anti - piracy

Post Page Advertisement [Top]

 

இனிக்கும் விஷம் (தீபாஸ்)



அத்தியாயம் 17

வண்ணன் அவளிடம் “ஒருவேளை மகளை வளர்த்த அப்போ செய்த தப்பை உணர்ந்துக்கிட்டவங்க, உங்களை நல்ல விதமாய் வளர்த்திருக்கலாம்ல” என்றவனின் முகம் எதுவோ யோசனைக்குள் சென்றது...

அவனின் ஆழ்ந்த யோசனையை பார்த்து. “என்ன யோசிக்கிறீங்க? எதுவும் கேக்கணுமா...?” என்றவளிடம்.

“உன் அக்காவுக்கு நீ தவிக்கிறது உண்மையா..? லாராவுக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்க நினைச்சா... என்கூட லாராவை கண்டுபிடிக்கும் ப்ராஜெக்ட்ல ஜாயின் பண்ணலாம்?” என்றான்.

அவன் அவ்வாறு கேட்டதும் ‘கண்ணா லட்டுத் திங்க ஆசையா...?’ என்று கேட்பது போல தோணியது நட்சத்திரா பேரில் இருக்கும் தாராவுக்கு.

“எனக்கு இப்போ இருக்கிற ஒரே லச்சியம் அதுதான். ஆனா என்னைய எதுக்கு நீங்க கூட்டுச் சேர்க்க நினைக்கிறீங்க...? அதனால உங்களுக்கு என்ன லாபம்..?” என்றாள்.

“உனக்கு சந்திரிக்காவோட வீடு, அவளுக்கு நெருக்கமானவ்காங்க அவங்ககூட பழகி இருக்கதால அவங்க எப்படி யோசிப்பாங்க அப்படின்ற விஷயம் தெரியும் அந்த டீடைல்ஸ் வச்சு அவங்ககிட்ட லாரா மாட்டி இருந்தா கண்டுபிடிக்க ஹெல்ப்பா இருக்கும். இல்லைன்னா அதுக்கான பிராசஸ்க்கு சரியான ஆளைத் தேடணும்” என்றவனிடம்.

“ம்... என்னால நீங்க சொல்ற டீடைல்ஸ் எல்லாம் ஓரளவுக்கு கொடுக்க முடியும். அதேபோல இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சாலும் என்னால நேரடியா... அதுவும் தனியா... அவங்களை பேஷ் பண்ணவோ விசாரிக்கவோ  முடியாதுதான். ஆனா இதுமட்டும்தான் காரணமா...?”

“எனக்கு உன்னோட உணர்வுகள் புரியுது... நம்ம வீட்டு மனுஷங்களே நம்மளுக்கு துரோகம் பண்ணுறதோட வலி எனக்கு நல்லாவே தெரியும். நான் எப்படி என் அம்மாவோட டெத்துக்கு காரணமான ஒவ்வொருத்தரையும் கண்டு மனசுக்குள்ள குமுறிக்கிட்டு இருக்கேனோ... அதே போலத்தானே நீயும் இருப்ப? எனக்கு அம்மா... உனக்கு அக்கா.. அவ்வளவுதான் வித்தியாசம்” என்று சொல்லிக்கொண்டு போனவனை

“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் டாக்...” என்று காதை பொத்தியபடி கத்தினாள்.

தான் என்ன அப்படித் தவறாக பேசிவிட்டோம் என்பது வண்ணனுக்குத் தெரியவில்லை, எனவே “எதுக்கு இப்படி தேவையில்லாம ரியாக்ட் பண்ற...?” என்று கடினமான முகத்தோடு அவளிடம் கேட்டான்.

“நீ... நீ... இப்போ என்ன சொன்ன...?  என் லாரா.. உன் அம்மா போல செத்துப் போனது போல இல்ல...  நீ பேசுற...? அது அப்படி இல்லைன்னு சொல்லு... என் லாராவுக்கு எதுவும் அந்த மாதிரி ஆகலைன்னு சொல்லு...” என்றாள் பதட்டத்தோடு.

அவனுமே அப்போதுதான் தனது வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்தான். அவன் வேண்டும் என்றே அவ்வாறு சொல்லவில்லை... உறவுகளின் தேடல், அதன் வலி இருவருக்கும் உண்டு என்பதை சொல்ல சொன்ன வார்த்தைகளில் விளைந்த அனர்த்தமான அர்த்தம் புரிந்ததும்

“ஸாரி... ஸாரி... நான் உணர்ந்து சொல்லலை...” என்றவன் மனதினுள் ஒரு நெருடல் ஒட்டிக்கொண்டது.

“சரி... உனக்கும் லாராவுக்கும் அந்த சந்திரிக்காவுக்கும் இடையில இருக்கிற ரிலேஷன்ஷிப் பத்தி கொஞ்சம் சொல்லு..., ஏன் கேக்குறேன்னா, லாரா பேர்ல கோடிக்கணக்கான பணம் இருக்கு... அது சந்திரிக்காவுக்கு வேணும்... அதனால அவளை கண்ரோல் பண்ணி வைக்கப் பார்க்கிறா...

ஆனா  உனக்கும் சந்திரிக்காவுக்கும்  என்ன பிரச்சனை....? நீ எதுக்கு அவளைப் பார்த்துப் பயப்படுற...?.” என்று கேட்டான். அவனிடம் பதில் சொல்லாமல் இறுக்கத்தோடு அமர்ந்திருந்தவளிடம்.

“இங்க பார்... உன் பேரு தாரா தானே? எதுக்கு நட்சத்திரான்ற பேர்ல சுத்திக்கிட்டு இருக்க...? “ என அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.

“உங்க கிட்ட அதை எல்லாம் சொல்லி எனக்கு என்ன ஆகப்போகுது..?” என்றவளிடம்.

“லாராவுக்கு  என்ன ஆச்சுன்னு உனக்குத் தெரியணும். நானும் அதை கண்டுபிடிக்கத்தான் டிரை பண்ணிக்கிட்டு இருக்கோம். நாம தனித்தனி பாதையில் போனா நம்ம ரெண்டுபேருக்குமே சவாலாய் இருக்கும். அதுதான் சேர்ந்து தேடுவோம்னு நினைக்கிறேன்.” என்றான்.

அவன் சொல்வதில் ஒரு அர்த்தம் இருப்பதாகப் பட்டது. அவள் உதித்திடம் லாராவுக்கு என்ன ஆச்சுன்னு கேள்விக் கேட்க நினைத்தே இங்கே புறப்பட்டு வந்தாள். அவளை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் அவனுக்கும் பொறுப்பு உண்டு எடுத்துக்கூற நினைத்தாள். லாராவை கண்டுபிடிக்க தனக்கு உதவுமாறு கேட்க நினைத்திருந்தாள். ஆனால் அவனே, இந்த டெவிலிடம் தான் அந்த வேலையைக் கொடுத்திருக்கான்’ என்று நினைத்தவள்.

“ஓகே... லாராவை கண்டுப்பிடிக்க எனக்கு நீங்க ஹெல்ப்பண்றேன்னு சொன்னதால... நானும் உங்கக் கூட கோவாப்ரேட் பண்றேன்...” என்றவள் அவள் வாழ்கையில் நடந்ததை அவனிடம் சொல்லத் துவங்கினாள்.

என்னோட மூணு வயசுல, அப்பாவும் அம்மாவும் டைவேர்ஸ் ஆனதுல நான் அப்பா ரித்திக் பொறுப்பில் கங்கம்மா பாட்டியோட கண்ட்ரோலில்  வளர்ந்தேன், லாராவோ  அம்மா சந்திரிக்கா பொறுப்பில் சமர் வீரபுத், அருணிமா பாதுகாப்பில் சேலத்தில் வளர்ந்தாள்.

அம்மா சந்திரிக்கா  மேற்படிப்பு முடிக்க... அதை தொடர்ந்து பிஸ்னெஸ் பண்ணணு மும்பையில செட்டில் ஆகிட்டாங்க. எப்பவாவது கெஸ்ட் போல சேலம் வீட்டுக்கு வந்து போவாங்க.

அப்பா ரித்திக்கோட  வீட்டுல... கங்குப்பாட்டி கண்டிப்புல நான் வளர்ந்துகிட்டு இருந்தேன். அப்பா பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டாங்க. மாசம் ஒரு தடவையோ ரெண்ட்டு தடவையோ தான் வீட்டுக்கு வருவாங்க.

அப்பா ஒவ்வொரு முறை வரும் போதும் கங்குபாட்டி “நான் ஒத்தமனுஷியா இருந்தப்போ இருக்கிறது வச்சு வயித்தை நிரப்பிக்கிட்டு கம்முனு கிடந்தேன். இப்போ  தாராவவையும் வளர்த்து விடணுமே...., அவள் படிப்புக்கு, துணிமணி, சாப்பாடு தின்பண்டம்னு மாசம் எம்புட்டுச் செலவு ஆகுது தெரியுமா...?  ஒழுங்கு மரியாதையா செலவுக்கு பணத்தை எடுத்து வச்சிட்டு இங்க இருந்து கிளம்புன்னு அப்பாகிட்ட சண்டைப் பிடிப்பாங்க.

அப்பாவும் பாட்டிகிட்ட கோவப்பட்டுப் பேசிட்டு பணத்தைக் கொடுத்துட்டு கிளம்பிடுவாங்க. கங்குப்பாட்டி என்கூட பாசமாய் பேசி அரவணைக்க மாட்டாங்க... ஆனா சாப்பாடு, உடுத்த டிரஸ், நல்ல படிப்புன்னு அத்தனையும் கொடுத்தாங்க.  எனக்கு ஏனோ அவங்க கூட ஒட்டவே இல்லை... எப்படா லீவ் விடுவாங்க சேலத்துல இருக்கிற அம்மம்மா வீட்டுக்கு போவோம்னு காத்துக்கிட்டு இருப்பேன்.

அங்க போனா சமர் வீரபுத் தாத்தாவும், அருணிமா பாட்டியும் நல்ல கதைகள் சொல்வாங்க, கடைத்தெருவுக்கு கூட்டிட்டுப் போவாங்க, லாரா கூட விளையாட முடியும்னு சேலம் போக ஆசைப்படுவேன்.

எப்பவும் சமர் தாத்தா தான் லீவ்விட்டதும் என்னைய டாக்சி பிடிச்சிட்டு வந்து ஊருக்கு அழைச்சிட்டுப் போவாங்க. ஆனா ஒரு தடவை அப்பா என்னைய அங்க அழைச்சிட்டுப் போனார். அப்போ நான் மூணாவது படிச்சுக்கிட்டு இருந்தேன் லாரா ஐந்தாவது படிச்சுக்கிட்டு இருந்தா...

அப்பாகூட அம்மம்மா வீட்டுக்குள்ள நுழைஞ்சப்போ எப்பவும் போல வீடு இல்லை. ரொம்ப அமைதியாய் இருந்தது. அப்பவே சந்திரிக்கா வந்துருக்காங்கன்ற விஷயம் எனக்கு விளங்கிடுச்சு.

அம்மா வந்தா லாரா பயத்துடன் எந்தம் சந்தமும் போடாம அமைதியாகிடுவாள். பாட்டி சமையல் அறையே கதின்னு ஆகிடுவாங்க. தாத்தா வந்திருக்கிற மகள்கூட அடுத்து என்ன பண்ணப் போற... குடும்ப நிலலவரம் என்ன என்பதை பற்றி தணிந்த குரலில் பேசிட்டே இருப்பாங்க. அதனால லாராவோட சத்தமோ... பாட்டியோட கண்ணுங்களா என்ற பாசமான அழைப்போ... தத்தாவின் பின்பு சிலேடை எடுத்துக்கொண்டுபோய் யானை படம் வரைஞ்சு கொடுங்கன்னு நொச்சரிக்கும் எங்க சத்தமோ இருக்காது.

அப்போதான் சந்திரிக்கா, பிரபல தொழில் அதிபத் கிஷோர் வர்மாவை கல்யாணம் பண்ண பிளான் பண்ணிட்டாங்க. அதுக்கு எந்த விதத்திலும் தாரா, லாரா அப்பாவான ரித்திக் தொந்தரவு செய்யாமல் இருக்கவும்... தனக்கும் அவனுக்கும் முன்னாடி  கல்யாணம் முடிந்து குழந்தைகள் இருக்குன்ற  விஷயத்தை உலகத்தின் பார்வையில் மறைக்கவும் பணம் டீல் பேச அப்பா ரித்திக்கை அங்க வர வைத்திருந்தாள்.

லாரா, தாரா ரெண்டுபேரும் அனாதைகள் என்ற போலி ஆதாரத்துடன் லாராவை வீரபுத், அருணிமா தந்தெடுக்கவும்... அதுபோல ரித்திக் குடும்பம் என்னைய அடாப்ட் செய்தது போல டாக்குமென்ட் ரெடி பண்ணவும் ரித்திக்  ஒத்துழைக்க அவரிடம் பணம் பேரம் பேசப்பட்டது.

ரித்திக் கேட்ட பெரும் தொகையை மறுபேச்சு பேசாமல் கொடுத்து தனது திட்டத்துக்கு ஒத்துழைக்க வைத்தாள் சந்திரிக்கா. இனி எங்கும் அவனின் முன்னாள் மனைவி என்று சந்திரிக்காவை நேரடியாகவோ மறைமுகமாகவோ மூச்சுவிடக் கூடாது... அவர்களுக்கு பிள்ளைகள் இருப்பது உலகத்தின் பார்வைக்கு வரக்கூடாது... என்ற டீல் அன்றில் இருந்து நடைமுறைக்கு வந்தது.

நானும் லாராவுக்கும் எங்களோட பேரன்ஸ் பிரிஞ்சதால ஒருமுறை அறியாத வயதிலேயே இடம்மாறியதால உறவுகள் உருமாற்றத்தால ஒரு பெரிய கஷ்டத்தை ஃபேஸ் பண்ணினோம். அதைத் தொடர்ந்து ரெண்டாவது தடவையாய எங்களைப் பெத்தவங்களால் எங்கள் பிறப்பே கேள்வி கேலிகூத்தாய் ஆகியது...

இவ்வாறு அப்பொழுது சந்திரிக்காவின் சுயநலப் பேய் வெளியில் வர காரணம் கிஷோர் வர்மா.... பாரம்பரியமான தொழில் துறையில் முன்னனியில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த கிஷோர் வர்மாவுக்கு மனைவியாக வேண்டும் என்ற ஆசைக்கு குறுக்கே அவளின் கடந்த கால கல்யாணம் குழந்தைகள் ரெண்டும் தடையாக இருந்ததால் பணம் கொடுத்து அத்தடையங்களை உலத்தின் பார்வையில் மறைக்கப்பட்டது.

இதில் இப்பொழுது அவள் வாழ்க்கைக்குள் வந்திருக்கும் கிஷோர்  சந்திரிக்காவுக்கு முதலாளியாக அறிமுகமாகியவர். இருவருக்கும் உண்டான ஈர்ப்பும், தேவைகளும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற இடத்துக்கும் அவர்களை நகர்த்தியிருந்தது.

யூடியூப் கலாச்சாரம் சோசியல் மீடியாக்களில் புகாத அன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் பெரும் வணிகர்கள் தங்களை பிராலமாக்க... தங்களுக்கென தனிச்சேனலை போட்டிப் போட்டு உருவாக்கிய காலம் அது.

அவ்வாறான சூழலில் தான் கிஷோரின் வளர்ந்துவரும் மீடியா கிரியேடர் தொழிலில் முறை கம்பெனியில் சந்திரிக்கா வேலைக்கு அமர்ந்தாள். கிஷோரிடம் வேலைக்கு சேர்ந்த சந்திரிக்கா, டெக்னிக்கள் செயல்பாட்டிற்கான நுண்ணறிவும் அந்த பிஸ்னெசை டெவெலப் பண்ண என்னென்ன செய்யவேண்டும் என்ற அறிவும் கொண்டிருந்தாள்.

கிஷோர் தொழிலில் தடுமாற்றத்தை சந்திக்கும் நேரங்களில் தக்க ஆலோசனை கொடுத்து கம்பெனி முன்னேற சந்திரிக்கா காரணமாக ஆனாள். எனவே கிஷோரின் கவனம் சந்திரிக்காவின் மீது விழுந்தது. அவளின் மீது ஈர்ப்பு உண்டானது. அவள் நிரந்தரமாக தன்னுடன் இருந்துவிட்டால் தொழிலில் நிறைய சாதிக்க முடியும் என்ற எண்ணம் துளித்தது.

எனவே செல்லும் இடங்களுக்கெல்லாம் அவளையும் உடன் கூட்டிக்கொண்டு திரிய ஆரம்பித்தான். காலப்போக்கில் இருவரின் நெருக்கமும் அதிகமானது. கிஷோர் அவளுடன் படுக்கையை பகிர்ந்துக்கொள்ள ஆசைப்பட்டதை சூசுகமாக அவளிடமும் கோடிட்டு அடிக்கடி காட்ட ஆரம்பித்தான்.

சந்திரிக்காவுக்கு கைநிறைய சம்பளமும், நட்சத்திர விடுதி வாசமும், டாம்பீகமான வாழ்க்கை முறையும் அந்த நிறுவனத்தில் வேலை செய்வதால் கிடைத்தது. எனவே  கிஷோரின் ஆசைகளை கோடிட்டுக் காட்டியும் வேலையை விட்டு விலக மனம் இல்லாமல் அவனை  தட்டிக்களித்துக் கொண்டே அந்த நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தாள்.

அந்த சமயத்தில் சந்திரிக்கா அவனக்கு தந்த பிஸ்னெஸ் ஆலோசனையில்... வெளிநாட்டு முதலீட்டை தங்களது நிறுவனத்திற்கு திரட்டும் விதமாக... ஒரு பிக் பிஸ்னெஸ் ஆபர் கிடைக்க சந்தர்ப்பம் அமைந்தது. அதனால் கிஷோர் மிகவும் சந்தோசமடைந்தான்.

இருந்தாலும் அந்த பிஸ்னெஸ் டீலிங்கில் ஒரு சிக்கல் இருந்தது. வெளிநாட்டு முதலீட்டை அரசாங்கம் வரையறை செய்த குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கள் கம்பெனிக்குள் கொண்டு வர முடியாமல் போவதால், ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாத சூழல் வந்தது.

அரசாங்கம் அனுமதித்த வெளிநாட்டு முதலீட்டுக்காக சதவீதத்தை தகரத்தினால் தான் இந்த ஒப்பந்தம் முடியுமென்ற நிலையில். அதற்கு பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு சட்டத்தை ஏய்த்தால் சாத்தியமாகும் என்ற புரிதல் சந்திரிக்காவுக்கு இருந்தது.

தொழில் அதிபர் என்ற முறையில் அந்நிய செலாவணி தொடர்பான அமைச்சரை சந்திக்க கிஷோர் ஏற்பாடு செய்தான். அவள் அந்த அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பை தனது பேச்சுத் திறமையால் பெற்று சாதித்துக் காட்டினாள். அதைக்கண்ட கிஷோருக்கு அவளின் திறமை மற்றும் அழகை நிரந்தரமாகச் சொந்தம் கொள்ள, தனது வாழ்க்கைக்குள் கொண்டுவரவேண்டும் என்று முடிவெடுத்தான்.

முதலில் வெறும் படுக்கையை மட்டும் பகிர்ந்துகொள்ள நினைத்தவன் அவளை நிரந்தரமாக தன பிடிக்குள் கொண்டுவர அவளைகொண்டு  பிஸ்னெசை முன்னேற்ற தன்னுடன் தக்கவைத்துக் கொள்ள அவளை   கல்யாணம்செய்ய முடிவெடுத்தான்.

---தொடரும்---

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib