பிறந்து வளர்ந்த வீடு தமிழ்நாட்டுல அதுவும்
சென்னையில பணக்காரங்க ஏரியானு சொல்ற அடையார் பக்கம்னு கேள்விப் பட்டு இருக்கேன்.
ஏரியா பேர் கூட போர்ட் கிளப்னு நினைக்கிறேன். இப்போவும் இஷானி
அடிக்கடி அவங்க அம்மா பங்களாவுக்கு வந்து போவாங்கனு சொல்லுவாங்க. ஆனா அந்த ஏரியா
பக்கம் நான் போனதில்ல... எங்க இருக்கு என்னென்னு விசாரிச்சிட்டு சொல்றேன்” என்றபோது
வகுலாவின் மொபைல் அழைத்தது... அழைக்கும் சத்தத்திலேயே முகம் மலர்ந்தது
அவளுக்கு..
“டால், நான் சொன்னேன்ல என் ஆளு மாதேஷ்னு... அவன் தான்
கூப்பிடுறான். வா உன்னைய ஹாஸ்டலில் டிராப் பண்ணிட்டு அவனைப் பார்க்க கிளம்புறேன்”
எனச்சொல்லி மொபைலில் பேசிக்கொண்டே முன்னால் அவள் நடக்க ‘அடுத்து என்ன பண்ண...?’
என்ற யோசனையுடன் வகுலாவைப் பின் தொடர்ந்தாள் நட்சத்திரா...
******
மறுநாள் காலை தனது லக்சூரியஸ் டூபிஹைச் பங்களாவில் படுக்கை அறையில்
சுகமாய் உறங்கிகொண்டிருந்த வண்ணனை அலாரத்தின் ஓசை உசுப்பிவிட்டது...
“சோம்பல் முறித்தபடி எழுந்தவனுக்கு‘ அந்த நேரத்திலும் நேற்றைய நிகழ்வே
மண்டையைக் குடைந்தது...
‘உதித் என்ன முடிவெடுப்பான்...? என்னையத் தேடி வருவானா...?
அல்லது இனியும் எதிரியாய் என்னைய நினச்சுக்கிட்டு
சுத்திக்கிட்டு இருப்பானா...?
ஆக்ஸ்வெல்லா நான் தானே அவங்க எல்லார் மேலேயும் கோபப்படணும்... ஆனா நான்
அவங்களுக்கு அப்போசிட்டா பொறுமையா இருக்கேனே..’ என்று எண்ணிக்கொண்டே காலை கடனை
முடித்த நேரம் அங்கு அவனை சந்திக்க உதித் வந்து சேர்ந்தான்.
அவன் வருவான் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், ஒருவேளை வராமல் எதிரியாய்
முறைத்துக்கொண்டே நின்றால்...?’ என்ற வண்ணனின் இருவேறு மனநிலைக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் வகையில் உதித் வந்தது சேர்ந்ததால் சட்டென ஒரு உற்சாகம் ஊற்றெடுக்க
“வா... வா.. உதித்...” என்று வரவேற்கும் போதே ‘இப்படி நான் உரிமையா
பேசுறதுல அவனுக்கு உடன்பாடு இருக்கோ... என்னவோ...?’ என்ற எண்ணம் தோற்றியதும்
சட்டென
“ஸாரி... ஸாரி... உதித் நான் பாட்டுக்கு உரிமையா பேர் சொல்லி வா போனு
பேசிட்டேன்” என்று கம்பீரமான குரலில் கூறிய வண்ணனிடம்,
“எனக்கு மூத்தவன் தானே நீ... அப்படிக் கூப்பிட்டதில தப்பு இல்ல...” என்ற
வார்த்தையை உள்வாங்கிய வண்ணனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
“அப்போ உன்னோட பெரியவ நானுன்னு தெரிஞ்சும்... நீ, வா, போ..னு என்னைப்
பேசுறேள்ல.. அதில எனக்கும் எந்த அப்ஜெக்ஷனும் இல்ல”
வண்ணனின் வார்த்தையை உள்வாங்கிய உதித்தின் முகத்திலும் இருந்த
இறுக்கம் வடிய புன்னகைப் பூத்தது.
அதைகண்ட வண்ணனுக்கோ... ‘அவன் இயல்பாகிட்டான்.., இனி இருவரும் இலகுவாக
பேசவேண்டியதை பேச ஆரம்பிக்கலாம்’ என்ற ஆசுவாசம் உண்டானதால்
“”உட்காரு உதித், குடிக்க என்ன கொண்டுவரச் சொல்ல...?”
“பிளாக் காபி” என்று சுருக்கமாய்ச் சொன்னதும்,
அங்கு வந்த சமையல்காரர் அஞ்சப்பரிடம், “ரெண்டுபேருக்கும் பிளாக் காபி
கொண்டுவாங்க” எனச் சொல்லிவிட்டு, “அப்போ லாரா கேசை நான் ஹேண்டில் பண்ணலாம்
தானே...?” என்றதும்
“ம்... அதுக்காகத் தான் உன்னையப் பார்க்க வந்தேன். ஆனா அதுக்கு
முன்னாடி அப்பா உன்னைப் பத்தி சொன்ன விஷயம் என்ன ரொம்ப டிஸ்டப் பண்ணுச்சு.
நீயும் அவரோட பையன் தான்...? ஆனா உன்னைய அனாதை ஆஸ்ரமத்தில்
வளரவிட்டுருக்கார்...
உன் இடத்தில் நான் இருந்திருந்தா... என்னால உன்னையப் போல எந்த கோபமும்
இல்லாம கேஸ்வலா நீ பேசுறது போல பேச முடியாது...
யோசிச்சுப் பார்த்தா என்னையவிட அதிகம் பாதிக்கப்பட்டவன் நீதானு இப்போ
புரியுது. ஆனா ஏன் இப்படி...? எனக்கு கொஞ்சம் உன்னையபத்தி சொல்ல முடியுமா...?
அதாவது நீ சின்ன வயசுல ஆசிரமத்தில் இருந்தது.. படிச்சது, வளர்ந்தது,
எப்போ உனக்கு நம்ம அப்பா இருக்காருன்ற விஷயம் தெரிஞ்சது...? என்ன ஆச்சு உன்
லைஃப்லனு தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன்.
அதுக்குப் பிறகு லாரா டீடைல்ஸ் சொல்றேன்..?” என்ற உதித்திடம்.
“பொறந்ததில் இருந்து அனாதையா ஆஸ்ரமத்தில் வளர்ந்தவன். வெவரம்
தெரிஞ்சப் பிறகு உறவுன்னு சொல்லிட்டு அதுவும் என்னையப் படிக்க ஸ்பான்சர் பண்ணிய நல்லவர்,
கடவுளுக்கு சமமானவர்னு மரியாதை வச்சிருக்கவர் மகன்னு உறவு கொண்டாதினார். உறவுகளோட
அருமை... அது இல்லாம வளர்ந்த எனக்கு புரிஞ்சதால சட்டுன்னு அவரை ஏத்துக்கிட்டேன்.
மறுக்க முடியலை..
என்னோட எட்டு வயசுவரை, கிடைக்குறதை சாப்பிட்டு... ஏதோ படிச்சுக்கிட்டு...
ரொம்பவே ஏக்கத்தோட... எனக்கும் யாருமே இல்லைன்ற எண்ணத்தோடதான் வளர்ந்தேன்.
ஆனா என்னோட ஒன்பதாவது வயசுல ஒரு பெரிய பணக்காரர் எனக்குத் தேவையான
எல்லாம் தத்தெடுத்து ஸ்பான்சர்ன்ற பேர்ல பண்றதா சொல்லி நல்லச் சாப்பாடு, நல்ல
ஸ்கூல், நல்ல டிரஸ் எல்லாம் கொடுத்தாரு...
என்னால என் கூட இருக்கிறவங்களை விட்டுட்டு இதை எல்லாம் தனியா
அனுபவிக்க முடியலை...
என்கூட இருக்கிறவங்களுக்கும் தரமான கல்வி, உணவு, உடை தந்தாத்தான்
நானும் இந்த வசதியை அக்சப்ட் பண்ணுவேன்... இல்லைன்னா எனக்கும் எதுவும் வேணாம்னு ஸ்பான்சர்
பண்றவர்கிட்ட சொல்லச்சொல்லி ஃபார்கிட்ட சொன்னேன்.
கேட்டும் மத்தவங்களுக்கு அவரால் கொடுக்க முடியாமப் போனா.... எனக்கு
செலவு செய்ற அந்தத் தொகையை எங்க எல்லோருக்கும் பகிர்ந்து கொடுங்க... சின்னதா
கிடைச்சாக்கூட போதும்,
அப்படி எல்லாருக்கும் பகிர்ந்து உதவ முடியாட்டி மொத்தத்துக்கும் வேணாம்.... கூட இருக்கிறவங்களோட ஏக்கம் என்னை
நிம்மதியா தனியா இதை ஏத்துக்க விடலைனு சொல்ல நினைச்சேன்.
ஆனா நான் கேட்த்தை ஃபாதர் ஸ்பான்சர்கிட்ட சொன்னதும், என் கூட இருக்கிற எல்லோருக்கும் எனக்கு
இணையான கவனிப்பு கிடைச்சது.
நான் கேட்டேன்ற ஒரே காரணத்துக்காக என்கூட இருந்த இருபது
பிள்ளைகளுக்கும் உதவியதைப் பார்த்து, தெய்வத்துக்கு நிகரான பக்தி அந்த ஸ்பான்சர் மேல
வந்துருச்சு...
ஹய் ஸ்கூல் படிப்புக்கு இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் படிக்கின்ற போர்டிங்
ஸ்கூலில் அவரால நான் சேர்க்கப்பட்டேன். சிம்லாவில் இருக்கிற ஸ்கூலில் சிறந்த கல்வி... பல நாடுகளில் இருந்தது வந்து
படிக்கும் மாணவர்களின் நட்பும் கிடைச்சது,
அனாதையான எனக்கு ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்துச் செய்யும்
ஸ்பான்சர் மேல நன்றிக்கடன் வலுத்துச்சு.
லண்டன் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில பிஸ்னெஸ் மேனேஜ்மென்ட் படிக்க
சேர்ந்தப்போ தான் லைட்டா அவர் எனக்கு வெறும் ஸ்பான்சர் மட்டும் இல்லைன்னுற எண்ணம்
வந்தது...
காரணம், அப்போதான் அவரை நேரில் பார்த்தேன். என்னோட ஸ்பான்சர் தொழிலதிபதி
முகில் அதியன் வந்து என்னையப் பார்த்துப் பேசினபோது ‘அப்பா’ன்னு கூப்பிடச் சொன்னபோது....
அவர் யாரோ எனக்கு ரெத்தம் சம்மந்தம் இல்லாத நபர் இல்லைன்ற எண்ணம் வந்தது...
எதுக்கு...? ஏன்...? அப்படின்ற கேள்வியும் வந்தாது.... படிப்பு
முடிஞ்சக் கையேடு என்னைய அவரின் ஒரு கம்பெனியில் எம்.டி சீட்டில் உட்காரவச்சதோடு,
உலக தொழிலதிபர்கள் மாநாட்டில் நிருபர்கள் முன்னாடி நிக்கவச்சு அவரோட மூத்த மகன்னு அறிவிச்சப்போ
வந்த ஃபீலிங் இருக்கே.... அதை ஹேண்டில் பண்ண ரொம்ப கஷ்டமா இருந்தது இப்பவும்
நினைவில் இருக்கு. .
அப்பாவா இல்லாம ஸ்பான்சரா இருந்தப்போ கடவுளா தெரிஞ்சவர், அப்பான்னு
தெரிஞ்சப் பிறகு அனாதையா என்னைய எதுக்கு விட்டார் அப்படின்ற கேள்வியும், சரியான
ரீசன் தெரிஞ்சே ஆகணும்ன்ற வெரியும் வந்துச்சு...
ஆனா ஃபாதரும், அப்பாவும் என்னோட பாதுகாப்புக்கும் நல்லதுக்கும் தான்
அப்படிப் பண்ணியதா சொன்னப்போ மொட்டையா அப்படிச் சொன்னா என்ன அர்த்தம்ன்ற ஆதங்கம்
வந்துச்சு...
அப்போ அவரோட மனைவியா ன் உன்னோட
அம்மா இஷானி இருந்தாங்க... இஷாநிதான் என்னோட அம்மாவானு கேட்டப்போ, இல்லைன்னு
சொல்லிட்டாங்க..
உடனே வெளியில் சொல்ல முடியாத உறவால உண்டான பிள்ளையா நான்...? அப்படின்ற
கேள்வி முதலில் எனக்குள்ள வந்தாலும் உடனே அது அபத்தமாப் பட்டுடுச்சு....
அப்படி இருந்தா மூத்த மகன்னு பத்திரிகையில் பேட்டி கொடுத்துருக்க
மாட்டாங்கனு தோனுச்சு... ஆனாலும் அம்மா பத்திக் கேட்டதுக்கு எனக்கு சரியான பதில் சொல்ல
ரெடியா இல்ல.. அதுக்குப் பின்னாடி தான் நானே கண்டுபிடிக்கணும்னு இறங்கிட்டேன்.
முகில் அதியனின் முதல் வொய்ப் துவாரஹா இறந்துட்டாங்க அப்படின்ற
விஷயமும்... துவாரஹா இறந்தப்போ சென்னையில் இருந்ததாகவும் நியூஸ் தெரிஞ்சதால சென்னையில்
இருக்க தொழிலை பார்த்துகுறேனு சொல்லி இங்க வந்தேன். இங்க இருந்துதான் என்னோட
டிடைக்டிவ் வேலையை அதுவும் என்னோட அடையாளத்தை தேட என் ஸ்கூல் லைப் ஆரம்பிச்ச
சென்னைக்கே வந்து சேர்ந்தேன்...
இதுல நான் தெரிஞ்சுக்கிட்டது உன் அம்மாவும் என் அம்மாவும் ஒரே
வீட்டில் அதாவது நேத்து நான் வந்திருந்த வெள்ளை மாளிகையில் பிறந்து வளர்ந்தவங்கன்ற
விஷயம் தெரிஞ்சது....
மும்பையில பிறந்துவளர்ந்த நம்ம அப்பா குடும்பம் ஒரு தமிழ் குடும்பம்.
பூர்வீகமான தமிழ் நாட்டில தொழில் தொடங்கணும்னு நினச்ச அப்பா... அவர் படிச்சு
முடிச்ச நேரத்தில் இங்க உள்ள பேக்டரி ஒன்னை விலைக்கு வாங்க வந்துருக்காங்க.
அது துவாரஹா அம்மா, கனகவல்லியோடது. கனகவல்லி மகளுக்கு வரன் பார்த்துகிட்டு இருக்கிற விஷயமும்
தெரியவந்துருக்கு... பேக்டரியை வாங்க வந்த நம்ம அப்பா அதை விட்டுட்டு துவாரஹாவை பொண்ணு
கேட்டுருக்கார். கனகவல்லிக்கும் முகில் அதியனை பிடிச்சுப் போனதால அப்பாவுக்கு
கட்டிகொடுத்து அந்த கம்பெனியையும் சீதனமா கொடுததா தகவல் எனக்கு
கிடைச்சிருக்கு...,
கல்யாணமான ஒரே வருஷத்தில் அவங்களுக்கு குழந்தையும் பொறந்துச்சு... ஊட்டியில
இருக்கிற அவங்க எஸ்டேட்டுக்கு மூணு மாத குழந்தையோடு துவாரஹா ரெஸ்ட் எடுக்க அம்மா
கனகவல்லிக் கூட போயிருக்காங்க,
அங்க ஆக்சிடெண்ட்டாகி அவங்க கார் மலையில் இருந்து உருண்டதாகவும்
துவாரகாவும் அவங்க மூனுமாத ஆண் குழந்தையும், கனகவல்லியும் இறந்துட்டதா தகவல் வந்து
தேடிப் போனப்போ... உடலை மீட்க முடியலைன்னு கேள்விப் பட்டேன்.
ஆனா அந்த மூணு மாதமான இறந்த குழந்தைக்கும் எனக்குமான வயசு ஒரே வயசுன்ற
விஷயம் மட்டுமே இறந்ததா நம்பப்படுற குழந்தை நானா இருக்குமோன்ற கேள்வி எனக்கு
வந்தது...
துவாரஹா கூட ஊட்டியில இருந்தவங்களை விசாரிக்க நினைச்சபோது தான் ஒத்தாசைக்கும்
குழந்தையை கவனிக்க இருந்த செவ்வந்தியை பத்திக் கேள்விப் பட்டேன். அந்த இன்சிட்டென்டுக்குப்
பிறகு செவ்வந்தி காணாம போயிட்டதாகத் தகவல் கிடைச்சது.
பாட்டி கனகவல்லியோட கணவரும் இதேபோல ஒரு ஆக்ஷிட்டேன்டில் துவரஹா
பிறந்து நாலு ஐந்து மாசத்திலேயே இறந்ததாகவும்...
அப்போ கணவன் இறந்த துக்கத்தில் கனகவல்லி உடல்நிலை பாதிக்கப்பட்டதால்
ஊரில் கஷ்ட ஜீவன் நடத்திக்கிட்டு இருந்த வீட்டைவிட்டு காதலிச்சு திருமணம்
செய்துகிட்ட தங்கச்சி அமுதவல்லியை ஒத்தாசையா குழந்தையைக் கவனிக்க வரவச்சிருக்காங்க.
கணவன் இல்லாமப் போய் அந்த கவலையில் உடல்நிலை பாதித்து
இருந்த கனகவல்லி கணவனின் தொழிலை எடுத்து நடத்த உதவிக்கு அமுதவல்லியின் புருஷன்
சண்முகத்தையும் வரவழைச்சு பங்கலாவிளில் கூடவே வச்சிக்கிட்டாங்க.
இங்க பங்களாவுக்கு வந்ததுக்குப் பிறகு தான் அமுதவல்லிக்கும்
சுந்தரத்துக்கும் இஷானி பொறந்திருக்காங்க. துவாரகாவும் இஷானியும் ஒன்னா ஒரே
வீட்டில வளர்ந்தவங்க தான்.
கனகவல்லி இறந்ததால அவங்களோட சொத்துக்களோட கார்டியனாய் தான் அமுதவல்லி இருந்திருக்காங்க. அக்கா பேரனின்
இருபதாவது வயதுக்கு பிறகுதான் அந்த சொத்துகள் அவனுக்குச் சேரணும்னு
எழுதிவச்சிருக்காங்க.
என்னைய மகன்னு அறிவிச்ச என் இருபதாவது வயதில் கனகவல்லியின் சொத்துக்கள்
எல்லாம் என் பேருக்கு வந்துருக்குன்ற விஷயம் கூட இதுவரை ரகசியமாத்தான் அமுதவல்லி
வச்சிருக்காங்க.
உங்க அம்மாவுக்கு கூட உயில் விஷயம் தெரியாமதத்தான் அமுதவல்லி பாட்டி
ரகசியமா வச்சிருக்காங்க. இங்க வந்து ஒவ்வொன்னா தோண்டிப் துருவிப் பார்த்தபோதுதான் இதெல்லாம்
எனக்குத் தெரிஞ்சது,
இதுல நான் எப்படி மூணு மாசமா இருக்கும்போது ஆக்சிட்டேன்டில் தப்பிச்சு
அநாதை இல்லத்துக்குப் போனேன்... இல்லத்துல இருந்த என்னை என்னோட எட்டாவது வயசுல
எப்படி அப்பா தெரிஞ்சுக்கிட்டு கார்டியனா
வந்தாரு...
இதுபோல பல கேள்விக்கு உன் பாட்டிகிட்ட பதில் இருக்கும். அதை நீயே அமுதவல்லி பாட்டிக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ உதித்...” என்று தன கதையை கூறி முடித்தான் வண்ணன்.
---தொடரும்---
No comments:
Post a Comment