இனிக்கும் விஷம் (தீபாஸ்)
அத்தியாயம் 18
கிஷோர் தன்னை பிஸ்னெஸ்க்கு மட்டும்
பயன்படுத்திக்கொள்ளாமல் அதைத்தாண்டி தன்னை முழுவதுமாக சொந்தமாக்கிக்கொள்ள பிரியப்படுகிறான்
என்பது புரிந்தது. கண்மூடித்தனமாக அவனை மறுக்கவும் விருப்பம் இல்லை.
லகரங்களில் சம்பளம் பெற்றாலும்...
அதைக்கொண்டு ஏழு குட்டிக்கரணம் போட்டாலும்... தன்னால் தொழிலதிபனாகிய கிஷோரின்
அளவு செல்வவளத்தை எட்டிப்பிடிக்க முடியாது. ஆனால் நானும் அவனின் வாழ்கையில் ஒரு அங்கம்
ஆனால் அவளின் சொத்து முழுக்க தனக்கும் சொந்தமாகும் என்ற கணக்குப் புரிந்தது.
அதோடு இந்த கல்யாண ஆஃப்பரை
தட்டிக்கழித்தால் வேலையில் இருந்து தன்னை தூக்கி எறிந்துவிடவும் சந்தர்ப்பம்
உள்ளது. அதனால் திரும்ப சாதாரண மிடில்கிளாஸ் வாழ்க்கைக்குள் போய்விடும் நிலை
வந்துவிடும் என்ற பயம் உண்டானது.
இதுவரை அவள் தன்னை திருமணம் ஆனவள்
என்று அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் உண்மையைச் சொல்லி அதன் பிறகும் அவன்
என்னை கல்யாணம் செய்ய விரும்பினால் மேற்கொண்டு யோசிக்கலாம் என்று முடிவெடுத்தாள்.
அவளின் மும்பை வாழ்க்கை
ஆரம்பமானதில் இருந்து அங்குள்ளவர்கள் எவரிடமும் கடந்தகால வாழ்கையை வெளிப்படுத்தவில்லை.
தன்னைப்பற்றி பிறரிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றே
நினைத்திருந்தாள். ஆனால் கிஷோரிடம் அவ்வாறு மறைப்பது ஆபத்து என்பது புரிந்தது.
அதனால் தனது கடந்தகால வாழ்கையை
பற்றி அவளிடம் சொல்ல முன்வந்தாள். அதுவும் இங்கு யாருக்கும் தனது கடந்த கால
வாழ்க்கைப் பற்றித் தெரியாது.. உங்ககிட்ட அதைச்சொல்வதை நீங்கள் யாரிடமும் வெளிப்படுத்திவிடக்
கூடாது... என்ற நிபந்தனைகளுடன் கிஷோரிடம் வெளிப்படையாப் பேசினாள்.
அவள் பேசியதும் யோசனையாக
சிறிதுநேரம் அமர்ந்திருந்த கிஷோரிடம், “இதை உங்ககிட்டு மறைச்சு கல்யாணம்
பண்ணிக்கொள்ள விரும்பலை கிஷோர்... அதேபோல கல்யாணம்ற கமிட்மென்ட்க்குள்ள
நுழையாம லஸ்ட்டுக்காக படுக்கையில்
இடம்கொடுத்தால் வரும் அனர்த்தங்களை நான் ஏற்கனவே சந்திச்சிட்டேன். இனி அப்படி நடக்கக்
கூடாதுன்னு நினைக்கிறேன். இனிமே நீங்கதான் ‘வெறும் ஸ்டாஃப்பா வேலையை நான் பார்க்கணுமா....
இல்லை உங்க லைஃப் பார்ட்னராகி உங்களுக்கு என் படுக்கையில் இடம் கொடுக்கணுமா’ என்றதை
முடிவு பண்ணனும்” என்றாள்
கிஷோருக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடோ.
நெறியான வாழ்க்கைமேல் பிடிப்போ கிடையாது . அவனுக்குத் தேவை பணம்...
பெரும் பணம்... அதன் மூலம் கிடைக்கும் வளமான வாழ்வு மட்டுமே குறிக்கோள்.
ஆனால் அவனது குடும்பத்துப் பெரியோரிடம் அதை
வெளிப்படையாகப் பகிர முடியாது. மேலும் தன்னுடைய மைன்ட் செட்டிற்கு ஏற்ற லைஃப் பார்ட்னர் சந்திரிக்காதான்
என்று முடிவெடுத்தான். அவளை போன்ற ஒரு கேரக்டரை இனி காண்பது அரிது எனவே அவளை
எப்படியாவது தன்னுடன் பிடித்து பிணைத்து நிறுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற
வேண்டும் என்ற எண்ணம் கொண்டான்.
மேலும் அவளது கடந்தகால வாழ்க்கையை சொல்லியதால் ‘அவளுக்கு
குழந்தைகள் இருந்தாலும் அக்குழந்தைகளின் மேல் பிடிப்பு இல்லை என்றும்...
வாழ்கையில் பெரிய அளவில் செட்டிலாக வேண்டியது மட்டுமே அவளது குறிக்கோள் எனவும்... சொல்லி முடித்திருந்ததால் ‘தாங்கள்
இருவருக்குமே ஒத்த எண்ணம் கொண்டவர்கள்’ என்று புரிதலில் சந்தோசம் அடைந்தான்.
“நீ அம்மாவா...? சான்சே இல்லை சந்திரிக்கா...! யாருமே
உன்னை பார்த்து அப்படி சொன்னா நம்ப மாட்டாங்க. யூ ஆர் ஸ்டில் வெரி யங்”
என்றான்.
அவன் சொன்னதும் கெத்தாக ஓர் புன்னகையை
உதிர்த்தவள். “அதெல்லாம் சரி, இந்த நிலையில் என்னை லைஃப் பார்ட்னராக்க உங்களுக்கு
சம்மதமா கிஷோர்...!?.
முதல் தடவை போல கமிட்மென்ட் ஆகாமல் குழந்தை
பெற்று அதற்கான பொறுப்பை என் தலையில் தூக்கிக்கிட்டு அலைவது போல இன்னொரு நிலை வர நான்
விட மாட்டேன. அதனால இப்படியே என்னை மனைவியா ஏற்றுக்கொண்டால் தவிற வேறு
வகையில் மத்த விஷயங்களுக்கு உங்ககூட இணக்கமாக இருக்க மாட்டேன்” என்றாள் சந்திரிக்கா..
“எனக்கு உன்னைய இப்படியே என்
லைஃப் பார்ட்னராக்க எந்த
அப்ஜெக்சனும் இல்லை. ஆனா என் வீட்டில உன் பாஸ்ட் லைஃப் பற்றி வெளிப்படையாச்
சொல்ல வேணாம். உனக்கு இதுக்கு முன்பு கல்யாணமாகாமல் குழந்தை இருக்கும்
விஷயத்தை மறைச்சுத் தான் நாம் பேசணும் அப்பத்தான் கல்யாணம் பண்ண சம்மதம் வாங்க முடியும்” என்றான்.
அவன் அவ்வாறு சொல்லவும் சந்திரிக்கா மனதினுள்
மகிழ்ச்சி அடைந்தாள். வேலைபார்க்கும் இடத்தின் முதலாளியான அவனுடன் வாழ்கையில்
இணைந்தால் அவனின் நிறுவனமும் சொத்துக்களும் தனக்கும் சொந்தமாகும் என்ற ஆசை
பிறந்தது. எனவே அவளும் சம்மதித்தாள்.
மேலும் சந்திரிக்கா தன்னுடைய கடந்த காலத்தை
முற்றிலும் மறைத்து புதியதாக இந்த சமூகத்தில் தன்னை பெரிய வீட்டு பெண் என்ற
அடையாளத்துடனும், பிஸ்னெஸ் உலகில் தன்னையும் ஒரு தொழிலதிபர் என்ற அந்தஸ்திலும் நிலை
நிறுத்திக்கொள்ள இந்த ஏற்பாடு, திட்டம் வகுத்துத் தரும் என்று நினைத்து
மகிழ்ச்சியடைந்தாள்...
சந்திரிக்கா லைஃப்பில் இருந்து மகள்களான தங்களை
எதுவோ வேண்டாத பொருளைப் போல ஒதுக்கி வைத்ததும்.... அவள் அப்பா ரித்திக் பணத்தை
பெற்றுக்கொண்டு சொந்த மகளையே தத்துப் பிள்ளையாக மாற்ற சம்மதித்த கதையையும் சொல்லி
முடித்தாள்.
அவள் சொன்னதை கேட்ட வண்ணன் ‘பணத்துக்காக இப்படிப்பட்ட
செயலை செய்யவும், ஒரு தாய் தகப்பனால எப்படி முடிந்தது...? இப்படிப்பட்ட இந்த சந்திரிக்கா
பெற்ற பிள்ளைகளை கொல்லவும் தயங்கியிருக்க மாட்டாள்... அவளுக்கு மகள்களாக பிறந்ததால் இவள் இன்னும் என்னென்ன வகையில் துன்பப்பட்டாளோ... என்ற
எண்ணத்தில் அனுதாபமும் பரிவும் தாராமீது உண்டானது.
அவனின் எண்ணத்தை மெய்பிக்கும் வகையில் தாரா மறுபடியும் பேச ஆரம்பித்தாள்... “என்னையும் லாராவையும் இப்போவரை உயிரோடு விட்டு வச்சதுக்கு ஒரே காரணம் இதுவரை நாங்க சந்திரிக்காவின் மகள்னு எங்களை வெளிபடுத்திக்காம இருக்கிறதால் தான்...
எங்களைத் தெரிந்த நெருங்கிய
உறவுக்காரங்க உண்மைய வெளியில சொல்லாம இருக்கிறதுக்கு காரணம் அவங்க வாய தொறக்காம
இருக்கிறதுக்கு கிடைச்சப் பணம். பணக்காரங்க மேல இருக்கிற பயம்...
ஆனா எங்க மனசு இப்படி அப்பா, அம்மா இருந்தும்
அனாதையா அடையாளப்படுத்துறதால என்னமா பாடுபட்டிருக்கும்னு எங்களை சேர்ந்த யாருமே
யோசிக்கலை...
அப்பா ரித்திக் பணத்துக்கு விலைபோனதுக்குப்
பின்னாடி என்னை அவர் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனதும்... கங்குப்பாட்டிக்கு என்
அம்மாவின் சுயரூபம் தெரிஞ்சதும்... இப்படியும் ஒரு தாயானு தான் சந்திரிக்காவை
திட்டினாங்க.
ஆனா கட்டுக்கட்டா பணத்தை மகன் காட்டியதும்
அவுங்க கண்ணும் ஆசையில் மின்னுச்சு... அதுக்குப் பிறகு இத்தனைப் பணத்தோடு
வந்திருக்க மகன் இன்னும் எதுக்கு பொண்டாட்டி துணை இல்லாமல் தனியாக இருக்கணும்னு யோசிக்க
ஆரம்பிச்சாங்க...
அப்படிப்பட்ட அம்மாவுக்கு பிள்ளையாய் பிறந்த
என்னை அற்பமாய் பார்க்க ஆரம்பிச்சாங்க. அவங்க சொந்தத்தில் இருக்கிற ஒரு பொண்ணை,
அப்பா ரித்திக்கிற்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க. அதுக்கு பின்னாடி அந்த வீட்டில்
நான் வேண்டாத பொருளாய் எல்லோராலும் பார்க்கப்பட்டேன்.
என்நிலமை இப்படி ஆகிப்போச்சு என்றால் லாராவுக்கு அம்மாவை மேடம்னு கூப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டாள். அத்தோடு பதிப்பு முதல்கொண்டு அவளின் கனவுகள் எல்லாம் சந்திரிக்கா என்ன ஆசைப்படுறாளோ அதை மட்டுமே செய்ய அனுமதிக்கப் பட்டாள்.
நான் அப்பாகூட போன முதல் மூணு வருஷம் மட்டுமே என்னோட ஸ்கூல் லீவுக்கு, தாத்தா வந்து அவரோட சேலத்துக்கு கூட்டிக்கிட்டு போவாங்க.
நான் உடல் மெலிஞ்சு இருந்தேன். அதோட என் டிரஸ், நான் படிக்கிற ஸ்கூல் எல்லாமே மாறி இருந்தத பார்த்து ரித்திக்கின் புது மனைவியால் எனக்கு தெண்டத்துக்கு காசு செலவழிக்க மனம் இல்லாம போயிடுச்ச்சுனு தெரிஞ்சுகிட்டாங்க. அப்பா ரித்திக் வீட்டில எனக்கான கவனிப்பு மற்றும் செலவுகளை சுருக்கிட்டாங்கன்றதையும் தெரிஞ்சுகிட்டாங்க..
என்னோட நிலையைப் பார்த்து பாட்டியும்
தாத்தாவும் ரொம்ப கவலைப் பட்டாங்க. எனக்கு ஏதாவது வழி செய்யச்சொல்லி மகள்
சந்திரிக்காவை தொந்தரவு பண்ண
ஆரம்பிச்சாங்க.
சந்திரிக்கா கிஷோரை கல்யாணம் செய்தபிறகு அந்த மூணு வருஷத்தில் பெரிய அளவில் எல்லா பிஸ்னெஸ் மேகசீங்களிலும் பாராட்டி ஆர்டிக்கிள் பிரசுரம் ஆகும் அளவில்... பிஸ்னெஸ் உலகில் ஒரு தனி இடத்துக்கு வந்துர்ரால். பெற்றுக்கொண்டாள். அவளோட வாழ்க்கைத்தரமும் பணமும் புகழும் ஜெட்வேகத்தில் உச்சத்துக்கு போச்சு. எந்த அளவுக்குனு உங்களுக்கு நான் சொல்லனும்னு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்” என்றவளிடம்.
“ம்... தெரியும் உலக அளவில் பவர்புல் பிஸ்னெஸ் வுமன் லிஸ்டில் முதல் பத்து இடத்துக்குள்ள அவங்க பேர் வந்ததைத்தானே சொல்ற..?’ என வண்ணன் கேட்டதும்.
“அதுமட்டும் இல்ல... முக்கியமான அரசுப்பதவியல் இருக்குற அரசியல்வாதிகளுக்கு சந்திரிக்கான்ற பேர் மிகவும் பரிட்சயமான நெருக்கமான ஆளாவும் ஆனாள். அரசாங்கத்தை அவளின் தேவைக்கு வளைச்சுப்போடும் பவர் இருக்கிக்கிறவளாக சந்திரிக்கா பார்க்கப்பட்டாள்.
இந்த அளவு வளர்ந்தபிறகும் எனக்கு சப்போர்ட் பண்ணச்சொன்ன தாத்தாவை எடுத்தெறிஞ்சு பேசினாள். அந்த கவலையில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்....
எல்லா மனிதர்களுக்கும் ஒரு வீக்னெஸ் உண்டு அதேபோல சந்திரிக்காவின் வீக் பாய்ன்ட் அவளது தந்தை. சிறுவயதில் இருந்து படிப்பு ஸ்கூல் ஆக்டிவிட்டிஸ் அனைத்திலும் திறமையான அவளுக்கு முழு சப்போர்ட் அவளின் தந்தைதான்.
அவள் என்ன செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அதில் சரி, தவறு என்று பிரித்துக் கூட பார்க்காமல் அவளுக்கு சப்போர்டா நிற்பவர்.
அவளின் பிளஸ் மைனஸ் இரண்டுமே அவர்தான். தாத்தாவுக்கு ஏனோ சந்திரிக்காவுக்கு லாராவும் தாராவும் பிறந்ததுக்குப் எங்க ரெண்டுபேருக்கு அடுத்து தான் தான் அவளுக்கு முக்கியம்நு அவர் மாறிட்டார். அவளால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
எங்க ரெண்டுபெருக்காக எந்நேரமும் யோசித்து பேசிவதால அவரை விட்டு மனத்தால் தூரம் சென்றாள் சந்திரிக்கா. இருந்தாலும் அவர் உயிருக்கு ஆபத்து என்றதும் உலகத்திலேயே அந்த ஒரு மனிதருக்காக மட்டுமே அவள் சற்று பதறிப் போனாள்.
அவளது அந்த பிஷி செட்யூல்களுக்கு இடையில் தாத்தாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்து சேர்ந்தாள்.
மருந்துவ உபகரணங்களுடன் படுக்கையில் இருந்த அவர்... மகளிடம் வைத்த கோரிக்கை, 'தாரா படிப்புக்கும், படிப்பு முடிந்து சிந்தக் கால்களில் நான் நிற்கும் வரைக்கும் என்னோட வாழ்வாதாரத்துக்கு செலவு பண்ணி நல்ல ஸ்கூலில், ஹாஸ்டலில் என்னைய சேர்த்து விட்டு கவபேணு சந்திரிக்காவை சத்தியம் பண்ணச்சொல்லிட்டார்.
அவர் அந்த நிலையில் வாங்கிய அந்த ஒரு சத்தியத்துக்காகத் தான் இப்போவரை நான் படிச்சுகிட்டு இருக்கிற டெல்லி யுனிவர்சிட்டி காலேஜ் படிப்பு வரை சப்போர்ட் பண்ணிக்கொண்டிருகிறாள் சந்திரிக்கா.
அதுவும் ஏழை பொண்ணுக்கு படிப்புக்கு ஸ்பான்சர் பண்ணுகிறேன் என்ற பேரில் உதவிக்கொண்டிருக்கிறாள். என்னைய மகள்ன்னு உலகத்துக்கு முன்னாடி தெரிஞ்சிரக் கூடாதுன்னு பயங்கர கெடுபிடிகளுடன் நடந்துக்கொண்டாள்.
அப்படித்தான் நானும் இருந்தேன். இருந்தாலும் எல்லைத்தாண்டிய சந்திரிக்காவின் மீது கோபமும் ஆத்திரமும் கொள்ளும்படியான சூழலுக்கு சமீபகாலமாக அடிக்கடி வந்தது. அதற்கு அவள் மிரட்டிய விதத்தை தாரா சொல்லிக் கேட்டதும்...
இப்படியுமா...!? என்று வண்ணன் மிகவும் அதிர்ச்சி அடைந்தான்...
---தொடரும்---
No comments:
Post a Comment