anti - piracy

Post Page Advertisement [Top]

 உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால் (தீபாஸ்) 


அத்தியாயம் 03

கல்யாணமாகி கணவனுடன் வெளிநாட்டில் வாழச் சென்றிருந்த மகள் சங்கவி தலை தீபாவளிக்கு தாய்வீடு வந்து  சீராடி விட்டு...  மருமகனுடன் ஃபிளைட்டில் வழிஅனுப்பிய ராதா கால்டேக்ஷியில் வீட்டு வாசலில் வந்து இறங்கினாள்.

உள்ளே நுழைந்ததும், அவளின் மகன் விக்னேஷ் “அம்மா நானும் இன்னைக்கு நைட் பெங்களூருக்கு கிளம்புறேன்” என்றான்.

“என்னடா விக்கி  ஒரு வாரம் லீவ்னு சொன்ன அதுக்குள்ள கிளம்பணும்ற..?”

“ஆபீஸ் லீவ் ஒரு வாரம் தான்,.  ஆனா இங்க போர் அடிக்குதும்மா. தீபாளி அதுவுமா நான் வராட்டி, போன் மேல போன் பண்ணி படுத்து எடுத்துடுவீங்க. அதனாலத்தான் வந்தேன். அதுதான் தீபாவளி முடிஞ்சிருச்சே...  நான்  கிளம்புறேன்” என்றதும்.

“இங்கபாருடா...  இத்தனை நான் மாப்பிள்ளை தலை தீபாவளிக்கு இங்க தங்கி இருந்தார் அதனால உன்கிட்ட சில விஷயங்கள பேச முடியலை,

உனக்கே தெரியும்,  வீட்டு நிலைமை சரியில்லை, நீதானே என்ன ஏது பண்ணலாம்னு முடிவெடுக்கணும்...!. இப்படி அம்போன்னு உதறிட்டு கிளம்பினா எப்படி...?”

“இங்கபாருங்கம்மா, சங்கவிக்கு நீங்க கல்யாணத்துக்கு சீர் செய்றேன்னு செலவை ஓவரா இழுக்கும் போதே தடுத்தேன். நான் என்னமோ அவளுக்கு செய்யறதுக்குப் பொறாமைப் படுறதாய் பேசி என்கூட அவள் சண்டை கட்டுனா... நீங்களும் அவளுக்கு சபோர்ட் பண்ணுனீங்க.

உங்க இஷ்டத்துக்கு ஆடிட்டு . அதுக்கு வாங்குன கடனுக்கு  தொழிலில் பொலங்குற ரூபாய்ல அப்பா கை வச்சுட்டார். இப்போ தொழிலும் படுத்துகிடுச்சு... கல்யாண கடனும் கட்டமுடியலைன்னு சொன்னா...  என்னால என்ன பண்ண முடியும்...? நான் வாங்குற சம்பளம் எனக்கே பத்தமாட்டேங்குது” என்றான்.

அவன் சம்பளம் கிட்டத்தட்ட லட்சத்தை தொடும். இருந்தும் மகனின் மேல்தட்டு வாழ்க்கை முறைக்கு எவ்வளவு பணம் என்றாலும் காணாது என்ற நிதர்சனத்தை உணர்ந்து பெருமூச்சு விட்டார் ராதா.

என் பிள்ளைகளுக்கு பஸ் பயணம்லாம் பழக்கமே இல்லை. கார்லதான் எங்கயும் போவாங்க. சாதாரன சட்டை எல்லாம் என் பையன் போடமாட்டான் பிராண்டெட் தான் போடுவான். என் மகள் குட்டியா தான் ஸ்டெட் போடுவாள், ஆனா அவள் போடுறது எல்லாம் டைமன்ட் ஸ்டெட். ஒரு டப்பா நிறைய  வச்சிருக்கா... ஏசி இல்லாம என் பிள்ளைகள் ஒரு நாள் கூட இருக்க மாட்டாங்க. என்று சிறுவயதில் இருந்தே அவர்களை ஆடம்பரமான வாழ்கையை ஊக்கபடுத்தி வளர்த்ததில் விளைவை என்று எதிர்கொண்டாள் ராதா.

இருந்தும் இப்பொழுதுமே தனது பிள்ளைகளை இப்படித்தான் கட்டாக வாழணும், இருந்தாலும் இல்லை என்றாலும் அளவாக பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று சொல்லிகொடுக்காமல் குறுக்கு வழியில் யோசித்தாள்.

ராதாவின் ஒண்ணுவிட்ட அண்ணன் கதிரேசன் இன்றுவரை அவளின் தந்தைக்கு கொடுத்த வாக்குக்காக தனக்கான தாய்வீட்டிடு சீதனத்தை, தங்கை என்ற பரிவுடன் சிறப்பாக செய்பவரின் சொத்துளில் அவளின் கண் பட்டது.

கதிரேசன் எளிமையான விவசாயி . தோட்டம் துறவு நில புலன்களுடன் இருந்தாலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர்.  ராதாவுக்கு அண்ணனின் குடும்பத்தை பார்க்கும் போது ‘துட்டு இருந்து என்ன பண்ண வாழத் தெரியாத பட்டிக்காடு’ என்று எண்ணம்.

அந்த பட்டிகாட்டு அண்ணனுக்கு அழகு மலர் என்றே ஒரே ஒரு வாரிசு. தற்போது உள்ள அவர்களின் ரோட்டு மேட்டில் இருக்கும் அந்த பத்து ஏக்கர் நிலத்தை மட்டும் கைப்பற்றினால் போதும் அம்புட்டு கடனையும் அடைத்துவிடலாம். அங்க செண்டே பத்து பதினைச்சு  லட்சம் மேல போகுதாம்ல இப்போ....!

அதை கைப்பற்ற ஒரே வழி அண்ணன் மகள் அழகு மலரை மகனுக்கு கல்யாணம் செய்து வச்சிட்டா என்ன...?  ஆனா இந்த பயலை இந்த கல்யாணத்துக்கு எப்படி சம்மதிக்க வைக்க...? அழகு இன்னும் அந்தக்கால சம்சாரி வீட்டு புள்ளையா தாவணி, சேலை தமிழ் மீடியம் படிப்பு அப்படின்னு பட்டிகாட்டு பொண்ணாவே வளர்ந்து நிக்கிறாள். இவனுக்கு அந்தப் பட்டிகாட்டை புடிக்காதே... ஆனா வீட்டு நிலைமையை பேசி புரியவச்சு இந்த கல்யாணத்தை எப்படியும் முடிச்சுடனும்” என்ற எண்ணத்தில்.

விக்கி கண்ணா... நீ இன்னைக்கு பெரியபடிப்பு படிச்சு ஒரு வேலையில் இருக்க அந்த மனுஷன் தான் காரணம். அப்பனோட பாரத்தை அடுத்து மகன் தான் தாங்கனும்.  இந்த கடன் எல்லாம் ஓச்சிட்டு நிம்மதியா சாபிடனும், எப்பவும் போல வசதியான வாழ்க்கைய வாழனும்னா ஒரு வழி இருக்கு. ஆனா அதுக்கு நீ சம்மதிக்கணும்” என்றதும்.

“என்னத்துக்கு சம்மதிக்கணும்...?, எதுவோ பெருசா பிளான்  போடுறீங்கன்னு  தெரியுது... என்னெ எதுன்னு தெளிவா சொன்னாத்தானே முடியுமா இல்லையானு சொல்லுவேன்.”

“அம்மா ஊர்ல இருக்கிற எங்க கதிரேசன் அண்ணனை தெரியும்ல, அவரை பார்க்கத்தான் பட்டிக்காடு போல சாதாரண ஆளா உனக்கு தெரியும். ஆனா காடு, கரை, தோட்டம், நிலம்னு நீ யோசிக்க முடியாத அளவு சொத்து இருக்கு. அவருக்கு ஒத்தே ஒத்த மகள்தான். என் அண்ணன்கிட்ட நான் பொண்ணு கேட்டா மறுக்காம உனக்கு பொண்ணு தருவாரு. அம்புட்டு சொத்தும் அதுக்கு பிறகு நமக்குத்தான்...” என்றார்,.

“அதுக்காக டீசென்சியே இல்லாத அந்த பட்டிக்காட்டுக்  காரியையா கல்யாணம் பண்ண முடியுமா....? என்னோட ஸ்டேட்டஸ் என்ன ஆகுறது...? என்னோட பெர்சனாலிட்டிக்கும், அழகுக்கும் போயும் போயும் அவள் எப்படி பொருந்துவாள்...?  செய்..., இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன” .

“அடேய் கூறு கெட்டவனே. நீ வாங்குற சம்பளம் உன் உடுப்புக்கும் செருப்புக்கும் நீ போடுற ஆடுகாலித் தனத்துக்குமே பத்தாம... இன்னும் உன் அப்பன் கிட்டத்தான் காசு வாங்கிக்கிட்டு சுகமா வாழுற... அதுனாலத்தான் இந்த மினுமினுப்புல இருக்கிற...

இப்படியே வாழ்க்கை முழுக்க ராஜாவா சுத்தனும்னா காசு பணம் தேவை. என் அண்ணன் வீட்டையும் ஆளுகளையும் பார்த்து சாதாரணமா எடை போடாத...

திரும்பவும் சொல்லுறேன், என் பெரிய அய்யன் வீட்டு சொத்துக்கு அவன் மட்டுமே வாரிசு... பார்த்த தானே  உன் தங்கச்சி கல்யாணத்துக்கு அசால்டா வைரத்தில  அட்டிகை செஞ்சு வந்து போட்டு முறை செஞ்சாருள்ல...

அவன் என் கூடப் பொறக்கலை என்றாலும் என்னைய சின்னய்யா மகள்ன்னு என்னைக்குமே பிரிச்சு பார்த்ததில்லை.

என் கூடப் பொறந்தவன் சரியில்லைன்னு என் அய்யன், மாடு  முட்டி சாகக் கெடந்த போது கதிரேசன் அண்ணனின் கையில் என்னை புடிச்சு கொடுத்து உன் தங்கச்சியை  பார்த்துக்கோ எனக்கு பொறந்தவன் சரியில்லை... நீ தான் அவளை பார்த்துக்கணும்னு  சொல்லி கண்ணு கலங்குனார்..

அதுக்கு, ராதா எனக்கும் தங்கச்சிதான் சின்னய்யா அவளுக்கு அண்ணனா எல்லாம் நான் செய்வேனு கொடுத்த வாக்குக்காக இன்னைக்கு வரை அலுக்காம எனக்கு சீர் செஞ்சுக்கிட்டு இருக்கார்.

அவரோட கீழக்காட்டு பத்து ஏக்கள் நிலம் கவர்மென்ட் பைபாஸ் போட்டதால மதிப்பு கூடி  கோடிக்கணக்கா போகுது. அது மட்டும் நம்ம கைக்கு வந்தாக் கூட போதும் கடன் எல்லாத்தையும் அந்த ஒரு நிலைத்த வித்தே அடச்சிட்டு மீண்டுடலாம். அதுக்காகத்தான் இந்த கல்யாணம்.

அவள் கூட வாழ வைக்க கல்யாணம் பண்ணலை. என் அண்ணன் சொத்தை அவளை வைத்து கைப்பத்தத் தான் இந்த கல்யாணம்.

சிம்பிளா எங்க ஊர்ல வச்சே கல்யாணத்தை முடிச்சுப் புடலாம். அதுக்குப் பிறகு ஒரு வருஷம் அவள்கூட வாழ்ந்து பாரு. அதுக்கு பிறகும்  உனக்கு அவளைப் பிடிக்கலைனா   நானே ஏதாவது நொட்டை சொல்லி தீத்து விட்டுருறேன்” என்றாள்.

அதுக்குப் பிறகு நீ ஆசப்பட்டது போல உனக்குப் பிடிச்ச அழகான, படிச்ச பொண்ணா பார்த்துக் கட்டிக்கோ என்று சொல்லியே மகனை இந்த கல்யாணப் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல.

இப்போதைக்கு இப்படி பேசித்தான் அழகு மலரை கல்யாணம் செய்ய இவனு சம்மதிக்க வைக்க முடியும், கல்யாணம் செய்துட்டால் மனசு மாறி மகன் அவளுடன் வாழ்ந்து விடுவான் என்று தப்புக் கணக்குப் போட்டாள் ராதா.

 ****

கல்லூரி விட்டு வீட்டுக்கு வரும்போது அழகியின் நினைப்பு எல்லாம் செவலை நல்லபடியா குட்டி  போட்டுருக்குமா..? அம்மாவுன் பிள்ளையும் நல்லபடி இருக்காங்களா...?  பசுங் கன்றுக்குட்டி போட்டுருக்குமா..? அல்லது காளை கன்றா..?’ என்று பல கேள்விக்கு விடை கிடைக்க ஆர்வத்துடன் காலேஜ் பஸ் விட்டு இறங்கி வீடு நோக்கி வேகமாக எட்டு வைத்தாள் மலர்.

தனது வீடு இருக்கும் தெருவில் நுழையும் போதே வீட்டு வாசலில் நின்ற காரை பார்த்து ‘இது ராதா அத்தை கார் போல இருக்கே...?’ என்று வந்திருப்பவர்களை கண்டுகொண்டாள்.

ராதா  அத்தையின்  குடும்பத்தை அவளுக்கு சுத்தமாகப்  பிடிக்காது. அதுவும் அந்த அத்தை பெத்த மகளை அறவே வெறுத்தாள். நல்லவேளை அவளுக்கு போன வருஷம் கல்யாணமாகி லண்டனில் புருஷனோட குடியேறிட்டா...  இல்லைன்னா அம்மாக்கூட  ஒட்டிக்கிட்டு இங்க வந்துருப்பாள்.

வந்தா சும்மாவா இருப்பா...? என்னமோ நாங்க எல்லாம் தீண்டத் தகாதவர்கள் மாதிரியும், அவள் என்னமோ அந்த வானத்தில் இருந்து குதித்தவள் போலவும் போடுற அலப்பறை இருக்கே... அப்பப்பா...

என் வீட்டுல வந்து என்னையே இளக்காரமாய் பார்த்துப் பேசுற அவளை கன்னம் கன்னமா அப்பனும் போல இருக்கும். வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆச்சேனு அடங்கி இருக்க வேண்டியிருக்கும்.

இந்த அத்தை குடும்பம் டவுனில் பவுசியா வாழ்ந்தா அது அவங்களோட.. என்னமோ நாங்க கஞ்சிக்கு வழி இல்லாதவங்க போலையும் ஆதிவாசி மனுஷங்க போல ஏன்னா பெருமை பீத்தலு...?.

இந்த அத்தை, இதே ஊர்ல பிறந்து வளர்ந்தவங்க தானே...? எல்லாம் அப்பா கொடுக்கும் இடம். தங்கச்சி.. நொங்கச்சினு.. ஓவரா இந்த அத்தையை தூக்கி வச்சி கொண்டாடுறார். அதனாலத்தான் இந்த  அத்தையின் குடும்பம் என் வீட்டுல வந்து எங்களையே பதம் பார்க்குறாங்க.

இவ்வாறாக அவளுக்குள் அவளே சொல்லிக்கொண்டே நடந்தாள். செவலையையும் அது ஈன்ற கன்றையும் பார்க்க வீடு நோக்கி ஆவலாக வந்தவளுக்கு, பிடிக்காதவர்களின் வரவினால் ஆவல் மட்டுப்பட்டு நடை சோர்ந்து போனது. எனவே  மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தாள்.

வீட்டின் நடுக்கூடத்தில் கிடந்த இருக்கைகளில் அவளின் அப்பாவின் தங்கச்சியும் இவளின் அத்தையுமாகிய ராதாவும் அவர் கல்யாணம் செய்திருக்கும் வழுக்கை மண்டை பால்பாண்டி மாமாவும், உடன் அவர்களின் அல்டாப்பு மகன் விக்னேஷும் அமர்ந்திருந்தனர். ஆளாளுக்கு கிண்ணத்தில் இருந்த பதார்த்தத்தை ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  

ராதா அத்தைக் குடும்பம் வீட்டிற்கு வந்தால் முகம் வாடித் தெரியும் அவளின் அம்மா நாச்சியாரின் முகமோ இன்று மலர்ச்சியாக இருந்தது. அத்தோடு உள்ளே வந்தவளை என்றும் இல்லாத பாசத்துடன் வந்துட்டாள் என் மருமகள், அவளுக்கும் சீம்பாலை கிண்ணத்தில் போட்டு எடுத்துட்டு வாங்க மதினிஎன்று நாச்சியாரை பார்த்து கூறினாள் ராதா.

அவளின் அப்பா கதிரேசனோ... அழகி, வீட்டுக்கு அத்தையும்  மாமா உன் அத்தானும் வந்துருக்காங்க, வாங்கன்னு கேக்காம மசமசன்னு இருக்க..? இதென்ன பழக்கம்...?” என்று என்றும் இல்லாத வழக்கமாக மகளை செல்லமாக கடிந்துக்கொண்டார்.

எனவே வேறு வழி இல்லாமல், வங்க அத்தை, வாங்க மாமா என்றவள் விக்னேஷை மட்டும் அத்தான் என்று உரிமையோடு சொல்லாமல் மொட்டையாக வாங்க...என்று கேட்டு வைத்தாள்.

நாச்சியார் மகளின் நிலையைப் புரிந்தவராக, அழகி, நீ ரூமுக்கு போய் முகம், கால், கை அலம்பிட்டு உடுப்பை மாத்திட்டு வா...  நம்ம செவலை பசுங்கன்னு போட்டுருக்கு, உனக்கு சீம்பால் சாப்பிட அம்மா எடுத்து வைக்கிறேன்” என்று சொன்னதும் விட்டால் போதுமென்று அங்கிருந்து தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள் அழகி.

விக்னேஷ் அங்கு வந்ததில் இருந்து மொபைலில் மூழ்கி இருந்தான். அக்கம் பக்கத்தில் நடக்கும் பேச்சு வார்த்தைகள் எதையும் கவனிக்காமல் அவனுகென்று மொபைலில் வேறு உலகத்தில் மூழ்கி இருந்தான்.

அழகி வீட்டிற்குள் நுழைந்த போது மட்டும் ஆராய்ச்சியாக அவளின் மேல் பார்வையை செலுத்தியவன், அவள் வாங்க என்று சொன்னபோது கடமைக்காக தலையை அசைத்து அவளின் வரவேற்பை ஏற்றுக்கொண்டான்.

*****

அழகு மலர், முகம் கழுவி எப்பொழுதும் போல வீட்டில் போடும் உடுப்பை எடுத்துக்கொண்டு  மாற்றிக்கொள்ள கதவை தாழ் போடும் நேரம் அவளின் அம்மா நாச்சியார் கதவைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் வந்தாள்.

“என்னம்மா.... நான் டிரஸ் மாத்தணும்” என்றவளிடம் .

“இதையா உடுத்தப் போற...? வேணாம் இரு நான் வேற எடுத்துத் தாரேன். அந்த உடுப்பை கட்டிக்கோ...”  என்றபடி அங்கிருந்த மரப்பீரோவில் இருந்து அரக்கு நிறத்தில் சன்னமாய் தங்க ஜரிகை உள்ள பட்டுப் புடவையை எடுத்து நீட்டினார்.

அடுத்து பீரோவில் இருக்கும் உள் அரங்கை திறந்து குடை ஜிமிக்கி மற்றும் தாமரை டாலர் வைத்த செயின் அத்துடன் கைக்கு இரண்டு ஜோடி தங்க வளையல் எல்லாம் எடுத்து வைத்தாள்.

அழகிக்கு அம்மாவின் செயல் சந்தேகத்தை விதைத்தது, “என்னம்மா திடீர்னு என்னைய  பொண்ணு பார்க்க யாராவது வரப்போறாங்களா...?  எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம். நான் படிச்சு முடிச்சு எங்க காலேஜில் ராஜி அக்கா போல வேலைக்கு போகணும். பிளீஸ் மா. அதுவரை எனக்கு கல்யாணம் வேணாம். அதுக்கு பிறகு நீங்க யாரை கட்டிகிட சொன்னாலும் கட்டிக்கிறேன்” என்றாள்.

“அடியே கூறுகெட்டவளே... உங்க அத்தைக்காரி உன்னைய பொண்ணு கேட்டு வந்துருக்கா... நீ வேலைக்கு போகாட்டி என்ன குடியா முழுகிடப் போகுது...?

நான் கூட ராதாவை என்னமோன்னு நினச்சேன். அவள் மகன் கை நிறைய சம்பளத்துல பெங்களூரில் என்ஜினியரா இருக்கான். பார்க்க ராஜாவாட்டம் இருக்கான். இந்த திமிருபுடிச்சவளுக்கு அண்ணன்னு உங்க அப்பாக்கிட்ட சீர் செனத்தி வாங்க மட்டும்தான் தெரியும். நம்ம மகளை எல்லாம் மகனுக்கு பொண்ணு எடுக்க மாட்டான்னு தப்பா நெனச்சுட்டேன் டி.

ஆனா அவளே சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு வழிய வந்து உன்னைய பொண்ணு கேக்குறாள். அறிஞ்ச இடம், மாப்பிள்ளை நல்ல படிச்ச கைநிறைய சம்பளம் வாங்கி கண்ணனுக்கு லச்சணமா இருக்கான். சொந்தத்துல உன்னை கட்டிக்கொடுத்தா நாளை பின்ன உரிமையா நாங்களும் உன் வீட்டுக்கு வந்து போக முடியும். மாட்டேன்னு சொல்லாம சேலையை உடுத்திட்டு கிளம்பி வா,… அம்மா நைட்டுக்கு பலகாரம் செய்யப் போறேன்” எனச் சொல்லி வெளியேறிவிட்டாள்.

அழகிக்கு திக்கென்று ஆனது. இதுவரை குடும்ப விழாக்கள் சிலவற்றில் விக்னேஷை பார்த்திருக்கிறாள். ஆனால் அவனும் அவனின் தங்கையும் இவளை தீண்டத் தகாதவளாக விலகிப் போவதை உணர்ந்து இருக்கிறாள்.

போங்கடா  நீங்க எல்லாம் ஒரு ஆளா... என்று இவளுமே அவர்களை கண்டுகொண்டதில்லை. அப்படிபட்டவனுடன் தனக்கு கல்யாணமா...? அவன் அழகான என்ஜினியரா, கைநிறைய சம்பளம் வாங்குறவனா இருந்தா உடனே கட்டிக்கணுமா...? காதலாய்  ஓரு பார்வை பார்க்காட்டி கூட பரவாயில்லை...  சக மனுஷியாய் நேருக்கு நேரா பார்த்தா சின்னதா ஒரு சிரிப்பு சிரிக்காம போனாக் கூடா பரவாயில்லை... என்னவோ தீண்டத் தகாதவர்களை ஒதுக்குறது போல முகத்தைச் சுளிச்சுகிட்டு போவான்.  இவன் எனக்கு புருசனா...?” அவளின் மனம் முரண்டியது.

விக்னேஷ் இங்கு வருவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவான். சிறுவயதில் நான்கு ஐந்து தடவை மட்டும் அங்கு வந்திருக்கிறான். அவனின் அம்மா ராதாவோ மகள் சங்கவியை  மட்டுமே எப்பொழுதும் உடன் அழைத்து வருவாள். அவளை வைத்தே இவனின் குணத்தையும் இவள் எடை போட்டு இருந்தாள்.

கதிரேஷன் தனது தங்கை ராதாவின் மகள் சங்கவியின் கல்யாணத்துக்கு  குடும்பத்துடன் போன வருடம் சென்றிருந்தார்.  அப்பொழுது விக்னேசை நீண்ட காலத்திற்குப் பின் வளர்ந்த இளைஞானாக பார்த்தார்.

சினிமா நடிகனை போன்று தோற்றத்தில் சிவந்த நிறத்தில், பெங்களூரில்  கை நிறைய சம்பளத்தோடு எஞ்சினியராக வேலைப்பார்க்கும் அவனுக்கு, தனது மகளை கட்டும்  முறைதானே...? வெளித்தோற்றத்தையும் வெட்டி பந்தாவையும் பார்த்து உள் நிலவரம் தெரியாமல்  மயங்கிப் போனார்.

தங்கசிக்கிட்ட எதுக்கும் ஒரு தடவை என் பொண்ணை எடுக்குற ஐடியா இருக்குதான்னு கேட்டுப் பார்க்கணும்’ என்று எண்ணி இருந்தார்.  

இன்று தனது வீட்டிற்கு புருசனையும் மகனையும் அழைத்து வந்த தங்கை ராதாவோ அவளாகவே மகனுக்கு பொண்ணு தரச் சொல்லி கேட்டதும் கதிரேசன் அகமகிழ்ந்து போனார்.

ராதாவின் குடும்பம், தொழிலில் நட்டமாகி முழுகும் நிலையில் உள்ளதை மறைத்து... எப்பொழுதும் போல டவுனில் சொந்தத் தொழில் வீடு காருன்னு வசதியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாள்.

தனது மகன் விக்னேஷின் அருமை, பெருமை, படிப்பு, வேலை என்று புகழ்ந்தவள். அவனுக்கு பெரிய பெரிய இடத்தில் படிச்ச அழகான பொண்ணை தருவதாய் வரிசை கட்டிக்கொண்டு நிற்பதாகவும்... ஆனால் அவள் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று அண்ணன் மகள் அழகு மலரை பெண்ணெடுக்க  சம்மந்தம் பேச புருஷன் பிள்ளையோடு வந்திருப்பதாகக்  கூறினாள்.

அதுமட்டுமா... என் மகன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான் இதுதான் பொண்ணு கட்டுடா தாலியைனு சொன்னா யார்னாலும் கட்டிவிடுவான்.  என்று கூறினாள்.

தங்கை குடும்பத்தார் காட்டும் பவுசு வாழ்க்கை விக்னேஷின் நாகரிக தோற்றம், கசங்கள் இல்லாத உடுப்பு, நுனி நாக்கில் பேசப்படும் ஆங்கிலம் ஆகியவற்றை கண்டு அவரும் புத்தியை கடன் கொடுத்துவிட்டார்.

*****

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib