இனிக்கும் விஷம் (தீபாஸ்)
அத்தியாயம் 12
சட்டென
அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்து “எக்ஸ்கியூஸ் மீ” எனச்சொல்லி அந்த
இடத்தைவிட்டு ரெஸ்ட்ரூம் போவது போல போக்கு காட்டியபடி விலகிச் சென்றாள்
நட்சத்திரா.
அந்த இளம்
டைரக்டரிடம் கைக் குலுக்கிவிட்டு அவர்களோடு அதே மேஜையில் அமர்ந்துகொள்ளப் போன
வண்ணன், அவள் எழுந்தது போகவும் மனதிற்குள் “ஓடப் பார்க்குறாளோ?...’ என்று எண்ணிக்கொண்டே
ஷியாமிடம் “உங்க
புது ப்ராஜெக்ட் பற்றி சொல்லுங்க” என்றான். தான் அவளுக்காகவே பேசவந்தது தெரியக்கூடாதென
தொடர்ந்து பேச்சை வளர்த்தான்.
நட்சத்திராவோ
ரெஸ்ட் ரூம் பக்கம் போவது போல போக்குக் காட்டிவிட்டு சுற்றி நடந்து. தனது மொபைலை எடுத்து
வகுலாவுக்கு டயல் செய்தபடி வாசலை நோக்கி
நடந்தாள்.
டால் என்ற
பெயரில் வந்த அழைப்பை பார்த்து ‘என்ன ரெஸ்ட் ரூம் போனவ கால் பண்றா..?’ என்ற
யோசனையுடன் அட்டன் செய்தவளிடம்,
“வகுலா,
பேசுறது நான்னு காட்டிக்காத, என்னைய காலையில விரட்டிட்டு வந்தவன் இப்போ உங்க கூடத்தான் உட்கார்ந்து
இருக்கான். நான் அவன் கிட்ட மாட்டக்கூடாது அதனால கிளம்புறேன். என்னையப் பத்தி
எதாவது கேட்டா நட்சத்திரான்ற பேரை தவிர வேற எதையும் சொல்லாத” எனச் சொல்லிவிட்டு
கட் செய்தாள்.
வகுலாவுக்கு
ஒன்றுமே புரியவில்லை, “இந்த டால் சரியில்லை, எதோ மர்மப் பட ரீல்ஸ்ல உள்ள கேரக்டர்
போலவே நடந்துக்குறா...’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டளின் முகக் குறிப்பைக் கவனித்தான்
வண்ணன்.
‘இவளுக்கு, இப்போ அவள்தான் போன் பண்ணி கிளம்புறதா சொல்லி இருப்பாளோ...?’ என்று நினைத்தான்.
வகுலாவோ, இவன்தான் காலையில இருந்து டால் பார்த்து பயந்துகிட்டு இருக்கிற டெவிலா...என்று எண்ணியபடி வண்ணனின் முகத்தைப் பார்த்தாள்,
கூர்
பார்வையில் அவளை பார்த்துக்கொண்டிருந்தான் வண்ணன். அவனின் பார்வையில் வகுலாவுக்கு குளிரெடுக்க
ஆரம்பித்தது. தானாக அவளின் வாய் உளறிக் கொட்டியது,
“சார்...
ஒன்னும் இல்ல... என் ஃப்ரெண்டுக்கு முக்கியமான வேலை வந்துருச்சாம், அதுதான்
கிளம்புறேன்னு போன் பண்ணினாள்” என்று திக்கித்திணறி சொன்னவள் மனதினுள் ‘ஹய்யோ உளறிக்
கொட்டுறேனே...’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
அவளின்
வார்த்தையைக் கேட்டவன், ‘நான் நெனச்சது சரி தான், எஸ் ஆகப் பார்க்குறா... ‘ என்று
கண்டுகொண்டான்.
டேபிளுக்கு
கீழே கையில் வைத்திருந்த மொபைலைக் கொண்டு இவர்கள் கவனிக்காதவாறு தனது மொபைலில்
அழைப்பு வந்தது போல ரிங் டோனை ஒலிக்க விட்டான்.
சட்டென தனக்கு
கால் வந்திருப்பதாக அட்டன் செய்வது காதிற்கு கொடுத்து, “ம்...ஓகே இதோ
கிளம்பிட்டேன்” என்று சொல்லிவிட்டு ஷியாமிடம், “பிறகு பார்க்கலாம், ஒரு முக்கியமான
வேலை, நான் கிளம்புறேன்” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அந்த பில்டிங்
விட்டு வெளியில் வந்த நட்சத்திரா என்ட்ரென்ஸ் கேட் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
செல்லும் வழியில் இருந்த வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அவள் கடக்க முயன்ற நேரம் வேக
நடையுடன் அங்கு வந்து சேர்ந்தான் வண்ணன்.
அவள்
ரெஸ்ட்ரூம் பக்கம் சென்று சுற்றி நடந்து அந்த பில்டிங் விட்டு வெளியில் வர சற்று
தாமதமானதால் வெளியில் அவள் செல்லும் முன்பே அவனால் அவளை பார்த்துவிட முடிந்தது.
இருந்தும் ‘அந்த
காம்பவுண்டுக்குள் அவளுடன் மல்லுக்கட்டினால் மற்றவர்களின் பார்வையில் படும்...
வெளியில் இருக்கும் கேமராவில் பதிவாகி ரசவாதமாகும்.... அவளை முன்னே நடக்க விட்டு
கேட் வெளியில் சென்றபின் மடக்கலாம்’ என்று பதுங்கிக்கொண்டான்.
பொதுவாக அங்கு
வந்தவர்களுள் தொண்ணுறு சதவீதத்துக்கும் மேலானோர் லக்சூரியஸ் கார்களில் தான் வந்து போவார்கள்,
அங்கு வேலைபார்ப்பவர்களுடன் ஒரு சிலர் மட்டுமே டூ வீலரில் வந்திருந்தார்கள்.
அங்கிருந்த
பிரமாண்டமான கார்களுக்கு இடையில் தனித்து கம்பீரமாக பளபளவென்று நின்றிருந்த அவனின்
கருப்பு நிற டூவீலர் துண்டாக அவளுக்கு தெரிந்தது. இது அந்த டெவிலோட வண்டி தானே...?
என்று எண்ணியவள் சுற்றும் முற்றும் யாரும் இருக்கிறார்களா என்று நோட்டம் விட்டாள்.
“இவ என்ன
பண்ணப் போறா...? எதுக்கு எதுவோ திருட்டுத்தனம் பண்றது போல முழிக்கிறாள்...? என்று
மறைந்திருந்தபடி உற்றுக் கவனித்தான்.
அவள் தனது
ஹேன்ட் பேக்கிற்குள் இருந்து கைக்கு அடக்கமாக எதுவோ ஒன்றை எடுத்துக்கொண்டு தனது
பைக்கை நெருங்குவதை கவனித்தவன் மூச்சு விடாமல் பூனை போல பதுங்கியபடி அவளை நோக்கி
முன்னேறினான்.
தனது பைக்
அருகில் குனிந்தவளை பின்னிருந்து கோழியை அமுக்குவது போல அமுக்கி அவளின் கரத்தில்
உள்ளதை பிடுங்க முயன்றான்.
விலகி ஓட
முயன்றவளை பிடித்து கால்களுக்குள் இடையில் அமுக்கி கிடுக்குப் பிடி போட்டு நகரவிடாமல்
பிடித்துக்கொண்டான்.
சட்டென ஒருவன்
பின்னால் இருந்து தன்னை பிடித்துக்கொண்டதும் கத்தப்போனவளின் வாயில் ஒரு கையை
வைத்துப் பொத்திக்கொண்டு அவளின் கரத்தில் உள்ளதை கைப்பற்ற முயன்றவனிடம்
மல்லுக்கட்டினாள்.
அவனின்
பலத்துக்கு முன் அவளால் எதுவுமே செய்யமுடியவில்லை, கையில் இருந்ததை அவனிடம்
பரிகொடுத்தாள். அது நெக வெட்டிதான் அழுக்கெடுக்க இருக்கும் ஷார்பான கொக்கி போன்ற
ஹூகினை எடுத்து வைத்திருந்தாள்.
தனது
டூவீலரின் டயரை பஞ்சர் ஆக்க முனைந்த அவளின் சிறுபிள்ளை தனத்தில் சிரிப்பும்
கோபமும் ஒரு சேர அவனுக்குள் முளைத்தது.
அவனின் கண்கள்
அங்கிருந்த கேமிராவின் கண்களை பார்த்ததும் சட்டென அவளை வேண்டுமென்றே நழுவ
விட்டான்.
வில்லில்
இருந்து புறப்பட்ட அம்பாக வெளியில் செல்லும் கேட்டை நோக்கி பாய்ந்து ஓடினாள். தான்
இருப்பதும், இருக்கும் இடமும் வண்ணனின் மூலம் அவளது தந்தை முகில் அதியனுக்குத்
தெரிந்து.... முகில் மூலம் அவரின் மனைவி சந்திரிக்காவுக்கு தெரிந்தால்...!? அவாளவுதான்
நான் செத்தேன்...’ என்ற பதட்டம் அவளை தொற்றிக்கொண்டது.
வண்ணனோ.. ‘காம்பவுண்டு
கேட்டை விட்டுத் தாண்டுற அவளால்... அந்த ஏரியாவில் தள்ளித்தள்ளி அங்கொன்னும்
இங்கொன்னும் இருக்கும் இந்த பங்களாக்களை விட்டு ரோட்டுக்குப் போக குறைந்தது
முக்கால் மணி நேரமாவது எடுக்கும்.... அதற்குள் அவளை மடக்கி
விடமுடியும்.... மடக்கி தனது வழிக்கு கொண்டுவந்துவிட முடியும்....’ என்று
நினைத்தான்.
கேட்டை விட்டு
வெளியில் வந்தவளுக்கு எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என்றே புரியவில்லை, ஒரு
நிமிடம் நின்று மூச்சை இழுத்துப் பிடித்தவள் டேக்ஸியில் வகுலாவுடன் வந்த பக்கத்தை
நினைவில் கொண்டு வந்து அந்த பக்கம் ஓட
ஆரம்பித்தாள்.
தனக்கு
பின்னால் அவனின் டூவீலர் வருகிறதா என்று திரும்பிப் பார்த்துவிட்டு மறுபடி
ரோட்டுக்கு செல்லும் பாதையில் நடந்துகொண்டே தனது மொபைலில் கால் டேக்சி புக் பண்ண
முயன்றாள்.
அவளின் பின்பு
டூவீலர் வரும் அரவம் உணர்ந்து சட்டென இரு பில்டிங்கின் இடையில் இருக்கும் மூன்று நபர்கள்
செல்லக்கூடிய அளவில் இருந்த சற்று பெரிய சந்தில் பதுங்கி நின்றாள்.
அவள்
எந்தப்பக்கம் ஓடுகிறாள் என்பதை கவனித்தே தனது வாகனத்தை அப்பாதையில் செலுத்தினான்
வண்ணன், ஆனால் கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை அவளை பார்க்க முடியாததால் ‘எங்கேயோ
பதுங்கி நிக்கிறா...’ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
சுற்றி முற்றி
கண்களை அலையவிட்டான், அங்கிருந்த இரண்டு பங்களாவையும் கவனித்தான் அதன் கேட்டிற்குள்ளும்
குதித்து போக வழியில்லை, அப்போ எங்க போயிருப்பா...? என்று யோசித்தவனுக்கு இரண்டு பங்களாவின்
மதில் சுவர்களுக்கு இடையில் இருந்த சந்து கண்ணுக்குத் தெரிந்ததும், அது தவிர்த்து
பதுங்க வேறு இடம் இல்லை என்பது புரிந்தது .
சந்திற்குள்
அவனது டூவீலரில் செல்வது சரியில்லை என்று நினைத்து வண்டியை ஓரமாக நிறுத்தியவன் சாவியை எடுத்து பாக்கெட்டுக்குள்
போட்டபடி சந்தினை நோக்கி நடந்தான்.
அவன் தான்
இருக்கும் பக்கம் வருவதைக் கண்டு ஓட ஆரம்பித்தாள். பாதி தூரம் ஓடியவளுக்கு பின்னால்
அவன் வருவதும் முன்னால் போகும் சந்தின் பாதை ஒரு எல்லையோடு முடிந்துவிடுவதையும்
கண்டு அவனிடம் மாட்டாமல் இருக்க என்ன செய்ய...? என்ற யோசனையோடு ஓடியவள் காம்பவுண்டு
சுவரில் ஏறி குதித்து விட்டால் தப்பித்து விடலாம்... ஏற வசதி உள்ளதா...? என்று
பார்த்தாள்
அவளின் உடை
வேறு அதற்கு தோதாக இருந்தது. எனவே சற்றும் யோசிக்காமல் உயரமான அந்த காம்பவுண்டு
சுவரில் ஏற.... அதன் பக்கத்தில் இருக்கும் மரத்தின் ஏறி மதில் சுவரை அடைய நினைத்தாள்.
உடனே ஒரு வேகத்தில் மரத்தில் ஏறி விட்டாள். அது தானாக முளைத்த புளிய மரம். பொதுவாகவே
புளிய மரத்தில் ஏறுவது புத்திசாலித்தனம் இல்லை. அதன் கிளைகள் எளிதாக முறிந்துவிடும்.
அதுவோ இளமரம்,
தற்போதுதான் கிளையும் இலையும் விட்டு படர்ந்து இருந்தது. கொப்புகளில் கைகளால்
பற்றி ஏறி உயரத்துக்குச் சென்று மதில் சுவற்றின் மேல் புறத்தில் கை வைத்த போதுதான்
கண்ணாடித் துண்டுகள் பதித்திருப்பது
அவளுக்குப் புரிந்தது. ‘இந்த சுவத்தில ஏறினோம்... செத்தோம்...’ என்று உணர்வில் அதிர்ச்சியும்
சோர்வும் உண்டாக அக்கிளையிலேயே அமர்ந்துவிட்டாள்.
எதோ வேகத்தில்
ஏறிவிட்டாள் ஆனால் இப்பொழுது இறங்க நினைத்தவளுக்கு கால்கள் வேறு நடுங்க
ஆரம்பித்தது.
அவளை
வேண்டுமென்றே ஓடவிட்டான், அவன் நினைத்திருந்தால் வேக எட்டில் அவளை
பிடித்திருக்கலாம், ஓடி அவளின் எனர்ஜி காலியாகட்டும் என்றே விட்டு விட்டு பின்
தொடர்ந்தான். தொடர்ந்தவன் மரத்தில் அவள் ஏறுவதையும் கவனிக்கத் தவறவில்லை.
அந்த
மரத்துக்கு அடியில் வந்து நின்றவனுக்கு அவளின் நிலை புரிந்தது, எனவே சத்தமாக “உன்னால
இனி எங்கயும் ஓட முடியாது... நான் உன்னைய ஒன்னும் பண்ணமாட்டேன்... உனக்கு ஹெல்ப்
பண்ணத்தான் வந்துருக்கேன்.. பார்த்து இறங்கு.... நான் வேணா ஹெல்ப் பண்ணட்டா...?”
என்றான்.
அவன் தன்னை
அவனிடம் சரணடைய சொல்லுவது பயத்தை கொடுத்தாலும் வெளியில் காட்டாமல் “ஹலோ சார்,
நீங்க யாரு எனக்கு ஹெல்ப் பண்ண...? உங்க ஹெல்ப் ஒன்னும் வேணாம்... நீங்க இங்க
இருந்து கிளம்புங்க....” என்றாள்.
மரத்தின் கிளை
அவளின் எடை தாங்காமல் வளைந்து கொண்டே வந்தது எந்நேரமாமும் அந்த கொப்பு உடைந்து அதனுடன்
சேர்ந்து அவளும் கீழே விழுக வேண்டியது வரும் என்பதை அவன் உணர்ந்துக் கொண்டான்.
தனது பையில்
இருந்த டார்ச்சை எடுத்து அவளின் மேல் ஒளியை அடித்தபடி “இங்க பாரு, இன்னும் கொஞ்ச
நேரத்தில் கொப்பு ஒடஞ்சு நீ விழுந்து மண்டைய உடைச்சுக்கிடத்தான் போற... நான் சொல்றதைக் கேட்டா... நீ இறங்க உனக்கு நான்
ஹெல்ப் பண்ணுறேன்” என்று சொன்னான்.
அவளும் கிளை
கொஞ்சம் கொஞ்சமாக வளைந்து கொண்டு போவதை கவனித்து பயந்தது நடுங்கியவளின் கால்
கிளைவிட்டு நழுவியது. விழுகாமல் இருக்க மரக்கிளைகளை பற்றியவளின் கால் அந்தரத்தில்
தொங்கியது. ஆமாம் மரத்தில் கிளைகளை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தாள்.
அவளின் எடை
தாங்காமல் கிளை உடைந்து கீழே விழுக இருந்தவளை கைகளில் ஏந்திக் கொண்டான் வண்ணன்.
விழுந்து
அடிபடப் போகிறோம் என்ற பயத்திலேயே மூர்ச்சையாகி விழுந்தவளை அவனின் கைகளில்
பூமாலையாக ஏந்திக் கொண்டான்.
தனது மொபைலை
எடுத்து ரீட்டாவை அழைத்தான். உதித்தோடு சல்லாபித்து முடித்தவள் போதையில் இருந்தவனை
விலக்கிவிட்டு சற்று தள்ளி நின்று “சொல்லுங்க சார்” என்றதும், தான் இருக்கும்
இடத்தைச் சொல்லி குவிக்கா உடனே ஒரு காரை எடுத்துக்கொண்டு வரச்சொல்லிவிட்டு, கையில்
அவளை ஏந்தியபடி நடந்தான்.
ரீட்டாவுக்கு
அந்த பப்பில் வேலை பார்க்கும் வேலையாட்கள் சிலருடன் நல்ல பழக்கம் இருந்தது. எனவே
அவர்களின் ஒருவனான வினோத்தை தேடிச்சென்றாள்.
சற்று தூரம்
கையில் அவளை ஏந்தியபடி நடந்தவன் அந்த நிலவொளியில் அவளது முகத்தை மிக அருகில்
பார்த்தான். குமரியின் உருவத்தில் குழந்தையின் மென்மையான சருமத்துடன் கூடிய அழகான
அவளின் முகத்தைக் கண்டதும் வண்ணனின் முகத்தில் மென்மை படர்ந்தது...
ஆனால் மனதில் “இடியட்...
லவ்வுக்கு ஜூஸ் பண்ண வேற ஆளே கிடைக்கலையா உனக்கு...? பணக்காரன் லவ் பண்ணினா அவனோட
கேரக்டரை கண்டுக்காம விட்டுடுராங்க இந்த பொண்ணுங்க..
அதுதான் இப்படி
ஒரு இடத்தில் இவங்களை கொண்டு வந்து விட்டுருது... என்று லாராவாக அவளை நினைத்து
தனக்குள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளின் மயக்கம் தெளிய ஆரம்பித்தது.
கண்களை மெதுவாக
திறந்து பார்த்தவள், தன் முகத்துக்கு அருகில் தெரிந்த முகத்தை கண்டதும் அதிர்ந்து
அவனின் கையில் இருந்து துள்ளி இறங்க முயன்றாள்.
----தொடரும்----
No comments:
Post a Comment