இனிக்கும் விஷம் (தீபாஸ்)
அத்தியாயம் 14
நிச்சயதார்த்த போட்டோக்களில் லாரா மணப்பெண் அலங்காரத்தில்
இருக்கிறாள். வேறு எதுவும் சாதாரண போட்டோ ஒன்றை அனுப்பு உதித் என்று மணப்பெண் அலங்காரத்தில் இல்லாத லாராவின்
போட்டோவை கேட்டு வாங்கி இருந்தான் வண்ணன்.
அவ்வாறாக தனக்கு அனுப்பிய போட்டோவின் பேக்ரவுண்டில்,
சந்திரிக்காவின் இளவயது வால்பேப்பர் அளவில் உள்ள போட்டோவும் பதிவாகி இருந்தது.
அதைக்கொண்டு சந்திரிக்காவின் வீட்டில்
லாரா இருக்கும் போது எடுத்த போட்டோவென்ற புரிதல் உண்டாகி இருந்தது வண்ணனுக்கு.
மேலும் அந்த படத்தில் இருக்கும், இளவயது சந்திரிக்காவுக்கும்
லாராவுக்கும் முகச் சாயல் நிறைய ஒத்துப் போவதைக் கண்டு ஏற்கனவே வண்ணன்
குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான்
ஏனெனில் இருவருக்கும் ரெத்த சம்பந்தம் எதுவும் இல்லை.
லாராவை சந்திரிக்காவின் அம்மாவும் அப்பாவும் தத்தெடுத்து வளர்த்தார்கள். ஆதலால்
அதிக வயது வித்தியாசத்தில் லாரா என்றொரு தங்கை சந்திரிக்காவுக்கு
அமைந்திருப்பதாகத் தான் ஊருக்குள் பேச்சு.
இருவரின் உருவ ஒற்றுமையும், இவர்களுக்குள் எதுவோ ரத்தச்
சம்பந்தம் உண்டோ என்ற ஐயத்தை அவனுக்கு உண்டாக்கி இருந்தது.
இந்நிலையில்... லாராவுக்கும், இப்பொழுது தனக்கு முன்பாக
இருக்கும் நட்சத்திராவுக்கும் முகச் சாயல் ஒத்துபோவதாக தெரிந்ததில் இவள் லாராவோ
என்ற சந்தேகம் வண்ணனுக்கு வந்து இருந்தது.
ஆல்பத்தை புரட்டிக்கொண்டிருந்தவனுக்கு அந்த நிச்சய விழாவில்
நட்சத்திராவும் இருப்பது ஒரு போட்டோவில் பதிவாகி இருந்ததை இப்போது தான் பார்த்தான்.
இருபதுக்கும் மேற்பட்ட நிச்சயதார்த்தப் போட்டோக்களில்
பெரும்பாலும் லாராவுக்கு அருகிலேயே தான் நட்சத்திராவும் இருந்திருக்கிறாள். ஆனால்
அதில் அவளையும் சேர்ந்து போட்டோ எடுப்பதை பெரும்பாலும் தவிர்த்திருந்தார்கள்.
இருந்தாலும் அவளின் உடை, திரும்பி இருக்கும் முகம், கை மற்றும் கால் மட்டுமே
பதிவாகி இருந்ததால் அந்த உருவத்துக்கு வண்ணன் முக்கியத்துவம் கொடுக்காமல் தான்
இருந்தான்.
ஆனால் ஒன்றில் கவனக்குறைவாக லாராவுக்கு பின்பு நின்றிருந்த
நட்சத்திராவையும் சேர்ந்து படம்பிடிக்கப்பட்டிருந்தது. சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த
நட்சத்திராவின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதை ஜூம் செய்து பார்த்தவன் அவள் தனக்கு
முன்பு இருக்கும் நட்சத்திராதான் என்று கண்டுக்கொண்டான்.
அவ்வாறு அவன் கண்டதும், லாராவும் நட்சத்திராவும் வேறு வேறு
என்ற உண்மை புரிந்தது. அவனின் ஐயத்துக்கு விடை
கிடைத்த மகிழ்ச்சியில் கண்கள் அகல விரிந்தது. அவளின் உதடுகளில் புன்னகை உண்டானது.
ஏற்கனவே சந்திரிக்காவுக்கும் லாராவுக்கும் உள்ள உருவ
ஒற்றுமை அவனுக்கு நெருடலாக இருக்க இப்பொழுது நட்சத்திராவும் அவர்களின் இருவரின்
ஜாடையில் இருப்பதைக் கண்டு ‘சம்திங் ஸ்பெஷல். இவங்க மூணு பேருக்கும் இடையே எதுவோ
ரகசியம் இருக்கு...’ என்று நினைத்துக்கொண்டான்.
“ஓகே நட்சத்திரா... நீ எதுக்கும் பதில் சொல்லப் போறது
இல்ல... ரைட் ஆனா இதை வச்சு விசாரிச்சா... தானா எனக்கு உண்மை கிடைச்சிடப் போகுது”
என்று அவனின் மொபைலில் இருக்கும் அவளின் உருவத்தை காட்டினான்.
நிச்சயதார்த்த நிகழ்வில் லாராவின் அருகில் சற்று இடைவெளி
விட்டு தான் அவள் நிற்க வேண்டியநிலை, லாரா தன்னுடைய சைல்ட் ஹூட் ஃப்ரெண்ட்... இங்க
அவளுக்கு யாரும் தெரியாது... அதனால் தனக்கு அருகிலேயே நிற்கட்டும் என்று
சொல்லியதால்தான் அங்கே அவளுடன் நிற்க முடிந்தது.
ஏற்கனவே உதித், லாரா நிச்சயதார்த்தம் சந்திரிக்காவை கோபப்
படுத்தியிருந்தது. பெரியோர்களின் சம்மதம் இல்லாமல் லாரா மற்றும் உதித்தின்
நண்பர்கள், பிஸ்னெஸ் தொடர்புடையோர்கள் முன்னிலையில் அவர்களே நடத்திக்கொண்டிருந்த
நிச்சயதார்த்தம் அது.
இந்நிலையில் தானும் அங்கு வெளிப்படையாக லாராவுடன்
நெருக்கமாக நின்று மற்றவர்களின் பார்வையை உறுத்த ஆரம்பித்தால் சந்திரிக்காவின்
கோபம் அதிகரிக்கும். அதனால் வீண் தொல்லைகள் எழும் என்றே போட்டோ கவர் செய்யும் போது
அவளை அவாய்ட் பண்ணச் சொல்லி சற்று எட்டவே நின்றிருந்தேன்.
இருந்தாலும் எப்படியோ இதில் என் முகம் பதிவாகிவிட்டதே...
இப்படி வந்து மாட்டிக்கிட்டேனே...! என்று நட்சத்திரா தவித்துப் போனாள்.
“சார்.. சார்... சார்... என்னை விட்டுடுங்களேன், நானே
இவ்வளவு தூரம் லாராவைத் தேடித்தான் வந்தேன். உதித் கிட்ட லாராவைப் பத்தி விசாரிக்க
தான் நான் சென்னைக்கே வந்தேன்.
நான்... நான்... இங்க இருக்கிறது உங்க அப்பாவோட வொய்ஃப்
சந்திரிக்காவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்.
லாராவை அவங்க இஷ்டத்துக்கு பொம்பையாய் ஆட்டிவச்சாங்க...
லாராவும் லக்சூரியஸ் லைஃபுக்கு அடாப்ட் ஆனதால அவங்க கூடவே இருக்கவேண்டிய நிலை.
அதுக்காக நிறைய அவங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுத்தானே இருந்தா...
ஆனா இப்போ அவளையே காணோம்... அவளை என்ன செஞ்சாங்கன்னு
தெரியலை. எனக்குன்னு இருக்கிற ஒரே உறவு அவள்தான்... எங்க இருந்தாலும் வாரம் ஒரு
தடவை என்கிட்ட பேசாம இருக்கவே மாட்டா... நான் போன் பண்ணினா அட்டன் பண்ணாம
ஒருநாளும் இருந்ததில்ல... ஆனா... ஆனா... இப்போ கிட்டத்தட்ட மூணு மாசத்துக்கு மேல எங்களுக்குள்
எந்த தொடபும் இல்லாம ஆகிடுச்சு அவள் குரலை
கூட என்னால கேட்க முடியலை... எனக்கு என் லாரா வேணும்...”
நட்சத்திரா உடைந்து அழுதாள். தான் மாட்டிக்கொண்டோம், இனி
அவ்வளவுதான் சந்திரிக்காவின் கட்டுப்பாட்டில் போகப் போகிறோம்... லாராவை இவங்க
எல்லோரும் என்ன செஞ்சாங்க...? அவள் இருக்காளா... இல்லையா...? என்று தெரியாமல்
இவங்ககிட்ட மாட்டிகிட்டோம்... என்ற அழுத்தத்தில் உடைந்து போனாள்.
நட்சத்திராவை பேசவிட்டு கவனித்த வண்ணன், “இங்க பாரு
நட்சத்திரா... நீ நினைக்கிறது போல நான் சந்திரிக்காவின் ஆள் இல்லை... உனக்கு
என்னால எந்த ஆபத்தும் வராது... எனக்குத் தேவை நீ யார்? உனக்கும் லாராவுக்கும்
சந்திரிக்காவும் என்ன சபந்தம் அப்படின்ற டீடைல்ஸ் மட்டும் தான். நானும் லாராவுக்கு
என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க த தான் இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு இருக்கேன்.” என்றான்.
“நீங்க சொல்றதை நான் எப்படி நம்ப..? உங்க பேர் வண்ண
முகில்னு அந்த டைரக்டர்கிட்ட சொல்லும் போது, நானும் அங்கே தானே இருந்தேன்.
அப்படி இருந்தும் வண்ண முகில், உதித் முகில் ரெண்டுபேரும்
முகில் அதியனின் மகன்கள்றதை கண்டுபிடிக்க முடியாத அளவு ஒன்னும் எனக்கு விவரம்
இல்லாமல் இல்லையே...
உங்க அப்பா முகில் அதியனும் மனைவி சந்திரிக்காவும்
சொல்லாமலா என்னைய இப்படி கடத்திட்டு வந்து அடைச்சு வச்சிருக்கீங்க...? நீங்க
அவங்களோட கையாள்ன்னு நான் நினைக்கிறது எப்படி தப்பாகும்...?” என்றாள்.
அவளின் மேல் உண்டாகி இருந்த சலனத்தை, ஈர்ப்பை உதயத்தின்
காதலி என்ற எண்ணத்தில் மெனக்கெட்டு தனது கட்டுக்குள் கொண்டுவந்து மிகவும்
ஸ்டிக்ட்டாகவே அவளிடம் விசாரணையை மேற்கொண்டிருந்தான். அவள் லாரா இல்லை என்று தெரிந்ததும் ஏனோ ஒரு வித
ஆசுவாசம் உண்டானது. அவளை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தான் வண்ணன்.
அவளின் அனாதாரவான நிலை அவளின் பேச்சில் புலப்பட்டது. ஏனோ
தன்னைப் போல சொந்த குடும்பத்தால் அவளும் வஞ்சிக்கப் பட்டவளாக இருக்கிறாள் என்ற
புரிதலும் உண்டானது.
அவ்வாறான புரிதல் அவளின் மேல் உண்டான ஈர்ப்போடு இவ்வளவு
அழகான பெண்ணுக்கு இப்படி ஒரு பாதுகாப்பாற்ற நிலை வந்திருக்கக் கூடாது என்ற
பரிதாபம் உண்டானது. ஏதாவது வகையில் அவளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணன் தோன்றியது.
அவனின் எண்ணம் செல்லும் போக்கை கண்டு, தனக்குள்ளேயே தன்னை
காறித் துப்பிக்கொண்டவன், ‘ஒரு அழகான பொண்ணை பார்த்ததும் இம்ப்ரஸ் பண்ணும்னு
நினைக்கிறேனு சொல்லிட்டுப் போ... அதைவிட்டு உதவுற எண்ணம்னு பூசி மொழுகிறயே.... நீ
சரியான கேடிடா.’ என்று தனக்குத்தானே பட்டம் கொடுத்துகொண்டான்.
அவளுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்தினால்தான் மனம் திறந்து தன்னிடம் பேசுவாள் என்று உணர்ந்தவன்.
*****
முகிலன் தனது பிஸ்னெஸில் ஆலோசனை கூற நியமித்திருக்கும் குழுவோடு மீட்டிங் ஹாலில் அமர்ந்திருந்தார். அவரின் முகம் பெரும் கவலையைக் கொண்டிருந்தது. அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஃபைனான்ஸ் அட்வைசர், இன்சூரன்ஸ் புரோக்கர், பிஸ்னெஸ் மென்ட்டர், அனலாக் அட்வைசர், லாங்டெர்ம் அட்வைசர். எக்ஸ்பெர்ட் அட்வைசர் ஆகியோர் சொன்ன பதில் அவரை கோபப்படுத்தியது.
தானும் சந்திரிக்காவும்
சேர்ந்து ஆரம்பித்திருந்த டெலிகம்யூனிகேஷன் பிஸ்னசை வாங்க லண்டனில் இருக்கும் ‘அரசகுடும்பத்தைச்
சார்ந்த விக்டர்’ வாங்க விரும்புகிறார் என்று தெரிந்ததுமே... இது ஒரு நல்ல ஆபர்
என்று ஆலோசனை கூறியது இந்த டீம் தான்... இப்போது அவ்வாறு அவர்களுக்கு
விற்றிருக்கக் கூடாது என்றும் சொல்வதால் வந்த கோபத்தில் வார்த்தைகளால் எதிரில், உள்ளவர்களை பந்தாடி
விட்டார்.
“பிறகு என்ன டேஷ்க்கு உங்ககிட்ட
லண்டன் விக்ரம் கூட சேல் டீட்ல சைன் பண்ணலாமானு கேட்டதுக்கு ஆஹா... ஓஹோ.. பேஸ்..
பேஸ்.. நல்ல ஆபர் ‘டேன்ட் மிஸ்னு’ ஒவ்வொருத்தரும் வாயை விட்டீங்க...?” என்று
கர்ஜித்தார்.
அப்பொழுது அமர்ந்திருந்தவர்களுள்
வயதில் மூத்த கனிஷ்கர் மட்டும் சற்று பயந்தபடி “சார், ஃபினான்சியல் மினிஸ்டர்
சப்போர்ட் இருதுன்னு நீங்க சொன்னதால வேற இஸ்யூஸ் வராதுன்னு நினச்சேன்... ஆனாலும்
பிளாக்கில கிடைகிற வெளிநாட்டுப் பணம் ரிஸ்க்குன்ற பாய்ண்டை நான் எடுத்து வச்சேன்.
சந்திரிக்கா மேடம், அதுக்கு மினிஸ்டரை இந்த விஷயத்தில் அவங்களால டீல் பண்ணிக்க
முடியும்னு சொன்னதால நான் அழுத்திச் சொல்ல முடியாமப் போயிடுச்சு” என்றார்.
முகிலனோ, ‘இப்பொழுதுதான் உதித்
பிரச்சனையை வண்ணன் கிட்ட ஒப்படைச்சு அவன் பார்த்துக்குவானு கொஞ்சம் ரிலீப் ஆனேன்...,
ஆனா அதுக்குள்ள அந்நிய செலாவணி மோசடி கேஸ்ல சிக்கிடுற நிலைமை. இப்படி அடுத்து
அடுத்த பிரச்சனையா வந்து நிக்குதே...’ என்று மனதிற்குள் நொந்து கொண்டார்.
இந்த ரெண்டு பிரச்சனைக்கும் ஆரம்பப் புள்ளி சந்திரிக்கா தான். அவளோட அறிவும் அழகும் எனக்குச் சொந்தமானா... பிஸ்னஸ்ல எங்கயோ போயிடலாம்னு கற்பனை பண்ணினேன். ஆனா அவளை கூட சேர்த்ததுக்கு தண்டனையா இத்தனை காலம் பார்த்துப் பார்த்துக் கட்டிய என்னோட பிஸ்னெஸ் சாம்ராஜ்யமே ஆடிப்போயிடுமோன்னு இப்போ புலம்பிக்கிட்டு நிக்கிறேன்...’ என்று தனக்குள் மருகி நின்றவர், அந்த டென்ஷனில் ...
“அடுத்த மீட்டிங்கில் இதுக்கு என்ன பண்ணலாம்னு ஒரு சொலியூசன் ஒவ்வொருத்தரும் கொடுத்தே ஆகணும். உங்க எல்லாரையும் சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சிருக்கிறதே அதுக்காகத்தான்” என்று சொல்லியபடி “ மீட்டிங் டிஸ்போஸ்” எனச் சொல்லி வெளியேறினார்.
No comments:
Post a Comment