உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால் (தீபாஸ்)
அத்தியாயம் 05
அம்மா அப்பா வார்த்தையை மறுத்துப் பேசாமல்
விக்னேஷை கல்யாணம் செய்ய சம்மதித்து,
மனதளவில் விக்னேஷை கவனாக ஏற்றுகொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.
ஊரார்முன்பு விக்னேஷின் வீட்டிலிருந்து
வந்து பூவைத்து கல்யாணத்தை உறுதிபடுத்திப் போனதற்கு பின்பும் அவன் அவளிடம் பேச எந்த வித முயர்ச்சியும் எடுக்காதது அழகியின்
மனதை காயப்படுத்தியது.
பூவைக்க ஆட்களோடு ஆளாய் வந்து போனவனின் கடைக்கண்
பார்வைக்காக காத்திருந்த அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
‘ஒரு பார்வைக்கு கூட பஞ்சமாகிப் போகும்
அளவிலா நான் இருக்கேன். அப்படி யாரோ மூணாம் மனுஷர் போல வந்துட்டு போறவர் எதுக்கு
என்னைய கல்யாணம் கட்டிக்கணும்..?
ஒருவேளை ராதா அத்தையோட கட்டாயத்தில என்னைய
கல்யாணம் செய்ய சம்மதிச்சிருப்பாரோ...?’ என்ற
குழப்பமே அவளின் முகத்தில் இருந்த மலர்ச்ச்சியை காணாமல் போக வைத்திருந்தது.
முகூர்த்த புடவைக்கு தைத்து வந்திருந்த
ரவிக்கை அளவு சரியாக உள்ளதாவென போட்டுப் பார்த்த அழகு மலருக்கு முகத்தில்,
கல்யாணத்திற்கான கலையே இல்லை. யாருக்கோ
கல்யாணம் போல ஒரு பிரம்மை அவளுள்.
நேற்று முகூர்த்த புடவைக்கு எடுத்துத்
தைந்திருந்த ரவிக்கையை கொடுத்துவிட்டுப் போக வந்திருந்த ராதா அத்தையிடம் அப்பா பேசிய விஷயம் அழகியை யோசனையில்
ஆழ்த்தியது.
“இங்க பாரு ராதா, எனக்கு இருக்கிறது என்
மகள் ஒருத்தி மட்டும்தான்... என் சொத்து பத்து முழுக்க அவளுக்குத்தான். ஆனாலும் நீ
வாய்விட்டு முக்கு ரோட்டு மேட்டில இருக்கும்
பத்து ஏக்கர் நிலத்தை கல்யாணச்
சீதனமா கொடுண்ணேனு கேட்டுட்ட....
அதனால என் மகள் பேருக்கு அந்த பத்து
ஏக்கர் நிலத்தை மாத்தி எழுத கொடுத்து இருக்கேன். நாளைக்கு ரிஜிஸ்டர் பண்ணிருவேன்.
இப்போ சந்தோசம்தானே...?” என்றார் கதிரேசன். அதை கேட்ட அழகியோ
‘முக்குரோட்டு நிலத்தை இப்பவே எதுக்கு என்
பேருக்கு பத்திரம் பண்ணித் தர அத்தை கேட்டாங்க...?
போன தடவை இவங்க இங்க வந்தவங்க எனக்கு என்ன
பிடிக்கும் அவங்க வீட்டு பழக்க வழக்கம் பத்தி எதுவும் பேசல... என் நகையை பத்தியே
தான் பேசுனாக.
ஒருவேளை சொத்துப் பத்துக்கு ஆசைப்பட்டுத்
தான் என்னைய பொண்ணு எடுக்காங்களோ...? சொந்தம்ன்ற நெனப்போ... என் மேல உள்ள ஆசா,
பாசத்தில என்னைய கல்யாணம் பண்ண நினைக்கலையோ...?’ என்ற கேள்வி அவளை வண்டாய் குடைந்தது.
இவள் இவ்வாறாக எண்ணிக்கொண்டிருந்த அங்கு
ராதா அங்கு பக்கத்தில் உள்ளவர்களுக்கு கல்யாணப் பத்திரிகை கொடுத்து அலைந்து
திரிந்துவிட்டு அலுப்போடு அவரின் வீட்டிற்குள்
நுழைந்தாள்.
நடுக்கூடத்தில் மகன் விக்னேஷ் வந்து
அமர்ந்திருப்பதை பார்த்து “ராசா வந்துட்டையாடாப்பா...!? ஒரு வாரம் முன்னையே லீவ் போட்டுட்டு வந்திருந்தா
கூட மாட கல்யாண ஜோலி பார்த்திருப்ப, ஒத்தையில நானும் உன் அப்பாவும் மட்டும் அலைய
கஷ்டமா இருக்குதுல்ல...” என்றார்.
“அம்மா, இந்த கல்யாணமே ஒரு கண் துடைப்புதான்.
இதுக்கு எதுக்கு இத்தனை இன்விடேஷன்...?
சொத்து பத்து நம்ம கைக்கு கிடைக்கும், அப்பா கடனை எல்லாம் அவளுக்கு சீதனமா
கொடுக்கிற ஒரு சொத்தை வச்சே அடச்சிடலாம்னு சொன்னதை நம்பி நானும் இந்த ஏற்பாடுக்கு
ஒத்துகிட்டேன்” என்று அவர் வைத்திருந்த பத்திரிகை இருந்த பையை காட்டி கேட்டான்.
“அட கூறு கெட்டவனே... கல்யாணம் முடிஞ்சு
முதல் ராத்திரில உன் பொண்ணாட்டிகிட்ட அன்பா பேசி அவள் டாக்குமெண்டை உன் பேருக்கு
மாத்த கையெழுத்து வாங்குற வரை நம்ம குட்டு உடையாம இருக்கணும் நீயும் கல்யாணத்தை கல்யாணமா மதிக்கணும்.
அதேபோல அழகிட்ட நீ பாசமா இருக்கிறது போல
நடந்துக்கணும். புதுப் புருஷன் மயக்கத்தில் அவள் இருக்கும்போதே சொத்த உன் பேர்ல
மாத்துறதுக்கு டாக்குமெண்டில் கையெழுத்தை வாங்கிடனும் புரிஞ்சதா...?
நீ ஒட்டாம இருக்குறது இப்பவே தெரிஞ்சிட்டா
சுதாரிச்சு எங்கண்ணன் கடைசி நேரத்தில கல்யாணத்தை நிப்பாட்டினாலும் நிப்பாட்டி
போடுவாங்க”
“என்னம்மா சொல்றீங்க, அவள்கிட்ட
கையெழுத்து வாங்கணுமா..? சீதனமா கொடுக்கிற நிலத்தை என் பேர்ல அவங்களே எழுதிக் கொடுக்க
மாட்டாங்களா...?”
“நானும் அண்ணன்கிட்ட அந்த நிலத்தை
கல்யாணத்துக்கு சீதனமா கொடுத்துடுங்க அண்ணே.. உங்க மருமகன் தொழில் ஆரம்பிக்க
அப்படி ரோட்டுமேல நிலம் இருந்தா நல்லா இருக்கும்னு ஆசைப்படுறானு தான் கேட்டேன்.
அவரோ விவரமா, உன் பேருக்கு எழுதாம மகள் பேருல பத்திரம் எழுதி
கொடுத்துட்டேனு என்கிட்ட சொல்லிட்டாரு...
இதுக்கு மேல நாம உன் பேர்ல தான் எழுதிக் கொடுக்கணும்னு கட்டாயப் படுத்துனா
எதுவும் வாக்குவாதம் வந்து பிரச்சனை ஆகி கல்யாணம் நின்னுடுமோனு பயந்து கம்முனு
இருந்துட்டேன்.
கல்யாணம் முடியிற வரைதான் இப்படி
பம்மிகிட்டு இருப்பேன். அதுக்கு பிறகு நான் சொல்றது தான் சட்டம்.
அதனாலத்தான் சொல்றேன், நீயும் கல்யாணத்துல அழகிட்ட நல்லபடி அன்பா பேசி மயக்கி
அந்த டாக்குமெண்டை உன் பேருக்கு மாத்த தேவையான கையெழுத்து வாங்குற வரை கவனமா
நடந்துக்கோ” என்றார்.
*****
பெங்களூர் வந்து இறங்கிய துர்க்காவை
எதிர்கொண்டு காத்திருந்தான் விக்னேஷ். பஸ்விட்டு இறங்கிய துர்க்காவின் முகத்தில் கண்
இமைகள் தடித்து, மூக்கு சிவந்து காணப்பட்டதில் ‘அப்போ அவள் போனில் சொன்னது
உண்மைதான் போல” என்று எண்ணிக்கொண்டான்
பொது இடத்தில் எதுவும் பேச்சுக் கொடுக்க
வேண்டாமென நினைத்து தனது பைக்கை அவளின் அருகில் கொண்டு வந்து நிறுத்தியதும் அதில்
அமர்ந்துக் கொண்டாள்
அவள் வீம்பாக வீட்டில் பேசிவிட்டு வந்திருந்தாலும்
இத்தனை வருடம் பெற்று வளர்த்தவர்களின் உறவை காதலுக்காக முறித்துக்கொண்ட குற்றவுணர்வு
அவளை கொன்றது.
‘விக்னேஷை காதலித்துவிட்டு அம்மா அப்பா
சொன்னார்கள் என்று தேவா மாமாவை கல்யாணம் செய்யவா முடியும்...?’ தனக்குத் தானே
சமாதானம் செய்துகொண்டாள்.
காலை ஆறு பதினைந்து ஆகி இருந்தது.
பெங்களூரின் குளிர்ச்சிக்கு அழகிய இளம் காதலியுடன் பைக்கில் பயணிப்பத விக்கனேஷ்
மனம் ஒரு வகை மிதப்பில் லயித்தது..
அதுவும் அவள் தனக்காக வீட்டை எதிர்த்து
கிளம்பி வந்துளால். இனி அவள் எனக்குத்தான்...
என்ற ஆசை கிளர்ந்தது. ஆனால் அதை கொண்டாட வகை இல்லாமல் அழுதுவடியும் முகத்தோடு
இருப்பவளை சரிசெய்ய நினைத்தான். பைக்கை வழியில் தென்பட்ட ஒரு ஹோட்டலின் நுழைவு
வாயிலுக்குள் விட்டான்.
அதைக்கூட உணராமல் அமைதியாக யோசனையுடன்
இருந்தவள் பைக் நின்றதும் இறங்கிக்கொண்டே
“என்ன இங்க நிறுத்தியிருக்கீங்க விக்கி..?” என்றவளிடம்.
“நீ ரொம்ப டல்லா இருக்க, பேசிக்கிட்டே ஒரு
காஃபி சாப்பிட்டா சரியாகிடுவ. உன்னைய இப்படி பார்க்க பிடிக்கலை” எனச்சொல்லி அவள்
கையேடு கைகோர்த்து உள்ளே நடந்தான்.
விக்னேஷின் காதலை ஏற்று ஒருவாரம் கூட ஆகாத
நிலையில் அவனை நம்பி வந்தாச்சு... அவனுடன் இயல்பாய் கைகோர்த்து ஒன்றிப் பழகியிருக்காத
நிலையில் சேர்ந்திருந்த இருவரின் கைகளை விலக்கிக்கொள்ள
எச்சரித்த மூளையை அடக்கினாள் .
அவனுக்காக வீட்டைவிட்டே வந்தாச்சு....
பிறகென்ன...? இனி இவன்தான் தனக்கு எல்லாம். என்ற எண்ணத்தில் கோர்த்திருந்த கரத்தை
வில க்காமல் இணைந்து நடந்து உள்ளே சென்றாள்.
அழகிய இருக்கைகளுடன் கூடிய மேஜைகள் சிறு
சிறு தடுப்புகளுக்கு இடையில் போடப்பட்டிருந்தது. அதில் ஒன்றில் சென்று அமர்ந்த விக்னேஷ் அருகில்
இருந்த சேரில் அவளின் கையை இழுத்து அமர்த்தினான்.
“அப்போ வீட்டைவிட்டு எனக்காக வந்துட்டயா
துர்க்கா...?” என்ற போது அருகில் பேரர் வந்ததாள் பேச்சை நிறுத்தினார்கள்.
“சார் சாயா டோக்கன் “ எனச்சொல்லி வாங்கும்
இடத்தை கைகாட்டி விட்டுச் அவன் செல்ல, “இரு
நான் காஃபி வாங்கிட்டு வாறேன்” எனச்சொல்லி
எழுந்து போய்விட்டான்.
அவளின் அழுதுவடிந்த முகத்தை பேரர்
பார்த்தபடி கடந்ததைக் கண்டு ஹேன்ட் பேக்கிற்குள் இருந்த வெட் டிஸ்யூவை எடுத்து
முகத்தை துடைத்துவிட்டு அமர்ந்திருந்தவளின் தெளிந்த முகத்தை காஃபி கப்புகளுடன்
வந்தத விக்கி பார்த்து விட்டு “குட்” என்றான்.
அவனை பார்த்து லேசாக சிரிப்பை உதிர்த்தவள்
“அப்பா தேவா மாமாவை கல்யாணம் பண்ணனும்னு சொன்னதும் முடியாதுன்னு சொல்லி சட்டுன்னு
கிளம்பி வந்துட்டேன்” என்றதும்.
“கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என்றவனை
விலுக்கென நிமிர்ந்து பார்த்தவள்.
“அப்போ உங்க வீட்டில பேசப் போறீங்களா
விக்கி, அவங்க நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சிடுவாங்க தானே...?” என்றதும்.
அவனோ மனதிற்குள் ‘காரியத்தையே கெடுக்கப்
பார்க்கிறாளே...’ என்று நினைத்தவன்.
“இல்ல துர்க்கா... இன்டர்காஸ்ட்னா
கண்டிப்பா வீட்டுல சம்மதிக்கவே மாட்டாங்க. ஆனா நான் அதுக்காக கவலைப்படப் போறது
இல்லை... நமக்கு யாரும் வேணாம். ஒரு கோவிலில் நாமளே மேரேஜ் வச்சுக்கலாம்” என்றான்.
“இல்ல விக்கி... கொஞ்சம் வெயிட் பண்ணிப்
பார்ப்போம், நானும் என் அக்காட்ட பேசி நமக்கு கல்யாணம் பண்ண என் பேரன்சை சம்மதிக்க
வைக்க டிரை பண்றேன்.
நீங்களுமே உங்க வீட்டுல பேசிப் பாருங்க.
ஒரு வருஷமாவது நாம அவங்க சம்மதத்துக்காக வெயிட் பண்ணிப் பாப்போம். அதுக்குப்
பிறகும் அவங்க மனசு மாறலைனா நீங்க சொன்ன மாதிரி பண்ணிடலாம்” என்றாள்.
அவனோ மனதில் ‘ஒரு வருஷமா..? ஒரு மாசத்துல நீயே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேக்க வைக்கிறேன். இவ்வளவு அழகான உன்னை காத்திருந்து மிஸ் பண்ண நான் என்ன முட்டாளா...?’ என்று நினைத்தவன் அவளிடம் சம்மதமாக தலையசைத்து அங்கிருந்து அவளுடன் கிளம்பி அவளை அவள் தங்கி இருக்கும் பி.ஜி யில் இறக்கிவிட்டுவிட்டு உரிமையாய் கை பற்றி அதில் முத்தமிட்டு நைட் போன் பண்ணுறேன்” எனச்சொல்லி சென்றான்.
---தொடரும்---

No comments:
Post a Comment