anti - piracy

Post Page Advertisement [Top]

 

இனிக்கும் விஷம் (தீபாஸ்)

அத்தியாயம் 08

உதித்திடம் ‘அப்போ சந்திரிக்காவாலத்தான் லாராவுக்கு என்னமோ ஆகிடுச்சுனு சொல்ற அப்படித்தானே..?’ என்றதும்

“பாசிபில்ஸ் நிறைய இருக்குது வண்ணன்” என்றவனை யோசனையுடன் பார்த்தபடியே

“லாராவை அடாப்ட் பண்ணியது சந்திரிக்காவோட பேரன்ஸ்னு சொன்னியே... என்ன காரணத்துக்காக அவங்க அடாப்ட் பண்ணுனாங்கன்ற விஷயம் தெரியுமா...?

ஏன் கேக்குறேன்னா குழந்தை இல்லாதவங்க ஒரு குழந்தையை தத்து எடுத்தா காரணம் தேடப்போறதில்லை...  ஆனா சந்திரிக்காவுக்கு முதல் கல்யாணத்தில ஒரு குழந்தை இருக்குது. இப்போ அந்த குழந்தைக்கு பதினாறு பதினேழு வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.

தன் மகளை சந்திரிக்கா வளர்கலை.... அந்த பேத்தியை இந்த கிரான்ட் பேரன்ட்ஸூம் வளர்கலை..., சந்திரிக்காவின் எக்ஸ் ஹஸ்பென்ட் கிட்டத்தான் அந்த பொண்ணு வளருது. அப்படி இருக்கும் போது யாரோ ஒரு குழந்தைய தத்தெடுத்து ஏன் வளர்க்கணும்...?” என்றான்.

அவனின் கேள்விக்கு எதுவும் சொல்லாமல் யோசனையுடன் அமர்ந்திருந்த உதித்தைப் பார்த்து. “ரைட்டு விடு, உனக்கு இவ்வளவு தான் விஷயம் தெரியும் போல...” என்றதும்.

“ம்... எனக்கு தெரிஞ்ச விஷயத்தைச் சொல்லிட்டேன். லாராவுக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்க உன்னால முடியும்னு அப்பா நம்புறாங்க. இந்த பிரச்சனை சால்வ் பண்ணினா நானும் தப்பிப்பேன். அதனாலத்தான் உனக்கு லாரா கேஸ் விஷயத்தில் கோவாப்பரேட் பண்ணனும்னு முடிவெடுத்துட்டேன், லாராவைத் தேடுறதுக்கு என்னால முடிச்ச ஹெல்ப்பை தருவேன். அப்போ நான் கிளம்பட்டா...?” என்றவனிடம்.

“என் வாட்ஸ் ஆப் நம்பருக்கு லாராவோட போட்டோ அனுப்பி வை உதித். போட்டோ இருந்தா தேட வசதியா இருக்கும்” எனச்சொல்லியபடி கிளம்ப எழுந்தவனிடம் கைக் குலுக்கி விடை கொடுத்தான் வண்ணன்.

அவன் சென்றதும் வண்ணனின் மொபைல் அழைத்தது. அழைப்பது “யுகாந்” என்பதை  டிஸ்பிளேயில்  பார்த்ததும் அட்டன் செய்து ”டேய் யுகா, சென்னை வந்தாச்சா...?” என்றதும்.

ம்... மார்னிங் தான் வந்தேன், ஆமா உன் விஷயம் என்னாச்சு..?”

“லாராவைத் தேடுற பொறுப்பை என்கிட்ட கொண்டுவந்திருக்கார் ‘மிஸ்டர் முகிலன்’ அவரோட மகன் உதித்தும் அதுக்காகத்தான் என்கிட்ட வந்து பேசிட்டுப் போறான்.. நான் விரிச்ச வலையில் தானாவே வந்து அப்பாவும் மகனும் விழுந்தாச்சு...?” என்றவன் வெடிச்சிரிப்பு சிரித்தான்.

“வண்ணன்... ‘கர்மா இஸ் பூமர்..’னு இதைத்தான் சொல்லுவாங்க போல. ஆமா உன்னோட நெகட்ஸ் மூவ் என்னடா..?”

“அதை நேரில் சொல்றேன், என் அம்மாவுக்கு இவங்க செய்த துரோகத்துக்கும், என்னைய அனாதையா நிக்க வச்சதுக்கும் காரணமான ஒவ்வொருத்தரையும் அதுக்கான தண்டனையைக் கொடுக்காம அடங்க மாட்டேன்”

“ஐ நோ யுவர் ஃபீலிங்க்ஸ் டா... உன்கூட எப்பவும் நான் இருப்பேன்”

“தேங்க்ஸ் டா... முகில் அதியனையும் அந்த ஆளைச் சார்ந்து இருக்கிற ஒவ்வொருத்தரும் என்னோட டார்கெட், ஆனா... இதில் இடையில் வந்து மாட்டிகிட்டது பாவம் லாரா தான், எனக்கென்னமோ ஷி இஸ் நோ மோர்னு தோணுது... ஒரு சின்னப் பொண்ணை காசுக்காக பழிகொடுத்துட்டாங்கன்னு நினைக்கிறேன்.

மிஸ்டர் முகிலுக்கும் சரி... அவரை சேர்ந்த மத்தவங்களும் சரி... பணம் தானே முக்கியம், பணம்... பணம்... பணம்... அதைத் தாண்டி மத்தது எதுவுமே அவுங்க கண்ணுக்குத் தெரியாது.

இந்த கோஸ்டில உள்ளவங்க பொண்டாட்டி, புருஷன், புள்ளைன்னு ரத்த உறவுகளையே பணத்துக்காக பழிகொடுக்கத் தயங்காத பணப் பிசாசுகள். அந்த பணத்தை வச்சே அத்தனை போரையும் என் டிராப் குள்ள விழுக வச்சாச்சுல்ல...” என்றதும்.

“ம்...நினைச்சதை சாதிக்கிறவன் தான் நீ, சரி கிளம்பி இங்க வா... உனக்கு இன்னைக்கு பிரேக் பாஸ்ட் என் கூடத்தான்.. சேர்ந்து சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். பசியோடு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். லேட் பண்ணிடாதடா...” என்றதும்,

“ம்... இன்னும் அரைமணி நேரத்தில் அங்க இருப்பேன்” எனச்சொல்லி மொபைல் இணைப்பைத் துண்டித்த வண்ணனின் மனம் உலைக்களமாய் கொதித்துக்கொண்டிருந்தது.

அவனின் இந்த கோபமும் கொதிப்பும் ஆரம்பித்தது அவளது கல்லூரி காலத்தில். அவனின் பிறப்பின் ரகசியத்தை தோண்ட ஆரம்பித்த நாளிலிருந்து கிடைத்த விசயங்கள் அவனை கொதிப்படைய வைத்தது.

இத்தனை காலமாக துரோகத்தின் நிழலில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மை அவனைச் சுட ஆரம்பித்தது.

அந்த தகிப்புத் தணிய அவன் மேற்கொண்ட யுத்தத்தில் பாவம் அப்புராணி லாராவும் மாட்டிக்கொண்டது தான் விதி.

குறிப்பு; யாரெல்லாம் “வெண்பனிப் பூவே” நாவல் படிச்சிருக்கீங்க...? அதில் வரும் வெண்ணிலா & யுகாந்தன் ஜோடி நினைவில் இருக்கா. அந்த போர்ட் கிளப் தெருவாசியான யுகாந்தன் தான் வண்ணனின் நண்பன்.

இருவரும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள். கதையில் யுகாந்தன் கெஸ்ட் ரோல் தான். ஆனால் முக்கிய திருப்பத்துக்கு வண்ணனுக்கு உதவியவன் அவனே.

இந்த கதைப் புரிய யுகாந்தனை படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவனின் மனைவியான வெண்ணிலா (ராஜ வம்சத்து வாரிசு)வைத் தெரிந்து வைத்திருந்தால் கதையில் கூடுதல் சுவாரஸ்யம் இருக்கும். இருந்தாலும் இரண்டு கதைக்கும் தொடர்ப்பு இல்லை)   

***********

காலை எழுந்ததுமே நட்சத்திரா மனதினுள் ‘போர்ட் கிளப் ஏரியாவுக்கு உதித்தைத் தேடி கிளம்பனும்’ தனக்குள் சொல்லிகொண்டாள்.

இரவு தூங்கும் முன் கூகுளில் தேடியதை வைத்து அந்த வி.வி.வி. ஐபிகள் வசிக்கும் ஏரியா பற்றியத் தகவல்களைத் திரட்டியவள் தன்னை யாரும் அங்கு கண்டுக்கொள்ளப் போவதில்லை... என்று சொல்லிக்கொண்டாள்.

அந்த ஏரியாவில் உதித் இருக்கும் பங்களாவை எப்படிக் கண்டுபிடிக்க...? தனக்குத் தானே கேள்வி கேட்டுக்கொண்டாள். அதற்கு அவளின் மனமோ  

‘அங்க இருக்கிற ஒவ்வொரு பங்களா முன்னாடியும் நேம் போர்டில் வீட்டு ஓனரை அட்ரஸ் பண்ணயிருப்பாங்கள்ல... அதை நோட் பண்ணினால் போதும், முகில் அதியன் குரூப் பங்களாவை அடையாளம் கண்டுப்பிடிச்சிடலாம்.

அப்படி அடையாளம் கண்டுக்கிட்டா பங்களாவ விட்டு வெளியேறும் ஒவ்வொரு காரையும் ஃபாலோ பண்ணனும். அப்படி ஃபாலோ பண்ணினா உதித் காரு எதுனு கண்டுப்பிடிச்சிடலாம். அந்த காரை வச்சே அவன் போற வார இடத்தையும் கண்டுப்பிடிச்சு ஏதாவது ஒரு இடத்தில் அவனை  மடக்கிடலாம்’ என்றுத் தனக்குத்தானே’ என்று திட்டமிட்டாள்.

மறுநிமிடமே உடலில் சுறுசுறுப்புத் தொற்றிக்கொண்டது. இரவு ஏதேதோ நினைவுகளில் தூக்கம் கெட்டதால் விடிந்தது தெரியாமல் உறங்கி எழுந்து  சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்ததும் நேரம் பத்தரை என்று பல்லிளித்தது.

ரூம் மேட் ஜூலி கிளம்பி வேலைக்குச் சென்றிருந்ததை நோட்டமிட்டு கண்டுகொண்டாள். யாருமில்லாத அறையில் கண் விழித்தவளுக்கு அத்தனிமை “அப்பாடா... ஃப்ரீயா கிளம்பலாம் என்ற ஆசுவாசத்தைக் கொடுத்தது.

அத்தோடு தான் எந்நேரமும் கங்காரு குட்டி போல தூக்கிக்கொண்டே திரியும் அந்த பேக் பேக்கை எடுத்துத்தாள். ‘முதல்ல இதில் இருக்கிற பணத்தை எல்லாம் எடுத்துப் பத்திரப்படுத்தனும்... போகுற இடத்துக்கெல்லாம் இதைத் தூக்கிக்கிட்டே போறது சேஃப்டி இல்லை’ முணுமுணுத்துக்கொண்டே...

பேக் பேக்கைத் திறந்து அடியில் வைத்திருந்த பணக்கட்டுகளை மறைத்து மேல போட்டிருந்த டர்கித் துண்டை விலக்கிவிட்டு பணக்கட்டுகளை கட்டிலில் கொட்டினாள். அத்தனையும் ஐநூறு ரூபாய் கட்டுகள். கட்டுகளின் எண்ணிக்கையை எண்ணி கணக்குப் பார்த்தாள்.

“நான் வந்த விஷயத்தை செய்து முடிக்கிறதுக்கு முன்னாடி வேற வேலைக்குப் போக முடியாது. அதுவரை செலவு பண்ண இந்த பணம் போதும்னு நினைக்கிறேன். எல்லாம் செலவாகுறதுக்குள்ள ஏதாவது ஒரு வேலையைத் தேடிக்கணும்.’ என்று அவளின் மனம் முணுமுணுத்தது.

அந்த ரூபாய் கட்டுகளை உடைகள் வைத்திருக்கும் அப்பெரிய டிராலியில் துணிகளுக்கு இடையில் அடுக்கிவைத்தாள். திறந்தவுடன் பார்க்க உடைகள் மட்டுமே இருப்பது போல செட் செய்தவள்.

டிராலியை தான் வாங்கி வைத்திருந்த நம்பர் லாக் பூட்டில் ரகசிய எண் கொண்டு பூட்டியவள், தனக்கென இருக்கும் கபோட்டில் வைத்தாள். சாவியை பத்திரமாக ஹேன்ட் பேக்கிற்குள் போட்டவள், பணக்கட்டுகளை இதுவரை வைத்திருந்த பேக் பேக்கை எடுத்து உள்ளே வேறு எதுவும் இருக்கிறதா என்று ஆராய்ந்தாள்.

உதித், லாராவுடன் நின்றுகொண்டிருந்த நிச்சயதார்த்தப் போட்டோவை பார்த்தவளின் கண்களில் முணுக்கென கண்ணீர் சுரந்தது. மனதில் பாரம் ஏறி அமர்ந்துகொண்டது.

எவ்வளவு ஆசை ஆசையா நடந்தது நிச்சயதார்த்தம். இந்நேரம் கல்யாணம் முடிஞ்சு இருக்கணும்... விடமாட்டேன்... எல்லாத்துக்கும் பதில் கண்டுபடிச்சுட்டுத்தான் மத்தவேளை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு மடமடவென குளித்து உடை மாற்றி கிளம்பி முடித்த வேளையில் மொபைல் அழைத்தது..

அதில் அவள் புக் செய்திருக்கும் கார் வந்துவிட்டதாக தகவலைப் பெற்றதும் ரூமில் இருந்து வெளியில் வந்து கதவைப் பூட்டினாள் நட்சத்திரா.

ஹாஸ்டலில் இருந்து போர்ட் கிளப் ஏரியாவிற்கு வந்து அடைந்தவள், முதல் அவன்யூவில் (தெருவில்) கேப்பை நிறுத்தி பணம் கொடுத்துவிட்டு பொடி நடையாக அந்த ஏரியாவை சுற்றிப் பார்க்கும் உல்லாச பயணிபோல உள்ளே நுழைந்தாள்.

சோசியல் மீடியாவில் இந்த ஏரியாவ பத்தி கிடைச்ச நியூஸ் சரிதான். சென்னையில இப்படி ஒரு இடமா...!?. எங்கயோ ஃபாரின்ல இருக்கிறது போல இருக்கு.

தெருவோரத்தில குப்ப இல்ல..., சாக்கடை ஓடல..., தெருவில ரெண்டுபக்கமும் மரங்களா இருக்கு... அது தெருக்குள்ள வெயிலயே வரவிடாம குளுகுளுன்னு நிழலா குடை பிடிச்சிருக்கு... அதனால இந்த இடமே ஊட்டி கொடைக்கானல் போல சில்லுனு பார்க்கவும் ரம்யமாய் எதுவோ டூரிஸ்ட் ஸ்பாட் போல இருக்குது...

இப்படி இருக்கிறதாலத்தான்  பணக்காரங்க காசை கொட்டி இங்க இடத்தை வாங்கப் போட்டிப் போட்டு இந்த ஏரியாவோட மாட்கேட் வேல்யூவையே கண்டபடி ஏத்தி விட்டுட்டாங்க. தமிழ்நாட்டிலேயே ரொம்ப கார்சிலியான ஏரியாவம்ல இது, ஆமா இங்க யாருகிட்டயும் போய் நான் விசாரிக்க...? ஒத்த ஆளு கூட பங்களாவை விட்டு வெளியில தலை காட்டலையே...

ஆத்தாடி...! ஒவ்வொரு பங்களாவுக்கும் அடுத்து இருக்கும் பங்களாவுக்கு இடையில எம்புட்டு நீளமா காம்பவுண்டு சுவரா... போய்கிட்டே இருக்குது...!?  என்று இரண்டு பக்கமும் இருக்கும் வீடுகளை ஜிக் ஜாகாக அன்னநடை நடந்தும் சில இடங்களில் குதித்தாவது காம்பவுண்டு சுவர் தாண்டி பங்களாவிற்குள் யாரையும் பார்க்க முடியுதாவென முயன்றபடியும்  போய்க் கொண்டிருந்தாள் நட்சத்திரா.

அதே நேரம் தனது டூ வீலரில் வண்ணனும் அங்கு நுழைந்தான். அழகான இளம் பெண் முன்னாள் சென்று கொண்டிருப்பதை,  அங்க  வளைவுகள் அவனின் கவனத்தை ஈர்த்தது.

அவளின் உடலைத் தழுவிய பிங்க் கலர் ஸ்லீவ்லெஸ் பனியன் மற்றும் திரீ ஃபோர்த் புளூ ஜீன்ஸூம், தோளில் கிராசாக பஸ் கண்டெக்டர் ஸ்டைலில் மாட்டியிருந்த ஹேன்ட் பேக்குடன் விரித்து விட்டிருந்த அலையலையான முடிகற்றைகள் காற்றில் ஆட...

ஆள்கள் தெருவில் அவ்வளவாக நடமாடாத நிலையில் நேராக போகாமல்  கிறுக்குத் தனமாக அந்தப் பக்கம் இந்த பக்கமென ஜிக் ஜேக்காக நடந்தும் குதித்துக்கொண்டும் போய்க்கொண்டிருந்தவளின் மீது சுவாரஸ்யமாக வண்ணனின் கவனம் பதிந்தது.

அவன் பார்த்தவரை அந்த ஏரியா தெருக்களில் அங்குள்ளவர்கள் எவரும் இத்தனை விச்ராந்தியாக நடந்துபோவதை அவன் பார்த்ததில்லை.

வீட்டை விட்டு வெளியில் கால் வைப்பவர்கள் தங்களின் பங்களா காம்பவுன்ட்டுக்குள் இருக்கும் விலை உயர்ந்த கார்களில் தான் தெருவில் பவனி வருவார்கள். அப்படி இருக்க மாடர்ன் யுவதி ஒருத்தி அவ்வாறாக நடந்து போவதை வைத்து அவள் இத்தெருவைச் சார்ந்தவளாக இருக்க வழி இல்லை என்று எண்ணினான்.

அத்தோடு ஒவ்வொரு பங்களாவின் நேம் போர்டு இருக்கும் இடத்தில் நின்று உற்று கவனிப்பதையும்... அந்த பங்களா வாசலில் நிற்கும் வாட்ச்மேன்கள் சந்தேகத்துடன் அவளிடம் கேள்வி கேட்பதும்... அதற்கு அவளும் ஏதோ பதில் சொல்லிவிட்டு, கேள்வியும் கேட்டு சிரித்து மழுப்பி நழுவிக் கொண்டு செல்வதையும் நோட் பண்ணினான். மிகவும் மெதுவாக தனது டூவீலரை செலுத்திக்கொண்டே கவனித்துக்கொண்டு பின் தொடர்ந்தான்.

எவ்வளவு மெதுவாக பைக்கை ஓட்டினாலும், ஒரு பாய்ண்டில் அவளை நெறுங்கி கடக்க வேண்டியது வந்தது... அவளும் குறுக்கே நடந்து கடந்து,  மறு பக்கத்திற்குச் செல்ல நினைத்து...  பைக் வருவதை பின்னால் திரும்பிக் கவனிக்காமல் வந்துகொண்டிருந்த வண்ணனின் டூவீலருக்கு குறுக்கே பாய்ந்துவிட்டாள்.

சடன்பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியவன், “லூசு... குறுக்கப் பாயிற..? நான் ஸ்லோவா வந்ததால சுதாரிக்க முடிஞ்சது... வளர்ந்திருக்கியே கொஞ்சமாவது அறிவிருக்க...?” என்று கோபத்தில் வார்த்தைகளை விட்டான்.

ஏற்கனவே எதிரில் இருக்கும் பங்களாவின் இருந்த 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற வாசகத்தை ‘நேம் போர்டு’ என்று தவறாக எண்ணி உற்றுக் கவனிக்க குறுக்கே ஓடி கடக்க முயன்றவள்... சட்டென வண்டியில் அடிபடப்பட்டு விடுவோமோ என்று  சமீபத்துவிட்ட வண்டியை கவனித்து அதிர்ந்து அசையாமல் ஆணி அடித்ததுபோல கண்ணை மூடி நின்றவளை அந்த பைக் தொட்டு இடிக்காமல் நின்றது.

அத்தோடு அந்த காம்பவுண்டுக்குள் இருந்து நாய்வேறு லொள்... லொள்... என்று குறைக்க ஆரம்பித்தது... அதில் அவளின் இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்த நேரம் பைக்காரன் கணீர் என்ற குரலில் கேட்ட வசவுகள், அவளை கோவம், அவமானம், பயம் போன்ற உணர்வுகளில் தாக்க... ரத்தம் சூடாகி  பாய்ந்த முகம் சிவந்துப் போனது.

அவ்வாறாக திட்டியவனை முறைத்துப் பார்த்துக்கொண்டு மிக மெதுவாக வாய்க்குள் “போடா... டெவில்..” என்று முணுமுணுத்துக்கொண்டே சட்டென ரைட் சைடில் திரும்பிய தெருவிற்குள் சென்று மறைந்தாள்.

---தொடரும்---

 

 

 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib