இனிக்கும் விஷம் (தீபாஸ்)
அத்தியாயம் –
13
நிலவின்
ஒளியில் தனது கைகளில் இருந்தவள் கண்களை மலர்த்தி விழிக்கும்போதே அடுத்து அவள்
துள்ளியபடி தன்னிடம் இருந்து தப்பிக்கப் பார்ப்பாள் எனத் தெரிந்ததால் அவளை தன்னோடு
சேர்ந்து இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தான் வண்ணன்.
அவன்
நினைத்தது போல துள்ளிக் குதித்து நழுவ முயன்றவளின் பாதத்தை மட்டும் ரோட்டில் படுமாறு
நழுவ விட்டவன்... நடையை நிறுத்தி அவளின் கைகள் இரண்டையும்... அவளின் முதுகுக்குப்
பின் கொண்டுசென்று பிணைத்துப் பிடித்து, தன்னைப் பார்த்தபடி நிறுத்தினான்.
மிகவும் நெருக்கமான
நிலையில் அந்நிய ஆடவனின் முரட்டுப் பிடியில் நின்றுக்கொண்டிருந்தவளுக்கு கண்களில்
கண்ணீர் திரண்டு நிறைந்தது...
அவனின் மார்பை
தாண்டி கழுத்துவரை இருந்தவள் நிமிர்ந்து வண்ணனின் முகம் பார்த்தாள். அவமானத்தில் கண்ணீர்
குளம் போல் அணைகட்டிய கண்களுடன், உதடு துடிக்க “செய்... விடு... விடுடா...
டெவில்...” என்று சொன்னவளின் அழகு அந்தே நேரத்தில் அவனை சலனப் படுத்தியதால் தனது
மண்டையிலேயே மானசீகமாகக் கொட்டு வைத்துக்கொண்டான்.
அப்படி
இருந்தாலும் அடங்காமல் “ஹா... ஹா... ஹா... டெவில் என்ன செய்யும் தெரியுமா...?
அப்படியே கடிச்சு ரத்தத்தை உறிஞ்சிடும்” என்று கடிப்பதுபோல செய்து காட்டினான்.
அவனின் பேச்சிலும்
செய்கையிலும் இன்னும் பயந்து போனாள், அவனின் நீண்ட அகண்ட கண்களும் நேர் நாசியும்
அவனின் நிறத்துக்கு ஏற்றது போல இல்லாமல் சற்று கருத்து போய் தடித்து கிடந்த உதடுகள்
தாடி மீசைக்குள் அடங்கி இருந்தவனின் முகத்தோற்றம் லட்சனமாக இருந்தாலும்... அந்த
கண்களில் இருந்த ஒரு ஸ்பார்க் அவளை அச்சுறுத்தியது.
அதைவிட ஆறடி
உயரத்தில் திடகாத்திரமான தேகத்துடன் அடங்காத முடிக்கற்றைகள் கொண்டவனின் கருப்பு
நிற பணியனும், சாம்பல் நிற ஜீன்சும் அவனை அரக்கன் போலவே அவளின் கண்களுக்கு
காட்டியது.
அவன் அழகை
ரசிப்பவன் தான் ஆனால் எந்த பெண்களுடனும் அத்துமீற நினைத்துக் கூட பார்க்க மாட்டான்
என்ற விஷயம் அவளுக்குத் தெரியாது அல்லவா...
அவனுமே எந்த
பெண்களையும் இப்படி கையில் சுமந்தது நெருங்கி நிறுத்தியது இல்லை. ஆண்களை ஈசியாக
கையாள முடிந்த அவனால் இத்தனை நெருக்கத்தில் அழகான பெண் ஒருத்தியைக் கையாள
முடியாமல் தடுமாறித்தான் போனான்.
அவன்
மனத்தினும் “செய் மனுஷனாடா நீ...? அவள் உதித்தின் ஃப்யான்ஷி” என்று தனக்குள்ளே
சொல்லியவன் முகம் கடுமையானது.
“ஸ்.....
ஒழுங்கா கூட வந்துட்டா... அடி படாம கூட்டிட்டுப் போய் உன்கூட பேச்சு வார்த்தை
நடத்துவேன். அடம் புடிச்சே..... போலிஸ் டிரீட்மென்ட் தெரியுமில்ல, டிரைனிங்
போகாமலேயே அம்புட்டையும் கத்து வச்சுருக்கேன்” என்று பல்லை கடித்தபடி அவளை
முன்னால் திருப்பி கைகள் இரண்டையும் அவளின் பின் பக்கம் இழுத்து பிடித்தபடி நடக்க
சொல்லி முன்னாள் உந்தித் தள்ளினான்.
அந்த
பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. சந்தை விட்டு வெளியேறிவிட்டால்
யாரிடமாவது உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு என்று எண்ணத்தோடு நடந்தாள்.
ஆனால் ரோட்டுக்கு
வந்தும் ஆள் யாரும் நடமாடாமல் வெறிச்சோடிக் கிடப்பதைக் கண்டவள் ‘ஆண்டவா... யாராவது
இந்த பாதையில் வரக் கூடாதா..? வந்து எனக்கு ஹெல்ப் பண்ணக் கூடாதா...?’ என்று
யோசித்துக்கொண்டிருக்கும் போது ஒரு கார் வருவதைக் கண்டதும் கடவுளை கண்டது போலமுகம்
பிரகாசமானது நட்சத்திராவுக்கு.
அவனின்
பிடியில் நின்றுகொண்டே “ஹெல்ப்... ஹெல்ப்... ஹெல்ப்...” என்று கூச்சல் போட்டாள்.
வேகமாக வந்தகார் ஸ்லோ ஆகவும் தன்னை பிடித்திருந்தவனாசி இழுத்துக்கொண்டே போய் “சார்...
சார்... சார்... பிளீஸ் சார், இவன்கிட்ட இருந்து என்னைய காப்பாத்துங்க சார்” என்று
நின்ற காரினுள் அமர்ந்திருந்தவர்களிடம் குனிந்து பேசினாள், வண்ணனின் பிடியில்
நின்றுகொண்டே.
நிறுத்திய
காரிலிருந்து டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருத்தி இவள் பேசுவதை
பார்த்துக்கொண்டே இறங்கவும், அவகளுக்கு நம்பிக்கை துளிர்விட்டது.இறங்கியவள் பின்
கதவை திறந்து பிடித்து நின்றாள்.
அது ரீட்டா வண்ணன்
சொன்னதால் எடுத்து வந்திருக்கும் கார். ரீட்டா கார் கதவை திறந்து வைக்க அதனுள்
வண்ணன் அவளை திமிர திமிர உந்தி உள்ளே தள்ளினான்.
“மேம்...
மேம்... பிளீஸ், ஹய்யோ என்னை விட்டுடுங்களேன்” என்றவளுக்கு அக்கார் இந்த டெவில்
வரவழைத்த கார் என்பது அப்பொழுதுதான் புரிந்தது. ஆனால் இப்பொழுது இவனுடன்
மல்லுகட்டுவதில் எந்த புரயோஜனமும் இல்லை எனத்தெரிந்து சோர்ந்து போய் காரில்
அமர்ந்துவிட்டாள்.
அவனும் உள்ளே ஏறி
அமர்ந்து, டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவனிடம் கைகளை நீட்ட நீண்ட கயிறு ஒன்றை
எடுத்துக் கொடுத்தான். அதைகொண்டு பின்னால் கைகளை கட்டியவன், மீண்டும் டிரைவரிடம்
கை நீட்ட அவன் கொடுத்த பண்டல் சுற்ற வைத்திருக்கும் பெரிய டேப்பை எடுத்துக்கொடுக்க
நட்சத்திராவின் வாயில் ஓட்டி விட்டான்,
ரீட்டாவிடம் “நீ
இவளை நேரா என்னோட இடத்துக்கே கூட்டிக்கிட்டு வா நானும் பின்னாடியே வாரேன். வேற
எங்கயும் இடையில் காரை நிப்பாட்டாத, டிராபிக்கில் வண்டி நிக்கிற நிலை வந்தா...
அப்போ ஏதாவது இவள் சேட்டை பண்ணினா... இதோ இது குலோரோபார்ம் உள்ள கர்சீப் முகத்தில்
வச்சு அழுத்தி பிடிச்சுக்கோ. கொஞ்ச நீரத்தில் மயங்கிடுவா... “
எனச்சொல்லிவிட்டு
காரைவிட்டு இறங்கவும் கார் நட்ச்சத்திராவை சுமந்துகொண்டு நகர்ந்தது. அதன் பின்பு
தனது பைக்கை எடுத்துகொண்டு பின் தொடர்ந்தான் வண்ணன்.
.
*********
தனது பங்களாவில் பின்னால் இருந்த புழங்காமல் பூட்டி
வைத்திருந்த அறையில் இரண்டு சேர்கள் மட்டும் இருந்தது. ஒன்றில் நட்சத்திராவும்
மற்றொன்றில் வண்ணனும் அமர்ந்திருந்தார்கள்.
“சொல்லு
எதுக்காக உதித்தை தேடி வந்த...?” என்றான்.
“உதித்தா...?
அப்படி யாரையுமே எனக்குத் தெரியாதே... நீங்க தப்பா என்கிட்ட விசாரிக்கிறீங்க?”
“அப்போ உனக்கு
உதித் யாருன்னு தெரியாது... சரிதானே? நல்லா யோசனை பண்ணி பதில் சொல்லு” என்றதும்
கொஞ்சம் அரண்ட முகத்துடன் “தெரியாது...” என்றதும்.
வண்ணன் அவளை
பார்த்து கோணலாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு தனது மொபைலில் யுகாந்தனின் வீட்டு
வாசலில் வாட்ச்மேனிடம் “உதித் முகிலை பார்க்கணும் இருக்கார்ல..?” என்று அவள்
கேட்பதும்
“அப்படி
யாரும் இங்க இல்லைம்மா” என வாட்ச்மேன் சொல்வதும், ஓ... இது அவசங்க பங்கலா கிடையாதா...
இந்த ஏரியாவில் தானே வி.ஐ.பி முகில் அதியன் பங்களா இருக்குது... அது எதுன்னு சொல்ல
முடியுமா...?” என்று மீண்டும் அவள் கேட்பதும்.
“அப்படிலாம்
இங்க யாரும் இல்லைமா, நீங்க அட்ரஸ் மாறி வந்துருக்கீங்க போங்க...” என்று
விரட்டுவதும் பதிவாகி இருந்ததை ஓடவிட்டு அவளிடம் காட்டினான்.
கேட்
பக்கத்துல இருந்த சி சி.டிவி பூட் ஏஜ்ல இருந்து அப்பவே நான் சுடச் சுட சுட்டு என்
மொபைலில் எடுத்துக்கிட்ட வீடியோ இது” என்றவன் மிதப்பமாக அவளை பார்த்தபடி, “எங்கே
இப்போ உதித் யாருன்னு தெரியாதுன்னு சொல்லு பாப்போம்...!” என்றான்.
“அது...
அது... “ என்று சொன்னவள் அதற்கு மேல் சொல்ல முடியாமல் திணறினாள். படபடப்பில்
அவளுக்கு முத்து முத்தாக வேர்த்து வடிந்தது.
“சரி...
உதித்த எதுக்கு தேடி வந்தனு சொல்ல மாட்ட, இதுக்காவது பதில் சொல்லுவியா அதுதான் லாராவை
பத்தி....?” என்றதும்.
அவள் கண்ணில்
முத்து முத்தாக கண்ணீர் திரண்டு கன்னத்தில் உருண்டது... கண்களில் ஒரு ஆவேசம்
அவளுக்கு உண்டானது,
“அதுதான்
எல்லாத்தையும் விட்டு ஒதுங்கிக்கிறோம் எதையும் மூச்சு விடமாட்டோம் எங்களை
விட்டுடுங்கனு சொன்னோமே... அப்படி இருந்தும் அந்த சந்திரிக்காவுக்கு வன்மம்
அடங்கலையா...? செய் அவளெல்லாம் ஒரு பொம்பளை...? அவளுக்காக வேலை பார்க்கிற உன்கிட்ட
மனிஷத் தன்மையை எதிர்பார்க்கவா முடியும்?” என்றாள்.
அவள் பேசப்
பேச வண்ணனின் புருவம் இடுங்கியது... “லுக்... லாரா, உனக்கு என்ன ஆச்சு...? எதுக்கு நீ, இங்க வந்து தலைமறைவா
இருக்கன்ற உண்மையை சொல்லு, நான் உன்னைய இந்த பிரச்சனையில் இருந்து வெளியில்
கொண்டுவாரேன்”
அவன் தன்னை
லாரா என்று சொன்னதும் “என்ன போட்டு வாங்குறீங்களா..? நான் ஒன்னும் லாரா கிடையாது”
என்றாள்.
“ஸ்... இப்படி
நீ முரண்டு பிடிக்கிறதால ஒன்னும் ஆகப் போறது இல்ல, சந்திரிக்கா உனக்கு மட்டும்
எதிரியில்லை, எனக்கும் தான். நமக்கு பொதுவான எதிரிதான் அவள், அவளுக்காக நான் வேலை
பார்க்கலை, அவள்கிட்ட இருந்து உன்னை காப்பாத்த என்னால முடியும்... சொல்லு ஏன்
இப்படி மும்பையில் இருந்து இங்க வந்து தலைமறைவாகி இருக்க..?”
“ஆடு
நனையுதேன்னு ஓனான் கவலைப் பட்டுச்சான், இப்படித்தான் உதித்ததும் பேசி நம்பவச்சான்..
நமக்கு பொது எதிரி அந்த சந்திரிக்கானு சொன்ன பொய்யை நம்பித்தான் அவன் கூட பழகி இப்போ
மோஷம் போய் நிக்கிறோம்” என்றவளுக்கு கண்கள் கண்ணீரில் நிறைந்தது.
“உதித்தை கல்யாணம்
பண்ணிக்கப் போறாம்னு எவ்வளவு ஆசையா என்கிட்டே லாரா சொன்னா தெரியுமா...? குடும்பமா
வாழப் போறோம்னு எவ்வளவு சந்தோசப்பட்டா தெரியுமா...
அம்மா, அப்பா,
தாத்தா, பாட்டி, கூடபிறந்தவங்கனு எல்லோரும் இருந்தும் யாரையும் வெளியில்,அடையாளம்
காட்ட முடியாம இருக்கிற நிலை கொடுமை. அதுக்கு அனாதையாவே நின்னு இருக்கலாம்னு
எவ்வளவு முறை அழுதிருப்போம்...” என்று கண்ணீருடன் பேசியவள், கோபத்துடன் தனது
கண்களை துடைத்துவிட்டு.
“பணம் பணம்னு
ஏன் இப்படி பேயா அலையிறீங்க, நீங்க எல்லாரும் பணப் பேய்ங்க, மனுஷ உருவத்துல
இருக்கிற டெவில் நீங்க” என்று ஆத்திரத்துடன் பேசி முடித்தாள்.
அவள் பேசுவதை
நிதானமாக வேடிக்கைப் பார்த்தவன், “பேசிட்டியா..? பேசி முடிச்சிட்டியா..? இப்போ
நான் கேக்குறதுக்கு பதிலைச் சொல்லு....
ஆமா நாங்க...
நாங்கன்னு... சொல்றீயே...! அந்த நாங்கள்ல ஒன்னு லாரா, இன்னும் எத்தனை பேரு
சொல்லு....? நீ லாரா இல்லைன்னா உன் பேர் என்ன...? நீ எங்க இருந்து வந்த...? இப்போ
சென்னையில என்ன பண்ணிக்கிட்டு இருக்க...?” என்றான்.
‘இவன் திரும்ப
ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கே வந்து நிக்கிறானே..., ஆத்திரத்தில நான் வேற வாயை
விட்டுட்டேனோ...? இவன் சொல்றது போல உண்மையாவே சந்திரிக்காவுக்கு வேலை பார்க்கிறவன்
இல்லையோ...?” என்று யோசித்தபடி கேட்டதுக்கு பதில் சொல்லாமல் அழுத்தமாக அமர்ந்து
இருந்தாள்.
வண்ணனோ அவள்
தன்னை லாரா இல்லை என்று சாதிப்பதை... சந்தர்ப்பமும் சூழலும் பொய் என்று சொல்ல... அவன்
உள் மனமோ அவள் வார்த்தை ஒவ்வொன்றும் சத்தியமான உண்மை என்று கூறியது... அமைதியாக
இருந்தவளை துளைக்கும் பார்வை பார்த்தபடி தனது மொபைலுக்கு லாரா உதித் நிச்சியத்தின்
போது எடுத்திருந்த போட்டோக்கள் இருந்ததை கேலரியில் போய் தேடி எடுத்தான்.
அதில் உள்ள ஒவ்வொரு
போட்டோவாக எடுத்து லாராவுடன் எதிரில் அமர்ந்திருப்பவளின் முகச்சாடையில்
ஒத்துப்போகும் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் அவனை குழப்பி விட்டது.
ஒன்றன் பின்
ஒன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தவன்
ஒரு போட்டோவை எடுத்ததுப் பார்த்ததும் அவன்
கண்கள் விடை கிடைத்த மகிழ்ச்சியில் அகல விரிந்தது. அவளின் உதடுகளில் புன்னகையில்
விரிந்தது.
---தொடரும்---
No comments:
Post a Comment