இனிக்கும் விஷம் (தீபாஸ்)
அத்தியாயம் 16
சாப்பாட்டு
மேஜைக்கு அருகில் சென்றவன் இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவளோ அமராமல், தனது
ரத்தத்தை அவனின் நாய்கள் டேஸ்ட் பார்க்க ஆசைபடும் என்று சொன்னதில். கோவம் அடைந்து
ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது. இருந்தாலும்
அதை காட்டுவதற்கான இடம் அது இல்லை என்று புரிந்ததால் கடுப்புடன் நின்றுக்கொண்டிருந்தாள்.
“என்ன அங்கயே நிக்கிற... வா.. வந்து உட்கார்ந்து சாப்பிடு...
உன்னையப் பார்த்தா பல நாள் பட்டினியா கிடந்தது போல இருக்கு... எனக்கு தேவையான
டீடைல்ஸ் சொல்லாம நீ மயங்கி கியங்கி விழுந்துட்டா அதுக்கு டிரீட்மென்ட் பண்ணித்
தொலையணும்” என்றான்.
அப்பொழுது கையில் உணவு இருக்கும் பாத்திரங்களை கொண்டுவந்து
மேஜையில் வைத்துவிட்டு அவ்வீட்டு சமையல்காரர் நகர்ந்தார்.
அவன் சொன்ன வார்த்தைகள் அவ்வேலையாளின் காதில்
விழுந்திருக்கும் என்பது புரிந்தது. அவர் என்னமோ சாதாரணமாகத்தான் அவளை பார்த்தபடி
அங்கிருந்து சென்றார்.ஆனால் இவளுக்கு தான் தன்னை அவர் வித்தியாசமான ஜந்துவை
பார்ப்பது போல தோன்றியது.
எனவே வண்ணனைப் பார்த்து கடுப்புடன் “ஹலோ... உங்ககிட்ட
சாப்பாடு போடச்சொல்லியோ.... நான் மயங்கி விழுந்தா என்னைய காப்பாத்தச் சொல்லியோ
நான் கேட்கவே இல்ல... காலையில இருந்து போற இடத்துல எல்லாம் என்னைய தொறத்திட்டே வந்தது
நீங்க... இன்னைக்கு முழுக்க ஒரு வாய் சாப்பாடு கூட என்னைய ஒழுங்கா சாப்பிட விடாம
இந்த நிலைமைக்கு ஆக்குனதும் நீங்கதான்...” என்று கோபமுடன் சொன்னாள்.
அப்பொழுது அவனுக்கு
தட்டில் சுடச் சுட இட்டிலி வைத்து சாம்பார் சட்டினி விட்டுக்கொண்டிருப்பதை
கண்ணுற்றவளுக்கு நாவில் எச்சில் ஊறியது. அதைப் பார்த்து தனது நாவில் எச்சில்
ஊர்வதைதில் டெம்டாகி அவளுக்கு அகோர பசி உண்டானதால் ‘பசி வந்தால் பத்தும் பறந்து
போகும்னு இதைத்தான் சொல்லுவாங்களோ...!’
என்று தனக்குள் சொல்லிகொண்டவல்
ரோசத்தை தள்ளி வைத்துவிட்டு சட்டென மேஜையை நெருங்கி சாப்பிட அமர்ந்துவிட்டாள்.
அவள் அமர்ந்தததும் தனக்குப் பரிமாறிய தட்டை அவளை நோக்கி
நகரத்து வைத்துவிட்டு “சாப்பிடு...” என்றான் மிகவும் மென்மையாக.
அவனும் சிறுவயதில் அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவன்தான்
அக்காலத்தில் அவன் சந்தித்த பசியின் கொடுமையின் வடு அதன் பின் எவ்வளவோ செல்வத்தில்
புரண்டாலும் அடிமனதில் தங்கிவிட்டது. அதனால் அவன் இருக்கும் இடத்தில் யாரும்
எப்பொழுதும் பசியில் வாட அவன் விடுவதே இல்லை.
வண்ணன் தன்னிடம் தட்டை நகர்த்தி கொடுத்து ‘சாப்பிடு’ என்று
சொன்னதும் ஆசையாக இட்டிலியை துண்டாக பிய்த்து சாம்பாரில் தோய்த்தவள் கைகள்
யோசனையுடன் தட்டில் இருந்து அகன்றது...
ஏன் சாப்பிடாமல் வச்சுட்ட...? என்று கேள்வியாக
பார்த்தவனிடம், “ஏன்... நீங்க சாப்பிடலையா...? முதலில் நீங்க சாப்பிடுங்க அடுத்து
நான் சாப்பிடுறேன்” என்றாள்.
‘எதையாவது சாபாட்டில் கலந்து வச்சிருக்கானோ... அதுதான் அவன்
சாப்பிடாம எனக்கு கொடுக்குறான்...’ என்ற சந்தேகத்தோடு அவனைப் பார்த்தாள்.
அவளின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்துகொண்டவன் “இப்ப என்ன
உன் சாப்பாட்டுல விஷம் கிஷம் எதுவும் வச்சிருகேன்னு சந்தேகப் படுறயா..? என்று
கோவத்துடன் சுல்லென்று கேட்டவன் துளியும் தாமதிக்காமல் அவள் பிட்டு சாம்பாரில்
தோய்த்து வாயில் வைக்காமல் விட்டிருந்த இட்டிலித் துண்டை எட்டி எடுத்து சாப்பிடான்.
அவனின் செயலை கண்கள் விரிய பார்த்தவளை பார்த்துக்கொண்டே
மடமடவென அவளின் தட்டில் வைத்திருந்த இரண்டு இட்டிலிகளையும் சாப்பிட்டு
முடித்துவிட்டு
“இப்போ சந்தேகம்
தீந்திருச்சா...? உனக்கு நம்பிக்கை இருந்தா இந்தாதான் பிளேட், சாப்பாடு எல்லாம்
இருக்கு.. எடுத்து வச்சு சாப்பிடு” எனச் சொல்லியவன் இன்னும் மூன்று இட்டிலிகளை அதே
தட்டில் எடுத்து வைத்து உட்கார்ந்த அவளை கண்டுக்கொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்தான்.
“ஸாரி... நான் வேணும்னே பண்ணலை... இதுல எதுவும் கலக்கலைன்னு
நம்புறேன்” என்று நலிந்த குரலில் சொன்னவள்,
தயக்கத்தோடு தட்டை எடுத்து அதில் இட்டிலிகளை
வைத்து சாப்பிடத் துவங்கினாள்.
அவள் சாப்பிட ஆரம்பித்தப் பின்பே வண்ணனின் முகத்தில் இருந்த
இறுக்கம் குறைய ஆரம்பித்தது. அவள் தட்டில் சட்னி, சாம்பார், இட்டிலி என்று குறைய
குறைய தேவை சொல்லாமல் உணர்ந்து அவளுக்கும் பரிமாறியபடி அசால்டாக டஜன் இட்டிலிகளை
அவனின் வயிறுக்குள்ளும் தள்ளிக்கொண்டு இருந்தான் வண்ணன்.
தயக்கத்தோடு தட்டை எடுத்து சாப்பிட அமர்ந்தவள் ருசியில்
தன்னை மறந்து ஆர்வமாக நான்கு இட்டிலிகளை உண்டவள் அதற்கு மேல் உண்ண முடியாமல்
போதும் என்று பரிமாற வந்தவனை தடுத்துவிட்டாள்.
எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் வண்ணன் சாப்பிடுவதை அவள்
அதிசயமாக பார்ப்பதை கண்டவன் “உதித் போல நான் பிறந்ததில் இருந்து கோல்ட் ஸ்பூன்ல
சாப்பிட்டவன் இல்லை... எனக்கு விவரம் தெரியிற வயது வரை கால்வயிறு, அரைவயிறு
சாப்பாட்டுக்கே வழியில்லாம இருந்திருக்கேன். அதனாலத்தானோ என்னவோ எனக்கு வசதி
வந்ததுக்குப் பிறகும் சாப்பாட்டு மேல அலாதியான பிரியம் வந்துடுச்சு.... என்னைய புட்டினு
சொன்னால் கூட தப்பு இல்ல...” என்றான்.
‘முகில் அதியனோட மகன் சாப்பாட்டுக்கே கஷ்டப் பட்டானா..?’
என்ற எண்ணத்துடன் அவளைப் பார்த்தவளிடம்,
“எக்ஸ்பிரசிவ் ஐஸ் உனக்கு...” என்று ரசனையாக அவளைப்
பார்த்துச் சொல்லியவன் “முகில் அதியனுக்கு மூத்த மகன் நான் இருக்கேன்ற விஷயம் இந்த
உலகத்துக்கு தெரிஞ்சதே நான் காலேஜில் படிக்கும் போதுதான்...
என்னோட மிடில் ஸ்கூல் வரை அநாதை ஆசிரமத்தில் நானும் ஒரு
அனாதைன்ற நிலையில தான் வளர்ந்தேன். உனக்கு ஒரு பிளாஸ் பேக் இருக்கிறது போல
எனக்கும் இருக்கு” என்றான்.
அவனின் தோற்றத்துக்கும்.... ஆரம்பத்தில் தன்னை பயம்காட்டிய
அவனின் நடவடிக்கைகளுக்கும்... சம்மந்தம் இல்லாத பெரிய உருவத்திற்குள் அடிபட்ட
குழந்தையின் உள்ளத்தோடு அவன் இருப்பதைக் கண்டாள்.
வண்ணன் தனது பேச்சிலேயே அவளை கொஞ்சம் கொஞ்சமாக தான்
கேட்கும் கேள்விகளுக்கு பதிலைக் கொடுக்க
தயார்படுத்திக் கொண்டிருந்தான். அதுவும் அவனின் உண்மையான தன்மையை வெளிப்படுயத்தியே
அவ்வாறாக அவளை மிஸ்மெரிசம் செய்துக்கொண்டிருந்தான்.
“பாரு சாப்பிடும் போது தேவையில்லாததை பேசி சாப்பிடுற மூடையே
கெடுத்துக்கிட்டேன்” எனச்சொல்லி எழுந்துபோய் கைகழுவச் சென்றான். அவனின் பின்னால்
அவளும் எழுந்துபோய் கைகழுவிக் கொண்டிருந்தவளிடம்,
“சந்திரிக்காவோட பேரன்ட்ஸ் அடாப்ட் பண்ணிய குழந்தைதான்
லாரானு சொல்றாங்களே... அதில் எனக்கு ஒரு
சந்தேகம் இருக்கு... உதித்கிட்ட கூட அதைப்பத்தி கேட்டேன், அவன் பதில் சொல்லலை, நீ
தான் லாராவோட நல்ல ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறதா சொன்னியே... அப்போ உனக்கு கண்டிப்பா
லாராவைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்கும். உன்கிட்ட கேட்டால் பதில் சொல்லுவியா...?”என்றான்.
“என்ன... என்ன கேக்கப் போறீங்க...?” என்று படபடப்புடன்
கேட்டவளிடம்.
“சந்திரிக்கா என் அப்பா முகில் அதியனை கல்யாணம்
பண்ணுறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் கிஷோர் வர்மாவை டைவேர்ஸ் பண்ணியதா
கேள்விப்பட்டேன்.
அந்த கிஷோருக்கும் சந்திரிக்காவுக்கும் கூட ஒரு பையன்
இருக்கானே... அந்த பையன வளர்க்காம கிஷோரின் வயசான பேரன்ஸ் கிட்ட விட்டுட்டு பிஸ்னெஸ்
பின்னாடியே வொய்ஃப் சுத்துனதாலத்தான் ரெண்டுபேருக்கும் பிரச்சனையாகி ரொம்ப வருஷமா
டைவர்ஸ் பண்ணாட்டியும் பிரிஞ்சு வாழ்ந்தாங்கனு கேள்விப்பட்டேன்.
அப்படிப்பட்ட சந்திரிக்காவோட பேரன்ஸ், சொந்த பேரனை எடுத்து
வளர்க்காம எதுக்கு லாராவை தத்தெடுத்து வளர்த்தாங்க...?” என்று கேள்வி கேட்டான்.
“சார் ஒரு திருத்தம், கிஷோர் வர்மனுக்கும்
சந்திரிக்காவுக்கும் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே லாராவை சமர்வீரபுத், அருணிமா
சமர் தம்பதிகள் தத்தெடுத்துக்கிட்டாங்க. அதாவது தொழிலதிபர் கிஷோர் வர்மாவை
கல்யாணம் பண்ணுறதுக்கு தன்னோட வீட்டில இருக்கிற மகள் லாராரித்திக் தடையாய இருந்தாள். அதனால லாரா ரித்திக்கை
அனாதையா தந்தெடுத்தது வளர்கிறதா காட்டிக்க சட்டப்படி சமர்வீரபுத், அருணிமாவோட
பொண்ணா தத்தெடுத்து “லாரா சமர்” ஆகிட்டாங்க” என்றாள்.
“அப்போ லாராவுக்கும் அப்பா யாரு...? அவர் என்ன ஆனாரு...?”என்று
கேட்டவனிடம்,
“சந்திரிக்கா டெல்லி ஐ ஐ டி காலேஜில் படிக்கும் போதே
மாடலிங் பீல்டில் அப்போ ஓரளவு பேர்சொல்லி அடையாளம் தெரியும் அளவு வளர்ந்திருந்த ரித்திக்
சர்மா கூட லிவ்விங் டுகதரில் இருந்த்திருக்கா...
அப்போ ரெண்டுபேரும் படுக்கையையும் சேர் பண்ணி இருந்ததில் பிரிகாஷன் எடுத்துக்காம கேர்லசா
இருந்ததால கன்சீவாகி சந்திரிக்கா லாராவை பெத்தெடுக்கும்படி ஆகிடுச்சு... அந்த லாரா வேற யாரும் இல்ல என்னோட அக்காதான்.
இந்த தாராவோட ஒன்லி ஒன் டியேரெஸ்ட் சிஸ்டர் தான் லாரா...” என்றாள்.
“என்ன சொல்ற...? சந்திரிக்காவோட மகள்கள் தான் லாராவும்
நீயுமா...? காட் நான் இந்த ஆங்கிளில் யோசிக்கவே இல்ல...
சந்திரிக்காவுக்கு எதோ ஒரு வகையில் லாராவோட ரெத்த சம்பந்தம்
இருக்குனு யூகிச்சேன். அதாவது அவளோட சித்தி பிள்ளைங்க அப்பா கூடபிறந்தவங்க
பிள்ளைங்க அப்படி இருக்கும்னு தான் நினைச்சேன்.
ஆனா... சொந்த மகளைத்தான் அந்த சந்திரிக்கா தங்கச்சின்னு கூட
வச்சு சுத்திகிட்டு இருந்தாளா...? அதுமட்டுமா பெத்த மகளுக்கே கொடூரமான மாத்திரை
தொடர்ந்து .கொடுத்துருக்கா..
செய், இவள் எல்லாம் பொம்பளையா இருக்கவே... அதுவும் அம்மான்ற
சொல்லுக்கே லாயக்கு இல்லாதவள், சரி
அடுத்து நீ எப்படி பிறந்த... ஸாரி... ஸாரி...உன்னைய கேவலப்படுத்த இந்த கேள்வியை
கேக்கலை. படிக்கும் போதே லாரா பொறந்துட்டதா சொன்ன.. பிறகு எப்படி நீ... ?” என்றவன்
கேட்ட தும் கசப்பான சிரிப்பு ஒன்றை கொடுத்தவள்,
“லாரா பிறந்ததால சந்திரிக்காவின் படிப்பு பாதியிலேயே டிஸ்கண்டினியூ ஆகிடுச்சு ... ஆனா தாத்தா சமர் வீரபுத்
தொடர்ந்து மகளுக்காகவும் பேத்திக்காகவும் ரித்திக்
சர்மாவுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையிலான ரிலேஷன்சிப்பை புதுபிக்க பேச்சு
வார்த்தை நடத்தியதால லாராவோட ஃபர்ஸ்ட் பெர்த்டேக்கு அப்பாவா முன்னாடி வந்து
நின்னார். அப்போ வீட்டுல உள்ளவங்க முன்னாடி சிம்பிளா ரெண்டு பேருகும் கல்யாணம்
செஞ்சு வச்சாங்க .
அதுவும் ஒரு வருஷம் தான் ஒழுங்கா போயிருக்கு மறுபடி சந்திரிக்கா
என்னைய கப்ன்சீவ் ஆனதுக்கு பிறகு ரெண்டுபேருக்கும் இடையில் மனக்கசப்பு வந்து நிரந்தரமா
என்னோட மூணாவது வயதில் பிரிஞ்சிட்டாங்க,.
என்னோட மூணு வயசுல இருந்து நான் அப்பா
ரித்திக் வீட்டுல அவருக்கு மகளா வளர்ந்தேன்.
லாரா சந்திரிக்காவோட வீட்டுல பாட்டி தாத்தாகிட்ட
வளர்ந்தாள்.
என்னோட அப்பா ரித்திக்கு அவங்க அம்மா வேற பொண்ணை பார்த்து
கல்யாணம் பண்ணி வைக்கிற வரை அந்த வீட்டில் ஓரளவு நல்லாத்தான் இருந்தேன். ஆனா
அதுக்குப் பிறகு நான் அங்க தேவையில்லாத ஒரு உருப்படியா ஆகிட்டேன்.
ஒவ்வொரு லீவுக்கும் சேலத்தில இருக்கிற என்னோட பாட்டித்
தாத்தா வீட்டுக்கு வரும் நாட்களுக்காகவே எப்பவும் காத்து இருந்தேன். லாராவும் என்
வரவுக்காக காத்து இருப்பா... எங்களோட பெத்தவங்க தான் எங்களுக்கு சரியில்லை
ஆனா என்னோட கிரான்ட் பேரன்ட் சமர்வீரபுத், அருணிமா சமரும் ,
கூட பிறந்தவளும் எனக்கு கிடைச்ச வரம்.
ஆனா எங்க ரெண்டுபேரையும் இந்த அளவு நல்லபடியா வளர்த்த எங்க
தாத்தா பாட்டி, எப்படி அவங்க வயித்தில் பொறந்த எங்க அம்மா சந்திரிக்காவை இவ்வளவு ஒரு
மோசமான பிறவியா வளர்த்தாங்கன்ற கேள்வி எனக்குள்ள
ரொம்ப நாளாக இருக்கு...” என்றாள்.
---தொடரும்---
No comments:
Post a Comment