இனிக்கும் விஷம் (தீபாஸ்)
அத்தியாயம் 06
மும்பைக்குச் செல்லும் விமானத்தில், பிஸ்னெஸ்
கிளாஸ் பகுதியில் ஓர் இருக்கையில் அமர்ந்து கண்மூடி பறந்துக்கொண்டிருந்தார் முகில்
அதியன். அவரின் நினைவுகளும் பயணித்துக்கொண்டிருந்தது.
“என் வீட்டுக்கு உதித் வந்துருக்கான்ப்பா, பிரச்னையை நான்
பார்த்துக்கிறேன்” காலையில வண்ணன் மெசேஜ் அனுப்பிவிட்டதை பார்த்த ஆசுவாசத்தில்... பிஸ்னெஸ் பார்க்க உடனே கிளம்பிட்டேன். .உதித்தை லாரா இஸ்யூவில் இருந்து வெளியில
கொண்டுவந்துடுவான்... எல்லாத்தையும் அவன் சரி பண்ணிடுவான்’
வண்ணனை படிக்க வச்சு ஒரு நிலைக்குக் கொண்டு வந்தேன்ற காரணத்தை மட்டும்
வச்சு... அப்பான்ற உறவை நான் வெளிபடுத்தியும்... அந்த உறவுக்கான அங்கீகாரத்தை
கையில வாங்காம அவனுக்குத் தேவையானதை அவனே செய்துக்கிறான்.
அதேநேரம் நான் கேக்குற உதவிகளையும்... கொடுக்கிற வேலைகளையும்
செய்துக்கொடுக்கவும் தயங்குறதில்லை. அவனை நினச்சு சந்தோஷமாகவும் இருக்குது, வண்ணனுக்கு
நியாயம் செய்யவில்லைன்னு துக்கமாகவும் இருக்குதே...
அமுதவல்லி அத்தை ரூமில வச்சு ‘வண்ணனை அங்க இருந்து கிளம்பச்சொல்லி’
உதித் சொன்னதும் எனக்கு கஷ்டமாப் போயிடுச்சு...
உதித்கிட்ட இத்தனை காலமா உண்மையைச் சொல்லாம விட்டுட்டோம்ன்ற குற்றவுணர்வில்.....
துவாரகாவுக்கு இத்தனை நாள் செய்யாத நியாயத்தை செய்ய உண்மையைச் சொன்னேன். அந்த
பங்களா யாரோடதுனு உதித்துக்குப் புரிய வச்சேன்.
வண்ண முகிலின் வீடு இது.... இப்போ புரிஞ்சதா....? இந்த வீட்டுக்கு
சம்மந்தம் இல்லாத ஆள் யாருன்னு...? கேட்டதும் உதித்தோட முகத்தில எம்புட்டு கலக்கம்
உண்டாச்சு...
அப்ப நான் உதித்தை சமாதானப் படுத்துனாலும்... அந்த சிட்டிவேஷனை வண்ணன்தான்
நார்மலாக்க சட்டுன்னு ‘கிளம்புறேன் அப்பா’னு சொன்னான்..
உதித்கிட்ட, ‘வண்ணனும் நீயும் ஒத்துமையா இருக்கணும்’னு சொன்னதும் அவன்
உடைஞ்சு போய் குற்றவாளியாய் இஷானிய கோபமாய் பார்த்து முடிவு எடுக்க முடியாம
தள்ளாடிக்கிட்டு இருந்தான். அவனுக்கு முடிவு எடுக்க அவகாசம் கொடுக்க நெனச்ச வண்ணன்.
“அப்பா நான் கிளம்புறே”னு சொல்லிட்டு எந்த ஈகோவும் பார்க்காம உதித்
முன்னாடி இருக்கிற டீபாயில் விசிடிங் கார்டு வச்சவன் “நீ லாரா கேஸ்ல நான் இறங்கணும்னு
முடிவெடுத்தா.... இதில் இருக்கிற அட்ரஸ் அல்லது மொபைலில் என்னையக் காண்டாக்ட் பண்ணு’ன்னு
சொல்லிட்டு வெளியேறினான்.
உதித்தை சமாதானப்படுத்த நெனச்ச நான் வண்ணனை போகாதனு தடுக்காம
வேடிக்கைத்தானே பார்த்துக்கிட்டு நின்னேன்.... ஆனா அவன் எனக்காகத்தானே எல்லாம்
செய்றான்...துவாரஹாவும் அப்படித்தானே..!
துவாரகாவை கல்யாணம் பண்ணின ரெண்டுவருஷம் வாழ்கை சொர்க்கமாய்
இருந்ததே... புத்தித் தடுமாறிப் போய் இஷானி விரிச்ச சதி வலைக்குள்ள மாட்டி தேவதை
துவாரஹாவை தொலைச்சதுக் கூட புரியாம பேய்க்கூட கூட வாழ்க்கையையும் இணைச்சு
பிள்ளைகளை பெத்து இருக்கேன்ற ஆத்திரம்.
அந்த ஆத்திரத்தில் செய்த அடுத்த தப்பு சந்திரிக்கான்ற பிசாசை மேரேஜ்
பண்ணியது. சந்திரிக்காவை ஆரம்பத்தில
பார்த்தப்போ, அவளோட அபாரமான அழகும், புத்திசாலித்தனமும், தொழிலில் எனக்கு நிகராய்
நின்ன அவளோட டேலண்டும் ரொம்பவே பிரமிப்பாய் இருந்தது. அதுவே ரசிப்புடன்... அவளை
பார்க்க வச்சது... இப்படிப்பட்ட பொக்கிஷத்தை சொந்தமாக்க சான்ஸ் கிடைச்சப்போ
பேரானந்தமாகத்தானே இருந்தது.
ஆனால் இப்போ அவளைப் பார்த்தா அழகிய விஷத்தை உதட்டுக்கு அடியில்
வைத்திருக்கும் தோல் மினுமினுப்பு உள்ள இச்சாதாரி நாகத்தைப் பார்க்கிறது போல
இருக்குதே....
துவாரஹாவை கல்யாணம் பண்ணினப்போ அவளோட வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம் தான்
அவள் மட்டுமா அவளை சேர்ந்த எல்லாமே என்னோடதா நான் எடுத்துக்கிட்டேன், அவளோடது பிராபர்ட்டி
எல்லாமே என்னோடதா பீல் பண்ணினேன்.. அவள் கூட ஒன்னா வளர்ந்த தங்கச்சி
இஷானியையுமே.....
அதனாலத்தானோ என்னவோ என்கூட வாழ இஷ்டம் இல்லாம சீக்கிரமே என்னைவிட்டு
போய்ச் சேர்ந்துட்டா.. அவள் இல்லாமப் போனதுக்குப் பின்னாடி தான் அவளோட அருமையே
எனக்குப் புரிஞ்சது... இஷானியோட மறுபக்கமும்
புரிய ஆரம்பிச்சது...
ஆனா எல்லாமே என்னோட கை மீறிப் போயிடுச்சு... அமுதவல்லி ஆண்டி போல
குணம் உள்ள ஒருத்தவங்க பெத்த இஷானியா இப்படின்னு முழுசா இஷானி பற்றித் தெரிஞ்சப்போ
ரெண்டு பிள்ளைகள் ஆகிடுச்சு...
இனி பிள்ளைகளுக்காகத்தான் லைஃப், என் பிஸ்னஸ் தான் என் மூச்சுன்னு
இருந்தேன். ஆனா தொழில் மேல இருக்கிற மோகம் சந்திரிக்கா கூட இணைய வச்சது.
தொழிலோட இல்லாம வாழ்க்கையோடு இணைச்சுகிட்டா இன்னும் நல்லா இருக்கும்னு
நினச்சது எவ்வளவு பெரிய அபத்தம்...
அவளோட பிஸ்னசை நான் ஏப்பம் போட நினச்சா... அவள் என்னோடதை அவளோடது ஆக்க
ஆசைப்படுறாள்... சுதாரிச்சு அலார்ட் ஆகிட்டதா நெனச்சேன் ஆனா இந்த உதித் எப்படி லாராகிட்ட
மாட்டினான்.
சந்திரிக்காவோட அம்மா அப்பாவோட வளர்ப்பு மகள் லாராகிட்ட... அதுவும்
சந்திரிக்காவின் தங்கை முறை ஆகிய அந்த சின்ன பொண்ணு லாராகிட்ட எப்படி மாட்டினான்...?
என்ற யோசனையோடு இருந்த போது உதித் லாராவுக்கும் அவனுக்குமான உறவு எப்படி
ஆரம்பமானது என்பதை வண்ணனிடம் சொல்ல ஆரம்பித்தான்.
********
“லாராவை ஒரு பிஸ்னெஸ் பார்ட்டியில தான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன். என்னோட
குடும்பம் சிதைஞ்சு நிக்க காரணமான அந்த சந்திரிக்கா கூட அவளைப் பார்த்தேன்.
லாராவின் முகம் பார்க்க ரொம்ப அப்செட்ல இருந்துச்சு. அந்த அழகான
சின்னப் பொண்ணு யாருன்னு விசாரிச்சப்போ சந்திரிக்காவோட தங்கச்சின்னு கேள்விப்பட்டேன்.
சந்திரிக்கா பார்வைக்கு இளையவளா இருந்தாலும் அவளோட வயசு எனக்குத்
தெரியுமே.. அதனால தங்கச்சின்னு சொல்லிக்கிட்டு கூட கூட்டிகிட்டு வந்திருக்கும்
லாரா வயசுக்கும் சந்திரிக்காவின் வயசுக்கும் உள்ள வித்தியாசம் தங்கச்சியா இருக்க
வழி இல்லைன்னு தோண வச்சது.
அதுக்கு அடுத்தடுத்த மீடிங்கிலும் சந்திரிக்காவோட வந்த லாராவவின்
முகத்த நோட்டம் விட ஆரம்பிச்சேன்... பிடிக்காம பார்ட்டிக்கு வந்திருக்கிறதை போலவும்...
ஏதோ ஒரு கட்டாயத்தில் அங்க இருக்கிறது போலவும் எனக்குத் தோனுச்சு.
காரணம் யாரையுமே லாரா கண்டுக்கலை, வந்ததும் ஓரமா இடம்பார்த்து போய்
உட்கார்ந்துகிட்டு மொபைலில் எதையாவது பார்க்க ஆரம்பிச்சிடுவா... பார்ட்டி
முடியறதுக்குள்ள அடிக்கடி வாட்ச்சை பார்ப்பதும் சில சமயங்களில் சந்திரிக்காவோட
பி.ஏ செபாஸ்டியன்கிட்ட ‘இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் இங்க இருந்து கிளம்ப..?’
என்று விசாரிப்பதையும் நான் கவனிச்சேன்.
சந்திரிக்காவோடு பேசும் போது அக்காவோடு பேசும் ஒரு நெறுக்கம் இல்லாம
ஒரு பயத்துடன் பேசுறது போல லாராவோட பாவனை இருந்தது.
எனக்கு ஏற்கனவே சந்திரிக்கா நம்ம அப்பாவை கல்யாணம் செய்ததால அவமேல
பயங்கர கோபம் இருந்தது. அவளாலே என் குடும்பமே சிதைஞ்சு போச்சுன்ற வருத்தம்
இருந்தது. சந்திரிக்காவை நெருங்கி அவளை ஏதாவது செய்யணும்ற கோபம் எனக்குள்ள
இருந்தது. ஆனா நெருங்கிப் பேசக் கூட எனக்கு வாய்ப்பு இல்லாம இருந்தது.
சந்திரிக்கா கூடவே இருக்கிற லாராவுக்கும் ஒருவேளை என்னையப் போலவே சந்திரிக்கா
மேல எதுவும் கோபம் இருக்குதோ...? அதுனாலத்தான் அப்படி இருக்காளோனு தோனுச்சு. அப்படி
இருந்தா லாரா கூட கூட்டுச்சேர்ந்து சந்திரிக்காவை ஏதாவது பண்ண முடியுமானு பழகிப்
பார்த்து கண்டுபிடிக்கணும்னு தோனுச்சு.
லாரா தனியா ஒரு பொட்டிக்ஸ் வச்சிருக்கிறத விசாரிச்சு
தெரிஞ்சுகிட்டேன். என்னோட காலஜ் ஃப்ரெண்ட் டெய்சி கூட அவளுக்கு டிரஸ் வாங்குறது
போல நானும் பொட்டிக்ஸ் போனேன். போய் லாராக்கூட பேச்சுக் கொடுக்க ஆரம்பிச்சேன்.
முதலில் அவள் என்கூட பேசலை, ஆனா அடிக்கடி பொட்டிக்ஸ் போய் அவள்கூட
ஏதாவது சாக்கு வச்சு பேசி பேசி நல்ல ஃப்ரெண்டு ஆனேன். அதுக்குப் பின்னாடிதான் நான்
யாருன்ற உண்மையைச் சொன்னேன். ஆனா நான் சொல்றதுக்கு முன்னாடியே அவளும் நான் யாருன்ற
விஷயத்தை தெரிஞ்சு வச்சிருந்தா...
பார்ட்டியில நான் அவளை கவனிக்கிறதை கவனிச்சு இருக்கா... படிப்படியா
எங்க பேச்சு வளர்ந்தது.
சந்திரிக்காவின் அம்மாவும் அப்பாவும் அவளை அடாப்ட் பண்ணி சேலத்தில் வச்சு
வளர்த்ததாகவும் ஹயர் ஸ்கூல் படிக்க வைக்க மும்பைக்கு கூட தங்கச்சி லாரவ அழைச்சிட்டு
வந்த சந்திரிக்கா படிப்பு முடிச்ச பிறகும் அவளோடு அவள் சொல்றதை செய்யும் ஒரு
மெஷினாக லாராவை கூடவே வச்சுக்கிட்டாள்.
சந்திரிக்காவின் கைப்பாவையாக அவள் சொவதை மட்டும் செய்யணும், சொல்ற படிப்பைத்தான்
படிக்கணும். தலையாட்டி பொம்மை போல இருக்கணும்னும். லாராவுக்குனு எந்த தனிப்பட்ட ஆசையும்
இல்லாம இருக்கணும்னு கட்டாயப் படுத்தப்படுத்தபட்டாள்.
அதனால் லாராவுக்கு வாழ்கையே வெறுத்துப் போனதாக என்கிட்டே புலம்புவாள்.
போக்கிடம் இல்லாமல் அவளோடு இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா என்கிட்டே
புலம்பினாள் ஒரு நாள்.
நான் இருக்கேன் உனக்குன்னு சொல்லி அவளோட கையைப் பிடிச்சேன்...
எப்பவும் இருப்பீங்களா...? எனக்கு உங்க கூட பேசும் போது சந்தோசமா
இருக்குனு சொன்னாள் லாரா. இதே போல எப்பவும் என்னைய சந்தோசமா உங்க கூடவே வச்சுக்க
முடியுமானு கேட்டாள்.
எனக்கும் தொடர்ந்து லாரா கூட பழக ஆரம்பிச்சப் பிறகு அவளை ரொம்பவும்
பிடிச்சது... நானும் அவளை லவ் பண்ண ஆரம்பிச்சேன். எப்பவும் அவளுக்கு துணையா
இருக்கிறதா வாக்குக் கொடுத்தேன்.
ஒரு காலகட்டத்தில் நாங்க ரெண்டுபேரும் லவ் பண்ற விஷயம்
சந்திரிக்காவுக்குத் தெரிய ஆரம்பிச்சது. அது அவளுக்குப் பிடிக்கலை.
லாரா அவளோட கண்ரோல் விட்டு விலகிப் போறது பல வகையில்
சந்திரிக்காவுக்கு நட்டத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருகிறதால லாராவை என்கிட்டே
இருந்து விலகிடச் சொல்லி கட்டாயப் படுத்தி இருக்காள்.
லாரா பேர்ல டம்மி கம்பெனி ஆரம்பிச்சு அதற்கு ரப்பர் ஸ்டாம்பா அவளை
பயன்படுத்திக்கிட்டு இருந்தாள். அவள் என்னையாக கல்யாணம் செய்துக்கொண்டால் அந்த
பணம் சந்திரிக்காவின் கைவிட்டுப் போயிடும்னு பயந்தாள்.
அதால என்னைய லவ் பண்ணக் கூடாதுன்னு லாராவுக்கு நிறைய திட்டும் அடியும்
கிடைச்சிருக்கு. வீட்டை விட்டு வெளியில் போகக்கூட விடாம ஹோம் அரஸ்ட் பண்ணப்பட்டாள்
லாரா.
அத்தியாயம் 07
அவள் கையில் போன் கூட கொடுக்காம என்னைய விட்டு விலகச்சொல்லி டார்ச்சர்
பண்ணி இருக்கா சந்திரிக்கா. அங்க இருந்து எஸ்கேப்பாகி முப்பையில் நான் இருந்த
வீட்டுக்கு வந்துட்டாள். அதுக்குப் பிறகு சந்திரிக்கா வீட்டுக்கு போகாம என்கூடவே
இருந்துட்டாள் நாங்க ரெண்டுபேரும் லிவ்விங்ல வாழ ஆரம்பிச்சோம்..
கம்பெனி வேலையா டெல்கிக்கு
நான் போயிருந்தேன், நான் லாராக்கூட இல்லாததை
தெரிஞ்சுக்கிட்டு என் வீட்டுக்கே வந்த சந்திரிக்கா வலுக்கட்டாயமா லாராவை இழுத்துட்டுப்
போயிட்டாள்.
மறுபடியும்
லாராவை ஹோம் அரெஸ்டில் வச்சுக்கிட்டாள். அப்படி இருந்தபோது எதனாலயோ அடிக்கடி லாராவுக்கு
மயக்கம் உண்டாகியிருக்கு. சந்திரிக்கா அவளை ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டுப் போய் செக்கப் செய்து
பார்த்தபோது எதுவோ வைட்டமின் குறைபாடெனச் சொல்லி மாத்திரை தொடர்ந்து சாப்பிடச்சொல்லியிருக்கார்.
அதற்கு
பிறகு அவளை பொட்டிக்சில் கூட்டிக்கொண்டு போகவரவென
பாடிகார்டாக ஒருத்தன் கூட அனுப்பினா. வேறு எங்கும் தப்பிச் செல்லவோ என்னை
சந்திக்கவோ முடியாதபடி சூழலை உருவாக்கி அனுப்பிக்கிட்டு இருந்தாள்.
லாராவின்
உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போயிருக்கு. ஒருநாள் மிகவும்
உடலுக்கு முடியாமப் போனதால பொட்டிக்ஷில் இருந்து பாடிகார்ட்டோட ஹாஸ்பிடல்
போயிருக்கா. அவனை வாசலில் நிற்கச் சொல்லிட்டு போய் டாக்டர் பார்த்தபோது டாக்டர்
அட்வைஷின் படி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியிருந்தாள்.
அப்பொழுது
ஹாஸ்பிடலில் எதேர்ச்சையாக வந்திருந்த ஃப்ரெண்ட டெய்சியை சந்திச்சிருக்கா. ஹாஸ்பிடலில்
அவள் இருக்கும் விஷயத்தை என்கிட்டே சொல்லச் சொல்லி என் கம்பெனி அட்ரஸ்க்கு அனுப்பி
இருந்தாள்.
டெய்சி
என்கிட்ட வந்து லாரா ஹாஸ்பிட்டலில் இருக்கிற விஷயத்தை சொன்னாள். ஹாஸ்பிடல்
தவிர்த்து மற்ற இடங்களில் பாதுகாப்பு மீறி என்னால் அவளை சந்திக்க முடியலை.
லாராகிட்ட
இருந்த மொபைளையும் சந்திரிக்கா பிடிங்கிட்டா. அதனால் அவள தொடர்பு கொண்டு
பேசமுடியாம இருந்த என்னை... லாராவின் ஃப்ரெண்டு
டேய்ஷி கம்பெனிக்கே வந்துபார்த்தாள்... லாரா நிலையைச் சொல்லி அவளை பார்க்க என்னைய
ஹாஸ்பிட்டளுக்கு கூட்டிக்கொண்டு போனாள்.
போன
இடத்தில் லாராவின் திடீர் உடல் மெலிவு என்னை கலங்கடித்தது, என்ன காரணமென
விசாரிர்த்தபோது அடிக்கடி மயக்கம் வந்தது டாக்டரிடம் காட்டியபோது வைட்டமின்
பற்றாக்குறை என்று டேப்லெட் கொடுத்தாங்க. அதற்கு பிறகும் ஏனோ தெரியவில்லை உடல் நிலை நாளுக்கு
நாள் மிகவும் மோசமாகிக் கொண்டே போகிறது என்றாள் லாரா.
அத்தோடு
தலைவலியும் என்னைய பாடாய்ப் படுத்துது என்னால் எதையும் யோசிக்கக் கூட முடியலைன்னு
சொன்னாள்.
எனக்கு
ஏனோ அவளுக்கு வைட்டமின் பற்றாக்குறை இருந்ததாக சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியலை... ‘எந்த
டாக்டர் உனக்கு டிரீட்மென்ட் கொடுத்தாங்க...? அதுக்கு நீ இப்போ என்ன டேப்லட்
சாப்பிடுற...? உன் ரிப்போர்ட்... நீ சாப்பிடுற டேப்லெட் எல்லாம் என்கிட்ட காட்டு...’
என்று கேட்டேன்.
அவள்
அப்பொழுது தங்கி இருந்த மருத்துவமனையில் வேலை
செய்யும் டாக்டர் ஒருவரின் பெயரைச்சொல்லி அவர் தான் டிரீட்மென்ட் கொடுத்தார். இதோ அவர் கொடுத்த
மாத்திரை இதுதானென என்னிடம் காட்டினாள்.
அந்த
டேப்லட்டின் அட்டையை பெயரோடு போட்டோ எடுத்து அங்கிருந்தவாறே எனது நண்பனும்
மருத்துவனுமான ஷையத்துக்கு வாட்சைப்பில் அனுப்பினேன், அது எந்த வகையான மருந்து
எந்த நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்து எனக்கேட்டான்.
அடுத்த
பத்து நிமிசத்துக்குள் டாக்டர் ஷையத் எனக்கு கால் பண்ணினான். பதிலை மெசேஜாக டைப் பண்ணி
அனுப்பாமல் உடனே நேரடியாக பேச வந்ததுமே, என் கெஸ் சரிதானென
புரிஞ்சது. போனை ஸ்பீகரில் போட்டு “சொல்லு ஷையத், எப்படி இருக்க?” எனக் கேட்டேன்.
“ஐ ஆம் பைன் உதித், நீ இப்போ வாட்ஸ் ஆப்ள ஒரு டிரக்
போட்டோ அனுப்பியிருக்கியே அது ‘ஏ’சைக்கார்டிக் டிரக். மெண்டல் டிஸார்டர்
இருக்கிறவங்களுக்கு அதாவது, மூளை பாதிப்பு உள்ளவங்களுக்கு கொடுக்கும் மாத்திரை. அதுவும் ரொம்ப தீவிரமான மனநோய்
உள்ள சமயம் கொடுக்குற டிரக் அது.
நல்ல
ஆரோக்கியமான ஒருத்தர் அந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டால் அவங்க மூளை நரம்புகள்
பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகய் பிரைன் டெத் என்ற நிலைக்கு போயிடுவாங்க” என்றான்.
“அதாவது.... ஸ்லோ பாய்சன் போன்ற மாத்திரைன்னு சொல்றயா
ஷையத்..?
ம்...
நிச்சயம் அப்படித்தான். நீ சொல்வது போல இது
விட்டமின் பற்றாக்குறைக்கு கொடுக்கிற மாத்திரை இல்லை. அதே போல இந்த மாத்திரை
மெண்டல் டிசார்டர் உள்ளவங்களுக்கே கூட தொடர்ந்து கொடுக்க மாட்டாங்க. இதை உனக்கு வேண்டியவங்க
சாப்பிட்டுக்கிட்டு இருந்தா உடனே நிப்பாட்டச் சொல்லு
இந்த
மாத்திரையால் அவங்களோட மூலையில் எதுவும் பாதிப்பு உண்டாகி இருக்குதான்னு நல்ல
டாக்டர் ஒருத்தரை பார்த்து கன்சல்ட் பண்ணிட்டு டிரீட்மென்ட் எடுக்கச்சொல்லு.” என்றான்.
ஸ்பீக்கரில்
போட்டு பேசியதால டாக்டர் ஷையத் சொன்னதை லாராவும் அவளின் தோழியும் கேட்டுவிட்டு
மிகவும் அதிர்ந்து போனார்கள்.
மருத்துவமணையின்
நிர்வாகத்துக்கு சொல்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் வெளியேற வச்சோம் லாராவை. அவசர
அவசரமாக நர்சோ மற்றவர்களோ பார்ப்பதற்குள் வெளியில் இருக்கும் அவளின்
பார்டிகாட்டுகுத் தெரியாமல் டெய்சியோட டிரஸ்ஸை லாரா போட்டுக்கிட்டு முகத்தை
துப்பட்டாவால் முஸ்லீம் பெண்களை போல தனது முகம் முழுவதையும் கவர் செய்துக்கொண்டு
குனிந்தபடி வெளியேறி காரில் என்னோடு அங்கிருந்து தப்பித்து என் வீட்டிற்கே
மறுபடியும் வந்துவிட்டாள்.
அதன்
பின்பு நான் அவளை இரண்டு மூன்று டாக்டரிடம் காண்பித்தேன். நல்லவேளை அவள் நல்ல
ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்ததால் அந்த மாத்திரையின் பாதிப்பில் இருந்து
வெளியேற டிரீட்மென்ட் கொடுத்ததை அவளின் உடல் சப்போர் பண்ணியது.
விரைவில்
அவள் குணமாக எல்லா சாத்தியக்கூறும் இருந்ததால் அவள் உடல் கொஞ்சம் கொஞ்சமாக
ரெக்கவரானாலும் இன்னும் முற்றிலும் அந்த மாத்திரையின் பாதிப்பில் இருந்து அவள்
வெளியே வரவில்லை.
அவளோட
உடல் நிலை சரியாகும் வரை கல்யாணம் செய்ய வேண்டாமென்ற டாக்டர்சின் அட்வைசால் முதலில்
என்கேஜ்மென்ட் மட்டும் செய்துக்கொள்வோம்னு முடிவெடுத்தோம்.
எங்க
ரெண்டு பேருக்குமே ஒரு டவுட் வந்தது, நல்ல உடல்நிலையில்
இருந்த அவள் எதுக்கு அந்த டேப்லெட் சாப்பிடும் முன்பு அடிக்கடி மயக்கம் போட்டாலென
டவுட் வந்தது.
அப்போது
லாரா சாப்பிடும் உணவில் மயக்கம் உண்டாக்க எதையேனும் கலந்து கொடுத்து இருக்கலாம்
என்ற புரிதல் வந்தது.
உதித்
சொன்னதை கேட்டு அதிர்ந்த வண்ணன் “நல்லவேளை எப்படியோ உண்மை
தெரிஞ்சு காபாத்திட்டீங்க. இல்லைன்னா லாராவின் நிலைமையை நினைக்கவே பயமாயிருக்கு.
ஆமா
லாரா மறுபடி உன் வீட்டுக்கு வந்ததுக்குப் பிறகு சந்திரிக்காவாள் தொந்தரவு வரலையா?” என்ற வண்ணனிடம்,
“வந்தது, ஆனா அவளுக்கு தப்பான
டிரீட்மென்ட் கொடுத்ததுக்கான அத்தனை ஆதாரத்தையும் திரட்டிக்காட்டி நான் சந்திரிக்காவை
மிரட்டியதும் எங்களை அப்போதைக்கு மிரட்டுறதை விட்டுட்டா.
ஆனா
நாங்க ரெண்டுபேரும் கல்யாணம், செய்யப்போறோமென்ற விஷயம்
தெரிஞ்சு எங்களோடு மறுபடியும் பேச வந்தா.... நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்யக்கூடாதுன்னு
மிரட்டினா” என்றான்.
“ஏன்...? நீங்க கல்யாணம் பண்றதால
அவளுக்கு அப்படி என்ன பாதிப்பு?” என்றதும்.
லாரா
பேரில் டம்மி கம்பெனி ஆரம்பித்து கொஞ்ச மாதங்கள் முன்னாடிதான் சந்திரிக்காவின்
நூத்துக்கணக்கான கோடி ரூபாய்க்கு லாராவை பினாமியா ஆக்கியிருக்கா
இந்த
நிலையில் லாரா அவளை பிரிஞ்சு என்னை கல்யாணம் செய்தால் அந்த பினாமி
பிராப்பர்ட்டி டம்மி கம்பெனி அமெளன்டும் கைவிட்டு போயிடுமேட... போறது லாரா மட்டும் இல்லையே....
அவளோடு அம்புட்டுப் பணமுமில்ல கை விட்டுப் போயிடும்”
“டம்மி கம்பெனி, அதோட ஷேர் அப்படிலாம் சொல்றீயே உதித்! என்ன ஏதுன்னு தெளிவா
சொல்லு” என்றவனிடம்,
“சந்திரிக்காவோட ஹஸ்பென்ட் யார் தெரியும்ல உலகளவில்
பேர் சொல்லக்கூடிய சேனலின் சி.இ.ஓவான முகில் வண்ணனை, நம்ம அப்பாவை.
அப்பாவும் சந்திரிக்காவும் சேர்ந்து கல்யாணத்தில் இணைஞ்சதுக்கு காரணம்... ரெண்டு பேருக்கும் நெருங்கிய பழக்கம் வந்ததுக்கும்
காரணம் ஜாய்ண்டா புது டெலிகாம் கம்பெனி
உருவாக்கியதாலத்தான்.
நல்லா
வளர்ந்த அந்த நிறுவனத்தை ஒரு வருஷம் முன்னாடி வெளிநாட்டு நிறுவனத்துக்கு
வித்துட்டாங்க. அதன் மூலம் அவங்களுக்கு
கிடைத்த அந்நிய நாட்டுப் பணம்(ஹவாலா மூலம்) எவ்வளவு தெரியுமா? தொள்ளாயிரம் கோடி...!
ஆனால்
கவர்மென்ட் கணக்கில் காண்பித்தது வெறும் தொண்ணூறு கோடி மட்டுமே.... அந்த கணக்கில் காட்டாத
பணத்தை, லாரா பேரில் டம்மி கம்பெனி
ஆரம்பிச்சு மூணு நாலு தவணையா அவள் பேரில் இன்வெஸ்ட் பண்ணி இருக்காள் சந்திரிக்கா.
என்னது
தொள்ளாயிரம் கோடியா...!?
ஆமா
அந்த அமெளன்டை ஹவாலா மூலம் கைப்பற்றியிருக்காங்க. பணத்தை புருசனும் பொண்டாட்டியும் பாதியா
பிரிச்சுக்கிட்டாங்க.
சமீபத்தில்
இந்தியன் பிஸ்னஸ் மேகசீனில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் பெண் தொழிலதிபர்களின் வரிசையில்
எட்டாவது இடத்தை இந்தியாவைச் சேர்ந்த சந்திரிக்கா முகில் இடம்பிடித்ததாக
வந்திருந்ததே பார்த்திருப்பேல்ல
இந்த
பணத்தை வச்சுத்தான் அவள் தனிப்பட்ட முறையில் ஆரம்பிக்க திட்டமிட்டு பில்ட்
பண்ணிட்டு இருந்த அந்த புதிய சேனல் அதுக்கான பண்ட் எல்லாம் சந்திரிக்காவுக்கு
இதன் மூலமாத்தான் கிடைச்சது” என்றான்.
“ஆனா சந்திரிக்கா பேரில் அந்த பணத்தை இன்வஸ்ட் பண்ணாம
ஏன் லாரா பேரில் இன்வெஸ்ட் பண்ணியிருக்கா.?”
“லாரா பேரில் டம்மி கம்பெனி ஆரம்பிச்சு அதில் தான் அந்த
பணத்தை இன்வெஸ்ட் பண்ணியிருக்கா. பணம் அந்த கம்பெனி
பேரில் இருக்கும். ஆனா அதோட ஓனர் லாராவா
இருந்தாலும் அது போல ஒரு கம்பெனி உண்மையாவே கிடையாது.
அந்த
இல்லாத கம்பெனிக்கு பணத்தை கையாள லாரா கையெழுத்து போட ஸ்டாம்பு அம்புட்டுத்தான்.
லாரான்ற
ஸ்டாம்பு சந்திரிக்கா தன்னோட கைவசம் இருக்கும்னு நம்பி இத்தனையும் பண்ணியிருக்கா...
ஆனா இடையில் என்னோடு லாரா சேர்ந்ததும் பணம் கைவிட்டுப் போயிடும்ற பயம் அவளுக்கு
வந்திருச்சு.
எப்படியாவது
லாராவை அவள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கணும்னு நினைச்சு என்னென்னமோ பண்ணினா. ஆனா எல்லாத்தையும் தாண்டி
என்கிட்ட லாரா வந்துட்டா...
நான்
கூட அந்த பணத்தை மொத்தமா சந்திரிக்கா பேருக்கு மாத்தி கொடுத்துடலாமா லாரா, அப்படி கொடுக்காட்டி அவ
நம்மளை நிம்மதியா வாழ விடமாட்டானு சொன்னேன்.
லாராவோ
அதுக்கு என் மேலக்கோபப்பட்டா. ஏன்னா நானும் லாராவும்
பழக ஆரம்பிச்சதே எங்க ரெண்டுபேரோட பொதுவான எதிரி சந்திரிக்கான்னு தெரிஞ்சதாலத்தான்.
என்
அப்பாவை கல்யாணம் செய்து என் அம்மாவை தவிக்க விட்டவ அவள்தானே இந்த உலகத்தில் நான் வெறுக்கும் பழிவாங்க துடிக்கும்
முதல் ஆளு அவதான்.
நாங்க
காதல் பண்றதுக்கு முன்னாடி எங்க ரெண்டுபேரோட பொது எதிரியான சந்திரிக்காவை ஏதாவது
செய்து அவளோட சுயரூபத்தை மீடியா மூலம் எல்லோருக்கும் காட்டி பழி வாங்கணும் என்ற
நினைப்பில் தான் நானும் லாராவும் கூட்டு சேர்ந்தோம்.
நாளடைவில் ரெண்டுபேரும் லவ்
பண்ண ஆரம்பிச்சதுக்குப் பிறகு எனக்கு லாராவோடு இருந்த நாட்கள் ரொம்ப மகிழ்ச்சியா
இருந்ததால பழி வாங்க எல்லாம் வேண்டாம். இதே போல எப்பவும் அவளோடு சந்தோசமா வாழ்ந்தா
போதும்னு தோண ஆரம்பிச்சது.
அதுக்கு காரணம் சந்திரிக்காவோட
மறுபக்கம் பார்த்து பயந்ததால். கூடவே வச்சு வளர்த்த லாராவை இந்த அளவு கொடூரமா ஏ
சைக்காடிக் டிரக் கொடுத்தவ... அந்த பணத்துக்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவ அவளை விட்டு எட்ட இருக்கணும்னு யோசிச்சேன்.
இதுக்கிடையே மறுபடி பிஸ்னெஸ்
விஷயமா நான் மும்பை வந்துட்டுப் போனபோது மறுபடியும் லாரா மிஸ் ஆகிட்டா..
ஆனா இந்த தடவை அவள்
சந்திரிக்கா வீட்டில் இல்லை.. நான் அவளோட வீடுக்கே தேடிப் போனேன். ஆனால் அவள்
அப்படியே பிளேட்டை மாத்திப் போட்டு நான் தான் லாராவை என்னமோ பண்ணிட்டேன்னு
என்கிட்டே எகுறுனாள் போலீஸ் கிட்ட என்மேல கம்ப்ளைன்ட் கொடுப்பதாய் மிரட்டி உண்மையைச்
சொல்லச் சொன்னா...
அம்மாவுக்கும் விஷயத்தை
தெரியப்படுத்தினா... அம்மா அவளோட மிரட்டலுக்குப் பயந்து என்னை அழுது ஆர்பாட்டம்
பண்ணி இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. இதுதான் லாரா விஷயத்தில் நடந்தது.
உண்மையாவே லாராவுக்கு என்ன ஆச்சுன்னே தெரியாது. ஆனா சந்தேகம் முழுக்க அந்த சந்திரிக்கா
மேலதான்’ என்றான் உதித்..
---- தொடரும்----
No comments:
Post a Comment