anti - piracy

Post Page Advertisement [Top]

 

இனிக்கும் விஷம் (தீபாஸ்)



அத்தியாயம் 15

சந்திரிக்காவின் காரை செபாஸ்டின் அவளது பங்கலாவினை நோக்கி செலுத்திக்கொண்டிருந்தான். சந்திரிக்காவின் பி.ஏ பொஷிஷனில் இருக்கும் செபாஸ்டியன் அவளுக்கான வலது கை என்றே சொல்லலாம். அவள் முக்கியமான விடயங்களுக்கு தனித்து பயணம் செய்யும் போது அவளுக்கு கார் சாரதியாக  இருப்பதும் அவனே.

“மேடம் நம்மகிட்டு இருந்து தப்பிச்ச தாரா மூணு மாசம் டெல்லியில் தான் இருந்திருக்காங்க. அவங்க அக்கவுண்டில் இருக்கிற காசை கொஞ்சம் கொஞ்சமா வித்டிராபண்ணியத்துக்கான பேன்ங் ஸ்டேட்மென்ட் இது.

எல்லாமே டில்லியில் இருக்கிற வேற வேற ATM மிஷின்ல இருந்துதான் எடுத்து இருக்காங்க.

அவங்க ஒவ்வொரு முறை பணம் வித்ரா பண்ணும் போதும் வரும் நோடிபிகேசன் இன்பர்மேஷன் வச்சு அந்த லோகேஷன்ல தான் இருக்காங்கனு கண்டுபிடிச்சு நமம ஆளுங்களை அனுப்பி கண்கானிப்போம்....

ஆனா அடுத்த தடவை வேற இடத்துல இருக்கும் atm இருந்து பணம் எடுப்பாங்க. இப்படியே மூணு மாசம் தொடர்ந்து மாத்தி மாத்தி எடுத்து அக்கவுண்டில் இருக்கிற அம்புட்டு காசையும் காலி பண்ணிட்டாங்க. இப்போ மினிமம் பேலன்ஸ் தான் அவங்க அக்கவுண்டில் இருக்கு...” என்றான்.

“தப்புப் பண்ணிட்டேன்... ‘படிக்கிறாளே... ஒவ்வொரு தடவையும் பீஸ் கட்ட, புக்ஸ் வாங்க அப்படின்னு என்னை டிஸ்டப் பண்ணக் கூடாதுன்னு மொத்தமா டுவென்டி லேக் அவளோட அக்கவுண்டில் போட்டுவச்சது என்னோட தப்புதான். அந்த காசு அம்புட்டையும் எடுத்துக்கிட்டு எனக்கே  கம்பி நீட்டிட்டா...

கைல காசு இல்லாம இருக்க வச்சிருக்கணும்... அடுத்த வேலை சோத்துக்கு என்கிட்ட கையேந்தி ஒவ்வொரு தடவையும் வரவச்சு இருந்துருக்கணும். அந்த காசு இருக்கிற தைரியத்துல தான் என்னைய மீறி எங்கயோ போய் ஒளிஞ்சுக்கிட்டா...

அவளோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் நோட் பண்ணி.. பாலோ பண்ணச் சொன்னேனே, அவங்க மூலமா ஏதாவது இன்பர்மேசன் கிடைச்சதா...?”  என்றாள்.

“ம்... ஆமாம் மேடம், நட்சத்திரான்ற பொண்ணு கூட மட்டும் தாரா ரொம்ப குளோசா காலேஜில் பழகுவாங்கனு கேள்விப் பட்டேன். அந்த நட்சத்திரா பேமிலி டெல்லியில வசிக்கிற ஒரு தமிழ் குடும்பம். அந்த பொண்ணோட அப்பா கவர்மென்ட் எம்ப்ளாயி... அப்பர் மிடில்கிளாஸ் பொண்ணு...

ஆனா இப்போ அந்த பொண்ணு காதுல, கையில, கழுத்துல எல்லாம் டைமன்ட் ஜூவல்ஸ் போட்டுக்கிட்டு இருக்கிறதாகவும் அதுவும் சமீப காலமாத்தான் இதெல்லாம் போடுறதாவும் கேள்விப் பட்டேன்.

அதோடு நமக்குத் தெரிஞ்ச அந்த காலேஜ்ல படிக்கிற பொண்ணு அவள் போடுற சில நகைகள் தாராவோடது போல இருக்கிறதா சொல்றா...” என்றதும், 

“ஒருவேளை தாராவை அந்த பொண்ணு எதுவும் பண்ணிட்டு அவளோட பணம் ஜூவல்ஸ் எல்லாத்தையும் ஆட்டைய போட்டு இருப்பாள்னு நினைக்கிறயா செபாஸ்டின்..?” என்றதும்.

“இல்ல மேடம், அந்த பொண்ணு அப்படி பட்ட பொண்ணு இல்லைன்னு கேள்விப் பட்டேன். ரொம்ப நல்ல குடும்பத்துப் பொண்ணு... நல்ல பொண்ணு  அந்த நட்சத்திரானு கேள்வியும் பட்டேன். அதோட அந்த பொண்ணு தான் தாராவை டெல்லியில் இருந்து தப்பிச்சுப் போக ஹெல்ப் பண்ணி இருப்பாள்னு சந்தேகப் படுறேன்” என்றான்.

“எதை வச்சு அப்படி சொல்ற செபாஸ்டின்...? நானும் அப்பர் மிடில் கிளாசில் கெளரவமான குடும்பத்தில் பாவம், புண்ணியம்னு பயந்து இருக்கிற ஃபேமிளியில் பிறந்தவள்தான். ஆனா காசு பணம் சம்பாதிச்சு பெரிய ஆளா ஆகணும்னு முடிவு எடுத்ததுக்குப் பின்னாடி அந்த காசுக்காக எதுவும் பண்ணலாம் தப்பே இல்லன்னு புரிஞ்சுக்கிட்டேன். பணம் தான் இந்த வாழ்கையில் எல்லாம்... அந்த பணத்துக்காக மக்கள் யார்வேணும்னாலும் எதுவேணும்னாலும் செய்வாங்க” என்றாள்

“அது வந்து மேடம்... லாஸ்ட் வீக் இந்த நட்சத்திரா பேர்ல டெல்லியில் இருந்து நேரா சென்னைக்கு போற டிரைய்ன்ல, ஒரு டிக்கெட் ஆன்லைனில், புக் பண்ணிருக்காள்.

ஆனா அந்த பொண்ணு அன்னைக்கு அந்த டிரைனில்  போகலை. ரயில்வே ஸ்டேஷன் சிசிடிவி புட்டேஜ்ல கிட்டத்தட்ட நம்ம தாரா வயசு பொண்ணு முஸ்லிம் போல முகத்தை மறைச்சுக்கிட்டு நட்சத்திரா பேர்ல டிக்கெட் புக்காகி இருந்த கம்பார்ட்மென்ட்டில் ஏறுறது போல ரயில்வே ஸ்டேசன் சி.சி.டிவி புட்டேஜ் பதிவானது கிடைச்சது.

அதில் பயணம் செய்த பேசஞ்சர்ஸ் லிஸ்ட்டை விசாரிச்சதுல நட்சத்திரான்ற ஒரு பொண்ணு அந்த டிரைன்ல டிராவல் பண்ணி இருக்கிறாள்ன்ற விஷயம் தெரிஞ்சது. ஒருவேளை சென்னைக்குப் போனது நட்சத்திரா பேர்ல நம்ம தாரா போய் இருக்கலாம்னு ஒரு கெஸ் இருக்கு” என்றான் செபாஸ்டின். 

“ஓ... அவள் ஒருவேளை தமிழ்நாட்டுக்குப்  போயிருந்தா எப்படியும் என்னோட அம்மா அப்பாவை மீட் பண்ணாம இருக்க மாட்டா... சேலத்துல இருக்கிற என் அம்மா அப்பா வீட்டை குளோசா வாட்ச் பண்ணச் சொல்லிடு செபாஸ்டின். எப்படியாவது அவளை பிடிச்சாத்தான் லாரா விஷயத்தில் நாம மாட்டிக்கிடாம தப்பிக்க முடியும். லாரா பேர்ல நான் போட்டுவச்சு இருக்கிற பணத்தையும் என் கைக்கு கொண்டுவர முடியும்” எனச்சொல்லிக் கொண்டிருக்கும் போது பங்களாவிற்குள் கார் நுழைந்தது.

ஏற்கனவே பங்களா காம்பவுண்டிற்குள் முகில் அதியன் கார் நிற்பதை கவனித்தவள். இந்த பேச்சை இனி இங்க பேசாத செபாஸ்டின், முகில் வீட்டுக்கு வந்துட்டார் போல... இந்த கிழட வச்சு நான் பெரியாளா ஆகலாம்னு பார்த்தா... அந்த கெழடு என்கிட்ட இருக்கிறதை அமுக்கப் பார்க்குது. அதுக்குத்தான் அவரோட பையன் உதித்தை லாரா கேசில் கொஞ்சநாள் சிக்க வச்சு ‘தி கிரேட் பிஸ்னெஸ் மேல் முகில் அதியன்’ தலையில பலமா ஒரு கொட்டு வைக்க ஏற்பாடு பண்றேன்” என்றாள்.

*****

நட்சத்திராவை தன்னிடம் வெளிப்படையாக பேசவைக்க, வண்ணன்  சந்திரிக்காவின் ஆள் இல்லை என்று அவளுக்கு புரிய வைக்கவேண்டும் என்று நினைத்தான். ஏனெனில் அவள் தப்பிக்க நினைப்பது சந்திரிக்காவிடம் இருந்துதான் என்ற நிதர்சனத்தை அவளின் பேச்சில் புரிந்தது கொண்டான். சந்திரிக்காவுக்காக இவளை நான்  தூக்கிட்டு வந்ததேன் என்ற  அவளின் மனப்பிரம்மையை மாற்ற நினைத்தான், எனவே அவளிடம்,

 “உன்னோட கெஸ்ல சில விஷயங்கள் சரி... சில விஷயங்கள் தப்பு...” என்றவனை நம்பாத பார்வை பார்த்தாள் நட்சத்திரா.

“அதாவது நான், முகில் அதியனின் மகன்ன்றது சரி...

உதித்தை, லாரா மிஸ்ஸிங் கேசில் அக்யூஸ்டா ஆக்குறதுக்கு எங்களோட பிஸ்னெஸ் எதிரிங்க சதித்திட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க. அதில் சந்திரிக்காவோட பங்கு அதிகம்னு நினைக்கிறார் அப்பா.

அதனால உதித்தோட ஃபியான்ஷி லாராவுக்கு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கிட்டாத்தான்  அதவச்சு உதித்தை பிரச்சனையில் மாட்டாம காப்பாத்த முடியும்.

லாராவை காணலைன்னு ஆட்கொணர்வு மனு சந்திர்க்கா கொடுக்கலாம்... கூடவே லாராவுக்கு எதுவும் ஆகி இருந்தா அதுக்கு உதித் தான் காரணம் என்று தக்க ஜோடனை செய்யப்பட்ட ஆதாரங்களோடு கம்ப்ளைன்ட் பண்ணப் போறதா ஒரு சந்தேகம் அப்பாவுக்கு வந்திருக்கு...

அப்படி உதித்தை எதிலாவது மாட்டிவிட்டா எங்களோட  கம்பெனி ஷேர்ஸ்  மார்கெட் வேல்யூ எல்லாம் சட்டுன்னு அதல பாதாலத்துப் போயிடும். பெரிய அளவில் பிஸ்னஸ்ல சரிவும் வந்துரும்.

அப்படி ஆகாம இருக்க லாராவுக்கு என்ன ஆச்சுன்னு கண்டு பிடிக்கிற வேலையை  என் அப்பா முகில் அதியன் என்கிட்ட கொடுத்திருக்கிறார். இதுல சந்திரிக்கா என்னோட அப்பாவின் வொய்ஃபா இருந்தாலும் பிஸ்னெஸ்ல ரெண்டுபேரும் இப்போ பார்ட்னரா இல்லை... ஷோ இந்த விஷயத்தில் சந்திரிக்காவ கூட்டு சேர்க்கலை” என்றான்.

அவன் சொன்னதை கேட்ட நட்சத்திராவோ தனக்குள் ‘அப்போ இவங்களும் என்னையப் போல லாராவுக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்கத்தான் முயற்சி பண்றாங்களோ...?

அப்போ லாரா மிஸ் ஆனதுக்கு காரணம் சந்திரிக்காவாகத்தான் இருக்கும்ன்ற சந்தேகத்தை உதித் இவன் கிட்ட சொல்லி இருக்கணுமே...’ என்று யோசித்தவள்.

“சார், உங்க தம்பி உதித், லாரா காணாம போனதைப் பத்தி உங்ககிட்ட என்ன சொன்னார். யார்மேலயாவது அவருக்கு  சந்தேகம் இருக்குதுன்னு  சொன்னாரா...? லாரா அவரோட லவ்வர், சந்திரிக்காவோட சிஸ்டர்ன்ற விஷயத்தைத்தாண்டி வேற என்னென்ன அவளைப் பத்திச் சொன்னார்...?” எனக் கேட்டாள்.

“நிறைய சொன்னான்... சந்திரிக்கா, லாரா பேர்ல டம்பி கம்பெனி ஆரம்பிச்சு அதுக்கு ரப்பர் ஸ்டாம்ப்பா மட்டும் அவளை வச்சு இருக்கிறது. அதனால உதித்தோடு லவ், மேரேஜ் அப்படின்னு லாரா போயிட்டா லாரா பேர்ல கோடிக்கணக்கான பணம் போட்டு வச்சிருக்கிற டம்மி கம்பெனி கைவிட்டுப் போயிடும்... அவள் உதித்தோட ரப்பர் ஸ்டாம்பா ஆகிடுவாள்னு பயந்து அவளுக்கு A சைக்காட்ரிக் டிரக்கை வைட்டமின் குறைபாட்டுக்கு கொடுக்கிற மாத்திரைபோல எடுக்க வச்சு... உடல் அளவிலும் பாதிப்பும் புத்தி மழுங்கியும் போக வைக்கப் பார்த்தது எல்லாமே சொன்னான்” என்றான்.

வேறு எதுவோ ஒன்றை அவனிடம் கேட்க நினைத்து ஆனால் தயங்கிக்கொண்டு இருந்தவளை பார்த்து , “நீ பார்டியிலும் சாப்பிடலை.. லேட் நைட் ஆகிருச்சு, வா.. என்கூட ஏதாவது வந்து சாப்பிடு. ரொம்ப டயர்டா தெரியிற... சாப்பிட்டப் பிறகு உனக்குப் பேச எனர்ஜி வந்ததாய் பீல் பண்ணினா பேசலாம். அல்லது காலையில் மத்ததை பேசலாம். எனக்கு இப்போ சாப்பிடனும், கொஞ்சம் ரெஸ்டும் தேவை” என்றான்.

அவன் திடமாகத்தான் இருந்தான் ஆனால் அவள் அவ்வாறு இல்லை.. மிகவும் சோர்ந்து தெரிந்தாள். அவளின் மேல் தான் அக்கறை காட்டுவதை அவள் அறியாது செய்யவேண்டுமென்று நினைத்தான். எனவே தனக்கு சாப்பாடு தூக்கம் வேண்டும் என்று சொல்லி உடன் அவளை அழைத்துக்கொண்டு அந்த மாளிகைக்குள் இருந்த உணவு கூடத்துக்கு அழைத்துச் சென்றான்.

இங்கே அவளை ரீட்டா என்பவள் காரில் கொண்டுவந்து இறக்கச சொல்லி  உள்ளே நடத்தி வந்தபோது தப்பிக்க பார்த்தாள் நட்சத்திரா...

அப்பொழுது அவளை இழுத்து ஓடமுடியாமல் இழுத்துக்கொண்டு வந்தவளை பங்களாவின் உள் இருந்து வந்த வண்ணன் எதிர்கொண்டான். ரீட்டாவிடம் இருந்து தன்னை  கைபிடியில் வாங்கி வைத்தபடி

“ஓகே ரீட்டா இனி நான் பார்த்துப்பேன், நீ கிளம்பி..” எனச்சொல்லி இழுத்துக்கொண்டு வந்தவனிடம் மல்லுகட்டியத்தில் வீட்டின் அமைப்பை அப்போது கவனிக்காது விட்டுவிட்டாள்.

இப்பொழுதுதான் அவனுடன் நடந்துகொண்டே சுற்றி முற்றி பார்த்தாள். பார்க்கும் இடமெல்லாம் பணத்தின் செழுமை கண்ணைப் பறித்தது. நவீன வசதிகளுடன் பளிங்குபோல மின்னும் வீட்டின் அமைப்பை நோட்டம் இட்டுக்கொண்டே நடந்தவள் இங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி புலப்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே அவனுடன் நடந்தாள்.

அங்கு சாப்பாட்டு மேஜை கிடந்த அறையில் சாப்பிட அமர்ந்தபடி அந்த அறைக்கு அடுத்து இருந்த வானவெளியில், ஆர்டிபீசியல் அருவி ஒன்ரிலிருந்த செயற்கை குளத்தில் தண்ணீர் விழுவது போல பவுண்டன் அமைக்கபட்டிருந்தது அந்தக் காட்சியும் தண்ணீர் விழுகும் சத்தமும் அத்தனை ரம்யமாக இருந்தது.

ஆனால் அவளுக்கு அதெல்லாம் கண்ணில் படவில்லை அந்த வானவெளியில் இருந்த சுவற்றில் ஏதாவது ஏணி தட்டுபட்டால் போட்டு ஏறி வெளியில் குதித்து எஸ் ஆகிவிடலாம் என்ற எண்ணமே அவளுக்குள் உண்டானது.

அவளின் முகக் குறிப்பை வைத்தே அவனின் மனம் போகும் போக்கை உணர்ந்து கொண்டவன், “அந்த சுவர் ஒரூ மாடிக்கும் கூடுதலான  உயரத்துல இருக்கும். அதுல ஏற வழியே இல்லை... அப்படியே ஏறினாலும் அங்குட்டு குதிச்சா கை கால் முறிஞ்சிடும். அதோடு அதுவும் என் காம்பவுண்டுகுள்ளே தான் குதிக்கணும். அந்த பக்கம் என்னோட ராஜபாளையம் நாய் ரெண்டு சுத்திகிட்டே இருக்கும், அது பிறகு உன் ரெத்தத்தை டேஸ்ட் பார்க்க ஆசைப்படும்...” என்றான்.

அவனின் கூற்றில் அரண்டுபோய் அவனை பார்த்தவளிடம். “இல்ல நீ அப்படி எல்லாம் என்கிட்டே இருந்து எஸ் ஆக டிரை பண்ண மாட்டேனு தெரியும். இருந்தாலும் ஒரு ஃபன்னுக்கு சொல்லி வைக்கலாம்னு தான்” என்றான்.

அவன் சொன்ன தோரனையை கண்டு, “இந்த கொலைவெறி பேச்சை போய்  ஃபன் அப்படின்னு சொல்ற இவனை....” என்று தனக்குள் பல்லை கடித்துக்கொண்டாள்.  

----தொடரும்----

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib