உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால்
(தீபாஸ்)
அத்தியாயம் 11
துர்க்காவின் அப்பா கனி அரசுவை மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். ஏற்கனவே உடல் பலவீனமாக இருந்தவருக்கு மகள் தன்னை மீறி காதலுக்காக வீட்டை விட்டுச் சென்றது மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உடல் பிரச்சனையை அதிகரிக்கச் செய்து முடக்குவாதத்தில் தள்ளியது.
எனவே பிரபல மருத்துவமனையில் தேவகுமாரன் மாமனை அட்மிட் செய்திருந்தான். அதனால்தான் மூத்தமகள் சாந்தியை அழைத்துவரச் சொல்லி அன்று மருமகனுக்கு போன் பண்ணி இருந்தார் சுப்பு.
சாந்தி ஏற்கனவே தங்கையின் மேல் கோபத்தில் இருந்தாலும் திரும்பத் திரும்ப துர்க்கா மொபைலில் அழைத்து “அக்கா என்கூட வேலை பார்க்கிற விக்னேஷ லவ் பண்ணிக்கிட்டு இருக்கேன் பிறகு எப்படிக்கா தேவா மாமாவை கல்யாணம் செய்ய சம்மதிக்க முடியும்...? நீயே என்னைய புரிஞ்சுக்கலைனா எப்படிக்கா...?” என்று பேசி மனதை கரைத்திருந்தாள்.
இந்நிலையில் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்திருப்பதைக் கண்டு கலங்கிப் போனாள் சாந்தி. மீண்டும் தங்கையின் மீது கோபம் உண்டானது.
துர்க்காவால் தான் அப்பாவுக்கு உடல்நிலை இவ்வாறு ஆனது என்ற எண்ணம் உண்டானது. பெத்து இத்தனை காலம் வளர்த்து வந்தவர்களை விடவா காதல் இவளுக்கு பெரிசா போச்சு...?’ என்ற ஆதங்கமும் கோபமும் உண்டானது. எனவே மறுபடியும் தங்கையின் மொபைல் அழைப்புகளை தவிர்த்து அவளுடன் பேசாமல் இருக்க ஆரம்பித்திருந்தாள் சாந்தி.
மருத்துவமனையில் ஐ.சி.யூ அறையில் இருந்து கனி அரசுவை நார்மல் வார்டுக்கு மாற்றி இருந்தனர். அவருடன் சுப்பு தங்கி இருந்தார். எனவே தேவாவின் அம்மா கண்ணம்மா அண்ணன் வீட்டை பராமரிக்கும் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார்.
அன்று கணவனை இழந்த நிலையில் மகன் தேவாவுடன் என்ன செய்ய என்று கலங்கி தான் நின்றேன். அண்ணன் தன்னை அழைத்து வந்து அவரின் பங்களாவின் பின்பக்கம் இருக்கும் கெஸ்ட் ஹவுசில் தங்க இடம் கொடுத்து ஆதரவு தந்து இன்றைக்கு பிழைத்து நல்ல நிலையில் இருக்கிறேன்.
அந்த அண்ணனுக்கா இப்படி ஒரு நிலை வர வேண்டும். கடவுளே... அவர் சீக்கிரம் உடல் நலம் தேரி நல்லபடி வீடு வந்தால் போதும்’ என்று நினைத்தாள் கண்ணம்மாள். அதற்கு பக்கபலமாக நிற்க வேண்டுமென யோசித்தார்.
மேலும் துர்க்காவை தனது மகனுக்கு கல்யாணம் செய்ய அண்ணன் கேட்டபோது உச்சிக் குளுந்து போனாள். ஏனெனில் சாந்தியை தனது மகனுக்கு பெண் எடுக்க ஆசைப்பட்டார். ஆனால் வெளி இடத்தில் அண்ணன் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தது கேள்வி பட்டு அதை தடுக்க நினைத்தாள்.
உன் பெண்ணை தேவாவுக்கு கட்டிக் கொடு அண்ணே.... கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துக்கிறேன்’ என்று கனி அரசிடம் கேட்கப் போவதாக தேவாவிடம் சொன்னபோது இப்படி ஒரு நினைப்பு வேணாம்மா. நமக்கு அவரின் அன்பு மட்டும் போதும். மாமாவிடம் எப்பொழுதும் எந்தகாரணத்தைக் கொண்டும் நீங்களாக போய் பெண் கேட்கக் கூடாது, எனச் சொல்லி சத்தியம் வாங்கிக்கொண்டான்.
தகப்பன் சாமியாகிப்போன மகனின் வார்த்தையை தட்ட முடியாமல் அமைதியாகிவிட்டார், சாந்திக்கும் வேறு மாப்பிள்ளையுடன் கல்யாணமும் முடிந்துவிட்டது .
அதன் பின்பு கண்ணம்மா மகனுக்கு வேறு பெண் பார்க்கிறேன் என்று கிளம்பியபோது எதையாவது சாக்குச் சொல்லி வந்த வரன்களை எல்லாம் தட்டிக்கழித்து இத்தனை காலம் கல்யாணத்துக்கு பிடிகொடுக்காமலேயே தள்ளிப் போட்டுக்கொண்டே வந்துவிட்டான் தேவா.
எங்கே மகன் கல்யாணமே செய்துகொள்ளாமல் இப்படியே ஒற்றை மரமாய் நின்றுவிடுவானோ...? தனது வம்சம் தழைக்காமல் போய்விடுமோ...!? என்று கண்ணம்மா கலங்கிக்கொண்டிருந்தபோது கனி அரசுவே வந்து தனது மகள் துர்க்காவை மகனுக்கு தர ஆசைப்படுவதாக சொன்னதும் கப்பென்று அந்த வாய்ப்பை பற்றிக்கொள்ள நினைத்தார்.
தேவா தனது வார்த்தைகளைக் கூட தட்டிக்கழித்துவிடுவான் ஆனான் அண்ணன் கனி அரசுவின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசமாட்டான்.
என் மகன் கிட்ட வாக்கு கொடுத்தது போல நான் போய் அண்ணன்கிட்ட பொண்ண தானு கேட்கலையே... அவர் வந்து பொண்ணு தருவதாய் சொன்னதும் சட்டென சரி சொல்லி, எப்படியும் இந்த கல்யாணத்தை முடித்துவிடவேண்டும் என்று ஆசைப்பட்டார்.
துர்க்காவுக்கும் மகனுக்கும் இருக்கும் வயது வித்தியாசமோ படிப்பு ஏற்றத் தாழ்வோ பெரிய தடையாக தெரியவில்லை.
பெற்றவளுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சமுதாயத்தில் தேவாவின் அம்மா என்று பெருமைகொள்ளும் வகையில் பெரியாள் தன்மையுடன் வளர்ந்து நிற்கும் மகன் ஹீரோவாகத் தெரிந்தான்.
கைநிறைய சம்பாதிக்கும் வல்லமை உடைய தனது மகனுக்கு என்னகுறை? அவனை கட்டிக்க துர்க்கா கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று நினைத்தார்.
மேலும் தனது அண்ணன் தான் கஷ்டப்பட்ட காலத்தில் கைதூக்கி விட்டதுக்கு பிரயாசித்தமாக அவரது மகளை நல்லபடி வாழவைத்து அண்ணனின் மனம் குளிர வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்.
துர்காவோ எல்லோர் கனவையும் சிதைத்துவிட்டு வீட்டை விட்டுப் போய் இப்படி அண்ணனை மருத்துவமனையில் சேர்க்கும் நிலைமைக்கு விட்டுவிட்டாளே என்று அவளின் மீது வெறுப்பு கொண்டாள் .
மேலும் தனது மகனை வேணாமென ஒதுக்கி விட்டுப் போனவளை அண்ணனும் ஒதுக்கி வைத்ததும் இன்னுமே அவரின் மேல் பாசம் கூடுதல் ஆனது. ‘அண்ணே என்ன செய்வார்...? படிச்ச திமிரில் பெத்தவனையே எதிர்த்து போயிட்டா கழுதை...’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
கண்ணம்மா காலையில் நான்கு மணிக்கே மகனுக்கு சமையலை வீட்டில் செய்து முடித்து வைத்துவிட்டு வேகவேகமாக அண்ணன் பங்களாவின் சமையல் அறைக்கு வந்தார்.
சாந்தியின் கணவன் அவளையும் மகன் ஆரூசையும் ‘ஒரு பத்துநாள் இருந்து உன் அப்பாவை கவனிச்சிட்டு வா... என்னால் நிறைய நாள் லீவ் எடுக்க முடியாது’ எனச் சொல்லி நேற்று ஐ.சி.யூவில் இருந்து நார்மல் வார்டுக்கு கனி அரசுவை மாற்றும் வரை உடன் இருந்துவிட்டு சென்று விட்டான்.
கிச்சனில் நின்று தனக்கு காஃபி கலந்துகொண்டிருந்த சாந்தியிடம் வந்த கண்ணம்மா..
“நீ போய் குளிச்சுட்டு கிளம்பி வா... ஆஸ்பத்திரியில் இருக்க உன் அம்மாவுக்கு சாப்பாடு எடுத்துட்டுப் போகணும்ல...
நீ கிளம்புறதுக்குள்ள நான் இட்டிலியும் பாசிப்பருப்பு சாம்பாரும், சட்னியும் ஐஞ்சே நிமிசத்தில் ரெடி பண்ணிடுறேன்.
உன்னைய தேவா ஆஸ்பத்திரியில இறக்கி விட்டுட்டு பிரிண்டிங் பிரஸ்க்கு கிளம்பணும்னு சொல்லி விட்டான்” எனச்சொல்லி அனுப்பி விட்டார்.
அதேபோல சாந்தி குளித்து முடித்து ஒரு வயது மகன் ஆரூசை கிளப்பி அவனுக்கும் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டு முடிந்தாள்.
கார் செட்டில் இருந்த தேவாவின் பொலிரோவை எடுத்து கிளம்பிச் செல்ல ரெடியாக வாசலில் நிறுத்தும் சத்தமும் அதைத் தொடர்ந்து உள்ளிருந்து சாந்தியை மருத்துவமனைக்குச் செல்ல சாப்பாட்டோடு காருக்கு அனுப்பி வைக்கச் சொல்லும் விதமாக காரில் இருந்து பீப் சத்தையும் ஒலிக்க விட்டான்.
மகனின் கார் ஆரன் சத்தம் கேட்டதும் “சாந்தி இந்தா... கூடையில இட்டிலி, சாம்பாரு, சட்னி எல்லாம் தனித்தனியே எடுத்து வச்சிருக்கேன். அம்மாவை அரட்டி உருட்டி சாப்பிட வை. அப்பாவுக்கு எப்போ இருந்து சாப்பாடு கொடுக்கலாம் என்ன கொடுக்கலாம்னு டாக்டர்கிட்ட கேட்டுட்டு வா...” என்றாள்.
“எனக்கே சாப்பாடு தொண்டையில் இறங்கலையே அத்த, இப்படி நல்லா நடந்துக்கிட்ட இருந்த மனுஷரை படுக்கையில் விழுக வச்சிட்டாளே துர்க்கா...” என்றபோது மீண்டும் காரின் ஹாரன் சத்தம் கேட்டதும்,
“தேவா வரச் சொல்றான் பாரு, நீ போ.. எல்லாம் சரியாகிடும் நான் கிச்சனை ஒதுங்க வச்சிட்டு மதியத்துக்கு ஏதாவது ஆக்கி வைக்கிறேன்” என்று அனுப்பி விட்டார்.
தேவாவோ, மாமாவின் குடும்பத்தில் இந்த நிலைக்கு ஏதோ ஒரு வகையில் தானும் காரணமாகிவிட்டோம் என்று கவலைப்பட்டான். எப்படியாவது வீட்டு நிலவரத்தை சரிசெய்ய நினைத்தான்.
சாந்தி ஆரூசை ஒரு கையிலும் மற்றொரு கையில் சாப்பாட்டுக் கூடையுடனும் வந்ததும் குழந்தையுடன் அவள் வசதியாக அமர்ந்து வரத் தோதாக காரின் பின் சீட்டின் கதவை திறந்துவிட்டான்.
காரில் ஏறி அமர்ந்தும் துருதுருவென ஆரூஸ் ஒரு இடத்தில் உட்காராமல் சாந்தியிடம் ஆட்டம் காட்டுவதையும் “டேய் குட்டி உட்காருடா... கீழ விழுந்துடாத” என்று அவள் மகனை அரட்டுவதைக் கண்டு.
டிரைவ் செய்துகொண்டிருந்தவன் “ரொம்ப சேட்டை பண்ணுறான், அவங்க சித்தியைப் போலவே...” என்றான்.
“அவளை பத்தி பேசாதீங்க மாமா... அவளால வீட்டுல இருக்கிற நிம்மதியே போச்சு..” என்றதும்,
“என்னால அப்படி நினைக்க முடியலை சாந்தி, அவளுக்கு என்னை கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லைன்னு சொல்லும்போது கட்டாயப்படுத்தினது தப்பு...
அதனால வேற வழி இல்லாம தானே அவள் வீட்டை விட்டு வெளிய கிளம்பினா..?
என் கூட கல்யாணமா...? அவள் காதலா..? அப்படின்ற நிர்பந்தத்தில நிப்பாட்டி வச்சதால பிடிக்காத கல்யாண பந்தத்தில் வாழ்க்கை முழுக்க சிக்கிறதுக்குப் பதிலா வெளிய போவோம்னு முடிவெடுத்துட்டா..
இந்த சூழலை பக்குவமா ஹேண்டில் பண்ணி இருந்திருக்கணும்.
நான் உன்கிட்ட முன்னாடி கல்யாணத்துக்கு கேட்டப்போ உனக்கு இஷ்டம் இல்லைன்னு தெரிஞ்சு நான் விலகிக்கிட்டேனே, அதேபோலத்தானே அவளும்.
அவளுக்கு என்னை பிடிக்கலைனதும் கல்யாண பேச்சை நிறுத்தி இருக்கணும். அவள் யாரை விரும்புறாள்னு கேட்டு முடிஞ்சா அந்த பையனோட கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும்.
மாமாவுக்கு இப்படி ஆகாம இருந்தா நானே நேரா பெங்களூர் போய் பார்த்து இந்நேரம் அவள் யாரை காதலிக்கிறாள் என்ன ஏதுன்னு விசாரிச்சு இருப்பேன். நல்ல பையனா இருந்தா நானே மாமாட்ட பேசி ரெண்டுபேருக்கும் கல்யாணம் செய்து வைக்கிறேனு சுப்பு அத்தட்ட சொல்லி இருந்தேன். என்ன இருந்தாலும் துர்க்கா நாம் வீட்டுப் பிள்ளை இப்படி அம்போன்னு விட்டுடக் கூடாது தானே” என்றான்.
என்னமாமா சொல்றீங்க அம்மாகிட்ட துர்க்காவுக்கு அவள் காதலிக்கிறவனோட கல்யாணம் பண்ணி வைக்கிறேனு சொன்னீங்கலா..?
ஆமா, துர்க்கா வயசு பொண்ணு. அவள் வீட்டைவிட்டு வெளியில் போயிட்டாள்ன்ற விஷயம் வெளியில தெரிஞ்சா குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அசிங்கம்னு..? உன் அம்மாவும் அப்பாவும் ரொம்ப வருத்தப்பட்டாங்க.
அதோடு உங்க அப்பா அவளை வீட்டுக்குள் சேர்க்க கூடாதுன்னு உறுதியா இருந்ததால உன் அம்மா என்கிட்டே வந்து அழுதாங்க. வயசு பொண்ணு இப்படி வெளியேறி தப்பான ஒருத்தன் கிட்ட மாட்டிகிட்டா என்ன பண்ணனு பயந்தாங்க.
நான்தான் பெங்களூர் போய் அவளை பார்த்துப் பேசுறேன். அந்த பையனை பத்தியும் விசாரிக்கிறேன். நல்ல பையனா இருந்தா மாமாவை சமாதானம் பண்ணுறேன்னு சொல்லி இருந்தேன்.
ஆனா அன்னைக்கு நைட்டே உன் அப்பாவுக்கு இப்படி ஆனதால ஹாஸ்பிடல் சேர்த்து இங்க இருக்கும் படி ஆகிடுச்சு நான் ஏற்கனவே தெரிஞ்சவங்களை வச்சு அவள் எப்படி இருக்காள்...? அவள் லவ் பண்ற பையன் யாருன்னு விசாரிக்க சொல்லி இருக்கேன். இங்க மாமாவுக்கு ஓரளவு சரியாகி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டா நானே நேரா பெங்களூருக்கு கிளம்பிருவேன்” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும் மனதினுள் “ஸாரி மாமா... நீங்க எவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க. ஆனா நானும் உங்களை புரிஞ்சுக்காம வேணாம்னு சொல்லிட்டேன். இப்போ துர்க்காவும் அதே தப்பத்தான் பண்ணி இருக்கா. நான் பண்ணியதுக்கு நீங்க என் மேல நியாயமா கோவம்தான் பட்டு இருக்கனும் ஆனா இப்போவரை நாங்க நல்லா இருக்கணும்னு தான் யோசிக்கிறீங்க” என்று நினைத்தாள்.
***
அத்தியாயம் 11(1)
கல்லூரியில் நடந்த மீட்டிங்கில் வருங்கால சேர்மேனென பூபதி ராஜாவை அறிமுகப்படுத்திய அவனின் தந்தை இன்னும் ஆறுமாதம் சென்று கல்லூரியின் நிர்வாகம் முழுவதும் அவனின் பொறுப்பில் செயல்படும் என்று கூறினார். அதற்கு அடித்தளமாக நிர்வாகத்தில் சில மாற்றங்களை அவர் மேற்கொள்ளப் போவதாகவும் அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமென சொல்லி முடித்தார்.
அதைத் தொடர்ந்து மாணவிகள் மத்தியில் பேசிய பூபதியை கண்டு இளமைப்பட்டாளங்கள் இமை சிமிட்ட மறந்து போனார்கள்.
ஆறடி உயரத்தில், உயரத்துக்கு ஏற்ற எடையுடன் சிவந்த நிறத்தில் செதுக்கி வைத்த முகத்தோற்றத்தை இன்னும் கம்பீரமாக காட்டியது அவனின் பேச்சு.
இரண்டுவாரம் மலிக்காத அளவில் இருக்கும் தாடியும் ஓர் ஒழுங்கில் வரைந்தது போல அமைப்பாக தோற்றத்தில் இருந்தது. தலையில் அடங்காத முடிக்கற்றைகளுடன் ஒன்றை காதில் மினுக் மினுக்கென ஒளிவீசிகொண்டிருக்கும் டைமன் கடுக்கணும், வெயிட் கட் சேர்ட் மற்றும் ஐஸ் புளு தக் ஃபேன்ட் அதற்கு ஏற்றார்போல ஜூ அணிந்திருந்தவனின் தோற்றம் சினிமா நடிகனை தோற்கடிக்கும் அளவில் அசத்தலாக இருந்தது.
தேன்மொழி ஆ....வென அவனை பார்த்தபடி “எதுக்குடி ஆம்பளை இம்புட்டு கலரா அழகா பொறக்கணும்...? சினிமா நடிகர் தோத்துப் போயிடுவான்டி... ஆனா நீ சொல்றது போல தமிழே இவனுக்குத் தெரியாதோ...?” என்றது அவனுக்கு கேட்டுவிட்டதோ என்னவோ தமிழில் பேச்சை தொடர்ந்தான்.
“இங்க பெரும்பாலும் தமிழ் தான் பேசுவீங்கனு தோணுது என்னோட பேச்சு உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறன். அதனால நானும் உங்களில் ஒருத்தனா பேசுறேன், இங்க நிறைய மாற்றங்களை கொண்டுவர நினைக்கிறேன். குறிப்பாக ஸ்டூடென்ஸ் மற்றும் டீச்சர்ஸ் ரெண்டுபேருக்குமே கம்யூனிகேஷன் ஸ்கில் டெவலப் பண்ண ஸ்பெசல் அட்டன்ஷன் கொடுக்க ஏற்பாடு பண்ணுறேன்.
சப்ஜெக்ட் ரிலேடட் புக் எதுவும் லைப்ரேரியில் அவேய்லபுளா இல்லைன்னா உடனே மேனேஜ்மேண்டில் இன்பார்ம் பண்ணச் சொல்லி லைப்ரேறி இன்ஜார்சர் கிட்ட மென்சன் பண்ணுங்க. வித் இன் ஓன் வீகில் அந்த புக் வந்துரும்.
இன்னும் ஸ்கூல் ஸ்டூடென்ஸ் போல லீவ் எடுத்தா வீட்டுக்கு இன்பார்ம் பண்றதா கேள்விப் பட்டேன். காலேஜூகும் ஸ்கூளுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிஞ்சுக்கோங்க.
ஸ்கூலில் உங்களின் ஒவ்வொரு ஆக்டிவிட்டிசையும் கட்டுபடுத்தி வழி நடத்துவாங்க. ஆனால் காலேஜ்ல உங்களை யாரும் கட்டுப்படுத்த மாட்டாங்க. இது உங்களை நீங்களே கட்டமைக்க பழகுற இடம்.
பாடங்களை நடத்த குறைந்த அளவு நேரமே டீச்சர்ஸ்க்கு இருக்கும். நீங்கதான் கிளாஸ்ல எடுக்கும் நோட்சை வச்சு சப்ஜெட் நாலேஜை புக்ஸ், ஈ புக்ஸ் எல்லாத்திலேயும் தேடணும். ஸ்டாப்ஸ், ஃப்ரெண்ட்ஸ் குள்ள டிஸ்கஸ் பண்ணி உங்களின் நாலேஜ்ஜை இம்ப்ரூவ் பண்ணனும். அடுத்து வாழ்கையில் என்ன செய்யணும் எவ்வாறு படிச்சா முன்னேறலாம் என்று திட்டமிட்டணும். அப்படி முன்னேற வாய்ப்பை உருவாக்கி தரும் இடம் தான் காலேஜ்.
அடுத்த வருஷத்தில் இருந்து இன்டென்ஷிப்க்கும் காம்பஸ் இன்டர்வியூக்கும் இன்னும் நிறைய கம்பெனிஸ் உள்ள வர ஏற்பாடு செய்துடுவேன்.
ஆனால் அதற்கு இங்க படிக்கிற ஸ்டூடென்ஸ் கம்யூனிகேஷன் லெவலை அதாவது பேசும் போது உங்களோட லாங்க்வேஜ் ஸ்கில், அதுதாங்க ஸ்போகன் இங்கிலீஸ்ல வெல்லா இருக்கிறது போல டிரைன் ஆகுங்க” என்று பேசி முடித்து அமர்ந்ததும் மாணவிகளின் கைத்தட்டல் அரங்கத்தை நிறைத்தது.
மீட்டிங் முடிந்தும் அன்று முழுவதும் மாணவிகளுக்கு இடையே பூபதியின் பேச்சே பிரதானம் ஆகிப் போச்சு... ஒரே நாளில் கல்லூரியின் ஹீரோவாக அவன் மாறிப் போனான்.
ஆனால் அதற்கு எதிர்ப்பதமாக விரிவுரையாளர்களுக்கும் ஆபீஸ் அலுவலகத்தாருக்கும் டெரர் சேர்மேனாக மாறிப் போனான்.
அழகி தோழிகளுடன் மதிய இடைவேளையின் போது ஸ்டாப் ரூமை கடந்து செல்கையில் தென்பட்ட ராஜி மிஸ்ஸின் முகம் கலங்கி இருந்ததைக் கண்டாள், காலையில் தாங்கள் ஆபீஸ் ரூமின் வெளியில் நின்று அவருடன் அரட்டை அடித்ததில் எதுவும் பிரச்சனையோ என்ற கவலை உண்டானது.
“தேன்மொழி நீ போ... அக்கவுண்ட்ஸ்ல ஒரு டவுட் மிஸ்கிட்ட கேட்டுட்டு வந்துடுறேன் என்றவள், “மிஸ்” என்றபடி ஸ்டாப்ஸ் ரூமிற்குள் சென்றாள்.
இன்று ஸ்பெசல் சாப்பாடு பூபதியின் வரவை கொண்டாடும் விதமாக ஸ்டாப்ஸ் எல்லோருக்கும் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்திருந்ததால் அங்கு சென்றிருந்தார்கள். ராஜி மிஸ் தனக்கு ஹெல்த் இஸ்யூ இருப்பதால் விருந்து வேண்டாமென சொல்லி ஆபீஸ் அறைக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தாள்.
ரெண்டு வருடத்திற்கு முன்பு அங்கு மாணவியாக இருந்தவள் தான் ராஜி. அவர் நன்றாக படிக்கும் மாணவி. காலேஜில் டாப் தேர்ட் லெவெலில் மார்க் எடுத்து பட்டம் வாங்கி இருந்தார். கஷ்டப்பட்ட குடும்பம். படிப்பு முடிந்து அதே கல்லூரியில் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராக பணியில் சேர்ந்துவிட்டாள்.
அவள் பி.ஜி படிக்கும் போது அழகு மலர் அங்கு யூ ஜி படித்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது இருந்தே இருவருக்கும் இடையில் சீனியர் ஜூனியர் என்ற பந்தத்தை தாண்டி அழகான நட்பு ஒன்று உருவாகி இருந்தது.
புத்தக அறிவு ராஜியிடம் அதிகமாக இருந்ததால் முன்பே சப்ஜெக்டில் ஏதாவது சந்தேகம் என்றால் ராஜியிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வாள் அழகி.
அழகிக்கும் நன்றாக படித்து இதே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்ற வேண்டம் என்ற ஆசையை விதைத்தவள் ராஜி. அத்தகையவள் கலங்கி இருந்ததை அவளால் தாங்க முடியவில்லை.
அழகியின் வருகையில் தனது கலக்கத்தை மறைத்து “வா... அழகி சாப்டாச்சா...?” என்றதும்.
“நான் சாப்டேன், நீங்க ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க... முகம் டல்லா இருக்குது, மத்த ஸ்டாப்ஸ்ங்க விருந்து நடக்குற இடத்தில் இருக்கும்போது நீங்க எதுக்கு இங்க உட்கார்ந்து இருக்கீங்க?
எதுவும் பிரச்சனையா மிஸ். ஹச்ஓடி மிஸ் எங்க கூட காலையில் பேசியதுக்கு எதுவும் சொல்லிட்டாங்களா..?” என்றதும்.
“இல்ல அதெல்லாம் இல்ல அழகி, ஆனா பூபதி ராஜா சார் காலேஜ் பொறுப்புல உட்காருறதுக்குள்ள வேற வேலை தேடிட்டு இங்க இருந்து கிளம்பிறனும் அதுதான் நல்லது.
என்னைய போல ஒரு காலேஜ் ஸ்டாப் இருந்தா நல்லா இருக்காதுன்னு அத்தனை பேர் முன்னாடி சொல்லிட்டார். என்னால அதை தாங்கவே முடியலை” என்றாள்.
“உங்களை போயா மிஸ் அப்படிச் சொன்னார்..? உங்களைப் போல ஸ்டூடென்சுக்கு புரியிறமாதிரி பாடம் நடத்துறவங்க இங்க யாரும் இல்லை, அப்படி இருக்கும் போது உங்களை எப்படி அப்படிச் சொல்லலாம்...?"
“அவங்க எல்லாம் பணக்காரங்க அழகி, உடுத்தி இருக்கிற உடையை தோற்றத்தை வச்சு ஆட்களை எடை போடுறவங்க.
அவர் என்கிட்ட கேட்ட கேள்விக்கு, நான் டக்குனு தமிழில் பதில் சொல்லிட்டேன் அது ஒரு குத்தம்னு என்னை அந்த பேச்சு அத்தனை பேர் முன்னாடி பேசிட்டார்.
என்னையப் போல ஸ்டாப்ஸ் வச்சுகிட்டு இருந்தா ஸ்டூடன்ஸ் கம்யூனிகேஷன் ஸ்கில்லை அவரால டெவெலப் பண்ண முடியாதாம்.
நான் எவ்வளவு சின்சியரா இங்க பாடம் எடுக்குறேன். என்கிட்ட படிக்கிற ஒவ்வொரு ஸ்டூடென்சுக்கும் புரியிறதுபோல எந்த அளவு இறங்கி சொல்லித்தருறேன். எல்லோரையும் பாஸ் பண்ணி மார்க் வாங்க என்ன நிறைய எபேர்ட் போட்டுறேன். அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு ஆகிடுச்சு” என்றாள்.
“மிஸ் தமிழில பேசியதுக்கா இப்படி பேசிட்டார்...? இங்க இருக்கிற ஸ்டூடென்ஸ் முக்கால்வாசி பேருக்கு நீங்க தமிழில். சப்ஜெக்டை எக்ஸ்பிளைன் பண்றதாலத்தான் சப்ஜெக்டை புரிஞ்சு படிக்கிறாங்க.
அவர் ஆக்ஸ்போர்ட் ஸ்டூட்டென்டா வெளிநாட்டுல படிச்சு இருக்கலாம் அதுக்காக நம்ம ஊருல தமிழ் மீடியத்துல படிச்சு காலேஜில் சேர்ந்தவங்ககிட்ட தசு.. புசுனு அவரை போல இங்கிலீஸ்ல பாடம் எடுத்தா வெளங்கிரும்” என்றாள்.
ராஜி மிஸ்சை பேசி சமாதனம் செய்து சாப்பிட வைத்துவிட்டு வகுப்பறைக்கு வந்தவளுக்கு அதன் பின் தேன் மொழி பிதற்றிய பூபதிராஜாவை பற்றிய பேச்சுக்கள் எரிச்சலை உண்டு பண்ணியது.
அவளுக்கு அவன் பணக்கார பந்தா உள்ளவன், தமிழ் நாட்டில் பொறந்துட்டு தமிழில் பேசுறதை கேவலமா நினைக்கிற தாய் மொழி பற்றில்லாதவன்,
சொந்த இடத்தில் சொந்த மக்களின் வாழ்வியலை கேலி செய்யும் மேல்நாட்டு மோகம் கொண்டவன்... என்றெல்லாம் மனதிற்குள் பலித்தபடி அன்றைய வகுப்புகள் அனைத்தும் முடிந்து காலேஜ் பஸ்ஸில் தனது ஊரை அடைந்து வீட்டை நோக்கி நடை போட்டவளின் காதில் விழுந்த வார்த்தைகள் அவளின் கண்களில் முணுக்கென்ற கண்ணீரை உருவாக்கியது.
கல்யாணமாகி இந்த ஒன்றை வருடத்தில் அவளின் ஊருக்குள் பட்டாம்பூச்சியாய் சுற்றிவந்த சந்தோசம் காணாமல் போனது.
அக்கம் பக்கத்துப் பெண்கள் அவன் கணவனை பற்றிய விசாரிப்புகள் என்ற பேரில் குதர்க்கமாய் பேசும் வார்த்தைகள் வீட்டுக்குள் முடங்க வைத்தது.
புருசனோடு வாழாமல் இங்கேயே தங்கி இருப்பதால் மறைமுகமாக, பொண்ணை இப்படி புருஷன் கூட வாழ அனுப்பாம வாழா வெட்டியாய் வச்சுகிட்டு எப்படித்தான் இப்படி மினுக்கிக்கிட்டு இருக்காங்களோ... என்ற ஜாடைப் பேச்சுகள்.
அத்துடன் துட்டு இருக்கிற பவுசில புருஷன கூட மதிக்கிறது இல்லையாம் என்ற ஜாடை பேச்சுகள் கேட்டு ரணப்பட்ட அழகு மலருக்கு அவர் ஊரே அந்நியமாகிப் போனது.
இவ்வாறு அவர்கள் பேச காரணம் ராதா... “என் பிள்ளைய மதிக்க மாட்டேங்கிறாள். ஆசையா என் புள்ளகூட பேச மாட்டேங்குறா... புருஷன் வீட்டில வந்து வாழ வர மாட்டேனு படிப்பை சாக்கு வச்சு இங்கயே கிடக்குறாள்.
ஒத்த ஆம்பளைபிள்ளைய பெத்துட்டு சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு கல்யாணம் பண்ணியதுக்கு என் மகன் வாழ்க்கை இப்படி ஒன்னும் இல்லாம கிடக்கு என்று புரளியை ஊருக்குள் பரப்பி விட்டுருந்தாள்.
இன்று கல்லூரி பஸ் விட்டு இறங்கியதும் எதிர்ப்பட்ட வடக்குத் தெருவின் மூணாவது வீட்டு தனம் “என்ன அழகி காலேஜ் போயிட்டு வந்துட்டயா...
இப்ப செத்த முன்னாடிதான் உன் மாமியாக்காரி என்கிட்ட போன்ல பேசி வச்சாக...
உன் மாமனாருக்கு தொழில் ஏகப்பட்ட நஷ்டம் ஆகிப் போச்சாம்ல...
எல்லாம் நீ மருமகளா வந்த நேரம்னு என்கிட்ட புலம்போ புலம்புனு பொலம்புனாக. எனக்கு பாவமா இருந்துச்சு.
உன்னை வேணும்னு தானே வந்து கட்டுனாக. உன் அப்பாகிட்ட சொல்லி உன் புகுந்த வீட்டுக்கு கொஞ்சம் உதவலாம்ல” என்றாள்.

.jpeg)
No comments:
Post a Comment